எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, December 22, 2016

ஜங்கிள் புக்!

ஹிஹிஹி, மீ த ஒன்லி குழந்தை இன் இணைய உலகம். இன்னிக்கு ஜங்கிள் புக் படம் பார்த்தேன். எண்பதுகளின் கடைசியில் (?) நெடுந்தொடராக வந்து கொண்டிருந்தது. பல குழந்தைகளின் மனதைக் கவர்ந்தது! மோக்லி, மோக்லி, மோக்லி என்று இசை ஆரம்பித்ததுமே குழந்தைகள் தொலைக்காட்சிக்கு வந்துடுவாங்க. கதை எல்லோரும் அறிந்தது தானே! தன் தகப்பனுடன் பயணத்தில் இருந்த சிறு குழந்தை ஒன்று புலி தகப்பனை அடித்துக் கொன்றது தெரியாமல் அங்கே உள்ள ஓநாய்களால் வளர்க்கப்பட்டுப் பின் அதே புலியால் தொடரப்பட்டுத் தன் சாமர்த்தியத்தாலும் தைரியத்தாலும் புலியைக் கொன்று காட்டில் தன் வாழ்க்கையைத் தொடர்கிறான்.

மோக்லி என்னும் சிறுவனாக நீல் சேத்தி நன்றாக நடித்துள்ளார். மோக்லியைக் காப்பாற்றும் பகீரா என்னும் சிறுத்தைக்கு காந்தியாக நடித்த பென் கிங்க்ஸ்லி குரல் கொடுத்துள்ளார். படத்தில் வசனங்கள் எழுத்து வடிவிலும் வருகின்றன. ஆங்காங்கே காட்டுச் சூழ்நிலை அருமையாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. யானைகளைப் பார்த்ததும் பகீராவும் பாலுவும் கீழே விழுந்து வணங்கச் சொல்வது பார்த்து வியப்பு ஏற்பட்டது. இது தொடராக வந்தப்போ பார்த்ததில்லை. புலி ஷேர்கானுக்குக் குரல் கொடுத்திருப்பவர் இட்ரிஸ் எல்பா என்பவர் நன்றாகக் குரல் கொடுத்துள்ளார். வசனங்கள் அருமை.

படம் எடுத்திருப்பது வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்! அப்புறம் படத்தோட தரத்துக்குக் கேட்கவா வேண்டும்! ஒன்றரை மணி நேரப் படம் தான். ஒரு முறை பார்க்கலாம்.  ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு பத்தியோ காமிராக் கோணங்கள் குறித்தோ ஏதும் சொல்லும் அளவுக்கு அறிவு இல்லையாதலால் அதைக் குறித்து ஏதும் சொல்லவில்லை. ஏனெனில் கை தேர்ந்த திரைப்பட நிபுணர்கள் எடுத்த படம் இது.

21 comments:

  1. சந்தோசமாக இருக்கும் அம்மா...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றிப்பா.

      Delete
  2. நான் கூட சமீபத்தில்தான் பார்த்தேன். நன்றாக இருந்தது. ரசித்தேன் ரொம்பவே. நீங்களே குழந்தையா மாறி ரசிச்சா நான் ரசிக்கக் கேட்கவா வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் தான் ஒரே குழந்தைனு இன்னுமா தெரியலை, புரியலை! :))))

      Delete
    2. ஹலோ ஸ்ரீராம், கீதாக்கா....நீங்க மட்டுமில்லை...நானுமாக்கும்....எங்க வீட்டுல என்னைய எப்போதுமே சின்னப்புள்ளை ன்னுதான் சொல்லுவாங்க...(உருவத்துனால இல்ல....ஸ்ரீராம் நோட் திஸ் பாயின்ட்!!!) நானும் என் மகனும் இந்த மாதிரி படங்களைப் பார்ப்பதில் மிகவும் ஆர்வமுள்ளவர்கள். அப்படியே லயித்து ரசிப்போமாக்கும்....கிக்கீ என்று சிரித்துக் கொண்டும்.....

      Delete
    3. ஹலோ ஸ்ரீராம், கீதாக்கா....நீங்க மட்டுமில்லை...நானுமாக்கும்....எங்க வீட்டுல என்னைய எப்போதுமே சின்னப்புள்ளை ன்னுதான் சொல்லுவாங்க...(உருவத்துனால இல்ல....ஸ்ரீராம் நோட் திஸ் பாயின்ட்!!!) நானும் என் மகனும் இந்த மாதிரி படங்களைப் பார்ப்பதில் மிகவும் ஆர்வமுள்ளவர்கள். அப்படியே லயித்து ரசிப்போமாக்கும்....கிக்கீ என்று சிரித்துக் கொண்டும்.....

      கீதா

      (இந்தக் கமென்டை போடுங்கக்கா...முந்தையதுல பேர் விட்டுப் போச்சு அதான்..)

      Delete
  3. நான் இன்னும் பார்க்கலை. சிறு குழந்தையாக இருக்கும்போது உள்ள விருப்பம்லாம் கொஞ்சம் வயதான பிறகு திரும்பிவரும்போல் தோணுகிறது. எஞ்சாய்.

    ReplyDelete
    Replies
    1. //சிறு குழந்தையாக இருக்கும்போது உள்ள விருப்பம்லாம் கொஞ்சம் வயதான பிறகு திரும்பிவரும்போல் தோணுகிறது. எஞ்சாய்.//

      அட, யூ டூ ப்ரூட்டஸ்? :)))))))))

      Delete
  4. அப்போ அங்கே அமெரிக்காவில் yupp tv கனெக்சன் இருக்கு. அதுலே தமிழ் சேனல் எல்லாம் பார்க்கிறீர்கள். போன ஞாயிறு அன்று மாலை 4 மணிக்கு விஜய் டிவியில் ஜங்கிள் புக் ஒளிபரப்பானது.

    மடிக்கணினி என்ன பிராண்ட். என்ன விலை. சும்மா தெரிச்சுக்க தான்.
    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், யப் தொலைக்காட்சி தான். இது பல வருடங்களாக இருக்கே! விஜய் தொலைக்காட்சியில் வந்ததெல்லாம் தெரியாது. அங்கே மாலை நாலு மணி என்றால் இங்கே ஹூஸ்டனில் விடிகாலை நாலரை மணி! அப்போத் தொலைக்காட்சி எல்லாம் போட முடியாது! :))))

      மடிக்கணினி டெல்! விலை எல்லாம் தெரியாது, கேட்டுக்கிற வழக்கம் இல்லை! எப்படியும் 300 டாலர் இருக்கலாம். வின்டோஸ் 10 கொஞ்சம் கஷ்டமா இருக்குனு சொல்லிட்டு இருந்தாங்க. ஆனால் எனக்கு வித்தியாசம் அவ்வளவாத் தெரியலை.

      Delete
  5. அந்த நேரத்தில் ஜீ டி வியில் குழந்தைகளின் ப்ரோகிராமிருந்தது ரசித்துப்பார்த்தேன்

    ReplyDelete
    Replies
    1. இந்திய நேரம் மாலை எனில் இங்கே விடிகாலை ஐயா!

      Delete
  6. வாவ்..ஜங்கிள் புக்!...பாதி பார்த்தாச்சு...மிச்சம் பார்க்கணும்...

    ReplyDelete
    Replies
    1. மிச்சமும் பாருங்க!

      Delete
  7. ஜங்கிள் புக் கார்ட்டூன் படத்தை என் குழந்தைகள், குழந்தைகளாக இருந்தபொழுது மிகவும் விரும்பி பார்த்த வீடியோ கேசெட். நானும் அவ்வப்பொழுது அவர்களோடு பார்ப்பேன். சுவாரஸ்யமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. தூர்தர்ஷனில் தொடராக ஞாயிற்றுக் கிழமைகளில் வந்தப்போ எங்க குழந்தைகள் விரும்பிப் பார்ப்பாங்க. இது வந்தப்போத் தான் ராமானந்த சாகரின் ராமாயணம், அதன் பின்னர் மஹாபாரதம் தொடர்கள் எல்லாமும் வந்தன! ஒரு முறை பொதுத் தேர்தல் அப்போ ஞாயிற்றுக்கிழமையன்னிக்குத் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தவங்க பார்க்க முடியலைனு மறு ஒளிபரப்பு அந்த வாரம் செவ்வாயன்று இரவில் செய்யப்பட்டது. மக்கள் மஹாபாரதத்தை அவ்வளவு ஈடுபாட்டுடன் பார்த்தார்கள்.

      Delete
  8. ஆஹா! அமெரிக்காவில் இருக்கிறீர்களா!.. தங்கள் பயணம் நல்ல முறையில் நடந்தேறப் பிரார்த்திக்கிறேன்!. எங்கெங்கெல்லாம் சென்று வந்தீர்கள் என்பதை அவ்வப்போது கட்டாயம் பகிர்ந்து கொள்ளுங்கள்..ஜங்கிள் புக் ரொம்ப நாள் முன்னாடி பார்த்தது.. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும்.. தங்கள் விமர்சனம் அருமை!.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஆனால் அதிகம் எங்கேயும் போவதில்லை. அதோடு இப்போது மருமகளுக்குக் குழந்தை பிறந்திருப்பதாலும் குளிர் காலம் என்பதாலும் வெளியேயே போகலை! முன்னர் வந்திருப்போ பார்த்தவை குறித்து ஏற்கெனவே எழுதிட்டேன்! :)

      நான் ஜங்கிள் புக்குக்கு விமரிசனம் எங்கே எழுதி இருக்கேன்! படம் பார்த்தது குறித்துச் சொல்லி இருக்கேன். விமரிசனம் எழுதும் அளவுக்கெல்லாம் ஒண்ணும் தெரியாது! அதுவும் சினிமாவில்! ஹிஹிஹி!

      Delete
  9. பிள்ளைகள் கூட்டிச் சென்றார்கள் 3D இல் பார்த்தோம்

    ReplyDelete
  10. இந்தப் படத்தை நாங்கள் இருவருமே மிகவும் ரசித்தோம்....

    கீதா: நானும் எனதுமகனும் துளசியின் வீட்டிற்குச் சென்ற போது அவரது குடும்பம் நாங்கள் இருவர் என்று எல்லோரும் போய் பார்த்து ரசித்த படம்...

    ReplyDelete