எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, December 19, 2016

இறைவனுக்கு நன்றி!

சென்னை நகருக்கும் அதன் சுற்று வட்டாரங்களுக்கும் முதன் முதல் 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் தான் பிரச்னை ஏற்பட்டது. அநேகமாகத் தமிழ்நாட்டுக்கடலோரங்கள் எல்லாமும் பாதிக்கப்பட்டாலும் சென்னைக்கு அதிகப் பிரச்னை. அப்போவும் நாங்க யு.எஸ்ஸிலே தான் இருந்தோம். அப்போ எல்லாம் நான் எழுத்தாளி ஆகலை! :) கணினியைப் பயன்படுத்தத் தெரியும் என்பதால் அவ்வப்போது கணினி மூலம் செய்திகளைப் படிப்போம். அப்படிப் படித்ததில் தான் தெரிந்தது கடலலைகள் சென்னை மெரினாக் கடற்கரையில் மிக உயரமாக வந்தது என்று சின்னச் செய்தியாக முதலில் கொடுத்திருந்தார்கள். பின்னர் தான் நேரம் ஆக, ஆக விரிவான செய்திகளும் அதன் தாக்கமும் புரிய வந்தது. அப்போதே இங்கே யு.எஸ்ஸில் சன் தொலைக்காட்சி போன்றவை வந்து விட்டாலும் பெண் வீட்டிலோ, பையர் வீட்டிலோ அது பார்க்க முடியாது. நம்ம ரங்க்ஸும் அப்போ சீரியல் ரசிகராக இல்லை. 

அதன் பின்னர் நாங்க திரும்பி வந்த 2005 ஆம் ஆண்டு தமிழ்நாடே மழை, வெள்ளத்தால் மூழ்கியது. என்றாலும் எங்கள் வீட்டிற்கோ எங்களுக்கோப் பிரச்னைகள் ஏதும் இல்லை. அந்த வருடம் அடுத்தடுத்துப் புயல்கள் மாறி மாறி வந்து தாக்கினாலும் சென்னையில் பாதிப்பு அவ்வளவாக இல்லை. ஹிஹிஹி, இதுக்குக் காரணம் நாங்க சென்னையைப் பாதுகாத்துக் கொண்டிருந்தது தான் அப்படினு சொன்னா நம்பவா போறீங்க? போகட்டும்! அந்த வருடம் டிசம்பரில் பத்தாம் தேதிக்கு ஒரு பெரிய புயலுக்குச் சென்னையைத் தயாராகச் சொல்லி வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. பையருக்கு டிசம்பர் 11 ஆம் தேதி கல்யாணம். டிசம்பர் ஐந்தாம் தேதி வாக்கிலேயே பையர் ஹூஸ்டனிலிருந்து வந்துட்டார். ஒன்பதாம் தேதியிலிருந்து உறவினர்கள் திருமணம் நடக்குமானு தொலைபேசிக் கேட்க, நாங்க யார் வந்தாலும் வராட்டியும் பெண் வீட்டாரும் நாங்களும் இருந்து கல்யாணத்தை நடத்திவிடுவோம் என்று சொல்லி விட்டு எதுக்கும் பாதுகாப்பா இருக்கட்டும்னு ஒன்பதாம் தேதி இரவுக்கே திடீரெனத் திட்டம் போட்டுக் கல்யாண மண்டபம் போயிட்டோம்.

மறுநாள் ஏதோ அரசியல் கட்சியின் திடீர் போராட்டத்தினால் ஆங்காங்கே பேருந்துகள் நிற்க நல்லவேளையாக நாங்க பிழைச்சோம்னு எண்ணிக் கொண்டோம். உறவினர்கள் எல்லோரும் ஒவ்வொருவராக வர ஆரம்பிக்கப் புயலும் கல்யாணத்தையும் மணமக்களையும் ஆசீர்வதித்துவிட்டு ஒதுங்கிக் கொண்டது. வெளி ஊர் உறவினர்கள் கூட அதன் பின்னர் கிளம்பி வந்தனர். ஆக மொத்தம் இப்படியாகச் சென்னையைக் காப்பாற்றி வந்த நாங்க 2007 ஆம் வருடம் கடுங்கோடையில் யு.எஸ். வந்ததால் அந்த வருடம் அதன் பின்னர் ஒன்றும் இல்லாமல் பாதுகாத்தோம். ஆனால் 2011 ஆம் வருடம் பாருங்க, நாங்க அக்டோபரில் கிளம்பி வந்தப்புறமா டிசம்பரில்  தானே புயல் தானாகவே வந்து கடலூரைத் தாக்கச் சென்னையும் பாதிக்கப்பட்டது. ஹிஹிஹி, நாங்க இல்லையே, அதான்!  ஆனால் பாருங்க, 2012 ஆம் ஆண்டு யு.எஸ்ஸில் இருந்து திரும்பினதும் நாங்க ஶ்ரீரங்கம் வந்துட்டோமா, அதன் பின்னர் சென்னைக்கு அடிக்கடி வந்து போயிட்டிருந்ததாலே சென்னை ஒருவழியாக் காப்பாற்றப் பட்டது. 

போன வருடம் தான் கடும் மழை பொழிந்து சென்னை வெள்ளத்தில் மூழ்க இதுக்குக் காரணம் நாங்க அங்கே இல்லாததால் தான் என்று புரிந்தது. அதுக்கப்புறமாப் பாருங்க இந்த வருஷம் நாங்க இருந்தவரை வருவேன், வருவேன் என்று பயமுறுத்திட்டிருந்த நடா புயல் வராமல் மறைய, நாங்க அங்கிருந்து கிளம்பியதும், எங்கோ போக இருந்த வர்தா புயல் அதிசயமாகச்சென்னையைப் பல வருஷங்களுக்குப் பின்னர் தாக்கி விட்டது. அதுவும் கடுமையாக! இன்னும் பல இடங்களிலும் பலருக்கும் மின்சாரம் வரலைனு படிச்சோம். பல இடங்களிலும் அலைபேசிச் சேவையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. பிஎஸ் என் எல் இணைய இணைப்பும், தொலைபேசியுமே ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளும் சாதனமாக இருந்திருக்கிறது. சில இடங்களில் இன்னமும் இருந்து வருகிறது. 

அம்பத்தூரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். என்றாலும் எங்கள் வீட்டில் அருமையாக வளர்த்த வேப்பமரத்துக்கு ஒண்ணும் ஆகலைனு உறுதி செய்து கொண்டோம். தென்னை மரங்களும் விழலை! இறைவன் காப்பாற்றினார். ஆனால் ஒரு சிலரின் வீடுகள் சுவர் இடிந்து விழுந்திருக்கின்றது. சில வீடுகளில் மாடிப்படிக் கைப்பிடிச் சுவர் இடிந்து இருக்கிறது. மரங்களால் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் பிரச்னை. இதிலே அரசு உடனே வந்து ஒண்ணும் செய்யலைனு புகார்கள்! எதைனு முதலில் கவனிப்பாங்க. பாதிப்பு எல்லோருக்கும் தானே! ஒவ்வொரு இடமாகத் தானே கவனிக்க முடியும். மரங்களை அந்த அந்த தெருக்காரங்களே சேர்ந்து ஆட்களை நியமித்து ஒரு வீட்டுக்கு இத்தனை ரூபாய்னு கட்டணம் நியமிச்சு அகற்றலாமே! இந்த மழையிலும் தங்கள் கஷ்டம் பாராது ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் மின்சார விநியோகத்தைச் சீர் செய்யும் தொழிலாளர்களுக்கு உதவலாம். அவங்களும் நம்மைப் போன்ற பொது ஜனங்கள் தான். அவங்க வீடுகளிலும் மின்சாரம், குடிநீர்ப் பிரச்னை இருக்கும். அதைக் கூடக் கவனிக்காமல் அவங்க பொதுமக்கள் பிரச்னையைத் தீர்க்க வேண்டி வந்திருக்காங்க இல்லையா! அதைப் பார்க்கணும்.

நம்மால் இயன்றவரை அரசு செய்யும் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புத் தரணும். உயிர்ச் சேதம் அதிகம் இருப்பதாகத் தெரியவில்லை . சென்ற வருடம் அளவுக்குப் பொருட்சேதமும் இருப்பதாகச் சொல்லவில்லை. அந்த மட்டில் இறைவன் கருணை என நினைத்துக் கொண்டு இறைவனுக்கு நன்றி சொல்வோம். விழுந்த மரங்களை எல்லாம் ஒரே நாளில் யாராலும் அப்புறப்படுத்த முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் செய்ய முடியும். ஆகவே பொறுத்திருப்போம்.  மற்ற மாவட்டங்கள் ஓரளவுக்குத் தாக்குப் பிடித்திருக்கின்றன என எண்ணுகிறேன். 

ஜேகே அண்ணா, இந்தியாவின் பிரச்னைகள் குறித்துப் பதிவுகள் வராதுனு சந்தோஷப் பட்டீங்களே, இது எப்பூடி இருக்கு?

இப்போ இங்கே காலை ஏழு மணி. அங்கே உங்களுக்கெல்லாம் மாலை ஆறரை இருக்கும்னு நினைக்கிறேன். :)))))

16 comments:

  1. Correct. இங்கே மாலை ஆறே முக்கால் மணி ஆகிறது. அரசாங்கம் வேறு நாம் வேறு என்று நினைக்காமல் அவரவர் வேலைகளை முடிந்தவரை - முடிந்தவரைதான் - செய்து கொள்ளுதல் நலம்தானே? நீங்கள் சென்னையில் இருந்தால் புயல் வருவதற்கு பயந்தது உண்மைதானோ!!!!!

    ReplyDelete
    Replies
    1. நாங்கள் சென்னையில் இருந்திருந்தால் புயலை நேரில் அனுபவித்திருக்கலாம்! :( அந்த வாய்ப்பு இல்லை. உண்மையில் பயந்தது எதுக்குன்னா புயல் தாக்கும்போது சென்னை விமான நிலையத்தை மூடிடுவாங்களே! அதோடு திருச்சியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து சேரணும். எல்லாவற்றையும் நினைத்துக் கவலையும் பயமும் இருந்தது என்னமோ உண்மை தான். மற்றபடி புயலைக் கண்டு பயம்னு சொல்ல முடியாது! :)))) கு.வி.மீ.ம.ஒ. ஹிஹிஹிஹி!

      Delete
  2. புரியுது... நீங்கள் இங்கு இல்லாத்தனால்தான் சென்னையைப். புயலில் வதைபடுவதிலிருந்து காப்பாற்ற முடியலைன்னு... ஆனா அதுக்கம் எதுக்கு "இறைவனுக்கு நன்றி" சொல்லியிருக்கிறீர்கள்? உங்க வீட்டு வேப்பமரம் தப்பிச்சதற்கா?

    நான்கூட "நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை"யை நினைத்து, நான் ஊரில் இல்லை, அதனால் அந்த "நல்லோரில்" நான் ஒருவன் இல்லை போலிருக்கு என்று எண்ணிக்கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. இல்லை, மலை போல் வரும் கஷ்டம் எல்லாம் பனி போல் விலகிடும்னு சொல்வாங்க. அதை எங்கள் வாழ்க்கையில் பல முறை அனுபவித்தோம். இப்போதும் அப்படித் தான்! ஜெயலலிதாவின் கடைசி யாத்திரை ஒரு வேளை நாங்கள் கிளம்பிய ஒன்பதாம் தேதி நடைபெற்றிருந்தால்? அல்லது மக்களே வன்முறையில் ஈடுபட்டிருந்தால்? இந்த வர்தா புயலே ஒன்பதாம் தேதி சென்னையைத் தாக்கி இருந்தால்? இப்படி எல்லாத்தையும் நினைச்சுப் பார்த்துட்டுத் தான் ஒவ்வொரு நிமிஷமும் அவன் பாதுகாப்பில் இருப்பதைப் பரிபூரணமாக உணர முடிகிறது!

      Delete
  3. வணக்கம் நலமா ? அலசல் நன்று

    ReplyDelete
    Replies
    1. வாங்க, வாங்க, ஒவ்வொருவர் பதிவாகப் போய்க் கொண்டிருக்கேன். உங்க பதிவுக்கும் வரணும். குழந்தையோடு பொழுது போய் விடுவதால் இணையத்தில் அதிகம் உட்கார முடியலை! :)

      Delete
  4. அருமையான பகிர்வு
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    ReplyDelete
  5. இத்தனை அழகாக் காப்பாத்தி இருக்கிறிடர்கள் கீதா. மஹிமையே மஹிமை.

    மைலாப்பூரில் மரங்கள் ஏக சேதம். எங்கள் வீட்டில் தேக்கு மரக் கிளைகள் மட்டும் உடைந்ததாம்..
    மற்ற சேதம் இல்லாமல் காத்தது இறைவன் கருணை.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ரேவதி.எங்க வீட்டில் தென்னை மரங்கள் பக்கத்துக் குடியிருப்புக்கு மிக அருகில் இருப்பதால் அது வேறு கவலை! வேப்பமரம் வெளிச் சுற்றுச் சுவரை ஒட்டி இருக்கு. சுற்றுச் சுவரில் விழுந்துட்டால் என்ன செய்யறதுனு அது வேறு கவலை! நல்லவேளையாக் குடியிருப்பவர்கள் நல்லாக் கவனிச்சுக்கறாங்கனு செய்தி வந்தது! இதுவும் கடவுளின் கருணை தான்! எல்லாத்துக்கும் வீட்டுக்காரங்க தான் வரணும்னு சொல்லிட்டால் என்ன செய்ய முடியும்? :)

      Delete
  6. அது எப்படி உங்களை பார்த்து புயல் எல்லாம் பயப்படுது. ஒரு பெரிய புயல் புராணமே எழுதி விட்டீர்கள். அதுவும் ஒரு புயல் அடிச்ச மாதிரி. ஆமாம் அங்கே ஹூஸ்டனில் பனிப்பொழிவு எப்படி. பேத்தி எப்படி இருக்கிருக்கிறாள்?
    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜேகே அண்ணா! அது என்னமோ தெரியலை! இம்மாதிரி முக்கிய நிகழ்வுகள் எல்லாமே நாங்க இந்தியாவை விட்டு வந்ததும் நடக்கிறது! :) இங்கே பனிப் பொழிவு இல்லைனாலும் இரண்டு நாட்களாக மைனஸில் தான் போயிட்டு இருக்கு! வீட்டுக்குள்ளே தெரியாது! வெளியே நாங்க போவதில்லை! பேத்தி நன்றாக விளையாடுகிறாள். மதியமெல்லாம் பேத்தியோடு நேரம் போவதால் காலையில் தான் கணினியில் உட்காருகிறேன். இரவு சிறிது நேரம்! :)

      Delete
  7. எல்லாப் புகழும் இறைவனுக்கும் கீதா மேடத்துக்கும் அது எப்படி புயல் வரும்போதெல்லாம் உங்களுக்கு யூ எஸ் காப்பகமாக இருக்கிறது/

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, நாங்களாக இப்படி ஏற்படுத்திக்கலையே! உண்மையில் யு.எஸ்ஸுக்கு டிக்கெட் வாங்கியதில் இருந்தே பலவேறு குழப்பங்கள்! அப்போப் புயல் பத்தி எல்லாம் நினைக்கலை. ஆனால் சென்ற டிசம்பரில் பெய்த மாதிரி மழை பெய்யுமோனு ஒரு கவலை இருந்தது! அதுவும் இந்த வருஷம் மழை என்பது பேருக்குக் கூட இல்லாமல் சுத்தமாக இருந்ததால் கார்த்திகை மாதக் கடைசியில் மழை பெய்யும் என்று எதிர்பார்த்தோம். :)

      Delete
  8. நானும் உங்களோடு கொஞ்சம் கை கோர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஒரு முறை நவம்பர் மாதம் மஸ்கட் செல்வதற்காக விமானத்தில் ஏறி உட்கார்ந்தேன். விமானம் ஓடு தள பாதையில் ஓடும் பொழுது ஜன்னலில் தூறல் விழுந்தது. நான் மஸ்கட் போய் இறங்கி விட்டேன். இங்கே ஒரே மழை, அப்பொழுதும் எங்கள் காலனியில் தண்ணீர் வந்ததாம், ஆனால் வீடுகளுக்குள் நுழையவில்லை.

    இந்த வருடம் புயலுக்கு முன் பெங்களூர் சென்று விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க, வாங்க, இதற்கு முன்னர் எண்பதுகளின் கடைசியில் வந்ததாகச் சொல்லப்பட்ட புயலின் போது கூட ராஜஸ்தானிலோ, குஜராத்திலோ இருந்தோம். இம்முறை எங்க வீட்டிலும் தண்ணீர் நுழையவில்லை.

      Delete