குழப்பம் என்று ஜிஎம்பி ஐயா அவர்களும் நோக்கம் புரியவில்லை என்று எங்கள் ப்ளாக் ஶ்ரீராமும் சொல்கின்றனர். என்னுடைய நோக்கம் பெண்கள் வேலை பார்ப்பதில் உள்ள கஷ்ட நஷ்டங்களை மட்டும் சொல்வது அல்ல. முக்கியமாய் ஐடி வேலை செய்யும் பெண்கள் படும் சிரமங்களையும் எடுத்துக் காட்டுவது தான். ஆனால் விபரமாகச் சொல்வதில் சில தர்மசங்கடங்கள் இருப்பதால் தொட்டும் தொடாமலும் சொல்லிச் சென்றிருக்கிறேன். ஆனாலும் எனக்குத் தெரிந்தவரையில் ஐடியில் வேலை பார்க்கும் பெண்களை அவர்களின் வேலைத்தகுதியை விட அவர்கள் அழகையே தகுதியாகக் கொண்டு எடுக்கிறார்களோ என்று எண்ண வைக்கிறது.
ஏனெனில் ஒரு சில ஐடி கம்பெனிகளில் வேலைக்குச் சேர்க்கையில் நிரப்பச் சொல்லும் விண்ணப்பப் படிவங்களில் அந்தப் பெண்கள் அழகு நிலையம் சென்று தங்கள் அழகை மேம்படுத்திக் கொள்வார்களா என்றும் அப்படி எனில் அதற்கு மாதம் செலவு செய்யும் தொகை எவ்வளவு என்றும் கேட்பதாக ஒரு தினசரியில் படித்தேன். அவங்க பார்க்கப் போகும் வேலைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? ஒன்றுமில்லை. பார்க்க அழகாக இருக்கும் பெண்களை வைத்து வாடிக்கையாளர்களைக் கவர்வது ஒன்றே அந்தக் கம்பெனியின் நோக்கம் என்று தெள்ளத் தெளிவாகப் புரிகிறது அல்லவா? இதைச் சொல்லி இருப்பது பிரபலமான தமிழ் தினசரி ஒன்றே. அதுவும் சமீப காலங்களில் மிகப் பிரபலமாக இருக்கும் தினசரி!
அப்படி அழகு நிலையம் செல்லும் பெண்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி கொடுக்கையில் வாடிக்கையாளர்கள் முக்கியமாய் ஆண் வாடிக்கையாளர்கள் எப்படிப் பேசினாலும், இரட்டை அர்த்தத்தில் பேசினாலும் அந்தப் பெண்கள் பொறுத்துப் போக வேண்டும் என்று பயிற்சி கொடுக்கப்படுகிறதாகச் சொல்கின்றனர். இது பெண்ணுரிமையா? பெண்களைக் கேவலப்படுத்துவது என்றே எனக்குத் தோன்றுகிறது. அதோடு இத்தகைய அழகு நிலையம் சென்று தங்கள் அழகை மேம்படுத்திக் கொள்ள ஆயிரங்களில் இந்தப் பெண்கள் செலவிட வேண்டி இருக்கிறது. வாங்கும் சம்பளத்தில் அழகு நிலையத்துக்கே சம்பளத்தில் பாதி போய் விடும். பின்னர் மிச்சம் எங்கிருந்து வரும்? ஆனால் இப்போதெல்லாம் அழகு நிலையம் செல்லவில்லை எனில் அந்தப் பெண்ணுக்கு மதிப்பே இல்லை.
கட்டாயமாய் அழகு நிலையம் சென்று முகத்தை ப்ளீச் செய்து கொண்டு புருவங்களைத் திருத்தி, தலை மயிரை விரித்துப் போட்டுக்கொள்ளும் வண்ணம் வெட்டி ஒழுங்கு செய்து கொண்டு வந்தால் தான் அந்தப் பெண்ணுக்கு மரியாதையே கிடைக்கும். வேலையும் கிடைக்கும். ஆனால் இத்தகைய பெண்ணின் பெற்றோர்கள் தங்கள் பெண்களைக் கண்டிக்கவே முடியாது. ஏனெனில் அவர்கள் பெண்ணின் சம்பளத்தைச் சார்ந்திருப்பார்கள். பெண் அதிகம் சம்பாதிப்பாள். அவள் அதிகம் சம்பாதிக்க ஆரம்பித்த பின்னால் ஆண்களோடு சேர்ந்து வெளியே செல்வதும் ஊர் சுற்றுவதும், எல்லாவற்றுக்கும் மேல் சில பெண்கள் நாகரிகம் என்ற பெயரில் மது அருந்துவதும் டிஸ்கோ நடனங்களுக்குச் செல்வதும் வார இறுதிகளில் பார்ட்டி என்று நடு இரவு தாண்டியும் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதுமாக இருக்கின்றனர். இதைத் தட்டிக் கேட்கும் பெற்றோருக்கு மதிப்போ மரியாதையோ கிடைக்காது.
தன் சம்பாத்தியத்தை எத்தனை பெண்கள் ஒழுங்காகக் குடும்பத்துக்குக் கொடுப்பார்கள் என்பதை எண்ணினோம் ஆனால் அதுவும் ஒரு சில பெண்களே இருப்பார்கள். பெற்றோரின் சிரமங்கள், குடும்பக் கஷ்டங்கள் புரிந்து கொண்ட பெண்களே தங்கள் சம்பளத்தைப் பெற்றோரிடம் முழுமையாகக் கொடுப்பார்கள். மற்றவர்கள் தனக்கு என ஒதுக்கிக் கொண்டு கொடுக்கலாம். அல்லது குடும்பத்துக்கு இவ்வளவு தான் என்று கணக்குப் பண்ணியும் கொடுக்கலாம். அது அந்தப் பெண்ணின் இஷ்டம். இதே பெண் கல்யாணம் ஆகிப் போனால் கணவனின் சம்பளத்தைத் தனக்குச் சொந்தம் என்று எண்ணுவாள். ஆனால் தன் சம்பாத்தியத்தைக் கணவனுக்கும் சொந்தம் என்று எண்ணவும் மாட்டாள். கொடுக்கவும் மாட்டாள். தனக்கு எனத் தனியாகத் தான் வைத்துக் கொள்வாள்.
முரட்டுக் கணவனாக இருந்தால் அவளை மிரட்டிப் பணத்தைப் பிடுங்கிக் கொள்ளலாம். நல்ல மனைவியாக இருந்தால் அவளாகவே தன் சம்பளத்தையும் குடும்பத்தில் போடலாம். ஒத்துப் போகிறவர்களாக இருந்தால் இரு சம்பளங்களையும் சேர்த்துக் கணக்குப்போட்டுச் சேமிப்பைப் பொதுவில் வைத்து மற்றச் செலவுகளைச் செய்யலாம். ஒருவரை ஒருவர் கலந்து ஆலோசித்துச் செலவு செய்யலாம். ஆனால் இதற்கெல்லாம் மனப்பக்குவம் நிறைய வேண்டும். பொதுவாக ஆண் தன் சம்பளத்தைத் தனது என எண்ண மாட்டான். திருமணம் ஆகும் முன்னர் பெற்றோரையும் உடன் பிறந்தவர்களையும் காப்பாற்றி வந்தாற்போல் திருமணம் ஆனதும் மனைவி, மனைவி வழி உறவினர்களுக்குச் செய்வதைப் பெரிய விஷயமாக எண்ண மாட்டான். ஒரு சில ஆண்கள் மனைவி வழி உறவினருக்குச் செய்வதைப் பெரிய விஷயமாக எண்ணலாம். பொதுவாக அப்படி இருக்காது. ஆனால் பெண் தன் பக்கம் தன் பிறந்தகத்து உறவினர்களை விடப் புக்ககத்து உறவினர்களையும் அவர்களுக்குச் செய்வதையும் கொஞ்சம் இல்லை நிறைய யோசித்துத் தான் செய்வாள். இதில் விதிவிலக்கான பெண்களைப் பற்றி இங்கே பேசவில்லை.

*
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தம்பி, வாய் விட்டுச் சொல்றது தானே! * இதுக்கு என்ன அர்த்தம்? :(
ReplyDeleteஅழகாக சொன்னீர்கள் சகோ இதில் பெண்ணுரிமை இருப்பதாக எனக்கு தெரியவில்லை மேலும் பெண்ணடிமை என்றே தோன்றுகின்றது
ReplyDeleteஇதற்கெல்லாம் காரணமே பெண்கள்தான் இது ஒரு பெண் எடுக்க கூடிய முடிவு அல்ல ஒட்டு மொத்த பெண் சமூகமே உறுதிபட்டு எடுக்க வேண்டிய முடிவு
உதாரணத்திற்கு ஆண்களின் உள்ளாடைகளுக்கு பெண்களை விளம்பரப்படுத்துகின்றார்கள் இது எவ்வகையில் பொருந்துகின்றது என்பதும் விளங்கவில்லை ஒரு ஆண் அடித்து வரும் வாசனைத் திரவியத்துக்கு மயங்கி அவனது பின்னால் பெண்கள் எல்லோரும் போவதுபோல் காண்பிக்கின்றார்கள் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது
இதை யார் செய்வது ?
பெண்கள் இவ்வகை விளம்பரங்களில் நடிப்பதை தவிர்க்க முன்வரவேண்டும் இது நடக்குமா ? நிச்சயமாக நடக்காது
ஒரு வேதத்தில் சொல்லி வைத்ததை இங்கு குறிப்பிடுகின்றேன்
//குதிரைக்கும், பெண்களுக்கும் மரியாதை இழந்த பின் உலகம் அழியும்வரை திரும்பக் கிடைக்காது//
இது உண்மையாகத்தான் இருக்கின்றது இதைப்பற்றி இன்னும் சொல்லலாம் சகோ கருத்துரையில் முடிக்க முடியாது பதிவில் சந்திப்போம் - கில்லர்ஜி
தங்களை அறியாமலேயே தங்களுக்கு விரிக்கப்படும் வலையில் பெண்கள் விழுகின்றனர். கில்லர்ஜி, இதைக் குறித்து எத்தனை பதிவுகள் எழுதினாலும் முடியாத ஒன்று! :(
Deleteஅன்புள்ள கீதா நீ எழுதியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை. யாரையும் எதுவும் சொல்ல முடியாது. தானாக தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பில்லை. எல்லோருமே ஒரே ரீதியில் போய்க்கொண்டிருக்கின்றனர்.சொல்கின்றவர்கள் இருந்தால் அவர்களுக்கும் ஆபத்துதான்.ஈச்வரோ ரக்ஷது. அன்புடன்
ReplyDeleteஆமாம், அம்மா, ஈஸ்வரோ ரக்ஷது என்று இருக்கலாம்னு பார்த்தாலும் கண்ணுக்கு எதிரே காணும் ஒரு நில அநியாயங்களைப் பார்த்துட்டுச் சும்மா இருக்க முடியலை! :(
Delete//பார்க்க அழகாக இருக்கும் பெண்களை வைத்து வாடிக்கையாளர்களைக் கவர்வது ஒன்றே//
ReplyDeleteஇது எல்லா நிறுவனங்களுக்கும் பொருந்தாது. வாடிக்கையாளர்களைப் பார்க்கத் தேவை இல்லாத நிறுவனங்கள் / அலுவலகங்கள் உள்ளனவே..
பெண்களைப் படிக்க வைக்க வேண்டும். படித்த பெண்களின் படிப்பு வீணாகக் கூடாது. வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டும். தன் காலில் நிற்கும் பெண்களுக்கு மனச்சுதந்திரம் வருகிறது. ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும் என்பது போலவும், ஓடம் வண்டியில் ஏறினாள் வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் என்பது போலவும் இந்த விஷயத்தில் இப்போதைய சுழற்சி இது!
:)))
நீங்கள் வரையறை அற்ற சுதந்திரத்தைக் குறித்துச் சொல்லி இருக்கணுமோ? ஶ்ரீராம், பெண்ணுக்குப் படிப்பு எதற்கு என்பதிலேயே நம்மிருவருக்கும் கருத்து வேறுபாடு இருக்குனு நினைக்கிறேன். அந்த விஷயத்துக்கு அப்புறமாத் தான் வரணும். படிக்கிற படிப்பு பெற்றோரையும்,உற்றோரையும் தூக்கி எறிய அல்ல என்பதை மட்டும் இப்போதைக்குப் புரிந்து கொண்டால் போதும்.
Delete//தன் காலில் நிற்கும் பெண்களுக்கு மனச் சுதந்திரம் வருகிறது!//
Deleteஅப்போ வேலைக்குப் போகாத பெண்களுக்கெல்லாம் மனச் சுதந்திரம் இல்லைனு அர்த்தமா? பொருளாதார ரீதியான பாதுகாப்புனு வேணாச் சொல்லலாம். என்னைப் பொறுத்தவரை கண்டிப்பான அப்பா! அவ்வளவு கண்டிப்பை நீங்க பார்த்திருக்கக் கூட முடியாது. அண்ணா, தம்பியோடு பேசுவது கூட அப்பாவின் கண்காணிப்பில் இருக்கும்! இது ஒரு உதாரணம் போதும்னு நினைக்கிறேன். ஆனால் அப்போவே எனக்குத் தடைகளை உடைக்கும் உத்வேகம் இருந்தது. ஆனால் அது இப்போது இருக்கிறபடி இல்லை! பெண் என்றால் மட்டம், செலவு, பெற்றோருக்குக் கவலை தரும் ஒரு பாரம் என்று எண்ணப்பட்ட நினைப்பை மாற்ற வேண்டும் என்பதே என் குறிக்கோளாக இருந்தது. இப்போது அப்படி இல்லை என்றாலும் கோடையில் ஏற்படும் காட்டுத்தீ போல அவர்கள் அடங்காத் தன்மை கொண்டவர்களாக சமூகத்தையே பாதிப்பவர்களாக ஆகிவிடுவார்களோ என்னும் பயம் ஏற்படுகிறது.
பொருளாதார ரீதியான பாதுகாப்புக்கு எனக்கு வழி இருந்தும் அந்த வழியை அடைச்சதும் நான் தான். இந்த வாழ்க்கையை விரும்பித்தேர்ந்தெடுத்துக் கொண்டேன். யாருடைய தலையீடும் இல்லை; இப்போது அதற்காக வருத்தமும் இல்லை! ஆகவே தன் காலில் பெண்கள் நின்றால் தான் மனச் சுதந்திரம் வரும்னோ, அவர்களால் தகுந்த முடிவெடுக்க முடியுமோ சொல்ல முடியாது. அது பெண்கள் வளரும் விதத்தையும் பெற்றோர் எந்த அளவுக்குப் பெண்களின் மனோபலத்தை வளர்க்கிறார்கள், அவர்களை எதையும் தாங்கும் மனுஷியாக மாற்றுகிறார்கள் என்பதைப் பொறுத்தது!
Deleteநான் நடப்பைச் சொன்னேன். பெண்களுக்கு படிப்பு வேண்டாம் என்பது என் கருத்து என்பது போல நான் எழுதவில்லை என்று நினைக்கிறேன்.
Deleteசம்பாதிக்கும் பெண்கள் தங்கள் குடும்பத்தாரை மதித்து, அன்புடன் இணைந்து பழக வேண்டும் என்பதுதான் என் கருத்தும்.
//இப்போது அப்படி இல்லை என்றாலும் கோடையில் ஏற்படும் காட்டுத்தீ போல அவர்கள் அடங்காத் தன்மை கொண்டவர்களாக சமூகத்தையே பாதிப்பவர்களாக ஆகிவிடுவார்களோ என்னும் பயம் ஏற்படுகிறது.//
Deleteஇங்கே கொஞ்சம் நான் புரியறாப்போல் எழுதலை! "இப்போது இருக்கும் பெண்கள் அப்படி இல்லை என்றாலும் கோடையில் ஏற்படும் காட்டுத்தீ போல அவர்கள் அடங்காத் தன்மை கொண்டவர்களாக சமூகத்தையே பாதிப்பவர்களாக ஆகிவிடுவார்களோ என்னும் பயம் ஏற்படுகிறது.
வாங்க ஶ்ரீராம், படிப்பு வேண்டாம்னு நீங்களும் சொல்லலை, நானும் சொல்லலை! ஆனால் எத்தகைய படிப்பு என்பதிலும் அந்தப் படிப்பினால் பெண்களுக்கு என்ன நன்மைகள் உண்டாகின்றன என்பதைக் குறித்தும் தான் கருத்து வேறுபாடுகள் என நினைக்கிறேன். அதைத் தான் "படிப்பு எதற்கு?" என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன். அதை "பெண் ஏன் படிக்க வேண்டும்?" என்று சொல்லி இருந்தால் இன்னமும் புரிந்திருக்குமோ?
Deleteஸ்டார் போட்றார், உங்க தம்பி. இது நிற்க. நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் உண்மை. நான் பெண்ணிய ஆதரவாளர், பல வருடங்களாக. இல்லறத்திலும் எங்களுக்கு புரிந்த வரையில் அப்படி தான் வாழ்ந்தோம். நான் எத்தனையோ தம்பதிகளின் வாழும் வகை அறிந்தவன், பல நாடுகளில். தற்கால பெண்ணிய போராட்டம் இதையெல்லாம் மறந்து குதிக்கிறது. பெண்களுக்கு மதிப்பு கொடுக்கும்போது, உங்கள் சொற்கள் எடுபடும். மதிப்பு என்பதை அறியாமல் வீராப்பு செய்தால் எல்லாம் சொதப்பல் ஆகி விடும்.
ReplyDeleteஇன்னம்பூரான்
தம்பி ஸ்டார் மட்டும் போட்டுட்டுக் கருத்தே சொல்லாமல் நழுவினதைத் தான் கேட்டேன் "இ"சார். அவர் கருத்து முக்கியம் இல்லையோ! எனக்கும் பெண்ணியம் என்றால் பிடிக்கும் தான். ஆனால் கட்டுப்பாடற்ற சுதந்திரம் தரும் வரைமுறை இல்லாப் பெண்ணியம் இல்லை! உண்மையில் முன் காலங்களை விடவும் இப்போது தான் பெண்கள் மதிப்புக் குறைகிறதோ என்று தான் தோன்றுகிறது.
Deleteநல்ல பதிவு கீதாக்கா. எங்கள் குடும்பத்தில் நல்ல காலம் நீங்கள் சொல்லும் இந்தப் பிரச்சனைகள் இல்லை. என் பணம் உன் பணம் என்ற பிரச்சனை...கருத்துகள் மிகவும் சரியே இப்போது அப்படித்தான் ஆகிவருகின்றது.
ReplyDeleteகீதா: அருமையான பதிவு நீங்கள் சொல்லியிருப்பது போல் கொஞ்சம் மேலாகவே போயிருக்கின்றீர்கள். இப்போது பெண்களின் மன நிலை இப்படித்தான் ஆகி யுள்ளது. விதிவிலக்குகள் இருக்கின்றார்கள்தான்...
//இப்போதெல்லாம் அழகு நிலையம் செல்லவில்லை எனில் அந்தப் பெண்ணுக்கு மதிப்பே இல்லை.// உண்மை உண்மை....
இதற்கு ஒரு வகையில் பெண்களே காரணம் என்பதுதான் எனது கருத்தும். எதற்கெல்லாமோ போராடும் பெண்கள் பணம் என்று வரும் போது பெண்ணுரிமை மறந்து நிலை தடுமாறித்தான் போகின்றனர். உதாரணம் திரைப்படங்கள், விளம்பரங்கள் அதுவும் பெண்களுக்கு எந்த வகையிலும் சம்பந்தமே இல்லாத விளம்பரங்கள் இப்படிப் பல சொல்லிக் கொண்டே போகலாம்....
வாங்க துளசிதரன், எங்க வீடுகளிலேயே இந்தப் பிரச்னையை நிறையப் பார்த்திருக்கேன். :( வேலை பார்க்கும் பெண்கள் சம்பளத்தைச் சொல்வாங்கன்னா வீட்டில் இருக்கும் பெண்கள் பிறந்த வீடுகளிலிருந்து வரும் சீர் வரிசையோடு கொடுக்கப்படும் பணம், மற்றும் சுய சேமிப்பு, உறவினர் வீடுகளில் வைச்சுக் கொடுக்கப்படும் பணம் இவற்றைத் தனியாகத் தான் வைத்திருக்க விரும்புகிறார்கள். அவசரத்துக்குக் கூட கொடுத்து உதவுவதில்லை. :(
Delete@கீதா, அழகு நிலையம் சென்றால் தான் தன்னம்பிக்கை வருமா? நம் திறமையினாலே தன்னம்பிக்கை வராதா? என்னவோ ஒண்ணும் புரியலை! அழகு நிலையம் சென்று முகத்தை அழகாக்கிக் கொண்டவர்களை விட முகத்தைப் பாழ் படுத்திக் கொண்டவர்களையே அதிகம் பார்க்க வேண்டி இருக்கு!
Delete///கட்டாயமாய் அழகு நிலையம் சென்று முகத்தை ப்ளீச் செய்து கொண்டு புருவங்களைத் திருத்தி, தலை மயிரை விரித்துப் போட்டுக்கொள்ளும் வண்ணம் வெட்டி ஒழுங்கு செய்து கொண்டு வந்தால் தான் அந்தப் பெண்ணுக்கு மரியாதையே கிடைக்கும்.///
ReplyDeleteஇது வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் இப்போ கட்டாயமாக ஆகி விட்டது.
//பெற்றோரின் சிரமங்கள், குடும்பக் கஷ்டங்கள் புரிந்து கொண்ட பெண்களே தங்கள் சம்பளத்தைப் பெற்றோரிடம் முழுமையாகக் கொடுப்பார்கள். மற்றவர்கள் தனக்கு என ஒதுக்கிக் கொண்டு கொடுக்கலாம். ///
தந்தை உதவாக்கரை.. சொற்ப சம்பளத்தில் வேலைக்குப் போய் வரும் தாய், தன் மகள் வேலைக்கு வந்தால், தனக்கு உதவுவாள் என்று நம்பியிருக்க, வேலை கிடைத்த பெண்ணோ, 'உனக்குக் கிடச்சா மாதிரி, எனக்கும் புருஷன் கிடைச்சா நான் என்ன பண்ண முடியும்?.. அதனால இப்பவே என் மனசு போல வேணுங்கறத செலவழிச்சுக்கறேன்.. என் சம்பளத்தக் கேக்காதே' என்று குண்டு தூக்கிப் போட்டு விட்டாள்.. நேரில் பார்த்த சம்பவம் இது..
திவாஜிண்ணா சொல்றா மாதிரியே ஸ்டார் பதிவு இது!..
வாங்க பார்வதி, நீங்களாவது நல்லவேளையா உங்க திவாஜிண்ணா மாதிரிக் கருத்துச் சொல்லாமப் போகலை! :P :P :P ஆமாம், பாட்டிமார்களெல்லாம், (யாருங்க அங்கே என்னைப் பாட்டினு சொல்வது? பிச்சுடுவேன் பிச்சு! ஆமாம், சொல்லிட்டேன்.) அழகு நிலையம் போக ஆரம்பிச்சுட்டாங்களே! :)
Deleteபெண்ணியம் பெண் சுதந்திரம் என்பதெல்லாம் புரிந்து கொள்ளப்படும் விதமே வேறாகி விட்டதுஇதை தலைமுறைப் புரிதல் என்று கூறலாமா. எக்செப்ஷனல் கேசஸ் நிறையவே மேற்கோள் காட்டலாம் அழகு நிலையங்கள் செல்பவர்களுக்கு தாங்கள் மீதே ஒரு நம்பிக்கை வருகிறது எங்கும் பளிச் சென்று இருக்க விரும்புகிறார்கள்
ReplyDeleteஆமாம், ஐயா, புரிதலில் கோளாறு! பளிச்சென்று இருப்பது வேறே! அழகு நிலையம் சென்று செலவு செய்வது வேறே! வாரம் ஒரு முறை ஆயிரக்கணக்கில் அழகு நிலையத்துக்குச் சென்றால் செலவு கட்டுப்படி ஆகுமா? அல்லது நான் இன்னமும் பழங்காலத்தில் இருக்கேனோ? செலவு செய்ய வேண்டியதுக்குச் செலவழிக்க வேண்டியது தான். வீட்டிலேயே பல்வேறு விதமான அழகு சாதனங்கள் இருக்க அழகு நிலையம் சென்று செலவு செய்ய வேண்டிய அவசியம் என்ன? பாலில் ஊற வைத்த கசகசா போதுமே முகத்தை ப்ளீச் செய்ய! மூல்தானி மிட்டியை தினம் தேய்த்துக்குளித்தால் சருமம் பளபள! இப்படி எளிதாகச் செய்யக் கூடிய வழிமுறைகளை நம் முன்னோர்கள் காட்டி வைத்திருக்கிறார்கள். இப்படி எத்தனையோ அழகு படுத்திக் கொள்ளும் வழிமுறைகள் உள்ளன.
Deleteஇக்கால பெண்களையும் அவர்களுக்கு விரிக்கப்படும் வலையையும் விரிவாக சொல்லியுள்ளீர்கள்! இதெல்லாம் புரிந்தும் வலையில் வீணாக விழுபவர்களையும் அவர்களை மாதிரி நாமும் இருக்க வேண்டும் என்று விதண்டாவாதம் பண்ணுபவர்களையும் என்ன செய்வது? அருமையான பதிவு!
ReplyDeleteரொம்பச் சரியாச் சொல்றீங்க சுரேஷ், பெரும்பாலும் அக்கம்பக்கம் பார்த்தே பெண்கள் மனம் மாறுகிறது! :( சுயக் கட்டுப்பாடு தேவை!
Deleteஅக்கா,
ReplyDeleteகாலமாற்றம், சிந்தனைத் தெளிவு, சூழல், ஊடகத் தாக்கம் இன்றைய தலைமுறையின் வாழ்க்கை விளையாட்டு விதிகளை ( ஆண் பெண் இருவருக்குமே) மாற்றி அமைத்திருக்கின்றன. இன்றைய இளைஞன் பெண் அலங்காரம் செய்து கொள்வதும், நவீன ஆடைகளை அணிவதையும் பொருட்படுத்துவதில்லை.
பிரச்னையெல்லாம்,கூடவே வாழும் நேற்றைய தலைமுறையினருக்குத் தான். உங்கள் எண்ணங்கள் நடுத்தர,உயர்நடுத்தர வர்க்கத்துப் பெண்கள் பற்றியே கவலை கொள்கிறது. பொருளாதார வசதிகளற்ற ஏழை மற்றும் கிராமத்து பெண்கள் ஏனோ யாருக்குமே பொருட்டல்ல.
//இன்றைய இளைஞன் பெண் அலங்காரம் செய்து கொள்வதும், நவீன ஆடைகளை அணிவதையும் பொருட்படுத்துவதில்லை.//
Deleteஎனக்கு இன்றைய இளைஞர்களிடமிருந்து வரும் தனிப்பட்ட மடல்களிலிருந்து இப்படித் தெரியவில்லை. அந்த மடல்களை வெளிச்சம் போட்டுக் காட்ட முடியாது. உண்மையில் இளைஞர்கள் இப்போது பெண்களைப் பார்த்து பயப்பட ஆரம்பித்திருப்பதே உண்மை! தன் காதலி நவீன உடை அணிந்தால் பொறுத்திருப்பவன் அதே மனைவியான பின்னரும் அதைப் பொறுத்திருப்பானா? பெரும்பாலானவர்கள் பொறுத்துக் கொள்வதில்லை என்பதே உண்மை!
நான் பொதுவாகப் பெண்கள் குறித்தே எழுதுகிறேன் தம்பி. உயர் குடும்பம், உயர் மத்தியவர்க்கம், மத்திய வர்க்கம் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கவில்லை. பொருளாதார வசதிகளற்றவர்களுக்கும் சேர்த்தே தான் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் தான் நீங்கள் சொல்லுவது போல் ஊடகத் தாக்கத்தினால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் இது குறித்து ஏற்கெனவே பலமுறை சொல்லி இருக்கேன். ஆனால் நான் சொல்லுவது செவிடன் காதில் ஊதிய சங்காய்த் தான் போகிறது. ஏன், அவங்க மட்டும் ஆசைப்படக் கூடாதா? உனக்கு என்ன வந்தது? என்று என்னிடம் நேரிடையாகவே கேட்டார் ஒரு பெண்! பொருளாதார வசதியற்ற வீட்டு வேலை செய்யும் பெண் தன் மகளுக்குப் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக ஆயிரம் ரூபாய்க்குத் துணி எடுத்துக் கொடுத்து மேலும் ஆயிரம் வரை செலவு செய்து பிறந்த நாள் கொண்டாடுவது சரியா? அதுவும் வேலை செய்யும் இடத்தில் கடன் வாங்கி? இரண்டு, மூன்று வீட்டில் வேலை செய்யும் பெண் ஒரு வீட்டில் ஆயிரம் ரூபாய்னு வாங்கிக் கொண்டு பெண்ணின் பிறந்த நாளைக் கொண்டாடச் செய்ய உதவுகிறாள். இது எந்த அளவுக்கு நல்லது? இதைத் தான் கண்டிக்க நேர்ந்தது! :( வாங்கிக் கட்டிக் கொண்டேன். :)))))
Deleteஇந்த நிகழ்வைக்குறித்துச் சில வருடங்கள் முன்னரே எழுதி இருக்கேன்! :)
Delete1. "அவர்களின் வேலைத்தகுதியை விட அவர்கள் அழகையே தகுதியாகக் கொண்டு எடுக்கிறார்களோ என்று எண்ண " - நான் இந்தத் துறையில் 26 வருடங்களுக்கு மேல் இருக்கிறேன். நீங்கள் சொல்வது உண்மையல்ல (ஏனென்றால் த்வனி சரியில்லை). எந்த வேலைக்கும், கொஞ்சம் அழகாக (ஸ்மார்ட்) இருப்பவர்களுக்கு, ஆணென்ன, பெண்ணென்ன,, இருவருக்கும்தான், வாய்ப்பு அதிகம். அதுக்காக, மேல்மாடி காலியாக இருக்கும், அழகிகளை எடுத்து என்ன பிரயோசனம். எந்த ஐடி கம்பெனிக்கும் (அல்லது எந்தக் கம்பெனிக்கும்) ரிசெப்ஷனைத் தவிர, அழகிகளுக்கு (அவர்களுக்குமே மேல் மாடியில் கொஞ்சம் இருக்க வேண்டும்) வேலையில்லை.
ReplyDelete2. "அந்தப் பெண்கள் அழகு நிலையம் சென்று தங்கள் அழகை மேம்படுத்திக் கொள்வார்களா என்றும்" - Looking smart is very important. இந்தியச் சூழ்னிலை என்பதாலும் இப்போதுதான் அழகு நிலையங்கள் 'நன்'கு துளிர்விட்டிருப்பதாலும் இதனைக் கேட்கலாம். When facing customer, any staff should look professional. மல்லிகைப்பூவும் கொண்டையுமாக, பழைய ஸ்டைலில் உள்ளவர்களைத் தவிர்க்கத்தான் செய்வார்கள். (for professionalism purposes)
3. "ஆண் வாடிக்கையாளர்கள் எப்படிப் பேசினாலும்" - இது சரியல்ல. இப்படி எந்த கம்பெனி சொன்னாலும், அதற்கும் Mumbai ....ராவுக்கும் வித்தியாசமில்லை. பொதுவாகவே, ஆண்கள் தூண்டில் விட்டுப் பார்ப்பார்கள். வெளி'நாட்டுப் பெண்களை அப்படி அணுக முடியாது. இந்தத் துறையில் 10-15 வருடங்களாகவே, பெண்கள் தலையெடுத்துவருவதாலும், அவர்களும் மாடர்ன் பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொள்வதாலும் (டிரிங்க்ஸ், appealing dress போன்றவை), ஆண்கள் அப்படி அணுக நினைக்கலாம். அதை வெட்டி விடுவது பெண்கள் கையில்தான் இருக்கிறது.
4. "பெற்றோரின் சிரமங்கள், குடும்பக் கஷ்டங்கள் புரிந்து கொண்ட பெண்களே: - இது உண்மை. சாதாரண குடும்பத்திலிருந்து (அப்பாவுக்கு 100 ரூபாய் ஆட்டோ செலவு என்பதே அதிகமாகத் தெரியும்), suddenஆக பெரிய சமூகத்தில் பழக நேர்வதால் (20 ஆயிரம் சம்பளம், high society colleagues etc.) அவர்களுக்கு இணையாகப் பழகவும், புது உலகைத் தெரிந்துகொள்ளவும், அதில் அமிழ்ந்து Practical lifeஐ மறந்து போவதனாலும் இது நடக்கிறது. They feel, parents are தொந்தரவு. இது எல்லாக் காலத்திலும் நடப்பதுதான். பல படங்களில் பார்த்ததுதான்.
5. "பொதுவாக ஆண் தன் சம்பளத்தைத் தனது என எண்ண மாட்டான்" - அப்படியில்லை. அது குடும்பச் சூழலைப் பொறுத்தது. அதுவும் தவிர, தன் பணம் என்று வரும்போது, ஆரம்ப காலத்தில் தன் இஷ்டப்படி செலவு செய்யத்தான் தோன்றும். என் அப்பா, 1 1/2 வருடங்களுக்கு என் பணத்தை என்ன பண்ணுகிறேன் என்றுகூடக் கேட்டதில்லை. நானும் சம்பளத்தைத் தவிர, ரயில் பாஸ் எல்லாம் என் அப்பாவைத்தான் வாங்கித் தரச் சொல்லியிருக்கிறேன். இது வெறும் "தலையெடுக்கும்போது" வரும் எண்ணம்தான். இதில் தவறு இல்லை. ஆனாலும், முழுச் சம்பளத்தையும் பெற்றோரிடம் கொடுக்கின்ற அபூர்வ நல்ல பையனாக இருந்திருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது.