கடந்த பத்து வருட இணைய நாட்களில் ஒரு வருடமும் மஹாகவிக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லத் தவறியதில்லை. சென்ற வாரம் தான் முதல்முறையாகப் பதிவு போட முடியவில்லை. முதல்நாள் டிசம்பர் பத்து அன்று தான் யு.எஸ். வந்து இறங்கினோம். மறுநாள் அடுத்தடுத்து வேலைகள், மற்றும் மடிக்கணினி தயாராகவில்லை என்பதாலும் போட முடியவில்லை. சரியாக ஒரு வாரம் கழித்து இன்று சொல்கிறேன். தாமதமான வாழ்த்துகள் மஹாகவி அவர்களுக்கு.
மஹாகவிக்கு வணக்கங்கள்.
ReplyDeleteநன்றி. சூழ்நிலை இப்போது சரியாக இருக்கும் என நம்புகிறேன்.
Deleteஎங்களின் தாமதாமான வாழ்த்துக்களையும் சேர்த்துக் கொள்ளூங்கள்! ஓ! அமெரிக்கப் பயணமா!! எஞ்சாய்!
ReplyDeleteஇம்முறை குழப்பமான சூழ்நிலையில் அமெரிக்கப் பயணம் தவிர்க்க முடியலை! போகப் போகத் தான் தெரியும்! :)
Deleteசரி..சரி.. மேற்கத்திய நாட்டிலிருந்தும் மகாகவிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் வருகின்றன என்று எடுத்துக்கவேண்டியதுதான். வாழ்த்துக்களையும், அஞ்சலியையும் குழப்பிக்கொண்டதுதான் வித்யாசமாயிருக்கு.
ReplyDeleteதிருத்திட்டேன். உண்மையிலேயே குழப்பம் தான்!
Deleteமகாகவி பாரதிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி.
Deleteதாமதமாயினும் நினைவுகூர்ந்தது பாராட்டத்தக்கது.
ReplyDeleteடிசம்பர் பதினோராம் தேதியெல்லாம் இதே நினைவு தான். கணினி தயாராக இருந்திருந்தால் கட்டாயம் பதிவிட்டிருப்பேன். :(
Deleteபொதிகைச் சானலில்மஹாகவிக்கு பஞ்ச ரத்ன கிருதி மாதிரி இசைக்கலைஞர்கள் பாரதியின் ஐந்து பாடல்களைப் பாடுவதை நேரலையில் ஒளிபரப்பினார்கள் முதன் முதலாகப் பார்க்கிறேன்
ReplyDeleteவருடா வருடம் பொதிகை அஞ்சலிகள் செலுத்தி வருகிறது. இந்த வருடம் இங்கே இருப்பதால் பார்க்க முடியலை. இங்கே தூர்தர்ஷன் வரதானு தெரியலை. மற்ற சானல்கள் வருகின்றன.
Delete