எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, September 24, 2010

K Pax

நேத்து மதியம் இரண்டரை மணிக்குக் கணினியை மூடறச்சே கூடப் படம் பார்க்கும் எண்ணமே இல்லை. ரங்க்ஸ் நல்லா குறட்டை விட்டுத் தூங்க ஆரம்பிச்சார். அந்தச் சத்தத்திலே என்னாலே படிக்கக் கூட முடியலை! அவ்வளவு எக்க்க்க்க்கோ! :P சரினு கொஞ்சம் நேரம் காமெடி பார்க்கலாம்னு பார்த்தா, செந்தில், கவுண்டமணி. எனக்குப் பிடிக்காத காமெடி நிகழ்ச்சி! தலையெழுத்தேனு நொந்து போய் ஒவ்வொரு சானலாத் திருப்பினா, சோனி பிக்ஸில் இருந்து ஸ்பேஸ்மேன், ஸ்பேஸ்மேன், அப்படினு குழந்தைங்க சத்தம் போட்டுட்டு இருந்ததுங்க. கொஞ்சம் சுவாரசியம் தட்ட என்னனு பார்க்கலாம்னு பார்த்தால்............. நம்ம ஊரு கீழ்ப்பாக்கம் மாதிரி நியூயார்க் கீழ்ப்பாக்கத்திலே அட்மிட் ஆன ஒருத்தர் தான் K Pax ல இருந்து வந்திருக்கிறதாவும், ஜூலை 27-ம் தேதிக்குள் திரும்பணும்னும் சொல்லிட்டு இருக்கார். நம்ம ஊரு தெனாலி மாதிரி எல்லாம் இல்லை. இவருக்கு வைத்தியம் செய்யற டாக்டர் அவரைத் தன் வீட்டுக்குக் கூப்பிடறார். எல்லாருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறார். அந்த மனுஷன்/ஸ்பேஸ்மேன்?? குழந்தைங்களோட முக்கியமாய்ச் சின்னப் பெண் குழந்தையோடு நெருங்கிப் பழகி விளையாடறார்.

அட??னு நிமிர்ந்து உட்கார்ந்தால், ஒளி வழிப் பிரயாணம் செய்ததாய்ச் சொல்றார். ஆனாப் பாருங்க தண்ணிக்குழாயிலே வேகமாய்த் தண்ணீர் கொட்டவும் ஆளைக் கையிலே பிடிக்க முடியலை. அங்கே ஆரம்பிச்சது சந்தேகம், எனக்கு மட்டும் இல்லை, அந்த மனநல மருத்துவர் மார்க் பவலுக்கும். சந்தேகப் பட்டுக் கொண்டு அவரை ஹிப்னாடிசத் தூக்கத்தில் ஆழ்த்தி அவர் வாயிலிருந்து சில நிகழ்வுகளை வரவழைக்கிறார். இங்கே ஆஸ்பத்திரியின் சக நோயாளிகளோ அவரால் சிலருக்கு அதிசயிக்கத் தக்க விதத்தில் மனம் மகிழ்ச்சி அடைகிறது. அதோடு அவரோடு K Pax செல்லவும் தயாராகின்றனர். எல்லாரையும் அழைத்துப் போகமுடியாது என்றும் ஒருவரைத் தான் அழைத்துப் போகமுடியும்னும் அந்த ஸ்பேஸ்மேன் கதைப்படி அவர் பெயர் ப்ரோட்/ராபர்ட் போர்ட்டர் என்ற பெயரில் வாழ்ந்து கொண்டிருந்திருக்கிறார். நோயாளியாக ப்ரோட் என்ற பெயர்.

மனநல மருத்துவர் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து கடைசியிலே கண்டு பிடிக்கிறார். அது சஸ்பென்ஸ்! அதனாலேயே அதிகம் விவரிக்கவில்லை. ஆனால் பாருங்க தமிழிலே ஏன் இப்படி எல்லாம் வர மாட்டேங்குதுனு ஒரு ஏக்கம் மட்டும் வருது. அப்புறம் தெனாலியை யோசிச்சுப் பார்த்துட்டு மனதைத் தேத்திட்டேன். இங்கே உலகநாயகர்கள் நடிக்கிறாப்போல்தானே எடுக்க முடியும். இதிலேயும் ப்ரோட் K Pax திரும்பிப் போகிற முதல்நாள் இரவு ஆஸ்பத்திரியில் பிரிவு உபசார விழா, நினைவுப் பரிசுகள் கொடுக்கிறது எல்லாம் உண்டு. ஆனால் தமிழில் எடுத்திருந்தால் எத்தனை பாட்டு, டான்ஸ், ரிப்பன்கள் பறக்கும், கோமாளி வேடம் போட்டுக் கொண்டிருப்பாங்க மனநோயாளினு காட்ட. இங்கே அப்படி எல்லாம் இல்லை. சாதாரணமாய் உடை அணிந்து கொண்டு மருத்துவரோடு பேசறச்சேயும் சாதாரணமான மனிதர்களாகவே பேசறாங்க. கொனஷ்டை,கோணங்கி எல்லாம் இல்லை. அதனால் உலகநாயகர்களுக்கு இப்படி ஒரு கதை இருக்கிறதாவே தெரியவேண்டாம்.

இன்னிக்கு என்னவா?? ஹிஹிஹி, தெரியாதே! எதுவும் என் கையில் இல்லைனு மூணுநாளாப் பார்த்தாச்சு. இன்னிக்கு மத்தியானம் தூங்கலாம்/படிக்கலாம்/சினிமா பார்க்கலாம். எதுவும் செய்யாமல் கணினியிலேயே உட்கார்ந்தும் இருக்கலாம். நிறைய எழுத வேண்டியது இருக்கு. பதினைந்து நாட்கள் எழுதாமல் இருந்தாச்சு! பார்க்கலாம். வர்ட்டா???????????????

9 comments:

 1. தெனாலி படமும் ஒரு ஆங்கிலப் படத்தை பார்த்து அப்பட்டமாக காப்பி அடித்தது தான். படத்தின் பெயர் ''Shall we tell DAD?" என்பதாக நினைவு. தூரதர்ஷன் இரண்டாவது சானலில் சனிக்கிழமை இரவு பத்து மணிக்கு மேல் பார்த்த நினைவு. இந்தப் படத்தைத் தமிழில் எடுத்தால் அதில் கமல் நன்றாக நடிப்பார் என்று எண்ணினேன். பல ஆண்டுகள் கழித்து தெனாலி வந்தது. ஆங்கிலக் கதையை நன்றாக (இலங்கைத்)தமிழ்ப் படுத்தி இருந்தார்கள்.
  Ashwinji

  ReplyDelete
 2. வாங்க அஷ்வின், பழங்கள் எல்லாம் நல்லா இருக்கு! வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. தெனாலியும் ஆங்கிலக் கதைதானா?? ஆமாம் இல்ல?? யாரோ சமீபத்தில் கூட உலகநாயகரின் அனைத்துப் படங்களின் மூலங்களையும் கொடுத்திருந்தாங்க. அதிலே தெனாலியும் உண்டுனு நினைக்கிறேன். :))))))))))))))))

  ReplyDelete
 3. இந்தப்படத்துல கெவின் ஸ்பேஸியின் நடிப்பை பத்தி நீங்க ஒண்ணுமே சொல்லலியே? அப்புறம் அந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் ஒரு பெண்மணிக்கு துர்நாற்றம் வீசிக்கொண்டே இருக்குமே அது போன்ற புதுமையான பாத்திரப்படைப்புக்களும் நம்ம பாக்யராஜ் பண்ணி இருக்காரே! உ: அதிர்ச்சி பைத்தியம் இன் ஆராரோ ஆரிரரோ & மரம் விழுந்துடும்ன்னு பிடிச்சுண்டே இருக்கும் பைத்தியம்.. மறக்க முடியுமா?

  ReplyDelete
 4. அநன்யா அக்கா, பொதுவாவே ஆங்கிலப் படங்களின் நடிப்பு இயல்பா இருக்கு. அதனாலே ஒண்ணும் சொல்லலை, மேலும் கதையை ரொம்பவும் விவரிச்சால் பார்க்காதவங்களுக்கு சுவாரசியம் போயிடும்னு அதைத் தவிர்த்தேன். அந்தப் பெண்மணி ரொம்ப இயல்பாச் செய்திருந்தார்.

  பாக்யராஜ் படமா??? அவ்வளவாப் பார்த்தது இல்லை, இந்த மாதிரி தொலைக்காட்சியில் வர படங்களை எப்போவோ பார்க்கிறதே பெரிய விஷயம்! :)))))))))) ஆராரோ, ஆரிரரோ, படமா, பாட்டா??? ம்ம்ம்ம்???? படம் தானோ??? ஹிஹிஹி, ஏதாவது தொலைக்காட்சியில் போடறச்சே பார்த்துடறேன்! :)))))))))

  ReplyDelete
 5. தெனாலி WHAT ABOUT BOB -BIL MURRAY
  RICHARD DREYFUSS நடிச்ச படம் காப்பி.அந்த படம் நன்னாவே ரொம்ப இயல்பா இருக்கும்.
  தென்னாலிலையும் கமல் ஹாஸன் நல்லா பண்ணி இருப்பாரே. எதுக்கெல்லாம் தனக்கு பயம்னு விடாம சொல்லிட்டு ஒரு வேல் எடுத்து காட்டுவாரே சிரிப்பா இருக்கும்:))LATTER HALF ARTIFICIAL AND USUAL TAMIL MOVIE காதுல பூ.

  ReplyDelete
 6. வாங்க ஜெயஸ்ரீ, முதல்லே ஒண்ணு சொல்லிடறேன். எனக்குக் கமல் அவ்வளவாப் பிடிக்காது! :)))))) ஆனால் சில/பல படங்களிலும் கிரேசி மோகன் தயவால் காமெடி நல்லா அமைந்து போகும். அதில் தெனாலியும் ஒன்று. எனக்குத் தெனாலியிலேயே ரொம்பப் பிடிச்சது, அந்தப் பாட்டு ஒண்ணுதான்! "ஆலங்கட்டி மழை??"" மத்தபடி ஆங்கில மூலம் இரண்டுமே நான் பார்க்கலை. எப்போவோ சில சமயம் மத்தியானம் 2மணியிலே இருந்து நாலு, நாலரைக்குள் நல்ல படமாய் இருந்தால் பார்க்கலாம். தினம்?? நோ சான்ஸ்! :)))))))))))))) ஒரு இடத்தில் உட்காரமுடியாது என்னாலே! :))))))))))))

  ReplyDelete
 7. தெனாலி, தசாவதாரம் எல்லாமும் காப்பி தான் மாமி... நான் இங்கிலீஷ்ல பாத்தேன்... நீங்க தான் நெறைய புதுசு புதுசா படம் கண்டுபிடிக்கறீங்க... சூப்பர்

  ReplyDelete
 8. தெனாலி காப்பினு கேள்விப் பட்டிருக்கேன். தசாவதாரமுமா?? தெரியாதே! அதுக்குத் தானே கடைசியா சுஜாதா கதை, வசனம் எழுதினார்????? ஏடிஎம், நான் புதுசா எங்கே கண்டு பிடிக்கிறேன். இதெல்லாம் வந்து பத்து வருஷம் ஆகப் போற படம், அநன்யா அக்கா பாருங்க லக்ஷம் தரம் பார்த்துட்டதாச் சொல்றாங்க. ஹிஹிஹி, நீங்களும் நானும் தான் archives le இருந்து பார்க்கிறோம். :))))))))))))))))

  ReplyDelete
 9. porumai romba jasthi ungalukku(padangal paarkkathan!). Hats off to you. :D

  ReplyDelete