எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, February 12, 2018

சின்னச் சின்னப் பிரச்னைகள்!

என்னென்னவோ எழுதணும்னு நினைப்பு. ஆனாலும் ஒரு வாரமாகச் சும்மா இணைய உலாவோடு சரி! எதுவும் எழுதணும்னு தோணவில்லை. தினம் தினம் இன்னிக்கு எப்படியாவது எழுதிடணும்னு நினைப்பேன். ஆனால் எதுவும் எழுதாமல் மாலை ஐந்தரைக்கே கணினியை மூடிடுவேன். இன்னிக்குத் திறந்திருப்பதே சுண்டெலியைச் சரி செய்ய மருத்துவர் வந்திருந்தார். அதனால் திறந்து வைச்சிருக்கேன். கணினியிலே எந்தப் பிரச்னையும் இல்லை. மவுஸ் தான் கீழே விழுந்ததில் வீணாகி விட்டது என்பதோடு பாட்டரிக்கும் தலையில் வீக்கம்! :) சரினு பழைய மடிக்கணினியில் சுண்டெலியை இதில் போட முடியலையேனு கேட்டேன். ஹிஹிஹி! அது லாகிடெக்! இது டெல்! அதனால் ஒத்துக்கலை. (ஆரம்பத்தில் இருந்தே)  கடைசியில் பார்த்தால் ரிசீவர் தான் பிரச்னை! நான் இந்தப் புதுக்கணினியில் இருந்த ரிசீவர் எல்லா மவுஸுக்கும் பொருந்தும்னு நினைச்சேன். ஆனால் லாகிடெக் ரிசீவர் தான் லாகிடெக் சுண்டெலிக்குச் சேருமாம். ரிசீவரை மாத்தினதும் புதுக் கணினியில் வேலை செய்ய முடிகிறது. சின்னப் பிரச்னை! ஆனால் மாசக்கணக்காகத் தடங்கிப் போய் இருந்தது. இப்போதைக்குப் புதுசாச் சுண்டெலி வாங்க வேண்டாம்.

எல்லோரும் பட்டுக்குஞ்சுலு யாருனு பேசிட்டு இருக்காங்க. ஹிஹிஹி! சொல்ல மாட்டேனே!

அப்புறமா இன்னொரு விஷயம் இன்னிக்குக் கீரை வடை செய்தேன். நெ.த.வை நினைத்துக் கொண்டேன். நல்ல மொறு மொறு!


நெ.த. நினைப்பு வந்தாலும் படம் அரைப்பதற்கு முன்னர் எடுக்கலை. வேறே வேலை இருந்ததால் அதைப் பார்த்துக் கொண்டே வடைக்கு அரைச்சு எடுத்துட்டேன். கீரையைக் கலந்தப்புறமாத் தான் படம் எடுத்தேன். அது மேலே!


எண்ணெயில் வேகும் வடைகள்! மொறு மொறு நெ.த.! தொட்டுக்க ரங்க்ஸுக்குப் பிடிச்ச தேங்காய்ச் சட்னி! எனக்கு எதுவுமே வேண்டாம். அப்படியே சாப்பிடுவேன். கற்பகாம்பாள் மெஸ்ஸிலே பண்ணின மாதிரி சாம்பார் எனில் ஓகே! :) கொஞ்சம் ஷேக் ஆயிடுச்சோ! அடுப்பில் பாலை வைச்சிருந்ததால் அங்கே ஒரு கண்! இங்கே ஒரு கண்! அதான்! :) இது கொஞ்சம் பரவாயில்லையோ? இதோடு சேர்த்து இன்னும் இரண்டு, மூன்று சமையல் குறிப்புகள் உள்ளன. ஶ்ரீராமிடம் கேட்டதுக்கு நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட வரிசை என்பதால் மார்ச் மாதம் வரும்னு சொல்றார். அதான் அனுப்பலாமா வேண்டாமானு யோசனை! என்ன சொல்றீங்க? எப்படியோ இன்னிக்கு எ.பி.க்குப் போட்டியா கீரை வடை போட்டாச்சு! என்ன செய்முறையா? ஹை! முன்னேயே அதிரா போட்டப்போ சொல்ல மாட்டேன்னு சொல்லி இருந்தேனே! அதனாலே சொல்ல மாட்டேனே!

59 comments:

 1. ஆமாம்... படங்கள் அவ்வளவு தெளிவாக வரவில்லை. எனினும் கீரை வடை இப்போ எங்கே கிடைக்கும் என்று தேட வைக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், செல்லில் எடுக்கும் கலை இன்னும் கைவரலை! :) கீரை வடை வீட்டிலேயே கிடைக்குமே! நல்ல உளுந்துன்னா அரைமணி நேரம் ஊறினால் போதும். :)

   Delete
 2. மீஈஈஈஈஇ தேன்ன்ன்ன்ன் 1ஸ்ட்ட்டூஊஊஊஊஊஊஊஊ:))

  ReplyDelete
  Replies
  1. ஹெஹெஹெஹெஹெஹெஹெஹெஹெ! யாரு ஃபர்ஷ்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ?

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

   Delete
 3. எப்படியோ என்ன எழுதுவது என்ற கேள்வியோடு வடையை வச்சு பதிவை முடிச்சுட்டீங்களே...

  ReplyDelete
  Replies
  1. கில்லரஜி, உங்களுக்கு மட்டும் ரகசியத்தைச் சொல்றேன். போட நினைச்ச பதிவே வேறே! அதுக்குக் கொஞ்சம் படங்கள் எல்லாம் போடணும். ஆகவே கடைசியில் மனதில் தோணினதை எழுதினேன். ஆனால் கீரை வடைப் படம் மட்டும் போடறதா ஏற்கெனவே முடிவு செய்திருந்தேன். :)

   Delete
 4. கீரை வடைக்கு உங்களைப் பார்த்து பயமா? இப்படி இரண்டு படங்களிலு வடைக்கு நடுக்கம் தெரியுதே..

  பார்க்க யம்மியா இருக்கு. இப்போ உள்ள குளிர்ல, சுடச் சுட சாப்பிட நல்லாத்தான் இருக்கும். கொஞ்சம் வெறும்ன, சிலவற்றிர்க்கு தேங்காய்ச் சட்னி. எண்ணெய் நிறைய குடிச்சதா? அப்படி இருந்தால் எனக்குப் பிடிக்காது. என் ஹஸ்பண்ட் டிஷ்யூ பேப்பரை வைத்து எண்ணெய் எடுத்துவிட்டுத்தான் சாப்பிடுவா.

  ஸ்ரீராம் மார்ச் மாதம் வரும்னு சொன்னா, அதுக்குப் பேர் நீண்ட வரிசை இல்லை. நான் அவர் எப்போ வேணும்னாலும் வெளியிட்டுக்கட்டும்னு உடனே அனுப்பியிருவேன். அப்புறம் அதே செய்முறையை இன்னொருத்தர் அனுப்பிடக்கூடாதில்லையா? நான் ஒரு காலத்துல கதை அனுப்பி 4-5 மாதம் காத்திருந்தேன்.

  செய்முறையையும் எழுதியிருக்கவேண்டியதுதானே (அல்லது சுட்டி தந்திருக்கலாம்).

  உங்கள் தளத்தைப் படித்துக்கொண்டுவருபவர்களுக்கு நீங்கள் சொல்வது என்ன என்று தெரியாமல் போய்விடுமா?

  ReplyDelete
  Replies
  1. // நான் ஒரு காலத்துல கதை அனுப்பி 4-5 மாதம் காத்திருந்தேன்.//

   நெல்லை... இப்போ என் பாணியை சற்று மாற்றி இருக்கிறேன். அதனால் லாபமும் உண்டு, கஷ்டமும் உண்டு! (நஷ்டம் அல்ல)

   Delete
  2. என்ன பாணின்னு கண்டுபிடிக்கறேன்.

   நீங்க முன்னால செய்ததும் சரியானதுதான். First come First Served concept. அப்புறம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கணும்னு (போரடிக்ககூடாதுன்னு) கதாசிரியர்கள்ட (established) கேட்டு வாங்கும்போது அதை இடையில் போடுவதும் சரிதான்.

   Delete
  3. வாங்க நெ.த. கீரை வடை எண்ணெயெல்லாம் குடிக்கலை! பொதுவாவே நான் எப்போதுமே வடை, பஜ்ஜி, போண்டா போன்றவை எண்ணெய் குடிக்காமலேயே போடுவேன். அதுக்கான தக்கினிகி தனியா இருக்கே! இன்னொரு விஷயம்! நான் எப்போவுமே டிஷ்யூ பேப்பரெல்லாம் வைச்சதில்லை. அம்பேரிக்காவில் பொண்ணு வீட்டில் அவ வைக்கச் சொல்லுவா! அப்போக் கூட அதிலே ஒரு பொட்டு எண்ணெய் படாது! :)

   Delete
  4. நெ.த. நானும் அனுப்பணும்னு தான் இருக்கேன்/இருந்தேன். ஆனால் என்னமோ சோம்பல்! அதோட சேர்த்து இன்னும் சிலது இருக்கிறதாலே சேர்த்து அனுப்பிக்கலாம். மத்தபடி ஶ்ரீராமோட பாணியெல்லாம் எனக்கு என்னன்னே தெரியாது! அதனால் இப்போ மாறி இருக்கிறதும் எனக்குக் கண்டுபிடிக்க முடியாது! ஙே! னு முழிப்பேன்.

   Delete
  5. ///நீங்க முன்னால செய்ததும் சரியானதுதான். First come First Served concept. அப்புறம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கணும்னு (போரடிக்ககூடாதுன்னு) கதாசிரியர்கள்ட (established) கேட்டு வாங்கும்போது அதை இடையில் போடுவதும் சரிதான்.///

   நோஓஓஓஓஓஓஒ நான் இதை மன்னிக்க மாட்டேன்ன்ன்ன் நேக்கு நீதி வேணும்ம்ம்ம்ம்:))... பேச்சுப் பேச்சாக இருக்கோணும்ம்ம்ம்ம்:))

   Delete
  6. நேக்கு நீதி வேணும்ம்ம்ம்ம்:) - அதிரா... உதாரணத்துக்கு நான் 3 செய்முறையை அனுப்பறேன்னு வச்சுக்குங்க (தொடர்ந்து). மூணுவாரம் தொடர்ந்து போட்டா தாங்குமா? அதனால, எல்லோரும் ரசிக்கணும்னு, உங்களோட செய்முறையை அடுத்த வாரம் போடுவார், அதற்கு அடுத்தது மற்றவர்கள்.... அப்புறம் என்னோடதுன்னு... அப்போதான் நல்லா இருக்கும். எப்படிச் செய்யறதுன்னு தெரிஞ்சுக்கதான் ஏகப்பட்ட தளங்கள் இருக்கே (கீசா மேடத்தோடதையும் சேர்த்து).

   என்ன... படங்களோட அங்க வரதுனால, நிச்சயம் செய்துபார்த்திருக்காங்கன்னு தெரியும். வெறும்ன 'கீரை வடை', 'கருவேப்பிலை தொகையல்' போன்ற செய்முறைக் குறிப்புகளை மட்டும் எழுதுவதைவிட (கீசா மேடத்தையும் வம்புக்கு இழுக்கவேண்டாமா)

   Delete
  7. நெ.த. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், சந்தடி சாக்கில் கருவேப்பிலைத் தொகையலுக்கு அப்புறமா எழுதலைனு சுட்டிக் காட்டறீங்க? கீரை வடை எழுதி இருக்கேன். முடிஞ்சா கண்டுபிடிங்க! :)

   Delete
  8. அதி வேஏஏஏஏஏற:) இது வேஏஏஏஏற நெல்லைத்தமிழன்:)... இது ஸ்ரீராமுக்கு மட்டும்தேன் புரியும்:)... ஹா ஹா ஹா:)

   Delete
  9. // நீங்க முன்னால செய்ததும் சரியானதுதான். First come First Served concept. அப்புறம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கணும்னு (போரடிக்ககூடாதுன்னு) கதாசிரியர்கள்ட (established) கேட்டு வாங்கும்போது அதை இடையில் போடுவதும் சரிதான்.//

   இல்லை நெல்லை ... இது அல்ல என் இப்போதைய பாணி! ஒரே படைப்பாளியின் படைப்புகள் தொடர்ந்து வரும் பட்சத்தில் மட்டுமே நீங்கள் சொல்வதுபோலச் செய்கிறேன். அதுவும் சம்பந்தப்பட்டவரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு (அறிவித்துவிட்டு!) உங்களை பற்றி பிரச்னை இல்லை. இந்த குறிப்புகளை நீங்களே எனக்கு முன்னதாகத் தந்து விடுவீர்கள்!

   இப்போதைய பாணி என்னவென்றால், ஒரேயடியாக வாங்கி குவிக்காமல் கொஞ்சம் காத்திருந்து அவ்வப்போது கேட்டு வாங்குகிறேன். சமயங்களில் அதனால் இல்லாமல் போய்விடுமோ என்று தோன்றும். அதுதான் கஷ்டம்!

   :)))

   Delete
  10. //நேக்கு நீதி வேணும்ம்ம்ம்ம்:))... பேச்சுப் பேச்சாக இருக்கோணும்ம்ம்ம்ம்:))//

   :))))))))))))))

   அதிரா... பேசியிருந்தால் கண்டிப்பாக இருக்கும்! சரியா? பேசியிருந்தால்... அதாவது சொல்லி இருந்தால்...

   Delete
 5. ///என்ன செய்முறையா? ஹை! முன்னேயே அதிரா போட்டப்போ சொல்ல மாட்டேன்னு சொல்லி இருந்தேனே! அதனாலே சொல்ல மாட்டேனே!//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கீசாக்கா இது அலாப்பி ஆட்டம்:).. என்ன பருப்பிலயா இல்ல உளுந்திலயா செய்தீங்க எண்டுகூடச் சொல்லல்ல:).. இது அவசர அவசரமா புஷ்பா அங்கிள் கடையில வாங்கி வந்து படமெடுத்துப் போட்ட மாதிரி இருக்கு... அதில யூம் வேற பண்ணி எடுத்தீங்களோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. கமெராவை சும்மா பிடிச்சு எடுத்திருந்தாலே வடை ஒழுங்கா தெரிஞ்சிருக்கும்...

  கீரை வடைக்கு நல்ல ஹொட் சோஸ் நல்லா இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கீசாக்கா இது அலாப்பி ஆட்டம்:).. என்ன பருப்பிலயா இல்ல உளுந்திலயா செய்தீங்க எண்டுகூடச் சொல்லல்ல:)..// சொல்ல மாட்டேனே, சொல்ல மாட்டேனே! என்ன பண்ணுவீங்க? என்ன பண்ணுவீங்க? என்ன பண்ணுவீங்க? ஹாஹாஹாஹாஹாஹா!

   Delete
  2. //இது அவசர அவசரமா புஷ்பா அங்கிள் கடையில வாங்கி வந்து படமெடுத்துப் போட்ட மாதிரி இருக்கு...// என்னாது புஷ்பா அங்கிள் கடையா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நறநறநற அது எங்கேயோ அம்பத்தூரில் இல்ல இருக்கு? அதோட அந்தக் கடை மளிகைக்கடை! வடை எல்லாம் போடறதில்லை. நீங்க எ.பி.லே போட்ட கீரை வடை தான் புஷ்பா அங்கிள் கடைனு பூஸார் என் காதிலே வந்து சொல்லிட்டுப் போச்சு! :)

   Delete
  3. //அதில யூம் வேற பண்ணி எடுத்தீங்களோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. கமெராவை சும்மா பிடிச்சு எடுத்திருந்தாலே வடை ஒழுங்கா தெரிஞ்சிருக்கும்...//

   கடவுளே, அதிராவின் அருஞ்சொற்பொருள்! யூம்= ஜூம்! அதெல்லாம் ஜூம் பண்ணி எடுக்கலை! செல்லிலே எடுத்தால் இப்பூடித் தான் வருது!

   Delete
  4. கீசா மேடம். செல்லில் படம் எடுத்துட்டு உடனே இழுக்கக்கூடாது. அப்படியே வச்சிருக்கணும். சில செல் கொஞ்சம் ஸ்லோ என்பதால், நீங்க கிளிக் பண்ணினபிறகுதான் திரையில் தெரிவதை சேமிக்கும். பொதுவா பட்டனை அமுக்கிட்டு சத்தம் வந்த உடனே படம் ரெடின்னு நினைச்சுடுவோம். இன்னொண்ணு, வடை பொரியும்போது புகை வந்தாலும், படம் நல்லா வந்திருக்கு. பிரச்சனை, தட்டில் எடுத்து வச்ச வடையைப் படம் பிடிக்கறதுலதான். அது உங்கள் தவறு.

   Delete
  5. முக்கியமா படம் எடுக்கும்போது கை நடுங்கக்குடாது:) இதுக்குத்தான் படம் எடுக்கும்போது ஹையோ அதிரா என்ன ஜொள்ளுவாவோ என நினைச்சு எடுக்கப்பூடாதாக்கூம்:).. இந்தப் படம் கடுமையா குளோசப் இல் எடுத்ததுபோல இருக்கு.. கொஞ்சம் தூரமா பிடிக்கோணும் கமெராவை:)) ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முடியல்ல:)..

   Delete
  6. நெ.த. அதிரடி இரண்டு பேரும் எடுக்கும் பாடம் எல்லாம் எனக்குப் படம் எடுக்கிறச்சே மனசிலே இருக்கும்? ம்ஹூம் வாய்ப்பே இல்லை! பாவம் அவங்க ரெண்டு பேரும். அது சரி பட்டனை அமுக்கினதும் சத்தம் வருமா என்ன? ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!
   அதிரா க்ளோசப்னா என்ன? ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!! :))))))

   Delete
  7. அதிரா க்ளோசப்னா என்ன? - எதுக்கு அவங்க வரவரைல காத்திருக்கணும்.

   கீரை வடை அடுப்புல பொரியும்போது, தெளிவா படம் வரணும்னு கேமராவை (செல்லை) எண்ணெய்ச் சட்டி பக்கத்துல கொண்டுபோய், தவறுதலா, கீரை வடைக்குப் பதிலா, 'சாம்சங்/ஐபோன்' வடை செய்வதற்குப் பதில், கொஞ்சம் தூர கேமராவை வைத்துக்கொண்டு, விரலால் ஸ்க்ரீனை அகத்தினால், க்ளோஸப் வரும். தெரிஞ்சுக்கிட்டே கேட்பீங்களே. அது தெரியாமயா, எங்கயோ இருக்கற வீட்டு மொட்டை மாடிலேர்ந்து, காவிரிப் பாலம்லாம் எடுத்துப்போடறீங்க?

   Delete
  8. நெ.த. எங்கோ இருக்கிற வீட்டு மொட்டை மாடி இல்லை! இங்கே வந்து பார்த்தவங்களைக் கேட்டுப்பாருங்க! :) காவிரிக்கரையிலே தான் இருக்கோம். அதனால் அதைக் காமிராவில் பிடிப்பது சுலபம். செல்லில் இன்னமும் எனக்கு வரலை. விரலால் ஸ்க்ரீனை அகற்றினால் க்ளோஸப் வரும் என்பது இப்போ நீங்க சொன்னதால் தெரிஞ்சுண்டேன். மற்றபடி நீங்க நினைக்கிற மாதிரி நான் சகலகலா வல்லி எல்லாம் இல்லை. எங்க பொண்ணு நல்லாப் படம் எடுப்பா! அதுக்கப்புறமாப் பையர் கொஞ்சம் பரவாயில்லை. ரங்க்ஸும் எடுப்பார்! நான் அமெச்சூர் கூட இல்லை. :))))

   Delete
  9. கீசாக்கா இப்போ பிரிஞ்சிருக்குமே குளோசப்:)... ஓவரா கிட்டப் பிடிச்சு எடுக்கக் கூடாது ... பொருளுக்கும் கமெராவுக்கும் நடுவில் குறிப்பிட்ட இடைவெளி இருக்கோணும்.

   Delete
 6. // இதோடு சேர்த்து இன்னும் இரண்டு, மூன்று சமையல் குறிப்புகள் உள்ளன. //

  என்ன இப்பூடி முடிவில மட்டும் யூம் பண்ணிப் போடப்போறீங்களோ?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) செய்முறை விளக்கம் இல்லாட்டில் புளொக்கைத்தூக்கி காவேரியில போட்டிடுவேன் ஜொள்ளிட்டேன்ன்ன்:))

  ReplyDelete
  Replies
  1. ஹெஹெஹெஹெ, என்னோட ப்ளாகைத் தூக்கிப் போடுவீங்க? முடியும்? ஹெஹெஹெஹெஹெ நோ செய்முறை விளக்கம்!

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அப்பூடின்னா உங்கட நெட்டுக்குத்தான் நேர்த்தி வைப்பேன் பொய்யாப்பிள்ளையாரிடம்:) எங்கிட்டயேவா?:)) ஹா ஹா ஹா:)..

   Delete
  3. செய்ங்க, செய்ங்க, பொய்யாப் பிள்ளையார் ரொம்ப நல்லவர்! :))))

   Delete
 7. ///நெ.த.வை நினைத்துக் கொண்டேன். நல்ல மொறு மொறு!///

  ஹா ஹா ஹா எதுக்கு அவர் மேல இவ்ளோ கோபம்:) ஹா ஹா ஹா அப்பூடி என்ன ஜொள்ளிட்டார்ர்:)

  ReplyDelete
  Replies
  1. ஹெஹெஹெ அதிரடி, வடை நல்ல மொறு மொறு. அவர் மயிலை கற்பகாம்பாள் மெஸ்ஸிலே அவரோட ஹஸ்பண்டுக்கு வாங்கிக் கொடுத்தது சொதப்பலாம்! அது நினைப்பு வந்தது! ஹிஹிஹிஹி!

   Delete
 8. //தினம் தினம் இன்னிக்கு எப்படியாவது எழுதிடணும்னு நினைப்பேன். ஆனால் எதுவும் எழுதாமல் மாலை ஐந்தரைக்கே கணினியை மூடிடுவேன்//

  இண்டைக்கும் நீங்க எதுவுமே எழுதல்ல என்பது நியாஆஆஆஆஆபகம் இருக்கட்டும்:).. பட்டுக் குஞ்சுலு.. மலிஞ்சா சந்தைக்கு தானா வந்திடும்:))

  ReplyDelete
  Replies
  1. எதுவுமே எழுதாமல் இருக்கக் கூடாதுனு போட்ட பதிவு தானே இது! பட்டுக் குஞ்சுலு எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கு! உங்களுக்குத் தெரியலை! ஹிஹிஹி!

   Delete
 9. ஆஆவ் !! எனக்கும் ஒரு சுணக்கம் ஸ்லைட்டா வந்து போச்சு பேப்பர் சுருட்டறதில் மனதை திருப்பி சுணக்கத்தை துரத்திட்டேன் :)
  எங்க ஊர் குளிருக்கு சுணக்கம் வந்திடுதுக்கா .

  ஹையோ கீரை வடையை விட பட்டுக்குஞ்சுலு யாரா இருக்கும்னு எனக்கு கியூரியஸா இருக்கே :)
  அக்கா நீங்க இன்னும் தயிர் வடை ரெசிப்பி தரலை ..

  எப்படியாவது கண்டுபிடிக்கணும் :) பட்டு குஞ்சுலு யார்னு ..அதிராவ் ஓடிவாங்க

  ReplyDelete
  Replies
  1. ஏங்க... கீதா சாம்பசிவம் மேடத்துக்கு energize ஆகணும்னா, அவங்க பேத்தியோட ஸ்கைப்ல பேசினாலோ அல்லது பார்த்தாலோ எனர்ஜைஸ் ஆகிடுவாங்க. அந்தக் குட்டிப் பாப்பாவைத்தான் 'பட்டுக் குஞ்சலு'ன்னு சொல்லியிருப்பாங்க. அவங்க தளத்துல இடுகைலாம் படிக்கிறீங்க. இதைக் கண்டுபிடிப்பது கடினமா?

   Delete
  2. ஹிஹிஹி ஏஞ்சல், நெ.த. சொல்லி இருப்பது தான். ஏற்கெனவே தி.கீதா எ.பி.லே வேறே சொல்லிட்டாங்களே! அப்புறமுமாப் புரியலை! தயிர் வடை ரெசிபி நான் பண்ணும்போது படத்தோடு போடணும்.

   Delete
  3. ஏஞ்சல்! இங்கே கோடைக்காலம் ஆரம்பிச்சாச்சு! அங்கே குளிர்னு சொல்றீங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! எனக்கு ஒரே வெயிலில் அசத்துது! வெயில் தான் எப்போவுமே ஒத்துக்காது! சுணக்கம் வந்தா நீங்கே வேறே வேலைகள் செய்யறீங்க! நான் வேலைகள்னு மட்டும் செய்யாமல் புத்தகம் ஏதேனும் படிப்பேன்.

   Delete
  4. ////பட்டு குஞ்சுலு யார்னு ..அதிராவ் ஓடிவாங்க///

   ஆஆஆஆஆஆஆஆ மீ வந்துட்டேன்ன்ன்ன்... அது கீசாக்காவின் செல்லப் பேரக் குட்டியாம்... அப்போ கீசாக்கா சின்னப்பொண்ணு இல்ல அஞ்சு:) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:))..

   Delete
  5. நம்ம பழக்கமே கமெண்ட்ஸை ரிவர்ஸ் ஆர்டரில் படிப்பது :) நேற்று பட்டு குஞ்சுலு மட்டுமே பார்த்தேன் :) அங்கேயே டவுட் வந்தது செல்லமாத்தான் இருக்கும்னு ஆனா நீங்க சொல்லாததால் அந்த ஆன்சரை ஒதுக்கி வச்சி யோசிச்சேன் :)

   என்ஜோய் அக்கா ..ஒரு ஸ்டேஜில் குழந்தைகளின் குறும்புகள் ரசிச்சிட்டே இருக்கணும்

   Delete
  6. இப்போ எல்லா பழைய படங்கள் வீடியோக்கள் எல்லாம் எடுத்து பார்க்கணும்போலிருக்கு என் பட்டுக் குட்டியின் படங்கள் 1-3 வயதில் எடுத்தவற்றை :)

   Delete
  7. அக்கா நேற்றும் hails அப்புறம் ஸ்னோ கொட்டுச்சி இங்கே வெயில் கண்ணுக்கு பட்டாலும் மைனஸ் தான் இங்கே

   Delete
  8. //கீசாக்கா சின்னப்பொண்ணு இல்ல அஞ்சு:) // க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிரடி யார் சொன்னது? அது பட்டுக்குஞ்சுலுன்னா மீ சின்னக் குழந்தையாக்கும்!

   Delete
  9. ஏஞ்சல், பாருங்க, பாருங்க, எங்க பொண்ணு சின்ன வயசில் செய்த குறும்புகளையும் பையர் செய்த குறும்புகளையும் இப்போவும் நினைவில் வைச்சிருக்கோம்.

   Delete
 10. ஆஹா!!! கீரை வடை காலையிலேயே சூப்பர்!!! அது சரி...அதென்னா சொல்ல மாட்டேனு....இது ரொம்ப அநியாயம் அக்ரமம்...2 விஷயத்துக்கு....பட்டுக் குஞ்சுலு சீக்ரெட்டை அப்புறம் வடை எப்படி பண்ணினேன்னு சொல்ல மாட்டேனு...ஓ எபில திங்கவுக்கு ரிசர்வ்டா அதான் சீக்ரெட் சொல்லமாட்டேனா.. சரி சரி கீதா கீதாக்காவை மன்னித்தாள்....

  ஆனா ஒன்னு அந்த ரெண்டு சீக்ரெட்டும் தெரிஞ்சுக்காம விட மாட்டேனாக்கும்..சொல்லிப்புட்டேன்.தொந்தரவு தொடரும் ஹிஹிஹி

  கீதா

  ReplyDelete
  Replies
  1. // சரி சரி கீதா கீதாக்காவை மன்னித்தாள்....//


   ஹா.... ஹா... ஹா... கீதா ரெங்கன்... சிரித்து விட்டேன்! பட்டுக் குஞ்சுலுல ணன்தான் சீக்ரெட்? எனக்கொண்ணும் அவதி இல்ல.. இருந்தாலும் தெரிஞ்சுக்கலாமேன்னு.....

   Delete
  2. வாங்க தி/கீதா! அதான் பட்டுக் குஞ்சுலு யாருனு எ.பி.லேயே சொல்லி இருக்கீங்களே! முந்தாநாளைக்குப் பட்டுக் குஞ்சுலு ஸ்கைபிலே வந்ததா? எங்களைப் பார்த்ததும் கிருஷ்ணா, ராமா, கோவிந்தா சொல்லச் சொல்லிக் கை தட்டியது! சரினு நாங்க சொல்ல ஆரம்பிச்சதும் அது சொல்லாதாம்! கையும் தட்டாதாம். கள்ளச் சிரிப்போடு முகத்தை மூடிக் கொண்டு விட்டது! ராத்திரி படுக்கும் முன்னே பார்த்துட்டுப் படுத்தேனா! காலையிலே எழுந்ததும் அதே நினைவு! :))))

   Delete
  3. //எனக்கொண்ணும் அவதி இல்ல.. இருந்தாலும் தெரிஞ்சுக்கலாமேன்னு.....//

   ஶ்ரீராம், நல்ல சமாளிப்ஸ்!

   Delete
  4. ஆஹா !! செல்லக்குட்டியா :) bless her .
   நேற்று மகள் டேபிளில் குனிந்து ஹோமஒர்க் செஞ்சிட்டிருந்தா அப்போ அந்த முகம் அப்படியே ரெண்டு வயசில் இருக்குமே அதை நினைவுபடுத்தியது .நானும் இவரும் திருட்டுத்தனமா அவளைரசித்துக்கொண்டிருந்தோம் . .இப்போ 17 ஆகுது :) நானும் அவளை பட்டுக்குட்டி பூக்குட்டி அப்படிதான் இன்னும் கூப்பிடறேன் :)

   Delete
  5. வாங்க ஏஞ்சல், ஆமாம், சில சமயம் நாம் சின்ன வயசில் கூப்பிடும் செல்லப் பெயர்கள் அப்படியே நிலைத்து விடும். எங்க பெண்ணைப் பட்டு என்று கூப்பிட்டு வந்தோம். இப்போ அவளுக்கே பிடிக்கலைனதும் மாற்றிக் கொண்டாலும் இன்னும் சில உறவினர்கள், நண்பர்கள் அவளைப் பட்டு எப்படி இருக்கானு தான் கேட்பாங்க!

   Delete
  6. ஹை ஸ்ரீராம் ப கு யாருன்னு நான் கரீக்ட்டா சொல்லிட்டேன்..பாருங்க.....ஸோ எனக்கு ஒரு ஸ்வீட் வேண்டும்....கீதாக்கா....

   கீதா

   Delete
  7. இப்போ 17 ஆகுது :) நானும் அவளை பட்டுக்குட்டி பூக்குட்டி அப்படிதான் இன்னும் கூப்பிடறேன் :)//

   ஹா ஹா ஹா ஹா ஏஞ்சல் என் பையனுக்கு 28 ஆகுது...ஆனாலும் இப்பவும் குட்டிமா, செல்லக் குட்டி, பட்டுக்குட்டிமா என்றுதான் கூப்பிடுகிறேன்...கோந்தே (குழந்தே) என்றுதான் வரியை முடிப்பதும் வழக்கம்..."கோந்தே இங்க பாரு...இப்படிச் செய்து பாரு கோந்தே அல்லது குட்டிமா!!!) ஹா ஹா ஹா ஹா...

   மகன் மீது சிறு வயதில் எதற்காச்சும் கோபம் வந்தா அது ரொம்ப ரொம்ப ரேர்...ஏன்னா அவனே ஒரு சிறு குறைபாட்டுடன் இருந்ததால...எல்லாமே ரொம்ப ரொம்ப ஸ்லோவா தான் செய்வான்...ஸோ அப்படிக் கோபப்பட்டா நான் அவனைத் திட்டுவது காய்களின் பெயர்களைச் சொல்லி அல்லது பூக்கள் அல்லது விலங்குகளின் பெயரைச் சொல்லி ஆனால் அது ஹார்ஷாக இல்லாமல் அவனுக்கு அப்படியே இவற்றின் பெயரை அறிமுகப்படுத்துவது போல...தமிழில் சொல்லி ஆங்கிலத்திலும்...சொல்லி என்று.... அவன் நான் ஆங்கிலத்தில் சொன்னால் தமிழில் சொல்லுவான்...நான் தமிழில் சொன்னால் அவன் ஆங்கிலத்தில் சொல்லுவான்...

   வெண்டைக்காய் குட்டிமா நீ இப்படிச் செஞ்சுருக்கணும்னு சொன்னா உடனே அவன் சொல்லுவான் போ லேடிஸ் ஃபிங்கர் என்னைக் கோச்சுக்காத.என்பான்..நான் சிங்கக் குட்டி என்றால் அவன் நீ சிங்கம்...என்பான்....நான் கப் என்றால் அவன் நீ அம்மா லயன் என்பான்..புலிக்குட்டி என்றால் வா வா வா நீ அம்மா புலி...8 அடி பாஞ்சா நான் குட்டிப் புலி 16 அடி பாய்வேன் என்று பாய்ந்துக் காட்டுவான்..நான் புலிக்குட்டி எல்லாம் ரொம்ப சமர்த்தாக்கும் இப்படி எல்லாம் அம்மாவை படுத்தாது என்பேன்...உடனே அவன் அம்மா புலி எல்லாம் ரொம்ப சமர்த்து புலிக் குட்டியை கோச்சுக்காது தடவிக் கொடுக்கும் நாக்கால..என்பான்..ஹா ஹா ஹா ஹா

   எனக்கு 53 வ்யது...ஆனால் என் அப்பா என்னை இப்பவும் கோந்தே என்றுதான் முதலில் அட்ரெஸ் செய்வார்...ஹா ஹா ஹா ஹா...

   கீதா

   Delete
 11. நான் தான் ஃபர்ஸ்டூஊஊஊஊஊ வா கீதாக்கா....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. யெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸு! தி/கீதா! லாஷ்டுலே பர்ஷ்டு! :)))))

   Delete
  2. நோஓஓஓஓஓஓஓஓஓஓஓ மீதான் லாஸ்ட்டிலயும் 1ஸ்ட்டூஊஊஊஊஉ ஹா ஹா ஹா:) ஓஒ லலலாஆஆஆஆஆஆஆஅ:)

   Delete
  3. அட, ஆமாம், அதிரடி லாஷ்டிலேயும் ஃபர்ஷ்டு வந்திருக்காங்க! :)

   Delete
  4. ஹா ஹா ஹா ஹா...

   எனக்கு மீண்டும் வந்து கமென்ட் போட ரொமப் லேட்டாகுது இந்த நெட் நால...போயிடுது வருது அப்படினு இருக்கறதுனால அது வரும் சமயம் விட்ட பதிவுகள் எல்லா பதிவும் ஓடி ஓடிப் போய் கமென்ட் போட்டு, துளசி கமென்ட் அனுப்பினா அதைப் பார்த்து போட்டு...என்று லேட்டாகிடுது...அதிரடி ஆமை முயல் கதையா...ஹா ஹா ஹா ஹா

   கீதா

   Delete