குழப்பம் என்று ஜிஎம்பி ஐயா அவர்களும் நோக்கம் புரியவில்லை என்று எங்கள் ப்ளாக் ஶ்ரீராமும் சொல்கின்றனர். என்னுடைய நோக்கம் பெண்கள் வேலை பார்ப்பதில் உள்ள கஷ்ட நஷ்டங்களை மட்டும் சொல்வது அல்ல. முக்கியமாய் ஐடி வேலை செய்யும் பெண்கள் படும் சிரமங்களையும் எடுத்துக் காட்டுவது தான். ஆனால் விபரமாகச் சொல்வதில் சில தர்மசங்கடங்கள் இருப்பதால் தொட்டும் தொடாமலும் சொல்லிச் சென்றிருக்கிறேன். ஆனாலும் எனக்குத் தெரிந்தவரையில் ஐடியில் வேலை பார்க்கும் பெண்களை அவர்களின் வேலைத்தகுதியை விட அவர்கள் அழகையே தகுதியாகக் கொண்டு எடுக்கிறார்களோ என்று எண்ண வைக்கிறது.
ஏனெனில் ஒரு சில ஐடி கம்பெனிகளில் வேலைக்குச் சேர்க்கையில் நிரப்பச் சொல்லும் விண்ணப்பப் படிவங்களில் அந்தப் பெண்கள் அழகு நிலையம் சென்று தங்கள் அழகை மேம்படுத்திக் கொள்வார்களா என்றும் அப்படி எனில் அதற்கு மாதம் செலவு செய்யும் தொகை எவ்வளவு என்றும் கேட்பதாக ஒரு தினசரியில் படித்தேன். அவங்க பார்க்கப் போகும் வேலைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? ஒன்றுமில்லை. பார்க்க அழகாக இருக்கும் பெண்களை வைத்து வாடிக்கையாளர்களைக் கவர்வது ஒன்றே அந்தக் கம்பெனியின் நோக்கம் என்று தெள்ளத் தெளிவாகப் புரிகிறது அல்லவா? இதைச் சொல்லி இருப்பது பிரபலமான தமிழ் தினசரி ஒன்றே. அதுவும் சமீப காலங்களில் மிகப் பிரபலமாக இருக்கும் தினசரி!
அப்படி அழகு நிலையம் செல்லும் பெண்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி கொடுக்கையில் வாடிக்கையாளர்கள் முக்கியமாய் ஆண் வாடிக்கையாளர்கள் எப்படிப் பேசினாலும், இரட்டை அர்த்தத்தில் பேசினாலும் அந்தப் பெண்கள் பொறுத்துப் போக வேண்டும் என்று பயிற்சி கொடுக்கப்படுகிறதாகச் சொல்கின்றனர். இது பெண்ணுரிமையா? பெண்களைக் கேவலப்படுத்துவது என்றே எனக்குத் தோன்றுகிறது. அதோடு இத்தகைய அழகு நிலையம் சென்று தங்கள் அழகை மேம்படுத்திக் கொள்ள ஆயிரங்களில் இந்தப் பெண்கள் செலவிட வேண்டி இருக்கிறது. வாங்கும் சம்பளத்தில் அழகு நிலையத்துக்கே சம்பளத்தில் பாதி போய் விடும். பின்னர் மிச்சம் எங்கிருந்து வரும்? ஆனால் இப்போதெல்லாம் அழகு நிலையம் செல்லவில்லை எனில் அந்தப் பெண்ணுக்கு மதிப்பே இல்லை.
கட்டாயமாய் அழகு நிலையம் சென்று முகத்தை ப்ளீச் செய்து கொண்டு புருவங்களைத் திருத்தி, தலை மயிரை விரித்துப் போட்டுக்கொள்ளும் வண்ணம் வெட்டி ஒழுங்கு செய்து கொண்டு வந்தால் தான் அந்தப் பெண்ணுக்கு மரியாதையே கிடைக்கும். வேலையும் கிடைக்கும். ஆனால் இத்தகைய பெண்ணின் பெற்றோர்கள் தங்கள் பெண்களைக் கண்டிக்கவே முடியாது. ஏனெனில் அவர்கள் பெண்ணின் சம்பளத்தைச் சார்ந்திருப்பார்கள். பெண் அதிகம் சம்பாதிப்பாள். அவள் அதிகம் சம்பாதிக்க ஆரம்பித்த பின்னால் ஆண்களோடு சேர்ந்து வெளியே செல்வதும் ஊர் சுற்றுவதும், எல்லாவற்றுக்கும் மேல் சில பெண்கள் நாகரிகம் என்ற பெயரில் மது அருந்துவதும் டிஸ்கோ நடனங்களுக்குச் செல்வதும் வார இறுதிகளில் பார்ட்டி என்று நடு இரவு தாண்டியும் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதுமாக இருக்கின்றனர். இதைத் தட்டிக் கேட்கும் பெற்றோருக்கு மதிப்போ மரியாதையோ கிடைக்காது.
தன் சம்பாத்தியத்தை எத்தனை பெண்கள் ஒழுங்காகக் குடும்பத்துக்குக் கொடுப்பார்கள் என்பதை எண்ணினோம் ஆனால் அதுவும் ஒரு சில பெண்களே இருப்பார்கள். பெற்றோரின் சிரமங்கள், குடும்பக் கஷ்டங்கள் புரிந்து கொண்ட பெண்களே தங்கள் சம்பளத்தைப் பெற்றோரிடம் முழுமையாகக் கொடுப்பார்கள். மற்றவர்கள் தனக்கு என ஒதுக்கிக் கொண்டு கொடுக்கலாம். அல்லது குடும்பத்துக்கு இவ்வளவு தான் என்று கணக்குப் பண்ணியும் கொடுக்கலாம். அது அந்தப் பெண்ணின் இஷ்டம். இதே பெண் கல்யாணம் ஆகிப் போனால் கணவனின் சம்பளத்தைத் தனக்குச் சொந்தம் என்று எண்ணுவாள். ஆனால் தன் சம்பாத்தியத்தைக் கணவனுக்கும் சொந்தம் என்று எண்ணவும் மாட்டாள். கொடுக்கவும் மாட்டாள். தனக்கு எனத் தனியாகத் தான் வைத்துக் கொள்வாள்.
முரட்டுக் கணவனாக இருந்தால் அவளை மிரட்டிப் பணத்தைப் பிடுங்கிக் கொள்ளலாம். நல்ல மனைவியாக இருந்தால் அவளாகவே தன் சம்பளத்தையும் குடும்பத்தில் போடலாம். ஒத்துப் போகிறவர்களாக இருந்தால் இரு சம்பளங்களையும் சேர்த்துக் கணக்குப்போட்டுச் சேமிப்பைப் பொதுவில் வைத்து மற்றச் செலவுகளைச் செய்யலாம். ஒருவரை ஒருவர் கலந்து ஆலோசித்துச் செலவு செய்யலாம். ஆனால் இதற்கெல்லாம் மனப்பக்குவம் நிறைய வேண்டும். பொதுவாக ஆண் தன் சம்பளத்தைத் தனது என எண்ண மாட்டான். திருமணம் ஆகும் முன்னர் பெற்றோரையும் உடன் பிறந்தவர்களையும் காப்பாற்றி வந்தாற்போல் திருமணம் ஆனதும் மனைவி, மனைவி வழி உறவினர்களுக்குச் செய்வதைப் பெரிய விஷயமாக எண்ண மாட்டான். ஒரு சில ஆண்கள் மனைவி வழி உறவினருக்குச் செய்வதைப் பெரிய விஷயமாக எண்ணலாம். பொதுவாக அப்படி இருக்காது. ஆனால் பெண் தன் பக்கம் தன் பிறந்தகத்து உறவினர்களை விடப் புக்ககத்து உறவினர்களையும் அவர்களுக்குச் செய்வதையும் கொஞ்சம் இல்லை நிறைய யோசித்துத் தான் செய்வாள். இதில் விதிவிலக்கான பெண்களைப் பற்றி இங்கே பேசவில்லை.