இன்றைய தேவியைக் காத்யாயினி என்றும் அழைப்பார்கள். மஹேஸ்வரி என்றும் சொல்கின்றனர். பாம்பாசனத்தில் வீற்றிருக்கும் சண்டிகாவாகவும், ரக்த பீஜனை வதம் செய்த அன்னையாகவும் பாவிப்பது உண்டு. உலகாளும் மஹேஸ்வரியும் இவளே. இன்றைய தினம் ஏழு வயதுப் பெண் குழந்தையைச் "சண்டிகா"வாகப் பாவித்து வழிபடுதல் வேண்டும்.
செந்தாமரை மலர்கள், பவளமல்லி, செம்பருத்தி மலர்கள், ரோஜா ஆகிய மலர்களால் அம்பிகையை வழிபடலாம். தும்பை இலையும் மிகவும் சிலாக்கியம். சிலர் குமாரியின் பெயரை காளிகா என்றும் சொல்லி வழிபடுவார்கள்.
உலகாளும் அன்னை தன் மகளாய்ப் பிறக்கவேண்டும் எனவேண்டினார் காத்யாயன மாமுனிவர். அவர் எண்ணம் ஈடேற அவர் மகளாய்ப் பூவுலகில் அவதரித்தாள் அன்னை. காத்யாயன மாமுனியின் மகள் என்பதால் காத்யாயினி என வழங்கப் படுகின்றாள். கோகுலத்து கோபியர்கள் கண்ணனை அடைய இவளையே தெய்வமாய் வழிபட்டு விரதம் இருந்தனர் என்பார்கள். கன்னியர் மனம் மகிழும்படிய்க் கணவனை அளித்துக் கல்யாணப் பேறு அளிப்பாள் இவள் என்று கூறுவார்கள். இவளுக்கான தோத்திரம்
“காத்யாயினி மஹாமாயே மகாயோகிந் யதீஸ்வரி
நந்தகோப ஸுதம் தேவி பதிம்மே குருதே நமஹ” என்பதாகும். இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் பண்ணும் கன்னியர்க்கு மனதுக்கிசைந்த மணாளன் கிடைப்பான் என்பது உறுதி. இவளை வழிபட வேண்டிய நாள் புதன்கிழமை ஆகும். நவராத்திரியில் புதன்கிழமை இவளை வழிபட்டால், புத்தியும், ஞானமும் அளிக்கும் புதன் கல்வி, கலைகளில் சிறந்து விளங்க வைப்பதோடு, கல்யாணப் பேறும் அளிப்பார். பதஞ்சலி மிருதங்கம் வாசிக்க, ஈசன் ஆடிய ஆட்டம் முனி தாண்டவம். அப்போது ஈசனின் நெற்றிக்கண்ணில் தோன்றியவளே காத்யாயனி ஆவாள்.
இன்றைய கோலம் பாவைகள் அல்லது தேவியின் திருநாமத்தைப் பருப்பு வகைகளால் எழுதியோ மஞ்சள் பொடி கலந்த கடலைமாவினால் அன்னையின் திருநாமத்தை எழுதியோ வைக்கலாம். காலை நிவேதனமாகத் தேங்காய்ச் சாதம், தேங்காய்ப் பால்ப் பாயசம் செய்யலாம். மாலை பாசிப்பருப்புச் சுண்டல் செய்யலாம். பாசிப்பருப்பை நன்கு கழுவிக் கொண்டு இரண்டு, மூன்று மணி நேரம் ஊற விடவும். பின்னர் ஒரு வாணலியில் நீரை ஊற்றிக் கொண்டு நன்கு கொதிக்கவிடவும். ஊறிய பருப்பை நீரை வடிகட்டி அதில் போட்டு ஒரு கொதி விட்டு உடனே உப்பைச் சேர்த்துக் கிளறிவிட்டுத் தட்டைப் போட்டு மூடி விட்டு அடுப்பை அணைக்கவும். அந்தச் சூட்டோடு அரை மணி நேரம் வைக்கவும். பின்பு நீரை வடிகட்டவும். பாசிப்பருப்பு கையால் தொட்டால் நசுங்கும் பதம் வந்திருக்கும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கருகப்பிலை போட்டு வதக்கிப் பின்னர் வடிகட்டிய பாசிப்பருப்பை அதில் சேர்க்கவும். நன்கு கிளறி ஒரு ஸ்பூன் சாம்பார்ப் பொடியை எப்போதும் போல் சேர்க்கவும். நன்கு கிளறியதும் தேங்காய்த் துருவலும் ஒரு ஸ்பூன் சர்க்கரையும் சேர்க்கவும். பச்சைக் கொத்துமல்லி தூவவும். தேவையானால் எலுமிச்சம்பழம் பிழியலாம். வெள்ளரிக்காய், மாங்காய் கிடைத்தால் துருவியோ பொடியாக நறுக்கியோ சேர்க்கலாம். பின்னர் கீழே இறக்கி வைத்து விநியோகம் செய்யவும்.
இன்னிக்கு நம்ம வீட்டில் பட்டாணிச் சுண்டல். படம் எடுக்கலை! ஹிஹிஹி! தினம் தினம் ஒரே படமானு ஶ்ரீராம் சொன்னது காதில் கேட்டது! அதான்!

வாட்ஸாப்பில் படம் ஒன்றையும் காணோமேன்னு பார்த்தேன்! இன்று மூன்று இடங்களுக்கு சுண்டல் கலெக்ஷனுக்கு எஸ்கார்ட்.
ReplyDelete:)))
கலெக்ஷன் மும்முரம் போல! இங்கே இரண்டு இடங்களில் கலெக்ஷன், மூன்று செலவு! :( அப்படியும் கம்மியாத் தான் வராங்க!
Deleteநாளைக்குத்தான் முதல் கலெக்ஷனே ஆரம்பம். நானும் எனது அண்ணியுமாக...ஊர்வலம். சென்னையில் பின்ன என்ன சொல்ல ஊர்வலம் என்றுதானே சொல்ல முடியும்!!!இங்கு போக்குவரத்தை நினைத்தால் அலுப்பாக வருகிறது. நடக்கும் தூரம் என்றால் பிரச்சனை இல்லை...ம்ம்
Deleteகீதா
கொஞ்சம் தள்ளி இருக்கும் வீடுகளுக்குப் போவதெனில் அலுப்புத் தான். இங்கே அப்படிப் போனாலும் சென்னை மாதிரி போக்குவரத்தெல்லாம் இல்லை! :)
Deleteஆறாம் நாளும் ஆஜர் ஆனேனே....
ReplyDeleteநன்றி, நன்றி.
Deleteஅருமையான தகவல்கள்! வீடு பராமரிப்பு பணிகள் காரணமாக இணையம் வலைப்பூ வாசிப்பு குறைந்துவிட்டது. இரவில் பதிவிடும் போதே உறக்கம் வந்துவிடுவதால் தூங்கச் சென்றுவிடுகிறேன்! நேரம் கிடைக்கையில் மொத்தமாக வாசித்து விடுகிறேன்!
ReplyDeleteஎனக்கும் பதிவுகள் வாசிப்புக் குறைந்திருக்கிறது! மொத்தமாக வாசிக்கவும் நேரம் இல்லை! :(
Deleteஆறாம் நாள் பாசிப் பருப்பா. சரி. காத்யாயினி படம் மிக அழகு.
ReplyDeleteஹிஹிஹி, பாசிப்பருப்புச் சுண்டல் சீக்கிரமாப் பண்ணிடலாமே! :) காத்யாயினி எல்லாம் கூகிளார் கொடுத்தவை தான்!
Deleteதகவலகள் அருமை...வழக்கம் போல அதுவும் கதையுடன்.
ReplyDeleteகீதா: பாசிப்பருப்பு ரெசிப்பி சொல்லிவிட்டு பட்டாணி சுண்டல் போல இருக்குது!!!
வழிபாடு செய்பவர்களுக்கான சுண்டல் தனியாகவும், நான் செய்வது தனியாகவும் சொல்லி இருக்கேன். :)
Deleteகதைகளும் கூகிள் கொடுத்த படங்களும் ரசித்தேன்.
ReplyDeleteசுண்டல் கிடைச்சதா இல்லையா?
Delete