எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, January 13, 2014

என் கேள்விக்கு என்ன பதில்???

ஹாஹாஹா, ஹிஹிஹிஹி,ஹுஹுஹுஹு, ஹெஹெஹெஹெ, எல்லாரும் பொங்கல் லீவை ஜாலியாக் கொண்டாடிட்டிருப்பீங்க.  இன்னிக்கு போளி, வடை பண்ணறவங்க வீட்டில் போளி, வடையும், நாளைக்குப் பொங்கல், வடையும் சாப்பிட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சினிமா நடிகர்களும், நடிகைகளும் பொங்கல் கொண்டாடுவது பற்றிச் சொல்லிக் கொடுப்பதை ரசித்துக் கொண்டிருப்பீங்க.  இணையத்துக்கு வெகு சிலர் தான் வருவாங்க.  நாம எப்படியும் ஒரு தரமாவது வந்துடுவோமுல்ல .  அதை விடுங்க.

இப்போ எல்லாருக்கும் வீட்டுப் பாடம் தரப் போறேனே.  அதை ஒழுங்காச் செய்யணும்.  பின்னூட்டத்திலே பதிலளிச்சாலும் சரி, அவங்க அவங்க பதிவாப்போட்டாலும் சரி.  பதிவு போடறவங்க சுட்டியை எனக்கு அனுப்புங்க.  இதுக்கு வயசு ஒண்ணும் கிடையாது.  வயசு வரையறை சொல்லலாமோனு முதல்லே நினைச்சேன்.  அப்புறமா வேணாம்னு விட்டுட்டேன்.  அவங்க அவங்க அனுபவத்தைச் சொல்லணும்.   ஐந்து, ஐந்து கேள்விகளாக  நாலு நாளைக்கு (விடமாட்டோமுல்ல) வரும். :)))


கேள்விகள்:

1. உங்கள் குழந்தைப் பருவத்தில் முதல் பள்ளி அனுபவம் எப்படி இருந்தது?

2.வயதானதும், பதின்ம வயதில், அதாவது டீன் ஏஜ் எனப்படும் பருவத்தில் உங்க டீச்சர் வீட்டுப்பாடம் நிறையக் கொடுத்து  ஒரு வழி பண்ணிட்டாங்களா?  இல்லைனா கொடுக்கிற வீட்டுப்பாடத்தைச் சமர்த்தாச் செய்யும் டைப்பா நீங்க?

3. இப்போ தொழில் நுட்பம் முன்னேறி வருகிறது.  சின்னக் குழந்தைக்குக் கூடத் தொழில் நுட்பம் விரைவில் கற்க முடிகிறது.  ஆனால் முப்பது வருடங்கள் முன்னர் இந்தத் தொழில் நுட்பம் என்பது தெரியாது இல்லையா? இந்தத் தொழில் நுட்ப உதவி இல்லாமல் உங்களால் பள்ளிப் பாடங்களை, அதற்கான வீட்டுப்பாடங்களை சிரமம் இல்லாமல் செய்ய முடிந்ததா?

4. உங்க பள்ளியிலே சீருடை உண்டா?  அப்படின்னா என்ன மாதிரி சீருடை?  உதாரணமாகப் பையர்கள் வேட்டி, சட்டை அல்லது பான்ட், சட்டை, பெண்கள், பாவாடை, தாவணி, அல்லது ஸ்கர்ட், ப்ளவுஸ், அல்லது சல்வார், குர்த்தா! (சல்வார் குர்த்தா கடந்த முப்பது வருடங்களிலே தான் பிரபலம்)

5.உங்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் யார்? அது உங்களுக்குப் பாடம் கற்பிக்காத ஆசிரியராகக் கூட இருந்திருக்கலாம்.  நீங்கள் முன் மாதிரியாகக் கொள்ளும் ஆசிரியர் யார்?  என்ன விதத்தில் உங்களைக் கவர்ந்தார்?

24 comments:

  1. 1) அழுகையாக இருந்தது. :)))

    2) வீட்டுப்பாடம் இந்தக் காலத்தில் கொடுக்கும் அளவு கிடையாது. சமர்த்தாச் செய்ததும் உண்டு. செய்யாமல் மணலில் முட்டி போட்டதும் உண்டு!

    3) அப்போதைய வீட்டுப்பாடங்களைச் செய்ய பெரிய தொழில் நுட்பம் எதுவும் தேவையாயிருக்கவில்லை!

    4) சீருடை - ஒரு பள்ளியில் (எக்கித் ஹார்ட் கான்வென்ட்) காக்கி டிராயர், காக்கி சட்டை (என்று நினைவு) அப்புறம் உயர்நிலைப் பள்ளியில் (தூய அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி, தஞ்சை) நீல நிற (நேவி ப்ளூ) டிராயர், வெள்ளைச் சட்டை. 10 டிராயருக்கு பதில் பேன்ட்ஸ்!

    5) பிடித்த ஆசிரியரின் பெயர் ஆர் ஜே எர்னஸ்ட். எனக்கும் கணக்குச் சொல்லிக் கொடுத்து என்னையும் பாஸ் பண்ணவைத்த புண்ணியவான். அவர் ந.உ.பா எல்லாம் பிடிக்கும். முன்மாதிரி ஆசிரியர் என்று யாருமே இல்லை. சில ஆசிரியர்கள் வயிற்றெரிச்சலை நிறையவே கொட்டிக் கொண்டிருக்கிறேன்!

    ReplyDelete
  2. ஹாஹாஹா, ஶ்ரீராம், நான் அழலை! :) நடை, உடை, பாவனை எலலம் பிடிச்ச அந்த ஆசிரியர் கூட முன் மாதிரி இல்லையா? ஆச்சரியம் தான்! :)))

    ReplyDelete
  3. 1. சந்தோசமாக இருந்தது...

    2. ஆர்வத்துடன் வீட்டுப்பாடம் செய்வேன் - வித்தியாசமாக சமர்ப்பிப்பேன்...!

    3. சிரமமே இருந்ததில்லை... 10th Public Exam-யின் போது பக்கத்து சினிமா கொட்டகையில் இரண்டு படம் சென்று வந்தேன்...!!

    4. 8 வது வரை முதல் பள்ளியில் பள்ளிச்சீருடை இல்லை... புதன் மட்டும் White & White 2 வது பள்ளியில் உண்டு...!

    5. எனக்குப் பிடித்த ஆசிரியர் : பத்தாம் வகுப்பு தமிழ் & கணித ஆசிரியர் (அல்ல)... குரு...!

    5 வது கேள்வியில் "எந்த விதத்தில் கவர்ந்தார்" என்று பதில் சொல்ல வேண்டுமானால் நிறைய எழுத வேண்டும்... அதனால் எனது குருவிற்கு சமர்ப்பித்த எழுதின 3 பதிவுகளை தருகிறேன்... நேரம் கிடைப்பின் வாசிக்கவும்...(விடமாட்டோமுல்ல) ஹிஹி... நன்றி அம்மா...

    அறிந்ததா...? தெரிந்ததா...? புரிந்ததா...? தொடர் :

    1. http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/1.html
    2. http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/2.html
    3. http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/blog-post.html

    ReplyDelete
  4. இனிப்பாக பொங்கிய
    பொங்கல் கேள்விகள்...! ??

    ReplyDelete
  5. வாங்க டிடி, சமர்த்துக் குழந்தையா இருந்திருக்கீங்க. :))) பதில்களுக்கு நன்றி. சுட்டிகளை நாளைக்குள் படிச்சுடறேன். நன்றிப்பா.

    ReplyDelete
  6. ராஜராஜேஸ்வரி, பதில்கள் இல்லையே?? பதில் கொடுங்க. :))))

    ReplyDelete
  7. Geetha.
    1,
    பள்ளி இனிமை.
    பாடம் இனிமை,
    வீட்டுப்பாடம் இனிமை சொல்லிக்கொடுத்த அத்தனை டிச்சர்கம் இனிமை.
    விரும்பிப் படித்தேன்..


    மிகவும் பிடித்த டீச்சர் மிஸ். ஜேம்ஸ்.
    Uniform Green paavadai white blouse and thaavani.

    .
    ின்னாட்களில்

    --
    அன்புடன்,

    ReplyDelete
  8. 1. திருவல்லிக்கேணி கனகவல்லி எலிமெண்டரி பள்ளியில் 5 வகுப்பு வரை படித்தேன். இனிமையான அனுபவங்களே.
    2. மேல்வகுப்புகள் புரசைவாக்கம். லேடி எம்.சி.டி.எம். பள்ளியில் படித்தேன். நிறைய ஹோம்வொர்க் கொடுப்பார்கள். ஆனாலும் சமத்தாகப் பண்ணிக் கொண்டு போவேன். ஒரு விஷயம்: எங்கள் பள்ளியை ஒட்டியே இருந்த ஆண்கள் எம்.சி.டி. பள்ளியில் எனக்கு சீனியர் கமலஹாசன்! பள்ளிவிழாக்களில் மட்டுமே இரண்டு பள்ளி மாணவர்களும் ஒன்றாக கூட முடியும். ஒரு சோலோ நடனம், ஒரு ஓரங்க நாடகம் செய்வார்.
    3. ரேடியோ கூடக் கிடையாது. சின்ன வீடு. நாங்கள் நாலு பெரும் ஒரே அறையில் உட்கார்ந்து படிப்போம். அதே அறையில் ஒரு ஓரத்தில் அம்மா சமையல் செய்வார். குறையே இல்லாத நிறைவான சந்தோஷமான நாட்கள்!
    3. டார்க் நீலத்தில் பாவாடை, அதே நிறத்தில் தாவணி, வெள்ளை நிற ப்ளவுஸ்.
    4. தலைமை ஆசிரியை திருமதி ஷாந்தா. இவரது கம்பீரமான தோற்றம் என்னை மிகவும் கவர்ந்த விஷயம். அந்தக் காலத்திலேயே வெயிலில் நிறம் மாறும் கண்ணாடி அணிந்திருப்பார். ப்ளெயின் புடவையில் கான்ட்ராஸ்ட் பார்டர் போட்ட புடவை அணிந்து அவர் பள்ளியில் நுழையும்போதே பள்ளி அமைதியாகிவிடும். அந்த ஆளுமை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.


    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. http://gopu1949.blogspot.in/2012/03/1.html

    இதோ http://gopu1949.blogspot.in/2012/03/1.html இந்தப்பதிவினில் ஆரம்பித்து,

    இதோ http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_17.html
    இந்தப்பதிவினில் முடித்துள்ளேன்.

    என் கிட்டயேவா வீட்டுப்பாடம் ;)))))

    ReplyDelete
  10. 1. மிக இனிமையான அனுபவம்.அப்பன் கிட்டே காரணமேயில்லாம அடியும் பேச்சும் வாங்கணுமேனு பயம் ஒரு முக்கிய காரண்ம்னாலும் வீட்டுக்கு வரவே பிடிக்காது. பெங்களூர் ஹோலிக்ராஸ் கான்வென்ட் டீச்சர் பெயர் சரியாக நினைவில்லை என்றாலும், அவர் புடவைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டு வகுப்பில் சுற்றியது நினைவிருக்கிறது. நான் டீச்சர்ஸ் பெட் எப்பவுமே. படிக்குற புள்ளை. எல்கேஜி முதல் நாள் கூட கொஞ்சம் நினைவில் இருக்கிறது. நிறைய குழந்தைகள் அழுது கொண்டிருக்க நான் மட்டும் அழாமல் விழித்துக் கொண்டிருந்தது நினைவில் இருக்கிறது. குரோம்பேட்டையில் ஆறாம் வகுப்பு புது ஊர் புது பள்ளிக்கூடம் முதல் நாளில் அழுததும் எல்லாரும் வகுப்பில் என்னைக் கிண்டல் செய்ததும் ஜெயலலிதா என்ற பெயர் கொண்ட பத்தாம் வகுப்புப் பெண் ஒருவர் என்னை சமாதானப்படுத்தியதும் நினைவிருக்கிறது. வேறே கதை.

    2. வீட்டுப் பாடம் எல்லாம் செய்த நினைவேயில்லை; அவை ஒரு பணியாகவோ சுமையாகவே இருந்த நினைவு கொஞ்சம் கூட இல்லை. பதின்மத் தொடங்க்கத்தில் அனேகமாக ஸ்கூலில் வீட்டுப் பாடம் அதிகமாகத் தரவில்லையென்றே நினைக்கிறேன். ஸ்கூல் விட்டதும் வீட்டுக்கு வந்து இருப்பதை 'கொட்டிக்' கொண்டு அஞ்சே நிமிஷத்தில் விளையாட வெளியே ஓடுவோம். அது மட்டும் தான் நினைவில். பின் பதின்மத்தில் விளையாடிய பிறகு வீட்டுக்கு வந்து 'கொட்டிக்' கொண்டு மறுபடி வெளியே போய் கோவில் 'சுற்றி' விட்டு மனம் நிறைய சைட் அடித்துவிட்டு, இரவு பத்து மணி வரை வீட்டு வாசல் ஒற்றை பனைமரத்தடியிலும் இடிந்த எல்லையம்மன் கோவில் சுவரருகிலும் பேசிக்கொண்டிருப்போம். வீட்டுப் பாடம் வீட்டில் செய்த நினைவு கொஞ்சம் கூட இல்லை.

    3. ஜியாமெட்ரி பாக்ஸ் மட்டும் தான் அப்போது தொழில் நுட்பம். கேல்குலேடர் கூட என்னிடம் கிடையாது. எந்த சிரமமும் நினைவில்லை. எல்லாமே இனிமையான சுகமான நாட்கள். சம்ஸ்க்ருத வகுப்பு தினசரி மாலை ஸ்லோகம் சொன்னபின் சாப்பிட வேண்டிய கட்டாயம் தவிர பதின்ம வயதின் படிப்பு தொட்ட அதிருப்திகள் எதுவுமே இல்லை.

    4. எப்பவுமே. தொடக்கப் பள்ளியில் ஆலிவ் பச்சை டிராயர், வெள்ளை சட்டை, ஸ்கூல் ப்லேசர், வெள்ளை சாக்ஸ், கறுப்பு ஷூ. உயர்நிலைப்பள்ளியில் காக்கி டிராயர், வெள்ளை சட்டை.. செருப்பில்லாமல் கூட வரலாம். நிறைய பேர் டீச்சரை அடிப்பதற்காகவே செருப்பு போட்டுக் கொண்டு வருவார்கள். அப்படி வராதவர்கள் "மச்சி கொஞ்சம் செருப்பு கொடு" என்று என்னிடம் கடன் வாங்கி டீச்சரை அடித்துவிட்டு வருவார்கள், நினைவிருக்கிறது. என்னிடம் வாலறுந்த ஊக்கு போட்டு கட்டிய ரப்பர் ஹவாய் செருப்பு இருக்கும் - அதனால் வாத்தியார்களை அடிப்பது நிறைய ஸ்கூல் ரவுடிகளுக்குப் பிடிக்கும். என் செருப்பின் மவுசு.. ஆ.. சுவாரசியமான நினைவ்களைக் கிளறிவிட்டீர்களே.

    5. இந்திரமோகன். அவர் இல்லையென்றால் என் வாழ்க்கை தலைகீழாக மிக மோசமாக மாறியிருக்கக் கூடிய அபாயத்தை இப்போது நினைத்தாதும் கொஞ்சம் ஜிவ்வென்று அடி வயிற்றில் சூடு போட்டாற்போல் ஒரு உட்தணலை உணர்கிறேன்.






    ReplyDelete
  11. ஸ்ரீராம் பதில் சொல்லியிருக்கிறார். சென்னையில் மழை வந்திருக்கணுமே?

    ReplyDelete

  12. ஏன் என்று கேள்விக்கு பதில் தெரியாமல் பதில் சொல்வது இல்லை. (எங்கும்) மேலும் ஊருக்குப்போறோம்ல. வந்து பார்க்கலாம். இனிய பொங்கல் தின நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. வாங்க வல்லி,

    பதில்களும் இனிமை. என்னைப் பொறுத்தவரை கணக்கு டீச்சர் தான் கொஞ்சம் மோசமானவங்களா இருந்தாங்க. எனக்கும் அவங்களுக்கும் ஏழாம் பொருத்தம்.

    ReplyDelete
  14. வாங்க ரஞ்சனி, எங்க வீட்டிலேயும் ரேடியோ கூடக் கிடையாது என்பதோடு, மின்சார விளக்கும் இல்லை. ஹரிக்கேன் விளக்கிலே தான் எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். :)))

    ReplyDelete
  15. வைகோ சார்,

    //என் கிட்டயேவா வீட்டுப்பாடம் ;)))))//

    அதானே, எனக்கில்லை வீட்டுப்பாடம் கொடுத்திருக்கீங்க! :)))) படிக்கிறேன்.

    ReplyDelete
  16. அப்பாதுரை, அருமையான அனுபவப் பாடங்கள், பதில்கள் அருமை.

    ReplyDelete
  17. ஹாஹா ஶ்ரீராம் தான் சொல்லணும், சென்னையில் மழை பெய்ததா, இல்லையானு! :)

    ReplyDelete
  18. ஜிஎம்பி சார், ஊருக்குப் போயிட்டு கேள்விகளுக்குத் தெரிஞ்ச அளவுக்கு பதில் கொடுங்க. :)))))

    ReplyDelete
  19. நம்ம சூடான் புலி, நாகை சிவா அவர்கள் மெயிலில் பகிர்ந்தது. :)))) அவரின் அனுமதியின்றி இங்கே வெளியிடுகிறேன். :)))


    1. உங்கள் குழந்தைப் பருவத்தில் முதல் பள்ளி அனுபவம் எப்படி இருந்தது?

    நல்லா இருந்து இருக்கும். அம்புட்டு தெளிவா ஞாபகம் இல்லை. ஆனால் நான் அப்பவும் ரொம்ப சமத்து பையனாம். எங்கள் பெரிய தாத்தா கூட பள்ளிக்கு ரிக் ஷாவிக்கு சென்ற ஞாபகம் இருக்கிறது. சித்தப்பா சைக்கிளில் முன்புற கேரியரில் கூட்டிக் கொண்டு விட்ட ஞாபகம் இருக்கிறதும்.

    2.வயதானதும், பதின்ம வயதில், அதாவது டீன் ஏஜ் எனப்படும் பருவத்தில் உங்க டீச்சர் வீட்டுப்பாடம் நிறையக் கொடுத்து ஒரு வழி பண்ணிட்டாங்களா? இல்லைனா கொடுக்கிற வீட்டுப்பாடத்தைச் சமர்த்தாச் செய்யும் டைப்பா நீங்க?

    கொடுத்த மாதிரி ஞாபகம் இல்லை. அப்படியே கொடுத்து இருந்தாலும் செய்து இருக்க வாய்ப்பே இல்லை :)

    3. இப்போ தொழில் நுட்பம் முன்னேறி வருகிறது. சின்னக் குழந்தைக்குக் கூடத் தொழில் நுட்பம் விரைவில் கற்க முடிகிறது. ஆனால் முப்பது வருடங்கள் முன்னர் இந்தத் தொழில் நுட்பம் என்பது தெரியாது இல்லையா? இந்தத் தொழில் நுட்ப உதவி இல்லாமல் உங்களால் பள்ளிப் பாடங்களை, அதற்கான வீட்டுப்பாடங்களை சிரமம் இல்லாமல் செய்ய முடிந்ததா?

    ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தானே. பள்ளி முடிந்ததும் விளையாட்டு தான். அப்படி இல்லையென்றால் கடைக்கு போய் விடுவது. அம்புட்டு தான்

    4. உங்க பள்ளியிலே சீருடை உண்டா? அப்படின்னா என்ன மாதிரி சீருடை? உதாரணமாகப் பையர்கள் வேட்டி, சட்டை அல்லது பான்ட், சட்டை, பெண்கள், பாவாடை, தாவணி, அல்லது ஸ்கர்ட், ப்ளவுஸ், அல்லது சல்வார், குர்த்தா! (சல்வார் குர்த்தா கடந்த முப்பது வருடங்களிலே தான் பிரபலம்)

    உண்டு. வெள்ளை சட்டை, கருநீல டவுசர். எட்டாவது வரை அரை டவுசர். அதுக்கு அப்புறம் முழு டவுசர். டை எல்லாம் கூட உண்டு. கட்டியது தான் இல்லை.

    5.உங்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் யார்? அது உங்களுக்குப் பாடம் கற்பிக்காத ஆசிரியராகக் கூட இருந்திருக்கலாம். நீங்கள் முன் மாதிரியாகக் கொள்ளும் ஆசிரியர் யார்? என்ன விதத்தில் உங்களைக் கவர்ந்தார்?

    பள்ளியில் - ரிச்சர்ட்சன். ஆங்கிலம். ஆனால் வரலாறில் செம புலமை. மனுசன் அலட்சியத்தின் மொத்த உருவம். ஏதா இருந்தாலும் யார இருந்தாலும் நக்கலும் நையாண்டியும் தான். புத்தகமின்றி பாடம் நடத்துவார். நல்லாசிரியர் விருது பெற்றவரும் கூட.

    ReplyDelete
  20. ஹலோ... என்ன கிண்டலடிக்கிறீர்கள்? நான் என்ன பதிலே சொன்னதில்லையா? சென்னையில் மழை பெய்யவில்லை. இதிலிருந்தே தெரியவில்லையா? :)))))

    ReplyDelete
  21. ஹாஹா, நான் கிண்டல் அடிக்கலை, அடிச்சது அப்பாதுரை! :)))) அடுத்த ஐந்து கேள்விகளுக்கு பதில் அளியுங்க இப்போ! :)))))

    பொங்கல் சாப்பிட்டுட்டு சாவகாசமா வந்திருக்கீங்க. அதனாலே யோசிச்சுச் சொல்லுங்க. :))))

    ReplyDelete
  22. சரியாப் பாருங்க ஶ்ரீராம்.. இங்கே தெறிக்குது சாரல்..;)

    ReplyDelete
  23. 1.ஆரம்ப பள்ளியில் முதல்நாள் அப்பாதூக்கிச்சென்றுவிட்டார். தலைமைஆசிரியரும் வந்து தூக்கிச்சென்றார். அம்மாவுடன் படித்தவர்என்பதால் முன்பே தெரியும். ஆசிரியர்களும் தெரிந்தவர்கள் மகிழ்ச்சியாக இருந்தேன்.ஆசிரியை ஒருவர் காரில் ஏற்றிச்செல்வார். ஆறாம் ஆண்டிலிருந்து வேறொரு பள்ளி.

    2. பாடங்கள்சுமார் சிரமம் இருக்கவில்லை.

    3. விளையாட்டுடன் பாடங்கள் மகிழ்ச்சிதந்தன.

    4.வெள்ளை யூனிபோம். ரை. வெள்ளை சப்பாத்து.

    5. தமிழ்சமையபாடஆசிரியை திருவாசகம் மெய்சிலிர்க்கபாடுவார். தமிழ் சிறப்பாக பயிற்றுவிப்பார் செல்வி. செல்லத்தம்பி.

    பியானோ ரீச்சர் அழகானவர். அவரின் ஸ்ரைலும் பிடிக்கும். செல்வி .......

    ReplyDelete
  24. 1. மகிழ்ச்சி .
    2. வீட்டு பாடம் எப்போதும் செய்து விடுவேன். கணக்கு அக்கா போட்டுக் கொடுத்து விடுவார்.
    3. 4, அப்பாவுக்கு மாற்றல் ஆகும் உத்யோகம் ஊருக்கு ஒரு டிரஸ். பச்சை, நீலம் தான் பெரும்பாலும்.

    5.என்னை எல்ல ஆசிரியர்களுக்கும் பிடிக்கும், எனக்கும் எல்லா ஆசிரியர்களையும் பிடிக்கும்.

    ReplyDelete