எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, May 26, 2016

வெகு பொருத்தமான சாம்பாரு, இதுவே எனக்கு ஜோரு!

ரொம்ப நாட்கள் கழித்துத் தாய்மொழியிலே இன்னிக்குத் திரைப்படம் பார்த்தேன். ஹிஹிஹி, இப்போல்லாம் தாய்மொழிப் படங்களே பார்க்கிறதில்லை. இன்னிக்கு என்னமோ அதிசயமா நம்ம வீட்டிலே வேலை செய்யற பொண்ணு காலம்பர ஐந்தரை மணிக்கே வந்து எல்லா வேலைகளையும் முடிச்சுட்டுப்போனாளா?? ஐந்து நாட்களா அவ தினமும் லீவ் போடாமல் வரதுக்கே மழை கொட்டித் தீர்க்குது. இன்னிக்குச் சீக்கிரம் வந்ததுக்குக்கேட்கணுமா? மழை ஆரம்பிச்சுடுச்சு. வேர்ட் டாகுமெண்டில் எழுதி வச்சதை எல்லாம் அப்லோட் பண்ணி ஷெட்யூல் பண்ணவேண்டியதையும் பண்ணியாச்சு. திடீர்னு கணினியிலே உட்கார போரடிச்சது. குழுமங்களிலேயும் யாரையும் காணோம்.

சரினு தொலைக்காட்சியிலே ஏதாவதுபடம் பார்க்கலாம்னு ஒவ்வொரு சானலாத் திருப்பிட்டு வந்தா, "ஆஹா, இன்ப நிலாவினிலே" னு கண்டசாலா பாடிட்டு இருந்தார். என்னடா இது ஆச்ச்ச்சரியம்னு பார்த்தா ஜெமினியும், சாவித்திரியும் படகிலே டூயட் பாடிட்டுப் போனாங்க. நல்லவேளையா அப்போ நான் துள்ளிக் குதிச்சதைப் பார்க்க அங்கே யாருமே இல்லை. ரங்க்ஸுக்கு உண்ட மயக்கம். போய்ப் படுத்துட்டார். நானே தான் ரசிச்சுக்க வேண்டி இருந்தது. நம்ம படமாச்சே. இந்தப் படம் எப்போ வந்ததுனு தெரியாது. ஆனால் இந்தப் படத்துக்கும், "ராம பக்த ஹனுமான்" படத்துக்கும் அப்பா தியேட்டருக்குக் கூட்டிப் போய்க் காட்டியது நினைவில் வந்தது. தம்பி அப்போ குழந்தை???? சரியாத் தெரியலை. ஆனால் அப்புறமா மூன்று மணிக்கு எழுந்து வந்த ரங்க்ஸ் இந்தப் படம் 1955-56-ல் வந்ததாகவும், அவர் சிதம்பரத்திலே படிக்கும்போது பார்த்ததாயும் சொன்னார். ஆனால் நான் விபரம் தெரிஞ்சு தான் பார்த்திருக்கேன்.

அதுக்கப்புறமா இந்தப் படத்தை ஒவ்வொரு வருஷமும் திருப்பாவை வகுப்பு நடத்தி வந்த ராஜம்மாள் சுந்தர ராஜன் குழுவினர் பக்தி கலா நிகழ்ச்சி ஒண்ணும் நடத்துவாங்க, பொங்கலுக்கு முன்னாடி. அப்போ முதல் நாள் ஒரு பக்திப் படம் இலவசமாப் போட்டுக் காட்டுவாங்க. வருஷா வருஷம் அது என்னமோ தெரியாது இந்தப் படம் தான் காட்டுவாங்க. அநேகமா அந்தப் பிரிண்டே கிழிஞ்சு சுக்குச் சுக்காப் போயிருக்கும். அவ்வளவு முறை காட்டி இருக்காங்க. அவ்வளவு முறை நானும் பார்த்திருக்கேன். முதல்லே எல்லாம் தம்பியைக் குழந்தைனு சொல்லிக் கூடவே கூட்டிப் போவேன். அப்புறமா பாய்ஸ் நாட் அலவ்ட் னு சொல்லிட்டாங்க. ஆக நான் தனியாவே நாலைந்து தரம் பார்த்திருப்பேனா?? என்றாலும் கடந்த பல வருஷங்களில் என் குழந்தைகளிடம் இந்தப் படத்தைப் பற்றியும், ரங்காராவ் நடிப்பைப் பற்றியும், "கல்யாண சமையல் சாதம்" பாடலைப் பற்றியும் சொல்லி இருக்கேன்.இந்தியாவிலே பார்க்க முடியாத எங்க பையர் அமெரிக்காவிலே போய்ப் பார்த்தேன்னு சொன்னார். :P

படத்தை நல்லா ரசிச்சுப் பார்த்தேன். நல்லதொரு நகைச்சுவைப் படம். அதுவும் அந்த ஜோசியர்கள்/புரோகிதர்களுக்கு வெற்றிலைத் தட்டு நகருவதும், கீழே விரித்திருக்கும் கம்பளம் சுருட்டிக்கறதும், கட்டில் கால் மண்டையிலே அடிக்கிறதும், சுத்தோ சுத்துனு சுத்தறதும் கடோத்கஜனோ ஆட்கள், "ஆஹூ தலைவா, இஹூ தலைவா, ஊஹூ தலைவா" னு சொல்றதும், பார்க்கப் பார்க்க அலுக்கவில்லை. கொஞ்சம் இல்லை நிறைய விட்டலாசார்யா டைப்தான். என்றாலும் மனம் லயித்து, மனம் விட்டுச் சிரிச்சுப் பார்த்தேன். ரங்காராவை விடவும், சாவித்திரி ஆண்மகன் என்று தன்னை வித்தியாசப் படுத்தும் காட்சிகளில் வெளுத்து வாங்குகிறார். மணமகனாக தங்கவேலு. அவருக்கு மணமகள் கருங்குரங்காயும், புலியாயும், ராக்ஷசியாவும் தெரியறதும் நல்லா இருந்தது. குழந்தைகள் படம்னு ரங்க்ஸோட தீர்ப்பு. ஆனாலும் அவரும் உட்கார்ந்து முடிவு வரை பார்த்தார். நானும் குழந்தைதானே? பார்த்தால் என்ன? இது என்னோட தீர்ப்பு! இன்னொரு முறை வந்தாலும் பார்த்துட்டு எழுதறேன். ஓகேயா?

மாயாபஜார் க்கான பட முடிவு

இன்னிக்கு "எங்கள் ப்ளாக்"ஶ்ரீராமோட பதிவில் சுபத்ரை பலராமனின் மகள்னு சொல்லி இருந்தாரா! அதிலே போட்ட கருத்துப் பகிர்விலே இந்தப் பதிவை ம்ம்ம்மீள் பதிவாப் போடறதாச் சொல்லி இருந்தேனா! அதான் போட்டிருக்கேன்! எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம்!  அர்ஜுனன் மகன் அபிமன்யூவாக ஜெமினியும், பலராமன் பெண் வத்சலாவாக சாவித்திரியும் நடித்த படம். துரியோட பிள்ளையாகத் தங்கவேலு!

20 comments:

  1. ம்ம்ம் சினிமா பார்த்ததும் பதிவா அப்படீனாக்கா நானும் சினிமா பத்தி எழுதணுமே.....

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் தேவை இல்லை கில்லர்ஜி! :)

      Delete
  2. கண்டசாலாவின் இனிமையான குரலில் அந்தப் பாடல் ``ஆஹா, இன்பநிலாவினிலே.., ஓஹோ, ஜெகமே ஆடிடுதே..ஆடிடுதே..விளையாடிடுதே! `` எப்பேர்ப்பட்ட பாடலது. அதுவும் கருப்பு-வெள்ளையில் சாவித்திரி-ஜெமினியின் சரசப்பிண்ணனியில்.
    பழைய தமிழ்த் திரைப்பாடல்களுக்கென ஒரு தனிநாள் ஒதுக்கிவிடலாம் போலிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், பழைய பாடல்களின் இனிமை இப்போதைய பாடல்களில் இல்லை தான்! இப்போ மாயாபஜார் வண்ணப்படமாக டிஜிடல் தொழில்நுட்பத்துடன் வெளி வந்துள்ளது. அப்போது போட்ட பதிவு தான் இது! மீள் பதிவாகப் போட்டேன்.

      Delete
  3. ஆஹா.... ரசித்தேன், தன்யனானேன்.

    இந்தப் படத்தை இப்ப்ப்போ... சமீபத்தில் ஒரு மாத கால இடைவெளிக்குள் நானும் பார்த்து ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது!

      Delete
  4. // "எங்கள் ப்ளாக்"ஶ்ரீராமோட பதிவில் சுபத்ரை பலராமனின் மகள்னு சொல்லி இருந்தாரா! //

    நல்லவேளை.... சீதைக்கு ராமன் சித்தப்பா என்று சொல்லவில்லை!!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, ஏதோ ஒரு ராமாயணத்தில் சீதையும், ராமனும் சகோதர, சகோதரிகள்னு படிச்ச நினைவு! ஜைன ராமாயணம் யாரோ அனுப்பி இருந்தாங்க. இன்னும் அதைப் படிக்க நேரம் வரலை! :)

      Delete
  5. ஆனால் அந்த ஆஹா தலைவா ஊஹூ தலைவா எனக்கு எரிச்சல் தந்தது!

    ReplyDelete
    Replies
    1. அந்தக் காலத்தில் நாங்க அதைத் தான் ரொம்ப ரசிச்சிருக்கோம். தென்னங்குச்சியால் செய்யப்பட்ட விளக்குமாறில் இருந்து குச்சிகளை உருவி வாளாக நினைத்துக் கொண்டு வீராவேசமாகச் சண்டை போட வைத்த படங்களில் இதுவும் ஒன்று. அடுத்து வீர பாண்டியக் கட்டபொம்மன், ஶ்ரீராமபக்த ஹனுமான். ஹனுமான் பறக்கிறாப்போல் பறக்கிறேன்னு கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டு போதாததுக்கு அப்பாவிடமும் மொத்து வாங்கி இருக்கேன். :)

      Delete
  6. இந்தப் படத்தையும் பாடல்களையும் தெலுங்கில் பார்த்துவிட்டு அப்புறம் சொல்லுங்கள். பாடல்கள் அதே டியூனில் தான்

    ReplyDelete
    Replies
    1. தெலுங்கு என் அண்ணாவும் அண்ணா பையரும், மாட்டுப்பெண்ணும் நன்றாகப் பேசுவார்கள். நமக்கு ஒத்துவரலை! :)

      Delete
  7. மாயாபஜார் படத்தைப்போலவே எத்தனைமுறை பார்த்தாலும் அலுக்காத படம் , ஜெமினி சாவித்திரி ரெங்க ராவ் நடித்த மிஸ்ஸியம்மா .. எங்கள் வீட்டில் வ ருஷ த்திற்கு ஒரு முறை
    நிச்சயம் பார்போம் ..!

    மாலி

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாலி சார், மிஸ்ஸியம்மா படமும் எனக்குப் பிடித்தமானதே! அது திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் ஆகிய படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதில்லை தான்! :) அது ஜிவாஜி படமா இருந்தாக் கூட! :)))))

      Delete
  8. அருமையான பாடல்கள் நிறைந்த படம்.. சாவித்திரி ஆண் நடை நடப்பதும் பாடுவதும் நன்றாக இருக்கும். தந்திரக் காட்சிகள் எல்லாம் அருமையாக இருக்கும், அடுத்தவீட்டு பெண், மாயா பஜார், தில்லு முல்லு , காதலிக்க நேரம் இல்லை, பாமாவிஜயம் படங்களை எத்தனை தடவை வைத்தாலும் பார்ப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு, ஆமாம், சாவித்திரி நடிப்புக்குக் கேட்கணுமா? மேலே சொன்ன படங்களை விட்டுட்டீங்களே! பாமா விஜயம் ஹிந்தியில் கூட வந்திருக்கு. ஆனால் அவ்வளவு சுவாரசியமா இல்லை! :(

      Delete
  9. மாயா பஜார் பார்த்த நினைவு மீண்டும்

    ReplyDelete
    Replies
    1. யூ ட்யூபில் கிடைக்கிறதுனு நினைக்கிறேன். இப்போ வண்ணப்படமாக வந்து விட்டது.

      Delete
  10. நாங்களும் முன்பு பார்த்து ரசித்த படம். அப்புறம் இதுவரை பார்க்கவில்லை..

    கீதா: கோயில் திருவிழாவில் போட்டுப் பார்த்திருக்கின்றேன். ரசித்த படம் அதுவும் சாவித்திரியின் நடிப்பை ரசித்ததுண்டு...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன்/கீதா, ரசனைக்கும் கருத்துக்கும் நன்றி. மீண்டும் ஒரு முறை முடிஞ்சால் பாருங்க.

      Delete