எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, February 23, 2018

என்னவோ சொல்ல நினைச்சு! என்னவோ சொல்லி இருக்கேன்!

பதஞ்சலி பொருட்கள் வந்தப்போ விலை மலிவா மட்டுமில்லாமல் தரமாகவும் இருந்தது. அதிலும் சில்வர் என்னும் பாசுமதி அரிசி 65 ரூபாயில் இருந்து 70ரூக்குள் தான் இருந்தது. பிஸ்கட்டுகளும் குறைந்த விலையில் கிடைத்தன. நூடுல்ஸும் ஆட்டா நூடுல்ஸ் வித்தாங்க. கொஞ்சம் சந்தையில் நிலை கொண்டதும் பதஞ்சலி குழுமமும்  மெல்ல மெல்ல மாற ஆரம்பிச்சாச்சுனு நினைக்கிறேன். அந்த "சில்வர்" பாசுமதி அரிசியை முதலில் நிறுத்தினாங்க.  இதோ வரும், அதோ வரும்னு சொன்னாங்களேனு இரண்டு, மூணு  மாதங்கள் பொறுத்துப் பார்த்துட்டுப் பின்னர் நாங்க வழக்கமான கர்நாடகா பொன்னியே வாங்க ஆரம்பிச்சுட்டோம். இப்போப் பதஞ்சலி பாசுமதி அரிசி கிலோ 150ரூக்குக் குறைந்து இல்லை. பாசுமதி பழக்கமாயிட்டா என்ன விலை ஆனாலும் வாங்குவாங்கனு நினைப்போ? தெரியலை! சில்வர் பாஸ்மதி அரிசி இப்போது சந்தையிலேயே இல்லை!  மற்றப் பொருட்களில் பற்பசை கொஞ்சம் பரவாயில்லை ரகம் என்றாலும் அதிகம் காற்றால் நிரப்பி இருக்காங்க.  கோதுமை மாவு சிலருக்குப் பிடிக்கலை! கேஷ்கந்தி ஷாம்பூ கொஞ்சம் பரவாயில்லை. அதே போல் சோப்பு வகைகளும்! வாங்கலாம்.

அதே போல் பதஞ்சலி கேஷ் கந்தி எண்ணெயையும் பத்தி எதிர்பார்ப்போடு வாங்கினேன். அதுக்குக் கொடுத்த விளம்பரங்களைப் பார்த்துட்டு நான் வருஷக் கணக்கா தடவிக் கொண்டிருந்த நீலி பிருங்காதித் தைலத்தை நிறுத்திட்டுப் பதஞ்சலி கேஷ் கந்தி வாங்கித் தடவிக்க ஆரம்பிச்சேன். அதையே அம்பேரிக்கா போறச்சேயும் எடுத்துட்டுப் போனேன். ரொம்ப நீளம் இல்லைனாலும் கைக்குள் அடங்காமல் அடர்த்தியான தலைமுடி இருக்கும் எனக்கு! அதைப் பார்த்துட்டுப் புகை விடாதவங்க இல்லை! ஹிஹிஹி! ஆனால் பாருங்க! இந்தக் கேஷ் கந்தி தடவஆரம்பிச்சதும்! :(  கடவுளே! வீடு பூராவும் என்னோட தலை முடி தான்! ஆங்காங்கே நீள நீளமாக! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!  நீளமாயும் அடர்த்தியாயும் இருந்த என்னோட தலையிலே இருந்து உதிர்ந்த மயிர்க்கற்றைகளை வைச்சு இரண்டு சவுரி பண்ணலாம். முன்னந்தலை, உச்சி எல்லாம் கிட்டத்தட்ட அரை வழுக்கை ஆக ஆரம்பித்து விட்டது. என்னை விட ரங்க்ஸ் தான் அதிகம் கவலைப்பட்டார், வருந்தினார். எப்படி இருந்த தலைமுடி! எல்லாம் கொட்டிப் போய் இப்படி ஆயிடுச்சேனு வருத்தம். முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே டைஃபாய்ட் வந்தப்போவும் இப்படித் தான் முடி கொட்டினது. அப்போத் தான் நீலி பிருங்காதித் தைலம் தடவ ஆரம்பிச்சேன்.  இப்போ அம்பேரிக்காவில் போய் மாட்டிக் கொண்டேனே! ஒண்ணும் செய்ய முடியாத்! ஆனால் பதஞ்சலி பொருட்கள் அங்கேயும் கிடைக்குது! அங்கே தே.எ. கிடைச்சது தான்.ஆனால் அங்குள்ள தே.எ. மேல் சந்தேகம். ரசாயனக் கலப்பு இருக்குமோனு! அங்கிருந்து வந்ததும் முதல்லே கேஷ்கந்தியைத் தூக்கி எறிஞ்சேன். இதை அம்பேரிக்காவிலேயே செய்திருக்கலாம். 

இந்தியா வந்ததும் மறுபடி நீலி பிருங்காதி வாங்கித் தடவ ஆரம்பிச்சேன். கொட்டுவது குறைஞ்சிருக்குன்னாலும் பழைய அடர்த்தி இல்லை!:)  இப்போ என்னைப் பார்க்கும் உறவினர் எல்லாம் முதலில் கேட்பது உடம்பு தான் இளைச்சிருக்குன்னாத் தலைமுடியும் கொட்டிப் போச்சேனு தான்!
*********************************************************************************

இலக்கியம் என்றால் என்ன? இது தான் நேற்றைய எங்கள் ப்ளாக் பதிவில் பேசப்பட்ட விஷயம்! என்னைப் பொறுத்த வரை இலக்கியம் என்பதற்கு வரையறை ஏதும் இல்லை.  நல்ல கற்பனை வளமும், கலை அழகும் இருந்தால் அது இலக்கியம் எனலாமா? ஆனாலும் சில எழுத்துக்கள் ஜனரஞ்சகமாகவும், எளிமையாகவும், நடைமுறைப் பேச்சுக்களாலும் ஆகி இருக்கும். அத்தகைய படைப்புக்கள் இலக்கியம் இல்லையா?  மனதில் அந்த எழுத்தின் தாக்கம் இருக்கணும், புரட்டிப் போடணும் என்று பானுமதி சொல்கிறார். உண்மையில் சுஜாதாவின் நைலான் கயிறு முதலில் சிறுகதையாகக் குமுதத்தில் வந்தப்போவே புரட்டிப் போட்டு விட்டது! அதுக்கப்புறமாத் தான் அவர் விரிவாக எழுதினார். அந்தக் கையெழுத்துப் பிரதியைப் படிச்சிருக்கேன். ஒரே திக், திக்! என் முகம் போகும் போக்கைப் பார்த்துட்டுச் சித்தப்பா, சித்தி எல்லாம் சிரிப்பாங்க! அந்த அளவுக்கு ஆழ்ந்து படிச்சிருக்கேன்.

அதே போல் சுஜாதாவின் இன்னொரு நாவலும் அல்லது தொடர்கதை! (இது இப்போப் புதுசாக் கிளம்பி இருக்கு போல, நாவல்னா வேறே, தொடர்கதைனா வேறேனு) 24 ரூபாய், தீவு! அது குமுதத்தில் தொடராக வந்த நினைவு. அதைப் படிக்கையில் கதாநாயகனின் சின்னத் தங்கைக்கு ஏற்பட்ட பாலியல் பலாத்காரம், அதனால் அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட ஹிஸ்டரிகலான மனோநிலை. அந்தப் பெண்ணைப் பற்றிக் கதாநாயகன் சொல்லிச் சொல்லி அழுவது! எல்லாம் இப்போவும் மனசில் இருக்கு. இன்னும் சொல்லப் போனால் அப்போ, அந்த வயசில் இதைப் படிக்க மனமும், தெம்பும் இல்லாமல் அந்தக் குறிப்பிட்ட அத்தியாயங்களுக்குப் பின்னர் படிப்பதையே நிறுத்திட்டேன். அப்புறமா இப்போ சமீபத்தில் தான் சுமார் இரண்டு வருஷங்கள் முன்னர் படிச்சேன்.

சுஜாதா எழுதியதில் விருது கொடுக்கணும்னா, "கற்றதும் பெற்றதும்" ஒண்ணு போதுமே! அப்போ விகடன் வாங்கினதும் முதலில் புரட்டிப் படிப்பதே கற்றதும் பெற்றதும் தான். அதை நிறுத்தினாங்களா, நானும் விகடன் வாங்குவதையே நிறுத்திட்டேன்! :( கணையாழியில் ஶ்ரீரங்கம் எஸ்.ஆர். என்னும் பெயரில் எழுதி வந்த கடைசிப் பக்கம்! ஶ்ரீரங்கத்து தேவதைகள்! இப்படி எத்தனையோ சொல்லலாம். "கனவுத் தொழிற்சாலை" என்னும் பெயரில் திரைப்பட உலகைத் தோல் உரித்துக் காட்டி இருப்பார். ஜீனோவை மறக்க முடியுமா?

//ஏராள மார்பு என்று எழுதினால் இலக்கியவாதி ஆகி விட முடியுமா? // சுஜாதா மட்டுமே இப்படி வர்ணிக்கலையே!  இது ஒண்ணை மட்டும் வைத்துக் குறை சொல்லக் கூடாது. அப்படிப் பார்த்தால் எந்த எழுத்தாளர் வர்ணிக்கவில்லை? சாண்டில்யன் வர்ணிக்காததா?


//டாக்கு டாக்கு என்று நடந்தாள். டாக்கு டாக்கு என்றல் சரியான டாக்கு டாக்கு" // அவள் எப்படி நடந்தாள் என்பதைப் புரிய வைக்க இதைவிடச் சிறந்த சொல்லாட்சி வேணுமா? நாம் அன்றாட வாழ்வில் புழங்கும் இந்தச் சொல் எழுத்தில் வந்திருக்கு! அதனால் என்ன?  அவள் நடப்பது அப்படியே கண் முன்னாடி வருமே! இது சரியான பேச்சுத் தமிழ்! இலக்கியம் என்றால் செந்தமிழில் எழுதணும்னு எல்லாம் இல்லை அல்லவா! :)


//பாலகுமாரனின் இரும்புக் குதிரைகள், அப்பம், வடை, தயிர் சாதம், //

இவற்றில் பாலகுமாரன் வர்ணனைகளே செய்யவில்லையா? எத்தனை கதைகள்/நாவல்கள் வேண்டும் அவர் வர்ணனைகளைச் சுட்டிக் காட்ட! :)
இதையும் "உடையார்" நாவல்களையும் வைத்துக் கொண்டு பாலகுமாரனை இலக்கியவாதினு சொல்ல முடியுமா? அப்படிப் பார்த்தால் சரித்திரக்கதைகளின் முன்னோடியான கல்கி அவர்களும் ஓர் இலக்கியவாதி தான்! அகிலன், ஜெகசிற்பியன், கோவி. மணிசேகரன், விக்கிரமன், சாண்டில்யன் போன்றோரும் இலக்கியவாதிகளே!

லா.ச.ரா.வின் "பாற்கடல்"! இதுக்கு ஈடு இணை இல்லை! ஆனால் எத்தனை பேருக்குப் புரிஞ்சிருக்கும்?  தொடர்ந்து லா.ச.ராவைப் படிச்சால் தவிரப் புரிஞ்சுக்கறது கஷ்டம்!  அவரோட கதைகளில் வரும் பெண்கள் அனைவருமே அம்பாள் ஸ்வரூபமாகவே அவர் கண்டிருக்கிறார். அதில் துஷ்ட நிஷ்ட சிஷ்ட பரிபாலனம் செய்யும் பெண்களையும் காணலாம். அமைதியான பெண்களையும் காணலாம். மற்றபடி ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், தி.ஜ.ரங்கநாதன் போன்றோரின் எழுத்துகள் தனிப்பட்டவை! அசோகமித்திரனின் "பதினெட்டாவது அட்சக் கோடு" கிட்டத்தட்ட ஓர் சுயசரிதை! சித்தப்பா தாம் வாழ்ந்த காலத்து நிகழ்வுகளைப் பதிந்திருக்கிறார். அதை விட அவருடைய மானசரோவர் இன்னும் அருமையாக இருக்கும்.

ஆனால் இலக்கியம் என்பதற்கு நமக்குப் பிடித்தது என்னும் அளவுகோலை வைத்துப் பார்த்தால் நம்மால் விருப்பு, வெறுப்பின்றித் தேர்ந்தெடுக்க முடியாது! ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எழுத்தாளர்களின் ஒவ்வொரு கதைகள்/நாவல்கள்/தொடர்கள் பிடிக்கும்.  நீல.பத்மநாபன் எழுதிய தலைமுறைகள் நாவல் படிச்சுட்டுக் கிட்டத்தட்ட ஒரு மாசம் மனசு சரியில்லாமல் ராத்திரி தூக்கம் வராமல் தவிச்சிருக்கேன். இப்போதும் அந்தக் கடைசி அத்தியாயத்தில் சிவந்த பெருமாள் (கதாநாயகியின் கணவன்) தன் மனைவி மறுமணம் செய்து கொள்ளப் போகும் நாகுவைக் கொன்றது பற்றிய காட்சி கண் முன்னே வரும்! போகும்! தன் அக்காவுக்கு மறுவாழ்வு கிடைக்கச் செய்யக் கதாநாயகன் பட்ட கஷ்டங்களெல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விடும். கதையின் முடிவை நாம் யூகிக்க வேண்டும். கதையின் சம்பவங்கள் கதாநாயகன் பிறப்பை அவன் ஆச்சி(தந்தை வழிப்பாட்டி) சொல்வதாக ஆரம்பித்திருக்கும்னு நினைக்கிறேன். இந்த நாவலை நான் படிச்சு சுமார் நாற்பது வருடங்கள் இருக்கும். ஆனாலும் இன்னமும் மறக்கவில்லை. அதன் தாக்கம் குறையவில்லை. அப்படிப் பார்த்தால் இதுவும் ஓர் இலக்கியமே!

இலக்கியம் என்பது ஒரு வேளை பழமை வாய்ந்த படைப்புக்களாகவும் இருக்கலாம். ஏனெனில் சங்கப் பாடல்களை நாம் சங்க இலக்கியம் என்கிறோமே! ஆகவே இலக்கியம் என்பது தொன்மையைக் குறிக்குமோ என்னும் ஓர் சந்தேகமும் வருகிறது. என்றாலும் இதைப் பலர் கூடித் தீர்மானிக்க முடியாது என்றே எண்ணுகிறேன். தேவநேயப் பாவாணர் சொல்வது இலக்கை எட்டுவதே இலக்கியம் என்று! இலக்கு என்றால் குறி, குறிக்கோள் என்பதால் சிறந்த அறவாழ்க்கையை இலக்காகக் கொண்டு வாழ்பவர் அந்த அறத்தை எடுத்துக் காட்டுவதே இலக்கியம் என்று சொல்கிறார். தலை சுத்துதா? ஹிஹிஹி! ஒவ்வொருவரின் மொழியோடு தொடர்புடையதாக மட்டுமில்லாமல் மனிதனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு சிந்தனை, உணர்வு, கற்பனை ஆகியவற்றுக்கு ஓர் வடிகாலாக அல்லது ரசிக்கும் விருந்தாக அமைவது இலக்கியம் என்று பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள் சொல்கிறார்.

மற்றபடி சுஜாதாவுக்கு நெ.த. சொன்ன மாதிரி எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷினுக்காவது விருது கொடுத்திருக்க வேண்டும். குறைந்தது ஓர் பத்மஶ்ரீயாவது கொடுத்திருக்கலாம். ஆனால் கொடுக்கவில்லை. ஒருவேளை அவர் அரசு ஊழியராக இருந்ததும் ஓர் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் பணி ஓய்வு பெற்ற பின்னர் கொடுத்திருக்கலாம்! கொடுக்கவில்லை! 

43 comments:

  1. பதாஞ்சலி மக்களை ஏமாற்றும் வஞ்சக நிறுவனம்.

    நீங்க பதிவு எழுதிய பிறகுதான் தலைப்பு எழுதுவீங்களோ....

    நான் தலைப்பு வைத்த பிறகே எழுதி பழகி விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, கீழே ஜேகே அண்ணாவுக்குக் கொடுத்திருக்கும் பதிலில் சொல்லி இருக்கேன் பாருங்க! கவனிக்காமல் எழுதிட்டேன். நீக்கச் சோம்பல்! அப்படியே கொடுத்துட்டேன். மற்றபடி சில பொருட்கள் பதஞ்சலியில் நன்றாகவே இருக்கின்றன. எனினும் ஆரம்பத்தில் கொடுத்த விலைக் குறைப்பு இப்போது இல்லை! பற்பசை மூன்றாண்டுகளாகப் பயன்படுத்துகிறோம். நன்றாகவே இருக்கிறது. என்ன ஒரு ஆசை என்றால் நம் பணம் இந்த பன்னாட்டுத் தொழிலதிபர்களுக்குப் போகாமல் நம் பணம் நம் நாட்டுக்கே போகட்டுமே என்பது தான்!

      Delete
  2. அரசு ஊழியர்களுக்கும் பத்ம விருது கொடுக்கப்பட்டது . ISRO வில் பனி புரிந்த மாதவன் நாயர், கஸ்துரி ரங்கன் போன்றோர் பத்ம விருது பெற்றவர்களே.

    பத்ம விருது என்பது தற்போது எதை எடுத்தாலும் 10 ரூபாய் என்ற சந்தைப் பொருள் ஆகிவிட்டது. கொடுக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம்.

    இன்றைய பதிவு புலம்பல் பதிவு ஆகிவிட்டது. பதஞ்சலியில் துவங்கி முடிகொட்டுதலில் முடித்து, பின்னர் இலக்கியம் என்றால் என்ன என்று துவங்கி சுஜாதாவுக்கு விருது கிடைக்கவில்லை என்று ரூட் மாறி புலம்பல் ரூட் ஆகி விட்டது.

    ஒரு சின்ன சந்தேகம். காவிரி மைந்தன் (விமரிசனம் தளம், vimarisanam.wordpress.com) என்பது உங்கள் ரங்ஸ்? ரகசியமாக எனக்கு மட்டும் சொல்லுங்கள்.

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. ஜேகே அண்ணா, காவிரி மைந்தன் என்பவர் யாரோ! எனக்குத் தெரியாது. ரஞ்சனி நாராயணனுக்குத் தான் பல வருடங்கள் பழக்கம்! :) அவரோட கொள்கைகள், பதிவுகள் போன்றவற்றில் எனக்குப் பல முரண்பாடுகள் உண்டு. ரயில்வே செய்தியில் ஒரு சமயம் அவருடைய பதிவை மறுத்து நான் ரயில்வே நண்பர்களுக்கே அதைக் குறித்துக் கேட்டுக் கருத்துச் சொன்னதோடு அவருடைய பலமான எதிர்ப்பு மற்றும் கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன். அதிலும் ரஞ்சனி நாராயணன் கிட்டத்தட்ட என்னோடு ஒரு வாக்குவாதமே நடத்தினார். அவருக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.

      Delete
    2. பதிவு இலக்கியம் என்றால் என்ன என்பதைக் குறித்து எழுத ஆரம்பித்தது. பாதியில் தான் கவனித்தேன். முந்தைய நாள் எழுதி வைத்திருந்ததிலேயே தொடர்ந்திருப்பதை. அதையும் முழுதாக முடிக்கவில்லை. இதையும் முழுதாக முடிக்கவில்லை! :))) ஆகவே ரெண்டுங்கெட்டான் தலைப்பு! மற்றபடி சுஜாதா விருது குறித்து எனக்கு எவ்விதப் புலம்பலும் இல்லை. என்னுடைய அனுமானங்களையே பகிர்ந்திருக்கேன். கேள்வி சுஜாதா எழுதியவை இலக்கியத்தில் சேருமா, சேராதா என்பதே! நான் புரியும்படி எழுதவில்லை போலும்!

      Delete
    3. என் கணவருக்குத் தட்டச்சிக் கருத்தைப் பரிமாறும் அளவுக்குப் பொறுமை இல்லை. தட்டச்சும் வராது! இன்னும் சொல்லப் போனால் கணினியோ, மடிக்கணினியோ கிட்டேயே வரமாட்டார்! நான் என்ன எழுதுகிறேன் என்பதையே நான் சொல்ல வேண்டும்! மற்றபடி முக்கியமான கடிதங்கள் வந்தால் கூட நான் தான் வாசித்துச் சொல்லுவேன். :))))

      Delete
    4. பதிவை மறுபடி படிச்சுப் பார்த்தேன். பதஞ்சலி பொருட்கள் வாங்குவதில் உள்ள குறையைத் தான் சுட்டிக் காட்டி இருக்கேன். அது புலம்பல்னு சொல்ல முடியுமா என்ன? ஏனெனில் பலரும் அந்தக் கேஷ் கந்தியைப் பயன்படுத்திவிட்டு அவதிப் படுகின்றனர். மேலும் யாரேனும் இருந்தால் அவங்களுக்கும் பயன்படுமே என்னும் எண்ணம் தான். மற்றபடி இலக்கியம் என்றால் என்ன என்பதன் பொருளைப் பலரும் ஒவ்வொரு பாணியில் சொல்லி இருப்பதைச் சுட்டிக் காட்டிவிட்டுக் கடைசிப் பத்தியில் மட்டும் சுஜாதாவுக்கு விருது கிடைக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டிருக்கேன். ஏனெனில் அங்கே பேசியதே சுஜாதாவுக்கு சாஹித்ய அகாடமி விருது கொடுக்காதது குறித்து. அதை நான் இங்கே சுட்டவில்லை!

      Delete
  3. ///என்னவோ சொல்ல நினைச்சு! என்னவோ சொல்லி இருக்கேன்!///

    இது என்ன பெரிய புறுணமோ எங்களுக்கு:) நீங்க எப்பதான் நினைச்சதைச் சொல்லியிருக்கிறீங்க இப்ப மட்டும் சொல்வதற்கு கர்:)) சரி சரி விடுங்கோ போஸ்ட் படிச்சிட்டு மின்னுகிறேன்:))

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, அதிரடி, வாங்க, வாங்க, பிறந்த நாள் பரிசுகளில் என்னோட பங்கைத் தனியா வைச்சுட்டீங்க தானே! மெதுவா வந்து எடுத்துக்கறேன். நேத்திக்குத் தம்பி குடும்பம் ஒரு நாள் வருகையாக வந்திருந்தாங்க! அதான் வர முடியலை! :)

      Delete
  4. ///இப்போ என்னைப் பார்க்கும் உறவினர் எல்லாம் முதலில் கேட்பது உடம்பு தான் இளைச்சிருக்குன்னாத் தலைமுடியும் கொட்டிப் போச்சேனு தான்!///

    ஹா ஹா ஹா வெதர் மாற்றம் தண்ணி மாற்றம் இவையும் தலைமயிர் கொட்ட வைக்குமெல்லோ. எனக்கும் சின்னனில் சரியான அடர்த்தி .. ஒற்றைப்பின்னலே போட முடியாது அவ்ளோ மொத்த அடர்த்தி எப்பவும் ரெட்டைப் பின்னலோடுதான் திரிவேன்..

    ஆனா தேவையில்லாமல் அண்ணன் இந்தியாவிலிருந்து ஒரு திறமான ஒயில் இது தலைமயிர் நன்கு நீளமாகுமாம் எனக் கொண்டு வந்து தந்தார்.. ச்ச்சும்மா ஒரு சொட்டு எடுத்து உச்சியில் பூசினேன்.. அன்று ஆரம்பிச்சதுதான்.. அப்போ எல்லாம்.. சும்மா பொத்தி இழுத்தால் அப்படியே கழண்டு வந்துது அத்தோடு நிறைய அடர்த்தி போய் விட்டது..

    ஆனா கீரை, இலைவகை நிறையச் சாப்பிட்டால் திரும்ப வளர்ந்திடும்.. எனக்கும் இலைவகை கீரை வகை ரொம்பப் பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, எத்தனை ஊர்களில் இருந்திருக்கோம்! எத்தனை ஊர்கள் பார்த்திருக்கோம்! எப்போவும் எனக்கு இப்படி எல்லாம் தலைமயிர் கொட்டியதே இல்லை! இம்முறை தான். தொட்டால் அப்படியே கொத்தாக வந்துடும். ம்ம்ம்ம், இப்போப் பரவாயில்லை! எனக்கும் பின்னல் போட முடியாமத் தான் இருந்தது! நம்புவீங்களா தெரியலை! சொந்தக்காரங்க கிட்டே கேட்டால் சொல்வாங்க! அதே போல் அதிகம் நரையும் இருக்காது! :))))

      Delete
  5. உங்களுக்குத் தெரியுமான்னு தெரியலை. பேஸ்டை அதன் அட்டைப் பெட்டியை விட்டு வெளியே எடுத்துவிட்டு, கீழ்ப்பகுதியில் ஒரு பட்டையா கோடு போட்டிருப்பார்கள். அது பச்சை என்றால் இயற்கை, கறுப்பு என்றால் செயற்கை. நிறைய பற்பசைகள், 'வேம்பு, உப்பு' என்றெல்லாம் சொன்னாலும், இந்தக் கோடு கறுப்பா இருக்கும். அதாவது செயற்கை கெமிக்கல் சேர்க்கறாங்கன்னு. பதஞ்சலி கதை தெரியலை. நான் டாபர் மட்டும்தான் உபயோகப்படுத்துகிறேன்.

    பத்ம விருதுகளுக்கு எழுதி அனுப்பணும், ரெக்கெமென்டேஷன் வாங்கணும், நிறைய வேலை. அபிமானிகளே முனைஞ்சு எத்தனைபேருக்கு இப்படி வாங்குகிறார்கள்? அதனால்தான் உண்மையான திறமை உடையவர்கள், இந்த விருதுக்குப் போய் நிற்பதில்லை. (ஜெமோ கூட கமலஹாசன் ரெக்கமென்டேஷன் வாங்கினார் என்று கேள்வி. விருது கிடைத்ததும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்)

    ReplyDelete
    Replies
    1. அந்தக் கோட்டைப்பார்த்திருக்கேன். கறுப்பு என்பதையும் சில பற்பசைகளில் பார்த்திருக்கேன். பதஞ்சலியில் பார்க்கிறேன். நீங்க சொல்லும் விஷயம் இப்போத் தான் தெரியும். இது வரை தெரியாது!

      ஜெ.மோ. ஒரு விளம்பரப் பிரியர்! அதுக்காக எல்லாவிதமான ஸ்டன்டும் செய்வார்!

      Delete
    2. நேத்து ராத்திரி பல் சுத்தம் செய்யும்போதே பார்த்தேன். கோடு பச்சை! :) நல்ல பளிச்சென்று தெரிகிறது. மும்பையில் சில நக்ஷத்திர விடுதிகளில் மெஸ்வாக் பற்பசை வைக்கிறாங்க. அதுவும் ஆயுர்வேதத் தயாரிப்புத் தான். குன்னிமரம் அல்லது உகாமரத்தின் குச்சிகளில் இருந்து தயாரிப்பதாக அறிந்தேன்.

      Delete
  6. ஹையோ இப்போ நான் பதஞ்சலி face வாஷ் வாங்கி வச்சிருக்கேனே .கொஞ்சம் நாள் முன்னாடி உங்க கமெண்ட் எபி யில் பார்த்து அதில் நீங்க சொன்னிங்க பதஞ்சலி நல்லா இருக்குன்னு .எனக்கு எப்பவும் சந்திரிகா சோப் தான பிடிக்கும் இல்லைனா நானே தயாரிச்ச முகப்பாக் .. ரெண்டு நாளா பதஞ்சலி போடறேன் என் கலர் குறையுமா !!! ஹையோ இப்போ என்ன பண்றது :)
    ஆகா என்ன சொன்னாலும் நீலி பிரிங்காதி தைலம் பல வருஷமா தயரிப்பில் வழக்கத்தில் இருக்கு அது பெஸ்ட் .எப்பவும் நாம் தொடர்ந்து யூஸ் பண்ணற சில பொருட்களை மாற்ற கூடாது குறிப்பா கூந்தல் விஷயத்தில் .
    எங்களைமாதிரி குதிரை வால் இருந்தாலும் பரவாயில்லை ..பழையபடி நீலிக்கே மாறுங்க

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், ஃபேஸ் வாஷ் பத்தித் தெரியலை! பதஞ்சலியில் இப்போவும் சில பொருட்கள் நன்றாகவே உள்ளன. அவற்றில் தேய்த்துக்குளிக்கும் சோப்பு வகைகளும் உண்டு. நான் மூல்தானி மிட்டி சோப் தான் பதஞ்சலி ப்ரான்டில் வாங்கறேன். பரவாயில்லை. ஏனெனில் எனக்குத் தோல் பிரச்னை நிறைய உண்டு. அதோடு வெயில் வந்துட்டால் ஃபோட்டோ அலர்ஜியும் கூடவே வரும். வெயிலில் வெளியே போக முடியாது. இப்போவும் நான் கல்யாணம் போன்ற நிகழ்வுகளில் ஃப்ளாஷ் வெளிச்சம் பயன்படுத்தி எடுக்கும் வீடியோவுக்கு நிற்க மாட்டேன். என் பக்கம் அந்த வெளிச்சம் வந்தாலும் துண்டால் முகத்தோடு சேர்த்து மறைத்துக் கொண்டு விடுவேன். :) கொஞ்சம் சூடு பட்டாலும் தோல் வெந்த மாதிரி ஆயிடும்! :)

      Delete
    2. இப்போ ஆறு மாசமா அம்பேரிக்காவிலிருந்து வந்த மறுநாளில் இருந்தே நீலி பிருங்காதி தான். சொல்லவே இல்லை. நம்ம ரங்க்ஸே வாங்கிட்டு வந்துட்டார்! அவ்வளவு மோசமாப் போச்சுத் தலைமயிர் கொட்டுவது! :(

      Delete
  7. நானும் சொல்லணும் :) எனக்கு அம்மா ரெண்டு சடை எண்ணெய் போட்டு வாரி பின்னி மடிச்சு கட்டி விடுவாங்க .விரிச்சி விட்டா மயில் தோகை தான் எல்லாம் பாழாய்ப்போன டைபாய்டில் போச்சு அப்புறம் அதிலிருந்து ஷோல்டர் லெங்த் தான்.
    ம்க்கும் :) அப்படினா நான் வாரத்தில் டெய்லி முளைக்கீரை ,கேல் அப்புறம் டெய்லி வல்லாரை கொத்தமல்லி ஸ்மூத்தி குடிக்கிறேன் ஞாபகசக்தி மட்டும் எக்கச்சக்கமா வளருது ஆனா கூந்தல் கர்ர்ர்ர் அது அப்படியேதான் இருக்கு

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அதை ஏன் கேட்கறீங்க! எனக்கும் டைஃபாயிடில் போனாலும் பின்னால் வளர்ந்தது பாருங்க! எல்லோரும் பார்த்துக் கண் வைக்கிறாப்போல் அடர்த்தி! தலையை எல்லோரும் உயரே தூக்கிக் கொண்டை போடுறாப்போல் என்னால் போட முடியாது. கைக்கு அடங்காது! :( இப்போ நல்லாத் தூக்கிக் கட்டிக்கிறேன். :) நாங்களும் கீரை வாரம் இரண்டு நாட்கள். கருகப்பிலை நிறையச் சேர்ப்பேன்.

      Delete
  8. பதஞ்சலியில் கோதுமை மாவு இப்போதும் வாங்குகிறோம். 10 கிலோ 340 ரூபாய். அப்புறம் சமீபத்தில் தந்த்க்ரந்தி. அதிலேயே இரண்டு வகை இருக்கிறது என்று இப்போது தெரிந்தது. இப்போது வந்திருப்பது மருந்து வாடை அடிக்கிறது! பதஞ்சலியில் எனக்கு ஒத்துவந்த இன்னொரு விஷயம் திவ்ய தாரா என்கிற தலைவலித்தைலம். நல்லா தலைவலிக்குக் கேக்குது. இதுவும் சமீபத்து அறிமுகம்தான்.

    ReplyDelete
    Replies
    1. பதஞ்சலி கோதுமை மாவு ஒரிஜினல். நல்லாவே இருக்கும். ஆனால் என்னமோ தெரியலை நம்ம ரங்க்ஸுக்கு அது பிடிக்கலை. அதே போல் நூடுல்ஸும் கோதுமை நூடுல்ஸ். அதிகம் மசாலா இல்லாமல் நல்லாவே இருந்தது. டூத் பேஸ்ட் நாங்க எப்போவும் ஒரே வகைதான் வாங்கறோம். தந்த் கந்தி! அவங்களோட திவ்யா ஃபார்மசியின் இருமல் மாத்திரை லக்ஷ்மிவிலாஸ் ரஸ் நல்லாக் கேட்குது. எனக்குத் தொடர் இருமல் வந்தப்போ தில்லியிலிருந்து வாங்கி அனுப்பினாங்க! இப்போவும் 2,3 டப்பா வாங்கி வரச் சொல்லி வைச்சிருக்கேன்.

      Delete
  9. இலக்கிய சர்ச்சையை இங்கு தொடர்ந்து விட்டீர்கள். உங்கள் கருத்தும் என் கருத்தும் பெருமளவு ஒத்துப்போகின்றன. சுஜாதாவின் கற்றதும் பெற்றது, கணையாழியின் கடைசிப்பக்கங்கள் இரண்டையும், ஸ்ரீரங்கத்து தேவதைகளையும் நானும் சொல்லி இருந்தேன். பிரிவோம் சிந்திப்போம் முதல் பாகம் முழுக்க முழக்க காதல் மழை. இரண்டாம் பாகம் நேர் எதிர்!

    ReplyDelete
    Replies
    1. பிரிவோம், சந்திப்போம், லேசாக நினைவு இருக்கு. மறுபடி ஒரு ரிவிஷன் கொடுக்கணும்! :)

      Delete
  10. முற்றுப்புள்ளி வைக்காமல், தொடர்ந்த எழுத்துகளில் என்ன அர்த்தம் என்று தமிழுக்கே யோசிக்க வைத்தால்தான் இலக்கியமா? எனக்கும் கேள்விகள்தான். இலக்கியத்துக்கு வரைமுறை மனதில் படிவது, தாக்குவதுதான் என்றால் சுஜாதா மட்டுமல்ல நிறைய இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நீங்க சொல்வது சரிதான்! இலக்கியம் என்றால் என்ன என்பதை யாராலும் தீர்மானிக்க முடியாது! இதிலே வெகுஜன இலக்கியம்னு வேறே சொல்றாங்க. காலத்தால் நிலைத்து நிற்கும் எழுத்துக்கள் இலக்கியம் எனில் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், அலைஓசை எல்லாமும் இலக்கியம் தானே! தேவன் எழுதிய நாவல்கள் அனைத்துமே அருமையாக இருக்கும். துப்பறியும் சாம்பு ஒண்ணு போதுமே! அவை இலக்கியத்தில் சேராதா? :)

      Delete
    2. நேத்து/ அல்லது இன்று காலை? சரியா நினைவில் வரலை. திரு பசுபதியின் பதிவுகளில் சித்தப்பா பற்றிப் பகிர்ந்திருக்கிறார். அதில் ராமகிருஷ்ணர் பற்றிச் சித்தப்பா குறிப்பிடுகையில் சீடர்களை உன்னத நிலைக்கு அவரால் எளிதாக அழைத்துச் செல்ல முடிந்தது என்றிருக்கிறார். மேலும் சித்தப்பா தன் கருத்தாக மக்கள் உன்னதம் அடைவது குறித்துச் சொல்லி இருக்கார். அதில் இலக்கியவாதிகளால் மக்களை உன்னதத்துக்கு அழைத்துச் செல்ல முடியாது என்றும் கூறி இருக்கிறார்.

      Delete
  11. நீல பத்மநாபனின் டீஜேஹாலைமுறைகள் படித்திருக்கிறேன் என்றுதான் நினைக்கிறேன். புளிய மரத்தின் கதைதான் படிக்கவில்லை என்று நினைவு. ஆமாம், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை என்ற நிலையில் பிடித்தது என்கிற அளவுகோலை கையில் எடுக்க முடியாது.

    ReplyDelete
    Replies
    1. புளியமரத்தின் கதை சுந்தர ராமசாமி எழுதியது! வாசகர் வட்டம் வெளியீட்டில் சித்தப்பா வீட்டில் படிச்சேன். அறுபதுகளில் படிச்சேன். அப்போத் தான் எழுதி இருந்தாரோ? நினைவில் இல்லை! சாயாவனம், சா.கந்தசாமி எழுதினது! அதையும் படிச்சிருப்பீங்கனு நினைக்கிறேன். இவை எல்லாமுமே வாசகர் வட்டம் வெளியீடாக வந்த்வை!

      Delete
    2. இலக்கியத்தையே சிற்றிலக்கியம், பேரிலக்கியம் என வகைப்படுத்துகிறார்கள். இதிலே தீபம் என்றொரு புத்தகம் வந்து கொண்டிருந்ததே, நா.பார்த்தசாரதியின் புத்தகம். அது சிற்றிலக்கிய வகை என்பார்கள் என நினைக்கிறேன். கணையாழி எல்லாம் பேரிலக்கியம் போலும்! :) இப்போக் கணையாழி முழுக்க முழுக்க இடதுசாரி சிந்தனைகளோடு வருதுனு நினைக்கிறேன்.

      Delete
  12. பதஞ்சலி நிறுவனத்தின் மீது குற்றச் சாட்டுகள் வந்ததிலிருந்து ,அந்தப் பக்கம் போனதில்லை.
    நம்பூதிரி பற்பசை நன்றாக இருப்பதாக மகன் சொல்கிறார்.
    சுஜாதாவின் எழுத்துகள் சுவை மிக்கவை. இலக்கியம் என்பதற்கு என்ன அர்த்தம் என்றே விளக்கம் கூற முடியாது என்னால். சுவையான பதிவு கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. குற்றச்சாட்டுகள் வந்தனவா? நான் கவனித்திருக்கவில்லை. ஆனாலும் பற்பசை, சோப் போன்றவை நன்றாகவே இருக்கின்றன. நீங்க சொல்கிறாப்போல் இலக்கியம் என்பதை வரையறுப்பது கடினமே! ஒருத்தருக்கு இலக்கியமாகத் தோன்றுவது இன்னொருவருக்குத் தோன்றாது!

      Delete
  13. வணிக நோக்கில் முழுக்க முழுக்க ஈடுபடுவர்கள் நம்மை ஏமாற்றவே நினைப்பார்கள். இவர்கள் விதிவிலக்கல்ல.

    ReplyDelete
    Replies
    1. உண்மை! ஆனாலும் அவர்கள் மருந்து தயாரிப்பு நன்றாக இருக்கிறது. விலை ஏற்றி விட்டனர்! :(

      Delete
  14. ///இலக்கியம் என்றால் என்ன?
    இது தான் நேற்றைய எங்கள் ப்ளாக் பதிவில் பேசப்பட்ட விஷயம்! என்னைப் பொறுத்த வரை இலக்கியம் என்பதற்கு வரையறை ஏதும் இல்லை.///

    பாதி படிச்சு கொமெண்ட் போட்டிட்டு மீதி படிக்காமல் ஓடி விட்டேன்... அதுதான் சொன்னதுபோலவே கீசாக்கா வரையறை இல்லாமல் கதைப்புத்தகங்களை வைச்சே மின்னி முழக்கிட்டா வரையறை இல்லாமல்:) இதுக்கு மேலயும் இனிமேல் ஸ்ரீராம் கிளவி..சே....சே கேள்வி கேட்பார்ர்????:).

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, ஶ்ரீராம் கிளவி எல்லாம் கேட்கலை! நான் ஒண்ணும் கதைப் புத்தகங்களை வைச்சு மின்னி முழக்கலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பொதுவா எல்லாருடைய எழுத்தையும் குறிப்பிடுகையில் சிலருக்கு சுஜாதா எழுதியது இலக்கியம் அல்ல என்று தோன்றுகிறது.

      Delete
  15. நீங்கள் என்னவோ சொல்ல நினைச்சு! என்னவோ சொல்லி இருப்பதை நானும் என்னவோ சொல்லி இருக்கீங்க என்று நினைச்சு படிக்க வந்து படித்து சென்றேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க அவர்கள் உண்மைகள். ரொம்ப நாளாக் காண முடியலை!

      Delete
  16. >>> முதலில் கேட்பது உடம்பு தான் இளைச்சிருக்குன்னாத் தலைமுடியும் கொட்டிப் போச்சேனு தான்!...<<<

    இதான் மிகப் பெரிய ஆதங்கம்...

    இந்த மாதிரி கோளாறு பிடிச்சவனுங்களால வந்த பிரச்னைகளை எழுதலாம்...ன்னா
    தினசரி எழுதலாம்.... அந்த அளவுக்கு இருக்கு...

    மற்றபடி இலக்கியம்..ன்னா எதுன்னு ஆராய்ச்சி செஞ்சு சொல்ற அளவுக்கு
    நமக்கு மூளை பத்தாது..ங்க!..

    ReplyDelete
    Replies
    1. உண்மை ஐயா! அதான் மிகப் பெரிய ஆதங்கம். அது சரி, நீங்க எழுதுவதே இலக்கிய நடையில் தான் என்னும்போது உங்களுக்குத் தெரியாது என்றால் நம்பவா முடியும்? :)))))

      Delete
  17. நேத்து/ அல்லது இன்று காலை? சரியா நினைவில் வரலை. திரு பசுபதியின் பதிவுகளில் சித்தப்பா பற்றிப் பகிர்ந்திருக்கிறார். //

    நேற்று பகிர்ந்திருக்கிறார்.

    நம்பிக்கை, இசை, எளிமையான பாடல் இறைவனிடம் அழைத்து சென்று விடும் இல்லக்கிய படைப்பு அதை செய்ய முடியுமா என்று உங்கள் சித்தப்பா கேட்பது உண்மை. உண்மையான எளிய பக்தனுக்கு இலக்கியம் தெரிந்து இருக்க வேண்டாமே!

    பதஞ்சலி எல்லாம் அவங்களே தயார் செய்வதில்லை என்று படித்த நினைவு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு, ரொம்ப நாட்கள் கழிச்சு வந்திருக்கீங்க போல! :) கருத்துக்கு நன்றி. பதஞ்சலி அவங்க தயாரிப்புத் தான் என தில்லியில் உள்ள உறவினர்கள் சொல்றாங்க. ஆனால் சந்தையில் ஸ்திரத் தன்மை நிலைத்ததும் விலையைக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றிக் கொண்டிருக்கிறாங்க! :(

      Delete
  18. வணக்கம் கீதா அக்கா. இப்போதுதான் உங்கள் பதிவு பார்க்கிறேன்.

    நான் ஏதோ சுஜாதாவின் எதிரி என்பது போல புரிந்து கொண்டிருக்கிறீர்களோ? அல்லது நான் அப்படி எழுதியிருக்கிறேனோ?

    நானும் சுஜாதாவின் ரசிகைதான். 'டாக்கு டாக்கு என்றால் சரியான டாக்கு டாக்கு' என்பதை நானும் ரசித்ததாகத்தான் எழுதியிருக்கிறேன். இருந்தாலும் அவர் எழுத்தில் ஆழம் குறைவு என்பது என் அபிப்ராயம். எனக்கென்று ஒரு அபிப்ராயம் இருப்பது தவறா? 'லோகோ பின்ன ருசி'

    பாற்கடல் என்னும் புத்தகத்தை நான் குறிப்பிடவில்லை, பாற்கடல் என்னும் சிறுகதையைத்தான் நான் குறிப்பிட்டேன். "பாற்கடல் போன்ற ஒரு கதையை நான் படித்ததில்லை" என்று சுஜாதாவே சிலாகித்த கதை அது.

    அவருடைய '24 ரூபாய் தீவு' கதை படித்த பிறகுதான் எனக்கு அவர் எழுத்துக்களின் மீது மரியாதை வந்தது. இன்னொரு முறை படிக்க வேண்டும்.

    கணையாழியின் கடைசி பக்கங்கள் படித்திருக்கிறேன். கற்றதும் பெற்றதும் நான்கைந்து வால்யூம்கள் வந்தன. முதல் பாகம் ஓ.கே. பின்னல் வந்தவைகளில் ரெப்படிஷன் நிறைய இருந்தது.

    விஞ்ஞான விஷயங்களை தமிழில் எழுதியதற்காக அவருக்கு அரசு விருது ஒன்று கிடைத்தது. மாநில அரசா? மத்திய அரசா? என்று தெரியவில்லை.

    நான் குறிப்பிட்டிருந்த கதைகளில் வாஸந்தி எழுதிய,'அம்மணி ' படித்ததில்லையா? கலைமகளின் பரிசு பெற்ற நாவல் அது. ஜட்ஜ்மெண்டலாக இல்லாமல் இது இப்படி நடந்தது என்பது போல எழுதியிருப்பார். படித்துப் பாருங்கள்.

    நான் வெகு நாட்களுக்கு விக்கோ வஜ்ர தந்தி பேஸ்ட்தான் பயன் படுத்தி வந்தேன். பிறகு ஆம்வே, இப்போது விளம்பரத்தில் செய்வது போல,'என் டென்டிஸ்ட்டின் பரிந்துரையின்படி கோல்கேட் தான்.

    பதஞ்சலியின் பாத்திரம் கழுவும் சோப்புகள் கைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்று என் கசின் கூறினாள். முயற்சி செய்து பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. //நான் ஏதோ சுஜாதாவின் எதிரி என்பது போல புரிந்து கொண்டிருக்கிறீர்களோ? அல்லது நான் அப்படி எழுதியிருக்கிறேனோ? //

      ஹையோ, நான் அப்படி எங்கே சொல்லி இருக்கேன்! வாஸந்தியின் கதைகள் எல்லாம் ஆரம்ப காலங்களில் படிச்சது. அம்மணினு ஒண்ணு வந்ததானு நினைவில் இல்லை. ஒருவேளை படிச்சிருக்கலாம். பெயர் நினைவில் இல்லையோ என்னமோ! ஆம்வே தயாரிப்புக்கள் எல்லாம் நன்றாக இருந்தாலும் விலை அதிகம். எங்க பொண்ணே ஆம்வேயில் இருக்கிறாள். எங்களையும் சேரச் சொல்லிக் கொண்டு இருந்தாள்! எங்களால் அவ்வளவெல்லாம் பாடுபட முடியாது! பதஞ்சலியில் டிஷ் வாஷர் வாங்கினேன். டிடர்ஜென்ட் சோப்பும் வாங்கினேன். இப்போ வாங்கறதில்லை.

      Delete