எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, May 01, 2016

அப்பாடா! ஒரு வழியாச் சொல்லிட்டேன்!

முகவரி: Rattan Bazaar Rd, Rattan Bazaar, Parrys, Chennai, Tamil Nadu
ஃபோன்:044 2535 5756

handloom house chennai வரைபடம்

சமீபத்தில் எனக்கு அதிர்ச்சி அளித்தஹிஹிஹிஹி) இரு விஷயங்கள் சென்னையில் ரத்தன் பஜாரில் ஹான்ட்லூம் ஹவுஸ் இல்லைனு துளசி சொன்னதும், மதுரையில் கோபு ஐயங்கார் கடை இல்லைனு ஶ்ரீராம் சொன்னதும் தான். சமீபத்திய சென்னை விஜயத்தின் போது ஒரே பகல் அதுவும் பனிரண்டு மணியிலிருந்து இரவு எட்டு வரை மட்டுமே இருந்ததால் எங்கேயும் போக முடியலை. ஆனாலும் ஒரு சென்னைப் பயணம் இருக்கிறது. அப்போது ஹான்ட்லூம் ஹவுஸ் போக நினைச்சிருக்கேன். அதுக்கு முன்னாடி அங்கே அந்தக் கடை இருக்கானு தினம் தினம் ஏதேனும் ஒரு காரணத்தை ஒட்டிச் சென்னை பாரிசுக்குச் செல்லும் அண்ணாவிடம் கேட்டேன். அவர் அங்கே தான் இருக்குனு திட்டவட்டமாகக் கூறினார்.

கடையை நோக்கி நாம் போகையில் நம் வலப்பக்கம் டி.பரஷுராம் கடையும் இடப்பக்கம் கண்ணாடிக்கடையும் இருக்கும். கடையிலிருந்து வெளியே வரச்சே இடம், வலம் மாறும். இந்த அடையாளங்களை எல்லாம் சொல்லிக் கேட்டாச்சு. கடை அங்கே தான் இருக்குனு அண்ணா சொல்றார். துளசி வேறே ஏதோ ஒரு கோ ஆப்டெக்ஸ் கடையைப் பார்த்திருக்காங்கனு நினைக்கிறேன். அங்கிருந்து சற்றுத் தூரத்தில் கோ ஆப்டெக்ஸ், காதி பவன் எல்லாமும் இருக்கு. இருந்தாலும் எனக்கு நேரில் போய் என் கண்ணால் பார்க்கும் வரை நிச்சயம் இல்லை தான். அதற்குச் சில நாட்கள் ஆகும். இப்போதைக்குக் கடை விலாசமும், தொலைபேசி எண்ணும், இருக்குமிடம் குறித்த கூகிள் படமும் கொடுத்திருக்கேன்.

அதே போல் ஶ்ரீராம் மதுரையில் கோபு ஐயங்கார் கடைக்குப் போன அன்னிக்குத் "திங்க"க்கிழமைனு நினைக்கிறேன். அன்னிக்கு வார விடுமுறை. விசாரித்தவரையில் கோபு ஐயங்கார் கடை அங்கே தான் இருக்கு. சமீபத்தில் மதுரை போகச் சந்தர்ப்பம் இல்லைனாலும் கோவை சிநேகிதி ஷோபா ராமகிருஷ்ணன் சென்ற மாதம் போயிட்டு வந்தாங்க. அங்கேயும் போயிருக்காங்கனு நினைக்கிறேன். ஆகவே வார விடுமுறைக்குக் கடை மூடி இருந்ததை ஶ்ரீராம் தப்பாய் நினைச்சிருக்கணும். இப்போ ஶ்ரீராம் ரொம்பவே வேலை மும்முரத்தில் இருப்பார். இன்னும் நான்கு நாட்களுக்கு அவரால் பதிவைப் பார்ப்பது முடியாதுனு நினைக்கிறேன். அதுக்கப்புறமாப் பார்த்துட்டு மதுரைக்காரங்களைக் கேட்டுட்டுச் சொல்லட்டும்! :)


இது ரொம்பவே மண்டையை உடைக்கிற தலை போகிற விஷயம் பாருங்க! பகிர்ந்துட்டேன்! :)

34 comments:

  1. Yes Gopu Iyengar kadai anga thaan irukku.18th March 2016 annikki naan anga kalai tiffin saapten. Dosai mattum nanna irunthathu , chutni sambar ellam belpow average ��

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நாங்க ஜனவரியில் போனப்போ சாப்பிடும்போதே நம்ம ரங்க்ஸ் வித்தியாசத்தைக் கண்டு பிடித்தார். ஆனாலும் நீங்க சொல்லி இருக்கும் அளவுக்கு மோசமா இல்லை! ஆட்கள் மாறிட்டாங்கனு நினைக்கிறேன். கிளை ஒன்று பைபாஸ் ரோடில் ஆரம்பிச்சிருக்கிறதாலே இங்கே இருந்தவங்க எல்லாம் அங்கே போய் விட்டதாகக் கேள்வி! :)

      Delete
    2. Naan every trip sollinde irukkaen nu intha vaatti ponom, yellarum ( family & friends ) inime naan suggest pannina veto panniduva thonarathu :(

      Delete
  2. நீங்க எப்ப சென்னை விஜயம் ?

    அக்கார வடிசல், புளியோதரை , ஒரு மரக்கால் வாங்கிண்டு வாங்களேன். (பெருமாள் கிட்ட சொல்லி வெச்சேன். யாராச்சும் அங்க வந்தா கொடுத்து அனுப்பறேன் அப்படின்னு சொல்லி இருக்கார்.)

    நீங்க வரும்போது,
    எங்கள் வீட்டுக்கு அவசியம் வரவும்.
    98404 61667

    ReplyDelete
    Replies
    1. சு.தா. அக்காரவடிசில், புளியோதரை எல்லாம் நேரே மூலஸ்தானத்திலிருந்து வரும் பாருங்க, அதைக் கிளி மண்டபத்திலோ அல்லது பிரகாரங்களிலோ பட்டாசாரியார்கள் கொடுப்பாங்க. நாமாகப் பார்த்துக் காசு கொடுத்தால் வாங்கிப்பாங்க. சிலர் விற்பனையும் செய்வாங்க தான். அது தான் ருசியாக இருக்கும். ஆனால் கிடைப்பது கஷ்டம்! அந்த நேரத்துக்குப் போகணும். வெளியே பிரசாத ஸ்டாலில் கிடைப்பதை வாங்கவே கூடாது! :) அது மடப்பள்ளித் தயாரிப்பு அல்ல. ஒரு தரம் உள் ஆண்டாள் சந்நிதியில் கோஷ்டியில் புளியோதரை கொடுத்தாங்க பாருங்க! அதான் ஒரிஜினல் புளியோதரை! பெருங்காயம், மி.வத்தல் இல்லாமல் மிளகு போட்ட ஒரிஜினல் பெருமாள் கோயில் புளியோதரை! :) ஆனால் கோஷ்டிகளில் மட்டும் தான் கிடைக்கிறது. நீங்க பிரசாதம் தளிகைக்குப் புளியோதரை சொன்னால் அதிலே மி.வத்தல், பெருங்காயம் போட்டுத் தான் புளிக்காய்ச்சல் செய்து கலந்து கொடுக்கிறாங்க! :)

      Delete
    2. தத் சர்வம் அஹம் ந ஜானாமி.

      பெருமாள் தான் சொன்னார்.
      பிரசாதம் அனுப்பறேன்.
      அவரே மெனக்கெட்டு அனுப்பும்போது
      டுப்லிகேட்டா அனுப்புவார் !

      ஒரிஜினல் புளியஞ்சாதம். ஆமாம்.

      எந்த டிரைனிலே வரேள் ?

      மடியா காத்திண்டு இருக்கேன்.

      சுப்பு தாத்தா.

      Delete
    3. சென்னை விஜயம் செய்கையில் குறைந்த பட்சமாக நாலு நாட்களாவது தங்கும்படி இருக்கும் என்பதால் அதற்கேற்ப தேதிகளை நிர்ணயம் செய்யணும். வந்தால் பல்லவனில் தான் வருவோம். பயணச் சீட்டு உறுதியானதும் தெரிவிக்கிறேன். :)

      Delete
    4. நான் மடியெல்லாம் ரொம்பப் பார்க்கிறதில்லை. அமாவாசை, விரத நாட்கள், ச்ராத்தம், சுமங்கலிப் பிரார்த்தனை, சமாராதனை போன்ற சமயங்களில் மட்டுமே

      Delete
  3. "திங்க"க்கிழமை// ஹாஹ்ஹ்ஹாஹ்ஹா!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, ஆமாம், தம்பி, தினம் தினம் "திங்க"க் கிழமைங்கறச்சே அன்னிக்கு ஒரு நாளை மட்டும் சொல்றது சரியில்லை தான்! :)))))

      Delete
  4. மறுபடியும் செக் செய்து கொள்கிறேன். சொல்கிறேன். ஆனால்.... இனி மதுரை போகவேண்டிய வேலை / வேளை? ம்.....

    ReplyDelete
    Replies
    1. கீழே பாருங்க, பார்வதி செக் செய்துட்டுச் சொல்லி இருக்காங்க. இது லேட்டஸ்ட் தகவல்.

      Delete
  5. உண்மைதான் முக்கிய விடயங்களை உடனே அறிவிச்சிடணும்

    ReplyDelete
  6. அப்பாடி. ஹேண்ட்லூம் ஹவுஸ் இருக்கா. நிம்மதி.
    உண்மையாகவே நல்ல தகவல் .நன்றி கீதா.

    ReplyDelete
    Replies
    1. இருக்கு ரேவதி, என்றாலும் நேரில் போய்ப் பார்த்துட்டுப் படம் எடுக்கணும்.

      Delete
  7. இப்ப மதுரைல தான் இருக்கேன்.. செக் செஞ்சாச்ச்!.. கோபு ஐயங்கார் கடை அங்க தான் இருக்க்கு!..

    ReplyDelete
    Replies
    1. நன்னீஸ், நன்னீஸ், இந்த மாதிரி யாரானும் சென்னை ரத்தன் பஜார் போய்ப் பார்த்துட்டு உறுதி செய்தால் நல்லா இருக்கும். :) ஆனாலும் அண்ணா தினம் பாரிஸ் போகும் ஆள். ஆகையால் அவர் சொல்வது சரியாகவே இருக்கும்.

      Delete
  8. ஆமாம். உங்களுக்குப் பிடித்தது எல்லாம் ஆனை கலர் அழுக்கு கலர் சிமெண்ட் கலர் காப்பி பொடி கலர் போன்ற இருட்டு கலர்தான். அதை handloom house இல் வாங்கினால் என்ன cooptex இல் வாங்கினால் என்ன. எல்லாம் ஒன்று தான்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, யானை கலர் என்ன அவ்வளவு மட்டமா? என்னிடம் இந்த யானை கலரில் பச்சைக் கரை போட்ட எல் ஐசி பார்டர் பட்டுப்புடைவை ஒண்ணு இருந்தது. அதைப் பார்த்து எத்தனை பேர் ஆசைப்பட்டிருக்காங்க தெரியுமா? எல்லோரும் அந்தப் புடைவையை ஒருமுறையாவது கட்டிப்பார்க்க ஆசைப்பட்டிருக்காங்க.:)

      Delete
    2. அது சரி, என்னோட புடைவைகளின் கலர் பத்தி உங்களுக்கு எப்படித் தெரியும்? வாய்ப்பே இல்லை! தீபாவளிக்குப் போட்ட படத்தைப் பார்த்துச் சொல்றீங்களோ! இரண்டுமே அருமையான நிறங்கள்! புடைவையின் அகல நீளமும் துவண்டாற்போல் இருக்கும் மென்மையும் மற்றப் படாடோப ஷோரூம் புடைவைகளில் வராது தான். என்னோட ஓட்டு எப்போவும் ஹான்ட்லூம் ஹவுஸுக்கும், கோஆப்டெக்ஸுக்கும் தான். சமீபத்திய ஒடிஷா பயணத்தில் கூட அங்கிருக்கும் அரசைச் சார்ந்த வயோனிகாவில் தான் புடைவை எடுத்தேன். கைத்தறிகள் இம்மாதிரி அரசைச் சார்ந்த கடைகளிலே எடுத்தால் தான் உண்மையான கைத்தறியாகக் கிடைக்கும். அதிலும் பட்டு எனில் கோ ஆப்டெக்ஸை விட்டால் சிறந்த பட்டு வேறெங்கும் இல்லை! நல்லி, குமரன், போத்தீஸ் எல்லாம் விளம்பரம் தான்! :) பட்டு அடிக்கடி அணிந்தவருக்குத் தான் உண்மையான பட்டு எது என்று புரியும். :)

      Delete
    3. https://2.bp.blogspot.com/-LrHSX2x1ZD8/Vb4NOHAhqBI/AAAAAAAAKtg/xONop9sK1g0/w382-h215-p/20150802_175155g.jpg

      Delete
    4. ஆஹா, தேடிப் பிடிச்சுக் கண்டு பிடிச்சுப் போட்டிருக்கீங்க! :) ஹூஸ்டனில் 2004 ஆம் வருஷம் பையரோட குடியிருப்பின் சமையலறையில் பையர் எடுத்த படம்னு நினைக்கிறேன். அந்தப் புடைவை ஓ.சி. அதோடு அது கைத்தறி இல்லை. செயற்கைப் பட்டு இழையால் ஆனது! :) அம்பேரிக்காவில் அப்போ டிசம்பர் மாசமோ, ஜனவரி மாசமோ, அந்தக் குளிருக்கும் (!!!!!!!! அதைவிட அதிகக் குளிர் ராஜஸ்தானில் பார்த்தாச்சு) அங்கே உள்ள வாஷிங் மெஷினின் பிடிவாதத்துக்கும் இம்மாதிரிப் புடைவைகள் தான் கட்ட முடியும்! நான் ஆயிரத்துக்கும் மேல் போட்டு எடுக்கும் கைத்தறிப் புடைவைகளை அந்த வாஷிங் மெஷினில் போட்டால்! அம்புடுதேன்! ஏன், இங்கேயே நான் கையால் தான் தினம் துவைத்துக் கொள்கிறேன். மெஷினில் போடுவதில்லை! கைக்குப் பயிற்சியும் ஆச்சு! :)

      Delete
  9. ஹேண்ட்லூம் ஹௌஸ் இருக்கா!!!!!! அடுத்தமுறை மீண்டும் படை எடுப்பேன்:-)

    நன்றீஸ்ப்பா!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இருக்கு. என்றாலும் ஜூன் மாதம் போல் சென்னை விஜயம் செய்யறப்போ நேரிலும் போய்ப் பார்த்துடறேன்.:)

      Delete
  10. எங்களுக்கு எப்படி ஸ்ரீரங்கம் கோவிலில் ப்ரசாதம் வாங்குவது என்று சொல்லக்கூடாதா? பிராகாரத்தில் ஸ்டால்களில் விற்கப்படும் பக்ஷணங்களும், தயிர்/சர்க்கரைப்பொங்கல்/புளியோதரை போன்றவைகளும் அவ்வளவு நன்றாக இல்லை. பசிக்குச் சாப்பிடலாம். உங்கள் கான்டாக்ட் நம்பர் கொடுத்தால் பேசித் தெரிந்துகொள்வேன். அல்லது உங்கள் பதிவுகளில் இருந்தால் சுட்டி கொடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் கஷ்டமானது! ஏனெனில் ஒவ்வொரு கால வழிபாட்டுக்கும் ஒவ்வொரு நிவேதனம் உண்டு. அந்தச் சமயம் மூலஸ்தானத்தில் பெரிய ரங்குவைத் தரிசித்து விட்டு வெளியே வந்தால் சில சமயங்களில் பிரசாதம் விநியோகம் செய்வார்கள். பெறலாம். ஆனால் குறிப்பிட்ட நேரம் என்று சொல்வது கஷ்டம். புளியோதரை, சர்க்கரைப்பொங்கல், தயிர்சாதம் எனில் மதியம் கிளி மண்டபத்திலேயோ (மூலஸ்தானத்துக்கு எதிரே) அல்லது உள் பிரகாரங்களிலேயோ வைத்துக் கொண்டு பட்டாசாரியார்கள் உட்கார்ந்திருப்பார்கள். வெளியே பிரசாத ஸ்டாலில் பட்டாசாரியார் இருக்க மாட்டார். மேலும் இது உள்ளே உள்ள பிரகாரங்களில் தான் கிடைக்கும். மதியம் சுமார் பனிரண்டரையிலிருந்து இரண்டு வரை கிடைக்கும் என நம்புகிறேன். அதே போல் மாலையில் தோசை, வடை, அப்பம், அதிரசம் போன்றவை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள்ளாகக் கிடைக்கும். பிரசாதக் கடைகளில் எதுவுமே வாங்கக் கூடாது. கோஷ்டியில் நீங்கள் இருந்தால் கவலையே இல்லை. கட்டாயமாய்ப் பிரசாதம் கிடைக்கும். கோஷ்டியின் நேரம் தெரிந்திருக்க வேண்டும். எனக்குத் தெரிந்து உள் ஆண்டாள் சந்நிதியில் ஒன்பதரையிலிருந்து பத்தரைக்குள்ளாக கோஷ்டி நடக்கிறது. அப்போது கொடுக்கப்படும் பிரசாதம் தான் ஒரிஜினல் பிரசாதம்! :) நேரே மடப்பள்ளியிலிருந்து வரும்.

      Delete
  11. ஹலோ, நான் வாங்கி தந்த சாமுத்ரிகா பட்டு புடவை பத்தி ஒன்னுமே சொல்லலையே? :D

    ReplyDelete
    Replies
    1. @தும்பி, நீங்க வாங்கிக் கொடுத்த சாமுத்ரிகா பட்டா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உங்க கல்யாணத்துக்குக் கொடுக்கவேண்டியதே இன்னும் வந்து சேரலை! நினைவிருக்கட்டும். எல்லாத்துக்கும் சேர்த்து எனக்கு இப்போ வரப்போகும் இரண்டு பிறந்த நாளைக்கு (ஆங்கிலப் பிறந்த தேதி, நக்ஷத்திரப் பிறந்த நாள்) ரெண்டுக்கும் வஸ்த்ரகலா ஒண்ணும், சாமுத்ரிகா ஒண்ணுமா வாங்கி அனுப்புங்க! நீங்க ஆன்லைனில் பணம் கட்டிட்டு எனக்கு வவுச்சர் அனுப்பிச்சாப் போதும். டிசைனும், கலரும் நான் தேர்ந்தெடுத்துக்கறேன். :)

      Delete
    2. @ஷோபா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :)

      Delete
  12. Asura:Tale of the Vanquished: The Story of Ravana and His People
    25 April 2012
    by Anand Neelakantan

    இந்த நூலைப் படித்திருக்கிறீர்களா? படித்துப் பாருங்கள்.எழுதியது ஒரு கேரள நம்பூதிரி பிராமணர்.

    ReplyDelete
  13. எந்த ஐடிக்கு? இது வரை எதுவும் வரவில்லை! :(

    ReplyDelete