3.இடையன் எறிந்த மரம்
திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்தில் வருஷந்தோறும் நடைபெறும் ஸ்ரீ ஆதி குமரகுருபரஸ்வாமிகள் தின வைபவத்துக்கு வழக்கப்படியே 1937-ம் வருஷம் நான் போயிருந்தேன். அப்போது அந்த மடத்தில் மாடுகளைப் பாதுகாப்பதற்காக வருவித்து நியமிக்கப்பெற்றிருந்த இடையன் ஒருவனை நான் கண்டு பேசினேன். அவனுக்கு அறுபது பிராயத்திற்குமேல் இருக்கும். பல இடங்களிலிருந்து அனுபவம் பெற்றவன். அவனிடம் மாடுகளைப் பற்றிய விஷயங்களை யெல்லாம் தெரிந்து கொள்ளலாமென்பது என் அவா. ஆதலால் அவனிடம் விஷயங்களை விசாரிக்கத் தொடங்கினேன். அவன் முதலில் தன் கதையைச் சொல்லிக் கொண்டான். அந்த மடத்தில் தனக்கு எல்லாவிதமான செளகரியங்களும் கிடைப்பது பற்றி நன்றியறிவுடன் பாராட்டிப் பேசினான். அப்பால் மாடுகளின் வகை, கொண்டி மாடுகளை மடக்கிப் பிடிக்கும் முறைகள், பிடித்தற்கு வேண்டிய கருவிகள் முதலிய பல விஷயங்களை அவன் விரிவாக எடுத்துரைத்தான். கயிற்றில் சுருக்குப்போட்டு அடங்காத காளைகளை அதில் அகப்படச் செய்யும் விதத்தைச் சொல்லித் தன் கையிற் கொணர்ந்திருந்த கயிற்றில் அந்தச் சுருக்கையும் போட்டுக் காட்டினான்.
அவன் கூறிய செய்தி ஒவ்வொன்றும் எனக்குப் புதியதாக இருந்தது; ஆச்சரியத்தையும் விளைவித்தது. அந்தச் சமயத்தில் அவற்றால் ஒருவித மகிழ்ச்சி உண்டாயிற்றே யன்றி அவை என் மனத்திற் பதியவில்லை. நான் மாடுகளோடு பழகுபவனாகவோ, பல பசுக்களை வைத்துக் காப்பாற்றுபவனாகவோ இருந்தால், அவன் கூறியவற்றை யெல்லாம் மனத்திற் பதிந்து கொண்டிருப்பேன். எனக்கு அத்தகைய நிலை இல்லையே. இலக்கியத்தில் வரும் பசுக்களையும், காளைகளையும் அறிந்து இன்புறுபவனாகிய எனக்கு அவன் சொன்ன விஷயங்களில் கவனம் ஏற்படாதது வியப்பன்று. ஆயினும் அவன் கூறியவற்றைக் குறித்துக் கொண்டேன்.
அவன் இடையர் கூட்டத்தில் வழங்கும் சில பழமொழிகளைச் சொல்ல ஆரம்பித்தான். அனுபவத்தில் தோய்ந்து பழுத்து உருப்பெற்றவையே பழமொழிகள். ஆதலின் அதுகாறும் வெறும் விநோதார்த்தமாகக் கேட்டு வந்த நான் என் கவனத்தை அதிகமாகச் செலுத்தத் தொடங்கினேன்.
"எங்கள் ஜாதியிலே வாழ்த்துச் சொல்லும்போது, "நல்லெருமை நாகு, நற்பசு சேங்கன்று, ஆடு கிடாய், அடியாள் பெண்பெற," என்று வாழ்த்துவார்கள் என்றான் அவன். எருமை கிடாரிக்கன்றையும், பசு காளைக்கன்றையும், ஆடு கிடாரிக்குட்டியையும், மனைவி பெண் குழந்தையையும் பெற வேண்டுமென்று அந்தச் சாதியினர் விரும்புவார்களாம். நாகு என்னும் சொல் பெண் எருமையைக் குறிக்கும். இலக்கியத்திலே அச்சொல் பயின்று வரும்.
அந்த இடையன் மெல்ல மெல்லத் தன்னிடத்திலும் சரக்கு உண்டு என்பதைக் காட்டத் தொடங்கினான்.
இடையன் ஆடுகளை ஓட்டும் மாதிரியை அபிநயம் செய்து காட்டினான்; 'ஆடுமாடுகளை நாங்கள் காட்டுப் புறங்களுக்கு ஓட்டிக்கொண்டு போவோம். அங்கே மரங்களின் கிளைகளை எங்கள் வாளால் வெட்டுவோம். நாங்கள் வெட்டும்போது கிளை முழுவதும் துண்டித்து விழாமல் முறிந்து தொங்கும். ஆடுகள் அதில் முன்னங்காலை வைத்துக்கொண்டு தழைகளைத் தின்னும். அந்தக் கிளை அடியோடு அறாமலும், மற்றக் கிளைகளைப் போல மரத்தோடு முழுவதும் சேராமலும் இருக்கும்." என்று அவன் வருணிக்கத் தொடங்கினான்.
அவன் அந்த விஷயத்தைச் சொல்லி வரும்போது நான் ஊக்கத்தோடு கவனித்தேன். அவன் அகக்கண்ணிற்குக் காடும் மரமும் ஆடு மாடுகளும் தோன்றின போலும்! என் உள்ளத்திலோ வேறுவிதமான தோற்றம் உண்டாயிற்று. அவன் இந்தப் பிரத்தியக்ஷமான உலகத்திலுள்ள காட்சிகளை நினைந்துகொண்டே பேசினான். அதைக் கேட்கக் கேட்க என் மனமோ தமிழ் இலக்கிய உலகத்திலே சஞ்சாரம் செய்ய ஆரம்பித்தது.
'இடையர்கள் ஆடுமாடுகளுக்கு உணவு அளிப்பதற்காக மரக்கிளைகளை வெட்டிச் சாய்ப்பார்கள்' என்ற செய்தியை அவன் சொன்னபோது எனக்குப் பழந்தமிழ் நூல்களிலுள்ள செய்யுட்கள் ஞாபகத்திற்கு வந்தன.
நம் மனமறிந்து முற்றும் நம்மோடு பழகினவர் நம்மிடமிருந்து ஓர் உபகாரத்தை எதிர்பார்க்கிறார்; வாய்விட்டும் சொல்லிக் கேட்டுவிடுகிறார். அவர் கேட்கும்போது தாக்ஷிண்யத்திற்குக் கட்டுப் பட்டு அந்த உபகாரத்தைச் செய்வதாக நாம் ஒப்புக் கொள்கிறோம். ஆனால், அவர் கேட்கும் பொருளோ நம்மிடத்தில் இல்லை. கேட்பவர் நெடுநாளாகப் பழகியவர். நாமோ வாக்குக் கொடுத்துவிட்டோம்; நம்முடைய அளவை முன்பே நன்றாக யோசனை செய்யாமல் அவருக்கு ஒரு நம்பிக்கையை உண்டாக்கி விட்டோம். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கிறோம். 'முடியாது' என்று கடைசியில் சொல்லுவது நியாயமாகத் தோன்றுவதில்லை. இந்த மாதிரியான தர்ம சங்கட நிலையை ஓர் உபமானம் நன்றாக விளக்குகிறது. நாம், 'இடையன் எறிந்த மரம் போல' இருக்கிறோம் உபகாரத்தை மறுப்பதற்கும் இல்லை; செய்வதற்கும் இல்லை.
இந்த விஷயத்தையே பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய பழமொழி என்பதிலுள்ள ஒரு செய்யுள் தெரிவிக்கின்றது.
1*"அடையப் பயின்றார் சொல் ஆற்றுவராக்கேட்டால்
உடையதொன்றில்லாமையொட்டின் - படைபெற்
றடைய அமர்த்தகட் பைந்தொடி அஃதால்
இடைய னெறிந்த மரம்."
இடையன் விரித்துரைத்த காட்சியும் பழமொழிச் செய்யுளும் ஒருங்கே என் மனத்தில் ஓடின.
"அவ்வாறு வெட்டும்போது கிளை அடியோடு விழும்படி வெட்டினால் என்ன?" என்று நான் கேட்டேன்.
"அப்படி வெட்டிவிட்டால் அந்தக் கிளை பிறகு உபயோகமில்லாமற் போய்விடும். நாங்கள் வெட்டும் கிளையோ மரத்தோடு ஒட்டிக்கொண்டிருப்பதால் மறுபடியும் தழைக்கும்."
இடையன் எறிந்த மரம் முழுவதும் அறாமல் அரைகுறையாக உயிர் வைத்துக் கொண்டிருக்கும்' என்ற எண்ணத்தை அவன் கூறிய விடை உண்டாக்கியது. அதனைத் தொடர்ந்தவாறே,
"இடைமகன் கொன்ற வின்னா மரத்தினேன்" (1914), என்ற சீவக சிந்தாமணி அடி ஞாபகத்திற்கு வந்தது.
தமிழ்த்தாத்தாவிற்குப் பிறந்த நாள் அஞ்சலிகள்!
ஞாபகமா போட்டுடறீங்க.... எங்கள் அஞ்சலிகளும்.
ReplyDeleteநன்றி ஶ்ரீராம்.
Deleteஅப்பப்பா. எவ்வளவு நுணுக்கமான செய்திகள். அதனால்தான் அவர் தமிழ்த்தாத்தா.
ReplyDeleteநன்றி ஐயா!
Deleteநிறைய விடயம் அறிந்தேன்.
ReplyDeleteதாத்தாவுக்கு எமது அஞ்சலிகள்.
நன்றி கில்லர்ஜி!
Deleteஇளமண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்..
ReplyDeleteகண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்!..
- என்று - நாகு எனும் பதம் கொண்டு அப்பர் பெருமான் திருஐயாற்றில் பாடுகின்றார்..
பயனுள்ள செய்திகள்.. தமிழ்த்தாத்தா அவர்களுக்கு எளியேனின் அஞ்சலிகள்...
நன்றி துரை சார்!
Deleteதமிழ்த்தாத்தாவை மறக்காமல் நினைவுகூர்ந்துவிட்டீர்கள். நீங்கள் எழுதியிருப்பதை ஏற்கனவே (பலமுறை) படித்திருக்கிறேன்.
ReplyDeleteநெ.த. நன்றி. நினைவு மஞ்சரி பாகம் 1 என்னிடமும் இருக்கிறபடியால் நானும் படிச்சிருக்கேன். :) அவ்வப்போது எடுத்துப் படிப்பேன். :)
Deleteகீதாக்கா இன்று காலண்டரைப் பார்த்த போது தமிழ்த்தாத்தா பிறந்த நாள்னு போட்டுருந்தது. உடனே ஆ! இன்று கீதாக்கா பதிவு போடுவாங்களேனு வந்தா கரீக்டா பதிவு!! எங்கள் அஞ்சலிகளும்! இதை வாசித்த போது பார்த்தா நேத்து பதிவு கண்டேன்..அங்க போய் கமென்ட் போட்டுட்டு இங்கு....
ReplyDeleteகீதா
வாங்க கீதா, இதை ஏற்கெனவே ஷெட்யூல் செய்து வைத்திருந்தேன். காலையிலே இன்னிக்கு ரொம்ப தாமதம் எழுந்திருக்க! நல்லவேளையா ஷெட்யூல் செய்திருந்ததால் வெளியானது. இல்லைனா எழுந்ததும் இருந்த வேலைகளில் மறந்திருக்கும்! :)
Deleteமரக்கிளை பாதி வெட்டி ஆடுகளுக்கு உணவா தருவதன் ரீஸன் இப்போதான் தெரியுது .நல்ல தகவல் .தமிழ் தாத்தாவுக்கு அஞ்சலிகள் .
ReplyDeleteவாங்க ஏஞ்சல், இதைப் படிச்சதும் தான் எனக்கும் புரிஞ்சது! ஆனால் நான் முதல் முதல் இதைப் படிச்சப்போப் பள்ளி மாணவி! (ஹிஹிஹி) என் கிட்டே இருக்கிறது இந்தப் புத்தகம் முதல் பதிப்பு. தெரிஞ்சவர் ஒருத்தர் நான் பள்ளியில் படிக்கையில் உ.வே.சா. பத்தி எழுத வேண்டிய கட்டுரைக்குக் குறிப்புகள் எடுக்கக் கொடுத்தார். அப்புறமா என்னையே வைச்சுக்கச் சொல்லிவிட்டார். இதோடு தனிப்பாடல் திரட்டும் இருந்தது! அது காக்கா ஊஷ்! :(
Deleteகரெக்டா பதிவு வந்துடுச்சே....
ReplyDeleteஉங்கள் பதிவு பார்த்து தான் நினைவுக்கு வருகிறது.
ஹாஹாஹா, வாங்க வெங்கட், இரண்டு நாளைக்கு முன்னேயே பார்த்து ஷெட்யூல் செய்துடுவேன். :)
Deleteகீசாக்கா ஒரு கஞ்சி காச்சி அது சூடாற முன் மற்றக் கஞ்சி கர்ர்ர்ர்:)).. முந்தையதில நிறையப் பேசலாம் எனப் பார்த்தால் அஞ்சலிக்கு மாறிட்டீங்க.. மீயும் வணக்கம் செலுத்திக் கொண்டு போகிறேன்.
ReplyDeleteஅதிரடி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கஞ்சி காய்ச்சினால் என்னவாம்? அதிலேயும் நிறையப் பேசலாம். இப்போவும் பேசலாம். அஞ்சலி ஏற்கெனவே போட்டு வைச்சது!
Deleteஅருமையான தகவல். தமிழ் தாத்தாவுக்கு அஞ்சலிகள். உங்களுக்கு நன்றி!
ReplyDeleteநன்றி. முந்தைய பதிவிலும் உங்கள் கருத்தை எதிர்பார்த்தேன். :)
Delete"அப்படி வெட்டிவிட்டால் அந்தக் கிளை பிறகு உபயோகமில்லாமற் போய்விடும். நாங்கள் வெட்டும் கிளையோ மரத்தோடு ஒட்டிக்கொண்டிருப்பதால் மறுபடியும் தழைக்கும்."//
ReplyDeleteநல்ல விஷ்ய பகிர்வு.
அருமையான அஞ்சலி
நல்ல தகவல் .தமிழ் தாத்தாவுக்கு அஞ்சலிகள்
ReplyDelete