எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, September 30, 2016

நவராத்திரிப் பதிவுகள், கொஞ்சம் மீள், கொஞ்சம் கொசுவத்தி!

இன்னும் கொலு வைக்க ஆரம்பிக்கவில்லை. நாலரை மணிக்கு மேல் தான் கோலமே போடணும்! வழக்கமான உற்சாகம் இல்லைனே சொல்லணும்.ஒரு வேளை நவராத்திரி ஆரம்பிச்சதும் களை கட்டுமோ என்னமோ தெரியலை. போகப் போகத் தான் தெரியணும். நேத்திக்குப் பெரிய ரங்குவைப் பார்த்துட்டு வந்தேன்.

நேத்திக்கு ரங்குவைப் பார்க்கக் கூட்டம் அதிகமில்லை. ஆனால் இன்னிக்குப் போயிருக்கவே முடியாது! தெருவே கூட்டம் தாங்காமல் போக்குவரத்தை மாத்திட்டு இருந்திருக்காங்க. நம்பெருமாளையும், யாகபேரரையும் மற்றும் உபய நாச்சியார்களையும் நன்கு தரிசித்தோம். தாயாரையும் நன்கு தரிசிக்க முடியுது.ஒரு மாசமா அடிக்கடி போவதாலோ என்னமோ இப்போல்லாம் பட்டாசாரியார்கள் ரொம்பவே விரட்டறதில்லை.ஆனால் வழி தான் சுத்திக் கொண்டு தொண்டைமான் மேட்டில் ஏறிக் கீழே இறங்கினு கஷ்டப்பட வேண்டி இருக்கு! என்றாலும் விடறதில்லை. போயிட்டு வந்துடறோம். மற்ற சந்நிதிகளையும் பார்க்கணும்னா கூடவே இரண்டு, மூன்று மணி நேரம் ஆகும் என்பதோடு அங்கெல்லாம் நடக்க முடியவும் இல்லை. ஒரு நாள் தனியாக ஒதுக்கி மற்ற சந்நிதிகளைப் பார்க்கணும். கோயிலில் ஆயிரக்கால் மண்டபத்தில் நவராத்திரி கொலு காட்சியும், தாயாருக்கு நவராத்திரி உற்சவமும் ஆரம்பிச்சாச்சு. நவராத்திரி உற்சவத்துக்குப் போக முடியலைனாலும் நவராத்திரி கொலு காட்சிக்குப் போகணும்னு நினைக்கிறேன். பார்க்கணும். இந்த வருஷம் நவராத்திரி மட்டும் பத்து நாட்கள் வருகின்றது. பதினோராம் நாள் செவ்வாயன்று தான் விஜயதசமி.

நவராத்திரிப் பதிவுகள் ஏற்கெனவே போட்டாச்சு. என்றாலும் திரும்ப நினைவூட்டலுக்குப் போடறேன். நாளைய நிவேதனம் என்னனு இனிமேல் தான் யோசிக்கணும். ஒரு மாதிரி முடிவு செய்து வைச்சிருந்தாலும் கொஞ்சம் வெளியே போக வேண்டி இருப்பதால் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்க்கணும். நிவேதனம் பண்ணியதும் கொலுவையும் சேர்த்து வழக்கம் போல் படம் வரும்! காமிரா ஏதோ தகராறு செய்யுது! செல்லில் எடுத்து யாருக்கானும் அனுப்பிப் பின்னர் அவங்க எனக்கு அனுப்பிப் போடணும். பார்க்கலாம். காமிராவுக்கு என்ன உடம்புனு பார்க்கிறேன். கீழே நாளைய தினத்துக்கான நவராத்திரிக் குறிப்புகள்.
*********************************************************************************


படத்துக்கு நன்றி விக்கி பீடியா

நவராத்திரி முதல்  மூன்று நாட்கள் அம்பிகையை துர்கையாக நினைத்து வழிபட வேண்டும். துர்கதியிலிருந்து நம்மை நற்கதிக்கு மாற்றும் வல்லமை கொண்டவள் துர்கை! இன்றைய தினம் 2 வயதுப் பெண் குழந்தையை பாலையாக நினைத்து வழிபட வேண்டும்.

பாலாம்பிகா க்கான பட முடிவு

ஒரு சிலர் குமாரியாகவும் வழிபடுவார்கள். இன்றைய தேவி சைலபுத்ரி ஆவாள். இவள் தான் மலைமகள் என அழைக்கப்படும் பார்வதி தேவி ஆவாள். பவானி, பர்வத குமாரி என்றெல்லாம் அழைக்கப்படுபவள் இவளே. வலக்காலை ஊன்றி இடக்காலைத் தூக்கி ஈசன் ஆடிய ஆனந்த தாண்டவத்தின் ரிஷிமண்டலத்தில் தோன்றியவள் இவள்.

சைலபுத்ரி க்கான பட முடிவு


நவராத்திரி முதல்நாளன்று அரிசி மாவினால் பொட்டுக் கோலம் போடவேண்டும். வில்வ மலர்கள் விசேஷம் என்றாலும் மல்லிகை, சிவப்பு அரளி போன்றவையும் உகந்ததே! இன்று காலை வழிபாட்டின்போது வெண்பொங்கல் நிவேதனம் செய்யலாம். மாலை பாசிப்பயறுச் சுண்டல் இனிப்பு, காரம் இரண்டும் செய்யலாம். அல்லது வெண் மொச்சைச் சுண்டல் செய்யலாம்.

வெண் பொங்கலுக்கு ஒரு கிண்ணம் பச்சரிசியும், கால் கிண்ணம் பாசிப்பருப்பையும் நன்கு வாசனை வர வறுக்கவும். குக்கரில் வைப்பதென்றால் களைந்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூன்று கிண்ணம் நீர் ஊற்றிக் குழைய வேக வைக்கவும். நேரடியாகக் கிளறுவதானால் உருளி அல்லது வெண்கலப்பானை என்றால் நல்லது. முதலில் கொஞ்சம் நெய்யும், பாலுமாகச் சேர்த்துக் கொண்டு பால் 200 கிராம் தாராளமாக எடுத்துக்கலாம். அதில் பாசிப்பருப்பைக் களைந்து போட்டு வேக வைத்துக் கொண்டு பின்னர் பாசிப்பருப்பு முக்கால் பதம் வெந்ததும் அரிசியைக் களைந்து போட்டு தேவையான நீர், மற்றும் இன்னும் கொஞ்சம் பால் சேர்த்துக் கிளறவேண்டும். அரிசியும் பருப்பும் குழைந்து வந்ததும், பக்கத்தில் ஓர் வாணலியில் அரைக்கிண்ணம் நெய்யைக் காய வைத்து அதில் மிளகு, ஜீரகம் முழுதாகப் போட்டுக் கருகப்பிலை, இஞ்சி, மஞ்சள் தூள் (தேவையானால்) சேர்க்கவும். பின் அந்த நெய்யோடு பொங்கலில் கொட்டி, தேவையான உப்புச் சேர்த்துக் கிளறவும். நெய் தேவையானால் பார்த்துக் கொண்டு விடவும். இம்முறையில் வெண்பொங்கல் நல்ல மணமாக இருக்கும். வெண்பொங்கலுக்குப் பாலா என்பவர்கள் ஒரு முறை விட்டுத் தான் பாருங்களேன். அப்புறமாப் பால் விட்டே வெண்பொங்கல் செய்வீர்கள். முந்திரிப்பருப்பு தேவையானால் போடலாம்.

குக்கரில் என்றால் நன்கு குழைய வெந்ததும் வெளியே எடுத்துக் கடாயில் நெய்யையும் பாலையும் சேர்த்து ஊற்றிக் கொண்டு குழைந்த பொங்கலை அதில் சேர்த்து உப்புப் போட்டுக் கிளறவும். இன்னொரு கடாயில் கொஞ்சமாக நெய்யை ஊற்றிக் கொண்டு முந்திரிப்பருப்புச் சேர்த்தால் முதலில் அதை வறுத்து எடுத்துக் கொண்டு பின்னர் மேலே சொன்னமாதிரி மிளகு, ஜீரகம், கருகப்பிலை, இஞ்சி சேர்த்துக் கொள்ளவும். தாளிதத்தைப் பொங்கலில் சேர்க்கவும். குக்கரில் பொங்கல் செய்தால் நெய்யோ, பாலோ கூடச் சேர்க்க வேண்டி வரும். கொஞ்சம் காய்ந்தாற்போல் பொங்கல் இருக்கும். வறண்டு இருக்கும். ஆகையால் நெய்யும், பாலும் நிறையச் சேர்த்தால் தளதளவென்று வரும்.

மொச்சையை முதல் நாளே ஊறப் போடவும். மறுநாள் மாலை அதை நன்கு குழைய வேக வைத்துக் கொள்ளவும். தாளிக்கக் கடுகு, மிவத்தல், பெருங்காயம், கருகப்பிலை, தேங்காய்த் துருவல் ஆகியவை தேவை.
வேக வைத்த மொச்சையை நீரை வடித்துக் கொண்டு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு தாளித்துக் கொள்ளவும், மி.வத்தல் ஒன்றிரண்டு போட்டுக் கொண்டு, கருகப்பிலை சேர்த்து வேக வைத்த மொச்சையைப் போட்டு வதக்கவும். பெருங்காயப் பவுடர் எனில் அதை எண்ணெயிலேயே போடலாம். பெருங்காயம் கட்டி எனில் நீரில் ஊற வைத்துக் கொண்டு ஜலத்தை வதக்கும்போது சேர்த்துக் கொண்டு தேங்காய்த் துருவலும் சேர்த்துக் கிளறவும். இதற்கு மி,வத்தல், கொத்துமல்லி விதையை வறுத்துப் பெருங்காயத்தோடு சேர்த்துப் பொடி செய்து வைத்துக் கொண்டும் போடலாம் ஆனால் ஒரு நாள் பண்ணியது மீதம் இருந்தால் மறுநாள் சுண்டலுக்கான நிவேதனத்தில் ஏற்கெனவே சாப்பிட்டதில் மீதத்தைப் பயன்படுத்த முடியாது. ஆகையால் நான் மி.வத்தலே போட்டு விடுவேன். அவரவர் வசதிப்படி செய்து கொள்ளவும்.

இதிலே எழுதி இருக்கும்படி நிவேதனம் நான் செய்வதில்லை. ஏனெனில் எங்க வீட்டில் நவராத்திரி பூஜை இல்லை. ஆகவே எனக்கு என்ன செய்ய முடியுமோ அதான் நிவேதனம். :) இது நாளைய தினம் செய்ய வேண்டியது. இன்றே ஒரு நாள் முன் கூட்டியே சொல்கிறேன். இரண்டாம் நாளுக்கான தகவல்கள் நாளைக்கு வரும்! :)

20 comments:

  1. இந்த பெரிய ரங்கு இருக்காரே! நல்ல கைகாரர். ஒரு நாள் செமத்தியா எனக்கு சர்க்கரை குறைந்த வேளையில் சக்கரைப்பொங்கள் ஊட்டினாரா! ஷைலஜாவுக்குத் தெரியும். நீங்கள் போட்டோ அனுப்பினா, நான் அதை அனுப்றேன்.

    ReplyDelete
    Replies
    1. பெரிய ரங்குவைப் படம் எடுக்க அனுமதி கிடைக்காது ஐயா! ஆனால் அவர் கண் மூடி இருந்தாலும் மனசுக்குள்ளே எல்லாத்தையும் பார்க்கிறார். :)

      Delete
  2. நல்ல சுவைத்து ரசித்தோம்...

    கீதா: வெண்பொங்கல் இப்படியும் செய்வதுண்டு அக்கா. அது சரி வெண்பொங்கல் என்று சொல்லிவிட்டு மஞ்சள் பொடி எதுக்கு??!!!!!! ஹிஹிஹி..

    2 வயதுப் பெண் குழந்தையை பாலையாக நினைத்து வழிபட வேண்டும். // பாலை என்பதற்குப் பதிலாகப் பாவை என்றிருக்க வேண்டுமோ அக்கா..

    ReplyDelete
    Replies
    1. No, Geetha, She is Balambigai. Bala, Balai! Pavai is not correct. That is why I attach the Balambiga's picture also. She is in the middle sitting on a lotus!

      Delete
    2. மஞ்சள் பொடி நான் சேர்ப்பதில்லை. பருப்பின் நிறமே வந்துடும், ஒரு சிலருக்கு மஞ்சள் பொடி போடலைனா அது பொங்கலாவே தெரியாது! அதான்! :)

      Delete
  3. நல்ல தகவல்கள். நவராத்திரி வாழ்த்துகள். செல்லில் எடுக்கும் படங்களை செல்லிலிருந்து என் மெயிலுக்கு நானே அனுப்பிக் கொள்வேன். கணினியில் இறக்கி, பதிவில் சேர்த்து விடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஶ்ரீராம், என் செல்லில் மெயில் ஆப்ஷனே வரமாட்டேங்குதுனு முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே ஒரு முறை உங்க வாட்ஸப் மூலமா நீங்க என் மெயிலுக்கு அனுப்பிப் போட்டேன், நினைவிருக்கா? :)

      Delete
    2. நல்லா நினைவிருக்கும். இப்பவும் தாராளமா அனுப்புங்க... அனுப்பறேன்.

      Delete
    3. இன்னிக்கு எடுத்துட்டு அனுப்பறேன். சீக்கிரமா அனுப்பி வைச்சால் இன்னிக்கே சேர்க்கலாம்! :)

      Delete
  4. நவராத்திரி முதல் நாள் சனிக்கிழமை ஆரம்பம்.

    நைவேத்தியம் எள் உருண்டை சிலாக்கியம்.

    1008 செய்யணும்.

    செய்முறை விளக்கம் தேவை.

    சுப்பு தாத்தா.

    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. என் பிறந்த வீட்டில் அப்பாவுக்கு எள்ளே பிடிக்காது! ஆகையால் நோ எள் உருண்டை, எள் சாதம் போன்றவை. இங்கே புக்ககத்தில் பிடிக்கும் என்றாலும் நவராத்திரியில் பண்ணுவது இல்லை! :) பழக்கம் கிடையாதுனு மாமியார் சொல்வார். இன்னிக்குப் பெருமாளுக்கும், அம்பாளுக்கும் எள் சாதம் (காரம்), சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்தேன்.

      Delete
  5. ஏதோ நேரில் பேசுவதுபோலவே இருந்தது பதிவு நன்று

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  6. Geethamma neengalum video eduthu youtubil podalaame ?? #oru suggestion avlovae :)

    ReplyDelete
    Replies
    1. நமக்கு இது போதும் நாஞ்சிலாரே! அதிக விளம்பரமெல்லாம் வேணாம்! :)

      Delete
  7. நவராத்திரி வாழ்த்துகள். துர்காவுக்கான நாட்கள் சிறக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வல்லி. இப்போ எங்கே இருக்கீங்கனு தெரியலை! :)

      Delete
  8. நவராத்திரி வாழ்த்துக்கள்.
    பதிவு அருமை.

    ReplyDelete
  9. எங்கள் வீட்டில் இரண்டு வருடங்களாக கொலு வைப்பதை நிறுத்தி இருக்கிறாள் என் மனைவி. ஆனாலும் சுவாமித்தட்டில் இரண்டு மரப்பாச்சி பொம்மைகளை வைத்துத் திருப்தி அடைகிறாள் வீட்டில் 108 தாமரை மலர் பொறித்த இருபது பைசா காசுகளால் தினமும் அர்ச்சனை செய்வாள்

    ReplyDelete
  10. நவராத்ரி பதிவுகள் - சிறப்பாக ஆரம்பித்திருக்கிறது..... தொடரட்டும்.

    ReplyDelete