எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, November 28, 2008

பாருக்குள்ளே நல்ல நாடு, பாரத நாடு!

மனம் வேதனையில் இருக்கும்போது என்ன எழுதறதுனு புரியலை. சக மனிதர்கள் உயிருக்குப் பயந்து ஒளிந்துகொண்டு, பிடித்து வைக்கப் பட்டுக் கஷ்டப் பட்டுட்டு இருக்காங்க மூன்று நாட்களாய். அவங்களை நம்ம ராணுவம் கடும் முயற்சியில் காப்பாற்றிக் கூட்டி வரும்போது இந்தப் பத்திரிகைக்காரர்களும், தொலைக்காட்சி ஊடகங்களும் அவங்களைத் தொந்திரவு செய்து பேட்டி எடுக்கையில் எரிச்சலே மீதூறுகின்றது. இரண்டு நாளுக்குக் கஷ்டப் பட்டு வெளியிலே வந்தவங்க, பத்திரமான இடத்துக்குப் போகத் தான் விரும்புவாங்க. அதிலே ஒரு பெண்மணியை வீல் சேரிலே வைத்துக் கொண்டு வரும்படியான நிலை. ஒரு சின்னக் குழந்தையை 5,6 மாசம் இருக்கும், அதன் அப்பா எடுத்துட்டு ஓடி வரார். அவரை வழிமறிச்சுப் பேட்டி கேட்கிறாங்க. மைக்கை நீட்டறாங்க. அந்த மைக்காலேயே அடிக்கலாம் போல் வந்தது.

பத்தாததுக்கு பிரதமர், சோனியா எல்லாம் அங்கே போய் உட்கார்ந்திருக்காங்க. பாதுகாப்பு அவங்களுக்குக் கொடுக்கிறதிலே கவனம் போயிடுமோனு ஷோபா டே கவலையில் பொரிந்து கொட்டுகின்றார். விஐபிக்களுக்குத் தகுந்த பாதுகாப்புக் கொடுக்கலைனால் அதுக்கு வேறே பதில் சொல்லணுமே? அவங்க இருக்கிற இடத்திலே இருக்கட்டும்னு அவங்க எண்ணம். உளவுத் துறையின் கவனக்குறைவு, எத்தனை பேரின் உயிரைக் காவு வாங்கி இருக்குனு நினைச்சால் நாட்டின் எதிர்காலத்தை நினைச்சுக் கவலை வருகின்றது. இத்தனைக்கும் இந்த மாதிரி இல்லைனாலும் ஒரு பெரிய தாக்குதல் நிச்சயமாய் இருக்குனு சொல்லிட்டேத் தான் இருந்தாங்க. ஒரு விதத்தில் இந்தத் தொலைக்காட்சி ஊடகங்களின் போக்கே காரணம் இத்தனைக்கும். அவங்க தான் சின்ன விஷயத்தை ஊதி, ஊதிப் பெரிசு படுத்திக் காசு பார்க்கிறாங்க. அதுக்காக எந்த எல்லைக்கும் போகலாம்னும் முடிவு எடுத்துப் போகிறார்கள்.

ரொம்பவே பெருமை அடிச்சுக்கிட்டோம். அணுகுண்டு வெடிச்சாச்சு, இந்தியாவிலேயே அதிகத் தொழில் நுட்ப நிபுணர்கள், மென்பொருள் நிபுணத்துவம் மிகுந்த நாடு, வெளிநாட்டு முதலீடுகள் செய்ய விரும்பும் நாடு என்று. ஆனால் அதற்குத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தோமா?? சாதாரணமாய் வெளியே செல்லக் கூட அச்சமாய் இருக்கும்படியான நிலையில் நாடு இன்று வந்ததுக்கு யார் காரணம்?? ரத்தன் டாடா கேட்ட கேள்விகள் எல்லாம் சரியானதே? நம்ம சுயப் பெருமையில் சாதாரணப் படகில் வந்தவர்களைக் கண்டுகொள்ளவில்லை, அதுவும் இத்தனை ஆயுதங்களோடு. இந்தக் கஷ்டத்துக்கு முன்னாலே, நேத்திக்கு ராத்திரி வீட்டுக்குள்ளே தண்ணீர் நுழைஞ்சதும், அதைக் காலை 3-30 மணியில் இருந்து எடுத்துக் கொட்டியதும் கூடப் பெரியதாய்த் தெரியலை.

பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்றானே ஒருத்தன், அவன் சொன்னது சரியா?

இந்தப் போராட்டத்தில் உயிர் நீத்த அனைத்து ராணுவ வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்துவோம், அவங்க குடும்பத்துக்கு நம் அநுதாபங்கள். என்னதான் நாட்டுக்காக உயிர் நீத்திருந்தாலும் குடும்பத்திற்குத் தனிப்பட்ட முறையில் எத்தனை, எத்தனை மன வருத்தம்?? யார் ஆறுதல் சொல்றது அந்தக் குடும்பங்களுக்கு எல்லாம்? இறைவன் தான் இந்த நாட்டைக் காப்பாத்தணும்.சற்றுமுன் வந்த செய்திப்படி செய்தி சேகரிப்பவர் ஒருவருக்குக் குண்டடி பட்டுள்ளது. நிலைமையின் தீவிரம் சரிவரத் தெரியவில்லை. :((((((((

11 comments:

  1. //பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்றானே ஒருத்தன், அவன் சொன்னது சரியா? //

    பாருக்குள்ளே நல்ல நாடாக இருப்பதில் தவறில்லை.
    ரொம்ப... நல்ல... நாடாக இருக்கிறது நம் நாடு!
    எவ்வளவு அடிச்சாலும் தாங்குகிறேன்னு சொல்கிறது.
    படிப்பினைகள் எத்தனை முறைதான் இவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுப்பது.
    படிப்பினைகளால் இவர்கள் கற்றுக் கொண்டது என்ன?
    ஏன் செய்த தவறையே திரும்பத் திரும்ப செய்து கொண்டு, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்கள்?
    கேள்விக் கணைகள் மட்டுமே தொடுக்க முடிகிறது!
    பதிலை எங்கிருந்து பெறுவது?

    ReplyDelete
  2. ;(

    இங்க சரியாக தகவல் தெரிஞ்சிக்க முடியல ஆணி அதிகம்...;(

    கடவுளே சீக்கிரம் முடிவுக்கு வரவேண்டும்.

    ReplyDelete
  3. அன்பு கீதா, மனசு நொறுங்கி இருக்கிறது.
    நீங்கள் எழுதி இருப்பது அத்தனையும் உண்மை. இவர்கள் அனைவரும் சினிமா பார்க்கவா வந்திருக்கிறார்கள்.
    வெளியே வந்தவர்களை கையில் மைக்கோடு படுத்திய பாடு,..சொல்லிமுடியாது.
    நாகரீகம் இல்லை. நிலைமை புரிந்து செயல் படுகிறார்களா. புரியவில்லை அம்மா.

    ReplyDelete
  4. :-(((((((((((
    மின் தடையால இந்த விஷயம் பத்தி இன்னும் சரியா தெரிஞ்சுக்க முடியலை. வரலாற்றிலேயே ரொம்ப பலகீனமாக உள்துறை அமைச்சர். ஹும் என்ன செய்யறது!:-(

    ReplyDelete
  5. // இந்தப் பத்திரிகைக்காரர்களும், தொலைக்காட்சி ஊடகங்களும் அவங்களைத் தொந்திரவு செய்து பேட்டி எடுக்கையில் எரிச்சலே மீதூறுகின்றது. //

    கிரிகெட் காமெண்ட்ரி கெட்டது போங்க!
    பொறுப்பற்றவர்களுக்கு தரப்பட்ட சுதந்திரத்தால் வரும் நல்லதை விட கெட்டதுதான் அதிகம்.

    போறாக்குறைக்கு ஸ்டுடியோ வசதியில் அமர்ந்து கொண்டு, நிலைமை விசாரிக்க வந்த சில அரசியல்வாதிகளை காமிரா மூலம் பார்த்தபடியே “எங்களுக்கு அரசியல்வாதிகள் தேவையில்லை. இங்கே வந்து விளம்பரம் தேடுகிறார்கள்” என்று உச்சஸ்தாயில் அலறிகொண்டிருந்தார் ஒரு “தொலைக்காட்சி சேனல் எக்ஸ்பர்ட்”.

    Breaking the News என்ற பெயரில் இவர்கள் நடத்தும் கூத்துக்கு அளவில்லாமல் போய்விட்டது.

    //கஷ்டத்துக்கு முன்னாலே, நேத்திக்கு ராத்திரி வீட்டுக்குள்ளே தண்ணீர் நுழைஞ்சதும், அதைக் காலை 3-30 மணியில் இருந்து எடுத்துக் கொட்டியதும் கூடப் பெரியதாய்த் தெரியலை //

    சென்னை மழையிலே டிவி எல்லாம் வேலை செய்யுதா ?

    ReplyDelete
  6. @ஜோதி பாரதி,
    வாங்க சார்/மேடம்?? பதில் எல்லாம் கிடைக்காது. அதை இன்னுமா எதிர்பார்க்கிறீங்க?? ரொம்பவே அப்பாவியாய் இருக்கீங்களோ?? :(

    ReplyDelete
  7. @கோபிநாத், தொலைக்காட்சியில் பார்க்கும்போது ரத்தம் கொதிக்கிறது, என்றால் அதில் பொய்யே இல்லைப்பா, அவ்வளவு ஆத்திரமாய் வந்தது. அதுவும் பிரதமரின் வழக்கமான, இந்தத் தீவிரவாதத்தை நாங்கள் இனியும் சகிக்க மாட்டோம் என்ற கூவலை துளிக்கூடச் சகிக்க முடியலையே? :(((((((((

    ReplyDelete
  8. வாங்க வல்லி, புறாக்களை நாங்களும் பார்த்தோம், ஆனால் உங்கள் பார்வை வித்தியாசமாய் இருந்திருக்கு, ரொம்பவே வருத்தமாய் இருக்கும்மா, இப்படி ஒரு நிலைமை வர வரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்தாங்க??

    ReplyDelete
  9. @திவா, பார்க்கலையோ, கொடுத்து வச்சீங்களோ, என்னவோ போங்க, யாரைக் குத்தம் சொல்றதுனே புரியலை!

    @கபீரன்பன், சென்னை மழையில் தொலைக்காட்சி சரியாக வரலை தான், ஆனால் ஒரு சில சானல்கள் மட்டுமே கேபிள்காரங்களாலே காட்ட முடிஞ்சது. அதிலே டைம்ஸ் நவ் சானலும் ஒன்று, மேலும் மின்சாரம் இல்லைனாலும் இன்வெர்டர் உதவியாலும் பார்க்க முடிந்தது.

    ReplyDelete
  10. // கீதா சாம்பசிவம் said...
    @ஜோதி பாரதி,
    வாங்க சார்/மேடம்?? பதில் எல்லாம் கிடைக்காது. அதை இன்னுமா எதிர்பார்க்கிறீங்க?? ரொம்பவே அப்பாவியாய் இருக்கீங்களோ?? :(//


    அன்பின் சகோதரி,

    சாரும் வேண்டாம் மேடமும் வேண்டாம்
    தம்பி என்று விளிப்பின் தயங்காது மகிழ்வேன்.
    எப்பாவி எது செய்யினும் -எனைப் போன்ற
    அப்பாவி வினவுதல் முறையே!
    இப்பாவி இது செய்தனன் என,
    இறையாண்மை பகரும் இழிவான ஆட்சி
    இயலாமையால் தேடும் சாட்சி
    இன்று நிற்கும் என நம்பி நம்பி
    ஏமாந்து போனேன் இத்தம்பி.

    அன்புடன்,
    ஜோதிபாரதி,
    சிங்கப்பூர்.

    ReplyDelete
  11. வாங்க ஜோதிபாரதி, ஆதங்கம் தான் எனக்கும். அது மட்டுமே நம்மை மாதிரி சாமானியர்களால் முடிஞ்சது. இந்தியாவுக்குள்ளேயே போக அச்சமா இருக்கே இப்போ?? இதுக்கு என்ன செய்யப் போறாங்க?? தெரியலை! :(((((

    ReplyDelete