எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, May 23, 2016

பிறந்த நாள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்! இன்று பிறந்த நாள்!

காலைலேருந்து ஒரே பிசி! பிசியோ பிசி! (அப்பாடா, நானும் பிசிதான்னு சொல்லிட்டேன். எல்லோரும் சொல்றப்போ நமக்கு இப்படிச் சொல்ல முடியலியேனு நினைச்சுப்பேன்) இப்போத் தான் முகநூலுக்கு வந்து நன்றாக ஆழ்ந்து எல்லா வாழ்த்துகளையும் பார்க்கிறேன். ஒன்றிரண்டு காலையில் கண்ணில் பட்டப்போப் பார்த்தேன்.  ஹிஹிஹி, இந்த என்னோட பிறந்த நாள் விழா எப்போவும் முப்பெரும் விழாவாகக் கொண்டாடப் படும்னு தொண்டர்களுக்கும், குண்டர்களுக்கும் தெரிஞ்சிருக்கும்.

இன்னிக்குப் பதவியேற்பா, அதான் கொஞ்சம் தாமதம். அதோட நமக்கு மொத்தம் 3 பிறந்த நாள்! எப்படிங்கறீங்களா? எஸ் எஸ் எல் சி செர்டிஃபிகேட், பாஸ்போர்ட், ஆதார் கார்ட், ரேஷன் கார்ட், பான் கார்ட் எல்லாத்திலேயும் ஒரு மாசம் முன்னாடியே, அதிலும் ஒரு நாள் முன்னாடியே பிறந்த நாள் வந்து எல்லோரும் வாழ்த்தி முடிஞ்சாச்சு. அதைத் தவிரவும் உண்மையான ஆங்கிலத் தேதி மே 23, நக்ஷத்திரப் பிறந்த நாள் ஒரு சமயம் மேயிலும் ஒரு சமயம் ஜூனிலும் வரும். ஆக மொத்தம் மூணு பிறந்த நாள் ஆச்சா? மூணையும் சேர்த்து முப்பெரும் விழாவாக் கொண்டாடுவோம். இது இந்த வலையுலகத்தில் பத்து வருஷங்களாக இருப்பவர்களுக்குத் தெரிஞ்சிருக்கும். தெரியாதவங்க தெரிஞ்சுக்குங்க! :)

ஆச்சா! எல்லாத் தம்பிகளும், அண்ணன்களும் பரிசுகளை முட்டி மோதிக்காமல் கொண்டு வாங்க! யாருக்கு என்ன கொடுக்க முடியுதோ அதை வாங்கிக்கறேன். எடைக்கு எடை தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள்னு  கொடுப்பவங்களுக்குக் கொஞ்சம் லாபம் இருக்கும்! 2,3 கிலோ குறைஞ்சிருக்குனு மருத்துவர் சொன்னார். ஹிஹிஹி உங்களுக்காக 2.3 கிலோவை விட்டுக் கொடுத்திருக்கேன்.

மற்றபடி வஸ்த்ரகலா கொடுக்கிறவங்க வஸ்த்ரகலாவும், பரம்பரா பட்டுங்கறவங்க பரம்பராவும், வானவில் நிறங்கள் கொடுக்கிறவங்க நினைவா எல்லாக் கலரிலேயும் வாங்கிடுங்க.  முக்கியமாக என்னோட அருமைத் தம்பிகள்

Vasudevan Tirumurti Ashwin Ji  மோகன் ஜி Sriram Balasubramaniam K V Vighnesh

அண்ணாக்களில் Ramaswamy Chandrasekaran திராச சார், சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா ஒரு இருபதாயிரம் போட்டுப் புடைவை எடுத்துக் கொடுங்க போதும்! அது வஸ்த்ரகலாவோ, பரம்பராவோ, உங்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகை! மத்த அண்ணாக்கள் எது வாங்கிக் கொடுத்தாலும் வாங்கிக்கறேன். சீக்கிரமா வாங்கப்பா!

30 comments:

 1. // காலைலேருந்து ஒரே பிசி! பிசியோ பிசி!//

  அப்போ இன்னைக்கு பிசி பேளா பாத் தான்.

  நீங்க பிறந்தது என்னைக்கு என்று உங்களுக்கு எப்படித் தெரியும்.அப்பா அம்மா சொல்லித் தானே தெரியும். அவர்களே இரண்டு தேதி கொடுத்திருக்காங்களே?

  எந்த நாளானாலும் பிறந்த நாள் என்று சொல்லும் போது வாழ்த்தாமல் இருக்க முடியாது. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  --
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. ம்ஹூம், அதெல்லாம் எதுவும் சிறப்பு உணவோ, சிறப்பு இனிப்போ செய்யலை! அப்படி ஒரு பழக்கமும் இல்லை. குழந்தைகள் பிறந்த நாளைக்குச் செய்வோம். என் கணவரோட பிறந்த நாள் நவராத்திரியில் வந்துடும். ஆகவே அன்று ஏதேனும் ஓர் இனிப்புச் செய்துடுவேன். என் பிறந்த நாளைக் கொண்டாடியது எல்லாம் இணையம் வந்தப்புறமாத் தான். அதற்கு முன்னால் குழந்தைகள் இருவருமாகச் சேர்ந்து ஒரு வாழ்த்து அட்டை வாங்கிப் பரிசளிப்பார்கள். அவற்றை எல்லாம் இன்னமும் பத்திரமாக வைச்சிருக்கேன். :)

   Delete
  2. அப்போல்லாம் பள்ளியில் சேர்க்க பர்த் செர்டிஃபிகேட் எல்லாம் ஏது? ஒரு சில பள்ளிகளில் ஜாதகத்தைக் கொண்டு வரச் சொல்லுவாங்க. ஆனால் என்னை எல்லாம் நாலு வயசிலேயே பள்ளியில் சேர்த்ததால் வயசு கூடக் கொடுத்துத் தான் சேர்த்தாங்க. அதான் எல்லாக் கோப்புகளிலும் பதியப்பட்டிருக்கிறது! ஆகவே மூன்று பிறந்த நாள். அநேகமாய் என் வயசுக்காரங்க எல்லோரும் அப்படித் தான் என்று சொல்கின்றனர். :)

   Delete
  3. என்னங்க நீங்க. நம்ம ஊர் சாம்பார் சாதம் தான் பிஸி பேளா பாத். பிசி யாக இருந்ததாலே சிம்பிளா ஒரு சாதா சாம்பார் சாதம் செஞ்சு இருப்பீங்கன்னு நினைச்சேன். இத்தனை வயசுக்கு அப்புறம் சுகர் Bp எல்லாம் வச்சுண்டு தடபுடல் பண்ண முடியுமா?

   --
   Jayakumar

   Delete
  4. ஹாஹாஹா, அதெல்லாம் இல்லை, பிஸிபேளா பாத் வேறே! நம்ம ஊர் சாம்பார் சாதம் வேறே. செய்முறை மட்டுமின்றி அதில் சேர்க்கும் மசாலாக் கலவையும் தனித்தனியானது. சாம்பார்னா எனக்கு அரைச்சு விட்டாத் தான் அது சாம்பார். நேத்திக்குப் பண்ணினது பொடி போட்ட சாம்பார்! தஞ்சாவூர்ப் பாணி! :) சுமாரா இருந்தது!

   Delete
 2. ஃபேஸ்புக்கிலிருந்து அப்படியே இங்கேயா......  இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஶ்ரீராம்.

   Delete
 3. கீதாம்மா,

  பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  உங்கள் இந்தப் பிறந்த நாள் நினைவாக என்னுடைய 'ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா.வரை' நூலை வாங்கிடுங்க. வாங்கிட்டாப் போதும்; வாசிக்காமலிருக்க முடியாது எனபது தெரியும்.
  பதிப்பகத்திலிருந்தே அ.மி. சாருக்கு ஒரு பிரதி போயாச்சு. அந்தப்பக்கம் போனாலும் சித்தாப்பாவிடம் கேட்டு வாங்கிக்கலாம். எப்படியோ நீங்கள் அதைப் படித்தாகணும். அதான் சுத்தி வளைச்சு இவ்வளவு பிரிமணைச் சுத்தலெல்லாம்.

  மீண்டும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. சித்தப்பாவை சமீபத்தில் பார்க்கும் வாய்ப்பு இருக்கானு தெரியலை. நாங்க சென்னை போனாலும் ஓரிரு நாட்களே தங்குவதால் சித்தப்பாவைப் பார்க்க நேரம் ஒதுக்க முடியவில்லை. பார்க்கலாம்! :) வாழ்த்துகளுக்கு நன்றி.

   Delete
 4. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! என்ன என்ன வரும்படி வந்தது என்று அடுத்த பதிவில் போடவும்!

  ReplyDelete
  Replies
  1. என்னைச் சென்னை "வரும்"படி தம்பி கூப்பிட்டிருக்கார்/ அதான் நேற்றைய ஒரே வரும்படி. இணைய சிநேகிதி லக்ஷ்மி ஶ்ரீராம் அனுப்பிய தேவனின் "மாலதி" புத்தகம் நேற்று வந்து சேர்ந்தது. அதான் எனக்குக் கிடைத்த ஒரே பரிசு நேற்று. அதுவும் இந்தப் பிறந்தநாள்னு இல்லை, மொத்தமாய் இத்தனை பிறந்த நாட்களிலேயே கிடைத்த ஒரே பரிசு! பொக்கிஷம்! இதுவரையிலும் யாரும் பிறந்த நாள்னு பரிசெல்லாம் கொடுத்ததில்லை! :) பொதுவாக வெளியே சொன்னதில்லை. இணையம் வந்தப்புறமாத் தான் நண்பர்களின் வாழ்த்துகளும்.

   Delete
 5. ஆஹா பிறந்தநாள் வாழ்த்துகள் எடைக்கு எடை வெள்ளை மனசு போல பொரி வழங்கலாம்னு நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அநியாயமா இருக்கே! ஆனாலும் ரொம்பவே கஞ்சூஸ் நீங்க! துபாயிலிருந்து தங்கம் அனுப்புவீங்கனு பார்த்தால்!!!!!!!!!!!!!!! :)

   Delete
 6. தங்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். :) இழந்ததாக மருத்துவர்கள் கூறும் தங்கள் எடை மேலும் 4-5 கிலோ ஏறிய பிறகு (அதற்குள் என் எடையும் கொஞ்சம் குறையட்டும்) ஓடி வரலாம் என நினைக்கிறேன். :)

  ReplyDelete
  Replies
  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கஷ்டப்பட்டு எடையைக் குறைச்சிருக்கேன். ஏத்தச் சொல்றீங்க? வாழ்த்துகளுக்கு நன்றி.

   Delete
 7. கீதா மேடம் என்ன இவ்ளோ மெதுவா சொல்றீங்க? ஒரு வைர நெக்லேஸ் வாங்கி கொடுத்துடுவேன், ஆனா நீங்க சும்மா இருப்பீங்களா? என் பிறந்த நாளுக்கு (அடுத்த மாசம் வரும்) பிளாட்டினம் நெக்லேஸ் வாங்கி தந்தே தீருவேன் என்று அடம் பிடிப்பீர்கள். மறுக்க முடியுமா? உங்களுக்கு ஏன் வீண் சிரமம்? அதனால் வாழ்த்துக்களோடு நிறுத்திக் கொள்கிறேன். happy birthday and many more happy returns of the day!. Have a wonderful year ahead!

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம் ஜி+ இல் வரலையா? வருஷா வருஷம் கூகிள் கிட்டே இருந்து கேக் கிடைக்கும். இப்போ முகநூல் பக்கம் போனதில் ஜி+ க்குக் கோபம் போல! கேக் கொடுக்கிறதில்லை! :) ஆனால் நண்பர்களுக்கு நோட்டிஃபிகேஷன் போயிருக்கே! உங்க பிறந்த நாளைக்கு வஸ்த்ரகலா வாங்கிக் கொடுத்துடறேன்! :) ஹிஹிஹிஹி!

   Delete
 8. பிறந்தநாள் வாழ்த்துகள் சகோ

  ReplyDelete
 9. அண்ணா லிஸ்ட் லே நான் இல்லையே ! அப்படின்னு சொன்னேன்.

  ஆத்துக்காரி சொல்றா: நீங்க தாத்தா லிஸ்ட் லே இருப்பீங்க...

  இன்னிக்குத் தானே சொல்றாங்க. நேத்திக்கு பிறந்த நாள் அப்படின்னு:

  ஈசன், ஈஸ்வரி திருவேற்காடு அம்மனுக்காக நேத்திக்கு நம்ம செஞ்ச நைவேத்யம் ச்வீட் பாயசம் எல்லாம் நேத்திக்கே

  உலக நாயகன் உலகளந்த பெருமாள் தான் தான் தன கையாலே கொடுத்ததாக சொல்றார்.

  ஊரே கொண்டாடும் ஒரே பெச்சிவல் திருவரங்கத்தில் இது தானே.

  ஹாப்பி பர்த் டே .


  சுப்பு தாத்தா.
  மீனாட்சி பாட்டி.

  ReplyDelete
  Replies
  1. ஹையோ, அப்படி எல்லாம் இல்லை. உங்க பெயரைச் சொல்லலை. முகநூலில் நீங்க இருக்கீங்களா, இல்லையானு சரியாத் தெரியலை! மேனகா சுப்புரத்தினம்ங்கற பேரிலே உங்களோடது தான் வருகிறதுனு நினைக்கிறேன். மற்றபடி திராச சாரை எப்போதுமே வம்புக்கு இழுப்பது என் வழக்கம். அது போல் நேற்றும் இழுத்தேன். உங்க வயசுக்கும், அனுபவத்துக்கும் உங்களைப் பெரிய இடத்தில் வைத்து இருப்பதால் இம்மாதிரிச் சில்லறை வம்பெல்லாம் பண்ண மனசு வரதில்லை! ஒரு மரியாதை காரணமாகத் தான். மற்றபடி நீங்களும் அண்ணாவே தான்!

   Delete
 10. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

   Delete
 11. மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.....

  ReplyDelete
 12. எத்தனை முறை வேண்டுமானாலும் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்லத் தயக்கமில்லை

  ReplyDelete
 13. நாங்கள் தாமதம்...எனவே தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள் எங்கள் இனிய சகோதரிக்கு. எல்லா நாளும் பிறந்தாநாளே என்று நினைப்பதால் இன்றும் உங்களுக்கு பிறந்த நாள் என்று எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துகள். நலம் வாழ எந்நாளும் எங்கள் வாழ்த்துகள்!!! இதோ எங்கள் வாழ்த்து + சீதனம் ஹிஹிஹிஹிஹி...இதைச் சொடுக்குங்கள்...https://www.youtube.com/watch?v=sK2slydKLHk மற்றும் http://books.tamilcube.com/tamil/

  ReplyDelete
  Replies
  1. நன்றி துளசிதரன்/கீதா, உண்மையிலேயே அருமையான பரிசு இரண்டும். யூ ட்யூபையும் ரசித்தேன். புத்தகங்களையும் போய்ப் பார்த்தேன். அருமை என்றால் மிக அருமை!

   Delete