எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, September 03, 2010

தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்!

எப்போ மனம் வேதனையில் இருந்தாலும், கண்ணன் வந்தான் பாடலைக் கேட்டால், (அதுவும் சொல்லி வச்சாப்போல் எங்கே இருந்தோ கேட்கும்.) மனம் லேசாகும். கிருஷ்ணன் பிறப்புக்குப் பதிவு எதுவும் போட முடியலை. வீட்டிலே சுத்தம் செய்யும் வேலையோடு கிருஷ்ணன் பிறப்புப் பண்டிகை வேலையும் சேர்ந்துக்க இணையத்துக்கு வந்து மெயில் பார்க்கிறதே சிரமமா இருந்தது.
கிருஷ்ணன் என்னமோ குழந்தை தான். அதுவும் சின்னக் குழந்தை. பல் முளைக்காத குழந்தை. ஆனால் நாம்ப செய்யற பட்சணம் எல்லாம் பல் உள்ளவங்க சாப்பிடறது. மேலே இருக்கும் படத்தில் உப்புச் சீடையும், வெல்லச் சீடையும். வெல்லச் சீடை வெட்கம் வந்து ஒளிஞ்சிருக்கு போல!
இதிலே கை முறுக்கும், தட்டையும் செஞ்சதை வச்சிருக்கேன்.. இது தவிர பாயாசம், வடையும் உண்டு. முன்னெல்லாம் திரட்டுப் பால், விதவிதமான பழங்கள் என்று வாங்குவோம். இந்த வருஷம் திரட்டுப் பாலும் கட். பழங்கள் வாழைப்பழம் மட்டுமே. அதுவே இன்னும் இருக்கு! :D கூட்டுக் குடும்பமா இருக்கும்போது கிருஷ்ணன் பிறப்புக்கு இரண்டு நாட்கள் முன்னாடியே பட்சணம் பண்ண ஆரம்பிப்போம். எங்க பையர் பட்சண பாக்டரினு சொல்லுவார். அப்படிக் கிருஷ்ணன் பிறப்புக்கு இரண்டு நாள் கழிஞ்சும் பண்ணிட்டு இருப்போம். இப்போல்லாம் அன்னிக்கு ஒருநாள் தான் பண்ணறேன். தீபாவளிக்கும் அப்படித் தான் வாரக் கணக்காப் பண்ணுவோம். இப்போல்லாம் பாக்டரி கதவடைப்புச் செய்தாச்சு! சாப்பிட யார் இருக்காங்க?

எல்லாரும் முறுக்கு, தட்டை, சீடை எடுத்துக்க வாங்கப்பா! வரிசையா வரணும்! எல்லாருக்கும் உண்டு! கேட்டயா??? :P:P:P திடீர்னு அநன்யா அக்கா நினைவு வந்துடுச்சு!

14 comments:

 1. ஹிஹிஹி, எடுத்துக்குங்க! :)))))))

  ReplyDelete
 2. கண்ணன் புகழ் பாடிண்டே சாப்பிட்டுடலாம்!
  அது என்ன, ரெண்டு சுத்து முறுக்கா?.. ஒண்ணு ரெண்டு, மூணு சுத்தும் கலந்திருக்கற மாதிரி இருக்கே?..
  உப்புச் சீடை வெள்ளை வெளேர்னு தெரியுதே?.. எண்ணைலே போடறதுக்கு முன்னாடி எடுத்தப் படமா?.. :))

  ReplyDelete
 3. வாங்க ஜீவி சார், ரெண்டு சுத்து முறுக்குத் தான் சுத்தினேன். ஐந்து, ஏழு எல்லாம் மாமனார் காலத்தோட நிறுத்தியாச்சு! :)))))))))) முறுக்குகள் ஒண்ணு மேலே ஒண்ணு இருக்கிறதாலே சுத்து ஜாஸ்தியாத் தெரியறது! :)))))))))))))))
  இன்னிக்குத் தான் எடுத்தேன் படம் எல்லாம், அதனால் எண்ணெயில் போட்ட சீடை, முறுக்கு, தட்டைகளே. சிவப்பாய்த் தான் எடுத்தேன். நாள் ஆக ஆக வெளுப்பாகுமே! அதனால் வெளுப்பாய்த் தெரியுது! :))))))))))))

  ReplyDelete
 4. எல்லாருக்கும் உண்டு! கேட்டயா??? :P:P:P திடீர்னு அநன்யா அக்கா நினைவு வந்துடுச்சு!//
  ஏஏஏஏஏஏஏஏஏஏஏஎய்! எனக்குமுண்டு ட்டேளா?

  ReplyDelete
 5. வாங்க திவா, எல்லாருக்கும் இருக்குட்டேளா??? வாங்க, மெதுவா வாங்க, முறுக்கு நல்லா கரகரா! :D

  ReplyDelete
 6. hum... rendu naalaa blog blogaa poi perumoochu thaan vittutu irukken... eppavum adhe... kai murukku... nadathunga nadathunga... super maami..

  ReplyDelete
 7. ஹை ஏடிஎம், வாங்க, வாங்க, சாப்பிட்டுப் பார்த்தாச்சா?? நல்லா இருக்கா?? நன்றிங்கோ! :))))))))
  apart from jokes,

  American long grain rice லெ எல்லா பட்சணமும் நல்லாவே வருதே?? முடிஞ்சால் செய்து பாருங்க. ஹூஸ்டனில் கிருஷ்ணருக்கு அதிலே தான் தட்டை, முறுக்கு, சீடை, அதுவும் சாப்பிட்டார் கிருஷ்ணர்! :)))))))))தீபாவளிக்கும் அதிலேயே பண்ணலாம்.

  ReplyDelete
 8. நல்ல பகிர்வு ;ப்ளோக்க விட்டுட்டு போகவே மனம் வர மாட்டேங்குது !!
  நன்றி கீதாம்மா

  ReplyDelete
 9. உங்க followers 100 வந்ததற்கு நீங்க எங்களுக்கு ட்ரீட் கொடுத்ததாக நினைத்து கொள்கிறோம் !

  ReplyDelete
 10. வாங்க ப்ரியா, ரொம்ப நன்றி பாராட்டுக்கு. ஹிஹிஹி, என்னோட ப்ளாகிலே தொடர்பவர்கள் லிஸ்ட் திடீர்னு ஏறும், அப்புறமா இறங்கும். அது என்னோட BP மாதிரி, கண்டுக்கறதே இல்லை. :)))))))))

  ReplyDelete
 11. வெல்லச் சீடையை மட்டும் வட்டம் போட்டுக் காட்டி இருக்கணுமோ?? க்ர்ர்ர்ர்ர்ர் வெல்லச் சீடை சரியா வரலைனு சொன்ன திவாவை வன்ன்ன்ன்ன்ன்ன்ன்மையாகக் கண்டிக்கிறேன். ஒரு வெல்லச் சீடைகூடக் கிடையாது உங்களுக்கு! நறநறநற

  அப்புறம் தட்டையிலே காரம் ஒண்ணும் ஜாஸ்தி போடலை! நிறத்தைப் பாருங்க! பாரத்தாலே பொன் நிறமாய் இல்லை?? :D

  ReplyDelete
 12. பட்சணமெல்லாம் அதி ஜோர்.
  இங்க எண்ணி 10 சீடை,வெல்லம் 6:)
  வடை பாயாசம்,தேங்காய் பர்ஃபி. யார் இருக்கா சாப்பிட! கண்ணனே வந்தால் தான் உண்டு.

  ReplyDelete
 13. வாங்க வல்லி, நானும் நிறையப் பண்ணலை, அக்கம்பக்கம் சொந்தம் இருக்காங்களே, கொடுக்கிறதுக்குப் பண்ணணும்! :)))) மற்றபடி இந்த வருஷம் நோ ஸ்வீட் இங்கேயும், திரட்டுப்பால் பண்ணுவேன், அதுவும் நோ! :)))))))) ம்ம்ம்ம் கண்ணனை நினைச்சுண்டு வர குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டியது தான்! :)))))

  ReplyDelete