எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, November 04, 2008

ஆறிரு தடந்தோள் வாழ்க! ஆறு முகம் வாழ்க!


ஒரு ஆண்மகன் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாய்த் திகழ்ந்தான் கந்தவேள்! சூரன் மாமரமாய் மாறி நடுக்கடலில் நின்று எதிர்த்தபோதும் அதை இரு கூறாகவே வீழ்த்தினான். வீரம் மட்டும் இருந்தால் போதுமா?? அருளும் இருக்கவேண்டும் அல்லவா?? அருள் இல்லாத வீரம் மட்டுமே இருந்ததால் அன்றோ சூரனை அழிக்க நேர்ந்தது. கருணக் கடலாம் கந்தன் அவனுக்கு அருள வேண்டும் எனத் திருவுளம் கொண்டான். ஆனால் அந்த மாமரமோ சேவலாகவும், மயிலாகவும் மாறிக் கந்தனைத் தாக்க வர அவன் பேராற்றலோடும், பெருங்கருணையோடும் அவற்றைத் தடுத்தாட்கொண்டான் அல்லவா? பேரருளாளன் ஆன கந்தனின் கருணையால் சூரன் சேவலாக ஆகி அவன் கொடியிலும், மயிலாக மாறி அவனுக்கு வாகனமாகவும் ஆனான். இதற்கு முன்னால் ஷண்முகனுக்கு வாகனம் இல்லையா என்ன? மயிலேறும் வடிவேலன் மயிலேறித் தானே போருக்கே வந்தான் அல்லவா? கொடியிலும் சேவல் தானே இருந்தது? அந்த மயில் வேறு யாரும் இல்லை. சூரனின் கொடுமைதாங்காமல் ஒளிந்திருந்த இந்திரன் தான் மயில்வாகனமாக முன் வந்தான். அக்னியானவன் சேவல் வடிவில் வந்து கொடியாக உதவினான். காக்கவேண்டியவனையும், காத்து, தண்டிக்கவேண்டியவனையும் காத்து இருவருக்கும் தன் கருணையால் அருள் மழை பொழிந்தான் கந்தவேள்.

கல்லார்க்கும், கற்றவர்க்கும் களிப்பருளும் அந்தக் களிப்பான ஷண்முகனுக்குப் பரிசு கொடுக்க வேண்டாமா?? தேவேந்திரன் தன் அருமை மகளைத் திருமணம் புரிவித்தான் ஆறுமுகனுக்கு. மேன்மை வாய்ந்த குமாரனுக்குத் தன் மேன்மை வாய்ந்த மகளைத் தந்து தானும் மேன்மை பெற்றான் தேவேந்திரன். ஆனால் இன்னொரு பெண்ணையும் கந்தன் மணந்தானே? இந்தப் பெண் யார்?/ தேவானையின் சகோதரியே அவள். இருவரும் தேவலோகப் பெண்களே, முருகனை மணக்கவேண்டித் தவம் இருக்க ஒருத்தி தேவேந்திரனின் மகளாகவும் இன்னொருத்தி வேடுவர் குலத் தலைவனாலும் வளர்க்கப் பட்டாள். ஏன் இந்த வித்தியாசம்? இருவருமே திருமாலின் மக்கள் தானே? இங்கே தான் கந்தனின் அருள் புலன் ஆகின்றது. தெய்வானையை மணந்தது மேன்மை என்றால் எளிய வேடுவனின் மகளையும் மணந்தது கந்தனின் எளிமையைக் காட்டுகின்றது அல்லவா??

கந்தனின் மந்திரமும் ஆறு எழுத்து. அவனுக்கு முகங்களும் ஆறு. "ஷரவண பவ" "குமாராய நம:" எந்த இந்த ஆறெழுத்து மந்திரத்தைப் பற்றி திருமுருகாற்றுப் படையில் வந்திருப்பதாய் அறிகின்றோம். குமாரன்= அக்ஞான இருளை அழிப்பவன் என்று பொருள் கொள்ள வேண்டும். ஷரவண பவ என்றால் குமாரன் தோன்றிய நாணற்காட்டையும் குறிக்கும், குமாரனைப் போற்றிப் பாடினால் ஆரோக்கிய வாழ்வு சித்திக்கும் என்றும் குறிக்கும். ஆறுமுகங்களும் ஆறு திசைகளைக் குறிக்கும். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மேல், கீழ் என ஆறு திசைகளையும் காட்டுகின்றது இது. சூரனை அழித்த சினம் அடங்காமல் முருகன் இருக்கப் போகின்றானே என்றே எண்ணி அவனுக்கு வள்ளி, தெய்வானை இருவரையும் மணமுடிக்கின்றனரோ?? அதனால் தான் நக்கீரர் அவனை ஆற்றுப் படுத்த ஆற்றுப்படை பாடினாரோ?? இந்த ஆற்றுப் படைகளில் குறிப்பிடும் இடங்களே ஆறுபடை வீடு என இன்று மாறி உள்ளது. திருப்பரங்குன்றத்தில் தரையிலும், திருப்போரூரில் விண்ணிலும், திருச்செந்தூரில் கடலிலும் போரிட்டான் சிவ குமாரன். இவனின் ஆறுபடை வீடுகளையும் அவற்றின் தத்துவங்கள் பற்றியும் பார்ப்போமா??

மேலும் சிக்கலில் குடிகொண்ட சிங்காரவேலன், எட்டுக்குடி வேலவன், எண்கண் ஷண்முகன் மூவரையும் செய்த சிற்பியைப் பற்றியும் அறிவோமா???


கதை வேணுங்கறவங்க கையைத் தூக்குங்கப்பா!அப்போத் தான் கதை சொல்லுவேன். இல்லாட்டி ஒண்ணும் கிடையாது! :P

18 comments:

  1. சரவணபவ என்பதை மட்டுமே 6 எழுத்து மந்திரமாக தெரியும்....குமாராய நம என்பது புதிய செய்தி...ஏதானும் தரவு தரமுடியுமா ? :)

    ஆமாம், அதென்ன புதரில் தோன்றியவன்?. புதசெவி

    ReplyDelete
  2. முந்தைய பின்னூட்டத்தில் புதர் அப்படின்னு சொல்லிட்டேன்...நீங்க சொல்லியிருப்பது நாணற்காடு...

    //சரவண பவ என்றால் குமாரன் தோன்றிய நாணற்காட்டையும் குறிக்கும்//

    ReplyDelete
  3. //சூரன் சேவலாக ஆகி அவன் கொடியிலும், மயிலாக மாறி அவனுக்கு வாகனமாகவும் ஆனான். இதற்கு முன்னால் ஷண்முகனுக்கு வாகனம் இல்லையா என்ன? மயிலேறும் வடிவேலன் மயிலேறித் தானே போருக்கே வந்தான் அல்லவா? கொடியிலும் சேவல் தானே இருந்தது?//

    athaanee!

    ReplyDelete
  4. शरः= என்றால் நாணல் என்றொரு அர்த்தம் உண்டல்லவா?? அதை வைத்து எழுதினேன். மேலும் கங்கை சிவகுமாரனைத் தாங்கிக் கொண்டு வந்த பொய்கையைச் சுற்றிலும் நாணல் காடு என்று தானே சொல்லுவாங்க. அதனாலேயே அது ஷரவண பொய்கை எனப் பட்டது. நாம தமிழிலே ஷ, போடாமல் ச போடறதாலே பலவற்றின் அர்த்தமே மாறிடுது. நானும் அந்தத் தப்பைத் தான் செய்திருக்கிறேன். ஷரவணபவ என்று வந்திருக்கணும்.

    ReplyDelete
  5. மாத்திட்டேன் மெளலி.

    ReplyDelete
  6. //அந்த மயில் வேறு யாரும் இல்லை. சூரனின் கொடுமைதாங்காமல் ஒளிந்திருந்த இந்திரன் தான் மயில்வாகனமாக முன் வந்தான். அக்னியானவன் சேவல் வடிவில் வந்து கொடியாக உதவினான். //

    திவா, இதைப் படிக்கலை??? :P:P:P ஒழுங்காப் படிங்க! டெஸ்ட் வைக்கணும் போலிருக்கே!

    ReplyDelete
  7. எல்லாம் படிச்சாச்சு!

    ReplyDelete
  8. @திவா, :P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P டெஸ்டுனு சொன்னதும் ஜகா வாங்கறீங்க???

    ReplyDelete
  9. பேச்சோட பேச்சா ரொம்ப நாளா எனக்கு இருந்த ஒரு கேள்விக்கு பதில் சொல்லிட்டீங்க கீதாம்மா.

    ஆறு படை வீடுகள்னா இந்த தலங்களில் எல்லாம் முருகன் படைவீடு கொண்டிருந்தானா என்று புரியாமல் திகைத்துக் கொண்டிருந்தேன். கந்த சஷ்டிப் பதிவுகளில் முதல் இடுகையில் கூட இரவிசங்கரும் இந்தத் தலங்களில் படைவீடு கொண்டிருந்தான் முருகன் என்று சொன்னதாக நினைவு. அங்கேயும் கேட்டிருந்தேன். ஆனால் இப்போது உங்கள் இடுகை படித்ததில் ஒன்று புரிந்தது. இந்தத் தலங்கள் திருமுருகாற்றுப்படையில் வரும் தலங்கள் - ஆற்றுப்படைவீடுகள் - அவை ஆறு தலங்களாக அமைந்தன. அதனால் அவை ஆறுபடைவீடுகளும் ஆயின. அருமை அருமை அம்மா. மிக்க நன்றி.

    ReplyDelete
  10. //....குமாராய நம என்பது புதிய செய்தி...ஏதானும் தரவு தரமுடியுமா ? //

    இதுக்கு பதில் வரல்ல இன்னும்...

    ReplyDelete
  11. கேள்வியை நீங்கள் கேட்கிறீர்களா நான் கேட்கட்டுமா? :P:P

    ReplyDelete
  12. குமரன், உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன், என்னோட மதுரைநகர் பதிவுகளிலே திருப்பரங்குன்றம் பற்றிய பதிவிலே கூட எழுத நினைச்சு விட்டுப் போச்சுனு நினைக்கிறேன். இப்போ அங்கே எதுவும் வரலை. என்றாலும் இந்த விஷயம் ஆற்றுப்படை படிச்சவங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைச்சேன்.

    @மெளலி, குமாராய நம: எழுதறேன். படிக்கணும் இன்னும், அதுக்குள்ளே ஏதோ தேடப் போய் வேறே ஏதோ கிடைச்சது.

    @திவா, :P:P:P:P:P:P:P

    ReplyDelete
  13. எல்லாம் சரி....

    \\இருவருமே திருமாலின் மக்கள் தானே?\\

    இந்திரன் மகள்னு சொன்னிங்க இப்போ திருமால் மகள்கள் என்று சொல்றிங்க!! திருமால் என்றால் பெருமாள் தானே!!!??

    \\கதை வேணுங்கறவங்க கையைத் தூக்குங்கப்பா!அப்போத் தான் கதை சொல்லுவேன். இல்லாட்டி ஒண்ணும் கிடையாது! :P\\

    இது என்ன புது பழக்கம்...சரி நான் ரெண்டு கையையும் தூக்கிட்டேன் ;))

    ReplyDelete
  14. அப்புறம் ஒரு சின்ன விண்ணப்பம்...முருகன் & வள்ளி லவ்வு மேட்டாரை கொஞ்சம் விலாவரியாக போடுங்க ;))

    @ திவா சார்...நீங்க சொன்னது போலவே கேட்டுட்டேன் ;))

    ReplyDelete
  15. கையை எவ்ளோ நேரம் தூக்கியே வச்சிருக்கது?

    ReplyDelete
  16. கோபி கேள்வி கேளுங்க. ரிக்வெஸ்ட் இல்லை.
    கைல துப்பாக்கி வெச்சுகிட்டு கை தூக்கினாதான் கதைனா என்ன அர்த்தம்?
    :-))

    ReplyDelete
  17. கோபி, இரண்டு பேருமே திருமாலின் மகள்களே, அதை எல்லாம் எழுத ஆரம்பிச்சால் ரொம்பப் பெரிசாப் போகுமே?? சுருக்கம்னு நான் நினைச்சுட்டு இருக்கிறதே 4 பதிவுக்கு மேலே வருது! :)))))))

    இருங்க கவிநயா, ரொம்ப பிசி போல, தாமதமாய் வந்து கையைத் தூக்கிட்டு இருக்கீங்க??? ம்ம்ம்ம்ம் கொஞ்சம் பொறுங்க. முதல்லே ஆறுபடை வீட்டையும் முடிச்சுடுவோம்னு நினைக்கிறேன்.

    கையைத் தூக்காத திவா, மெளலி, குமரன் இவங்களுக்கெல்லாம் கதை கிடையாது! :P:P:P:P

    ReplyDelete
  18. "மாறிலா வள்ளி வாழ்க" என வருகிறது. அந்த மாறிலா என்பதன் பொருளென்ன

    ReplyDelete