எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, September 27, 2010

காக்கை, குருவி, எங்கள் ஜாதி! :(

பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்குக் காலம்பர சீக்கிரமாவே குளிச்சுட்டு வேலைகளைப் பார்த்துட்டு இருந்தேனா! நம்ம ரங்க்ஸ் பிள்ளையாருக்குப் பூஜை செய்யவேண்டிய ஏற்பாடுகளைக் கவனிச்சுட்டு இருந்தார். காலம்பர மணி ஆறிலிருந்து ஆறரைக்குள்ளாக இருக்கும். எங்க வீட்டுக்குப் பக்கத்து அடுக்கு மாடிக் குடியிருப்பிலே மேற்குப் பக்கமான வாசல் இருக்குமிடத்திலே கழிவு நீர் எடுக்கும் லாரி வந்து கழிவு நீரை எடுத்துட்டு இருந்தது. வெளியே போகமுடியவில்லை. அந்த லாரிகளுக்கெல்லாம் டீசல் விட்டு ஓட்டறாங்களா, கரியா, விறகானு எனக்குப் பல வருஷ சந்தேகம். அவ்வளவு புகை விட்டுட்டு இருந்தது. வாசலிலே பூச்செடிகளில் இருந்து பூப் பறிச்சுட்டு ரங்க்ஸ் அப்போத் தான் உள்ளே வந்திருந்தார். தடாஆஆஆஆஆஆஆஆர்! என்னவோ பயங்கரமான ஒரு சத்தம். அதுக்கு முன்னே சண்டை போடறாப்போல் பேச்சுக் குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன. அதெல்லாம் ஜகஜம்! வேலை வேறே இருந்ததே!

அதுக்குள்ளே பக்கத்துக் குடியிருப்புக் குழந்தைகள் கத்தினாங்க. வண்டி போச்சு, வண்டிபோச்சு! அப்படினு கத்திண்டு யாரையோ கூப்பிட்டு, "அங்கிள், உங்க வண்டி சுக்கு நூறா உடைஞ்சுபோச்சுனு சொல்ற குரல் கேட்டது. மனம் பதறியது. உடனே நம்ம ரங்க்ஸ் வெளியே போய்ப் பார்த்தார். ஆள் உள்ளேயே வரலை. கலக்கம் ஜாஸ்தியாக நானும் வெளியே போய்ப் பார்த்தால், பக்கத்துக் குடியிருப்பில் எங்க சமையலறையை ஒட்டி ஒரு குடியிருப்புப் பகுதிக்கான வாசல் வரும். அங்கே இருப்பவங்க வண்டியை அந்த கழிவு நீர் எடுக்கும் லாரி இடித்துத் தள்ளி இருக்கிறது. அந்த லாரி முன்னால் சாலையிலே மேற்கேதான் செல்லணும் முக்கியச் சாலைக்குப் போக. வண்டியோ எங்க வீட்டுக் காம்பவுண்டை ஒட்டி நிறுத்தப் பட்டிருந்திருக்கிறது. பின்னால் வந்து இடிச்சதா?? விசாரிச்சால் கழிவு நீரை எல்லாம் எடுத்து முடிச்சுட்டுக் கடைசியில் கசடுகளைச் சுத்தம் செய்து, அந்தக் குடியிருப்புக்கு அடுத்து இருக்கும் இன்னொரு வீட்டு வாசலில் போட்டிருக்காங்க அந்த கழிவு நீர் சுத்திகரிக்கும் லாரியின் ஆட்கள். அந்த வீட்டுக்காரர் இதை ஆக்ஷேபிக்கவே, இவங்க அவரை அடிக்க, அவர் உடனே போலீஸுக்குச் சொல்ல, லாரிக்காரர் கோபத்தோடு வண்டியைப் பின்னால் எடுக்க வேகமாய் வந்த வண்டி அந்த இரு சக்கர வாகனத்தைத் திரைப்படங்களில் இழுத்துட்டுப் போற மாதிரி இழுத்துக்கொண்டே கிட்டத்தட்ட நூறடிக்குப் போய் அப்புறமா நின்னிருக்கு.

பார்க்கவே தூக்கி வாரிப் போட்டது. நல்லவேளையா அந்த வண்டியிலே ஒரு சின்னக் குழந்தை இரண்டு வயசுக்குள் இருக்கும். அது தினமும் அந்த வண்டியிலே அவங்க வீட்டிலே இருந்து இங்கே இருக்கும் தாத்தா வீட்டுக்கு வரும். நானே அங்கே கோலம் போடும்போது இப்படி நடந்திருந்தாலோ, ரங்க்ஸ் பூப்பறிக்கும்போது நடந்திருந்தாலோ! நினைக்கவே பயம்மா இருந்தது. எல்லாம் இந்த அடுக்கு மாடிக் குடியிருப்புக் கலாசாரங்களால் வந்த வினை. எல்லா வீடுகளும் இடிக்கப் பட்டு அடுக்குமாடிக் குடியிருப்பாகின்றன. நாலு, ஐந்து பேர் இருந்த வீடுகளில் எட்டுக் குடியிருப்புகள், பத்துக் குடியிருப்புகள் கட்டப் பட்டு நாற்பது, ஐம்பது பேருக்கு மேலே இருக்காங்க. எல்லாருக்கும் தண்ணீர் வசதி, இட வசதினு எல்லாம் செய்து கொடுக்கணும். முக்கியமாய்க் கழிவறைத் தண்ணீரும் அவங்க குளிக்கும், தோய்க்கும் நீரும்போக இடம் வேண்டும். அதுக்கெல்லாம் இடம் விடாமல் இருக்கும் செடி, கொடி, மரங்களை எல்லாம் உயிரோடு இருக்கும்போதே வெட்டிவிட்டு வெறும் மூன்றடியிலிருந்து ஐந்தடிக்குள் நடக்க மட்டுமே இடம் விட்டுக் கட்டிவிடறாங்க.

அங்கே மூச்சு விட்டால் எங்க வீட்டிலே எக்கோ அடிக்கும். அங்கே பேசினால் இங்கே நான் தான் என்னமோ கேட்கிறேன்னு ரங்க்ஸ் பதில் கொடுப்பார். சில சமயம் அவர் பேசறார்னு நினைச்சு நான் பாட்டுக்கு (வழக்கம்போல்) தனியாப் பேச வேண்டி ஆயிடுது. எட்டுக் குடியிருப்புகளிலும் சேர்ந்து 45ல் இருந்து ஐம்பது பேருக்குள் இருக்காங்க. அவங்க செப்டிக் டாங்க் நிரம்பினால் அதிகத் தண்ணீர் எல்லாம் தெருவுக்குத் தான். மாசம் இரண்டு முறை லாரி வந்து எடுத்தும் உடனடியாக நிரம்பி விடும். அவங்க சாப்பிட்டுட்டுப் போடும் இலை, டீ, காபி குடிக்கும் பேப்பர், ப்ளாஸ்டிக் கப்கள், பழங்களின் தோல்கள்,செருப்புகள், துணிகள் எல்லாம் எங்க வீட்டுக்குத் தான். சொல்லவும் முடியலை, மெல்லவும் முடியலை. சொன்னால் அவங்க முகத்தைத் தூக்கி வச்சுக்கொண்டு விரோதி மாதிரிப் பார்க்கிறாங்க. அவங்க தேங்காய் உடைக்கிறதோ, மற்ற கடினமான சாமான்களை உடைக்கவோ எங்க வீட்டுக் காம்பவுண்டு தான். அதையும் கண்டிக்க முடியாது.

மற்ற மாநிலங்களில் இம்மாதிரிக் குடியிருப்புகள் கட்டுவதென்றால் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிவிட்டுத் தான் அவங்க குடியிருப்புகளின் ப்ளானைக் காட்டி அனுமதியே வாங்க முடியும். இங்கே ஒண்ணும் இல்லை. நகராட்சி அனுமதி கொடுத்துவிடும். அவங்களுக்கு ஒவ்வொரு குடியிருப்புக்கும் கணக்கிட்டு பெட்டர்மெண்ட் டாக்ஸ் கிடைச்சுடும். அதுக்கு மேலே அவங்க யோசிக்கிறதில்லை. பாதாளச் சாக்கடை போடறேன்னு எல்லா வீட்டுக்காரங்களும் 7,500 ரூபாய் கட்டி வருஷம் பத்து ஆகியும் இன்னும் ஒண்ணும் காணோம். எங்கே பார்த்தாலும் ப்ளாஸ்டிக் கழிவுகள். இதிலே குடியிருப்புகளில் வரும் விசேஷங்களில் போடப் படும் குப்பைகள். ஆனால் இந்தக் குப்பை எடுக்கிறவங்களும் சரி, மற்ற வேலைக்காரங்களும் சரி குடியிருப்புகளில் இருக்கிறவங்க என்னமோ ரொம்பப் பெரிய மனுஷங்கனு நினைச்சுட்டு அவங்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. அதான் ஏன்னு புரியறதே இல்லை.

இப்போ எங்களுக்கு இன்னொரு பக்கத்து வீடும் இடிச்சு அங்கேயும் எட்டோ, பத்தோ அடுக்கு மாடிக் குடியிருப்பு வரப் போறது. எதிர் வீடு இடிச்சு அங்கேயும் நாலோ, ஐந்தோ வரப் போகிறது. எல்லாம் நகரமயமாதலின் விளைவுகள், தவிர்க்க முடியாது என்று சிலர் சொன்னாலும், எத்தனை வீடுகளில் மரங்களை வெட்டி நிலத்தை சிமெண்ட் போட்டு பூமித் தாயின் குரல்வளையை நெரித்திருக்கின்றனர். சூரியனின் வெம்மை ஏற்கெனவே தாங்கவில்லை. இப்படி எல்லாரும் இருக்கும் தோட்டங்களை அழித்துவிட்டு வீடுகள் கட்டிக்கொண்டு வந்துவிட்டால், பூமியில் குளுமை எங்கிருந்து வரும்?? பறவைகள் குடியிருக்க எங்கே போகும்?? ஏற்கெனவே சிட்டுக்குருவி முற்றிலும் அழிந்தே போயாச்சு. ஒண்ணு கூடக் கண்ணிலே படறதில்லை. ஏதோ கொஞ்சம் மைனா, ஆனைச்சாத்தன், குயில், காக்கைகள், கிளிகள், புறாக்கள்னு இருக்கு. அதுவும் போயாச்சுன்னா, வெறுமை, வெறுமை வெறுமைதான்! காலம்பர நாலு மணியிலிருந்து எங்க வீட்டுத் தோட்டத்தில் பறவைகளின் கூச்சல் காதைப் பிளக்கும். ஒரு நாள் கேட்கலைனாலும் என்னவோ, ஏதோனு மனசு துடிக்கும். அதே மாதிரி சாயந்திரம் ஆறரை மணி வரைக்கும் கேட்டுட்டு இருக்கும். இனி???????

11 comments:

  1. இதைப் பார்க்கும்பொழுது எங்கக் குடியிருப்பு மிக அருமை. அதிக திறந்த வெளியுடனும், மரங்களுடனும் .

    ReplyDelete
  2. அடடா..... கேக்கவே மனசுக்குக் கஷ்டமா இருக்கு.

    ஜனத்தொகையைக் கண்டமேனிக்கு இப்படி வளரவிட்டுத்தான் இந்த கதி. போற போக்கைப் பார்த்தால் ஒருத்தர் தலையில் இன்னொருத்தர் நிக்கும்படி ஆகப்போகுது.

    கட்டிடம் கட்ட அனுமதி கொடுக்கும்போது கிடைக்கும் லஞ்சப்பணம்தான் முக்கியம். சட்டதிட்டம் கடுதாசியில் மட்டுமே:(

    ReplyDelete
  3. நிச்சயமா அப்படி ஒரு குடியிருப்பு இருந்தா அதிர்ஷ்டம் தான் எல்கே. இங்கே எல்லாம் அப்படிக் கட்டறதில்லை. உயிரோட மரங்களை வெட்டறாங்க. பார்த்தாலே மனசு பதைக்கிறது!

    ReplyDelete
  4. வாங்க துளசி, ஜனத்தொகை மட்டும் காரணம் இல்லை. நகரமயமாதலும், கிராமப் புறங்களில் விவசாயத்தின் முக்கியத்துவத்தை அடியோடு ஒழித்துக்கட்டுவதும் முக்கியக் காரணங்கள். அதுக்கு அப்புறம் தான் ஜனத்தொகையைப் பத்திச் சொல்லணும்! இதைப் பத்திப் பேச ஆரம்பிச்ச சொல்ல எவ்வளவோ இருக்கு!

    ReplyDelete
  5. உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
    ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
    ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
    தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

    வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

    ReplyDelete
  6. இதென்ன அநியாயம் கீதா. கேக்கவே கஷ்டமா இருக்கே. யாராவது உதவுவாங்களாம்மா. எப்படி இந்தப் பிரச்சினையை சமாளிக்கிறது..

    ReplyDelete
  7. கொடுமைதான்.. என்ன பண்ணுறது

    ReplyDelete
  8. நிலைமை ரொம்ப மோசமா இருக்கே. அடுக்கு மாடிக் குடியிருப்பு மட்டும் இல்லை. அதிகாரங்களின் பொறுப்பற்ற தன்மை தனிமனித மதிப்பின்மை என்று எல்லாமும் கூடக் காரணம்.
    எங்க வீட்டில் மாடியில் இருந்து எங்கள் சிறு தோட்டத்தைப் பார்த்தால், பூக்களில் தேன் குடிக்கும் பட்டாம் பூச்சிகள், தும்பி, தேன் சிட்டு , மொட்டுக்களைத் தின்ன வந்து செடிகளில் லாவகமாகத் தொங்கிக் கொண்டு இருக்கும் அணில்கள், ஓணான், பச்சோந்தி, உணவைக் குரல் கொடுத்துக் கேட்கும் காகங்கள், வீட்டின் அருகாமையில் இருக்கும் அரிசி மண்டி காரணமாக கூட்டம் கூட்டமாக வரும் அழியும் இனம் என்று நாம் சொல்லிக் கொண்டு இருக்கும் house sparrow என்று பார்க்க அழகாக இருக்கும். சில சமயம் குயில் கூட வந்து பூச்செடிகளில் அமர்ந்து கூவுவதை அருகாமையில் பார்க்க முடியும். மாம்பழ காலத்தில் வௌவால் கூட வரும். இவையெல்லாம் கொஞ்சமேனும் இன்னும் நாம் இயற்கையோடு தொடர்பு வைத்திருப்பதையே காட்டுவதாக எண்ணி மகிழ்வோம்.

    ReplyDelete
  9. சமுக சிந்தனை உள்ள பதிவு

    ReplyDelete
  10. மனத்திற்கு கஸ்டமாக இருக்கு.

    மரங்கள் எங்கே ? :)
    சுற்றிவர அடுக்குமாடிகளாகி பிளாட்களின் கீழ்தளங்களில் வெயிலும் காற்றும்வர வழியில்லை.

    ReplyDelete