பூஜைக்குத் தயாராகக் காத்திருக்கும் பிள்ளையார்கள், எட்டுப் பிள்ளையார்கள் இடம் பெற்றிருக்கின்றனர். :) இடக்கோடியிலிருக்கும் பிள்ளையார் தான் கீழே விழுந்து சின்னக் காயம் பட்டவர். :(
தேங்காய்க் கொழுக்கட்டை, உளுந்துக் கொழுக்கட்டை, இட்லி, வடை, அப்பம், பாயசம், தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, கரும்பு மற்றும் சாதம், பருப்பு.
அர்ச்சனை நடக்கும்போது
நம்ம ராமர் இன்றைய தினம் அந்தப் பிரதிபலிப்பு இல்லாமல்
கீழே உள்ள பூதேவி, ஶ்ரீதேவி சமேதரான மஹாவிஷ்ணுவுடன் ரிஷபாரூடர், மீனாக்ஷி, அன்னபூரணி போன்றவர்கள்.
தீபாராதனை!
பூஜைப் படங்கள் சிறப்பு. கொழுக்கட்டை தின வாழ்த்துகள்.
ReplyDeleteகொழுக்கட்டை தின வாழ்த்துகள்.
Deleteஆஹா.... அருமை!
ReplyDeleteஹிஹிஹி, நினைச்சால் கொழுக்கட்டை செய்வேன்,முறுக்குச் சுத்துவேன். இப்போ முறுக்கு இம்முறை கிறுக்குப் பண்ணிடுச்சு! கொழுக்கட்டையும் சொதப்ப ஆரம்பிக்குமோ என்னமோ! :)
Deleteபூஜைப் படங்கள் நன்றாக இருந்தன. இப்போது விளாம்பழமும் கரும்பும் வேறு கிடைக்கிறதா. உங்களை 'கொழுக்கட்டை எங்களுக்குக் கொடுத்தீர்களா' என்று கேட்கவிடாமல், நீங்கள் எங்களைக் கேட்கிறீர்களே..
ReplyDeleteவிளாம்பழம் எப்போவுமே கிடைக்குமே. சென்னையில் இருந்தப்போவும் விளாம்பழம், கரும்பு இல்லாமல் நிவேதனம் செய்ததில்லை. ஹிஹிஹி, கொழுக்கட்டை நாம தானே பிள்ளையாருக்குக் கொடுக்கணும்.
Deleteஅருமை...
ReplyDeleteநன்றி.
DeleteSuper
ReplyDeleteநன்றி.
DeleteSuper naanum correctaa 5 kolukattai 4 mothagam 1 uppu pillayar panni swaga panniyache
ReplyDeleteஹிஹிஹி, படத்திலே பார்த்துக்குங்க.
Deleteஎல்லோர் வீட்டிலேயும் கொழுக்கட்டை என்பதால் நேத்துப்போட்ட இந்தப் பதிவுக்கு மக்கள் கூட்டம் அதிகமா இல்லை! :)
Deleteஎங்க ஊருல எங்கேயும் கொழுக்கட்டை கிடைக்காது என்பதால் படத்தை zoom பண்ணிப் பார்த்து த்ருப்திப்பட்டுக்கொண்டேன். பிள்ளையார் சதுர்த்தி அன்னைக்கு 12 மணி வாக்கில் சொல்லாமல் கொள்ளாமல் வந்தாலும் (அட்'ரஸுக்குத்தான் இருக்கவே இருக்கு, மாடி, வீட்டு சைடுல எடுத்த புகைப்படங்களும், அம்மா மண்டபத்துக்கு அருகே என்ற குறிப்பும்) வர்றவங்களுக்கு சாப்பிட ஏகப்பட்ட ஐட்டம் இருக்கு.
Deleteஉங்க ஊர் எந்த ஊர்? நேத்திக்குக் கொழுக்கட்டை இங்கே உள்ள செக்யூரிடிக்கும் கொடுத்தோம். :) அவருக்கும் தான் கொடுக்க யார் இருக்காங்க! :)
Deleteஉங்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஇங்கே எங்க வீட்டிலேயே கொழுக்கட்டை சாப்பிட்டாச்சு!
வாங்க வெங்கட், நீங்க சாப்பிட்டீங்க சரி, பிள்ளையாருக்குக் கொடுத்தீங்களாங்கறது தான் கேள்வியே!
Deleteசிரிப்பான் போட மறந்துட்டேன். :)
Deleteகரும்பு சாதம்?????
ReplyDeleteஹிஹிஹி, கரும்பு, சாதம்னு வந்திருக்கணும். கமாவைச் சரியா அழுத்தலை போல! முகநூலில் என் மாமா பொண்ணும் கேட்டிருந்தாள். :)
Deleteதிருத்திட்டேன் தம்பி.
Deleteநான் கொழுக்கட்டையை பிள்ளையாருக்குக் காட்டிண்டு, சாப்பிட்டுவிட்டேன். நம்ம கன்ஸ்தானே.
ReplyDeleteஹாஹா, எல்லோருமே பிள்ளையாருக்குக் கொழுக்கட்டையைக் காட்டறது தானே வழக்கம். அவர் நிஜம்மாச் சாப்பிட்டார்னா நாம காட்டுவோம்?
Deleteயார் எது செய்கிரார்களோ அவர்களிஷ்டம் என்று விட்டாகிவிட்டது. வேளைக்குப் போகிறவர்கள் செய்தவரையில் கொண்டாடுவோம். எப்போதுமே நீங்கள் சாஸ்திரம் தப்பாமல் ஸந்தோஷமாக இருக்கிறது.ஷட்ட சோபிதமாக இருக்கு உங்கள் நிவேதனம். அன்புடன்
ReplyDeleteஇப்போதெல்லாம் பெரிய பெரிய பக்ஷணக்கடைகளில் முன்கூட்டியே தயார் செய்யப்பட்ட கொழுக்கட்டைகள் விற்பனைக்கு வருகின்றன. பலரும் அதை வாங்கித் தான் நிவேதனம் செய்யறாங்க. முன்னெல்லாம் வட மாநிலம் போன புதுசில் அங்கே மக்கள் லட்டு, பேடா என்று கடையில் வாங்கி வந்து கடவுளுக்கு நிவேதனம் செய்து பிரசாதம் என்று எடுத்துச் செல்வதைப் பார்க்கையில் வியப்பாக இருக்கும். இப்போ இங்கே தமிழ்நாட்டிலேயே அப்படி வந்தாச்சு! கூடியவரை முடிஞ்சதைச் செய்வோம்னு பண்ணிட்டு இருக்கேன்! எனக்கப்புறமா என்னனு தெரியாது! :)
Deleteகொழுக்கட்டையை பிள்ளையார் சாப்பிடுவாரானால் அவருக்குக் காட்டக் கூட மாட்டார்கள்
ReplyDeleteஹாஹா, பிள்ளையாருக்குப் பதிலா ஆனையார் இருக்காரே! நிவேதனம் பண்ணித் தனியாக அவருக்கு எடுத்து வைச்சுடலாம்! பிள்ளையார் சாப்பிட்டாப்போல் ஓர் நிறைவும் இருக்கும். :)
Deleteகொழுக்கட்டைக்கு நேத்திக்கு நல்ல கூட்டம் வந்திருக்கு! முந்தாநாள் செய்தது நேத்து நல்லா இருக்காதே! :)
Deleteதங்கள் பதிவு மூலமாக மறுபடியும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம். நன்றி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!
Deleteமோதகத்துக்கும் கொழுக்கட்டைக்கு வித்தியாசம் உண்டுதானே? மோதகம் (சமோஸா போல)ஆனால் கோதுமை மாவில் பூரணம் வைத்து எண்ணெயில் பொரித்து எடுப்பது இல்லை?
ReplyDeleteமோதகம் என்பதைப் பற்றி நேத்தித் தான் அமைதிச் சாரலின் முகநூல்ப் பதிவிலே கருத்துச் சொல்லி இருந்தேன். அவங்க பிடிச்சு வைச்சாக் கொழுக்கட்டை, பூரணம் வைச்சுப் பண்ணினா மோதகம்னு சொல்றாங்க. எங்க பக்கம் அப்படிச் சொல்ல மாட்டோம். தேங்காய்ப் பூரணம் வைச்சது தேங்காய்க் கொழுக்கட்டை, கடலைப்பருப்பு+தேங்காய்+வெல்லம் சேர்த்துப் பூரணம் கிளறிப் பண்ணுவது தான் மோதகம் போல் மூடுவோம். தேங்காய்க் கொழுக்கட்டை எல்லாம் நீளவாக்கில் சமோசா போல் தான் மூடி இருப்போம். இதைத் தவிரவும் எள்+தேங்காய்+வெல்லம் சேர்த்தும் கொழுக்கட்டை பண்ணுவது உண்டு. பிள்ளையாருக்கு இந்தக் கடலைப்பருப்புக் கொழுக்கட்டையும், எள்ளும் தான்மிகமுக்கியம் என்பார்கள். நீங்க சொல்லும் கோதுமை மாவு, மைதா மாவு, ரவை போன்றவை சேர்த்துப் பூரணம் வைத்து எண்ணெயில் பொரித்து எடுப்பது நெய்க்கொழுக்கட்டை என்பார்கள். கணபதி ஹோமத்துக்கு அது தான் பண்ணுவோம்.
Deleteஸ்ரீராம் பொரித்தெடுப்பதுதான் மோதகம். கீதாக்கா சொல்லுவது போல் கொழுக்கட்டையும் மோதகம் என்று சொல்லுவதுண்டு.
Deleteதங்கள் பதிவுகளை இங்கும் பதியலாம் http://tamiln.in/
ReplyDelete