வலக் கண்ணிலே பிரச்னை! Eye floaters எனப்படும் கண் முன் கரும்புள்ளிகள் தோன்றுவது! வித விதமான வடிவில்! எனக்குச் சிலந்தி வலை போல் தோற்றம். நேற்றுக்காலை ஆகாரம் தயார் செய்கையில் திடீர்னு வந்தது. முதல்லே கண் இமையில் ஏதோ ஒட்டி இருக்குனு நினைச்சுத் தள்ளித் தள்ளி விட்டுப் பார்த்தேன். போகலை. அப்புறமாத் தான் புரிஞ்சது. சிலந்தி வலை போகவும் இல்லை. ஆனால் பார்வையை இடக்கண் பக்கம் கொண்டு வந்து பார்த்தால் சரியா இருக்கு. வலக்கண் பக்கம் பார்வையைத் திருப்பினால் பக்கவாட்டில் பார்த்தால் தெரியும். இருட்டறையில் பிரச்னை இல்லை. வெளிச்சத்தில் தான் பிரச்னை! நேற்று முழுவதும் இந்தக் கவலையிலே கணினி பக்கம் அதிகம் வராமல் கண்களை மூடிய வண்ணமே மத்தியானம் படுத்திருந்தேன். சரியாகலை. சாயந்திரமா எதுக்கும் மருத்துவர் கிட்டேக் காட்டிடுவோம்னு போனோம்.
விதவிதமாப் பரிசோதனைகள். Dilater ஊத்தியும் பார்த்தாங்க. சின்னதாக் கொசு மாதிரிக் கிளம்பி இருக்காம். இது போகாதுனு சொல்லிட்டாங்க. கொஞ்ச நாட்கள் ஆனால் உங்களுக்கே பழகிடும்னு சொல்லிட்டாங்க. மற்றபடி பவர் ஒண்ணும் பாதிக்கலைனும், ரெடினாவில் பாதிப்பு இல்லைனும் சொன்னாங்க. பார்வைக் குறைபாடு ஏற்படாது என்றும் சொல்லி இருக்காங்க. நம்பிக்கை தான் ஒரே துணை. நம்பறேன். அதோடு முன் ஜாக்கிரதையாகக் கணினியில் அமரும் நேரத்தை இனி இரண்டே மணி நேரமாகக் குறைக்கவும் போகிறேன். முக்கியமா என்னோட மொழி பெயர்ப்பு வேலைக்குக் குந்தகம் வராவண்ணம் விரைவில் மொழிபெயர்ப்பைச் செய்து முடிக்க எண்ணம். மற்றவை போகப் போகப் பார்த்துக்கலாம்.
நான் இல்லைனா இணைய உலகம் படுத்துடாது! யாரும் எதையும் எதுக்காகவும் நிறுத்தப் போறதில்லை. அதது அது பாட்டுக்கு இயங்கும். கொஞ்ச நாட்கள் ஒதுங்கியும் இருந்து பார்த்துடலாமே! மற்றபடி என் கண்களை அரங்கன் கைகளில் ஒப்படைச்சுட்டேன். அவன் பார்த்துப்பான்.
விதவிதமாப் பரிசோதனைகள். Dilater ஊத்தியும் பார்த்தாங்க. சின்னதாக் கொசு மாதிரிக் கிளம்பி இருக்காம். இது போகாதுனு சொல்லிட்டாங்க. கொஞ்ச நாட்கள் ஆனால் உங்களுக்கே பழகிடும்னு சொல்லிட்டாங்க. மற்றபடி பவர் ஒண்ணும் பாதிக்கலைனும், ரெடினாவில் பாதிப்பு இல்லைனும் சொன்னாங்க. பார்வைக் குறைபாடு ஏற்படாது என்றும் சொல்லி இருக்காங்க. நம்பிக்கை தான் ஒரே துணை. நம்பறேன். அதோடு முன் ஜாக்கிரதையாகக் கணினியில் அமரும் நேரத்தை இனி இரண்டே மணி நேரமாகக் குறைக்கவும் போகிறேன். முக்கியமா என்னோட மொழி பெயர்ப்பு வேலைக்குக் குந்தகம் வராவண்ணம் விரைவில் மொழிபெயர்ப்பைச் செய்து முடிக்க எண்ணம். மற்றவை போகப் போகப் பார்த்துக்கலாம்.
நான் இல்லைனா இணைய உலகம் படுத்துடாது! யாரும் எதையும் எதுக்காகவும் நிறுத்தப் போறதில்லை. அதது அது பாட்டுக்கு இயங்கும். கொஞ்ச நாட்கள் ஒதுங்கியும் இருந்து பார்த்துடலாமே! மற்றபடி என் கண்களை அரங்கன் கைகளில் ஒப்படைச்சுட்டேன். அவன் பார்த்துப்பான்.
கணினி பயன்பாட்டுக்கும் கண் பிரச்னைக்கும் சம்பந்தம் இருக்குன்னு மருத்துவர் சொன்னாரா? இப்போ வர ஸ்க்ரீன் எல்லாம் கண்ணைப் பாதிக்காத வண்ணம்தானே இருக்கு? இங்க வராம இருக்கிறது உங்களை ரிலாக்ஸ் பண்ணும்ன்னா அப்படியே செய்யுங்க.
ReplyDeleteம்ஹூம், அப்படி எல்லாம் அவங்க சொல்லலை. பார்க்கப் போனால் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் சொல்லலை. கண்ணின் பவர் கூட அதிகம் ஆகலை! இது நம்ம ரங்க்ஸுக்கு ஒரு சந்தேகம். அதிகம் கணினியில் உட்காருவதால் வருதுனு அவர் சொந்தக் கருத்து! சரி அதையும் தான் பார்ப்போமே என்ற எண்ணம் அவ்வளவே! மானிட்டரின் ரிசலூஷன் ஜாஸ்தியா எல்லாம் இல்லை. ஆனால் இந்த நாட்களில் வீட்டுக்குள் வெளிச்சம் அதிகம் வரும். எதிர் ஃப்ளாட் கதவுகளில் பட்டு இங்கே பிரதிபலிக்கும்.:)
Deleteஎன்ன புதுசு புதுசா ப்ரச்னைகள்? ஏன் சரி பண்ண முடியாதாம்? இது மாதிரி வருவதற்கு என்ன பெயராம்? சீக்கிரம் சரியாக எங்கள் பிரார்த்தனைகள்.
ReplyDeletehttp://www.webmd.com/eye-health/benign-eye-floaters
Deleteஶ்ரீராம், நேத்திக்குக் காலம்பர இந்தப் பிரச்னை வந்ததுமே கூகிளில் தேடி மேற்கண்ட சுட்டியிலும் இன்னும் சிலவற்றிலும் எல்லாவற்றையும் படிச்சுட்டே சாயங்காலமா மருத்துவர் கிட்டேப் போனேன். தற்போது ஒண்ணும் பிரச்னை இல்லை! நாளாவட்டத்தில் சரியாக வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். புதுசு புதுசாப் பிரச்னைகள் புதுசா என்ன? :) அதிலும் இப்போ ஏழரையாரின் தயவு வேறே! இதோடு விட்டதேனு நினைச்சுக்கறேன். :)
ReplyDeleteநான் இல்லைனா இணைய உலகம் படுத்துடாது!//
ஆனால் நாங்க படுத்திடுவோயாம். என்ன வம்பு இன்னைக்கு ன்னு நாங்க முழிச்சிருக்க வேண்டியது இல்லை பாருங்கோ!
ஆமாம் கண்ணிலே என்ன கோளாறு. யாரோட கண் பட்டது. திருஷ்டி சுத்தி போட்டு பாருங்கோ!
--
Jayakumar
ஹாஹா, ஆமா இல்ல! இன்னைக்கு வம்பில்லைனா பொழுதே கழியாது தான்! ரங்க்ஸ் கிட்டே வைச்சுக்க வேண்டியது தான்! :)
DeleteDid your Doctor said it is Macular Degeneration or scar on the Retina. Macular degeneration may occur due to old age coupled with old CRT type computer monitors.
ReplyDeleteJayakumar
கணினியின் மானிடர் பழசு இல்லை. புதுசானது தான்! அதிக வெளிச்சம் காரணமாய் இருக்கலாம். நீங்க சொல்றாப்போல் மஸ்குலர் டிஜெனரேஷனாயும் இருக்கலாம். மருத்துவர் அதைச் சொல்லலை! :) நான் கேட்டதுக்கு ரெடினாவில் பிரச்னை இல்லை. கவலை வேண்டாம்னு மட்டும் சொன்னாங்க!
Deleteகீதா மேடம், சற்று ஓய்வு கொடுங்கள் எல்லாம் சரி ஆகி மீண்டும் அதே வேகத்துடன் வர அரங்கன் அருள் புரிவார்.
ReplyDeleteநன்றி நன்மனம். ஏற்கெனவே பல மாதங்களாகச் சரியாய் இணையத்தில் இல்லை! இப்போ இது புதுப்பிரச்னை!
Deleteகொஞ்ச நாள் ஒதுங்கியே இருங்கள். எல்லாம் சரியான பிறகு வந்தால் போச்சு.
ReplyDeleteநன்றி ஜீவி சார்.
Deleteமானிட்டர் வெளிச்சத்தை குறைங்க.
ReplyDeleteமானிடர் பிரச்னையானு தெரியலை. ஆனால் கூடத்தில் நான் உட்காரும் இடத்தில் பின்னாலிருந்து அதீதமான அதிக வெளிச்சம் வரும். அது மானிடரில் பட்டுப் பிரதிபலிக்கும். மானிடரின் கோணத்தை மாற்ற வேண்டி வரும். இதான் காரணமா இருக்கலாமோ என இப்போது தோன்றுகிறது. இப்போ வேறே அறைக்கு மாறிட்டேன். என்றாலும் கொஞ்ச நாட்கள் கணினியில் அமரும் நேரத்தைக் குறைக்கவே எண்ணம். :)
Deleteசீக்கிரமே கண் குணமாகி விடும் கீதா மேடம். அது வரை ஓய்வில் இருங்கள். வயதான எல்லோருமே சற்று கம்புயுட்டர் விட்டுத் தள்ளி இருக்கப் பழகுவோம்.
ReplyDeleteநன்றி ராஜலக்ஷ்மி. தள்ளி இருந்து கொள்ளவும் பழகிப்போம்.
Deleteஇணைய இணைப்பு ஏகச் சொதப்பல்! :( ஓரோரு பின்னூட்டத்துக்கும் பதில் எழுதி பப்ளிஷ் கொடுக்கும் முன்னால் போயிடுது! அப்புறமா வந்ததுக்கப்புறம் பப்ளிஷ் கொடுக்கணும். அதுக்குள்ளே சேமிச்சுடணும். இல்லைனா முதல்லே எழுதினது போயிடும்! :( ஒரே படுத்தல் தாங்கலை!
Deleteகடைசியில் இணைய இணைப்பில் பிரச்னையே இல்லை. இங்கே கூடத்தில் வெளிச்சம் பிரதிபலிப்புப் பிரகாசமாக இருப்பதால் வேறு அறைக்கு மாறினேன் மடிக்கணினி சகிதம் தான்! :) அந்த அறைக்கு வைஃபை சிக்னல் கிடைக்கலை. லிமிடெட் ஆக்செஸ்னு வந்துட்டு இருந்தது. அப்புறமா நேத்திக்கு சாயந்திரமா அரங்கனைப் பார்த்துட்டு வந்ததும் தான் திடீர்னு தோணிச்சு! அறையில் சிக்னல் கிடைக்கலையோனு. சரினு வழக்கம்போல் கூடத்துக்கு வந்தால் பிரச்னையே இல்லாமல் உடனே இணையம் இணைப்பைக் கொடுத்தது! வெளிச்சப் பிரதிபலிப்புப் பின்னாடி இருந்து வந்தால் மானிடரில் பட்டுக் கண்களுக்குப் பிரச்னை ஆவதால் பக்கவாட்டில் வரும்படி உட்கார்ந்திருக்கேன். :) மற்றபடி eye floaters வருவதும் போவதுமாய் இருக்கு! பார்க்கலாம்! :)
Deleteரொம்பவே வருத்தமாக, கஷ்டமாக இருக்கும்மா... சீக்கிரமே நீங்க பூரண நலமடையணும்னு கண்ணுடைய நாயகி அம்மனை வேண்டிக்கறேன்.. எப்படியும் அடுத்த மாத வாக்கில் ஒரு விசேஷத்துக்காக மதுரை பயணம் இருக்கு.. முடிஞ்சா நேரே கோயில் போயும் வேண்டிக்கறேன்.. சீக்கிரம் சரியாயிடும்..
ReplyDeleteவாங்க வாங்க, அப்படியே இங்கேயும் வந்துட்டுப் போங்க. கண்ணுடைய நாயகியை நானும் பிரார்த்திச்சுக்கறேன். :) சீக்கிரம் சரியானால் நல்லது தான்!
Deleteவிரைவில் குணமடைய வாழ்த்துக்கள். அரங்கனிடம் விட்டு விட்டீர்கள் அவர் பார்த்துப்பார்.
ReplyDeleteநேரே பார்த்தால் பிரச்னை இல்லை. பக்கவாட்டில் பார்த்தால் சிலந்திக்கூடு, பொட்டுப் பொட்டாய்ப் பூச்சிகள்னு தெரியும். :) சில சமயம் எதுவுமே இருக்காது. நினைவு வந்தால் உடனே இருக்கேனேனு குரல் கொடுக்கும். :)
Deleteஇந்தப் பிரச்சனை எனக்கும் உண்டு. மருத்துவரிடம் காட்டின போது கண்ணுக்கு ஆஞ்சியோகிராம் செய்தார்கள். கோளாறு ஏதுமில்லை வயதாகிறதே அதுதான் பிரச்சனை எனக்கு கண்ணில் நிழலாடுவது போல்இருக்கும் படிக்கவே மிகவும் சிரமம் படிப்பது மிகவும் குறைந்து விட்டது. கணினி யில் தொடர்கிறேன் இதுவும் அனுபவமே
ReplyDeleteம்ம்ம்ம், ரஞ்சனியும் சொல்லி இருக்காங்க. சின்ன லேசர் ஆபரேஷன் செய்வாங்களாம். எனக்கு இன்னமும் அந்த நிலைமை வரலைனு நினைக்கிறேன். மற்றபடி யாராக இருந்தாலும் அவங்க அனுபவம் வெளியே வராமல் இருக்காது! ஆகவே நீங்க உங்க அனுபவத்தைத் தாராளமாய்ப் பகிரலாம்.
Deleteகீதா மா. ஒரு பிரச்சினையும் வராது. கண்ணனும் அரங்கனும் பார்த்துப்பார்கள்.
ReplyDeleteஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். எங்களுக்குதான் கஷ்டம்.
நானே நிறைய விலகிட்டேன் இணையத்திலிருந்து.
கண் ,கால் எல்லாம் வீங்கிக் கொள்கிறது.
கால் வீக்கம் இப்போச் சரியா இருக்கு! :) மற்றபடி மத்தியான நேரம் கட்டாயமா உட்காருவேன் முன்பெல்லாம்; இப்போ உட்காருவதில்லை. எதிர் ஃப்ளாட் கண்ணாடிக் கதவுகளில் மேற்கே இருந்து சூரிய வெளிச்சம் பட்டுப் பிரதிபலிப்பதால் அதீதப் பிரகாசம்! :)
Deleteகண் விஷயம் என்பதால் எதற்கும் இன்னொரு டாக்டரை பார்க்கவும். நான்கு வருடங்களுக்கு முன்னர், ஒரு பிரபல ஆஸ்பத்திரியில் எனக்கு இரண்டு கண்களிலும் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றார்கள். நான் எதற்கும் இன்னொரு டாக்டரை பார்க்கலாம் என்று தஞ்சாவூரில் ஒரு நம்பிக்கையான டாக்டரைப் பார்த்தேன். இரண்டு கண்களும் நன்றாக இருப்பதாகவும் , ஒரு கண்ணில் மட்டும் காட்ராக்ட் தொடங்கி இருப்பதாகவும், அதுவும் ஆபரேஷன் எதுவும் இப்போதைக்கு தேவையில்லை என்றும் சொல்லி, ஒரு சொட்டு மருந்தை மட்டும் எழுதிக் கொடுத்தார். நான்கு வருடங்கள் ஓடி விட்டன. ஆபரேஷன் ஏதும் இல்லை. மறுபடியும் அவரைப் போய் பார்க்க வேண்டும்.
ReplyDeleteசென்னையிலே எனக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது ஐயா! இப்போ இல்லை, பத்து வருடங்களுக்கு முன்னரே காடராக்ட் எனச் சொல்லி ஆபரேஷன் செய்யணும்னு சொல்லிட்டாங்க. வழக்கமான கண் மருத்துவர் சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அவர். அவர் ஊரில் இல்லை. அந்தச் சமயம் இப்படிச் சொன்னாங்க. சில நாட்கள்/மாதங்கள்(?) கழிச்சுப் பழைய மருத்துவரிடம் காட்டினப்போ பவர் தான் அதிகம் ஆகி இருக்குனு சொல்லிக் கண்ணாடியை மட்டும் மாத்தச் சொன்னாங்க. அதுக்கப்புறமா அவ்வப்போது பவர் சோதனை மட்டும் செய்து கொண்டு கண்ணாடியை மாத்திக் கொள்கிறேன். இப்போவும் எல்லாச் சோதனைகளும் நடந்தது. இந்த மருத்துவர் மிகவும் நன்றாகவே பார்க்கிறார். தேவைப்பட்டால் இன்னொரு மருத்துவரையும் பார்க்கிறேன். நன்றி.
Deleteகண்கள் முக்கியம்
ReplyDeleteகண்களில் பார்வை முக்கியம்
கொஞ்ச நாள் கணினியை
தவிருங்கள் சரியாகிடும்....
ம்ம்ம்ம், இப்போவெல்லாம் நிறையக் குறைச்சாச்சு! :) நன்றி.
DeleteTake care. These floaters may disappear soon. Kannula prachanai nna Koorathazhwar sannithi la vendikkalaam !
ReplyDeleteவாங்க ஷோபா எனக்கும் அதே தான் நினைவில் வந்தது. வேண்டிட்டும் இருக்கேன். மற்றபடி எனக்காக ரேவதி சமயபுரம் மாரியம்மனையும், பார்வதினு ஒரு சிநேகிதி கண்ணுடைய நாயகியையும் பிரார்த்திச்சிருக்காங்க. நானும் பிரார்த்திச்சுட்டு இருக்கேன். விரைவில் சரியாகும்னு நினைக்கிறேன். நன்றி.
Deleteஆமா, ஏழரையை ரங்கன் தான் பார்த்துக்கணும். கவலை எல்லாம் இல்லை. மத்தவங்களுக்கும் சிரமம், நமக்கும் சிரமம்னு ஆகிடாம இருக்கணுமேனு கவலை! :) மற்றபடி ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி.
ReplyDeleteகண்களை ஒப்படைத்துவிட்டீர்கள் அரங்கனிடம்; கவலையில்லை.
ReplyDeleteஇருப்பினும் கணினி நேரத்தை குறைத்துக்கொள்வதும் நல்லதுதான். அதற்காக ஒரேயடியாக ஒதுங்கிவிடாதீர்கள்.அவ்வப்போது எட்டிப் பார்த்துக்கொண்டிருங்கள்!
வாங்க ஏகாந்தன்! ஒரேயடியா ஒதுங்க முடியலை! அவ்வப்போது வந்து கொண்டிருக்கேன். :) பதிவுகள் போடுவது தான் நிறுத்தி வைச்சிருக்கேன். :)
Deleteகவலையே வேண்டாம். எனக்கும் உண்டு. இதோ கீழே ஸ்ரீராமுக்கும் உங்களும் ஆன பதில்
ReplyDeleteகீதா சகோ...ஸ்ரீராம் எனக்கும் ப்ளாக் ஸ்பாட்ஸ் இடது கண்ணில். நான் இனிமையானவள் என்பதால்..அதுவும் நான் கன்ட்ரோல் என்றாலும் என்றைக்காவது கல்யாணச் சாப்பாடு (வித் அவுட் சர்க்கரை சாமான்கள்) சாப்பிடும் போது கூடக் குறைய கொஞ்சம் ஏறி பாதித்திருக்கலாம் என்று சொல்லிவிட்டார்கள் கோபாலபுரத்துக்காரர்கள். கோபாலபுரம் என்றதும் வேண்டாதது நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல...ஹிஹி..ரெட்டினா, கார்னியா பாதிக்கப்படவில்லை எனவே நோ லேசர் சர்ஜரி. இதற்கு, இனிமையானவர்கள் என்றால், டயாபட்டிக் ரெட்டினோபதி என்று பெயர் வைத்திருக்கிறது மருத்துவ உலகம். பார்வை எல்லாம் பாதிக்கப்படவில்லை அரைக்கிழவி ஆனதால் ரீடிங்க் க்ளாஸ் மட்டுமே.. எனவே எனக்கு வாசிப்பதில், தட்டுவதில் எல்லாம் பிரச்சனை இல்லை. கண் சோர்வும் இல்லை என்பதால் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்.
கீதா சகோ, கண் ரெஸ்ட் எடுட்துக் கொள்ளத் தோன்றினால் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் இது பாதிக்காது. நீங்கள் இனிமையானவர்தான். ஆனால் அந்த "இனிமையானவர்" என்றால் அது ரெட்டினா பக்கத்தில் மூவ் ஆகாமல் பார்த்துக் கொண்டால் போதும் அப்படியும் பாதித்தால் லேசர் இருக்கு..ஆனால் எதற்கு வம்பு??!!!!!!
பார்த்துக் கொள்ளுங்கள்....அவனிடம் ஒப்படைத்துவிட்டீர்கள் அப்புறம் என்ன..
கீதா
எனக்கும் சர்க்கரை பார்டரில் இருக்கு! ரெடினா பாதிப்பு இல்லைனு சொல்லி இருக்காங்க. வாசிப்பதில், தட்டுவதில் பிரச்னை இல்லை என்றாலும் கண்ணிற்கு ஓய்வு கொடுத்து வருகிறேன். ரெடினா பக்கம் மூவ் ஆகாமல் எப்படிப் பார்த்துக்கிறதுனு தான் தெரியலை! :) எல்லாமும் அரங்கன் கைகளில்! :)
Delete