எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, December 06, 2016

ஒரு சகாப்தம் முடிந்தது!

ஜெயலலி க்கான பட முடிவு

ஒரு சகாப்தமே முடிந்தது. இரும்புப் பெண்மணி, அனைவரையும் தன் ஒரே கண்ணசைவாலும், கையசைவாலும் கட்டுப் ப்டுத்திய பெண்மணி, தானாக முன்னுக்கு வந்தவர், அரசியலுக்கு நுழைந்ததிலிருந்து போராட்டங்கள், அவமானங்கள், சிரமங்கள் என அனைத்தையும் தாண்டிக் கொண்டு எதைக் குறித்தும் கவலைப்படாமல் தமிழ்நாட்டு எளிய மக்களின் சேவையே தன் கொள்கையாகக் கொண்டு வாழ்ந்தவர் மறைந்து விட்டார்.

அவருடைய அரசியல் எதிரிகள் கூட அவர் இல்லாத தமிழ்நாட்டு அரசியலும் இந்திய அரசியலும் வெற்றிடத்தை ஏற்படுத்தி இருப்பதை உணர்கிறார்கள். சாமானிய மக்களுக்காக அவர் பற்பல நன்மைகளைச் செய்திருக்கிறார். ரேஷனில் அரிசியில் ஆரம்பித்தால் மாணவ, மாணவிகளுக்கு சைகிள், மடிக்கணினி, இல்லத்தரசிகளுக்கு மிக்சி, கிரைண்டர் போன்றவைகளையும் கொடுத்ததோடு அல்லாமல் தாலிக்குத் தங்கம், குழந்தை பிறந்தால் பரிசுப் பொருட்கள், பெண் குழந்தைகளுக்குத் தனிச் சலுகைகள் என்று கொடுத்ததினால் தமிழ்நாட்டின் ஒட்டு மொத்தப் பெண்களையும் மிகவும் கவர்ந்தவர். வயதான பெண்மணிகள் கூட அம்மா, அம்மா என்று கதறுகின்றனர்.

மக்களின் பொறுமையும் கட்டுப்பாடும் வியக்கத்தக்க விதத்தில் அமைந்திருந்தது. எங்கும் எதிலும் கலவரமோ, பிரச்னைகளோ, சண்டையோ இல்லாமல் அமைதியாக இறுதி ஊர்வலம் நடந்து முடிந்தது. அதோடு அல்லாமல் இன்றைய தினம் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவு சமைத்துப் பரிமாறப்பட்டிருக்கிறது. இந்தியாவின் அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டுத் தலைவர்களும் இரங்கல் செய்திகளை அனுப்பிய வண்ணம் இருக்கிறார்கள். இந்தியாவின் 20 மாநிலங்களின் முதலமைச்சர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர். குடியரசுத் தலைவரே நேரில் வந்திருக்கிறார். பிரதமர் வந்திருக்கிறார். இப்படி அனைவரையும் தன் பால் ஈர்த்த அந்தப் பெண்மணி இன்று இல்லை.

மிகத் திறமையானவர். தன் கட்சியையும் கட்சிக்காரர்களையும் மிகுந்த கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர். அவர் இல்லாத தமிழகம் இனி என்ன ஆகும்? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  மாலுமி இல்லாக்கப்பலைப் போல் இருக்கும் அதிமுக கட்சியையும் தமிழகத்தையும் தக்க மாலுமியக் காட்டித் தர எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

செல்வி ஜெ.ஜெயலலிதாவின் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்தனைகள்.

10 comments:

 1. எங்கள் பிரார்த்தனைகளும். கலவரங்களோ, அசம்பாவிதங்களோ இந்த இரண்டு நாட்களில் நடைபெறவில்லை என்பது ஒரு மிகப்பெரிய ப்ளஸ்.

  ReplyDelete
 2. ஆழ்ந்த இரங்கல்கள்

  ReplyDelete
 3. இனி கட்சி என்னாகப்போகிறதோ....பெண்ணாளுமை...!!!

  தமிழகத்திற்கு இனி நல்லதொரு தலைவர் இல்லையே என்ற குறை இருக்கத்தான் செய்கிறது..

  ReplyDelete
 4. நம் காலத்தில் வாழ்ந்த இரும்புப்பெண்மணி.

  ReplyDelete
 5. அந்தக் கூடா நட்பை மட்டும் விட்டுவிட்டிருந்தால் இன்னும் வாழ்ந்திருப்பார் என்று உள்மனம் புலம்புகிறது. இன்று இறைவனடி சேர்ந்த சோ -வின் சொல்லைக் கேட்டிருந்தால்?
  என் அக்காவின் மறைவிற்குப் பிறகு என்னை மிகவும் பாதித்துவிட்டது இவரது மறைவு. அதுவும் மண்ணில் புதைத்தது மனசு ஆறவேயில்லை.

  ReplyDelete
 6. பெரிய ஆளுமை. பெரிய இடைவெளி. ரஞ்சனி மேடம் சொன்னதை ஏற்க மனது வரவில்லை. ஜெ. அவர்களுக்குச் சரியான துணை, காலம் வழங்கவில்லை. வழங்கியதை அவர் ஏற்றுக்கொண்டார். தனியே ஒரு பெண் தலைவர் இருப்பது சாத்தியமா? அவருக்கு என்ன தேவையோ அதற்கான செக்ரெட்டரியாக ஆரம்பித்தது, சொந்தமாகவே ஏற்றுக்கொள்ளும் அளவு வளர்ச்சியை அது வளர்ச்சிபெற்றுவிட்டது. தொலைபேசி போன்றவை அதிகமாக இல்லாதபோது, எம்ஜியாருக்கு ஜெ.வின் communication சசிகலா மூலம் கொடுத்துவிடும் கடிதங்களாக/Notesகளாக இருந்தது) கலவரம், அசம்பாவிதம் ஒன்றும் நடக்கவில்லை (ஒருவேளை எழுந்துவிட்டால்.. அப்படிப்பட்ட ஆளுமை அவருடையது)

  ReplyDelete
 7. தமிழக மக்களுக்குப் பாராட்டுகள் இம்மாதிரி யான தலைவர் இறந்தால் என்ன மாதிரியான கலவரங்கள் நிகழுமோ என்ற பயம் இருந்தது இதுவும் கடந்து போகும் என்னும் மனநிலையில் பலரும் இருப்பது சந்தோஷம்

  ReplyDelete
 8. ஆழ்ந்த இரங்கல்கள்.....

  ReplyDelete
 9. ஆழ்ந்த இரங்கல்கள்!

  ReplyDelete
 10. ரஞ்சனி சொன்னதே எனக்கும் உரைக்கிறது. அவருக்குத் துணை தேவைதான். நல்ல துணையாக அமையாமல் இப்படிக் கொடூர்மாக அமைந்ததே விஷயம்.

  அவர் மறைந்த பிறகும் அமைதி நீடித்ததுதான் அதிசயம்.
  இனி த்மிழ்னாட்டுக்கு நல்லதே நடக்கும் என்று நம்பலாம்.
  செல்வி ஜயலைதாவின் ஆன்ம சாந்திக்குப் பிரார்த்தனைகள்.

  ReplyDelete