எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, March 10, 2016

கல்கத்தா காளியைத் தரிசித்த அனுபவம்!

பேலூரிலிருந்து கிளம்பி மீண்டும் கல்கத்தா வரும் வழியில் பல இடங்களிலும் சிக்னலுக்காக வண்டி நின்று நின்று ஒரு வழியாக மூன்று மணி நேரத்தில் ராஷ்பிஹாரி அவென்யூ வந்து சேர்ந்தோம்.  நாங்கள் கொஞ்சமானும் கடைத்தெருவைச் சுற்றிப்பார்க்கலாம் என நினைத்தால் வண்டி ஓட்டி நேரே ஓட்டலுக்கு ஓட்டிப் போய் நிறுத்திவிட்டார்.  வலுக்கட்டாயமாக நாங்கள் இறங்கும்படி ஆகிவிட்டது. அவரிடம் பணம் கொடுத்துக் கணக்கைத் தீர்த்துக் கொண்டால், பேலூரில் வண்டியை நிறுத்தியதற்கு பார்க்கிங்கிற்கு 100 ரூபாய் என்று கேட்டு வாங்கிக் கொண்டார். பத்து நிமிஷம் கூட வண்டி அங்கே நிற்கவில்லை. பார்க்கிங்கில் கொடுக்கும் ரசீதும் இல்லை. இதே மாதிரித் தான் தக்ஷிணேஸ்வரத்திலும் நூறு ரூபாய் கொடுக்கச் சொன்னார். அதற்கும் ரசீது இல்லை. மொத்தத்தில் இந்த நாளே வெட்டியாக வீணாகிப் போனது.
கல்கத்தா காளி க்கான பட முடிவு
மறுநாள் கிளம்பவேண்டும்.  அதற்குள்ளாகக் காளி கோயிலுக்குப் போய்விட்டு வந்த தகவலைப் பகிர்ந்து கொள்கிறேன். காளி கோயிலுக்கு நாங்கள் காலையிலேயே சென்று விட்டோம். நாங்கள் தங்கி இருந்த தாராமஹல் ஓட்டலில் இருந்து கிட்டவே இருக்கிறது காளி கோயில். அந்த இடமே காளிகாட் என அழைக்கப்படுகிறது. பாகீரதி நதிக்கரை என்றும் ஹூக்ளி நதிக்கரை என்றும் ஆதி கங்கா நதிக்கரை என்றும் சொல்கிறார்கள். அதே போல் இக்கோயிலின் தல புராணமும் ஒவ்வொரு விதமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இதுவும் ஒரு சக்தி பீடம் என்றவரையில் நிச்சயமாய்த் தெரியும். நம் அனைவருக்கும் தெரிந்த தாக்ஷாயணி நெருப்பில் வீழ்ந்த கதையில் தாக்ஷாயணியைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு ருத்ர தாண்டவம் ஆடியபோது அவள் உடலைச் சக்ராயுதத்தால் விஷ்ணு 51 துண்டுகளாக வெட்டி பூமியில் வீழ்ந்த கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதில் அம்பிகையின் வலக் கால் விரல்கள் வீழ்ந்த இடம் இது தான் என்கின்றனர். ஆகவே இதுவும் ஒரு சக்திபீடமே!

ஆனால் காளிகாபுராணத்தின்படி இது தேவியின் முகம் வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.  தற்போதைய கோயிலின் அமைப்பு 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றாலும் பழங்காலத்தில் கங்காசாகரில் கங்கை வங்கக் கடலுடன் கலக்கும் இடத்தில் கபில முனிவரைத் தரிசிக்க வந்த காபாலிக சந்நியாசிகளுக்கு விரல்கள் வடிவில் தென்பட்ட அதிசயப் பாறை காளியின் வடிவில் காட்சி அளிக்க அந்தப்பாறையை அங்கேயே ஸ்தாபித்து வழிபட்டனர் என்கின்றனர். அது தான் இப்போதிருக்கும் காளி சிலை என்றும் சொல்லப்படுகிறது. இன்னொரு கதையில் ஆத்மாராம் என்னும் காளி பக்தன் காளியை ஆராதித்து பாகீரதி நதிக்கரையில் ஜெபம் செய்கையில் மின்னலைப் போன்றதொரு ஒளிக்கதிர் தோன்றியதாம். வியந்த ஆத்மாராம் ஒளி வந்த இடத்தைப் பார்த்தபோது விரல்கள் போன்ற அமைப்பில் கல் ஒன்று கிடைத்தது. அன்றிரவு அவன் கனவில் இது தாக்ஷாயணியின் கால்விரல்கள் என்பதையும் தெரிந்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அதை எடுத்து வந்து வழிபாடுகள் செய்து பிரதிஷ்டையும் செய்தான். அந்த இடமே கல்கத்தா காளி கோயிலாயிற்று என்கிறார்கள்.

கல் கிடைத்த இடத்துக்கு அருகிலேயே கிடைத்த சிவலிங்கத்திற்கு நகுலேஷ்வர் என்று பெயரிட்டுக் காளி சிலையின் அருகிலேயே வைத்து வழிபட்டான். விரல்கள் போன்று கிடைத்த கல் பின்னால் ஒரு வெள்ளிப் பேழையினுள் வைக்கப்பட்டு இப்போதைய காளி சிலையின் அருகே வடகிழக்கு மூலையில் வைக்கப்பட்டுள்ளது. காலை வேளையில் சென்றதால் கூட்டம் அதிகம் இல்லை. நாங்கள் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து டாக்சியில் சென்றோம். செல்லும்போதே ஓட்டுநர்  கோயில் வண்டி நிறுத்தும் இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ளதாகவும், வண்டி உள்ளே வராது என்றும் சொல்லி விட்டார்.  எல்லா இடங்களிலும் இப்படித் தானே இருக்கிறது என நினைத்துக் கொண்டோம். டாக்சிக்காரர் மீட்டர்படியே பணம் வாங்கிக் கொண்டார். நாங்களும் இறங்கிக் கோயிலுக்கு நடந்து சென்றோம்.

வழியில் பண்டாக்கள் இருந்தாலும் அதிகம் தொந்திரவு செய்யவில்லை. முன்னெச்சரிக்கையாகக் கையில் அதிகப் பணமும் வைத்துக் கொள்ளவில்லை. வரிசையில் நின்று காளியைப் பார்த்தோம். குறுக்கு வழியில் முக்கியமான மனிதர்கள் வந்து தரிசனம் செய்து கொண்டிருந்தனர். ஆகையால் நடு நடுவில் பொது தரிசனம் சற்று நேரம் நிறுத்தப்படுகிறது. என்றாலும் அதிக நேரம் காக்காமல் நாங்கள் அரை மணி நேரத்தில் சந்நிதிக்கு வந்து விட்டோம். காளிக்கு அருகே செல்கையில் தான் மீண்டும் நிறுத்திவிட்டார்கள். என்றாலும் காளிக்கும் எங்களுக்கும் இடையே ஐந்தடி தூரத்திற்குள் தான் என்பதால் காளியை நன்கு தரிசித்துக் கொண்டோம். இங்கேயும் கர்பகிரஹம் போன்ற அமைப்பு இல்லை. ஒரு அறையிலேயே ஓர் மூலையாகப் பார்த்துக் காளியைப் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். தரிசனம் செய்யும் இடத்துக்கு நேராக ஓர் வாயில். அந்த வாயில் வழியாக நேரே முக்கியஸ்தர்கள் வந்து நின்று கொண்டு தரிசனம் செய்துவிட்டுப் பிரசாதங்கள் வாங்கிச் செல்கின்றனர். நமக்கும் காளிக்கும் இடையே இரண்டரை அடி தூரத்துக்குள் தான் இருக்கும். ஆகவே பண்டா கவனிக்காமல் இருக்கையில் கையை நீட்டிக் காளியின் இடக்கையைத் தொட்டுவிட்டேன். அதற்குள்ளாக பண்டா பார்த்துவிட்டார். கையைத் தட்டிவிட்டார். என்றாலும் தொட்டது சந்தோஷமாக இருந்தது. பண்டா தட்டி விட்டதை லக்ஷியம் செய்யாமல் வெளியே வந்தேன். 

17 comments:

  1. தொட்டுப் பார்ப்பது தடை செய்யப் பட்டிருக்கிறது என்றால் தொடலாமா? :)) எப்படியோ தரிசனம் செய்து விட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, எனக்கு முன்னிருந்தவர் காலைத் தொட்டுக் கண்களில் வைத்துக் கொண்டார். நானும் அப்படித் தான் செய்ய நினைத்தேன். ஆனால் அப்போப் பார்த்து பண்டா கால்களிலிருந்து பூக்களை எடுத்துட்டு இருந்ததாலே கையைத் தொட்டுக் கொண்டேன். கண்களில் தானே வைத்துக் கொண்டேன். அதனால் காளி கோவிச்சுக்கல்லாம் மாட்டாள்! கல்கத்தா போனதில் உருப்படியா நடந்தது இந்த இரு காளிகளின் தரிசனம் மட்டுமே! :)

      Delete
  2. ஆகவே பண்டா கவனிக்காமல் இருக்கையில் கையை நீட்டிக் காளியின் இடக்கையைத் தொட்டுவிட்டேன்./// கர்ர்ர்ர்ர்! ச்சும்மா இருக்க முடியாதா?

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹிஹி, முடியலையே தம்பி! சும்மா இருக்க முடிஞ்சால் தான் பிரச்னையே இல்லையே! :) "சும்மா" இருத்தல் பத்தின கதை தெரிஞ்ச நீங்களே இப்படிக் கேட்கலாமா? :))))

      Delete
    2. சொன்னதெல்லாம் விழலுக்கு இறைத்த நீர்ன்னு இப்ப தெரியறது!

      Delete
    3. hihihihihi லூஸுல விடுங்க தம்பி, நானே ஒரு அரை லூஸு! :))))))

      Delete
  3. காளி உக்கிரமானவளா சாந்த ஸ்வரூபியா?

    ReplyDelete
    Replies
    1. இரண்டுமே ஐயா! தேவையான நேரத்துக்கு உக்கிர சொரூபியாக இருக்கும் காளி பக்தர்களுக்காக சாந்த சொரூபியாக மாறுகிறாள்.

      Delete
  4. நல்ல காளி தரிசனம் ...

    ReplyDelete
    Replies
    1. நன்றி அநுராதா ப்ரேம்!

      Delete
  5. ஆஹா காளியைத் தொட்டீர்களா.
    கொடுத்தவைத்த கைகள். கீதா மிக மகிழ்ச்சி.
    இத்தனை சங்கடங்களுக்கு நடுவில் காளி தரிசனம் கிடைத்தது
    அற்புதம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், வல்லி, பண்டரிபுரத்தில் பாண்டுரங்கன் காலடியில் நம் தலையை வைத்து நமஸ்கரிக்க முடியும். இங்கேயும் கிட்டத்தட்ட அவ்வளவு கிட்டேப் பார்த்தாலும் தொட அநுமதி இல்லை! :)

      Delete
  6. அன்புடையீர் வணக்கம்1 என்னுடைய வலைத்தளத்தில் ‘தொடரும் தொடர் பதிவர்கள்’ என்ற வலைப்பதிவினில் உங்களது வலைத்தளம் பற்றி குறிப்பிட்டுள்ளேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா, நான் அடிக்கடி தங்கள் வலைப்பக்கம் வருவதில்லை என்றபோதிலும் நீங்கள் என்னை அடிக்கடி நினைவு கூர்வது தங்கள் அன்பான மனதையும் பெருந்தன்மையையும் காட்டுகிறது. இனியாவது அடிக்கடி வர முயலவேண்டும். ஆனால் இப்போதெல்லாம் என் நேரம் என் கைகளில் இல்லை! :)

      Delete
  7. காளியையும் பார்த்து விட்டர்கள்!சபாஷ்!

    காளி கையை நீங்கள் தொட்டீர்கள்.
    உங்கள் கையை பாண்டா தொட்டு தட்டி விட்டார்.
    அப்போ நீங்களும் காளிபோல அவருக்கு தோன்றி இருக்க வேண்டும்.
    சரியாக்கா??

    ReplyDelete
  8. காளிப்கற்றிய விவரங்களுடன் காளி தரிசனம் அருமை.

    ReplyDelete
  9. காளி கோயில் பற்றிய விவரங்கள் அருமை. துளசி : போனதில்லை...

    கீதா: எப்போதோ சின்ன வயதில் போன நினைவு. அங்கு அத்தை இருந்தார். அதன் பின் போனதில்லை.

    ReplyDelete