எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, March 05, 2016

தக்ஷிணேஸ்வரம் காளி கோயிலில்!

முதல்லே நாங்க தக்ஷிணேஸ்வரம் போனதுமே கோயிலுக்குப் போகவென ஒரு இடத்தில் ஓட்டுநர் இறக்கிவிட்டுட்டுச் சற்றுத் தொலைவில் இருந்த பாலத்தைக் காட்டி அதன் கீழே வண்டியை நிறுத்தும் இடம் இருப்பதாகவும் தான் அங்கே இருப்பதாகவும், கோயிலில் இருந்து திரும்பும்போது தன்னோட எண்ணுக்குத் தொலைபேசிவிட்டுப் பாலத்தின் கீழே வரும்படியும் சொல்லி விட்டார். அவர் எங்களை இறக்கிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு போய்விட்டார். நாங்கள் அங்கே கோயிலுக்குச் செல்லும் வழி என நினைத்த பக்கம் திரும்பி நடக்க ஆரம்பித்தால் காவலர்கள் வந்து இப்படிப் போக முடியாது என்று சொல்லிப் பக்கத்துத் தெருவில் திருப்பி விட்டார். சரிதான் என நடக்க ஆரம்பித்தோம்.

நடந்தோம், நடந்தோம், நடந்தோம்! தோம், தோம் தான்! கிட்டத்தட்ட அரைமணி நேரம் நடந்து போன பின்னர் கோயிலின் ஒரு வாயிலருகே கொண்டு விட்டது. அந்த இடத்துக்கு ஆட்டோ கூட வரக் கூடாது என்னும் கட்டுப்பாடு. சைகிள் ரிக்‌ஷா மட்டும் வரலாம். ஆனால் எனக்கு அதில் ஏற முடியாது என்பதால் அதில் செல்லத் தயக்கம். நடந்து நடந்து கால்கள் சோர்ந்து விட்டன! கடைசியில் ஒரு வழியாகக் கோயில் வந்தது. செருப்பு வைக்க ஓர் இடம்! அது எங்கேயோ! தேடிக் கண்டு பிடித்தோம். நல்லவேளையாத் திரும்பி வருவதும் இதே வழி தான் என்பதில் ஓர் நிம்மதி! எக்கச்சக்கக் கூட்டம்! மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று கொண்டிருந்தனர். கல்கத்தாவின் மொத்த ஜனத்தொகையே அங்கே வந்துவிட்டதோ என்னும்படி கூட்டம்.

இந்த அழகில் கோயிலின் அமைப்பை அவ்வளவாக் கவனிக்கலை! ஆனாலும் பார்வதி கேட்டதுக்கு இணங்க ஓரளவுக்குச் சொல்றேன். இது வங்காளப் பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.  தெற்கே பார்த்து அமைந்துள்ள மூன்று மாடிக் கட்டிடம்.  குறைந்த பட்சமாக 45 அல்லது 50 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. நூறு அடிக்கும் மேல் உயரம் இருக்கலாம். கர்பகிரஹம் என்பது நம்ம ஊரிலே இருக்கிறாப்போல் எல்லாம் இல்லை. புரியிலும், அங்குலிலும் கூட கர்ப்பகிரஹம் என்பது தனியாக இருந்தது. இங்கே ஒரு பெரிய அறையில் தான் காளி பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறாள்.  இங்கே காளியை "பவதாரிணி" என்னும் பெயரால் அழைக்கின்றனர். சிவனின் மார்பின் மேல் ஏறி நின்ற வண்ணம் காட்சி அளிக்கிறாள்.  ஆயிரம் இதழ்களைக் கொண்ட வெள்ளித்தாமரையின் மேல் இருவரும் காட்சி தருகின்றனர்.

காளியைப் பார்க்க நாங்கள் வரிசையில் போய் நின்று கொண்டோம். அங்கே இருந்த காவலர் என்னைப் பார்த்ததும் படிகளில் ஏற முடியுமா என்று கேட்டார். ஏற்கெனவே படிகளில் ஏறித் தானே வந்திருக்கேன் என எண்ணிக்கொண்டே தலையை ஆட்டினேன். அவரும் கொஞ்சம் யோசனையுடன் சரி எனச் சொன்னார். ஆனால் மேலே போகப் போகத்தான் தெரிந்தது. நிறையப் படிகள் ஏற வேண்டி இருந்தது.  உள்ளே போய்க் காளியைக் கிட்டே இருந்து பார்க்கவும் முடிந்தது. தொட்டு விடும் தூரம் தான். ஆனால் தொட முடியாது. என்றாலும் கல்கத்தா காளியை நான் கொஞ்சம் தொட்டு விட்டேன். பண்டா அதற்குள்ளாகப் பார்த்துட்டுக் கையைத் தட்டி விட்டார். அந்தக் கதையை முதலில் சொல்லி இருக்கணும். :)

கல்கத்தாவில் காளி கோயில்களில் செவ்வாய்க்கிழமை அன்றும், சனிக்கிழமை அன்றும் கூட்டம் நிறைய இருக்குமாம். நாங்கள் போனதோ சனிக்கிழமை அன்று! கேட்கவே வேண்டாம்! அந்தக் கூட்டத்தில் காளியைப் பார்த்துட்டு வெளியே வரவே பனிரண்டு மணி ஆகிவிட்டது. மூடப் போகும் நேரம் வேறே நெருங்கி விட்டது. ஒருவழியாகக் காளியின் தரிசனம் கிடைத்தது. ராமகிருஷ்ணரும், விவேகானந்தரும் வணங்கிய காளி என்பதில் மனதில் ஓர் சிலிர்ப்பு நம்மையும் அறியாமல் தோன்றியது. தரிசனம் முடிந்து வெளியே வந்தோம். மீண்டும் சுற்றிக் கொண்டு வர வேண்டும். போதும் போதும்னு ஆகி விட்டது. மற்றச் சந்நிதிகள் மூடி விட்டார்கள். ஆகவே வேறு வழியின்றி வெளியே செல்லும் வாயிலுக்குச் செல்லும் வழியில் சென்று செருப்புக்களை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல ஆயத்தமாக வந்தோம். திரும்ப அவ்வளவு தூரம் நடக்கணுமே என நினைத்தப்போ ஒரு ரிக்‌ஷாக்காரர் வந்து மிகவும் கெஞ்சினார். நம்ம ரங்க்ஸுக்கு எப்போவும் ரிக்‌ஷாப் பயணம் என்றால் ஓர் அலாதி ஆசை! ஆகவே அவர் கண்களில் ஆசை மின்ன ஏற முடியாமல் ரிக்‌ஷாவில் ஏறினேன். குடை சாயுமோ என்று பயம் வந்துவிட்டது. :) ஒருவழியாகச் சமாளித்து ஏறினேன். அவரும் ஏறினார். மிகக் கஷ்டப்பட்டு மிதித்தார் ரிக்‌ஷாக்காரர். எனக்கு இறங்கிடலாமா என்றே தோன்றியது. ஆனால் ரிக்‌ஷாக்காரர் விடவில்லை.

நாங்க எங்க வண்டி நிற்கும் இடம் சொல்லி இருந்தோம். பாலத்துக்கு அருகே வரும்போது ஓட்டுநரைத் தொலைபேசியில் அழைத்தோம். அவரும் பாலத்தின் கீழே காத்திருப்பதாகவும், ரிக்‌ஷாக்காரரிடம் அங்கே கொண்டுவிடும்படி சொல்லுமாறும் கூற நாங்கள் ரிக்‌ஷாக்காரரிடம் தொலைபேசியைக் கொடுத்து அவரையே பேசும்படி சொன்னோம். ஓட்டுநர் சொன்ன இடத்தில் அவர் இல்லை. அங்குமிங்கும் அலைந்து தேடிக் கடைசியில் காவலரிடம் கார்கள் நிறுத்துமிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, மீண்டும் ஓட்டுநரிடம் பேசி எங்கே இருக்கார் எனக் கேட்கப் பாலத்தின் அடியே என்றார். நாங்களும் அங்கே தான் இருக்கோம் என்று சொல்ல, சற்றுத் தூரத்தில் நின்ற ஒரு கார் கிளம்பி எங்கள் அருகே வந்தது. முதலிலேயே அந்த இடத்தில் தேடினோம். அப்போது அவர் இல்லை. தேநீர் அருந்தச் சென்றிருக்கலாம். என்றாலும் தான் அங்கேயே இருப்பதாகச் சத்தியம் செய்தார். மேற்கொண்டு வார்த்தையை வளர்க்காமல் நாங்கள் வண்டியில் ஏறிக் கொண்டு பேலூர் மடத்துக்கு விடச் சொன்னோம்.

dakshineswar kali temple க்கான பட முடிவு


Thanks to Travology.in via google pictures.

22 comments:

  1. பேலூர் மடம் பற்றிய உங்கள் அனுபவங்களைத் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அங்கே தான் இருக்கு suspense! :)

      Delete
  2. உண்மையில் ஆங்காங்கே நடந்த நிகழ்ச்சிகளையும் நீங்கள் பட்டபாட்டையும் கதைபோல சொல்வது படிக்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மையிலே அதான் மிச்சம்! :(

      Delete
  3. நம்ம ஊர்ல இப்படி கோவிலை விட்டுத் தள்ளி வண்டிகளை நிறுத்தினால் நம்ம மக்கள் பேசியே கொன்னுடுவாங்க...

    ReplyDelete
    Replies
    1. ஹூம்! நீங்க வேறே! பல பிரபலமான கோயில்களிலும் இப்படித் தான்! வண்டியை உள்ளே எடுத்துச் செல்ல முடியாது! ஒரு முறையாவது வண்டியை எடுத்துக் கொண்டு சமயபுரம் போயிட்டு வாங்க! புரியும்.:) மதுரையில் முன்னால் வடக்காவணி மூல வீதியில் இருந்த சென்ட்ரல் மார்க்கெட் மைதானத்தில் வண்டிகள் நிறுத்தப்படும். அங்கிருந்து கோயில் அதிக தூரம் இல்லை தான். என்றாலும் நடந்து தான் போகணும். அதே போல் ராமேஸ்வரத்திலும்! வண்டியை நிறுத்திய இடத்திலிருந்து ஆட்டோ வைத்துக் கொண்டு தான் கோயிலுக்கு எதிரே உள்ள அக்னி தீர்த்தத்துக்கு வரணும். :)

      Delete
  4. ராமகிருஷ்ணர், விவேகானந்தர் தரிசித்த காளியை நாமும் தரிசிக்கிறோம் போன்ற உணர்வுகள் எனக்கும் பழம்பெரும் கோவில்களில் ஏற்படும். மகத்தான தருணங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அது என்னமோ உண்மை தான். தஞ்சைக் கோயில் போகும்போதெல்லாம் இப்படித் தான் மெய் சிலிர்க்கும். கோனேரிராஜபுரம் நடராஜரைப் பார்த்ததும் இப்படித் தான். செம்பியன் மாதேவிகள் திருப்பணி செய்த நினைவு வந்து மோதும்.

      Delete
  5. உங்கள் மேல் சற்றுப் பொறாமையுடன் தொடர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பதிவிலே சரியாப் போயிடும், பாருங்க ஐயா! :)

      Delete
  6. எனக்கு அவ்வளவாக பக்தி கிடையாது என்றாலும் ,( Rationalist -Theosophist ..)..2000-ல் மாதங்கி, புஷ்கலா வையும் அழைத்துக்கொண்டு
    மதுரா போனபொழுது , கிருஷ்ணன் ஓடியாடி விளையாடிய பூமி என்ற எண்ணம் குடி கொண்டு என்னை ப பரவசப்படுதியத்தை
    மறக்க முடியாது ...!

    மாலி

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாலி சார், அநேகமாக உங்களைப் போன்ற ரேஷனலிஸ்ட்கள் மத்தவங்க திருப்திக்கு அல்லது கோயில்களின் கலையைப் பார்த்து ரசிக்கவென்று போவதாய்ச் சொல்லிக் கொள்கின்றனர். எப்படியோ போறாங்க இல்லை! அது போதும்! :) மத்ரா போனப்போ அந்தச் சிறைச்சாலை அறையைப் பார்த்ததும் எனக்கும் மெய் சிலிர்த்தது. ஒரு நிமிஷம் கிருஷ்ணன் பிறந்த அந்தத் தினம் கண் முன்னே வந்து காட்சி கொடுத்தது! :)

      Delete
  7. பெரும்பாலான pilgrim -centered கோவில்களிலும் (முக்கியமாக வட இந்தியாவில் -காசி உள்பட ) எதுவும் organized வைத்திருப்பதில்லை ..அப்போதுதான் 'சம்பாதிக்க' வசதி என்ற காரணம் தான் ..

    மாலி


    ReplyDelete
    Replies
    1. காசியிலும் அதிகம் செலவு செய்யும்படி நேரவில்லை. அதே போல் அயோத்யா மற்றும் இப்போ புவனேஸ்வர், புரி, கல்கத்தா போன்ற இடங்களிலும் பண்டாக்களின் பிடுங்கல் குறைவாகவே இருந்தது.

      Delete
  8. கீதா தரிசனம் செய்த காளி. உங்களுக்குப் பலம் கொடுக்கட்டும்.
    இத்தனை கஷ்டப்பட்டு இருக்கிறீர்கள். உங்கள் பாதங்களை நினைக்கையில்
    கஷ்டமாக இருக்கிறது. உங்கள் சாதனையைப் பார்த்து பெருமையாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. கல்கத்தா போனதில் கல்கத்தா காளியையும், தக்ஷிணேஸ்வரம் காளியையும் தரிசிக்க முடிஞ்சது! அவ்வளவு தான்! :)

      Delete
  9. அப்போ இந்த டூர் போய்ட்டு வந்ததில 3 கிலோ குறைந்தது என்று சொல்லுங்க.

    ஜெயகுமார்

    ReplyDelete
    Replies
    1. அப்படீங்கறீங்க? இருக்கும் இருக்கும்! :)))))

      Delete
  10. காளியின் தரிசனம் பற்றிய தங்கள் பதிவு, சிலிர்ப்பை ஏற்படுத்தியது.. ஸ்ரீபரமஹம்சரின் முன், உயிருணர்வுடன் தோன்றி உரையாடிய அன்னை என்ற உணர்வு, ஒரு கணம் நம்மை மெய்மறக்கச் செய்து விடும்.. கோயில் மிகப் பெரியது. பரந்து விரிந்தது.. நாங்கள் தரிசிக்க சென்ற போது, கூட்டமே இல்லாதிருந்ததால் எல்லாம் தரிசிக்க இயன்றது. குறிப்பாக, காளி தேவியின் சன்னதிக்கு எதிரில், வரிசையாக இருக்கும் சிவன் சன்னதிகள்.. அன்னை சாரதாதேவி வசித்த நகபத் என்னும் வாத்திய மண்டபம் எல்லாம் பார்த்தோம். தாங்கள் மறு முறை செல்லும் போது, எல்லாம் தரிசனம் செய்து விட்டு வாருங்கள் அம்மா!.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், தக்ஷிணேஸ்வரத்தில் எனக்கு நினைவில் வந்த காட்சி, காளியை உணவு அருந்த வைத்த ராமகிருஷ்ணர் தான்! அதுவும் பல படங்களிலும் காளி அமர்ந்து உணவு உண்ணுவதை ராமகிருஷ்ணர் பார்த்து மகிழ்வது போல் வரைந்திருப்பார்கள். அதான் நினைவிலே மோதியது! மறுமுறை எல்லாம் கல்கத்தா போக முடியுமோ என்னமோ தெரியலை! :)

      Delete
  11. காட்சிகள் கண்முன்னே விரிகிறது. பயணக்கட்டுரை அருமை.

    ReplyDelete
  12. நல்ல பயணம்...அடுத்து பேலூர் மடத்திற்குத் தொடர்கின்றோம்...உங்கள் பதிவின் மூலம்தான்

    ReplyDelete