எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, September 22, 2010

பனாரஸ்

இன்னிக்கு பனாரஸ் உர்து படம் பார்த்தேன். நஸ்ருதீன் ஷா, ராஜ்பப்பர், டிம்பிள், ஊர்மிளா, கதாநாயகன் யாரோ புதுமுகம். எல்லாத்தையும் தூக்கி அடிச்சது ஊர்மிளாவின் நடிப்பு மட்டுமே. அற்புதமான நடிப்பு. பாத்திரத்துடன் ஒன்றிவிட்டார். வழக்கமான ஜாதிவிட்டு ஜாதி காதலிக்கும் கதை, ஆனால் கொஞ்சம் வித்தியாசமாய் பாபாவாய் நஸ்ருதீன் ஷா மூலம் அனைவருக்கும் தன்னை அறிதல் என்ற ஞாநம் கிடைக்கிறது. ஊர்மிளா ஒரு சந்நியாசியாக மாறுகிறார். முடிவு ஓரளவு எதிர்பார்த்தேன் என்றாலும் அதற்கு மூலம் ராஜ்பப்பராய் இருக்குமோ என்று நினைச்சேன். படம் பாதியிலே இருந்து பார்த்தேனே, அதான்! என்னங்க?? நாளைக்கா? அதெல்லாம் இப்போவே சொல்ல முடியாதுங்க. மூட் இருக்கணும் படம் பார்க்க. படமும் நல்லா இருக்கணுமே! அது சரி, இந்தப் படம் எப்போ வந்தது?? சமீபத்தில் தான் வந்திருக்குனு நினைக்கிறேன். எல்லாரும் ஷுத்த ஹிந்தி பேசறாங்கப்பா! :))))))))))))

2 comments:

  1. mmm...dhinamum oru cinema?...paarkka porumai irukka maami?

    Porumai _na yenakku yennavendre theriyadhu pochu.:D

    ReplyDelete
  2. ஹிஹிஹி, எஸ்கேஎம், தினமெல்லாம் பார்க்கிறதில்லை, இந்த மருந்துகள் எல்லாம் சேர்ந்து படுத்தற பாட்டை மறக்கணும்னு தான்! அதோட தலையைக் கீழே போட்டாலே, மூச்சுவேறே பயமுறுத்தல்! இருக்கிறவரைக்கும் மூச்சு விட்டுட்டு இருப்போமேனு தான் எழுந்து உட்கார்ந்துடறது! ராத்திரி பாடு இருக்கவே இருக்கு! :))))))))))))))))

    ReplyDelete