எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, March 02, 2016

ஹிஹிஹி, ஒரு சின்னப்புள்ளி விபரம்!

மக்கள்ஸ் இதுவரை பார்த்த பதிவுகளிலே அதிகம் பார்வையிடப்பட்ட பதிவுன்னா கடந்த ஒரு மாசத்திலே ஶ்ரீரங்கத்தில் வலைப்பதிவர்கள் சந்திப்புப் பத்தின பதிவு தான்.

இரண்டாம் இடத்தைப் பெறுவது ஒரு இடியாப்பம் புளி உப்புமா ஆகிறது பதிவும்  சோள இட்லியும், குடமிளகாய்க் கொத்சு/கொஸ்து(?)வும் பதிவும் முறையே மூன்று புள்ளிகளில் தங்கள் இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளப் போட்டியிடுகின்றன.

மூன்றாம் இடத்தைப் பெறுவது சோள இட்லியில் செய்த தோசைப் பதிவு!

என்னடா இதுப் புதுமாதிரியானு பார்க்கிறீங்களா? கொஞ்சம் இறுக்கமா இருந்த மனதைத் தளர வைக்க வேண்டிப் போட்டிருக்கேன். எனக்கு நானே ஊக்கப்படுத்திக்கலைனா யார் செய்வாங்க?

அதோட இது வரவுசெலவுக் கணக்கு விபரங்களைக் குறித்து வாதாடும் நேரம். குறைஞ்ச பட்சமா நாம இந்தப் புள்ளி விபரம் கூடக் கொடுக்கலைனா எப்பூடி?

சமீபத்தில் மீண்டும் மீண்டும் நினைத்து நினைத்துச் சிரிக்க வைத்த ஒரு விஷயம் எல்லோரும் எனக்கு என்னமோ எல்லாம் தெரியும், மேதாவினு நினைக்கிறாங்க! என்னை மாதிரி ஒரு அடிமுட்டாள் கிடையாதுனு யாருக்கும் தெரியலை! இந்தக்கொடுமையை எங்கே போய்ச் சொல்ல! :))))

17 comments:

  1. //எல்லோரும் எனக்கு என்னமோ எல்லாம் தெரியும், மேதாவினு நினைக்கிறாங்க! என்னை மாதிரி ஒரு அடிமுட்டாள் கிடையாதுனு யாருக்கும் தெரியலை! //

    இதுபோலச் சொல்லும் துணிவே மேதாவிகளுக்கு மட்டுமே உண்டு. அதனால் நீங்கள் அதிமேதாவி மட்டுமே. பாராட்டுகள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. சரியாப் போச்சு! வைகோ சார்! :(

      Delete
  2. நேக்கு ஒண்ணும் புரியல கேட்டேளா...

    ReplyDelete
    Replies
    1. என்ன புரியணும் ஶ்ரீராம்?

      Delete
  3. முண்டகோபநிஷத்தில் ஷௌநகர் ,குரு ஆங்கிரஸ் -ஐ அணுகி
    ' குருவே எதை தெரிந்துகொண்டால் எல்லாம் தெரிந்தவனாக ஆவேனோ அதை உபதேசியுங்கள் ',, என்று கேட்பதாக வரும் ..
    " Once you realize,you know little,you are on the road to greater Understanding and the implied Humility,makes you still greater "

    மாலி

    ReplyDelete
  4. நேரம் போகாதபோதும் கற்பனை கை கொடுக்காதபோதும் இந்த மாதிரி புள்ளிவிவரங்கள் பார்க்கலாம் மக்கள் எந்த மாதிரி பதிவுகளை விரும்புகிறார்களென்றும் தெரிந்து கொள்ளலாம் பார்வையிட்ட பதிவுகளுக்கும் பின்னூட்டம் பெற்றுத் தரும் பதிவுகளுக்கும் நிறையவே வித்தியாசம் தெரியும்

    ReplyDelete
    Replies
    1. மக்கள் மொக்கைப்பதிவுகளைத் தான் விரும்புகின்றனர் ஜிஎம்பி ஐயா! :) அதிலும் சமையல் பதிவுகள் என்றால் பறக்கின்றன. ஆனால் இதே சமையல் பதிவை என்னோட சாப்பிடலாம் வாங்க பக்கத்தில் போட்டால் அங்கே போணி ஆகிறதில்லை! :)))))

      Delete
  5. புள்ளி வைத்தால் கோலம் போடுகிறவர்கள்கள் புள்ளி விவரம் பற்றி எழுதுறாங்களேன்னு பார்த்தால் கடைசியில் நான் ஒரு முட்டாள் என்று முடிச்சுட்டீங்க. என்னன்னு பார்க்க வந்த நாங்களும் முட்டாள் ஆகி விட்டோம்.

    பைத்தியங்கள் யாரும் பைத்தியம் என்று சொல்வதில்லை. முட்டாள்கள் யாரும் முட்டாள் என்று சொல்வதில்லை (நடிகர் சந்திரபாபு தவிர)

    ஜெயகுமார்

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, எல்லாரையும் போலத் தான் நீங்களும் சொல்றீங்க! :)))) ஆனால் எனக்கு இன்னமும் ஒண்ணும் தெரியாதுனு நினைக்கும் என் கணவர் சொல்வது தான் உண்மைனு நினைக்கிறேன்; நம்பறேன். :))))) கடைசியில் ஒருத்தராவது எனக்கு எதுவும் தெரியாதுனு சொல்ல இருக்கிறாரே!

      Delete
  6. After a long time! Vedha, glad to see you here! Thanks for coming! :)

    ReplyDelete
  7. ஆகா..என்ன ஒரு புள்ளி விவரம் ....

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, நல்லா இல்ல?

      Delete
  8. முயற்சியில் மேதாவி. அசரா உழைப்பில் மேதாவி.
    மொழி பெயர்ப்பில் மேதாவி.
    என்ன உடல் நிலையாய் இருந்தாலும் சலிக்காமல் சமைப்பதில் மேதாவி.
    என் தோழி என்பதில் எனக்குப் பெருமை கீதா.

    ReplyDelete
    Replies
    1. நீங்க வேறே வல்லி! சமைப்பதில் மேதாவி இல்லைனாலும் ஆர்வம் உண்டு. அதை மட்டும் ஒத்துக்கலாம். அதோடு உடல்நிலையைக் குறித்துக் கவலைப்பட்டுக்கறதும் இல்லை என்பதும் சரியே! :)

      Delete
  9. உங்களுக்கு ஒன்றும் தெரியாதா?!! அட அப்ப அதுவும் புள்ளிவிவரத்தில் சேர்த்தியா...இப்படி எல்லாம் சொன்னால் நாங்கள் நம்புவோம் என்று நினைக்கின்றீர்களா??!!! நோ! இது உங்கள் தன்னடக்கம்/அவையடக்கம்! நிறைய விஷயங்கள் தெரிவதால்தான் உங்களால் பலதும் எழுத முடிகின்றது. நீங்களே இப்படிச் சொன்னால் நாங்கள் எல்லாம் என்ன சொல்லுவது???!!

    ஹும் ஒண்ணும் புரியலப்பா...சிவ சிவ

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, நீங்களுமா? சரியாப் போச்சு போங்க!

      Delete