சென்ற ஞாயிறு அன்று ஹை கோபி என்னும் பெயரில் நான் அறிந்திருந்த வல்லுநரான தகடூர் கோபி, அதியமான் கோபி என்றெல்லாம் பெயர்களில் வழங்கப்பட்டவர் தூக்கத்திலேயே தன் கடைசி மூச்சை விட்டிருக்கிறார். ஹைதராபாதில் என்று சிலரும் இல்லை சொந்த ஊரில் என்று சிலரும் சொன்னாலும் மறைந்தது என்னமோ நிச்சயம் தான். நான் இன்று வரை அவரை நேரில் பார்த்ததில்லை!
2005 ஆம் ஆண்டில் நான் எழுத வந்த புதுசில் முதலில் அவருடைய மொழி மாற்றி மூலம் தான் தமிழை எழுத முயன்றேன். அங்கே மொழி மாற்றி வந்ததைக் காப்பி, பேஸ்ட் பண்ண வேண்டும் என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தேன். அப்புறமாத் தான் அவருடைய மெயில் ஐடி கிடைத்ததும் அவரைத் தொடர்பு கொண்டேன். கூகிள் சாட்டிலேயே வந்து சொல்லிக் கொடுத்தார். நேரில் பார்த்ததில்லை. பின்னர் தான் இ கலப்பை பழக்கம் ஆனதும் ஆசான் ஜீவ்ஸ் ஐயப்பன் கையைப் பிடித்து எழுத வைத்ததும் நடந்தது.
1. தகடூர் தமிழ் மாற்றி
2. உமர் பன்மொழி மாற்றி
3. அதியமான் எழுத்துரு மாற்றி
4. அதியன் பயர்பாக்ஸ் மீட்சி
5. தமிழ் விசைப்பலகை
இவை அனைத்தும் இவரால் தமிழ்க்கணினிக்கு வழங்கப்பட்டவையாகும்.
அதற்கு முன்னர் ஹை கோபியின் மொழி மாற்றியே உதவி வந்தது. சரியாக அடிக்கத் தெரியாமல், காப்பி, பேஸ்ட் பண்ணத் தெரியாமல் இருந்தபோதெல்லாம் வந்து உதவி இருக்கிறார். 42 வயதே ஆன ஹை கோபியின் மரணத்துக்கு வேலையில் இருந்த அழுத்தமே காரணம் என்று கூறுகின்றனர். இது இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். எத்தனை வேலைகள் இருந்தாலும் ஒரு நாளைக்குக் குறைந்த பட்சமாக அரைமணி நேரம் குடும்பத்துடன் செலவிடுங்கள். திருமணம் ஆனவராக இருந்தால் மனைவி, குழந்தைகளின் ஆசைகளுக்கும் விருப்பங்களுக்கும் செவி சாயுங்கள். தாய், தந்தை இருந்தால் அவர்களுக்காகவும் அரை மணி நேரம் செலவிடுங்கள்.
எந்நேரமும் வேலை, வேலை என வேலையில் மூழ்கி இருக்காமல் கொஞ்சம் ஓய்வும் பொழுது போக்கும் தேவை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். வெளிப்படையாக எந்த வியாதியும் தெரியாமல் இருந்து வந்த தகடூர் கோபி என்னும் ஹை கோபிக்கு உள்ளூர இருதயப் பிரச்னை இருந்து தூக்கத்திலேயே கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார். அவர் குடும்பத்தின் துன்பத்தையும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினரையும் நினைவு கூர்ந்தால் இனி நீங்கள் வாழ வேண்டிய வாழ்க்கையில் கூடியவரை எதையும் இழக்காமல் வாழ்வீர்கள் என நம்புகிறேன்.
தகடூர் கோபியின் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்திக்கிறேன். சென்ற வாரமே இறந்து போன தகடூர் கோபிக்குத் தாமதமாக அஞ்சலி செலுத்த வேண்டியதற்கு மன்னிப்பும் கோருகிறேன். அடுத்தடுத்து ஏதேதோ பிரச்னைகள்! எழுத முடியவில்லை. முக்கியமாய் அவரைக் குறித்த மேலதிகத் தகவல்கள் கிடைக்கவில்லை. இப்போதும் கிடைக்கவில்லை! என்றாலும் பத்து வருடங்களுக்கு முன்னர் என்றோ ஓர் நாள் என்னுடன் கூகிள் சாட்டில் அவர் பேசியது அவருக்கு நினைவில் இருந்ததோ இல்லையோ எனக்கு இருக்கிறது. தமிழும், தமிழ் எழுதுபவர்களும் உள்ளவரை தகடூர் கோபியின் பெயர் நிலைத்து நிற்கும். என்றென்றும் தமிழுக்கு அவர் செய்த தொண்டு அளப்பரியதாகும்.
அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
ReplyDeleteவருத்தத்துக்குரிய செய்தி... ஆத்மா அமைதி பெறப் பிரார்த்திக்கிறேன்..
ReplyDeleteவருத்தம் தந்த செய்தி..... அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களும்....
ReplyDeleteதமிழுக்கு இழப்பு,
ReplyDeleteதமிழ் மென்பொருள் வளர்ச்சிக்கு இழப்பு
துயர் பகிருகிறேன்.
சிறிய வயதிலேயே திறமைசாலிகள் மறைவது நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது.
ReplyDeleteஅவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
ReplyDeleteநீங்கள் கூறியிருக்கும் அறிவுரை, இன்றைக்கு தகுந்த ஓய்வு இல்லாது கடும் உழைப்பில் கவனம் செலுத்தும் அனைவரையும் சென்றடையட்டும்!
தகவல்கள் எல்லாமே அறியாதது அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
ReplyDeleteஅவரது ஆன்ம சாந்திக்கு பிரார்த்திக்கிறேன் ..அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு இறைவன் ஆறுதலைத்தரட்டும் ..
ReplyDeleteநிறையபேருக்கு வேலைப்பளுவால் ஸ்ட்ரெஸ் அதிகரித்து இப்படி ஆகுது ..எல்லாரும் சிறிது உடலையும் மன நலத்தையும் கவனிக்கணும்
அடுத்த தலைமுறை அறுபது வயது வரை வாழ்ந்தாலே அதிசயம்தான்..
ReplyDelete//எத்தனை வேலைகள் இருந்தாலும் ஒரு நாளைக்குக் குறைந்த பட்சமாக அரைமணி நேரம் குடும்பத்துடன் செலவிடுங்கள். திருமணம் ஆனவராக இருந்தால் மனைவி, குழந்தைகளின் ஆசைகளுக்கும் விருப்பங்களுக்கும் செவி சாயுங்கள். தாய், தந்தை இருந்தால் அவர்களுக்காகவும் அரை மணி நேரம் செலவிடுங்கள்.//
ReplyDeleteதகடூர் கோபியின் ஆன்மா நற்கதி
அடையப் நானும்
பிரார்த்திக்கிறேன்.
வருத்தம் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
ReplyDeleteதகடூர் கோபி நம் நினைவில் என்றும் இருப்பார்.
ReplyDeleteகோபி பற்றி 'எங்கள் பிளாக்'க்கில் எழுதச் சொல்லி ஸ்ரீராமிடம் whatsapp குழுமத்தில் கேட்டுக் கொண்டேன்.
நீங்கள் அதை நிறைவேற்றி விட்டீர்கள். நன்றி.
இது வரை அறியாத ஒருவரைப் பற்றி அறிந்து கொண்டேன் ஆனால் அவரது மரணத்தினால் மரணத்திற்குப்பிறகு. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள். மட்டுமல்ல இதன் மூலம் நீங்கள் மிக மிக நல்லதொரு கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். ஆம்...என்னதான் வேலைப்பளு இருந்தாலும் நமக்கென்று நேரம் ஒதுக்கி, நமது உடல்நலனில் அக்கறை கொண்டு குடும்பத்துடன் நேரம் செலவழித்து, நம்மை ரிலாக்ஸ்டாக மகிழ்வாக வைத்திருக்க வேண்டும். அவரது வயது மறையும் வயதே அல்ல.
ReplyDeleteகீதா: துளசியின் கருத்துடன்....தகடூர் கோபி பற்றி ஆங்காங்கே ஓரளவு தெரிந்திருந்தாலும் அதிகமான தகவல்கள் அவர் மறைந்த பிறகே அறிய நேர்ந்தது. யாராக இருந்தாலும், எப்போதும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருந்தாலும் சரி, இல்லை ஒவ்வொரு சிறிய பிரச்சனைக்கும் மனதைப் போட்டு அலட்டிக் கொள்பவராக இருந்தாலும் சரி...எல்லோருமே மனதை மகிழ்வாக வைத்திருக்க், டென்ஷன் ஆகாமல், அழுத்தம் தராமல் வைத்திருக்கும் க்லையைக் கற்க வேண்டும் என்பது இப்போது நிகழும் சிறுவயது மரணங்கள் பல உணர்த்துகின்றன...
நான் நடைப்பயிற்சி செல்லும் இடத்தில் இரு வருடங்களுக்கு முன் 27 வயதே ஆன இளைஞர் ஒருவர் நடைப்பயிற்சிக்கு வந்தவர் அங்கே மயங்கி விழுந்து இறந்தே விட்டிருந்தார். சொல்லப்பட்டது கார்டியாக் அரெஸ்ட். மென்பொருள் துறையில் வேலை. நானும் பார்க்க நேர்ந்தது. மயக்கம் என்று நினைத்து அங்கு வாக்கிங்க் வந்தவர்கள் தண்ணீர் தெளித்துப் பார்த்தும் பயனில்லாமல் போகவே போலீஸை வரவழைத்து என்று...மனதிற்கு மிகவும் வேதனையாக இருந்தது..
நடப்பது நடந்துதான் தீரும் என்றாலும்... நம் வாழ்வியல் முறையை சாப்பாட்டை எல்லாம் கவனமாகக் கொள்ள வேண்டும்...மன நலனையும் பார்த்துக் கொள்ள வேண்டும் நல்ல கருத்தையும் சொல்லிருக்கீங்க கீதாக்கா...
அவரது குடும்பத்துக்கும் நம் ஆறுதல்கள்...கோபி அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
ஜீவி ஸார் என்னை எழுதச் சொல்லியிருந்தார். நான் இவர் பற்றி கடுகளாவே அறிந்திருந்தேன். செய்தி வெளியானதுமே பார்த்தேன்.
ReplyDeleteமுகநூலில் தகடூர் சம்பத் என்று ஒரு நண்பர் எனக்கு உண்டு. இருவரும் உறவோ என்று சந்தேகம் வந்தது. இல்லை என்றும் தெரிந்தது. பணிச்சுமை மன இறுக்கம் பற்றி சொல்லி இருப்பதைக் குறித்துக் கொண்டேன்.
ஶ்ரீராம், இறந்த அன்றே தெரிந்தாலும் பதிவிடத் தயக்கம். செய்தி உண்மைதானா எனச் சந்தேகம். பின்னர் நான்கு நாட்களாகி விட வியாழன் அன்று வெளியேயும் சென்றுவிட்டதால் உடனடியாகப் பதிவிட முடியவில்லை. மற்றபடி நேரில் பார்க்காவிட்டாலும் எனக்கு அறிமுகம் ஆனவரே! :(
Delete