எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, September 06, 2010

வந்தாச்சு, வந்தாச்சு, பிள்ளையார் வந்தாச்சு!


இன்னும் ஐந்தே நாட்கள் இருக்கின்றன, நம்ம அருமை நண்பர் வரவுக்கு. போனவருஷம் இந்த வலைப்பக்கத்தில் எழுத முடியலை. வேறே லிங்க் கொடுத்தேன் என்றாலும் பலரும் பார்க்கவில்லை. முதல்லே அந்தப் பதிவுகளை ஒரு மீள் பதிவாய்ப் போட்டுட்டு அப்புறம் விநாயகர் விஸர்ஜனம் வரைக்கும் சியமந்தக மணியால் கண்ணன் பட்ட அவதியும், அதை மீட்க எடுத்த போராட்டமும், விநாயகரின் கருணையும் எழுதி வச்சிருக்கேன். அவற்றைப் போட எண்ணம். பிள்ளையாரின் ஒவ்வொரு அங்கமும் ஒவ்வொரு அர்த்தங்களைச் சொல்லும். அவருடைய நிவேதனமாக அருணகிரியார் ஒரு பெரிய பட்டியலே தருகிறார். அதைத் தனியாய் எழுதறேன். இப்போப்பிள்ளையாரைப் பத்திப் பார்ப்போமா??

தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை- கணபதி!

கணபதி என்ற சொல்லுக்கு அர்த்தத்தைப் பார்த்தோமானால்
க= அஞ்ஞானம், அறியாமை அகலுவதைக்குறிக்கும்
ண= மோக்ஷத்தைக் குறிக்கும் சொல்
பதி=சாக்ஷாத் அந்தப் பரம்பொருளைக் குறிக்கும். நம் அறியாமையை அகற்றி, நம்மை மோக்ஷத்திற்கு அழைத்துச் செல்லும் பரம்பொருளே கணபதி.

ஈசன்:கணேச சஹஸ்ர நாமமும், முத்கல புராணமும் அந்தப் பரம்பொருளான ஈசனைப் படைத்தவனே கணபதி என்று சொல்லுகின்றது. கணேசனே ஈசனே கணபதி என்னும் பொருள்பட சம்பு என்று கணபதி குறிப்பிடப் படுகின்றார். ஈசனின் வாக் அம்சமான மந்திர ரூபமே கணபதி என்றும் கூறுவர்.

பிள்ளையாருக்குத் திருமணம் ஆகிவிட்டதாயும் அந்த மனைவியர் பெயர் சித்தி, புத்தி என்றும் சொல்லுவதுண்டு. கூர்ந்து கவனியுங்கள் மனைவியரின் பெயரை. சித்தி, புத்தி. நமக்கு என்ன தேவை, நல்ல புத்தியும், அதனால் விளையும் சித்தியும். ஆகப் பிள்ளையாரை வணங்கினால் இவைகிடைக்கும் என்பது கண்கூடு. அந்த மனைவியரின் பிள்ளைகள் சுபன், லாபன் என்ற பெயரிலும், அவர்களின் சகோதரிக்கு சந்தோஷி என்ற பெயரும் உண்டு. சுபன் என்றாலே நமக்கு சுபத்தை அள்ளிக் கொடுக்கக் கூடியவன். லாபத்தைத் தரக் கூடியவன். அதனால் விளையும் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியவர். ஆகப் பிள்ளையார் ஒருத்தரால் நமக்கு சித்தி, புத்தி கிடைப்பதோடு அதனால் விளையும் சுபம், லாபம், சந்தோஷம் ஆகியவையும் கிடைக்கும் என்பது கண்கூடு.

மூஞ்சுறு வாகனத்தைக் கொண்டவர் பிள்ளையார். இத்தனை பெரிய பிள்ளையாருக்கு இவ்வளவு சிறிய வாகனமா என எண்ணக் கூடாது. நம் அறியாமையே மூஞ்சுறு. மூஞ்சுறுக்கு யோசிக்கும் திறன் இல்லை. மிகச் சிறிய ஒன்று. சோம்பலாகவும் இருக்கும். இந்தச் சோம்பலை அடக்கி, யோசிக்கும் திறனைக் கொடுத்து அறியாமையில் இருந்து நம்மை மீட்க வேண்டும் என்பதின் குறியீடே மூஞ்சுறு வாகனம். இதைத் தவிர, கிருதயுகத்தில் பிள்ளையாருக்கு சிங்கமும், திரேதாயுகத்தில் மயிலும், துவாபர யுகத்தில் மூஞ்சுறும், கலியுகத்தில் குதிரையும் வாகனம் எனச் சொல்லப் படுகின்றது. மயில்னதும் சுப்ரமணியர்தானே நினைவில் வரார்? இல்லை, பிள்ளையாருக்கும் மயில் உண்டு. அதைப் பத்திப் பின்னால் பார்க்கலாம்.

மூலாதாரம்: நம் உடலில் உள்ள சக்கரங்களுக்குள் மூலாதாரச் சக்கரத்தின் அதிபதி பிள்ளையார் தான். மூலாதாரம் பூமி வடிவு. மண் தத்துவம். பிள்ளையாரையும் நாம் களிமண்ணால் தானே பிடித்து வைக்கின்றோம். ஆகவே பூமியைக் குறிக்கும் மூலாதாரச் சக்கரத்தின் அதிபதியும் பிள்ளையாரே ஆவார். இந்தப் பிள்ளையாரின் பீஜ மந்திரத்தை உச்சரித்து மூலாதாரத்திலிருந்து சக்தியை எழுப்பி மெல்ல மெல்ல மேலே வருவதற்கு பிள்ளையார் உதவுகின்றார்.

வேதங்களுக்கெல்லாம் முதல்வன் விநாயகனே. நான்கு வேதங்களும் புகழும் கடவுள் விநாயகனே. வேழமுகனே வேதம் என்றும் கணபதி எனவும் விக்னராஜன் எனவும் அழைக்கப் படுகின்றான். ப்ரும்மணஸ்பதி எனவும் சொல்லப் படுகின்றது. உபநிஷத்துக்களில் கணபதி உபாசனா முறை இருக்கின்றன என்று ஆன்றோர் சொல்லுகின்றனர்.

மோதகம்: வசிஷ்டரின் மனைவியான அருந்ததி தன் கற்பின் வலிமையால் விநாயகர் தங்கள் ஆசிரமத்துக்கு வரப் போவதை அறிந்து கொள்கின்றாள். விநாயகருக்குத் தருவதற்காக அவள் மோதகம் செய்து தன் கணவரிடம் அளித்து விநாயகருக்கு அதை அளிக்கச் செய்கின்றாள். அவள் மறைமுகமாய் உணர்த்தியது, பிரும்மம் அண்டம் முழுதும் நிறைந்துள்ளது என உணர்த்த வெள்ளை மாவை அண்டமாகவும், உள்ளே நிறைந்துள்ள பூரணத்தை பரப்பிரும்மமாகவும் உருவகப் படுத்தினாள். அதனாலேயே இன்றளவும் விநாயகர் வழிபாட்டில் மோதகம் முக்கிய இடம் பெறுகின்றது.

தந்தம்: விநாயகரின் தந்தம் ஒன்று உடைஞ்சிருப்பதைப் பார்த்திருப்பீங்களே? வேறே ஒண்ணும் இல்லை. வியாசர் மஹாபாரதம் எழுதும்போது விநாயகரின் உதவியைக் கோரினார். விநாயகரை வந்து எழுதித் தரச் சொன்னார். விநாயகரும் சம்மதித்து எழுதிக் கொடுத்தார். அப்போது ஏது பேனா, பென்சில், கணினி எல்லாம். எதை வச்சுப் பிள்ளையார் எழுதுவார்? யானை ஆச்சே? அதிலும் ஆண் ஆனை, தந்தம் இருக்குமே. இரண்டு தந்தங்களில் ஒன்றை உடைச்சது அந்த ஆனைமுகன். உடைச்ச தந்தத்தாலேயே எழுத ஆரம்பிச்சார். இதே தந்தத்தாலேயே ஒரு சமயம் அசுரன் ஒருவனையும் ஒழித்தார். ஆக பாரதம் எழுதியதின் மூலம் ஆக்கலும், அசுரரை ஒழித்ததின் மூலம் அழித்தலும், தேவரைக் காத்ததின் மூலம் காத்தலும் ஆகிய முத்தொழிலையும் தந்தத்தின் உதவி கொண்டே செய்தார் விநாயகர்.

ஆனந்த புவனம்: கைலையின் ஒருபகுதியின் ஆனந்த புவனம் கருப்பஞ்சாற்றின் கடலாக உள்ளதாம். கணேசனின் உறைவிடமான இது, சிந்தாமணி த்வீபம் எனவும் அழைக்கப் படுகின்றது.

எட்டு விதமான அவதாரங்களைப் பிள்ளையார் எடுத்திருக்கின்றார் என முத்கல புராணத்தில் ஆங்கிரஸ முனிவர் சொல்லுகின்றார். அவை யாவன: வக்ரதுண்டர், ஏகதந்தர்= தேக பிரும்மம், மகோதரர்= ஞான பிரும்மம், கஜானனர்=சாங்கிய பிரும்மம், லம்போதரர்=சக்தி பிரும்மம், விகடர்=ஆதி சக்தி, விக்னராஜர்=விஷ்ணு சக்தி, தூம்ரவர்ணர்=சிவ சக்தி ஆக எட்டு அவதாரங்கள் எனச் சொல்லப் படுகின்றது. நவகிரஹங்களும் பிள்ளையாரிடம் அடக்கம் என்றும் சொல்லுவார்கள். சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக்கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ்க்கையிலும், வியாழனை சிரசிலும், வெள்ளியை இடது கீழ்க்கையிலும், சனீஸ்வரரை வலது மேல்கையிலும், ராகுவை இடது மேல்கையிலும், கேதுவை இடது தொடையிலும் வைத்துள்ளதாய்ச் சொல்லப்படுவதுண்டு.

13 comments:

 1. தமிழ்மணம் பாடாய்ப் படுத்துது. புதுசாப் பெயர் கொடுத்துச் சேர்ந்தாலும் வெளியே போனு சொல்லுது. பழைய பெயரைக் கொடுத்தாலும் ஏத்துக்கலை. அது இருக்கேனு சொல்லுது, வேண்டாம் போங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒரு மாசத்துக்கும் மேலே தமிழ்மணத்திலே சேர்க்கவே முடியலை! :P

  ReplyDelete
 2. aarumai maami.. arumayana vilakam

  ReplyDelete
 3. முன்னவனே யானைமுகத்தவனே முத்தி நலம்
  சொன்னவனே தூய்மைச் சுகத்தவனே – மன்னவனே
  சிற்பரனே, ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே
  தற்பரனே நின் தாள் சரண் – திரு அருட்பா

  ஓதவினை அகலும்; ஓங்கு புகழ் பெருகும்
  காதற் பொருள் அனைத்தும் கைகூடும் – சீதப்
  பனிக்கோட்டு மால்வரை மேல் பாரதப்போர் தீட்டும்
  தனிக் கோட்டு வாரணத்தின் தாள்! - பெருந்தேவனார்

  பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் -

  ReplyDelete
 4. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

  ReplyDelete
 5. அழகான விளக்கங்கள். நன்றி.

  ReplyDelete
 6. ஆரம்பிச்சிட்டிங்களா உங்கள் நண்பர் கதையை...! நல்லது ;))

  நல்ல விளக்கங்கள் தலைவி ;)

  ReplyDelete
 7. //உபநிஷத்துக்களில் கணபதி உபாசனா முறை இருக்கின்றன என்று ஆன்றோர் சொல்லுகின்றனர்.//

  ஆமாம் கணபதி அதர்வ சீர்ஷம். அதர்வண வேதம். அதில் மிக லகுவான் மந்திரம் சொல்லப்படுகிறது. படித்து மகிழக்கூடிய உபநிஷத்!

  ReplyDelete
 8. வாங்க எல்கே, நன்றிப்பா. போன வருஷம் எழுதினது! :D

  ReplyDelete
 9. வாங்க ஜெயஸ்ரீ, இப்போ எப்படி இருக்கு நிலைமை?? இந்தியா மாதிரி மெதுவாய் வேலை செய்ய மாட்டாங்க, ஓரளவு சீரமைப்புப் பணிகள் நடந்திருக்கும்னு நம்பறேன். நீங்க வந்தது உண்மையிலே ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றிம்மா.

  ReplyDelete
 10. ராம்ஜி யாஹூ, நன்றி.

  ReplyDelete
 11. நன்றி வெற்றிமகள்.

  ReplyDelete
 12. வாங்க கோபி, பஸ்ஸிலே பார்க்கிறேன், உங்களோட போஸ்டை எல்லாம்! :)))))))

  ReplyDelete
 13. வாங்க திவா, தகவலுக்கு நன்றி.

  ReplyDelete