இன்றைய தினம் கடைசி நாள். ஆகவே அம்பிகை சித்தாத்ரியாக வழிபடப்படுவாள். வேண்டியதை நிறைவேற்றித் தரும் அன்னை இவள். பத்து வயதுப் பெண் குழந்தையை சுபத்ராவாக வழிபட வேண்டும். சும்ப, நிசும்பர்களை சம்ஹரித்த தினமான இன்றைய தினம் அன்னையைக் காமேஸ்வரியாகவும் வழிபடுவார்கள். அனைத்து சித்திகளையும் அள்ளித் தரும் இவளைக் குறித்து முன்பே பார்த்தோம்.
எல்லாமும் ஒரு மகாசக்தியிலிருந்தே தோன்றியது என்பதை இவள் தன்னை வழிபடுபவர்களுக்குப் புரிய வைப்பாள். இவ்வுலகத்தின் ஆசாபாசங்களைத் துச்சமாகக் கருதும் மனோநிலை ஏற்படும். பேரானந்தம் எனப்படும் உணர்வு அவனுக்கு எளிதில் சித்திக்கும்,
படங்களுக்கு நன்றி கூகிளார்
இன்றைய தினம் பச்சைக்கற்பூரம் போன்ற வாசனாதி திரவியங்களால் ஆயுதங்களைக் கோலமாக வரையலாம். மருக்கொழுந்து, துளசி, வெண்ணிற மலர்களான மல்லிகை போன்றவை அன்னையின் வழிபாட்டுக்கு ஏற்றது. இன்றைய தினம் அனைத்து சித்திகளையும் பெறுவதால் காலை அக்கார அடிசில், உளுந்து வடை, எள் உருண்டை போன்றவையும் மாலைக் கறுப்புக் கொண்டைக்கடலை, வெல்லம் சேர்த்த மாவு உருண்டை போன்றவையும் நிவேதனம் செய்ய ஏற்றவை. ஒரு சிலர் இன்றைய தினம் புட்டு நிவேதனம் செய்வார்கள். கடலைப்பருப்புச் சுண்டலும் ஏற்றது!
எள் உருண்டை: விசேஷ நாட்களுக்கு எள் உருண்டை முத்துருண்டை பிடிக்கக் கூடாது. வெறும் வாணலியில் எள்ளை நன்கு களைந்து கல்லரித்து வடிகட்டிக் கொண்டு வறுக்க வேண்டும். அதோடு வெல்லத் தூள் சேர்த்து மிக்சியில் ஒரு அடி அடித்த பின்னர் வெளியே எடுத்துத் தேங்காய்த் துருவல், ஏலக்காய் சேர்த்துக் கொண்டு உருண்டைகளாக உருட்ட வேண்டும்.
வெல்லம் சேர்த்த மாவு உருண்டை! பாசிப்பருப்பைக் களைந்து கொண்டு நீரை வடிகட்டிக் கொண்டு வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். மிக்சியில் பொடி செய்யவும். பொடி நன்றாக வரும். அதிலே வெல்லத் தூளைக் கலந்து மீண்டும் மிக்சியில் சேர்த்து அடிக்கவும். ஏலத்தூள் சேர்க்கவும். ஒரு கிண்ணம் பாசிப்பருப்பு எனில் முக்கால் கிண்ணம் வெல்லத் தூள் சேர்த்தால் போதும். இரண்டு டேபிள் ஸ்பூன் நெய்யை நன்கு காய்ச்சி கலவையில் ஊற்றி உருண்டை பிடிக்கவும்.
அக்கார அடிசில் செய்முறை ஏற்கெனவே கொடுத்திருக்கேன். ஆகவே மீண்டும் கொடுக்கச் சுட்டியைத் தருகிறேன். அக்கார அடிசில்
பத்து நாட்களும் கன்னிப் பெண்களை மேற்சொன்ன முறைகளிலும், சுவாசினிகளை அந்த அந்த நாளுக்கான தேவியாகவும் வழிபடுதல் ஐதீகம். வசதி இருப்பவர்கள் ஆடை, அணிகலன்கள் அளிக்கலாம். எதுவும் முடியாதவர்கள் தேவி மஹாத்மியத்தின் துர்க சப்தச்லோகி, துர்க்கா சூக்தம், தேவி மஹாத்மிய ஸ்தோத்திரம் போன்றவற்றையோ லலிதா சஹஸ்ரநாமத்தையோ லலிதா நவரத்தினமாலையையோ தினம் சொல்லி வந்தால் போதும். அம்பிகை அருள் நிச்சயம் கிடைக்கும். நாம ஒண்ணுமே கொடுக்க முடியலைனாக் கூட அம்பிகை நமக்கென உரியதைக் கொடுக்காமல் இருக்க மாட்டாள்! ஆகவே நம்பிக்கையுடன் அம்பிகை அருளுக்குப் பிரார்த்தித்துக் கொண்டாலே போதும்!

நவராத்திரி விடயங்களை அழகாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றி
ReplyDeleteஅம்பிகையின் அருள் பெறுவோம். அன்புலகை வெல்வோம்.
ReplyDeleteநெல்லைத் தமிழனின் சந்தேகங்களைத் தீர்த்து வைத்தமைக்கு நன்றி.
Deleteநவராத்திரியின் சிறப்புகளை நாள்வாரியாகத் தந்த விதம் அருமை. பாராட்டுகள். உங்களுடன் சேர்ந்து அம்பிகையைப் பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஇவை எல்லாம் விரிவாக முன்னால் எழுதியவையே. இப்போது சுருக்கமாகக் கொடுத்திருக்கேன். :)
Deleteநிறைய நம்பிக்கை சார்ந்த செய்திகளை நானும் படித்துத் தெரிந்து கொண்டேன் வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி ஐயா. இல்லை என்பதை நம்பவேண்டுமெனில் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்வதால் தானே! ஆகவே எல்லாமும் ஓர் நம்பிக்கை தான்!
Deleteஎல்லாம் படித்தேன். அதிலும் குறிப்பாக என்ன வி'நியோகம் என்று படங்களைப் பெரிதுபடுத்திப் பார்த்தேன்.. எங்க எங்க படம் போட்டிருந்தீர்களோ அதில் சின்னக் கிண்ணத்துலதான் சுண்டலோ எதுவோ வைத்திருந்தீர்கள். நமக்குக் கிடைக்கும்னு நம்பி வரமுடியாது போலிருக்கு.
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அதெல்லாம் வரலாம்! நிவேதனம் செய்ய முன்னெல்லாம் மொத்தமாகப் பாத்திரத்தோடு போட்டுக் கொண்டிருந்தேன். அப்புறமா அதை நிறுத்திவிட்டேன். கொஞ்சமாக எடுத்துச் சென்று நிவேதனம் செய்கிறேன். அதை மட்டும் படம் போடுகிறேன்.
Deleteஸ்ரீராம் 'அன்புலகை வெல்வோம்' என்று எழுதியுள்ளது ஏதோ தவறாகப் படுகிறதே.. அன்பினால் உலகை வெல்வோம் ஓகே. அன்பு உலகை வெல்லும் ஓகே. அன்புலகை நாம் ஏன் வெல்லவேண்டும்?
ReplyDelete
Delete//ஸ்ரீராம் 'அன்புலகை வெல்வோம்' என்று எழுதியுள்ளது ஏதோ தவறாகப் படுகிறதே.. அன்பினால் உலகை வெல்வோம் ஓகே. அன்பு உலகை வெல்லும் ஓகே. அன்புலகை நாம் ஏன் வெல்லவேண்டும்?//
அகோ வாரும் நக்கீரரே...! அன்பு உலகை வெல்ல அன்பு நம்மிடமும் இருக்க வேண்டும். அதைத்தான் யாம் சொல்ல வந்தோம்!!!!
தகவல்களெல்லாம் அழகாகவும் அருமையாகவும் சொல்கிறீர்கள். அன்புடன்
ReplyDeleteநன்றி அம்மா.
Deleteதகவல்கள் அனைத்தும் வழக்கம் போல் அருமை.
ReplyDelete