எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, February 18, 2018

எண்ணங்களைச் சொல்லலாமா?

தமிழ்நாடு எங்கே போகிறது என்பதை நினைத்தால் கவலையா இருக்கு! தமிழர்கள் வேறே, இந்துக்கள் வேறே என்கிறார்கள். இந்த இந்து என்னும் பெயரே ஆங்கிலேயர் காலத்தில் வந்தது தான். அதற்கு முன்னர் சநாதன தர்மம் என்றே சொல்லி வந்தார்கள். இந்த நாடு முழுவதும் அதைத் தான் பின்பற்றி வந்திருக்கின்றனர். ஒரு பேச்சுக்கு ஆரியர் வந்து திராவிடரைத் தெற்கே விரட்டிட்டதா வைச்சுண்டாலும் அந்த திராவிடர் வடக்கே இருந்து வந்தவங்க தானே! அப்போ எல்லோரும் வந்தேறிகள் தானா? அடக் கடவுளே! :) அதோடு சங்க காலத்துக்கும் முன்னால் தொல்காப்பியர் காலத்திலிருந்தே நாம் கும்பிட்டு வந்த கடவுளர்கள் நம்முடையவர்கள் இல்லையாம்! என்னவோ போங்க! மன்னர்களால் தானே கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. எந்த மன்னனும் மொழி வாரியாகவோ ஜாதிவாரியாகவோப் பிரிவினை செய்திருந்தால் அதற்கான ஆவணங்கள் இல்லாமலா போயிருக்கும்? எந்த மன்னனும் அப்படிச் செய்ததாய்த் தெரியவில்லை.  கொடுங்கோல் மன்னன் இருந்திருப்பான். ஆனால் அவன் அழிந்து போனான் என்றே அறிந்திருக்கிறோம்.

மோதி தமிழைத் தொன்மையான மொழினு சொல்லிட்டாராம். அதனால் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்கவேண்டும் என்னும் கோரிக்கை! ம்ம்ம்ம் வர வரத் தமிழ்ப் போராளிகள் அதிகமாயிட்டே வராங்க! அதிலே சில பேர் தமிழர்கள் நாகரிகமே கிறித்துவம் தான் என்கிறார்கள். வள்ளுவர் பைபிளைப் பார்த்துத் தான் திருக்குறளே எழுதினார் என்கிறார்கள்.  அப்படியா? வேதங்கள் தொன்மையானவை இல்லையாம்! என்னவோ போங்க!

காவிரி தீர்ப்பு வந்துவிட்டது. பெரும்பான்மையான தமிழர்கள் இதை ஆதரிக்கிறார்கள். கர்நாடகாவிலும் இதற்கு எதிர்ப்பு இல்லை என்றாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கர்நாடகா எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் ஆணையை எல்லாம் அவங்க எப்போவுமே மதிக்க மாட்டாங்க! ஆகவே இம்முறை வந்திருக்கும் இறுதித் தீர்ப்பைக் கர்நாடகா அரசு செயலுக்குக் கொண்டு வரணும்! :( இத்தனைக்கும் தேசியக் கட்சி  ஆளும் மாநிலம். என்னவோ போங்க! கோர்ட்  தீர்ப்புப் படி கர்நாடகம் நடந்தால் நல்லது தான்! ஆனால் மேலாண்மை வாரியமே வேண்டாம்னு சொல்றப்போ இது நடக்குமா என்று சந்தேகமே வருது. ஆனாலும் நமக்குக் காவிரி நீர் பெருமளவு நம் தமிழ்நாட்டுக்குள்ளே இருந்தே மழை மூலம் கிடைத்து வருகிறது. ஆகவே நம் நீர் ஆதாரங்களைச் செம்மைப் படுத்தினாலே போதும்னு தோணுது! எங்கே!

சென்ற மாதம் குலதெய்வம் கோயிலுக்குப் போனப்போ அரிசிலாற்றைப் பார்க்கவே வேதனை பிடுங்கியது. இந்த நதிகளைச் சீர் செய்வதையும் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கொண்டு வந்தால் தவிர இவற்றுக்கு விமோசனம் கிடையாது! வெள்ளை வெளேரென அழகாக மெத்தென்ற வெண் மணல் படிந்திருக்கும் அரிசிலாற்றைப் பார்த்து அதிசயித்த காலமெல்லாம் கனவாகி விட்டது. ஆங்காங்கே கிழிந்திருக்கும் புடைவையைக் கிழிசலோடு கட்டிக் கொண்டு வந்து பிச்சை கேட்கும் மஹாராணியைப் போல் அரிசிலாறு காட்சி அளிக்கிறாள். கன்னிமாடத்தில் அந்தப்புரத்திலிருக்கும் இளவரசியைப் போல் மென்மையான அழகோடும், நிதானமான நடையுடனும் ஒசிந்து ஒசிந்து செல்லும் அரிசிலாறு இப்போது நடக்கத் தடுமாறுகிறது.

திரு நாகசாமி, தொல்லியல் அறிஞருக்கு இப்போது "பத்ம" விருது கிடைத்திருப்பதற்கும் ஒரு காரணத்தைத் தமிழறிஞர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள்.  திருக்குறளுக்கு மனு நீதி சாஸ்திரம்  மூலமாக இருந்திருக்கலாம் என்று சொல்லி இருக்கிறாராம். அதோடு அவர் புத்தகத்தில் காஞ்சி மஹாப்பெரியவரின் படம் இருந்ததாம். ஆகவே காஞ்சி மடத்தினரின் சிபாரிசின் பேரில் அவருக்கு விருது கிடைத்திருப்பதாகச் சொல்கின்றனர்.  பாவம் திரு நாகசாமி அவர்கள்! வயது தொண்ணூறுக்கு மேல் ஆகிறது. இந்த வயசில் இவர் விருதுக்காகவா அலைவார்? குற்றம் சொல்றவங்க யாரும் அதை நினைச்சே பார்க்கலை! இத்தனைக்கும் குற்றம் சாட்டுபவர் அவருடைய மாணவராம்! ஆசிரியர் மேல் மாணவர் குற்றச் சாட்டு. இதுக்கு நிறைய பதிலும் வந்திருக்கு! என்றாலும் இப்போல்லாம் தமிழர்கள் எல்லாத்தையும் உணர்வு பூர்வமாகவே அணுகுவதாகத் தோன்றுகிறது. இந்த முனைவர் சாந்தலிங்கம் அவர்கள் கீழடி அகழ்வாராய்ச்சி விஷயத்தில் சரியான கோணத்தை எடுத்துக் காட்டி இருந்ததைப் பார்த்தப்போ சந்தோஷமாக இருந்தது. ஆனால் அவர் எழுதி இருக்கும் "நெ"(நொ)ட்டுரையில் தம்முடைய ஆசிரியரைக் குறித்துக் கேவலமாகப் பேசி இருப்பதைக் கண்டால் சாந்தலிங்கம் அவர்கள் மேல் வைத்திருந்த மதிப்பே காணாமல் போனது!

ஆனால் பாருங்க! நம்முடைய ராஜ ராஜ சோழனையும், குலோத்துங்க சோழனையும், ராஜேந்திர சோழனையும் இதே தமிழர்கள் திட்டறாங்க! அவங்கல்லாம் ஒண்ணுமே நல்லது செய்யலைனு சொல்றாங்க. அப்போ இந்தத் தனித் தமிழர்களுக்கு அவங்களும் தமிழர்கள் தான்னு தோணவே இல்லை பாருங்க! அதோடு மட்டுமில்லாமல் எல்லாக் கோயில்களுமே பௌத்த விஹாரங்களை இடிச்சுட்டுக் கட்டினதா வேறே சொல்லிட்டு இருக்காங்க. நாகைப்பட்டினத்தில் பௌத்த விஹாரம் இருந்தது உண்மை தான். ஆனால் அதே சமயம் திருநாகைக்காரோணரும் அங்கே இருந்திருக்கார் என்பதை வசதியாக மறந்துடறாங்க. அதே போல் காஞ்சியில் சமணப் பள்ளிகளும் பௌத்தக் கடிகைகளும் இருந்தன தான். ஜீன காஞ்சி, பௌத்த காஞ்சி ஆகியவற்றோடு கூட சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சியும் இருந்திருக்கின்றனவே. எல்லா பிரபலமான கோயில்களும் ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலும் பாடப்பட்டு அகச்சான்றுகள், புறச் சான்றுகளோடு காணக் கிடைக்கின்றன. அவற்றையே இல்லைனு சொல்றாங்க!

இப்போப் புதுசா ஒண்ணு கிளம்பி இருக்கிறது என்னன்னா திருஞானசம்பந்தர் சமணப் பெண்களைக் கற்பழிக்கணும்னு ஆலவாய் அண்ணலிடம் வேண்டிக் கொண்டாராம்! என்னத்தைச் சொல்ல! ஞானசம்பந்தர் இருந்ததே பதினாறு வயது வரையோ என்னமோ தான். அதிலே பாண்டியனைச் சுரம் இறக்கச் சென்றவர் மன்னன் சமணன் என்பது தெரிந்திருந்தும் இம்மாதிரி வெளிப்படையாக மன்னனுக்கு எதிராக ஆலவாய் அண்ணலிடம் கோயிலில் எல்லோர் முன்னாலும் வேண்டிக் கொள்வாரா என்ன?  மொத்தத்தில் எல்லோருக்கும் என்னவோ ஆகி விட்டது! என்னனு தான் புரியலை!

மொத்தத்தில் நம்முடைய கோயில்கள், கலாசாரம் ஆகியவற்றுக்குக் கேடு வந்திருக்கிறது. அதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். முக்கியமாய் இளைஞர்கள் மனதில் இவை எல்லாம் பதிந்து போய்விடாமல் அவர்கள் உண்மையைக் கண்டறிய வேண்டும்.  ஏற்கெனவே மொழியைக் காரணம் காட்டி தமிழர் தனி என்று சொல்லி வருகின்றனர். அப்படியே வைத்துக் கொண்டாலும் இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரிக் கலாசாரம், கோயில்கள், புராண, இதிகாசங்கள் என்று அமைந்துள்ளப்போத் தமிழ்நாட்டில் மட்டும் மாறுமா?

38 comments:

 1. என்னத்தைச் சொல்ல?..
  வேதனை தான் மிச்சமாகின்றது..

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை சார், ஆமாம், ஆனால் அப்பாவி மக்களை நினைத்தே வேதனை இன்னமும் அதிகம் ஆகிறது!

   Delete
 2. எனக்கு தோன்றுவது தமிழ் நாட்டு மக்களுக்கு யாரோ செய்வினை வச்சுட்டாங்களோ....???

  ReplyDelete
  Replies
  1. கில்லர்ஜி, அதெல்லாம் இல்லை! இப்போக் கூக்குரல் அதிகமாக் கேட்குது! அதான்! :)

   Delete
 3. எதுக்குத்தான் கவலைப்படுவது என்று தோணலையா? 'நாம் தமிழர்' என்று சொல்பவர்களே பெரிய Fraudதான்.

  //ஜீன காஞ்சி, பௌத்த காஞ்சி ஆகியவற்றோடு கூட சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சியும் இருந்திருக்கின்றனவே.// - பௌத்தம், சமணம் போன்றவை வடக்கிலிருந்து வந்தவை. (அசோகன் காலத்தில்தான் அதனைப் பரப்ப முயற்சிகள் செய்தான்). சைவம், வைணவம் இங்கு ஆதியிலிருந்தே இருந்தவை (அதிலும் சைவம்). சைவ மதத்தைச் சேர்ந்தவர்கள் 'புலாலுண்ணாதவர்களாக' ஆதியில் இருந்தனர் (அதுனாலதான் Veg என்பது 'சைவம்' என்று சொல்லப்படுகிறது).

  காவிரித் தீர்ப்பு, independent ஆணையம் அமைக்கப்பட்டால் ஒழிய, பிரயோசனம் இல்லாதது. ஒவ்வொரு முறையும் தமிழகம் உச்ச நீதிமன்றத்துக்குப் போகமுடியாது என்பதால், கர்னாடகா 'ஆணையம்' அமைப்பதை எதிர்க்கிறது.

  'ராஜ ராஜ சோழன்' எந்த ஜாதி என்று பெரிய சண்டைகளும், இடுகைகளும் வந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நல்லவேளை, 'வள்ளுவரை' இனம் காணுவதற்கு முன்பு அவர் மறைந்துவிட்டார்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெ.த. வடக்கே இருந்து வந்தவங்க தானே திராவிடர்களும், இவங்க சொல்றபடி பார்த்தால்! :)))) அதே போல் வடக்கே இருந்து வந்த பௌத்தம், ஜைனம் ஏத்துப்பாங்களாம். ஆனால் அவங்களோட முக்கிய மொழியாக இருந்த சம்ஸ்கிருதம், பிராகிருதம் வேண்டாமாம்! திடீர்னு தமிழ்நாட்டில் பௌத்தத்துக்கு ஒரே ஆதரவு! :) இந்து மதமே இல்லை என்கிறார்கள். ஆம், உண்மைதான் "இந்து மதம்" என்னும் பெயரில் இல்லை தான். ஆனால் சநாதன தர்மம் என்னும் பெயரில் இருந்திருக்கே! :)))

   காவிரிப் பிரச்னை தீர்க்க முடியாத ஒன்று. :( கர்நாடகம் மனம் வைத்தால் தவிர!

   Delete
 4. ஒன்றும் சொல்வதிற்கில்லை.....

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், நன்றிப்பா! :)

   Delete
 5. இந்த ஆரிய-திராவிட பிரச்னையை புத்திசாலித்தனமாகக் கிளப்பி விட்டவர்கள் சென்று விட்டார்கள். இன்னமும் அது ஓடிக்கொண்டிருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம்,புத்திசாலித் தனமெல்லாம் இல்லை. பிரிவினை எண்ணம்

   Delete
 6. தமிழ் மொழி பற்றி பேசாவிட்டால் ஒரு மாதிரி அரசியல் செய்வார்கள். பேசினால் ஒருமாதிரி அரசியல் செய்வார்கள்!

  // நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்கவேண்டும் என்னும் கோரிக்கை!//

  இல்லை.. ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை!

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம், ஆட்சிமொழியாக ஏற்கெனவே தமிழ் இருக்கே(தமிழ் நாட்டில்) என்னவோ ஒன்று! அவங்க கோரிக்கை! எப்போவும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு! வஞ்சனை செய்கிறது என்று சொல்லவேண்டும். நாலு வருஷத்துக்கு முன்னால் இவங்க ஆட்சிதானே! அப்போ வேண்டியதை எல்லாம் மத்திய அரசிடம் கேட்டுப் பெற்றிருக்கலாமே!

   Delete
 7. காவிரி நீருக்காக இனி இவர்களிடம் பிச்சை எடுக்கக் கூடாது. நம் நீராதாரங்களை பெருக்கி, எப்படிச் சேமிப்பது என்று இனியாவது பாடம் கற்க வேண்டும். தீர்ப்பு மாறி வந்திருந்தால் கர்நாடகா பற்றி இருந்திருக்கும். நாம் நாகரீகமானவர்கள் என்பதைக் காட்டிவிட்டோம். சிறு சலசலப்புகள் மட்டும்.

  ReplyDelete
  Replies
  1. என்னாது? ஶ்ரீராம், நம் நீராதாரங்களைப் பெருக்குவதா? எங்க வீடுகளை நாங்க பெருக்கறதே பெரிய விஷயம்! அதெல்லாம் எந்த ஆதாரத்தையும் பெருக்கித் தள்ளல்லாம் முடியாது! நாங்க வேலை செய்து பழக்கப்பட்டவங்களே இல்லை! நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணமும் இலவச அரிசியும் வருது! அரிசியை வீட்டில் கொடுத்துக் கஞ்சி காய்ச்சிச் சாப்பிடச் சொல்லிட்டு, டாஸ்மாக்கை நோக்கிப் போறதில்லாமல் வேறே என செய்வோமாம்? எங்களுக்கு அதான் வேலை! அத்தை விட்டுட்டு! நீராதாரங்களைப் பெருக்குவதாம்! தண்ணீரைச் சேமிப்பதாம்! அப்படி எல்லாம் செய்துட்டால் அப்புறமா மத்திய அரசைக் குத்தம் சொல்ல முடியுமா? மழை நீரை அப்படியே போக விட்டால் தான் வறட்சி, வெள்ளம்னு நிவாரண நிதி வாங்கலாம்! இது கூடத் தெரியலை! என்ன போங்க!

   Delete
 8. அரிசிலாறு மட்டுமா? ஒவ்வொரு ஆறும் தமிழ்நாட்டில் இந்நிலையில்தான் இருக்கின்றன. நாமாகத் திருந்தவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. திருந்த விடுவோமா என்ன? ஆற்றிலே நீர் வந்துட்டா அப்புறமா மணல் எப்படி அள்ளுவோமாம்?

   Delete
 9. பாவம் நாகசாமி அவர்கள். எல்லாவற்றையும் அரசியலாக்க வேண்டும் என்று சிலர் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், அதிலும் அவர் மாணவரே குற்றம் சாட்டுகிறார். :(

   Delete
 10. புத்த விகாரங்களை இடித்து இந்தக் கோவில்கள் கட்டியதாகச் சொன்னவருக்கு அப்படிச் சொல்லக் சொல்லி என்ன நிர்ப்பந்தமோ... எந்த ஆதாரத்தில் சொன்னாரோ! என்ன "லாபமோ"!

  ReplyDelete
  Replies
  1. அதானே! திடீர்னு இவங்க எல்லாம் இப்படிப் பேசறதைப் பார்த்தால் கொஞ்சம் கவலையாயும் இருக்கு, பயமாயும் இருக்கு! :(

   Delete
 11. சமணர் படுகொலை பற்றி மாறுபட்ட பார்வை ஒன்றை சமீபத்தில் எங்கோ படித்தேன். சரியாய் ஞாபகமில்லை.

  ReplyDelete
  Replies
  1. யோசிச்சு நிதானமாய் என்னனு சொல்லுங்க ஶ்ரீராம்!

   Delete
 12. //தமிழ்நாடு எங்கே போகிறது என்பதை நினைத்தால் கவலையா இருக்கு//

  அதுதான் அம்பேரிக்கா:) ஆகிறது எனச் சொல்லிட்டாங்கோ:)) இது உங்களுக்குத் தெரியாதோ கீசாக்கா:).. எதுக்கும் இன்னும் கொஞ்சக் காலம் தமிழ்நாடு மாறிடாமல் பார்த்துக் கொள்ளுங்கோ.. மீ ஒருக்கால் வந்து பார்க்கோணும்:)..

  ReplyDelete
  Replies
  1. அதிரடி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   Delete
 13. கீசாக்கா நீங்க எழுதியிருக்கும் இப் போஸ்ட் பார்க்க, எனக்கு ஒரு விசயம் கேள்விப்பட்டது நினைவுக்கு வருது... அர்த்தமுள்ள இந்துமதம்.. என ஒன்ரு எங்கட கண்ணதாசன் அங்கிள் எழுதியிருக்கிறாரெல்லோ.. அது திரும்பத் திரும்பப் படியுங்கோ மனது இலேசாகும்.. இப்படியான கிளவி.. ஹையோ டங்கு ஸ்லிப் ஆகிட்டுதே:) கேள்வி எல்லாம் மனதில வராது....

  ஆனா அதுக்கு எதிரான ஒரு புத்தகமும் வெளி வந்ததாமே அது எனக்கு கிடைக்கவுமில்லை படிக்கவுமில்லை, ஆனா அதில இந்து சமயத்துக்கு எதிராகவே எல்லாம் எழுதியிருக்காம் அதைப் படிச்சிட்டு நீங்க பதிவு போட்டது போல இருக்கே கர்ர்:))

  ReplyDelete
  Replies
  1. அதிரடி! எப்படி இருக்கு? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது சரி, இந்து மதத்துக்கு எதிரா இருக்கிற புத்தகம் பேரென்ன? :)

   Delete
 14. //இப்போப் புதுசா ஒண்ணு கிளம்பி இருக்கிறது என்னன்னா திருஞானசம்பந்தர் சமணப் பெண்களைக் கற்பழிக்கணும்னு ஆலவாய் அண்ணலிடம் வேண்டிக் கொண்டாராம்!//

  இந்த வசனம் பார்த்ததும்தான் எனக்கு அந்த “அர்த்தமற்ற இந்துமதம்” நினைவுக்கு வந்தது. அது வேண்டுமென்றெ எழுதப்பட்டதாமே.. அப்போ அதுக்கு எதுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேணும்?.

  ReplyDelete
  Replies
  1. அதிரடி, ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மைஎன நம்பத் தொடங்குவார்கள். இதை நான் என்னோட வாழ்க்கையிலேயே பார்த்திருக்கேன். அதான் கவலை! மற்றபடி முக்கியத்துவம் எல்லாம் கொடுக்கலை!

   Delete
 15. ///வள்ளுவர் பைபிளைப் பார்த்துத் தான் திருக்குறளே எழுதினார் என்கிறார்கள்//
  ஹா ஹா ஹா கீசாக்கா இதை எல்லாம் உங்களுக்கு ஆரு ஜொன்னா?:).. நல்லவேளை வள்ளுவர் கிரான்பா:) இப்போ இல்லை:) இருந்திருந்தா தேம்ஸ்ல குதிச்சிருப்பார்:))

  ReplyDelete
  Replies
  1. ஹையோ, ஹையோ, அதிரடி, ஒரு அம்மா யூ ட்யூபிலே சே சே யூ ரியூபிலே (செரியா?) இதைப் பத்திப் பெரிய சொற்பொழிவே நிகழ்த்தி இருக்காங்களே! பார்க்கலை? வள்ளுவர் பைபிளைப் பார்த்துத் தான் திருக்குறள் எழுதினாராம். இவங்க பக்கத்திலே இருந்து பார்த்திருப்பாங்க போல! :)

   Delete
  2. ஹா ஹா ஹா ஓ அப்படியா? என் கண்ணில நல்லவேளை அது படல்லே:))

   Delete
  3. ஆமாம், அதிரடி, சில சமயங்களில் நானும் தவிர்ப்பது உண்டு. ஆனால் நம்ம ரங்க்ஸ் கோவிச்சுப்பார். இரண்டு பக்கமும் தெரிஞ்சுக்க வேண்டாமா? அப்போத் தானே நம்ம பக்கம் உள்ள நியாயம் நமக்குப் புரியும். தைரியமா வாதிடலாம்னு சொல்லுவார். என்றாலும் சில சமயங்களில் அப்படித் தோணாது! எரிச்சலும், கோபமும் வரும்! :))))) அவர் ஸ்திதப் பிரக்ஞர்! :)))))

   Delete
 16. கீதாக்கா...தமிழ் தமிழ் நாங்கள் தமிழர் அப்படினு சவுன்ட் விடறவங்க யாருமே உருப்படி கிடையாது...உருப்படியா தமிழுக்கோ தமிழ்நாட்டுக்கோ ஒன்னும் கிழிச்சது கிடையாது...முதல்ல அக்கா தமிழர் அப்படினா என்னா டெஃபனிஷன் எனக்கு ஒன்னுமே புரியலை...ஏன்னு கேட்டீங்கனா...ஒரு வட்டம் இருக்கு அந்த வட்டத்தைப் பொருத்தவரை நான் (இங்கு நான் என்பது உங்களுக்கும் பொருந்தும்!!! புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறென். பொதுவெளியில் சொல்லலை!!!!) தமிழச்சி இல்லை ஹா ஹா ஹா ஹா..இது எப்புடி??!!!!

  எனக்கும் நீங்கள் இங்கு சொல்லியிருக்கும் பல செய்திகள் புதுசுதான். ஆனால் ஒன்று...ஒரு தவறான செய்தியைத் திரும்பத் திரும்பச் சொல்லும் போது அது வழிமொழியப்பட்டு பலருக்கும் சென்றடைந்து உண்மையாகிவிடுகிறது. இப்படித்தான் பல இடைச்செருகல்கள் அந்தந்தக்காலக்கட்டத்திற்கேற்ப உள் நுழைந்து இன்று வரலாறே தலைகீழாகிக் கிடக்கிறது...அது எந்த வரலாறாக இருந்தாலும்...பெரும்பான்மைக்குப் போய்ச் சேர்ந்திருப்பது தவறான வரலாறே...

  காவிரிப் பிரச்சனை ஹும் அதற்குத் தீர்வு என்பது இல்லை என்றே தோன்றுகிறது...போனால் போகிறது அதை நம்புவதை விட நாம் நமது நீராதாரங்களைப் பாதுகாத்தாலே நல்லது. எத்த்னையோ ஆறுகள், ஏரிகள் குளங்கள் எல்லாம் இப்போது காங்க்ரீட் இடங்கள்...அதற்கு யார் காரணம்? அவங்க முன்னெடுத்தால் மட்டுமே நடக்கும்...இனியேனும் உள்ள குளங்களை, ஏரிகளை நம் மக்கள் ஊழல்காரர்கள், பணம் விழுங்கும் கட்டிட முதலைகளுக்குத் தாரைவார்க்காமல் போராடிக் காக்க வேண்டும்...

  அதே போலத்தான் வரலாறு மாற்றப்படுவதும் ஆதாரங்கள் புதைக்கபப்டுவதும் வேறு கிளப்பப்படுவதும் லாபத்திற்காக...பணம் பத்தும் செய்யும்...பாதாளம் வரை பாயும்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா! இந்தச் செய்திகள் மட்டும் புதுசு இல்லை, "முருகன் என் முப்பாட்டன்!" அப்படினு சொல்லிக் கருப்பண்ணசாமி மாதிரிக் கறுப்பா ஒரு சிலையின் தலையிலே முண்டாசைக் கட்டி இதான் முருகன் அப்படினு சொல்றாங்க. இலக்கியங்களிலும், புராணங்களிலும் இதிகாசங்களிலும் முருகன் அக்னியிலிருந்து தோன்றியவன் அப்படினு சொல்றாங்க! எல்லோருமே அவன் அக்னி மாதிரி! வெப்பத்தில் இருந்து பிறந்தவன் என்னும்போதும் அதைக் குறிக்க அழகு தமிழில் "செவ்வேள்" என்று அழைக்கும்போதும் திடீர்னு கறுப்பா ஒரு சிலையை முருகன்னு காட்டிக் கும்பிடச் சொன்னால் எப்படி இருக்கும்? ஒண்ணும் புரியலை! அதிலும் ஆபரணங்கள் ஏதும் இன்றி!

   Delete
  2. //ஆறு முகமும் அணிமுடி ஆறும்
   நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
   பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
   நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

   ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
   ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
   பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
   நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

   முப்புரி நூலும் முத்தணி மார்பும்
   செப்பழ குடைய திருவயி றுந்தியும்
   துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
   நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்

   இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
   திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
   செககண செககண செககண செகண
   மொகமொக மொகமொக மொகமொக மொகென//

   என் ஐயன் முருகன் இப்படியன்றோ வருவான்!

   Delete
  3. எதுக்கு இப்போ திடீரெனக் கீசாக்கா கந்த சஷ்டி கவசம் பாடுறா?:) எதையாவது பார்த்துப் பயந்திட்டாவோ:)..

   Delete
  4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், முருகனை மேற்சொன்ன ஆபரணங்கள் இன்றி சிலம்பொலி முழங்காமல் யாரோ வேலை செய்யும் ஆளைப் போல் காட்டறாங்க! அதுக்கு எடுத்துக் காட்டினேன் முருகன் இப்படியன்றோ வருவான்னு! அதோட கந்த சஷ்டி கவசம் எப்போவும் மனசிலே ஓடும். அதுவும் ஶ்ரீராமஜயமும் ஓடிட்டே இருக்கும். திடீர்னு முழிச்சுட்டு அதைத் தேடிப் பிடிச்சு எடுத்துட்டு மறுபடி மனசுக்குள்ளே சொல்ல ஆரம்பிப்பேன். :)))))))

   Delete
 17. முனைவர் சாந்தலிங்கம் ஐயா அவர்கள் கீழடி போன்ற ப்ரச்சினையில் என்ன நிலைப்பாடு எடுத்தார் என்று தெரியாது. ஆனால் அந்த விஷயத்தில் சரியான நிலைப்பாடு எடுத்தார் என்று நீங்கள் சொல்லியதை கவனத்தில் எடுத்துக்கொள்கிறேன்.

  ஐயா அவர்கள் பகிர்ந்த பதிவில் பாஷாத்வேஷம், ஜாதி த்வேஷம், குருநிந்தை, பொய்ப்பரப்புரை, கிசு கிசு போன்ற முறையில் வம்பு பேசுதல் இவையத்தனையும் காணக்கிட்டியது. மிகக் குறிப்பாக முனைவர் ஐயா அவர்கள் தொல் தமிழ் நூற்களிலிருந்து எடுத்துக்காட்டிய நேரடியான மற்றும் மறைமுகமான பொய்ப்பரப்புரைகளை நூலறிவுள்ள அன்பர்களான தேவப்ரியா சாலமன், ஜாவாகுமார் போன்றோர் சுட்டிக்காட்டியிருந்தனர். சம்பந்தப்பெருமானை மறைமுகமாக சமணப்பெண்டிரை கற்பழிக்க இறைவனை இறைஞ்சிய ப்ராம்மணன் என்று அவர் செய்த பொய்ப்பரப்புரைக்கு எதிராக ஸ்ரீ ராமசந்த்ரன் அவர்கள் எழுதிய வ்யாசம் சுட்டிக்காட்டப்பட்டது.

  பொதுவெளியில் பொய்கள் காழ்ப்பு போன்றவற்றை முனைப்பாகப் பரப்புரை செய்வதை எதிர்த்து இயன்ற அளவு குரலெழுப்ப வேண்டும் என்பது என் ப்ரயாசை. உங்களது இந்த வ்யாசத்தில் காணப்படும் இந்த விஷயத்தை குறிப்பாக ஃபேஸ்புக்கில் என்னுடைய பக்கத்தில் நான் பகிர்ந்த வ்யாசத்தில் விமர்சித்து இருந்தேன். உங்கள் தளத்தை பார்வையிடும் அன்பர்கள் அதை வாசிக்க விழைந்தால்..............

  https://www.facebook.com/permalink.php?story_fbid=10155033573886300&id=613601299&notif_id=1518796959979729&notif_t=feedback_reaction_generic&ref=notif

  உங்களது வ்ருத்தாவஸ்தையிலும் கூட தளர்வில்லாமல் பொது ப்ரச்சினைகளை நீங்கள் தயக்கமில்லாமல் எழுதுவது உத்சாஹம் கொடுக்கிறது. செயலூக்கம் கொடுக்கிறது என்றால் மிகையாகாது அம்மா.

  தமிழகத்தில் ஒரு அம்ருத மந்தனம் நிகழ்கிறது என்றே நினைக்கிறேன். அம்ருத மந்தனத்தின் போது எப்படி ஆலகால விஷம் முதலில் வெளிவந்ததோ அப்படியே தமிழகத்திலும் விஷம் அனைத்தும் அம்ருதத்துக்கு முன்னர் வெளிப்போந்து ஆட்டம் போடுகிறது. அறுதியில் அம்ருதத்தினையொத்த மெய்யான சமயத்தமிழ் வெற்றி பெரும். தொல் தமிழரின் ஒழுக்க வாழ்வு மேலோங்கும். தமிழகம் மீண்டும் வளம்பெரும் என்று எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது அம்மா.

  ReplyDelete