எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, June 06, 2012

இந்தக் கதையை எப்படி முடிக்கிறது!

பற்களைக் கடித்துக் கொண்டாள் ரம்யா. அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை. நினைக்க நினைக்க அவளுக்கு ஆத்திரமாய் வந்தது. இத்தனைக்கும் அவள் சந்தோஷமாய் மகிழ்ச்சியோடு ஆடிப் பாடித் துள்ளிக் குதிக்க வேண்டும். ஆனால் அப்படி இருக்க முடியாமல் செய்துவிட்டாளே இந்த "அம்மா! அம்மா! ஹூம் அவளா அம்மா! எத்தனை வருடங்களாகப் பொய் சொல்லி என்னை ஏமாற்றி இருக்கிறாள்.  அவளுடைய மலட்டுத் தனத்துக்கு, அதை மறைக்க வேண்டி என்னுடைய பெற்ற அம்மா என்னை தானமாய்க் கொடுத்திருக்கிறாள். அந்த நன்றி கொஞ்சம் கூட இல்லையே! என்னமோ என்னைப் பெற்ற தாய் போலவே அதிகாரம் செய்வதும், இதைச் செய், அதைச் செய், இதைக் கத்துக்கோனு யோசனைகள் சொல்வதும்."
ஆத்திரம் தாங்க முடியாமல் தவித்தாள் ரம்யா.

மதிய இடைவேளையில் சாப்பிடப் போகக் கூட மனமில்லாமல் என்ன செய்து இந்த உண்மையை எல்லாரும் அறிய வெளிக் கொண்டு வருவது என யோசனைகள் பலவும் செய்து கொண்டிருந்தாள்.  ஏற்கெனவே அம்மாவோட கண்டிப்பு அவளுக்குப் பிடிக்காது.  அதைக் கத்துக்கோ, இதைக் கத்துக்கோ, நல்லாப் படி, டான்ஸ் சொல்லிக்கோனு அவளைப் பாடாய்ப் படுத்தி, அவளோட விருப்பத்தை எல்லாம் ரம்யா மீது திணித்து!...... அப்பா செல்லம் அவள். ஆனால் இப்போதல்லவா புரிகிறது அம்மா அவளைக் கண்டித்ததெல்லாம் அவள் நன்றாக இருக்கவேண்டும் என்றா!  இருக்கவே இருக்காது.  தன் ஆத்திரத்தை இப்படிக் காட்டிக் கொண்டிருக்கிறாள்.  அவளுக்கென ஒரு குழந்தை பிறந்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருப்பாளா?  அதான் ஆண்டவன் தண்டனை ஒரேயடியாய்க் கொடுத்திருக்கிறான். அவள் நெருங்கிய சிநேகிதி அவளைச் சாப்பாட்டு அறையில் காணோம் என்றதும் தேடிக் கொண்டு வந்தாள்.  ரம்யாவைப் பார்த்து அதிர்ந்து போனாள்.

"என்னடி, இப்படிப் பேயறைந்தாற்போல உட்கார்ந்திருக்கே?" வனிதாவின் கேள்வி.

ரம்யா, அவளையே பார்த்தாள். "பெரிசா, உங்கம்மா மாதிரி வராது; ரொம்ப நல்லவங்க; உன்னை உட்கார்த்தி வைச்சு எல்லாம் செய்து போடறாங்க. அப்படினு எல்லாம் சொல்லுவியே! அதெல்லாம் வேஷம்.  உன்னை மாதிரி வெளி ஆட்களுக்காக அவ போட்ட வேஷம்!" என்றாள் ரம்யா ஆத்திரமாக.

"என்ன ஆச்சு? நீ தனியா இருக்கிறச்சே உன்னைத் திட்டினாங்களா? திட்டினால் தான் என்னடி? அவங்களுக்கு இல்லாத உரிமையா? உனக்கு இவ்வளவு தூரம் செய்யறாங்களே! அவங்களை மாதிரி எல்லா அம்மாக்களும் இருக்க மாட்டாங்க தெரியுமா?"

"என்னடி பெரிசாச் செஞ்சுட்டா? பாவி, பாவி, உனக்கு என்ன தெரியும் அவளைப் பத்தி! அவ எனக்கு அம்மாவே இல்லை. அது தெரியுமா உனக்கு! என்னைப் பெத்தவ அவள் இல்லை. "

ரம்யா குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள். வனிதா சற்று நேரம் அவளையே இரக்கமாய்ப் பார்த்தாள்.

"ரம்யா, அழாதே, எனக்கு எப்போவோ இது தெரியும்.  என் அம்மாவும், உன் அம்மாவும், எத்தனை வருட சிநேகிதிகள்.  உன் அம்மாவோட வாழ்க்கையிலே நடந்தது எல்லாமே என் அம்மாவுக்குத் தெரியும்.  கொஞ்ச காலம் முன்னால் உனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கையிலே தற்செயலா என் அம்மா வாயிலிருந்து வந்த ஒரு வார்த்தையில் எனக்குப் புரிய வந்தது."  என்றாள் வனிதா.


"உனக்குத் தெரியுமா?  ஏண்டி என்னிடம் சொல்லலை? துரோகி!" என்றாள் ரம்யா. 

"நான் செய்தது துரோகமே இல்லை.  உன் அம்மாவுக்கும், உனக்கும் நல்லது தான். உண்மை தெரிந்தால் நீ தாங்க மாட்டாய்! அதுவும் உன் அம்மா, அதாவது உன்னைப் பெற்றவள் யார்னு தெரிஞ்சா! " பெருமூச்சு விட்டாள் வனிதா.

எப்படியானும் இந்த உண்மையைக் கண்டு பிடிச்சே ஆகணும்.  முடிவு கட்டிக் கொண்டாள் ரம்யா.

"வேண்டாம் ரம்யா, அநாவசியமாகத் தெளிந்த குட்டையைக் கலங்கடிக்காதே!  இது யாருக்கும் நல்லதில்லை. பலருக்கும் இதன் மூலம் தர்ம சங்கடமாக இருக்கும்." எச்சரித்தாள் வனிதா.


தொடரும்...



டிஸ்கி: ஹிஹி, என்னமோ தோணி இந்தக் கதையை ஆரம்பிச்சுட்டேன். முடிவு ஒரு மாதிரியா யோசிச்சு வைச்சிருக்கேன்.  ஆனால் படிக்கிற வாசகர்கள் என்ன முடிவு கொடுக்கப் போறாங்கனு தெரிஞ்சுக்க ஆவல்.  ஹிஹிஹி, அதெல்லாம் பொற்கிழியோ, துணிக்கிழிசலோ எதுவும் கிடைக்காது. சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா! வர்ட்டா? இதெல்லாம் என்ன கதைனு மனசுக்குள்ளே நினைச்சாலும் வெளியே காட்டிக்காதீங்க!

 ம.சா.என்னமோ லக்ஷக்கணக்கா வாசகர்கள் இருக்கிறாப்போல் பில்ட் அப்!

(இது என்னோட ம/.சா. அவ்வப்போது வந்து உண்மையைச் சொல்லித் தொலைக்கும், ரொம்ப நாட்கள் கழிச்சு வந்து தொலைச்சிருக்கு, கண்டுக்காதீங்க)


25 comments:

  1. \\இதெல்லாம் என்ன கதைனு மனசுக்குள்ளே நினைச்சாலும் வெளியே காட்டிக்காதீங்க!\\

    நாங்க எப்பவும் அப்படி தானே தலைவி ;-))

    ReplyDelete
  2. Gopi,இப்படியாப் போட்டு வாங்கறது? :))))))))))))

    ReplyDelete
  3. அம்மா செஞ்சது எல்லாம் நல்லது எது கெட்டது எதுன்னு தெரியாம ஆபீஸ்ல வேலை பார்க்கற பொண்ணு இப்படி குழந்தைத் தனமா யோசிக்குமா?

    அவங்க அம்மா யாருன்னு தெரிஞ்சா வருத்தப் படற அளவுன்னா கற்பனை கன்னா பின்னான்னு போகுதே.... பரிசு வேற எதுவும் கிடையாதுன்னு சொல்லிட்டீங்க....ம்....?

    ReplyDelete
  4. என்னதான் சொல்லுங்க... கதாசிரியரோட கற்பனைல குறுக்கிட நாங்கள் யார்?!! :))

    ReplyDelete
  5. ம்ம்.... என்னதான் நடக்குதுன்னு பொறுத்திருந்து பார்டா ராசான்னு என்னோட மனசு சொல்லுது. அதையே ஃபாலோ செய்யறேன்... :)))

    ReplyDelete
  6. சோதனைக் குழாய் குழவியோ?

    ReplyDelete
  7. அருமையான கரு. fantastic! விடாதீங்க. obvious முடிவு இருந்தாலும் வேறே ஏதாவது சொல்லுங்க..:)

    ReplyDelete
  8. - ரம்யாவைப் பெற்ற தாய் பிரபல திரைப்பட நடிகை
    - ரம்யாவைப் பெற்ற தாய் அவர்கள் வீட்டில் வேலை செய்தவர், ரம்யாவின் அப்பாவுடைய சபல விளைவு
    - ரம்யாவைப் பெற்ற தாய் இறந்து போய் பல வருடங்களாகிறது, ரம்யாவின் அப்பா அம்மா இருவரும் சேர்ந்து செய்த கொலை
    - ரம்யா மனிதப் பிறவியல்ல
    - ரம்யாவைப் பெற்ற தாய் வனிதாவின் அம்மாவுடைய கஸின் - கர்ணன் சினிமா போகக் காசில்லாமல் எட்டணாவுக்கு ரம்யாவை விற்றார்கள்
    - ரம்யாவைப் பெற்ற தாய் வனிதாவின் பாட்டி - முதுமையில் நிகழ்ந்த எதிர்பாராக் கருத்தரிப்பு
    - ரம்யா உண்மையில் ஒரு நாய்க்குட்டி - தூத்துகுடி குருட்டுச் சித்தர் ஒருவர் வேப்பிலை உருண்டை கொடுத்துப் மனிதப் பெண்ணாக மாற்றினார். கறிவேப்பிலை கேட்ட சித்தருக்குத் தெரியாமல் ரம்யாவின் அப்பா வெறும் வேப்பிலை கொடுத்ததால் ராஜூவாக வேண்டியவள் ரம்யா ஆனாள்.

    ReplyDelete
  9. வாங்க ஸ்ரீராம், இன்னமும் பிசிபோல இருக்கு! ஜாஸ்தி பார்க்கமுடியலை!

    ஹிஹி, கற்பனை செய்யமாட்டேன்னு சொல்லிட்டீங்களே! ரொம்பவே வருத்தமாப்போச்சு போங்க! அப்பாதுரையைப் பாருங்க, விதவிதமான ஆப்ஷன்ஸ் கொடுத்திருக்கார். அதிலே ஒண்ணு கிட்டத்தட்ட நான் நினைச்சது. அதான் அந்தப் பின்னூட்டத்தை மாடரேஷன்லே வைச்சிருக்கேன். கதையை முடிச்சுட்டு வெளியிடுவேன். :))))))))

    ReplyDelete
  10. வாங்க வெங்கட், டெல்லியிலே இருந்து வர இம்புட்டு நாளாச்சு போல! :P

    பொறுத்திருந்து பாருங்க. சீக்கிரமாச் சொல்ல முயற்சி பண்ணறேன். :)))))))

    ReplyDelete
  11. கெளதம் சார், தப்பு. :P

    ReplyDelete
  12. அப்பாதுரை, நீங்களா இருந்தா எப்படி எல்லாம் கொண்டுபோவீங்கனு யோசிச்சேன். ம்ஹும், ஒண்ணும் தோணலை! மர மண்டை எனக்கு! ஆனால் பாருங்க நீங்க கொடுத்திருக்கிற பல ஆப்ஷனிலே ஒண்ணு, கொஞ்சமே கொஞ்சம் மாற்றம் கிட்டத்தட்ட நான் நினைச்ச முடிவு தான். அதான் அந்தப் பின்னூட்டத்தை நிறுத்தி வைச்சிருக்கேன். கொஞ்சம் வெயிட்டீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :))))))

    ReplyDelete
  13. //இன்னமும் பிசிபோல இருக்கு! ஜாஸ்தி பார்க்கமுடியலை! ஹிஹி, கற்பனை செய்யமாட்டேன்னு சொல்லிட்டீங்களே! ரொம்பவே வருத்தமாப்போச்சு போங்க! //

    அப்பாவின் சின்ன வீட்டின் மகள்
    அப்பாவின் முதல் மனைவியின் /ஓடிப்போன முதல் மனைவியின் மகள்!
    இவளுக்காகவே ரம்யாவின் தற்போதய தாய் வேறு குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை.
    பார்க்கப் போகும் மாப்பிள்ளை வீட்டில் வேலைக்காரியாகவோ, வேறு உறவாகவோ உண்மையான தாய் கண்ணில் மாட்டப் போகிறாள். இவளை அலட்சியமும் செய்யப் போகிறாள்....

    ReplyDelete
  14. ஒரு எய்ட்ஸ் நோயாளியின் மகள்!!!!
    இவளுக்கும் அந்நோய் இருக்கிறது. அதைச் சொல்லாமல் அவளை உற்சாகமாக இருக்க வைக்கப் பாடுபடுகிறாள் தற்போதையத் தாய்!

    ReplyDelete
  15. இந்தத் தாயேதான் உண்மையான தாய்! சிறு வயதில் குந்தி போலத் தப்பு செய்து, பெற்ற மகள் இடம் மாறி சந்தர்ப்ப வசத்தால் அந்நியத் தாய் போல ஆகிறாள்!!! பின்னர் உண்மை தெரிய வரலாம். அல்லது வாசகர்களுக்கு மட்டும் உண்மை தெரிந்து தியாகி ஆகலாம்!

    ReplyDelete
  16. ரம்யா உண்மையில் அவள் தங்கை! வெளியில் சொல்ல முடியா சில காரணங்களால் பெண் போல வளர்த்து வருகிறாள்!

    ReplyDelete
  17. ரம்யா குப்பைத் தொட்டியில் கிடைத்த குழந்தை. ஜாதி மதம் பார்க்காமல் வளர்த்து வருகிறாள் தாய். கிட்டத் தட்ட உண்மை தெரியும் தருவாயில் தாய் உயிரிழக்கும் சாத்தியக் கூறுகள்!

    ReplyDelete
  18. //அப்பா செல்லம் அவள்.//

    அது என்ன?.. வளர்ப்பு பெற்றோர்கள் என்று தெரிந்தாயிற்று.. அம்மா வேண்டாம்; அப்பா மட்டும் வேண்டும் என்றால் எப்படி? :))

    தன்னை வளர்த்த தாயே தன் தாய் என்ற உணர்வு கூட இல்லாத ஒரு பெண்ணுக்கு, வரன் பார்த்து.. ஹூம்..

    அது சரி, ரம்யாவும் வனிதாவும் சகோதரிகளா?..

    எது எப்படியிருந்தாலும், அனாதை காப்பகம் போன்ற இடங்களை ஒரு சுற்று சுற்றி வந்தால் எல்லாம் சரியாகிப் போய்விடும்!

    ReplyDelete
  19. ஸ்ரீராம் இருக்காரே.. எதையுமே சொல்லமாட்டார் கடைசி வரைக்கும்..

    ReplyDelete
  20. வாங்க ஜீவி சார், உங்களையும், அப்பாதுரையையும் போன்ற ஜாம்பவான்களே வந்தால் எனக்கு ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறதோடு, என் மேலே நம்பிக்கை கூடுகிறது. ஆனால் பாருங்க, முடிவு நீங்க சொன்னது இல்லை. அடுத்த பகுதியைப் போட்டுட்டேன், யாருமே பார்க்கலை போலிருக்கு.

    அப்பாதுரை கிட்டத்தட்ட அவரோட ஒரு ஆப்ஷனில் சொல்லிட்டார். ஸ்ரீராம் அவர் சைகிளில் போற வேகத்தை மனசிலே நினைச்சுட்டுப் பல ஆப்ஷன்கள் கொடுத்திருக்கார். எல்லாம் மாடரேஷனில். :))))))

    ReplyDelete
  21. அப்பாதுரை, ஸ்ரீராமும் சொல்லி இருக்கார். ஆனால் மாடரேஷனில் வைச்சிருக்கேன்.

    ஹிஹி, பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய விகடன் ஆசிரியரானு நீங்கள்ளாம் நினைச்சுக்குங்க. இப்போதைக்குச் சொல்லப்போறதில்லையே! :))))))

    ReplyDelete
  22. நம்ம ரங்க்ஸ் கிட்டேச் சொன்னால் ஒரு சீரியஸ் கதையை மொக்கையாக்க உன்னால் தான் முடியும்னு கிண்டல் பண்ணுவார். ஊரிலே இல்லை. வந்ததும் சொல்லணும். :)

    ReplyDelete
  23. //நம்ம ரங்க்ஸ் கிட்டேச் சொன்னால் ஒரு சீரியஸ் கதையை மொக்கையாக்க உன்னால் தான் முடியும்னு கிண்டல் பண்ணுவார்//

    ஒருவேளை எல்லாம் கனவுதான் என்றோ, ஜீவி சார் பார்வைகள் முதல் பகுதியில் சொன்னது போல அதை ஒரு புத்தகத்தில் படித்த கதையாகவோ, டிவியில் பார்த்த சீரியலாகவோ சொல்லி முடித்து விடுவீர்களோ...!

    ReplyDelete
  24. அதான் காணலியா?
    ஏதோ ஒரு ஆப்ஷன் கிட்டத்தட்ட சரினு சொல்றீங்க.. அப்ப ஒரு சுருணையாச்சும் கொடுங்கம்மா..
    (எழுதின எதையும் நினைவு வச்சுக்கலே)
    ரங்க்ஸ் வாழ்க!

    ReplyDelete
  25. அப்பாஜி! ஒண்ணு எடிபஸ்ன்னா, இன்னொண்ணு எலெக்ட்ரா தானே?

    ReplyDelete