எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, May 16, 2016

கொட்டும் மழையில் கடமை ஆற்றியாச்சு!

ஒரு வாரத்துக்கும் மேலே என்னைக் காணலையேனு ஜேகே அண்ணா கேட்டிருக்கார். பதிவுகள் போடுவதைக் கொஞ்சம் நிறுத்திக்கலாம்னு முன்னரே முடிவு பண்ணித் தான் அவ்வப்போது பதிவுகள் போடுகிறேன். ஒரேயடியாக கணினிக்கு அடிமையானதில் இப்போதெல்லாம் படிக்கும் வழக்கமே விட்டுப் போச்சு! :( ஆகவே மீண்டும் படிக்க வேண்டும் என்று தான் கணினி பக்கம் முக்கியமான மடல்கள் பார்க்கவும், முகநூலில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் செய்திகளைப் பார்க்கவும் மட்டும் மொத்தமாய் இரண்டு மணி நேரமே செலவு செய்யும்படி வைத்துக்கொள்கிறேன். தீவிரமாக ஈடுபட வேண்டாம் என்று இருக்கிறேன். எத்தனை நாட்கள் முடியுமோ அத்தனை நாட்கள்! ஆனால் முக்கியமான நண்பர்கள் பதிவுகளையும், எனக்கு மடல் அனுப்பிப் பார்க்கச் சொல்பவர்கள் பதிவையும் பார்த்து விடுகிறேன்.

மூன்று மாதமாக வாட்டி வதைத்துக் கொண்டிருந்த வெயில் கடுமை கொஞ்சம் குறைய ஆரம்பித்தது என்றே சொல்லலாம். இன்னிக்குக் காலையிலே லேசாத் தூற ஆரம்பிச்சது. சரி, சீக்கிரமாப் போய் வாக்கு அளித்துவிட்டு வந்துடலாம்னு கிளம்பினோம். கிளம்பும்போதே வண்டியில் உட்கார்ந்து குடை பிடிக்க முடியவில்லை. காற்று பின்னுக்குத் தள்ளியது.  குடையை மூடிவிட்டே போனோம். பெருந்தூற்றலாக இருந்தது வாக்குச் சாவடியை அடைகையில் பெரிய மழையாக மாறி விட்டது. பூத் ஸ்லிப் வேறே கொடுக்கலையா, எங்களோட அடையாள அட்டையைக் காட்டினால் இப்போப் பேரை எல்லாம் மாத்தி அகர வரிசைப்படி எழுதி இருக்காங்களாம். ஆகவே தேடணும்னு சொன்னாங்க. போன இடைத்தேர்தலிலே இருந்த எண்ணைக் கொடுத்தால் அதுக்குக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் தெருப்பெயரைச் சொல்லித் தெருவின் மேற்குப் பக்கமா, கீழ்ப்பக்கமானு கேட்டு அதற்கான எண்ணை அவங்களே சொல்லிக் கண்டுபிடிச்சுக் கொடுத்தாங்க.

உள்ளே போனால் அங்கிருந்த காவல்துறை ஊழியர் என்னை வரிசையில் நிற்க வேண்டாம், நேரே உள்ளே போங்கனு சொல்ல, நம்ம ரங்க்ஸுக்கு பிபி எகிற, அவரிடம், "நான் அவங்களை விடப் பெரியவன்! என்னை நிற்க வைக்கிறீங்களே!" னு கேட்க அங்கிருந்த எல்லோரும் சிரிக்க நான் கையில் மையை வைத்துக் கொண்டு ஓட்டுப் போட்டே விட்டேன். கடைசியில் நம்ம ரங்க்ஸை உள்ளே இருந்த தேர்தல் அதிகாரி முன்னாடியே வரும்படி அழைச்சிருக்கார். ஆகவே அவரும் நான் ஓட்டுப் போட்ட கையோட தானும் வந்து ஓட்டுப் போட்டுவிட்டார். வந்து தான் காலை ஆகாரமே பண்ணினேன். இன்னிக்குக் கத்திரிக்காயில் நேற்று முகநூலில் பார்த்த மாதிரி கொத்சு பண்ணலாம்னு நினைச்சேன். ஆனால் அதில் வெங்காயம் சேர்க்கலை. நான் வெங்காயம் சேர்த்தேன். மற்றபடி இந்த கொத்சுவுக்குப் பருப்பெல்லாம் போடவில்லை. (ஜேகே அண்ணா, கவனிக்கவும்)  செய்முறை கீழே!

கத்திரிக்காய் நிதானமான அளவில் 2 அல்லது 3
பெரிய வெங்காயம் பெரிதாக இருந்தால் ஒன்று
பச்சை மிளகாய் ஒரு மிளகாயைப் பொடியாக நறுக்கவும்
கருகப்பிலை,
பெருங்காயம்
புளி ஜலம் ஒரு கிண்ணம்
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள்
தாளிக்கத் தேவையான அளவு நல்லஎண்ணெய்
கொத்துமல்லி கடைசியில் தூவ (விருப்பப்பட்டால்)

அதிலே கொத்சுப்பொடிக்கு வறுத்து அரைக்க

 மிவத்தல்,  நான்கு
கொத்துமல்லி விதை ஒரு டேபிள் ஸ்பூன்
ஜீரகம், ஒரு டீஸ்பூன் (இதை மட்டும் எண்ணெயில் வறுக்காமல் வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துக் கொண்டேன்.)
 துவரம்பருப்பு இரண்டு டீஸ்பூன்,
பெருங்காயம்,தேவையான அளவு
 வெந்தயம் அரை டீஸ்பூன்

 மட்டும் போடச் சொல்லி இருக்காங்க.  வெறும் வாணலியில் வறுக்கச் சொல்லி இருந்தாங்க. ஆனால் நான் மறந்து போய் எண்ணெய் ஊற்றி வறுத்துட்டேன். சரி, இப்படியே இன்னிக்கு இருக்கட்டும்னு விட்டாச்சு. மற்றபடி புளி ஒரு  நெல்லிக்காய் அளவு ஊற வைத்துக் கரைத்துக் கொள்ளவேண்டும்.

கடாய் அல்லது உருளியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு மட்டும் போடச் சொல்லி இருக்காங்க. நான் கபருப்பு, உபருப்பு ஒரு சின்ன பமி, கருகப்பிலை, பெருங்காயம் எல்லாம் தாளித்துக் கொண்டேன். வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கிவிட்டுக் கத்தரிக்காயையும் போட்டு வதக்கினேன். கத்தரிக்காய் வதங்கியதும், மஞ்சள் தூள் சேர்த்துப் புளி ஜலத்தை விட்டுக் கொதிக்க விட்டேன். நன்கு கொதித்துச் சேர்ந்து வரும்போது பொடித்த பொடியையும், உப்பையும் சேர்த்தேன். விருப்பப்பட்டால் வெல்லத்தூள் இரண்டு டீஸ்பூன் சேர்க்கலாம். பின்னர் கீழே இறக்கிக் கொத்துமல்லி தூவினேன்.

ரவா இட்லியுடன் சாப்பிட்டோம். கொத்சுவுக்கு எங்க மாமியார் வீட்டில் பாசிப்பருப்பு வேக வைத்துக் கலப்பாங்க. இல்லைனா அதை கொத்சுனே ஒத்துக்க மாட்டாங்க! :) நான் பொதுவா கொத்சுவுக்குப் பருப்புப் போடுவதில்லை என்றாலும் இட்லிக்குக் கொத்சு செய்தால் பருப்புப் போட்டுடுவேன். ஆனால் இன்னிக்குப் போடலை. கொத்சுப் பொடியும் மிவத்தல், தனியா, கடலைப்பருப்பு, வெந்தயம், பெருங்காயம் எண்ணெய் விட்டு வறுத்துப் பொடித்துப் போடுவோம். இன்னிக்கு மாறாகத் துவரம்பருப்பு! இதில் எல்லாம் ஜீரகம் சேர்ப்பதில்லை. ஆனால் இன்னிக்கு ஜீரகம் சேர்த்தேன்.

காலையிலிருந்து நல்ல மழை. இப்போது தான் கீழ்வானம் வெளுக்க ஆரம்பித்திருக்கிறது. இடி,மின்னல் இருந்ததால் கணினியைத் திறக்கவே இல்லை. இடி, மின்னலில் மோடம் போயிடுச்சுன்னா பிரச்னை! அதான்!  :)

25 comments:

  1. வந்துட்டேன். ஒட்டு போட்டாச்சு இங்கே கேரளாவிலும் தான். என்னமோ விதம் விதமா கூட்டு செய்துட்டு அதுக்கு கொத்சுன்னு பேர் வச்சுகிட்டே போறீங்க. க்ர். கொத்சுன்னா பெரிய்ய்ய கத்திரிக்காய் சுட்டு எடுத்து செய்வது தான் எனக்கு கொத்சு. நீங்க வேறே என்ன செய்தாலும் அதை கொத்சு என்று ஒத்துக்க மாட்டேன்.

    சுட்ட கத்திரிக்காயில் ஒரு வித தீஞ்ச வாசனை இருக்கும். அந்த வாசனையால் தான் அது கொத்சு ஆகிறது.

    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. ஹூம், ஒரு காலத்தில் கத்திரிக்காய் சுட்டுப் பண்ணறதைத் தான் நானும் கொத்சுனு சொல்லிட்டு இருந்தேன். இப்போத் தான் கதம்ப சாம்பாரை எல்லாம் கொத்சுனு சொல்லும் நிலைமை! :) ஆனால் இப்போவும் அரிசி உப்புமாவுக்குப் பெரிய கத்திரிக்காய் வாங்கிட்டு வந்து சுட்டு கொத்சு பண்ணுவேன். ஒரு நாள் பண்ணும்போது படம் போடறேன். :)

      Delete
  2. நாங்கள் இருப்பது வேறு மாநிலத்தில் என்றாலும் ஒரு மாதமாக நாங்கள் வோட்டுப் போடப்போவது போல ஒரு உணர்வு! தமிழ்நாட்டிற்கு நல்ல காலம் பிறக்கவேண்டும் என்று பிரார்த்தனை.


    கொத்சு என்றால் கத்திரிக்காயை சுட்டுப் பண்ணுவது என்றே இவ்வளவு நாள் நான் நினைத்திருந்தேன். நீங்கள் சொல்லியிருப்பதைப் போல ஒரு தடவை செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, நானும் அப்படித் தான் சொல்லிட்டு இருந்தேன். இங்கே வந்தப்புறமா இது பழகிப் போச்சு! இப்போக் கல்யாணங்களிலேயும் இப்படித் தான் எல்லாக் காயையும் போட்டுப் பண்ணும் சாம்பாரைப் பாசிப்பருப்புப் போட்டுப் பண்ணிட்டு கொத்சுனு சொல்லிடறாங்க! :) சரி ஊரோடு ஒத்து வாழலாம், இந்த ஒரு விஷயத்திலாவதுனு! :)))))

      Delete
    2. கதம்ப சாம்பார் என்று நான் தினசரி
      முருங்கை, சாம்பார் வெங்காயம், வெண்டை, கத்திரிக்காய்,
      காரட், எல்லாவற்றையும் தான் போடுவேன்.

      கடைசியில் கொத்தமல்லி கட்டு ஒன்றை அப்படியே (நன்றாக டெட்டால் போட்டு கழுவிய பின் ) .25 செ .மீ. வெட்டி,

      அத்துடன் கருகப்பிலை பொடி கலந்து போடுவேன்.

      சில சமயம் வெங்காய வடாம் பொறித்து போடுவேன்.

      ஆத்துக்காரி ஒன்னாம் நம்பர் சோம்பேறி. ஒரே வெஜிடபிள் தான் சாம்பார் பண்ணுவாள்.

      எனக்கு கரி அதாவது போரியல் லே இரண்டு இருக்கணும்.
      சாம்பார் லே சத்வாரி. நாலு இருக்கணும்.

      ஒரு நாளைக்கு வாங்கோ.

      நள பாகம் பாருங்கோ. சுவையுங்கோ.

      சுப்பு தாத்தா.

      Delete
    3. வாங்க சு.தா. எல்லாத் தானும் சேர்த்துப் போடறதில்லை. சிலதைத் தான் சிலவற்றோடு சேர்ப்பேன். உதாரணமாகக் கத்திரிக்காய், வெண்டைக்காய் சேர்த்துச் செய்வேன். வெண்டைக்காய், குடைமிளகாய் சேர்ப்பேன். முருங்கை, சின்ன வெங்காயம், முள்ளங்கி, முருங்கை, முள்ளங்கி, சின்ன வெங்காயம்னு சேர்ப்பேன். ரொம்பவே நொடிப்பு ஜாஸ்தி எனக்கு! (இது நம்ம ரங்க்ஸோட கணிப்பு! ஹிஹிஹி) அதோட சாம்பார் பண்ணினா தேங்காய்க் கறி அல்லது கூட்டு அல்லது வதக்கல் கறி பண்ணுவேன். வத்தக்குழம்புன்னா கீரை மசியல் அல்லது மோர்க்கீரை, மொளகூட்டல்னு பண்ணுவேன். வேறு ஏதேனும் பொரிச்ச கூட்டுக் கூடப் பண்ணலாம்.

      Delete
  3. நானும் இங்கு ஓட்டு போட்டுட்டு தான் சமைத்தேன்...

    ReplyDelete
    Replies
    1. நம்ம வீட்டிலே பத்தரை மணிக்குத் தான் கறிகாயைப் பார்த்து ஆராய்வேன் என்ன பண்ணலாம்னு! :)

      Delete
  4. மோடம் காக்கும் மேடம்,
    தேர்தல் அன்றாவது 'வெங்காயம்' தவிர்ப்பது நிதர்சனமோ/உவமையோ?' யானறியேன் பராபரமே ! நீங்கள் விவேகம் உள்ளவர் என்பதால், கவலை இல்லை.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, செவ்வாய், வெள்ளி, சனி அநேகமா வெங்காயம் சேர்ப்பதில்லை. எப்போவானும் இதில் மாறுதல் இருக்கும். என்றாலும் செவ்வாயும், சனியும் நிச்சயம் நோ வெங்காயம்! :)

      Delete
  5. ஜனநாயக கடமையை ஆற்றியமைக்கு வாழ்த்துகள்
    கடமை ஆற்ற வந்த என்னை என்ன செஞ்சாங்கே தெரியுமா....? என்னோட தளத்துக்கு 6.00 மணிக்கு வாஙக...

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, பார்த்துட்டேன். :) நேத்திக்கு வர முடியலை!

      Delete
  6. எங்கள் பூத்தில் நான்தான் முதல் வாக்காக்கும்....!

    ம்..... கொத்ஸு சாப்பிட்டுதான் எவ்ளோ நாளாச்சு....

    ReplyDelete
    Replies
    1. சமத்து! ஏன் உங்க பாஸுக்கு கொத்ஸு பிடிக்காதா? :)))))

      Delete
  7. வோட் போட்ட கைகளுக்கும் கொத்சு செய்த கைகளுக்கும் வாழ்த்துகள். கீதா.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் வல்லி, ஒண்ணு ஜனநாயகக் கடமைன்னா இன்னொண்ணு குடும்ப நாயகிக் கடமை! :)

      Delete
  8. நானும் ஜனநாயக கடமை ஆற்றிவிட்டேன். காலையில் அல்ல! மாலையில்! கொத்சு சமைக்க கற்றுக்கொடுத்தமைக்கு நன்றி! என்னுடைய நாலைந்து பதிவுகளை ஒரே மூச்சில் படித்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அட, கொத்சு தெரியாதா? விதம் விதமாப் பண்ணலாமே! :) ஹிஹிஹி, எனக்கு நேரம் கிடைக்கிறச்சே மற்றப் பதிவுகளுக்கு வரேன். அம்புடுதேன்.

      Delete
  9. கடமை ஆற்றியமைக்கு வாழ்த்துகள். எனக்கு இங்கே வாக்குரிமை இல்லை! :)

    ReplyDelete
    Replies
    1. ஹையோ, உங்களுக்கு இன்னமும் பதினெட்டு வயசு ஆகலையா! ஜாலி!

      Delete
  10. இங்கிட்டு மழை நேற்று இல்லை
    இன்னைக்கு கொட்டோ கொட்டுனு
    கொட்டுது...

    ReplyDelete
    Replies
    1. இன்னிக்குக் கோயிலுக்குப் போறச்சே மழை வந்துடுமோனு பயந்துட்டுத் தான் போனோம். ஆனால் இது வரை மழை வரலை. ஆனால் சூரியன் முழுநாள் விடுமுறை. அவ்வப்போது அக்ஷதை மாதிரி தூற்றல்கள் மட்டுமே! ராத்திரி கொஞ்சம் பெய்ஞ்சதுனு சொல்றாங்க! :)நேற்றுக்காலையில் தான் கடுமையான அடைமழை!

      Delete
  11. //"ஒரேயடியாக கணினிக்கு அடிமை ஆனதில் படிக்கும் வழக்கமே விட்டு போய் விட்டது"// ஆயிரத்தில் ஒரு வார்த்தை. ஆனால் கணினியில் படிக்கலாமே?. நான் பெரும்பாலும் அப்படித்தான் செய்கிறேன். அதுவும் பேத்தி தூங்கும் போதுதான் செய்ய முடியும். என்ன இருந்தாலும் நமக்கெல்லாம் புத்தகத்தில் படித்தால்தான் படித்தது போல இருக்கிறது இல்லையா?

    ஜனநாயக கடமையோடு குடும்ப கடமையை இணைத்த உங்கள் சாமர்த்தியத்தை மெச்சுகிறேன்.

    btw. பயத்தம் பருப்பு போடாத கொத்ஸு சிதம்பரம் கொத்ஸு என்றும் பாதம் பருப்பு போட்ட கொத்ஸு தஞ்சாவூர் கொத்ஸு என்றும் அறியப்படும்.

    ReplyDelete
    Replies
    1. //ஜனநாயக கடமையோடு குடும்ப கடமையை இணைத்த உங்கள் சாமர்த்தியத்தை மெச்சுகிறேன்.//


      ஹிஹிஹி, எனக்கு சாமர்த்தியம்னு ஒண்ணு இருக்கிறதாச் சொன்ன முதல் ஆள் நீங்க! ரொம்ப நன்றி. கணினியில் நானும் படிக்கிறேன். ஆனாலும் புத்தகப்படிப்பு என்பது தனி சுவை! பாதம்பருப்புப் போட்டு கொத்ஸு செய்வாங்கனு தெரியாது. அல்லது பயத்தம்பருப்புத் தான் பாதம்பருப்பாக வந்துவிட்டதா? அப்படித் தான் இருக்கணும். நாங்க பருப்புப் போட்டால் அதை சாம்பார்னு தான் சொல்வோம். கல்யாணம் ஆகி இங்கே வந்தப்புறமாத் தான் கொத்ஸுக்குப் பருப்புப் போடுவதே தெரியும். அப்படியும் வெண் பொங்கல், அரிசி உப்புமாவுக்குப் பருப்புப் போடாத கொத்ஸுவே செய்வேன். :)

      Delete
    2. பயத்தம் பருப்பு பாதாம் பருப்பாகி விட்டதற்கு காரணம் தூக்க கலக்கம்!


      Delete