ஒரு வழியா இந்த வருஷம் சேர்த்தி விட்டாச்சு! ஹிஹிஹி, நம்ம நம்பெருமாளோடத் தான். திடீர்னு எதிர்பாராமல் கிடைச்சது இது! நேத்துத் தான் சேர்த்தி சேவைனு தெரியும். மத்தியானமாப் போனால் நீண்ட வரிசையில் நிற்கணும் என்பதால் வெயில் அதிகம் என்பதால் போக முடியலை. ஆனால் விடிய விடிய சேர்த்தி சேவை நடந்திருக்கிறது. இது தெரிஞ்சிருந்தால் ராத்திரியே போயிட்டு வந்திருக்கலாம். இன்று காலை பூந்தேர் எனப்படும் கோரதம். ஆகவே தேரையானும் பார்க்கலாம்னு காலை எழுந்து குளிச்சுட்டுச் சீக்கிரமா ஆறரைக்கே கிளம்பினோம். தினசரியில் ஏழு பத்துக்குத் தேர் கிளம்பும் என்று போட்டிருந்தது.
படத்துக்கு நன்றி வெங்கட் நாகராஜ்
தேர் கிளம்பும் சித்திரை வீதி கோரத மூலையை அடைந்தால் தேர் மட்டும் தன்னந்தனியாக நிற்க அங்கே போலீஸ்காரங்களைத் தவிர வேறு யாரையும் காணோம். என்னடா இது சோதனை! என்று நினைத்துக் கொண்டு அங்கேயே உட்கார்ந்துக்கலாம்னு போனால் அங்கிருந்த ஒரு மாமி தேர் எட்டு மணிக்கு மேல் தான் கிளம்பும்னு சொன்னார். மீண்டும் திகைப்பு. பின்னர் அங்கிருந்த நண்பர் ஒருத்தரிடம் கேட்டதற்கு மேலச் சித்திரை வீதியில் யாரோ இறந்துவிட்டதால் இன்று தேர் ஒன்பது மணிக்கு மேல் தான் கிளம்பும் என்றும் தான் தொலைபேசியில் அழைப்பதாகவும் சொன்னார். ஆனால் இன்னொருவர் அதற்குள்ளாக வடக்கு வாசலில் தாயார் சந்நிதியில் இன்னமும் சேர்த்தி வைபவம் நடப்பதாகவும், பெருமாள் திருமஞ்சனம் ஆகவில்லை என்றும் அதற்குள்ளாகச் சேர்த்தியைப் போய்ப் பார்க்குமாறும் கூறினார்.
படத்துக்கு நன்றி தினமணி கூகிளார் வாயிலாக!
சரினு வேக வேகமாக வடக்கு வாசலை நோக்கிச் சென்றோம். அங்கே வண்டியை வைத்துவிட்டு உள்ளே சென்றோம். தாயார் சந்நிதி வெளிப் பிரகாரத்தில் இருக்கும் கத்யத்ரய மண்டபம் என்னும் பங்குனி உத்திர மண்டபத்தில் நம்பெருமாள் மிக உயரமான மண்டபத்தில் தாயாருடன் சேர்த்தி கண்டருளினார். கூட்டம் முண்டி அடித்துக் கொண்டு நின்றிருந்தது. கூட்டத்தை விலக்குவார் இல்லை, வரிசையிலும் யாரும் செல்லவில்லை. இப்படி அப்படினு நுழைந்து பார்த்தோம். எப்படியும் செல்ல முடியவில்லை. ஆகவே நம்பெருமாளை நடுவே நின்று பார்க்க வசதியாக நின்று பார்த்து தரிசனம் செய்தோம். இன்னும் திருமஞ்சனம் ஆகவில்லை என்றார்கள்.
திருமஞ்சனம் ஆகித் தேர் கிளம்ப ஒன்பது மணிக்கு மேலாகும் என்றதால் இங்கே வீட்டில் ஆட்களை வரச் சொல்லி இருந்தோம். நாங்கள் அங்கே வெகு நேரம் தங்காமல் கிளம்பிட்டோம். இங்கே வந்த சிறிது நேரத்தில் நன்மனம் வரவு. பத்துவருஷங்களாகப் பழக்கம் ஆன நன்மனம் நான் எதிர்பார்த்திருந்த மாதிரி இல்லாமல் சிறிய வயது இளைஞராக இருந்தார்! அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். சேர்த்திக்காகவே வந்திருக்காராம். நேற்று இரவு எட்டு மணி அளவில் வரிசையில் கடைசியாக ஒன்பதரை, பத்து மணி அளவில் தரிசனம் கிடைக்கப் பெற்றிருக்கிறார். கிட்ட இருந்து தரிசனம் செய்ததால் தன் அலைபேசியில் எடுத்த படத்தை எங்களிடம் காட்டினார். நேற்றிலிருந்து சேர்த்தி தரிசனம் தான் என நினைத்துக் கொண்டேன். பின்னர் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்த நன்மனம் இன்று தேர் பார்த்துவிட்டு மதியம் சென்னை கிளம்புவதாகச் சொல்லி விடைபெற்றார். அவரைச் சரியாக உபசரிக்க முடியவில்லை என்பது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. காஃபி கூடக் குடிக்க மறுத்துவிட்டார். ஶ்ரீரங்கம் வலைப்பதிவர்கள் சந்திப்பின் மூலம் விலாசம் கிடைத்ததாம். 2012 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை இங்கே ஶ்ரீரங்கத்திலேயே அவரும் வசித்து வந்தும் தொடர்பு இல்லாமையால் சந்திக்க முடியவில்லை. இன்று சந்திக்க நேர்ந்ததில் மகிழ்ச்சியே!

ஹைய்யோ!!!! கிடைக்கணும் என்பது கிடைக்காமல் போகாது !!!!
ReplyDeleteஉண்மை. நேற்று இரவு வரை நினைச்சுக்கூடப் பார்க்கலை! :) இன்று எதிர்பாராமல் கிட்டியது!
Deleteபூரி சாப்பிட்டு பூரி போனமாதிரி சேவை செய்து சாப்பிட்டு சேவை செய்தீர்களோ நம்பெருமாளை.
ReplyDeleteஹிஹிஹி,பூரி சாப்பிட்டுக் கொஞ்ச மாதங்கள் ஆகின்றன. சேவை சாப்பிட்டு நம்பெருமாள் சேவையில் மூழ்கியது என்னமோ சரிதான். :)
Deleteஉங்க கண்வழியே நாங்களும் தரிசனம் செஞ்சோம்!
ReplyDeleteஅதுக்குத் தானே உடனுக்குடனே போட்டுடறோம். :)
Deleteஎனக்கு சில வார்த்தைகளுக்குப் பொருள் சரியாகப் புரிவதில்லை அகராதி தேவைப்படுமோ/ அகராதியில் இருக்குமோ. சேர்த்தி. திருமஞ்சனம் குத்து மதிப்பாகத்தான் புரிகிறது முதலில் நன்மனம் . அதுவும் ஒரு வார்த்தையோ என்று எண்ணினேன்
ReplyDeleteதிருவரங்கத்தில் நம்பெருமாளும், தாயாரும் வருஷத்தில் ஒரு நாள் தான் சேர்ந்து இருந்து பக்தர்களுக்குச் சேவை சாதிப்பார்கள். அதைத் தான் சேர்த்தி சேவை என்பார்கள். இது மிக விசேஷமானது! திருமஞ்சனம் என்றால் வைணவ பரிபாஷையில் அபிஷேஹம்! நன்மனம் என்பவர் ஶ்ரீதர் என்னும் பெயருள்ள (என் பத்து வருட கால) இணைய நண்பர்! இன்று சந்தித்தார். :)
Deleteஆஹா ..அருமை ...
ReplyDeleteஎன் அப்பாவும் சேர்த்தி சேவைக்கு போய்ட்டு வந்து இருப்பார் ...
சோ.. படங்களுக்கு waiting .....
படங்களைப் பகிர்ந்து கொண்டு சுட்டி கொடுங்க அநுராதா ப்ரேம். நன்றி.
Deleteநன்மனங்கள் சந்தித்ததில் சந்தோஷம்!
ReplyDeleteதரிசனம் எங்களுக்கும் கிட்டி! உங்கள் ப்ளாக் வாயிலாகவும், அவ்வப்போது ரிஷபன் ஸாரின் முக நூல் படங்கள் வாயிலாகவும்!
ஆமாம், ஃபெப்ரவரியில் ஆரம்பிச்சு ஒரே வலைப்பதிவர்கள் சந்திப்பாகவே இருக்கு. :)
Deleteஅரங்கனும் நாயகியும் உங்களைப் பார்க்க மனம் வைத்துவிட்டார்கள் கீதா.
ReplyDeleteநல்ல மனசுக்கு நல்ல் வாய்ப்பு. தளராமல் அவனை நினைப்பதால் அவன் அழைத்திருக்கிறான்.
நன்மனம் ஸ்ரீதர் சந்திப்பு மகிழ்ச்சி. இந்தத் தோழமைகள் நீடிக்க வேண்டும்.
ஆமாம், வல்லி, உண்மையில் அரங்கன் மனம் வைத்ததால் தான் கிடைத்தது. அவன் அருள் இல்லாமல் நமக்குக் கொடுப்பினை ஏது!
Deleteஉங்கள் வாயிலாக எங்களுக்கும் இனிய தரிசனம் ! இன்று நல்லநாள் ! இனிய நாள் ! எல்லோருக்குமே !!!
ReplyDeleteநன்றி கண்ணா நலமா!
Deleteநன்றி கீதா மேடம்.
ReplyDeleteதங்களையும் சாம்பசிவம் மாமாவையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
திவ்ய தம்பதிகளையும் (நம்பெருமாள் - தாயார்) ஆகர்ஷ தம்பதிகளையும் (கீதா மாமி - சாம்பசிவ மாமா) ஒரே நாளில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
நன்றி நன்மனம். பத்து வருடங்கள் கழிச்சுச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நடுவில் தொடர்பும் இல்லாமல் போய் இப்போது மீண்டும் தொடர்பு கொண்டு சந்திக்கவும் முடிந்ததில் எல்லையற்ற மகிழ்ச்சி!
Deleteநன்மனம் பெற்ற பாக்கியம் அடியேன் பெறவில்லையே!
ReplyDeleteம்ம்ம்ம், நன்மனம் பத்து வருட நண்பர் மோகன் ஜி! விரைவில் நாம் ஹைதையிலேயே சந்திக்க நேரலாம். இன்னமும் முடிவு செய்யவில்லை! :)
Deleteசுவாரஸ்யமான நிகழ்வுகள்...சந்திப்புகள்...நல்லது நடக்க நாளும் கோளும் தேவையில்லையே..நடக்கும் என்றால் நடக்கும்...(ஸ்பாஅ என்ன தத்துவம்..)
ReplyDelete