கத்தரிக்காய் பலருக்குப் பிடிக்காது. சிலருக்கு உயிர். எனக்கும் அப்படித் தான். கத்தரிக்காயில் என்ன சமைத்தாலும் பிடிக்கும். ஆனால் அது குழைவாக இருக்கணும். சில கத்தரிக்காய்கள் குழையாது! ஒரு மாதிரி துவர்ப்பாக விதைகளோடு காணப்படும். அப்படிப்பட்ட கத்தரிக்காயைச் சாப்பிடுவது ஒரு தண்டனையாக இருக்கும். இப்போ பிடி கத்திரிக்காய் எனப்படும் ஹைப்ரிட் கத்திரிக்காய் (மரபணு மாற்றப்பட்டது) வர ஆரம்பிச்சாச்சு. சென்னையில் கத்திரிக்காய் ரொம்பப் பளபளப்பாக நல்ல ஊதாக்கலரில் இருந்தால் வாங்க யோசனையாக இருக்கும். இங்கே ஶ்ரீரங்கம்/திருச்சியில் நல்லவேளையாக நாட்டுக் கத்திரிக்காய்கள் கிடைக்கின்றன. அதிலும் கொஞ்சம் வெளிர் பச்சையாக இருப்பது உள்ளே விதை இல்லாமல் இருக்கும். மதுரையில் வெள்ளையாகவே கத்திரிக்காய் (கம்மாக் காய் என்பார்கள்) கிடைக்கும். அதிலே கூட்டும் செய்து கூடவே மோர்க்குழம்பும் இருந்தால் சொர்க்கம் பக்கத்தில்! இங்கே வந்த சில, பல ஆண்டுகள் கத்திரிக்காயை அதிகம் சமைக்க முடியாது. 144 தடை உத்தரவெல்லாம் இருந்தது. குழந்தைங்க பிறந்ததும் அவங்களுக்குப் பிடிக்கிறது என்பதால் வாங்க ஆரம்பித்தோம். அப்போவும் ரங்க்ஸுக்கு அரை மனசு தான். ஆனால் பாருங்க இப்போக் கத்திரிக்காய் தான் அவரோட உயிராக மாறி விட்டது! :P :P :P வேண்டாம்னு சொன்னாலும் கேட்கிறதில்லை. நேத்து தினமலர் பெண்கள் மலரில் கத்திரிக்காய் சாதம் கொஞ்சம் வித்தியாசமாக் கொடுத்திருந்தாங்க. உடனே நேத்துச் சாயந்திரமே கத்திரிக்காய் வாங்கி வந்தாச்சு. அந்தச் சாதம் பண்ணுனு உத்தரவு. மீற முடியுமா? :P :P :P :P ஆகவே இன்னிக்கு அதான் பண்ணினேன். எப்படிப் பண்ணறதுனு கேட்கிறீங்களா?
நான்கு பேருக்கென்றால் ஒரு ஆழாக்கு அரிசி அல்லது ஒரு கிண்ணம் அரிசி, சமைத்துத் தயாராக ஆறவிட்டு நல்லெண்ணெய், அரை டீஸ்பூன் உப்புச் சேர்த்துக் கலந்து வைக்கவும்.
ஒண்ணும் பெரிய விஷயமில்லை! ஆட்கள் இருப்பதற்குத் தக்கவாறு கத்திரிக்காய் கால் கிலோவில் இருந்து அரைகிலோ வரை தேவைப்படும். நாங்க ரெண்டு பேர் தானே! நடுத்தரமான அளவுக் கத்திரிக்காய் ஒன்றே ஒன்றே. பெரிய வெங்காயத்திலே சின்னதாக இரண்டு. இரண்டையும் நீளமாக நறுக்கிக் கொண்டேன்.
வறுத்துப் பொடிக்க: லவங்கப்பட்டை, கிராம்பு, ஒரு ஏலக்காய் எல்லாம் வறுத்துப் பொடித்தால் அரை டீஸ்பூன் பொடி போதும். சோம்புப் பொடி அரை டீஸ்பூன்(அவங்க சொல்லலை, நான் சேர்த்தேன்.)
தாளிக்க
சமையல் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு, உ.பருப்பு, க.பருப்பு தலா ஒரு டீஸ்பூன். தேவையானால் வேர்க்கடலை இரண்டு டீஸ்பூன் போட்டுக்கலாம்.
மேலே சொன்ன ஒரு கத்திரிக்காய் அளவுக்கு ஒரு வற்றல் மிளகாய், ஒரு பச்சை மிளகாய்க் கீறிச் சேர்த்தேன். கருகப்பிலை, பெருங்காயம்(தேவையானால்), மஞ்சள் தூள் சேர்த்தேன். தாளிதம் எல்லாம் பக்குவமாக ஆனதும்
வெங்காயத்தைப் போட்டு வதக்கினேன். வெங்காயம் சுருண்டு வருகையில் கத்திரிக்காயைப் போட்டுச் சுருள வதக்கணும். கத்திரிக்காய் அரை வேக்காடு வெந்ததும் தேவையான உப்புச் சேர்க்கணும். உப்புச் சேர்த்து நன்கு கத்திரிக்காய் வெந்ததும், மசாலாப்பொடியையும் சேர்த்துவிட்டுப் பச்சைக் கொத்துமல்லி சேர்க்கவும். ஆற வைத்த சாதத்தில் கொட்டிக் கிளறி எலுமிச்சம்பழம் அரை மூடி பிழியவும். அல்லது எலுமிச்சைச் சாறு தேவையான அளவுக்குச் சேர்க்கவும். தொட்டுக்க எந்தப் பச்சடி வேண்டுமானாலும் ஓகே!
இதுக்கு அநேகமா எக்கச்சக்கப் பார்வையாளர்கள் வருவாங்கனு நினைக்கிறேன். மொக்கைக்குத் தானே அதிகமா வராங்க! :P:P:P:P:P:P:P:P:P:P
வந்துட்டேன். ஆஜர்!
ReplyDeleteஹாஹா, முத முதலா ஆஜரா? நீங்களும் கத்திரிக்காயின் ரசிகையா? :)
Deleteஉங்கள் பக்குவம் என் வீட்டில் வருமா என்று தெரியவில்லை...
ReplyDeleteவாங்க டிடி, வரும் வரும், நல்லாவே வரும்! முயன்று பார்க்கச் சொல்லுங்க! :)
Deleteசின்ன கத்திரிக்காய் கறி உரைப்பா பண்ணி, வெச்சுண்டு,
ReplyDeleteதனியா கொஞ்சம் நெய்யிலே மிந்திரி பருப்பு ப்ரை பண்ணி,அதோட கலந்து மிக்ஸ் பண்ணி,
கடைசிலே கொஞ்சம் சூடா சாதத்தைக் கலந்து
சாப்பிட்டா ஜோர் ஜோர்.
கொத்தமல்லி துகையல் சைடு டிஷ். கொஞ்சமா நேந்திர வறுவல், இல்லேன்னா சேனைக்கிழங்கு வறுவல்,
சுப்பு தாத்தா.
அதிலும் சாதம் கலந்து சாப்பிடறதுண்டு சு.தா. அதுவும் நல்லாத் தான் இருக்கும். எனக்கென்னமோ நேந்திரங்காய் வறுவல் அவ்வளவாப் பிடிக்காது! நம்மூர் வாழைக்காய் வறுவல் போல் வராது! :)
Deleteகத்தரிக்காய்... வேஏஏ... நா வரலை. நா இங்கே வரலை! என்ன மொக்கை போட்டாலும் வரலை.
ReplyDeleteஹிஹிஹி, வந்துட்டு சமாளிப்ஸுக்குக் குறைச்சல் இல்லை! :P :P :P :P :P :P நீங்க ஶ்ரீரங்கம் வந்தால் கத்திரிக்காயிலேயே சாம்பார், ரசம், சாதம், தொட்டுக்கக் கறி, கூட்டு எல்லாமும் தயாரா இருக்குமாக்கும்! :))))
Deleteகத்தரிக்காய் எனக்கும் பிடிக்கும். தஞ்சாவூரில் நான் பார்த்த கத்தரிக்காய், அதன் ருசி அளவு அப்புறம் நான் வேறெங்கும் ருசிக்கவில்லை! வெள்ளைக் கத்தரிக்காய் ருசிதான். ஆனால் அதன் நிறம் காரணமாக அரை மனதோடுதான் சாப்பிடுவேன்!
ReplyDeleteஆ... கத்தரிக்காய் சாதமா? சூப்பர்?
ஹிஹிஹி, நீங்க தான் "திங்க"க்கிழமை போடுவீங்க! நாங்க எல்லா நாளும் போடுவோமே! வெள்ளைக் கத்திரிக்காய் மதுரை தவிர மற்ற ஊர்களில் ருசியாக இருந்து பார்க்கலை! :(
Deleteபுதுவிதமான கத்திரிக்காய் சாதம் தான்.
ReplyDeleteசெய்து பாருங்க கோமதி அரசு!
Deleteஎலுமிச்சை பிழிவது தவிர, மற்றும் ஏலக்காய் இல்லாமல் மற்றவை டிட்டோ. செய்வதுண்டு..இப்படியும் செய்துட்டா போச்சு..
ReplyDeleteஇப்போ இங்கு பி டி கத்தரிக்காய் ரொம்ப வருது. நான் வெளிர் வைலட் கலரில் ஒல்லியாக நீள நீளமாக வருமே அதை வாங்குவேன். வரி வரியாய் பி டி. வெளிர் பச்சை நீளமாக கேரளத்து வழுதலைங்ஞா வாங்குவதுண்டு..
குறிப்பெடுத்தாச்சு...
ம்ம்ம் பிடி கத்திரிக்காய் தான் சென்னையில் அதிகம் காண முடிகிறது! :( கேரளத்து வழுதுணங்கா எப்படி இருக்கும்னு தெரியலை! :)
Deleteஎலுமிச்சை பிழிவது தவிர, மற்றும் ஏலக்காய் இல்லாமல் மற்றவை டிட்டோ. செய்வதுண்டு..இப்படியும் செய்துட்டா போச்சு..
ReplyDeleteஇப்போ இங்கு பி டி கத்தரிக்காய் ரொம்ப வருது. நான் வெளிர் வைலட் கலரில் ஒல்லியாக நீள நீளமாக வருமே அதை வாங்குவேன். வரி வரியாய் பி டி. வெளிர் பச்சை நீளமாக கேரளத்து வழுதலைங்ஞா வாங்குவதுண்டு..
குறிப்பெடுத்தாச்சு...
கீதா
செய்து பாருங்க கீதா! நல்லாவே இருக்கும்.
Deleteகத்திரிக்காய் சுத்தமாகப் பிடிக்காது இருந்தாலும் உருளையுடன் மெழுக்கு வரட்டி என்று என் மனைவி சில சமயம் சமைப்பாள் சாப்பிட்டுத்தானேஆகணும் சில நேரங்களில் கத்திரிக்காய் புளியும் சமைப்பாள் வாங்கி பாத் என்கிறார்களே அதுவா இந்த கத்திரிக்காய் சாதம் ?
ReplyDeleteவாங்க ஐயா, வாங்கி பாத் என மஹாராஷ்ட்ராவில் செய்வாங்க. அது வேறே மாதிரி. வித விதமான மசாலா சாமான்கள் (கோடா மசாலா என்று பெயர் அதுக்கு) போட்டு மசாலாப் பொடி தயாரிச்சுச் செய்யணும். வெள்ளை எள் கட்டாயமாய் வேணும். இது ரொம்ப எளிது.
Deleteமாமி,சோம்பு,கரம் மசாலா எப்போ சேர்க்கனும்...
ReplyDeleteகத்தரிக்காய் வதங்கினதும், உப்பு, சோம்புப் பொடி, லவங்கப்பட்டை+கிராம்பு+ஏலக்காய் வறுத்துச் சேர்த்த பொடியையும் சேர்க்கணும். கரம் மசாலா இதுக்குப் போடலை! :)
Deleteஅட...வித்தியாசமான கத்திரிக்காய் சாதம். கத்திரிக்காய் நான் அதிகம் சேர்ப்பதில்லை. ஆனால் கத்திரிக்காய் ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்று படித்த நினைவு. அதனால் அவ்வபொழுது சேர்ப்பதுண்டு. இது மாதிரி முயற்சி செய்து பார்க்கிறேன்.நன்றி கீதா மேடம் வித்தியாசமான ரெசிபியை பகிர்ந்து கொண்டதற்கு.
ReplyDeleteவாங்க ராஜலக்ஷ்மி, செய்து பாருங்க நல்லாவே இருந்தது.
Delete