எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Wednesday, July 16, 2008
சீதையின் அக்னிப்ரவேசம் சரியானதா?? இல்லையா? தொடர்ச்சி!
பலரும் சீதை ஏன் மெய்யாலும் என்ற வார்த்தையை உபயோகிக்கவில்லை எனவே கேட்டுக் கொண்டிருக்கின்றனர். முக்கியமாய் வேந்தர் கேட்கின்றார். ஏனெனில் கம்பர் தன் ராமாயணத்தில் சீதையை ராவணன் கவர்ந்து சென்றதைப் பற்றி எழுதும்போது, தொட்டுத் தூக்கிச் சென்றதாய் எழுதவே இல்லை அல்லவா? அதை நாம் முன்பே பார்த்தோம். பர்ணசாலையோடு பெயர்த்து ராவணன் தூக்கிச் சென்றதாகவே கூறுகின்றார். அதிலும் ஒரு காத தூரம் பூமியைப் பெயர்த்து எடுத்து சீதையைத் தீண்டாமலேயே தூக்கிச் சென்றதாய்க் கூறுகின்றார் கம்பர். தீண்டாமல் தூக்கிச் சென்றிருக்கும்போது மெய்யால் என்று கம்பரால் எப்படி எழுத முடியும்? அப்புறம் அவர் முன்னம் எழுதியது தவறென ஆகாதோ?? ஆகவே அவர் அக்னிப்ரவேசத்தின்போது சீதை மனத்தினால், வாக்கினால் மறு உற்றேனெனின் என்று மட்டுமே கூறியதாய் எழுதிவிட்டார். மேலும் ராவணனுக்கோ வேதவதி மூலம் கிடைத்த சாபம் இருக்கிறது. அவன் எவ்வாறு சீதையை அவள் சம்மதம் இல்லாமல் தீண்ட முடியும்??? தொட்டுத் தூக்கிச் சென்றதைக் கம்பர் எழுதவில்லை எனினும், வால்மீகி எழுதி உள்ளார். அந்த அளவே தான் அவனால் முடியும். அதுவும் தலைமுடியைப் பிடித்தும், கையைப் பிடித்து இழுத்தும் தூக்கித் தன் தொடையில் இடுக்கிக் கொண்டு சென்றதாய் வால்மீகி கூறுகின்றார். இஷ்டமில்லாமல் இருக்கும் ஒரு பெண்ணை அந்த அளவுக்குக் கூடப் பலவந்தப் படுத்தித் தானே தூக்கிச் செல்லமுடியும்??? அதை வால்மீகி மறுக்கவில்லை, சீதையும் மறுக்கவில்லை, ராமரும் மறுக்கவில்லை, அதனாலேயே வால்மீகி மனதால், வாக்கால், காயத்தால் என்று சொல்லி இருக்கின்றார். தொட்டுத் தூக்கிச் சென்றதால் சீதையின் கற்பு போய்விட்டது என எவ்வாறு கூறமுடியும்???
ஆகவே தான் தன் மேல் உள்ள நம்பிக்கையாலேயே சீதை தன் கணவன் தன்னை இவ்வாறு பேசும்படி நேர்ந்தது என்பதைப் புரிந்து கொண்டாள் என்றே சொல்லவேண்டும். அக்னி கூடத் தீண்ட அஞ்சும் அளவுக்கு சீதை பரிசுத்தமானவளே என்பதை ராமர் புரிந்து வைத்திருந்ததாலேயே சீதை அக்னிப்ரவேசம் செய்யத் தயார் ஆனபோது மறுக்கவில்லை, தடுக்கவில்லை. தன் மனைவி பரிசுத்தமானவளே என்பது தன் மனதுக்கு மட்டும் தெரிந்து தான் மனைவியைச் சேர்த்துக் கொண்டால், உலகிலுள்ளோர் பெண்ணாசையால் பீடிக்கப் பட்ட ராமன் பிறர் வீட்டில் மாதக் கணக்கில் இருந்தவளைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டுவிட்டானே எனப் பேசக் கூடாது என்ற எண்ணம் மட்டும் காரணம் இல்லை. தன் மனைவி தனக்கு வேண்டும், ஆனால் அதே சமயம் அவளைப் பிறர் குற்றம் காணாத வகையிலும் இருத்தல் நல்லது. என்று யோசித்தே ராமர் இந்த முடிவுக்கு வந்தார் எனவும் கூறலாம். ஏனெனில், இதே ராமர், சீதையுடன் சேருவதற்காக சீதையை அக்னிப்ரவேசம் செய்ய வைத்த அதே ராமர், பின்னால், இதே சீதையைத் துறக்கவும் போகின்றார். தன் நாட்டு மக்கள் பேசியதற்காக! ஒரு அரசனாய்த் தன் கடமையைச் செய்யப் போகின்றார். ஆங்கிலப் பழமொழி, “சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாய் இருத்தல் வேண்டும்” என்று சொல்லுவதுண்டு. இங்கே ராமரின் மனைவிக்கு அந்தக் கதி நேரிட்டிருக்கின்றது. மக்கள் மனதில் சந்தேகம் உதித்ததும், ராமர் உடனே மனைவியைத் துறக்கவும் தயாராகின்றார். அதையும் பார்ப்போம். இனி அக்னிப்ரவேசத்துக்கு அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்று நாளைக்குப் பார்ப்போமா???
Subscribe to:
Post Comments (Atom)
உங்களை உங்க வீட்டுக்காரர் தீக்குளிக்கச் சொல்றார். ஏன்னாக்கா, யாரோ ஒருத்த தப்பா பேசிட்டான்.
ReplyDeleteஎப்படி இருக்கும் உங்களுக்கு? நன்னா பேஷா இருக்குமா?
ஏன், ராமன் கூட சீதையை விட்டுத் தனியாகத்தான் இருந்தான். சீதை ஏன் நாலுபேரு தப்பா பேச்சுவான்னு, தீக்குளிக்க சொல்லவில்லை?
கீதா சாம்பசிவம்! ஒரு தப்பை தப்புன்னு சொல்ல உங்களால் முடியவில்லை. என்னா, அது ராமன் புகழை மங்க வைக்கும்.
இதெல்லாம் இந்த காலத்துக்கு ஒத்து வராது. நாமெ எங்கேயே போய்விட்டோம். இன்னும் நீங்கள் அந்தகாலத்தில் பெண்ணை ஆணின் அடிமையாகவௌம், ஆணின் சுகத்திற்காகவும் படைக்கப்பட்டதாகவும் நம்பி பிறந்து வளரும் சிறுமிகளை கெடுக்கிறீர்கள்.