எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, November 03, 2008

துள்ளி வருகுது வேல்! பகையே சுற்றி நில்லாதே போ!

தீராத வினைகள் யாவையும் தீர்க்கும் கந்தவேள் நம் சொந்தவேள் என்பார் வாரியார் ஸ்வாமிகள். அவன் கைவேலோ துள்ளி வந்து நம் தீராத வினைகள் யாவையும் தீர்க்கும். அதைத் தான் பாரதியும், "துள்ளி வருகுது வேல்! பகையே சுற்றி நில்லாதே போ!" என்று பாடினார். பகை என்பது இங்கே நம் உள்ளேயே குடி கொண்டிருக்கும் பகை மட்டும் அல்ல. சுற்றி இருக்கும் பகை என நாம் கருதும் அனைத்தையும் மாற்றி அருளும் வல்லமை அவனுக்கு மட்டுமே உண்டு. நாம் அந்தக் கந்தனைக் "கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்" அவனை மறவாமல் இருப்பதாலேயே வந்தனை செய்தாலும் நிந்தனை செய்தாலும் அனைவரையும் காத்து வருகின்றான். கந்தன் பிறந்தான். தொல்லைகள் தீர்ந்தன. அதுவும் எவ்வாறு? தாயான உமை குழந்தையைப் பார்க்க வருகின்றாள். ஏற்கெனவே சூரபதுமாசுரனால் தேவர்களுக்குத் துயர் என்பதும் அவள் அறிந்த ஒன்றே. அதனாலேயே இந்த சிவகுமாரன் ஜனனம் என்பதும் அவள் அறிந்ததே. குழந்தை குழந்தையாகவே இருக்க முடியுமா?? பெரியவன் ஆகி அவன் வந்த வேலையைக் கவனிக்க வேண்டாமா?? வேலையைக் கவனிக்க அவனுக்கு வேலாயுதம் தேவை அல்லவா?? குழந்தைகள் ஒன்றா? இரண்டா? இது என்ன? ஆறு குழந்தைகள் ஒரே மாதிரி. அனைத்தையும் ஒரு சேர எடுத்து அள்ளி அணைத்தாள் உமை! என்ன ஆச்சரியம்? அனைத்தும் ஒன்றாகி ஆறுமுகங்களுடனும் குழந்தை ஆறுமுகனாய்க் காட்சி அளிக்கின்றான். வேதங்கள் அவனை "சுப்ரமண்யோஹம்" "சுப்ரமண்யோஹம்" "சுப்ரமண்யோஹம்" என மும்முறை சொல்லி ஆராதிக்கின்றது. அந்த வேதத்தையே, அவற்றின் பொருளையே தன் தகப்பனுக்குப் போதிக்கின்றான் அந்தத் தகப்பன் சாமி. ஒரு பழத்துக்காகக் கோபித்துக் கொண்டு அவன் மலைதேடித் தனியே அமர்ந்ததாகவும் கதை! உண்மையில் பழத்துக்கா கோபம்! இல்லை! தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு ஞானத்தைப் போதிக்கவேண்டி, தான் எவ்வாறு அனைத்தும் துறந்து இருக்கின்றோமோ அதே போல் பற்றை அறு, என்னைச் சரணடை! உனக்கு நான் இருக்கிறேன் ஞானத்தைப் போதிக்க என்று அந்தச் சின்னஞ்சிறுவன் நமக்கு எடுத்துக்காட்டாய் அனைத்தையும் துறந்து ஒரு ஞானியாக, துறவியாக நின்று காட்டுகின்றான். இவன் பாட்டுக்கு இப்படித் துறவியாகப் போய் உட்கார்ந்துவிட்டால் தேவர்கள் கதி?? அவங்களுக்குக் கவலை சூழ மீண்டும் அன்னையைச் சரணடைய அன்னையும் குமாரனின் கோபம் தணிக்க ஒத்துக் கொள்ளுகின்றாள்.

மகனின் கோபத்தை அன்னையைத் தவிர யாரால் தணிக்க முடியும்?? புதுப் புது விளையாட்டுக் கருவிகளைக் கொடுப்பார்கள் இல்லையா குழந்தை விளையாட? புதுப் புது நண்பர்களைக் காட்டி இவனோடு விளையாடு, அவனோடு விளையாடு என்று சொல்வதில்லையா? அதே போல நவரத்தினங்கள் ஆன நவவீரர்களையும் கந்தனுக்குத் துணை சேர்க்கின்றாள். தன் சக்தியனைத்தையும் திரட்டிக் கந்தனுக்கு வேலாயுதமாய் மாற்றி அளிக்கின்றாள். அன்னையின் யோக சக்தி, ஞான சக்தி, ஆத்ம சக்தி அனைத்தும் சேர்ந்த அந்த சக்தி ஆயுதமான வேலாயுதத்தைப் பெற்ற கந்தன் வேலாயுதனாகி நிற்க அவன் முகத்தில் முத்து, முத்தாய் வியர்வைத் துளி. தன் வேல் போன்ற நெடுங்கண்களால் மகனை அன்புடன் பார்த்து அன்னை அளித்த அழகுவேலை வாங்கிய முருகன் முகமோ முத்து, முத்தாய் வியர்த்ததாம். இன்றும், இப்போதும், இதோ இப்போக் கூட அதைத் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டுத் தான் வருகின்றேன். என்ன சொல்லுவது வேலின் சக்தியை! சாதாரண வேலா அது?? ஞானவேல்! சக்தி வேல்! பக்தர்களுக்கு அருளும், பக்தனைக் காக்கும் வேல்! வெற்றி வேல்!

சத்ரு சம்ஹார வேல் அது! அதுவும் தன் அனைத்து சக்தியையும் கொடுத்த அன்னை அளித்த வேல். தாயானவள் ஒரு மகனுக்குப் பலவகைகளிலும் தைரியத்தையும், வீரத்தையும் ஊட்டவேண்டும். தாயின் மனோசக்தியால் பிள்ளை வீரனாக விளங்கவேண்டும் என்பதற்காக அளிக்கப் பட்ட அந்த வேல் பகைவனை அழித்ததா?? இல்லையே! துள்ளி ஓடி வந்த அந்தக் கந்தவேளின், சொந்தவேலானது, பகைவனின் ஆணவத்தை அழித்தது. மாயையை அழித்தது. அவன் யார் என்பதை உணர்த்தியது. அவனுக்கு ஞானத்தைப் போதித்தது. முருகன் திருவடிகளே சரணம் என அவன் சேவலாகவும், மயிலாகவும் மாறி ஷண்முகனின் கொடியாகவும், வாகனம் ஆகவும் ஆனான். அதிகாலையில் முதன்முதல் எழுப்புவது சேவல் தான் அல்லவா?? இந்தச் சேவல் யார் எழுந்தாலும், எழுந்திருக்காவிட்டாலும் கூவுவதை நிறுத்தாது. அதுவும் அதிகாலைச் சூரியனை வரவேற்கும். இருளை நீக்கி ஒளியைப் பரப்பும் ஆதவனை வரவேற்கும் சேவலின் கொக்கரக்கோ என்ற கூவலே ஓம் என்ற ஓங்கார நாதமாய்த் தோன்றுகின்றது அல்லவா??

16 comments:

 1. //Can't connect to local MySQL server through socket '/var/lib/mysql/mysql.sock' (111)//

  தமிழ்மணத்துக்கு என்ன ஆச்சு??? இன்னிக்கும் சேர்க்கமுடியலை! மூன்று முறைகளுக்கு மேல் நேற்றும், இன்றும் முயன்றும் முடியவில்லை.:(((((( யாரும் என்னனு சொல்லவும் மாட்டேங்கறாங்க! :(

  ReplyDelete
 2. //வேதங்கள் அவனை "சுப்ரமண்யோஹம்" "சுப்ரமண்யோஹம்" "சுப்ரமண்யோஹம்" என மும்முறை சொல்லி ஆராதிக்கின்ற//

  வேதத்தில் இப்படி சொல்லுகிற சுப்ரமண்யன் இந்திரன். சப்த ஒற்றுமைக்காக கோவிலிலும் முருகன் சந்நிதியில் இதை சொல்லுகிறார்கள்.

  ReplyDelete
 3. //வேதத்தில் இப்படி சொல்லுகிற சுப்ரமண்யன் இந்திரன்//

  ம்ம்ம்ம்ம்???? அப்படியா?? புதிய விஷயம்! ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நானும் தேடிப் பார்க்கிறேன். :))))

  ReplyDelete
 4. //வேதத்தில் இப்படி சொல்லுகிற சுப்ரமண்யன் இந்திரன். சப்த ஒற்றுமைக்காக கோவிலிலும் முருகன் சந்நிதியில் இதை சொல்லுகிறார்கள்//

  அப்படியா?. புதிய செய்தி...கொஞ்சம் அதிகப்படி செய்திகளை அள்ளித் தாருங்களேன் திவாண்ணா.

  ReplyDelete
 5. இதுக்கு மேலே? ஒண்ணும் இல்லையே! அந்த வாக்கியங்கள் அருணம் முதல் பிரச்சனத்துல வருது. (கி.ய.வே) அந்த இடத்திலே அர்த்தம் பாத்தாலே புரியும், இது இந்திரன்னு. மேலும் சோம யாகத்திலே இந்திரன் ஆவாஹனம் உண்டு. மாலை கர்மா முடித்து யஜமானனுக்கு "பிரசாதம்" கொடுக்கிறப்பவும் சாம வேதத்திலே இதே மாதிரி உண்டு.

  ReplyDelete
 6. கிருஷ்ண யஜுர்வேதம், சாமம் சொல்றது இந்திரனைத் தான் என்றால் "சுப்ரமண்யோஹம்"னு சொல்றதுக்கு என்ன காரணம்? இந்திரனுக்கு இந்தப் பெயர் வரக் காரணம் என்ன?? முடிஞ்சால் விளக்கவும்,எல்லாருமே தெரிஞ்சுப்போம்!

  ReplyDelete
 7. கந்தனைப் பற்றி அவன் கருணையைப் பற்றி அன்னை அளித்த வேலைப் பற்றி சுருக்கமாக அருமையாகத் தந்து விட்டீர்கள் அம்மா. படிக்க சுகமாக இருந்தது. நன்றி.

  ReplyDelete
 8. \\கவிநயா said...
  கந்தனைப் பற்றி அவன் கருணையைப் பற்றி அன்னை அளித்த வேலைப் பற்றி சுருக்கமாக அருமையாகத் தந்து விட்டீர்கள் அம்மா. படிக்க சுகமாக இருந்தது. நன்றி.
  \\

  வழிமொழிக்கிறேன்...அரோகரா..;))

  நன்றி தலைவி ;)

  ReplyDelete
 9. @கவிநயா, நன்றி அம்மா.

  @கோபி, வாங்க, வாங்க, கடைசியா வந்துட்டீங்க போல! :P:P:P

  ReplyDelete
 10. அட, என்ன இது?? என்னோட ப்ளாகிலே நுழையவே கூடாதுனு சொல்லிட்டு இருக்கே இந்த ப்ளாக்கர்?? மறுபடியும் கிறுக்குத் தனம் ஆரம்பிச்சுடுச்சா?? ஒண்ணுமே புரியலை உலகத்திலே!! :P:P:P

  ReplyDelete
 11. உள்ளேனம்மா போட்டுக்கறேன்.

  துள்ளி வந்த வேல் பிளாக்கரை உங்களிடமிருந்து காக்குதோ என்னமோ? :))

  ReplyDelete
 12. சுப்ரமண்யன் என்பது நல்ல ப்ரமண்யத்வம் உள்ளவன் - வர்கலுக்கு ஹிடத்தை செய்பவன்னு காஞ்சி பெரியவா வ்யாக்யானம் தெய்வத்தின் குரல்லே செய்து இருக்கிறதா பையர் சொல்றார்.

  //சுப்ரமண்யோஹம்" "சுப்ரமண்யோஹம்" "சுப்ரமண்யோஹம்//
  இப்படி இல்லை சுப்ரமண்யோம் என்றுதான் 3 தரம் வருது. சந்திவிதிகளால சுப்ரமண்யோஹும் சுப்ரமண்யோஹும் சுப்ரமண்யோம் ன்னு வருது.
  (சுப்ரமண்யா ஓம்.)

  ReplyDelete
 13. @திவா,
  @மெளலி, இன்னிக்கு வந்த ஒரு மெயிலை ஃபார்வார்டு பண்ணி இருக்கேன் பார்த்துட்டு உங்க கருத்தைச் சொல்லுங்க, இந்த "சுப்ரமண்யோம்" விடலை இன்னும்! :))))))))))

  ReplyDelete
 14. தெய்வத்தின் குரல் முதல் பாகத்தில் தான் நானும் படிச்சேன். கிட்டத் தட்ட இதே அர்த்தம் தான், இன்னும் விவரமாவும் இருக்கு. நாளைக்குப் பார்க்கலாம்.

  ReplyDelete
 15. தெய்வத்தின் குரல் பாகம்7 பக்கம் 592 பாருங்க!

  ReplyDelete
 16. ஓகே, ஓகே, 7-வது பாகம் அண்ணா வீட்டிலே இருக்கு, இப்போதைக்குக் கொஞ்சம் தள்ளிப் போடறேன், சுப்ரமண்யரை! இங்கே இருக்கிறதிலே பார்த்துட்டேன். சுகர் பத்தியும் தேடிட்டு இருக்கேனே?? நேத்திக்கு ம.பா. கிட்டே கூடக் கேட்டேன், அவரும் நான் சொன்னாப்போல் தான் படிச்சதாய்ச் சொல்றார். பார்க்கிறேன். கொஞ்சம் தாமதம் ஆகும். :(((((((

  ReplyDelete