எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, September 10, 2010

ஆவணி அவிட்டம் அல்லது உபாகர்மா என்றால் என்ன??

ஆவணி அவிட்டம்:

இது ஆவணி மாசத்தில் அவிட்ட நக்ஷத்திரத்தில் வருவதாலே எல்லாரும் ஆவணி அவிட்டம்னே சொல்லிக்கொண்டிருக்கோம். பார்க்கப் போனால் இதை உபாகர்மா என்றே அழைக்கவேண்டும். வேத அத்யயனம் என்பது ஒரு காலத்தில் தினமும் செய்யப் பட்டது. அதன் ஆரம்பம் உண்மையில் சிராவணமாசம் பெளர்ணமி தினத்தில் வேத பாடங்கள் ஆரம்பிக்கப் பட்டன. மேலும் நம்முடைய கல்வித் திட்டத்தில் வெறும் வேத அத்யயனம் மட்டுமில்லாமல் மற்றப் பாடங்களையும் சேர்த்தே கற்பித்தனர். அது இந்த வேத அத்யயனம் உத்ஸர்ஜனம் செய்து முடித்தவுடன் ஆரம்பம் ஆகும். உத்ஸர்ஜனம் செய்வது தை மாசத்தில் நடக்கும். நம்முடைய புராதனக் கல்வித் திட்டம் இரு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருந்தன. முதலில் ஆரம்பிப்பது ஐந்து மாசங்களில் நடக்கும் வேதபாடங்கள். வேத அத்யயனம் என்றே சொல்லலாம். இரண்டாவது பகுதி ஏழு மாதங்கள். அப்போ வேத அத்யயனம் செய்வதை உத்ஸர்ஜனம் என்றும் சொல்லும் பகுதி நேர முடிவுக்கு வந்துவிட்டு மற்றப் பாடங்களைப் படிக்க ஆரம்பிக்கவேண்டும்.

அதாவது முன்பெல்லாம் மலையாளிகள் கொண்டாடும் திருவோணம் நக்ஷத்திரத்திலேயே ஆவணி மாத பெளர்ணமி வந்து கொண்டிருந்திருக்கிறது. ஆவணி மாசம் ஸ்ரவண நக்ஷத்திரம் எனப்படும் திருவோணம் நக்ஷத்திரமும், பெளர்ணமியும் சேர்ந்து வரும் நன்னாளில் வேத பாடம் கற்க ஆரம்பிப்பார்கள். முன்னால் இப்படி வந்து கொண்டிருந்த பெளர்ணமி காலப் போக்கில் சில வருடங்கள் ஒரு நாள் தள்ளி அவிட்ட நக்ஷத்திரத்திலும் வர ஆரம்பித்தது. அப்போது யஜுர்வேதிகள் பெளர்ணமி திதியைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்களை ஆரம்பித்தனர். ரிக்வேதிகளோ சிராவண நக்ஷத்திரத்தைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்கள் ஆரம்பித்தனர். ஆனால் சாமவேதிகள் எப்போதுமே அமாவாசையையே கணக்கு வைத்துக்கொண்டனர். ஆகவே அவர்கள் ஒரு மாசம் தள்ளி ஆவணி அமாவாசையிலிருந்து புரட்டாசி அமாவாசை வரையுள்ள காலத்தில் வரும் ஹஸ்த நக்ஷத்திரத்தில் பாடங்களை ஆரம்பித்தனர். ஹஸ்த நக்ஷத்திரம் மட்டுமின்றி அன்றைய தினம் பஞ்சமி திதியாக இருப்பதும் விசேஷம் என தர்ம சாஸ்திரங்கள் சொல்லுவதாய்த் தெரிகிறது. ஆனால் இப்போதெல்லாம் த்ரிதியையிலேயே ஹஸ்த நக்ஷத்திரம் வந்துவிடுகிறது.

உபாகர்மா என்றே இதற்குப் பெயர். ஆனால் இதை ஆவணி அவிட்டம் என்று சொல்லி நன்றாய்ச் சாப்பிட (போளி, ஆமவடையோடு) ஒரு பண்டிகையாக நாளாவட்டத்தில் மாற்றிவிட்டோம். தை மாசம் பிறக்கும் வரையில் வேதத்தை மட்டும் ஆசாரியர் கற்றுக் கொடுத்து சீடர்கள் சொல்லிக் கொள்வார்கள். தை மாதம் பெளர்ணமியிலோ அல்லது தை மாதத்து ரோகிணி நக்ஷத்திரத்திலோ இந்த அத்யயன காலத்தை முடிப்பார்கள். அத்யயன காலம் குறைந்த பக்ஷமாக நாலரை மாசமாவது இருக்கவேண்டும் என்பது விதி. ஆகவே தாமதமாய் ஆரம்பிக்கும் சாமவேதிகள் தை அமாவாசைக்குப் பின் வரும் பெளர்ணமியில் வேத அத்யயன காலத்தை முடிப்பார்கள்.

அடுத்த ஏழு மாசங்களுக்கு வேதத்தின் அங்கங்களான சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆகியவற்றில் பாடம் நடத்துவதோடு ஏனைய வித்யைகளில் மாணாக்கர்களுக்கு எதில் ருசியும் தேவையும் இருக்கிறதோ அவற்றையும் கற்றுக் கொள்வார்கள்/கற்றுக் கொடுப்பார்கள். பின் மீண்டும் இந்த ஏழு மாசப் பாடங்கள் முடிந்ததும், அடுத்த வருடம் ஆவணி மாசம் இந்தப் பாடங்களை நிறுத்திவிட்டு மீண்டும் வேத அத்யயனம் ஆரம்பிப்பார்கள். இப்படிச் சுழற்சி முறையில் பாடம் கற்பிப்பார்கள். ஆனால் இப்போல்லாம், ஆவணி அவிட்டம் என்று சொல்லப் படும் அன்றே ஆரம்பித்து அன்றே முடிப்பதாகப் பாவனை பண்ணிவிட்டுப் பின் மறந்துடறோம்.

இதில் தன் வேதம் மட்டுமில்லாமல் மற்ற மூன்று வேதங்களையும் சேர்த்துக் கற்கும் மாணாக்கர்களும் இருந்திருக்கின்றனர். அதே போல் வேதாங்கம் கற்கும் நாட்களில் மற்ற வித்தைகள் மட்டுமின்றி இதர ஜாதியினருக்கான வித்தைகளையும் கற்றுத் தேர்ந்திருக்கின்றனர். மேலும் இந்த ஆவணி அவிட்டமும், பூணூல் மாற்றுவதும், உபநயனம் செய்து வைப்பதும் அந்தணர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் சொல்லப் பட்டிருக்கிறது. ஸ்ரீராமரும், ஸ்ரீகிருஷ்ணருமே இந்த உபாகர்மாவைச் செய்தனர் என்று வைதிகஸ்ரீ என்றொரு புத்தகம் சொல்கிறது. இப்போது விஸ்வகர்மா என அழைக்கப் படும் ஆசாரிகள் என்றும் அழைக்கப் படும் இனத்தவரும் செட்டியார்களில் சிலரும் இந்த ஆவணி அவிட்டத்தைக் கொண்டாடுகிறார்கள்.

இன்று ஸாமவேதிகளின் உபாகர்மா. இதைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

நன்றி:தெய்வத்தின் குரல்!

18 comments:

 1. அருமையான பதிவு மாமி. பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்

  ReplyDelete
 2. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. நல்ல பதிவு! வேத ஆரம்பம் என்பதியே மறந்து விட்டு பூணூல் மாற்றுவது என்று பலரும் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
  ஆமாம், அமாவாசை கணக்கு என்றால் ஹஸ்த நக்ஷத்ரம் எங்கே வந்தது?

  ReplyDelete
 4. தக்க நேரத்தில் சரியான இடத்தில் இருந்து எடுத்து போட்டிருக்கிறீர்கள்.தெய்வத்தின் குரல் ஒரு பொக்கீசியம்,பல விபரங்கள் இருக்கு.

  ReplyDelete
 5. வாங்க எல்கே, நன்றிப்பா.

  ReplyDelete
 6. மதுரை சரவணன், நன்றிங்க.

  ReplyDelete
 7. வாங்க திவா, நீங்க கேட்டதுக்குத் தெரிஞ்சவரைக்கும் விளக்கம் கொடுத்திருக்கேன். தெய்வத்தின் குரலிலும் (4-ம் பகுதி???) இப்படித் தான் படிச்ச நினைவு. இப்போத் தேடமுடியலை! :))))))))


  ஹஸ்த நக்ஷத்திரமும், பஞ்சமி திதியும் சேர்ந்து வருவது விசேஷமென்று சாஸ்திரங்கள் சொல்வதாய்த் தெரிய வருகிறது. முன் காலங்களில் சிராவண மாதப் பெளர்ணமியும் சிராவண நக்ஷத்திரமும் ஒன்றாய் வந்த கால கட்டங்களில், பாத்ரபத மாச ஹஸ்த நக்ஷத்திரத்தில் பஞ்சமி திதியும் வந்திருக்கிறது. தற்போது பல வருடங்களாய் நான் பார்த்து வருவதில் பிள்ளையார் சதுர்த்தி ஹஸ்த நக்ஷத்திரத்திலோ, அல்லது சித்திரையிலோ வருகிறது. ஹஸ்த நக்ஷத்திரத்தைக் கணக்கு வைத்துக்கொண்டு சாமவேதிகள் ஹஸ்த நக்ஷத்திரம் பாத்ரபத மாசம் வரும் அன்று உபாகர்மா செய்கிறார்கள் என்றே தோன்றுகிறது. சில சமயம் பிள்ளையார் சதுர்த்தியும் ஹஸ்த நக்ஷத்திரமும் சேர்ந்து வரும்போது உபாகர்மாவும் அன்றே வரும். அப்படியும் பார்த்திருக்கேன்.

  ReplyDelete
 8. வாங்க வடுவூர், வரவுக்கும், கருத்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 9. அம்மா தாத்தாவழில சாமவேதிகள் தான் . பெரியகுளம் ஆத்து உபகர்மா புகுந்த வீட்டுக்காறா பண்ணறத விட ரொம்ப elaborate . ரிஷி பூஜை, கட பூஜை யக்ஞோபவீதம் கங்கணாதரணம் எல்லாம் உண்டுனு நினைக்கிறேன். கல்யாணம் மாதிரி ஜே ஜே நு இருக்கும்.வக்கீல், டாக்டர்னு இருந்தாலும் வேதம் முறையா கத்துண்டு அனுஷ்ட்டித்த பெரியவர்கள். வேத சம்ரக்ஷணை பண்ணியவர்கள். எங்க தாத்தா சின்ன தாத்தா சாமவேதம் பாடினா எனக்கு காரணமே இல்லாம CHOKE பண்ணிண்டு அழறமாதிரி அடக்க முடியாம கண்ணுலேந்து தண்ணி வரும்.it would strike a cord inside. நீங்க சொல்லற மாதிரி அம்மாவும் சொல்லறா கன்யா/ ஷ்ரவண மாஸம், ஹஸ்த நக்ஷத்திரத்துல வரும்னு.

  ReplyDelete
 10. அம்மா தாத்தாவழில சாமவேதிகள் தான் . பெரியகுளம் ஆத்து உபகர்மா புகுந்த வீட்டுக்காறா பண்ணறத விட ரொம்ப elaborate . ரிஷி பூஜை, கட பூஜை யக்ஞோபவீதம் கங்கணாதரணம் எல்லாம் உண்டுனு நினைக்கிறேன். கல்யாணம் மாதிரி ஜே ஜே நு இருக்கும்.வக்கீல், டாக்டர்னு இருந்தாலும் வேதம் முறையா கத்துண்டு அனுஷ்ட்டித்த பெரியவர்கள். வேத சம்ரக்ஷணை பண்ணியவர்கள். எங்க தாத்தா சின்ன தாத்தா சாமவேதம் பாடினா எனக்கு காரணமே இல்லாம CHOKE பண்ணிண்டு அழறமாதிரி அடக்க முடியாம கண்ணுலேந்து தண்ணி வரும்.it would strike a cord inside. நீங்க சொல்லற மாதிரி அம்மாவும் சொல்லறா கன்யா/ ஷ்ரவண மாஸம், ஹஸ்த நக்ஷத்திரத்துல வரும்னு.

  ReplyDelete
 11. Vedham learning's (paadasalai's) semester period-

  ReplyDelete
 12. வாங்க ஜெயஸ்ரீ, எங்க வீட்டிலே மெஜாரிட்டி யஜுர்வேதம், கிருஷ்ண யஜுர், என் அம்மாவழித் தாத்தா வீட்டிலே ரிக்வேதம். மற்றபடி உங்க நினைவலைகள் பிரமாதமா இருக்கு. நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
 13. ராம்ஜி யாஹூ, நீங்க சொல்றது ஒரு வகையிலே சரியே! :))))))))

  ReplyDelete
 14. இதை ஒரு நீண்டகட்டுரையாக தமிழ்.இந்து காமில் போடுங்கள். ஏற்கனவே நிறைய அங்கே எழுதி வருகிறீர்கள் அல்லவா?

  ReplyDelete
 15. வாங்க பிள்ளையார், என்ன உங்க வீட்டைப் பூட்டி வச்சிருக்கீங்க?? தமிழ் ஹிந்து வில் ஏற்கெனவே வெளியான கட்டுரையைப் போட முடியாது. புதுசா இருக்கணும். :)))))))))))))))

  ReplyDelete
 16. மிக்க நன்று.

  ReplyDelete
 17. மிக்க நன்று.

  ReplyDelete
 18. மிக்க நன்று.

  ReplyDelete