எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, October 29, 2016

தீபாவளி கொண்டாடியாச்சா? அனைவருக்கும் வாழ்த்துகள்!

ராமர் உம்மாச்சி விளக்கின் பிரதிபலிப்பு வராமல் இன்னிக்குப் படம் எடுக்க முடிஞ்சது! 


கீழே உள்ள உம்மாச்சிங்க எல்லாரும்! 


நல்லெண்ணெய் காய்ச்சியது, சீயக்காய், மஞ்சள் தூள், ஸ்பூன் போட்டுத் தட்டுப் போட்டு மூடி இருப்பது தீபாவளி மருந்து அப்புறம் பட்சண டப்பாக்கள் வெற்றிலை, பாக்கு, பழம், புடைவை, வேஷ்டி! மேலே உள்ள புடைவையைத் தான் தீபாவளிக்குக் கட்டிக் கொண்டேன். அடியில் உள்ளது அப்புறமாக் கட்டிக்கலாம்னு வைச்சிருக்கேன். இரண்டுமே கைத்தறிப் புடைவைகள். கோ ஆப்டெக்ஸில் எடுத்தவை!

பட்சணங்கள், பால், தூக்கிலும் பால், மருந்து சின்னக் கிண்ணம், தேன் குழல், ஓமப்பொடி, பாதாம் அல்வா கொஞ்சம் போல பச்சைப்பயறு லாடு, தேங்காய் பர்ஃபி, மிக்சர் ஆகியன நான் செய்த பட்சணங்கள். இப்போச் சில வருடங்களாக ஒரே ஒரு உப்புப் பட்சணமும் ஒரே ஒரு லாடு இல்லைனா கேக் வகையும் பண்ணிக் கொண்டிருந்தேன். இந்த வருஷம் எங்க பையருக்குப் பதினோரு வருடங்கள் கழித்துப் பெண் குழந்தை போன மாதம் பிறந்திருக்கிறபடியால் பேத்தி வந்திருக்கும் சந்தோஷத்தில் மூணு ஸ்வீட்! (சாப்பிடத் தான் பயம்மா இருக்கு, விநியோகம் தான் செய்யணும்!) தேன்குழல் தவிர, ஓமப்பொடி, மிக்சர் ஆகியனவும் செய்துட்டேன்.

அப்புவோடு ஸ்கைபில் பார்த்துப் பேசிப் புடைவையைக் காட்டி, பட்சணங்களையும் காட்டிட்டேன். அப்புவுக்கு பட்சணங்களைப் பார்த்ததும் இந்தியாவுக்கு ஓடி வரணும் போல் இருந்தது! என்ன செய்ய முடியும்! :( ஏதேனும் ஒரு தீபாவளிக்காவது அவங்க இந்தியா வரணும்னு ஆசை தான்! ஆனால் தீபாவளியோ டிசம்பரிலோ அல்லது ஜூலை, ஆகஸ்டிலோ வராமல் அக்டோபர், நவம்பரில் வருது! அப்போ அவங்களுக்கு இங்கே வர முடியாது! :( கடந்த காலத்தை நினைவு கூர்ந்துக்க வேண்டியது தான்.

சின்னச் சின்ன டப்பாக்களில் பட்சணத்தைப் பார்த்த எங்க பொண்ணுக்குத் தான் ஆச்சரியம் தாங்கலை. இதையே நாங்க தின்னு தீர்க்கணுமேனு இப்போவே கவலையா இருக்கு! முன்னெல்லாம் தீபாவளிக்கு ஒரு மாசம் முன்னரே எண்ணெய் சேகரிப்பு, சர்க்கரை சேகரிப்புனு நடக்கும். இன்றிரவு நரக சதுர்த்தசி ஸ்நானம்னா ராத்திரி பத்து மணிக்குத் தான் தீபாவளிக்கு வைச்ச எண்ணெய்ச் சட்டி அடுப்பிலிருந்து கீழே இறக்கப்படும். ராத்திரி படுக்கப் பதினோரு மணி ஆயிடும். திரும்பக் காலையிலே இரண்டு இரண்டரைக்கு எழுந்தால் தான் எல்லாம் தயார் செய்துட்டுக் குழந்தைங்களை நான்கு மணிக்கு எழுப்பிக் குளிக்க வைக்க முடியும். அப்போல்லாம் இருட்டோடு புடைவையும் கட்டிக் கொண்டு ஆயிடும். இப்போ இன்னிக்கு மூன்றரைக்கு எழுந்தே எல்லா வேலைகளையும் முடிச்சுக் குளிக்கையில் ஐந்தரை ஆயிடுச்சு!

முன்னெல்லாம் ஒரு வாரம் பட்சணம் செய்து கொண்டிருந்த காலமும் போயாச்சுனு சொன்னேன். இப்போல்லாம் மிஞ்சிப் போனால் காரம் செய்ய ஒரு மணி நேரமும் தித்திப்பு செய்ய அரை மணி நேரமும் தான். ஒரு நாளைக்கு இரண்டே மணி நேரத்தில் தேன் குழலும், தேங்காய் பர்ஃபியும் செய்து முடித்தேன் என்று சொன்னேன்.

ரொம்பவே சுயப் பிரதாபமோ! ஓகே. அனைவருக்கும் இந்த நரக சதுர்த்தசி நாளில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவ வாழ்த்துகள்.  நரகாசுரன் கதை எல்லாம் கடந்த நூறு வருடங்களுக்குள்ளாக வந்தது எனவும், உண்மையில் நரகத்திலிருந்து விடுதலை பெற வேண்டியே இந்தச் சதுர்த்தசி நாளைக் கொண்டாடுகிறோம் எனவும் ஞானமாகிய வெளிச்சம் பெற வேண்டியே தீபங்கள் ஏற்றிக் கொண்டாடுகிறோம் எனவும் சில நாட்கள் முன்னர் தான் யாரோ, எதிலோ எழுதிப் படிச்சேன்.

காரணம் எதுவாயினும் பண்டிகை கொண்டாடுவதால் நம் உடல், மனம் இரண்டுக்கும் மாற்றங்கள் கிடைக்கின்றன. மேலும் இப்போதெல்லாம் முன்னை மாதிரி உடலை வருத்திக் கொண்டு பட்சணங்கள் செய்து பண்டிகை கொண்டாடுவதும் இல்லை. என்றாலும் பெரும்பாலோர் வீட்டிலேயே செய்கிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. அனைவருடனும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் பரிமாறிக்கொண்டு இனிப்புகளையும், காரங்களையும் கொடுத்து மாற்றிக்கொண்டு உறவு கொண்டாடிக் கொண்டு இணக்கமான சூழ்நிலையில் வாழ்வதற்காகவே பண்டிகைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள். எங்கேப்பா என்னோட தம்பிங்கல்லாம்! வரிசையா வந்து சீ(ரு)றுங்கப்பா! எது கொடுத்தாலும் வாங்கிப்பேன். ஒரு சவரன் காசாக இருந்தாலும் போதும்! நமக்கெல்லாம் பேராசையே கிடையாதுனு உங்களுக்கெல்லாம் நல்லாத் தெரியுமே! :)

28 comments:

 1. //முன்னெல்லாம் ஒரு வாரம் பட்சணம் செய்து கொண்டிருந்த காலமும் போயாச்சுனு இப்போல்லாம் மிஞ்சிப் போனால் காரம் செய்ய ஒரு மணி நேரமும் தித்திப்பு செய்ய அரை மணி நேரமும் தான்//

  இதுதான் இன்றைய உண்மை நிலை அனைவர் வீட்டிலும் தங்களுக்கும் இனிய தீபாவள் வாழ்த்துகள் அபுதாபியிலிருந்து....

  ReplyDelete
  Replies
  1. மன்னிக்கவும் தீபாவளி என்று படிக்கவும்

   Delete
  2. ஆமாம், கில்லர்ஜி, இப்போதெல்லாம் யாரும் ரொம்பவே கஷ்டப்படுத்திக்கிறதில்லை! ஆனாலும் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடுவது அதிகரித்தே இருக்கிறது.

   Delete
 2. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம், என்ன சுருக்கமா?

   Delete
 3. தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்கள் எல்லோருக்கும்.

  மூணாவது படத்தைப் பார்த்ததும், என்ன பண்ணியிருக்கோம் என்று கூட கடவுளுக்குக் காட்டாமல் (எங்க எடுத்துக்கொண்டுவிடுவாரோ என்று எண்ணி), டப்பாக்களை இறுக்க மூடி வச்சிருக்காங்களே என்று தோன்றிற்று.

  நாலாவது படத்தைப் பார்த்தால், ஓமப்பொடி காணோம். தேன்'குழலுக்கு அடுத்த டப்பா கொஞ்சம் சிவந்த நிறமாக ஏதோ இருக்கிறது. பாலுக்கு (அல்லது தயிருக்கு) அடுத்த டப்பாவை இன்னும் இறுக்கமாக மூடிவைத்திருக்கிறீர்கள்.

  யாரையும் கூப்பிடாமல், எப்படி செலவழியப்போகிறது என்று ஏன் யோசிக்கிறீர்கள்? எங்களுக்குச் சொன்னால், வரமாட்டோமா அல்லது குரியர் செய்ய அட்'ரஸ்தான் கொடுக்க மாட்டோமா?

  மிக்சரில் உள்ள ஒரு ஐட்டம் பொதுவாக வருவதை விடப் பெரியதாக இருக்கிறது. மிக்சருக்கு மேல் உள்ள இனிப்பும், அதற்கு மேல் உள்ள காரமும், பேத்தி வந்த சந்தோஷத்தில் சரியான பதத்தில் எடுக்கவில்லை போல் தெரிகிறது. (என்னை விட்டா யாரு இதெல்லாம் கூர்ந்து கவனிக்கப்போகிறார்கள்?)

  வீட்டில் உள்ளவர்களுக்கும், உங்கள் வாசகர்களுக்கும் உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, நெல்லைத் தமிழன், பக்ஷணப் பாத்திரத்தை நிவேதனம் பண்ணறச்சே தான் திறந்தேன். முதல் படங்கள் எல்லாம் குளிக்கும் முன்னர் எடுத்தது. குளிச்சு நிவேதனம் பண்ணும்போது திறந்தேன். தேன் குழலுக்கு அடுத்து ஓமப்பொடி! அது என்னமோ இருட்டில் போய் மாட்டிக் கொண்டு விட்டது. இடம் போதலை! மிக்சரில் சிப்ஸ் கொஞ்சம் பெரிதாகப் போய் விட்டது! என்றாலும் வெளுப்பாக நல்ல கரகர, நல்ல உ.கி. :) மிக்சருக்கு மேல் உள்ள இனிப்பு? ம்ஹூம் ஏதும் இல்லை! மிக்சர் பக்கத்தில் பயறு உருண்டை, அது பக்கத்தில் பாதம் அல்வா! மிக்சருக்கு இன்னொரு பக்கம் தேங்காய் பர்பி! ஹிஹிஹி, மறுபடி படத்தைப் பெரிது பண்ணிப் பாருங்க. மருந்து உள் பக்கமாய்க் கோலப்பலகையில் சின்னக் கிண்ணத்தில் இருக்கு. நீங்க எங்கே இருக்கீங்கனே தெரியலையாம், பக்ஷணத்தை எப்படி அனுப்பறது! :)))))

   Delete
  2. ஆனால் மூடி வைக்கிறச்சே உங்களை நினைத்துக் கொண்டேன். மூடி வைக்கிறோம், நெல்லைத் தமிழன் கேட்பாரோனு! அதே போல் நீங்க கவனிச்சிருக்கீங்க! :)

   Delete
  3. திறந்திருக்கும் பால் பக்கத்தில் தூக்கிலும் பால் தான். பால்காரர் சாயந்திரம் வரமாட்டார். ஆகையால் தேவையான பாலை வாங்கிக்கோங்கனு சொல்லிட்டதால் சாயந்திரப் பாலையும் சேர்த்து வாங்கிட்டோம். அதான் தூக்கில். :) தயிர் இதுக்கு வைக்கிறதில்லை. பொதுவாப் பால் காலை, மாலை இருவேளையும் சாமிக்குக் காட்டிட்டுத் தான் காஃபி, டீ, உறை ஊத்தக் காய்ச்சுவது என்று எடுப்பேன்.

   Delete
 4. ஆச்சு. ராமர் பட்டாபிஷேகப் படம் தானே?.. ரொம்ப நாள் கழிச்சுப் பார்க்கிறேன்.

  பேத்தி பிறந்த சந்தோஷம் மூணு ஸ்வீட்டில் மட்டுமில்லை, எழுத்திலும் தெரிகிறது.

  உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் தீப ஒளி வாழ்த்துக்கள், கீதாம்மா.

  ReplyDelete
  Replies
  1. பேத்தி பிறந்து ஒரு மாசம் ஆகிவிட்டது ஜீவி சார். அதனால் தான் இந்த வருஷ தீபாவளிக்கு மும்மடங்கு தித்திப்பு!

   Delete
 5. நினச்ச மாதிரியே இருண்ட கலரில் நாவல் பழ கலரில் புடவை. மேல் சாயம் போகும். நனைக்கும் போது கவனம் தேவை. என்ன இருந்தாலும் அன்றைய கூட்டு குடும்பம் கொண்டாடும் தீபாவளியில் உள்ள மகிழ்ச்சி இன்றைய தாத்தா பாட்டி மட்டும் கொண்டாடும் தீபாவளியில் திருப்தி இல்லை. நானும் உங்களை போல நாங்கள் இரண்டு பேர் மட்டும் கொண்டாடுகிறோம்.

  --
  Jayakumar
  ​​

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, நீங்க பார்க்கிறது முந்தானையை. அதுவும் நாவல் பழக் கலரே இல்லை. அந்தக் கலரில் என் கிட்டே புடைவையே இல்லை. காலம்பர கட்டிண்டு இருந்தப்போ எங்க பொண்ணு ஸ்கைபிலே பார்த்துட்டே புடைவை ரொம்ப நல்லா இருக்குனு பாராட்டினாள். இன்னொரு புடைவையும் கொஞ்சம் ஃபான்டா கலரும், கொஞ்சம் மெரூனும் கலந்தது. அதுவும் நல்லாவே இருக்கும். தனியாப் படம் எடுத்து வேணாப் போடறேன். இருண்ட கலரில் எல்லாம் என்னிடம் புடைவைகளே இல்லை! :)))))) கோ ஆப்டெக்ஸில் வாங்கும் கைத்தறிப் புடைவைகள் சாயம் போகாது. அதோடு இவை கோவை நெகமம் கைத்தறிப் புடைவைகள்.

   Delete
 6. தங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்


  யாழ்பாவாணன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி காசிராஜலிங்கம்.

   Delete
 7. மூன்றரைக்கு எழுந்தீர்களா? ஆச்சரியமாக இருக்கிறதே! இந்த ஊருக்கு வந்ததிலிருந்து தீபாவளியும் மற்ற நாட்களைப் போலவே ஒருநாள், விடியற்காலை எழுந்திருப்பதேல்லாம் மறந்தே போச்சு. இதுவரை ஒரு வெடிச்சத்தம் கேட்கவில்லை. நாளை இன்னும் அமைதியாக இருக்கும். நாளன்னிக்குப் பார்க்கணும் தீபாவளி மாதிரி இருக்கா என்று.

  பேத்தி பிறந்ததற்கு சந்தோஷம். என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள்? எப்போது போய்ப்பார்க்கப் போகிறீர்கள்?

  கைத்தறிப் புடவைகள் நன்றாக இருக்கின்றன. நானும் இந்த முறை கைத்தறி புடவைதான். நெல்லைத்தமிழன் நன்றாகவே ஸ்கேன் செய்திருக்கிறார்.

  இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், மூன்றரைக்கு எழுந்தேன். வாசலில் கோலம் போட்டு, வீடு பெருக்கித் துடைத்து எல்லாவற்றையும் சுவாமிக்கு முன்னால் வைக்கிறதுக்குள்ளே நாலரை ஆயிடுச்சு! எண்ணெய் காய்ச்சி காஃபி போட்டுக் குடிச்சு, எண்ணெய் வைத்துக் கொண்டு குளிக்கத் தயார் ஆவதற்கு அரை மணி நேரம் ஆச்சு! :) ஆக மொத்தம் மெதுவா ரொம்ப ரொம்ப மெதுவா எல்லாத்தையும் செய்தேன்! :) எங்க பொண்ணுக்குத் தான் இதைக் கேட்டு ஆச்சரியம்! என்னம்மா எங்களை எல்லாம் விரட்டுவே, இப்போ நீயே மெதுவாச் செய்திருக்கியே என்கிறாள். :)

   Delete
  2. பேத்திக்கு "துர்கா" என்று பெயர் வைக்கப் போவதாகப் பையர் ஏற்கெனவே சொல்லிட்டார். ஆகவே நாங்களும் அந்தப் பெயரை மாத்தலை. பிரார்த்தித்துக் கொண்டு வைத்த பெயர்! பேத்தியைப் பார்க்கப் போகணும்! :) உங்களைப் பார்க்க ருக்மிணி அம்மா வீட்டுக்கு வந்தப்போ கூடக் கைத்தறிப்புடைவை தான் கட்டிக் கொண்டு வந்தேன். அது மதுரைக் கைத்தறி! இப்போ கோவை நெகமம்! ஆனால் முன்னைப் போல் இல்லை நெகமம் புடைவைகள்! என்றாலும் தரம் நன்றாகவே இருக்கிறது. நூற்றுக்கு நூறு நூலே இப்போ இல்லையாம். என் புடைவைகள் 80 க்கு 80. நான் கொஞ்சம் இதை எல்லாம் விசாரிச்சுப்பேன். :) கிட்டே இருந்து ஊடு பாவு போடுவதைப்போல இதை எல்லாம் தெரிஞ்சுக்கறதிலே ஓர் ஆர்வம்!

   Delete
 8. happy deepavali mam. very nice sarees all sweet and karam also good

  ReplyDelete
  Replies
  1. வாங்க மீரா பாலாஜி, முதல் வரவு? முன்னே வந்ததாகத் தெரியலை, பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி, உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

   Delete
 9. பேத்தி துர்காவிற்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கோமதி அரசு. உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

   Delete
 10. இங்கு பெங்களூரில் விடியற்காலை வெகு சாதாரணமாகவே இருந்தது காலையில் எழுந்து குளித்து பிதியது உடுத்துவது என்பதெல்லாம் பார்ப்பதில்லை.வெடிச் சத்தமும் குறைவே உங்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், இப்போதெல்லாம் விடிகாலை எழுந்து குளிப்பது என்பது குறைந்து தான் வருகிறது. ஆனால் இங்கே ராத்திரி பத்து மணி வரைக்கும் மறுபடி காலை இரண்டரையிலிருந்து பட்டாசுச் சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. நேற்று மாலை தொலைபேசியில் பேசினவர்களோடு உரையாட முடியவில்லை. அவ்வளவு சப்தம்!

   Delete
 11. தீபாவளி அன்று பட்சணங்களோடு பாலும் வைக்கும் பழக்கம் உண்டா? பேத்தி பிறந்ததற்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தினமும் காலை, மாலை இருவேளையும் எங்க வீட்டு உம்மாசிங்க பால் சாப்பிட்டதும் தான் நாங்க காஃபியே குடிப்போம்! :) சாயந்திரம் மட்டும் சில சமயங்களில் ஐந்தரை ஆயிடும். அப்போக் காலைப்பாலில் சாப்பிட்டுப்போம். கறந்த பால் என்பதால் வீணாகாது! மற்றபடி இது பழக்கம்னு எல்லாம் இல்லை!

   Delete
  2. ரொம்ப சுறுசுறுப்பா வரேன் :))!..(தாமதமான) தீபாவளி வாழ்த்துக்கள்!..நான் ரெண்டு ஸ்வீட் ரெண்டு காரம் செஞ்சேன்...வெள்ளி மதியம் இரண்டே முக்கால் வாக்கில் கிளம்பி, ஓசூர் வரவே ஆறரை ஆச்சு!..இரவு பன்னிரண்டுக்கே திருச்சி வந்தோம்..மறுநாளே கிளம்ப வேண்டிய சூழல்..உடல் நிலையும் ஒத்துழைக்காததால் பதிவுகளுக்கெல்லாம் லேட் விசிட்!!!...பயிறு லாடு?..பாசிப் பயிறு மாவில் வெல்லம் சேர்த்துச் செய்வதா அம்மா?..

   Delete
  3. பாசிப்பருப்பில் வெல்லம் சேர்த்துச் செய்வதை சாதாரண தினங்களில் செய்வதில்லை. சிராத்தத்தின் போது மட்டும்! :) மற்றபடி பொருள்விளங்கா உருண்டை செய்கையில் கோதுமை, பாசிப்பருப்பு சேர்த்து வறுத்து அரைப்போம். ஒரு சிலர் புழுங்கல் அரிசியும் சேர்க்கிறார்கள். இது முழுக்க முழுக்கப் பச்சைப் பயறு மாவு! கடையில் அரைத்து வைத்திருந்தார்கள் என்று மாதிரிக்கு 200 கிராம் மாவு வாங்கி வந்தார். அதை வறுத்துட்டு சர்க்கரை சேர்த்துச் செய்தேன். ஆனாலும் எனக்கு என்னமோ பச்சை வாசனை வந்தாப்போல் ஓர் எண்ணம்! :)

   Delete