எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, May 18, 2016

நம்பெருமாள் இளைச்சிருக்காரா?

நேத்திக்கு நம்ம பெரிய ரங்குவைப் பார்க்கப் போனோம். இம்முறையும் சில மாதங்கள் ஆகிவிட்டன. வெயில் காரணமாகப் போகவே இல்லை. திங்களன்று தான் நல்ல மழை பெய்ததே. ஆகையால் சூடு குறைவாக இருக்கிறதுனு நேத்திக்குப் போனோம். காலையிலேயே போய்விட்டோம்.  நேரே தாயார் சந்நிதிக்குப் போனால் கூட்டமே இல்லை. நின்று நிதானமாகத் தாயாரைப் பார்க்கலாம்னு நினைச்சால் பட்டாசாரியார், "போ!" "போ!" என்று விரட்டிட்டே இருந்தார். அப்படியும் கொஞ்சம் நின்னு பார்த்தாச்சு. வெளியே வந்ததும் தாயார் சந்நிதி வில்வமரத்தை அவசரமாகப் படம் எடுத்தேன். தொ.நு.நி. எல்லாம் பாக்காதீங்கப்பா! கண்ணை மூடிக்குங்க! 


பாட்டரி காருக்காகக் காத்திருந்தால் அது வரவே இல்லை. அரசு என்னமோ வயதானவங்க, குழந்தைக்காரங்க, மற்றும் நடக்க முடியாதவங்களுக்காக நான்கு பாட்டரி கார் வாங்கிக் கொடுத்திருப்பதாகச் சொல்றாங்க. இரண்டு பாட்டரி கார் தாயார் சந்நிதியிலிருந்து ஆர்யபடாள் வாசல் வரைக்கும் போகணும். மற்ற இரண்டு பாட்டரி கார் தாயார் சந்நிதியிலிருந்து சக்கரத்தாழ்வார் சந்நிதிக்குப் போகணும். ஆனால் சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு பாட்டரி கார் போயே நாங்க இதுவரை பார்த்ததில்லை. :(

தாயார் சந்நிதிக்கு மட்டும் போயிட்டுப் போயிட்டு வரும். அதுவும் ஒரே ஒரு கார் தான். இலவச சேவை. ஓட்டுநருக்கு கோயில் நிர்வாகம் சம்பளம் கொடுக்கிறது என்றாலும் ஒரு சிலர் அவருக்குப் பணம் கொடுக்கிறார்கள். இது சரியெனப் படவில்லை! :(  விடுங்க! பாட்டரி கார் வராததால் நடந்தே சென்றோம்.  ஆர்யபடாள் வாசலைத் தாண்டி உள்ளே சென்றதும் வழக்கமான பாதையில் போவதைத் தடுத்து வைச்சிருக்காங்க. கடந்த ஆறு மாசத்துக்கும் மேலே இப்படி! 50 ரூ சீட்டு வாங்கிட்டுப் போகலாம்னு பார்த்தா பக்தர்கள் வரிசை அங்கேயே ஆரம்பித்து உள்ள்ள்ளே வரை சென்றது. அவ்வளவு நீண்ட வரிசையில் நிற்க முடியாதேனு யோசிச்சோம். பின்னர் வேறு வழியில்லாமல் 250 ரூ சீட்டு வாங்கிக் கொண்டு சென்றோம். 

ஆனாலும் அரை மணி நேரம் ஆயிற்று. உள்ளே அதிக நேரம் இருக்க விடமாட்டாங்க என்பதால் உள்ளே நுழைகையிலேயே பெரிய ரங்குவின் முகத்தையும், உள்ளே நுழைந்ததுமே பாத தரிசனமும் பார்த்துக் கொண்டேன். பின்னர் நம்பெருமாளைப் பார்த்தேன். வழக்கம்போல் சிரிச்சுட்டு இருந்தார். எங்கே வந்தேனு கேட்டார். சாயந்திரமா அவருக்குப் புறப்பாடு இருக்கு. அப்போ உள்ளே விடமாட்டாங்க என்பதால் தான் காலம்பரயே வந்தோம். புறப்பாடு செல்லும் இடங்களில் எல்லாம் கோலம் போட்டுக் கொண்டிருந்தாங்க! நம்பெருமாள் ரொம்ப இளைச்சிருப்பதாக நம்ம ரங்க்ஸ் சொல்றார். எனக்கு ஒண்ணும் தெரியலை! ஒருவேளை சாயந்திரமாப் புறப்பாட்டின் போது மண்டகப்படி ஒண்ணும் இல்லையோ என்னமோ! சாப்பிட ஒண்ணும் கிடைச்சிருக்காது! அதனால் இளைச்சிருக்கார் போல! பெரிய ரங்குவும் கொஞ்சம் உயரத்திலே இருந்ததாகவும், இப்போக் கொஞ்சம் கீழே இறங்கி இருக்கார்னும் சொல்றார்.  எனக்கு எப்போதும் போல் தான் தெரிஞ்சது. இப்போல்லாம் உள்ளேயே துளசிப் பிரசாதம் கொடுக்கிறாங்க. அதை வாங்கிண்டோம். வெளியே வந்து தீர்த்தம் வாங்கிக் கொண்டோம். தாயார் சந்நிதியில் சடாரி சாதித்து மஞ்சள் விழுது பிரசாதமும் கொடுப்பாங்க. அங்கே அதையும் வாங்கிக் கொண்டிருந்தோம். 

திரும்பும்போது விஷ்வக்சேனர் சந்நிதி வழியா தொண்டைமான் மேட்டில் படிகள் ஏறி  இறங்கி மடப்பள்ளி வழியாகச் சுத்திண்டு தான் வரணும். அங்கே தான் அன்னமூர்த்தி சந்நிதி இருக்கு. ஆனால் எப்போவும் பூட்டியே வைச்சிருக்காங்க. ஆகையால் படமே எடுக்க முடியறதில்லை. பின்னர் மழை பிடிச்சுக்கறதுக்குள்ளே வீட்டுக்கு வந்தாச்சு! ஆண்டாளம்மாவைப் பார்க்கணும்னு சொல்லிட்டு இருந்தார் ரங்க்ஸ். அதையும் மறந்துட்டார் போல! ஆனால் வடக்கு வாசல் வழியாப் போனதாலே அப்படியே திரும்பி வர வேண்டி இருக்கு. தெற்கு வாசல் வழியாப் போனாத்தான் ஆண்டாளம்மாவைப் பார்க்க முடியும். நேத்துப் பார்க்கவில்லை. இன்னொரு முறை போனால் பார்க்கணும். 

24 comments:

 1. பெருமாள் இளைச்சிருக்கார் அப்படின்னா
  பக்கத்திலே தன்வந்திரி இருக்காரே..
  அவர்கிட்டே சொல்லக்கூடாதோ ?

  அங்கன தான் வில்வ மரம் இருக்குது.
  சரியா நினைவு இல்லை.

  தன்வந்திரி டாகடர் சார் அப்பாயின்ட்மென்ட் கிடைக்கலேன்னா
  இப்போதைக்கு, பெருமாளுக்கு
  அஸ்வ கந்தாதி லேகியம், ச்ய்வனப்ரகாசம்,
  தயிர் சாதம், வாழைப்பழம் கொடுக்கச் சொல்லுங்கோ,
  சாரி, நைவேத்யம் பண்ணச் சொல்லுங்கோ.

  இங்கே தன்வந்திரிக்கு அதுமாதிரி தான்
  ஒரு சுக்கு, மிளகு, தேன் , கலந்த ஒரு சூரணத்தை நைவேத்யம் பண்றார் பட்டர்.

  இருந்தாலும் பெருமாளுக்கு கவலையா இருக்குமோ ?

  என்ன தான் இருந்தாலும் அம்மா நம்ம ஊரை விட்டுட்டு
  வேற எங்கனவோ போட்டி பொடராகளே ?

  என்ன ஆவப்பொவுதோ என்ற கவலையா இருக்குமோ ?

  ஏன் பள்ளிக்கொண்டீர் அய்யா...

  ஸ்ரீரங்க நாதனே நீர் ஏன் பள்ளிக்கொண்டீர் அய்யா

  பாடவேண்டியது தான்.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. நம்பெருமாள் வடக்கு (வைகுண்ட) வாசல் வழியா வந்தாத் தான் தன்வந்திரியைப்பார்க்க வசதி. இல்லைனா அவர் சுத்திண்டு வரணும்! :) வில்வமரம் தாயார் சந்நிதியில் இருக்கு! :) நேத்திக்கு தோசை பிரசாதம் கிடைச்சது! விலைக்குத் தான். ஆனால் தாயார் சந்நிதியின் உள்ளேயே வைச்சிருந்ததாலும் பட்டாசாரியார் கொடுத்ததாலும் வாங்கினோம். விலை தான் ஜாஸ்தி. ஒரு தோசை 30 ரூபாய். ஆனால் ஒரு தோசைக்கே வயிறு நிரம்பி விட்டது. வீட்டுக்கு வந்து தோசையைச் சூடாக்கி மி.பொ. தொட்டுக் கொண்டு சாப்பிட்டோம். :)

   Delete
 2. என்னது அன்னமூர்த்தி சந்நிதிக்கு பூட்டா? அப்படி ஒன்னும் இல்லையே.... அங்கே கதவைப் பார்த்த நினைவே எனக்கில்லை. கம்பி கேட் போட்டுருக்காங்களோ?

  ReplyDelete
  Replies
  1. கம்பிக் கதவெல்லாம் இல்லை. மரக் கதவு! எல்லாக் கோயில் சந்நிதிகளிலும் இருக்கிறாப்போல் வேலைப்பாடுள்ள கதவு தான். அநேகமா நாங்க போறச்சே எல்லாம் பூட்டித் தான் இருக்கு. ஒரே ஒரு நாள் திறந்திருந்தது. சந்நிதி திறக்கும் நேரம் தெரிஞ்சுக்கணும். மாலை நாலரைக்கு அப்புறமாத் திறப்பாங்கனு நினைக்கிறேன். காலை பத்து மணிக்கெல்லாம் மூடி இருந்திருக்கலாம். நேத்திக்குக் காலையிலே தானே போனோம். திறந்திருக்கும்னு தான் நினைச்சேன். இல்லை! :(

   Delete
 3. எப்படியோ தரிசனம் இனிதே முடிந்ததுவரை நலம்.

  சகோ இந்தப்பதிவு இன்று காலை 10.40 க்கு வெளியிட்டு இருக்கின்றீர்கள் எனக்கு இப்பொழுதுதான் டேஷ்போர்டில் வந்தது காரணம் நீங்கள் பதிவை எழுதி செட்டிங்கில் வைத்த பிறகு பப்ளிஷ் ஆகும்முன் திருத்தம் செய்வதற்காக திறந்து இருப்பீர்கள் அதன் காரணமாகவே மற்றவர்கள் டேஷ்போர்டுக்கு செல்வது தாமதமாகும் அப்படி திருத்த நினைத்தால் பப்ளிஷ் ஆன பிறகு அந்த வேலையை செய்யுங்கள் - கில்லர்ஜி

  ReplyDelete
  Replies
  1. நண்பரே சில நேரங்கள் எனது பதிவுகளும் இப்படி தாமதாவதுண்டு
   இப்போது புரிந்தது எதனால் என்று...
   நன்றி நண்பரே...

   Delete
  2. சொல்லறதுக்கு யோசனையா இருந்தாலும் நான் பொதுவாகப் பதிவுகளில் பிழைதிருத்தம் என்றெல்லாம் செய்வதில்லை. யாராவது படிச்சுட்டுச் சுட்டிக்காட்டுவது தான்! ஆகவே இந்த தாமதம் குறித்து எனக்கு ஏன் என்று புரியவில்லை. அநேகமா ஆன்லைனிலேயே எழுதிட்டு அப்படியே பப்ளிஷ் கொடுப்பது தான் செய்து வருகிறேன். பயணக்கட்டுரைகள் தான் வேர்ட் டாகுமென்டில் எழுதிட்டுப் பின்னர் காபி, பேஸ்ட் செய்வது. அதிலும் திருத்தம்னு செய்வதில்லை! அப்புறமும் தாமதத்தின் காரணம் புரியவில்லை. என்றாலும் நீங்கள் சொல்லி இருப்பதையும் கவனத்தில் கொள்கிறேன்.

   Delete
 4. நாங்கள் மீனாட்சியை பார்க்க 20 ரூபாய் கொடுத்து பார்த்தோம், சுவாமிக்கும் 20 ரூபாய் கொடுத்தோம்.
  பெருமாளுக்கு 250 ரூபாயா?

  மீனாட்சியை பார்க்க 100, 50, 20 கூட்டம் அவ்வளவாய் இல்லாத காரணத்தால் 20 கொடுத்து தரிசனம் செய்து வந்தோம். கூட்டம் இல்லையென்றாலும் குருக்கள் நகருங்கள் நகருங்கள் என்று சொல்லிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. மீனாக்ஷியை 20 ரூக்குப் பார்க்க முடிந்தது ஆச்சரியமாத் தான் இருக்கு. நாங்க ஒவ்வொரு முறையும் 50 ரூ கொடுக்கிறோம். ஒரே ஒரு தரம் கொஞ்சம் நின்று நிதானமாகப் பார்க்க முடிந்தது.

   Delete
 5. இம்முறை திருவரங்கம் வந்து சில நாட்கள் ஆனாலும் கோவிலுக்குள் இன்னும் செல்லவில்லை! தில்லியில் நண்பர் சொன்ன வேலையைச் செய்யவாவது அங்கே நாளைக்குச் செல்ல வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. போயிட்டு வாங்க கோயிலுக்கு. எங்க வீட்டுக்கு முடிஞ்சா வாங்க. உங்களுக்கு உங்க வேலைகளே செய்வதற்கு அதிகமா இருக்கும் என்பது தோன்றவில்லை! :)))) ரொம்பத் தொந்திரவு செய்கிறோமோ! :)))))

   Delete
 6. தோசை பிரசாதம் அழகர் கோயில் தோசை பிரசாதம் மாதிரியா? அல்லது வீட்லே சுடுற சாதா தோசை மாதிரியா?அழகர் கோயில் தோசை பிரசாதம் சாப்பிடிருக்கீர்களோ? கருப்பு உளுந்து போட்டு பெரிய காஞ்சிபுரம் இட்லி மாதிரி.

  --
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. அழகர் கோயில் தோசை எல்லாம் சின்ன வயசில் அப்பா போயிட்டு வரச்சே மடப்பள்ளியிலிருந்தே வாங்கிட்டு வருவார். கூடவே புளிக்காய்ச்சலும் வரும். அப்போச் சாப்பிட்டது தான். இப்போல்லாம் அழகர் கோயிலிலேயே அது போன்ற தோசை கிடைப்பதில்லை. இங்கே ஶ்ரீரங்கத்தில் பரவாயில்லை ரகம். ஏனெனில் வெளிப் பிரசாதக் கடை தோசையைப் பார்த்திருக்கேன்.(சாப்பிட்டதில்லை) ஆகவே வித்தியாசம் தெரிந்தது. கொஞ்சம் புளிப்பு மாவில்! மி.பொ.தொட்டுக் கொண்டதால் சாப்பிட நன்றாகவே இருந்தது.

   Delete
  2. கிட்டத்தட்ட அழகர்கோயில் பிரசாதம் மாதிரித் தான்! இதே போல் திருக்கண்ணபுரத்திலும் சௌரிராஜப் பெருமாளின் மடப்பள்ளி தோசை+புளிக்காய்ச்சல் சாப்பிட்டோம் 97 ஆம் வருடம் ஜனவரியில்!

   Delete
 7. புதுசா கும்பாபிஷேகம் எல்லாம் செஞ்சுகிட்டதாலே ரங்க்ஸ் ரொம்ப பிசியா இருக்கார் போல! வழக்கம் போல சுவையாக பகிர்ந்தமைக்கு நன்றி! பொதுவாகவே வைஷ்ணவ கோயில் பிரசாதங்கள் பட்டாச்சாரியார் கொடுப்பது சுவையாகவே இருக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சுரேஷ், அது பிரசாதமாக இருக்கணும்! அதான் முக்கியம்! வெளியே ஸ்டாலில் வாங்கக் கூடாது! அது பிரசாதமே இல்லை! ஒப்பந்ததாரர் செய்து கொடுக்கிறார்.

   Delete
 8. ரொம்ப வருஷங்களுக்கு முன்னர் பார்த்த கோவில். தரிசனமும்,பிரஸாத ருசியும் பிரமாதம். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. உள்ளே போய் வாங்கினால் தான் அம்மா பிரசாதம். அது நன்றாகவே இருக்கும்.

   Delete
  2. இதை எப்படி வாங்குவது? பிராகாரத்துக் கடை, சாதாரண பலகாரக் கடை. அதில் அவ்வளவு இஷ்டமில்லை.

   Delete
  3. காலை பத்திலிருந்து பதினொன்றுக்குள் எனில் தோசை, வடை, வெண்பொங்கல் கிடைக்கும். பனிரண்டுக்கு மேல் ஒன்றரை அல்லது இரண்டு வரை தயிர்சாதம், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தோசை போன்றவை கிடைக்கும். ஆனால் வாங்கும் இடம் கோயிலினுள் கொடிமரத்தைச் சுற்றியுள்ள பிரகாரம். அல்லது உள்ளே கிளிமண்டபம், அர்ஜுன மண்டபம் ஆகிய இடங்களில் மட்டுமே.

   Delete
 9. மேக்கப் கம்மியா இருந்திருக்குமோ.... இளைச்சதாத் தெரியக் காரணம்...!

  ReplyDelete
  Replies
  1. கமென்ட் போடறதுக்கு முன்னாடி ஸ்ரீராமின் கமென்ட் கண்ணில் பட்டுவிட சிரிச்சு முடியலைப்பா...ஹஹஹஹ்ஹ்ஹ்....

   Delete
  2. ஒரு விதத்தில் மேக்கப்பும் காரணமாய் இருக்கலாம், துளசிதரன்! ஏனெனில் அன்றைக்கு மிக மெலிதான ஆடை அணிந்திருந்தார். புசுபுசுவென்ற பட்டெல்லாம் இல்லை. :) அதனால் அப்படி இருந்திருக்கும்.

   Delete
  3. @ஶ்ரீராம், ஹிஹிஹிஹி!

   Delete