எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, December 16, 2016

புதுக் கணினியிலிருந்து புதிய விஷயம்!

வணக்கம். இப்போது அம்பேரிக்காவில் ஹூஸ்டனில் இருக்கிறேன். எத்தனை நாட்கள்/மாதங்கள் என்பது தெரியாது. போன வாரம் வந்தோம். கிளம்பும் வரை நிச்சயமில்லாமல் இருந்ததால் யாரிடமும் சொல்லவில்லை. கடைசி நிமிஷம் வரையிலும் பிரச்னைகள். ஒரு வழியாய் இங்கே போன வாரம் சனிக்கிழமை வந்து சேர்ந்தாச்சு. வந்த பின்னரும் பிரச்னைகள் தான். வரும்போது என்னுடைய மடிக்கணினியை எடுத்து வரவேண்டாம்னு பையர் சொல்லிட்டார். ஆகையால் எடுத்து வரலை. இங்கே புதுக்கணினி வாங்கி வைச்சிருந்தார். அதை எல்லாம் இன்ஸ்டால் பண்ணி நேற்றுத் தான் கொடுத்தார். ரொம்பவே வேலை மும்முரத்தில் இருந்தார். நேற்றுச் சும்மாத் திறந்து பார்த்துட்டு வைச்சுட்டேன். இப்போத் தான் வேலை செய்ய ஆரம்பிச்சேன்.

முதல்லே வேறே இடத்திலிருந்து உள் நுழைந்ததால் முகநூல் பூட்டி விட்டார்கள். அதை ஒரு வழியாப் பையர் உதவியுடன் திறந்தேன். அப்புறமாவும் அலைபேசியில் திறப்பதற்குள்ளாகப் போதும் போதும்னு ஆயிடுச்சு. பின்னர் இதிலே ஒரு வழியாக் கலப்பையைக் கொண்டு வந்தேன். முதல்லே எழுதுவது இது தான். கீ போர்டும் பழகணும். மெல்ல மெல்ல மற்ற விஷயங்களுக்கு வருகிறேன். அதுக்குள்ளே சென்னைப் புயல்! நாங்க கிளம்பும்போது புயலில் மாட்டிப்போம்னு நினைச்சு பயந்தோம். அதிலிருந்தெல்லாம் தப்பியாச்சு! இப்போ வேறே மாதிரிப் புயல்! பார்ப்போம். புது மடிக்கணினியிலிருந்து எழுதியவை இவை எல்லாம். இனி நாளை சந்திப்போம். இங்கே இரவு ஒன்பது முப்பத்தைந்து. அங்கே காலை ஒன்பதாக இருக்கும்.

புயல் அனுபவங்கள் எல்லாரும் பகிர்ந்திருப்பீர்கள். எல்லாவற்றுக்கும் மெல்ல மெல்ல வரணும்.

23 comments:

 1. பத்திரமாகச் சென்றுசேர்ந்தது மகிழ்ச்சி. சென்னைல இன்டெர்நெட் இன்னும் பல இடங்களில் இல்லை. மார்கழில உங்கள் பதிவு ஹூஸ்டனிலிருந்தா? ஜமாயுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. மார்கழிப் பதிவெல்லாம் போட முடியுமானு தெரியலை! :(

   Delete
 2. புது கணினிக்கும்...அமெரிக்க பயணத்திற்கும் வாழ்த்துக்கள் அம்மா...

  ReplyDelete
 3. சென்று வருக!.. வென்று வருக!...

  ReplyDelete
  Replies
  1. வந்தாச்சு, வெற்றி யாருக்குனு இனிமேல் தான் தெரியும். :(

   Delete
 4. ஆஹா. அமெரிக்காவில் போட்டு வச்சிருக்கிற கறுப்புப் பணத்தை எல்லாம் மோடி புடுங்குவதற்கு முன்னாடி பாதுகாக்க அமெரிக்கா வந்துட்டீங்களா.

  இனிமேல் இந்திய பிரச்சினை (கருப்பு வெள்ளை பணம், 500/1000 செல்லாதது etc.) பற்றி ஒன்னும் எழுதமாட்டீங்க. நாங்க தப்பிச்சோம்.

  --
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம்ம்ம்ம் ரொம்பவே சந்தோஷப்பட வேண்டாம்னு எச்சரிக்கிறேன். :)

   Delete
 5. துர்க்கா எப்படி இருக்கிறார்? நலமா? சந்தோஷமான தருணங்களை அனுபவித்து வாருங்கள். துர்க்காவிற்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கோமதி அரசு!

   Delete
 6. Have a pleasant stay! டிரம்ப்ஐ விசாரித்ததாகச் சொல்லுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, ட்ரம்பை இன்னும் பார்க்கலை! :)

   Delete
 7. பழகப் பழக எல்லாம்சரியாய் விடும் அமெரிக்க அனுபவங்களைப் பதிவிடுவீர்களா

  ReplyDelete
  Replies
  1. புது மடிக்கணினி கொஞ்சம் சிரமமாகத் தான் இருக்கு. ஒரு ஆர்வம் வரும்படி வேலை செய்யலை. அடிக்கடி நின்னு போகுது! :( அமெரிக்க அனுபவங்கள் பற்றி ஏற்கெனவே எழுதி இருக்கேன். இம்முறையும் முடிஞ்ச வரை எழுதுவேன்.

   Delete
 8. அங்கு இப்போது பயங்கரப் பனியா? உடல் நலத்தில் கவனம் வையுங்கள். அவ்வப்போது பதிவு போடுங்கள். இன்னுமா புதுக்கணினிக்குப் பழகவில்லை?!! அடுத்த பதிவைக் காணோமே!

  ReplyDelete
  Replies
  1. கணினி இன்னும் பழகவில்லை! என்றாலும் அடுத்த பதிவும் போட்டிருக்கேனே. முக்கியமா எம்.எஸ். ஆஃபீஸ் இல்லாமல் பதிவுகள் எழுத முடியவில்லை! :( அது போடணும். பையர் ரொம்பவே பிசி! :(

   Delete
 9. கணினி பழகிவிடும். பழகியதும் தங்களது புதிய அனுபவங்கள், அங்குச் செல்லும் இடங்கள் எல்லாம் முடிந்தால் பதிவிடுங்கள்!!

  அப்படியே உடல் நனலனையும் கவனித்துக் கொள்ளுங்கள்! குளிராக இருக்கும் அங்கு.

  ReplyDelete
  Replies
  1. நேத்திக்கு உறைபனிக் குளிர்! வீட்டுக்குள்ளே ஹீட்டர் இருப்பதால் தெரியலை. எனக்கு வழக்கம்போல் வியர்த்தது! ஹிஹிஹி! இந்த முறை எங்கும் செல்ல முடியாதுனு நினைக்கிறேன். :)

   Delete
 10. வாழ்த்துகள். பயணம் பற்றி முதல் நாள் அன்று தெரிந்தது. :)

  தொடர்ந்து பதிவுகள் வெளிவரட்டும். நாங்களும் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், யாரிடமும் சொல்லலை! கிளம்பும் வரை நிச்சயமில்லாமல் இருந்தது. ஜெயலலிதா மரணம், வர்தா புயல் இரண்டும் பயமுறுத்திக் கொண்டிருந்த விஷயங்கள். அதற்கேற்றாற்போல் நாங்க இங்கே வந்து சேர்ந்த அன்றும் மறுநாளும் சென்னை விமான நிலையம் மூடப்பட்டது! மயிரிழையில் தப்பினோம்! :)

   Delete
 11. அமெரிக்கவாசம் வாழ்த்துகள்.

  ReplyDelete