எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, December 02, 2016

கேள்வி கேட்பதும் நானே! பதிலும் நானே! :)

மடிக்கணினிக்கு ஆன்டி வைரஸ் போடணும். இங்கே ஒரு இளைஞர் எனக்கு வாடிக்கையாகப் போட்டுக் கொடுக்கிறார். நீயே செய்துக்கலாமேனு கேட்கலாம். செய்துக்கலாம் தான்! ஆனால் அவர் வந்தால் அப்படியே கணினி சரியாக இருக்கானு ஒரு வழக்கமான பரிசோதனையையும் செய்துடலாம். ஏனெனில் இதுக்கும் வயசாச்சே! நமக்கு ஆகலைனா அதுக்கு வயசு ஆகாதா என்ன?

நேற்று வந்தவர் என்னோட மடிக்கணினியை எப்போதும் பார்க்கும் நபரின் உதவி ஆள். அவரும் இளைஞர் தான். எப்போவும் ஆன்டி வைரஸ் போடும்போது புத்தம்புதிய உறையைப் பிரித்தே சிடியை கணினியில் போடுவார்கள்.  அதை நிறுவியதும் சோதனைகள் செய்து பார்த்த பின்னர் அதைத் திறப்பதற்கான சாவி என்னும் எண்களையும் சிடியையும் உத்தரவாத அட்டையையும் நம்மிடம் கொடுப்பார்கள். ஆனால் நேத்திக்கு அந்த இளைஞர் தன்னிடம் வைத்திருக்கும் ஏற்கெனவே போட்டுக் கொண்டிருக்கும் பல சிடிக்களில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து (ஆன்டி வைரஸ் என்னமோ வழக்கமாப் போடுவது தான்! ஆனால் புதியது அல்ல, பலருக்கும் போட்டதுனு நினைக்கிறேன்.) போட்டார். நான் கேட்டதுக்கு இப்போல்லாம் இப்படித் தான் வருதுனு சொன்னார். திறப்பதற்கான எண்கள் மட்டும் தனியாக வரும் என்றும் இதை எனக்கு மட்டும் தான் போடுவதாகவும் சொன்னார்.

ஆனால் சிடியைத் திரும்ப என்னிடம் கொடுக்கவில்லை. திறக்கும் எண்களைச் சேர்த்துப் போட்டுவிட்டுப் பின்னர் சிடியைத் தானே எடுத்துக் கொண்டு விட்டார். ஐநூறு ரூபாய் பணம் வாங்கிக் கொண்டார். பணமாக இல்லை என்பதால் செக்காகக் கொடுத்துவிட்டோம். ஆனால் எனக்கு மட்டும் சந்தேகம் போகவே இல்லை. அதே சிடியில் இன்னும் பலருக்கு இவர் போட முடியுமே என்பது தான்! அவரைத் திரும்பக் கேட்டதற்கு அவர் "நானும் பலருக்குப் போட்டுக் கொடுத்திருக்கேன். யாருமே என்னைக் கேள்வி கேட்டதில்லை இதைப் பற்றி யாரும் கவலைப்பட்டதில்லை!" என்று பதில் சொன்னார். நான் கேள்வி கேட்பேன் என்று பதில் கொடுத்தேன். அதோடு நான் சொன்னது இப்போதைய இளைஞர்கள் ஒரு வேளை இதனால் என்ன என்று இருக்கலாம். எங்கள் தலைமுறை அப்படி இருந்ததில்லை என்றேன். ஆனாலும் இப்போதும் பல இளைஞர்களும் கவனமாகத் தான் இருப்பதாகத் தெரிகிறது. எங்களுக்கு இப்படிப் பல அனுபவங்கள் உண்டு.  இப்படித் தான் மின் சாதனங்களைப் பழுது பார்க்கையிலும் ஏதேனும் உபரி சாமான்கள் வாங்க நேர்ந்தால் பழுது பார்க்க வரும் நபர்கள் அவங்களே போய் வாங்கி வருவாங்க. யாரும் கடையின் ரசீதைக் கொடுப்பது இல்லை. ஆனால் நாங்க பணம் கொடுக்கும்போதே ரசீது வேண்டும்னு சொல்லுவோம்.

அப்படியும் இரு முறைகள்  பில்லில் எண்களில் போட்ட தொகையும் மொத்தத் தொகையும் ஒன்றாகவும் இருக்கையில் அதிலேயே  எழுத்தால் அதிகத் தொகை எழுதப்பட்டிருக்கும். அதுவும் பேனாவால் எழுதி இருப்பாங்க. ரசீது கணினியால் கொடுக்கப்பட்ட ரசீது! அதில் எழுத்தால் எழுதி இருக்கும் தொகை மேல் அது தெரியாதவண்ணம் பேனால் மேலே எழுதிக் கொடுத்திருப்பாங்க. ஒரு முறை ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள ஒரு மின்சார சாதனத்துக்குக் கூட விலை வைத்து ஆயிரத்து எண்ணூறு ரூபாய் என எழுதப் பட்டிருந்தது. சென்ற மாதம் ஒரு புது எலக்ட்ரீஷியன் வந்து குழல் விளக்குக்குச் சோக் வாங்குகையில் பட்டியும் சேர்த்து வாங்குவதாகச் சொல்லிவிட்டு அதில் கண்ட தொகைக்கு மேல் இருநூறு ரூபாய் சேர்த்துப் போட்டிருந்தார். பின்னர் நாங்க சுட்டிக் காட்டியதும் கடையில் தப்பாகப் போட்டிருப்பதாகச் சொல்லிவிட்டு அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டவர் வரவே இல்லை! இன்னொருத்தர் இன்வெர்டருக்கு வயரிங் பண்ணணும்னு 600 மீட்டர் வயர் வாங்கினார் ஆனால் வீட்டில் ஏற்கெனவே இன்வெர்டருக்கு வயரிங் செய்திருந்தது, அவ்வளவு திறமையான எலக்ட்ரீஷியனுக்கு இன்வெர்டருக்கு வயரிங் செய்திருப்பதைக் கூடவா கண்டு பிடிக்க முடியாது! அந்த 600 மீட்டர் வயரையும் எங்கள் தலையில் கட்டிட்டுப் போயிட்டார்! :(

ஆக மொத்தம் இந்த நாட்டில் தப்பைக் கண்டால் கேள்வி கேட்கக் கூடாது போல! இந்தக் கணினி விற்பன்னர் இனி வருவாரானு யோசனையும் வருது! பார்ப்போம்! நேற்று வந்தவர் உதவி ஆள் தான். நிறுவனத்தை நடத்துபவர் அல்ல! ஆகையால் நம்பிக்கை இருக்கிறது! என்றாலும் பொறுத்திருந்து தான் பார்க்கணும். 

19 comments:

  1. ஆன்டி வைரஸ் நெட்டில் அப்டேட் செய்து கொள்ளலாம் என்பதால் சி டி கொடுத்திருக்கிறார் மாட்டார். எங்கள் அவ்வப்போது ஆ.வை ஸை மாற்றிக் கொண்டே இருப்பார். ஒருமுறை கேஸ்பர் கீ, ஒருமுறை K7, இன்னொருமுறை வேறொன்று! சில ஆன்டி வைரஸ்களை நான்கு பேர்,மூன்று பேர், ஐந்து பேர் என்று ஷேர் செய்யும் வண்ணம் வரும். நார்டன் தவிர இவையெல்லாமே அரௌண்ட் 600 தான்!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, கொடுத்திருக்கிறார் மாட்டார் புரிஞ்சுண்டேன். :)))) நெட்டில் அப்டேட் செய்யும்போது ஆன்லைனில் பணம் கொடுக்கணும் இல்லையா! ஒரு முறை முயன்றபோது வங்கிக்கணக்கு மூடிக் கொண்டு திறக்கவே இல்லை! :) ஆகவே அப்படிச் செய்யலை. இப்போ மறுபடி முயன்று பார்க்கணும். :)

      Delete
  2. 'கொடுத்திருக்கிறார் மாட்டார்'இல்லை!! மொபைல் விஷமம் செய்திருக்கிறது. நானும் நிமிர்ந்து பார்க்கவில்லை. 'கொடுத்திருக்க மாட்டார்' என்று இருந்திருக்க வேண்டும். அதே போல எங்கள்க்குக்கு அப்புறம் 'கணினி ரிப்பேர் ஆள்' என்று இருந்திருக்க வேண்டும்!!

    ReplyDelete
    Replies
    1. நார்டன் தான் மடிக்கணினி வாங்கியதிலிருந்து சென்ற வருடம் வரை போட்டிருந்தது. பையர் யு.எஸ்ஸில் இருந்து அவரோட மடிக்கணினி, மருமகளோட மடிக்கணினி என்னோடது மூன்றுக்கும் சேர்த்து அப்டேட் செய்துடுவார். எனக்கு கீ அனுப்புவார். நான் இங்கே ஆக்டிவேட் செய்துப்பேன். ஆனால் சென்ற வருடத்திலிருந்து நார்டன் இந்தியாவுக்குத் தனியாத் தான் அப்படினு சொல்லிட்டது! :) ஆகவே தனியாப் போட வேண்டியதாப் போச்சு! :)

      Delete
  3. கேள்வியும் பதிலும் பதிவு பல பேருக்கு உபயோகமாய் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை, அதற்காகவே இம்மாதிரிப் பதிவுகளையும் எழுதி வருகிறேன்.

      Delete
  4. பதிவெழுத, மற்றும் இணையத்தில் உலவும் தங்களுக்கு antivirus இடுவது கஷ்டம் இல்லை. அமேசான் பிளிப்கார்ட் ஸ்னாப்டீல் ஷாப்குளூஸ் போன்ற தளங்களில் அன்டிவைரஸ் கிடைக்கிறது. அதை வாங்கி கம்ப்யூட்டரில் போட்டுக்கொண்டால் போதும். நான் antivirus உபயோகிப்பது இல்லை. ஏன் என்றால் என்னுடைய OS linux ஆகும். இதற்கு antivirus தேவை இல்லை. கணினியும் பழைய மடிக்கணினி lenovo T410.
    --
    Jayakumar
    P.S
    And I forgot to teel you that DD is always available to help bloggers like you.

    ReplyDelete
    Replies
    1. டிடி உதவுவார்னு தெரியும். ஆனால் எனக்குப் புரியணும் இல்லையா? அதோடு நான் அமேசான், ப்ளிப்கார்ட், ஸ்நாப்டீல், ஷாப்குளூஸ் இதிலெல்லாம் எதுவும் இன்று வரை வாங்கியதில்லை. அந்தத் தளங்களுக்குச் சென்று பார்த்தது கூட இல்லை! இனி கணினி வழி ஆன்டி வைரஸ் போடுவதற்குக் கொஞ்சம் கற்றுக் கொண்டு செய்து விடணும். பார்க்கலாம். என்னோட மடிக்கணினிக்கு ஐந்து வயது ஆகிறது! ஸ்கூல் போகும் வயது! ஆகவே சண்டித் தனம் பண்ணுதோ என்னமோ! :))))

      Delete
    2. All PC and laptops are designed for self destruction after some years. As men become old and die they will also become old and die. Hard disks will become slower. BIOS which is being constantly updated through net will start to give trouble etc.

      These e-commerce sites Amazon Snapdeal Flipkart shopclues etc. sell genuine CDs with anti virus. I buy lot of things from these sites and pay through net banking. Moreover the delivery will be at your house.

      Delete
  5. @ஶ்ரீராம், பி.கு. நான் என்னுடைய அலைபேசியின் மூலம் ஆங்கிலத்தில் மட்டுமே தட்டச்சி வருகிறேன். மொழி தேர்ந்தெடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் தட்டச்சும்போது ஆட்டோகரெக்ட் வந்து சொதப்பும்! ஆகவே கவனமாகச் செய்ய வேண்டி இருக்கிறது. எப்போவானும் வாட்ஸப்புகளுக்கு பதில் அல்லது ஏதாவது முகநூல் பதிவுக்கு பதில்! அவ்வளவே அலைபேசி மூலம். மற்றபடி கணினி மூலமே அனைத்தும்! :))))

    ReplyDelete
    Replies
    1. நான் இரண்டிலுமே! சொல்லப் போனால் மொபைலில் அதிகம்..

      Delete
  6. ஆனடி வைரஸ் சிடிலாம் கொடுக்கறாங்களா? பரவாயில்லையே. பில்லைச் சரி பார்ப்பது நல்ல பழக்கம். 87ல் பணக்காரப் பையன் எங்களை உணவகத்துக்கு அழைத்துச் சென்றபோது, கடைசியில் சர்வர் கொடுத்த பில்லை முழுமையாகச் சரிபார்த்தபின்தான் பணம் கொடுத்தான். அது எனக்கு ஒரு lessonஆகத் தோன்றியது.

    நான் இந்தத் துறையில் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் அதற்கென உள்ள சக ஊழியர்கள் இருப்பதால் நான் எதையும் இன்ஸ்டால் செய்வது கிடையாது. (இது நல்லதில்லை என்றபோதும்)

    ReplyDelete
  7. இவ்வாறான பல சூழல்களை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். வேறு வழி? என்ன செய்வது?

    ReplyDelete
  8. you may download AVAST or AVG which is free . This antivirus tool is used universally. Only the higher edition is priced. You may go in for the basic version which is free.
    go to google. type download avast free edition and follow the steps.
    instal and execute.
    subbu thatha.

    ReplyDelete
  9. பல சமயங்களில் இது போன்றவர்கள் ஏமாற்றவே செய்கிறார்கள்.

    ReplyDelete
  10. பலவிதங்களில் வகைகளில் ஏமாற்றாப் படுகிறோம்.
    நாமே கற்றுக் கொண்டால் ஒழிய தப்ப வழியில்லை.

    ReplyDelete
  11. avast anti virus ஐ எனக்கு எங்கள் கணினி டாக்டர் போட்டுக் கொடுப்பார். வருடத்துக்கு ஒருமுறை அப்டேட் செய்து கொடுப்பார் நாங்கள் அவரிடம் நம்பிக்கை வைத்திருக்கிறோம் எந்தப் பிரச்சனை கணினியில் என்றாலும் சரி செய்து கொடுப்பார்விஷயம் தெரியாத நான் அவரிடம் சொல்லித் தெரிந்து கொள்வேன் நம்பிக்கையானவர்

    ReplyDelete
  12. இப்படித்தான் நாம் கவனமாக இருந்தாலும் ஏமாற்றி விட்டுச் சென்றுவிடுகிறார்கள். ஒரு சில விஷயங்களில் நம்பிக்கையானவர் இருப்பதால் பிழைத்துப் போகிறது...

    ReplyDelete
  13. Windows8 க்கும், Windoes10க்கும் அதனுடன் வரும் microsoft கொடுக்கும் windows defender என்கிற free antivirus போதும். எந்த antivirusஆக இருந்தாலும் ஞாயிறு காலை ஒரு மணிக்கு தானாக update ஆகும்படி செட் செய்து வைத்து கொள்ளவேண்டும். ------------ V.Krishnamoorthy

    ReplyDelete