எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, May 03, 2016

சுத்திச் சுத்தி வருதுங்கோ! :(



நேற்று இதற்கான பதிலை ஸ்வேதாவின் பதிவில் கூறி இருந்தேன். ராவணன் பெண் பித்தன். கண்ணில் பட்ட பெண்களை எல்லாம் தன் அந்தப்புரத்துக்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டுத் தான் வேறு வேலை பார்ப்பான். அப்படி அவன் கெடுக்க நினைத்த பெண்களுள் ஒருத்திதான் குபேரன் மகன் நளகூபரன் மனைவி. ராவணனுக்கும் மருமகள் ஆவாள். அவள் கொடுத்த சாபத்தினால் தான் அவன் சீதையை வற்புறுத்தவில்லை. தன் விரலால் கூடத் தொடவில்லை. இல்லை எனில் என்ன நடந்திருக்குமோ!

மேலும் வேதவதி கொடுத்த சாபமும் அவனுக்கு இருந்தது. விருப்பமில்லாப் பெண்களைத் தொட்டால் அவன் தலை சுக்கு நூறாகும் என்று அவனுக்கு சாபம் இருந்தது.  அதோடு சூர்ப்பனகையும் நல்ல எண்ணத்துடன் ராவணனிடம் சீதையைக் குறித்துச் சொல்லவில்லை. ராவணன் அழிவான் என்பது தெரிந்தே கூறினாள். இதற்குக் காரணம் சூர்ப்பனகையின் கணவனை ராவணன் ஒரு போரில் அழித்ததே ஆகும். அதற்காக மறைமுகமாகப் பழி தீர்த்துக் கொண்டாள் சூர்ப்பனகை.


சூர்ப்பனகை சொன்னாள் என்பதற்காக மட்டும் ராவணன் சீதையைத் தூக்கவில்லை. அதோடு சூர்ப்பனகையை ராமரோ, லக்ஷ்மணனோ மூக்கை அறுத்ததற்காகவும் தன் நாட்டையும், அரசுரிமையையும் விட்டுக் கொடுத்துப் போர் புரியவில்லை. போர் புரிந்தது சீதையைத் தூக்கி வந்ததற்காக! இங்கே ராவணன் எந்தத் தியாகமும் செய்யவில்லை. சுயநலத்துக்காகவே போர் புரிந்தான்.

ஆனால் ராமனோ ஊர் ஏதேனும் சொல்லுமோ என்னும் பழிச்சொல் தன்னையும் சீதையையும் சேராமல் இருக்கவே சீதையிடம் கோபமாகப் பேசுகிறான். அப்படியும் அவனாக சீதையை அக்னிப்ரவேசம் செய்யச் சொல்லவில்லை. சீதை தானாகவே அக்னிப் ப்ரவேசம் செய்கிறாள். அக்னிப்ரவேசம் செய்து தன்னை நிரூபித்துக் கொள்கிறாள். இதை வால்மீகியில் படிக்கலாம். மேலும் வண்ணான் சொன்னான் என்பதற்காகவெல்லாம் சீதையைக் காட்டுக்கு அனுப்பவில்லை.

வழக்கமாக ஒற்றர் படை நாட்டைச் சுற்றி வந்து நாட்டு நடப்புகளைத் தெரிவிக்கையில் ஒரு சிலர் இப்படிப் பேசிக் கொள்வதைச் சுட்டிக் காட்டுகின்றனர். அதுவும் வருத்தத்துடன் தான். அரசனுக்கு அதுவும் க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிக்கும் அரசனுக்கு அரச தர்மம் தான் முக்கியம். தன் குடிகளின் விருப்பம் முக்கியம். சீசரின் மனைவியே சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்னும்போது நாம் ஏன் ராமன் இவ்வாறு செய்ததைக் குறை சொல்கிறோம். ஆங்கிலத்தில் சொல்வதை ஏற்போம். ஆனால் நம் நாட்டில் ஒரு மன்னன் தன் குடிமக்களுக்காகத் தன் இல்வாழ்க்கையைத் தியாகம் செய்தால் ஏற்க மாட்டோமா?

ராமன் சொன்னதை சீதை புரிந்து கொண்டே காட்டுக்குச் செல்கிறாள். இதில் ராமனின் அராஜகம் எங்கிருந்து வந்தது? ஒரு மனைவியாக, அரசியாகத் தன் கணவனின் கடமைக்குக் குறுக்கே வராமல் விலகி இருந்து ராஜ்யத்தைக் காப்பாற்றுகிறாள். தன் கணவனின் அரச தர்மத்தைக் காப்பாற்றுகிறாள். இன்றைய நாட்களில் ஆட்சியாளர்களுக்கு இரண்டுக்கு மேல் மனைவியர் இருப்பதை வைத்து நாம் அன்றைய ஆட்சியோடு ஒப்பிடல் கூடாது. இன்றைய அரசியலில் வில்லத்தனம் செய்யும் நபர்களே முக்கியக் கதாநாயகர்கள். நல்லது செய்பவர்களுக்குக் கெட்டபெயர் தான் கிடைக்கும்; கிடைக்கிறது. ஆனால் ராமர் காலத்தில் அப்படி அல்ல என்ற எண்ணத்தை மனதில் இருத்திக் கொண்டு படிக்க வேண்டும். அரச தர்மத்தைக் காப்பாற்றினான் ராமன். அதற்காகத் தன் மனைவியையே துறந்தான். மனைவியும் அதற்காக ஒத்துழைத்தாள். இது பெருமைக்கு உரியதே அன்றி சிறுமைக்கு உரியதல்ல.


ராவணனின் நல்ல குணங்களையும் பட்டியலிடும் வால்மீகி ராவணன் செய்த தவறையும் சுட்டிக்காட்டுகிறார். பிறன் மனை நோக்குதல் என்னும் பெரிய பிழையை ராவணன் செய்தான். ஆகவே இனி ஒரு முறை சூர்ப்பநகைக்காக ராவணன் தன் நாட்டை இழந்தான், தன்னையே மாய்த்துக்கொள்ளும்படி போர் புரிந்தான் தியாகம் செய்தான் என்று நினைக்காமல் வால்மீகியை முழுதும் படியுங்கள் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள்!

 என்னைப் பொறுத்தவரையில் எனக்கோ அல்லது என் குழந்தைகளுக்கோ ராமனைப் போன்றதொரு பிள்ளை தான் தேவை. பிறன் மனைவியை தூக்கி வந்த ராவணனைப் போன்ற பிள்ளை தேவை இல்லை. சூர்ப்பநகைக்காக அவன் எதையும் இழக்கவில்லை என்னும் உண்மையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

மீண்டும் மீண்டும் இந்த ராவணன் குறித்த பதிவு சுற்றிச் சுற்றி வருகிறது. இதைப் படிப்பவர்கள் ராவணன் சூர்ப்பநகையை மூக்கறுத்ததற்காகவே ராமனோடு போர் புரிந்தான் என்பதாகவே நினைக்கலாம். ராவணன் செய்த அராஜகங்கள் எல்லாம் மறைந்து போய் விடும். குபேரனை விரட்டி விட்டே அவன் லங்காபுரியைத் தனதாக்கிக் கொண்டான் என்பதும் மறைந்து விடும்.
ராவணன் போற்றத் தக்கதொரு கதாநாயகனாகி விடுவான் வெகு விரைவில்! ராமாயணம் மாறி ராவணாயணமாக ஆகி விடும்!
இப்போது இருக்கும் அவசர உலகில் இப்போதைய மேம்போக்கான பாடத்திட்டத்தில் இத்தகைய எதிர்மறைக் கருத்துகள் தான் சரியானது என்னும் எண்ணத்தோடு குழந்தைகள் மனதில் புகுந்தால் எதிர்காலம் குறித்துக் கவலை ஏற்படுகிறது.

இப்போது இருக்கும் அவசர உலகில் இப்போதைய மேம்போக்கான பாடத்திட்டத்தில் இத்தகைய எதிர்மறைக் கருத்துகள் தான் சரியானது என்னும் எண்ணத்தோடு குழந்தைகள் மனதில் புகுந்தால் எதிர்காலம் குறித்துக் கவலை ஏற்படுகிறது. ராமாயணம் குறித்த ஆழமான பார்வை தேவை! இப்போதையப் பெண்ணியப் பார்வையில் அதைப் பார்க்கக் கூடாது. சமகாலத்தில் எழுதப்பட்டவைகளையே சமகாலத்தோடு ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும்

47 comments:

  1. விரிவான கட்டுரை தந்தீர்கள் உண்மைதான் காலத்துக்கு தகுந்தாற்போல்தான் நாம் உணர்ந்து கொள்ளல் வேண்டும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. அப்படி எங்கே புரிஞ்சுக்கறாங்க! எட்டாம் வகுப்பு வரை எல்லோரும் பாஸ்னு சட்டம் கொண்டு வந்து, நல்ல நல்ல இலக்கியங்களை அறிமுகம் செய்து வைக்காமலும் சமச்சீர் பாடம்னு சொல்லிப் பாடத்திட்டத்தையே கெடுத்தும் வைச்சிருக்கிறதை மாற்றினால் தவிர இதெல்லாம் நடக்கப் போவது இல்லை! :(

      Delete
  2. சரியான பட்டிமன்றத் தலைப்பு வாதிடுவோர் சாமர்த்தியம் ..!

    ReplyDelete
    Replies
    1. இதிலே பட்டிமன்றத்துக்கு இடமே இல்லை ஐயா! ராவணனோடு ராமனை சரிநிகர் சமானமாகக் கருத முடியாது! :(

      Delete
    2. வாதமும் புரியவில்லை. இதிகாசத்தில் உள்ள உண்மைகளைத் தான் கூறுகிறேன்.

      Delete
  3. அருமையாக எழுதியிருக்கிறீர்கள். சிறப்பான விளக்கம்.

    எதையும் ஆழமாக, பூரணமாகப் புரிந்துகொள்ளாமல், அல்லது அதற்காகக் குறைந்தபட்ச முயற்சிகூட செய்யாமல், நுனிப்புல் மேய்வதும், அரைகுறை அறிவை வைத்துக்கொண்டு தான் ஒரு அறிவாளி என்று நினைத்துக்கொள்வதும், காலத்தின் கோலமாகிவிட்டது. Its sad.

    வளரும் குழந்தைகள், இளைஞர்கள், இளைஞிகள் நமது புராணங்களிலிருந்து, முக்கியமான எல்லாவற்றையும், அடிப்படை புரிதல்நிலைகளிலிருந்து மேலெழுந்து(rising above the basic levels of understanding), ஆழமாக, தத்துவார்த்தமாக, பல்வேறு கோணங்களில் ஆய்ந்து புரிந்துகொண்டால் அவர்களின் வளர்ச்சிக்கு வாழ்வுக்கு நல்லது. அதற்கான மனோபாவம், பொறுமை, சிரத்தை பெரும்பாலானோரிடம் இருக்கிறதா என்பதும் ஒரு கேள்விக்குறி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஏகாந்தன், நீங்கள் சொல்வது உண்மை. ஆழமான படிப்பு என்பதே இப்போதெல்லாம் இல்லை.ஜனகனின் வில்லை உடைத்தது யார் என்ற கேள்விக்கான பதிலை எப்படி எல்லாம்புரிந்து கொள்ளலாம் என்பதைக் குறித்த ஓர் நகைச்சுவைப் பதிவும் சுற்றுகிறது. அதைப் படிக்கையில் எனக்குச் சிரிப்பு வரவில்லை. கல்வியின் தரம் தாழ்ந்து போயிருப்பதை எண்ணி மனம் வருந்துகிறது!

      Delete
  4. அக்கா! உங்கள் விளக்கம் கூர்மையாக இருக்கிறது. பாராட்டுகள் .
    இந்த வகை எழுத்துக்கள் FACEBOOK, WHATSAPP க்காக வலிந்து எழுதப்படும் வெறும் சொற்சித்திரங்கள். ஆழ்ந்த வாசிப்பின்றி தெரிந்ததில் சின்ன ட்விஸ்ட் வைத்து, வேறு கோணத்தில் பார்த்த வகையாக எழுதப்படும் மேதாவி சமாச்சாரம். இவற்றுக்கு ஆயுசு ரொம்பக் குறைவு. ஆனால் அதன் சின்ன ஆயுளில் கொசு போன்று நம்மை திரும்பத்திரும்ப வந்து கடிக்கும் தூங்க விடாது. இதுபோல் பல விஷயங்களிலும் ஒரு மேதாவி இப்படி எழுதி, தள்ளி விட்டதை சப்ஜக்ட் வாரியாக தரம் பிரித்து, அந்த சப்ஜெக்டுக்கான ஆளுக்கோ, குழுமத்துக்கோ பார்வார்ட் செய்யும் வேலை மட்டும்தான் இன்று நடந்து கொண்டிருக்கிறது. அம்மாவா?... பிடி ராமரை. புருஷனா?... பிடி மனைவி ஷாப்பிங் வீடியோவை, பக்தரா?... அனுப்பு பாபா படத்தை, நெருங்கின நண்பனா ?... பிடி செக்ஸ் ஜோக்கை . இதில் தகவல் சுத்தம்,கருத்து சுத்தம் யாருக்கு வேண்டும்?
    டென்ஷன் ஆவாதீங்க அக்கா! இது புதியதோர் உலகம்..

    ReplyDelete
    Replies
    1. புரிகிறது தம்பி, ஆனால் எனக்கு டென்ஷனாகத் தான் ஆகிறது! குழந்தைகளின் எதிர்காலம் குறித்த பயமும், கவலையும் ஏற்படுகிறது. இந்தக் கருத்து பரவிப் பரவி நாளாவட்டத்தில் இதுவே உண்மை என்று ஆகிவிடுமோ என்னும் பயமும் ஏற்படுகிறது! என் நெருங்கிய உறவு வட்டத்திலேயே இது திரும்பத் திரும்ப கடந்த 2 வருஷங்களாகப் பகிரப்பட்டு வருகிறது! இன்றைய குழந்தைகளுக்குக் கம்பனையோ, வால்மீகியையோ அறிமுகமாவது இருக்குமானு சந்தேகமாவும் வருது!

      Delete
  5. மிகவும் அழகாக புரிய வைக்கிறீர்கள். எல்லோருக்கும் ராமரைப்போல் பிள்ளை இருந்து விட்டால் போதும்தான். ராமாயண காலத்தில் நாம் இல்லை என்பதும் ஞாபகத்தில் வந்து விடுகிறது. இக்காலத்துப் பசங்களின் கண்ணோட்டமே வேறு. எதையும் தர்க்கம் செய்வதுதான் சிறந்தது என்ற எண்ணம்தான் பரவலாகக் காணப்படுகிறது.நன்றாக ரஸித்துப் படித்தேன். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க காமாட்சி அம்மா, இது தர்க்கமாகத் தெரியவில்லை. குதர்க்கமாகவன்றோ இருக்கிறது! :(

      Delete
  6. அப்படிப் பார்த்தால் இப்போது கலிகாலத்தில் எந்த மகன்
    தந்தை சொல் காக்க வனம் போகிறான்.
    நாமே அந்த அந்த நிலைமைக்கு ஏற்றபடி பவவிதங்களாக விட்டுக் கொடுக்க
    வேண்டியிருக்கிறது.
    ராமனைப் போலப் பிள்ளைகள் இருந்தால் போதும்.
    நல்லதா ஒரு பதிவு கீதா. இந்த விவாதங்களால்
    ஒரு போதும் ராமனுக்கோ சீதைக்கோ அபவாதம் கிடையாது

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் வல்லி. ராமனுக்கோ, சீதைக்கோ அபவாதம் இல்லை தான். ஆனால் நான் வருந்துவது எப்படி ஒரு உண்மையில்லாத விஷயம் முக்கியத்துவம் பெற்று விடுகிறது என்பதற்காகவே. இன்று யாரும் ராமன் இல்லை தான். அதற்காக ராவணன் ஆகாமல் இருந்தால் போதுமே! ராவணனின் அட்டூழியங்கள் மறைக்கப்பட்டுப் பொய்யான ஒரு தகவலைக் கொடுத்து அதற்காகத் தான் ராவணன் தன் நாட்டை இழந்தான் என்று அவனை ஒரு தியாகியாகச் சித்திரிக்கையில்! :(

      Delete
  7. ஒரு கதை , எந்த கருத்தை வலியுறுத்த கூறப்பட்டதோ, அதை மீறி அதற்கு நேர் மாறான கருத்து பட மலிவு படுத்துவதும், ஒரு விதமான perversion - மன வக்கரிப்பு - தான் ... நான்கு மாடுகள் ஒற்றுமையாக மேய்ந்து கொண்டிருந்ததால் ஒரு சிங்கத்தால் அவைகளை சாப்பிடமுடியவில்லை என்ற கதையை ' எனவே அந்த மாடுகளிடையே சண்டை ஏற்படுத்தி அவைகள் பிரிந்து போகச்செய்து அவைகளை தனி தனி யாக அடித்து சாப்பிடலாம் '--என்று பொருள் கொள்வது போல !

    தாங்கள் வருத்ததுடன் குறிப்பிடுவது போல , இது மாதிரி மன வக்கரிப்பு தான் GENIUS என்று ஏற்றுக்கொள்ள படுகிறது போலும் !

    மாலி

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாலி சார், இந்த மன வக்கரிப்பைத் தான் என்னால் ஏற்கவும் முடியலை, புரிந்து கொள்ளவும் முடியலை! :(

      Delete
  8. என்னதான் நீங்க சொன்னாலும்
    என்னதான் ராமனா இருந்தாலும்
    இந்தக்காலத்துலே ஒரு புள்ளை
    அப்பா
    இளையதாரம் பேச்சை கேட்டுண்டு
    தன்னை காட்டுக்கு அனுப்பறார் அப்படின்னா
    சும்மா இருக்குமா?

    இங்க்லீஷ் லே னா திருப்பி திட்டும்.

    உங்களுக்கு சந்தேகம் இருந்தா அப்பாதுரை சார் கிட்டே கேளுங்கோ..
    நாளைக்கு பேசுங்கோ. இன்னிக்கு இப்ப அவர் பல்கொட்டி பேயோட
    பேசிட்டு இருக்கார். ஸோ , டோன்ட் டிஸ்டர்ப்.ஹிம்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. அப்பாதுரை இதுக்கெல்லாம் வர மாட்டார் சு.தா. இந்தக்காலப் பிள்ளைங்க நடந்துக்கறதைச் சொல்லவே வேண்டாம். ஆனாலும் ராமாயணத்தை ஒழுங்காப் படிக்கலாமே!

      Delete
  9. Asura:Tale of the Vanquished: The Story of Ravana and His People
    25 April 2012
    by Anand Neelakantan

    இந்த நூலைப் படித்திருக்கிறீர்களா? படித்துப் பாருங்கள்.எழுதியது ஒரு கேரள நம்பூதிரி பிராமணர்.
    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. கேள்விப் படலை. அரவிந்தன் நீலகண்டன் என்பவரைத் தான் தெரியும். தமிழ் ஹிந்து தளத்தில் எழுதுவார். :)

      Delete
    2. தமிழ் த கிந்து தினசரி இல்லை! :)

      Delete
  10. இந்தக் காலத்து ராமன் கள் எல்லாமே

    விஸ்வாமித்ரர் அந்தப் பக்கம் திரும்பி இருக்கும்போது
    நைசா சூர்பகர்ணை கிட்ட
    கொஞ்சம் பொறுத்துக்க கண்ணு..
    என்று சொல்லிட்டு
    சீதைக்குத் தெரியாம ஒரு
    சின்ன வீடு செட் அப் பண்ணி இருக்கும்.
    அதையே விடுங்கள். !!

    அது மாதிரி புள்ளை நடக்கப்போறது அப்படின்னு தெரிஞ்சா
    இந்தக் கால தசரதன் கள்,
    மூணோட நாலா இருந்துட்டு போகட்டுமே
    தானே அபஹரிச்சுக்கவும் செய்வாங்க..

    அந்தக் காலத்துலே
    பீஷ்மன் அப்பா செஞ்சது நியாயமா? சொல்லுங்கோ...

    நியாயம் அப்படின்னு சொல்றாரே
    திக் விஜய் சிங் ? அவர் கதை படிக்கலையா ?

    பொண்ணு கான்சர் லே செத்துப்போயிட்டா...
    என்னப்பா , !! இந்த வயசிலேயா என்று
    எடுத்துக் கேட்பதற்கு ஆளில்லை.

    //எல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!//
    super
    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. நல்ல வம்பு தான். ஆனால் இந்தக் காலத்திலேயும் ஒழுக்கமான பிள்ளைகள், பெண்கள் இருக்கிறாங்க தானே! நாம அவங்களை மட்டும் பார்ப்போமே! பீஷ்மரின் அப்பா செய்தது நியாயம் இல்லை தான். அவர் அப்படிச் செய்ததினால் தானே மஹாபாரதம் பிறந்தது! :)

      Delete
  11. Please see your mail also. Ramayanam attached.

    jayakumar

    ReplyDelete
    Replies
    1. மெயிலில் எதுவும் வரலை. ராமாயணத்தை நானே கம்பர், வால்மீகி, துளசி ஆகியோரோடு ஒப்பிட்டுக் கதை கதையாம் காரணமாம் என்னும் தலைப்பில் எழுதி மின்னூலாகவும் வந்துள்ளது. http://tinyurl.com/j8wd3tl இந்தச் சுட்டியிலே கிடைக்கலைனாச் சொல்லுங்க! :)

      Delete


  12. Is this your mail address. Ramayanam was an attachment. You have to download it.

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. where is my mail address? Nothing is seen here. I am sorry. in my inbox also no mail from you. my main mail id is sivamgss@gmail.com.

      Delete


    2. Is this not your mail address?

      jayakumar

      Delete
    3. geethasmbsvm6@gmail.com

      Is this not your mail address?

      Jayakumar

      Delete
    4. ஆமாம், ஆனால் இந்த வலைப்பக்கத்தில் மேற்குறிப்பிட்ட மெயில் ஐடியே பிரபலம். :) முதலில் ஆரம்பித்தது அல்லவா? அந்த ஐடியில் போய்ப் பார்க்கிறேன். தெளிவாக்கியதற்கு நன்றி. :) எனக்குத் தோன்றவில்லை உங்களுக்கு அந்த ஐடி தெரிந்திருக்கும் என நினைக்கவில்லை. :)

      Delete
    5. உங்கள் மெயிலும், ராமாயணமும் கிடைத்தது. தரவிறக்கிக் கொண்டேன். நன்றி.

      Delete
  13. செகியூலர் கன்ட்ரி என்று சொல்லிக் கொண்டு நாம் நம் நாட்டில் எப்படி பேசுகிறோம் என்பது தெரிந்ததுதானே? ஒரு மதத்தைப் பற்றி மட்டும் தாழ்த்திப் பேசுவதும் புதிதல்ல. அப்படிப் பேசுவதுதான் நாம் நடுநிலையாளர் என்பதை நிலை நிறுத்தும் என்று எண்ணுவோம்! முழுவதயும் படிக்காமல், பொருளைப் புரிந்து கொள்ளாமல் யாராவது ஏதாவது சொல்லி இருப்பதைப் பார்த்து"அட, ஆமாம்ல?" என்று அதைப் பற்றிக் கொள்வதும் புதிதல்லவே?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஜனகர் வில்லை ராமன் உடைத்தது பற்றிய ஒரு கேள்விக்கும், (பள்ளியில் இன்ஸ்பெக்டர் வந்து கேட்பது போல)இப்படித் தான் மாணாக்கர்கள், நான் உடைக்கலை, எனக்குத் தெரியாது என்று சொல்வது போல் நகைச்சுவைப் பதிவு உலா வருகிறது. ஆனால் இதெல்லாம் உண்மையில் நகைச்சுவையே அல்ல! படிப்பின் தரம் எவ்வளவு மோசம், நம் இலக்கியங்கள் குறித்து மாணாக்கர்கள் அறிந்திருக்கும் எல்லை, புரிதலின் ஆழம் என்பது தான் வெளிப்பட்டிருக்கிறது.

      Delete
  14. நல்ல அருமையான விளக்கம் மேடம்.நான் சிவபக்தன். இராவணன் தீவிர சிவபக்தன் என்று வர்ணிக்கப்படுகிறான். எனக்கு என்னவோ சிவபக்தர்கள் துர்க்குணம் கொண்டவர்கள் என்ற மாயையை வலியுறுத்துவதற்காகவே இதுபோன்ற, குறிப்பாக வைணவ இலக்கியங்களில் கையாளப்பட்டதோ எனும் சந்தேகம் உண்டு.
    தேவயில்லாத பிரச்சினையைக் கிளப்பிவிட்டேனா?😊

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, நான் வரலை இந்த போங்கு ஆட்டத்துக்கு! ஏனெனில் ராமாயணத்தை வைணவ இலக்கியம் என்ற நோக்கில் யாரும் பார்ப்பதில்லை. முதல் இதிஹாசம் என்னும் நோக்கில் தான் பார்க்கிறோம். தீவிர சிவபக்தன் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? :))))

      Delete
    2. Also Lord Shiva was not in support with Ravana anytime. So he took avatar in form of Hanuman, to help Ram in his Janma saabalyam. Am I correct?

      Delete
    3. ஜெமினி, முதல் வருகை(?)க்கும் கருத்துக்கும் நன்றி. :)

      Delete
    4. சிவகுமாரன்! :)))))

      Delete
  15. நல்ல பதிவு. ராமனைப் போன்ற பிள்ளைகள்தான் வேண்டும், ராவணனைப் போன்ற பிள்ளைகள் வேண்டாம் என்னும் உங்கள் கருத்துதான் எனக்கும். நடிகர் மனோகர் இலங்கேஸ்வரன் நாடகத்தை பார்க்க ராஜாஜியை அழைத்த பொழுது, ராவணனை நல்லவனாக காட்டும் நாடகத்தை பார்க்க நான் விரும்பவில்லை என்று கூறி விட்டராம்.

    இப்போது நடக்கும் கூத்தைப் பாருங்கள். ராவணனை நல்லவனாக்கி, அவனையே கதா நாயகனாக்கிய திரைப்படத்தில் சீதை ராமனை விட்டு விட்டு ராவணனிடம் வருவதாக காட்டிய கொடுமை.!!. நல்ல வேலை அந்த படம் ஓடவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நல்வரவு பானுமதி வெங்கடேஸ்வரன். நீங்க சொல்லி இருக்கும் சினிமா பற்றி நான் அறியவில்லை. என்ன படம் அது? மணிரத்தினத்தின் ஒரு படத்தைச் சொல்வார்கள்! ஒருவேளை அதுவோ? நல்லவேளையாகத் தமிழ்ப்படங்கள் அதிகம் பார்ப்பதில்லை! :) இம்மாதிரி வில்லனைக் கதாநாயகன் ஆக்கிப் படம் எடுப்பதில் தமிழ் சினிமா தான் முன்னோடி! ஜிவாஜி நடிச்ச வீரபாண்டியக் கட்டபொம்மன் தான் அத்தகைய கருத்துக் கொண்ட படங்களின் முன்னோடி! :(

      Delete
  16. First of all I wonder the scenario here.
    1. A pregnant mother asked her daughter. So the maximum age of the daughter can be not more than 10. (Too much actually). Can a 10 year old be this clear in her argument? (By looking at the words and phrases used)
    2. "Even after picking up enemy's wife" - Why would a good Ravana, will pick enemy's wife up? Should try to have disrespected Ram's sister ideally.
    These kind of forward messages are created to just contaminate young minds and then Hindu mythology can easily be erased by those intended people.
    Good that atleast you could voice the frustration.

    ReplyDelete
    Replies
    1. ஜெமினி, முதல்முறை முகநூலில் இந்தப் பதிவு என் கண்ணில் பட்டப்போ நானும் அதைப் பற்றிக் கேட்டிருந்தேன்; பதில் இல்லை. அப்போதும் தனிப் பதிவாகவும் வெளியிட்டேன். இப்போது இது மீண்டும் 2,3 நாட்களாகச் சுற்ற ஆரம்பித்துள்ளது! நீங்கள் சொல்வது போல் ராமனின் சகோதரியாக இருக்கணும் என்பதை வலியுறுத்தக் கூடாது என்பதே இதைச் சுற்ற விடுபவர்களின் நோக்கமாக இருக்கும். இதன் மூலம் இளைஞர்களின் மூளை சலவை செய்யப்படும்! அது தான் முக்கிய நோக்கமும் கூட! :(

      ஆனால் அந்தத் தாயின் மகள் வயது பத்துக்கு மேற்பட்டிருக்காது என்கிறீர்கள். அது அதிகம் என்னும் எண்ணமும் இருக்கிறது அல்லவா? அதை விட அதிக மடங்கு வயது கொண்ட அக்காக்கள் உண்டு, உண்மையாகவே!எங்க வீட்டில் என் கடைசி மைத்துனர் என் கடைசி நாத்தனாரை விடப் பதின்மூன்று வயது சிறியவர்! என் உடன் பிறந்த அண்ணா பெண் என் அண்ணா பையரை விடப் பதின்மூன்று வயது சின்னவள்! :)))))

      Delete
    2. ///உடன் பிறந்த அண்ணா பெண் என் அண்ணா பையரை விடப் .......///

      ஒண்ணு மட்டும் புரியல்ல கீதா மேடம்.

      பையனை பையர் என்று அழைக்கும் நீங்கள்,
      பெண் ணை பெர் என்று அழைக்காது
      ஒருமையிலே பெண் என்றே அழைக்கிறீர்கள்.

      அது இது எது சரி ?

      சுப்பு தாத்தா.

      (( எல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!))

      Delete
    3. சபாஷ் சரியான வம்பு. பையருக்கு பெண் பால் பையள் என்று வைத்தால் என்ன.

      --
      Jayakumar

      Delete
    4. ஹாஹா, சு.தா. சரியான வம்பு தான் ஜேகே அண்ணா சொன்ன மாதிரி!

      பையரை மரியாதை இல்லாமல் அழைக்க வேண்டாமேனு தான். பெண்ணைப் பெண்ணரசி என்று சொல்வதுண்டு. இதைவிட மரியாதை வேணுமா என்ன? :)

      Delete
  17. இராவணன் போன்ற வில்லன்களை நல்லவர்களாக்கி காட்டும் வழக்கம் ஆங்கிலேயர்களிடமிருந்து வந்தது என்று என் உறவினர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார். ஷேக்ஸ்பியர் நாடகங்களில் வில்லன் தான் நாயகனாக இருப்பான் என்று அவர் சொல்லுவார்.

    முதலில் நம் குழந்தைகளுக்கு தமிழ் எழுதப்படிக்கச் சொல்லித் தரவேண்டும். பத்து வயதானவுடன் ராஜாஜியின் ராமாயணம் கொடுத்துப் படிக்கச் சொல்ல வேண்டும். அல்லது பெற்றோர்களாவது குழந்தைகளுக்கு படித்துக் காண்பிக்க வேண்டும்.

    இல்லையென்றால் இதைப் போன்ற குதர்க்க வாதங்கள் தான் சுற்றிச்சுற்றி வரும்.

    ReplyDelete