படத்துக்கு நன்றி. கூகிளார் வாயிலாக Temples of Tamilnadu!
பல பிரார்த்தனைகள் நிறைவேற்ற வேண்டும். அவற்றில் ஒன்று அரியலூருக்கு அருகே கல்லங்குறிச்சி என்னும் ஊரில் உள்ள கலியுக வரதராஜப் பெருமாளுக்குச் செய்ய வேண்டிய பிரார்த்தனையும் ஆகும். 2016 ஆம் ஆண்டிலேயே போயிருக்கணும். அப்போப் போக முடியாமல் ஏதேதோ தடங்கல்கள். அதை இப்போ முடிக்கணும்னு நினைச்சோம். ஆகவே அரியலூரில் இருந்து ஆறுகிலோ மீட்டரில் கல்லங்குறிச்சியில் உள்ள கலிய பெருமாள் கோயிலுக்குச் சென்றோம். முந்தாநாள் திடீர்ப் பயணமாகக் கலியுக வரதராஜப் பெருமாள் கோயில் எனப்படும் கலியபெருமாள் கோயிலுக்கும், பின்னர் அங்கிருந்து சிதம்பரமும் சென்று வந்தோம். திரும்பும் வழியில் கடலூர் சென்று தம்பி வாசுதேவனைப் பார்த்துவிட்டு வந்தோம். சமீபத்தில் தான் அறுவை சிகிச்சை முடிந்து வந்திருக்கிறார். அறுவை சிகிச்சை சமயத்தில் போக முடியவில்லை. எப்படியும் கடலூர் வந்ததும் போகணும்னு தான் இருந்தோம். அது இப்போத் தான் நேரம் கிடைச்சது.
காலை ஆறு மணிக்கே கிளம்பினோம். இப்போவும் ஃபாஸ்ட் ட்ராக் தான்! வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு ஏழு, ஏழரை மணிக்கெல்லாம் போயிட்டோம். ஆனால் அங்கே முதல்நாள் கிரஹணத்திற்கான பரிகார பூஜைகள் முடிந்து அன்றைய உதயகாலபூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அர்ச்சனைக்குத் தேவையானவற்றையும் அங்கே நிவேதனம் செய்ய வேண்டியதையும் கையோடு எடுத்துப் போயிருந்தோம். நாம் கொண்டு போவதை நிவேதனம் செய்ய மாட்டார்கள் என்பதை ஏற்கெனவே அறிந்திருந்தோம். எனினும் அர்ச்சனைகள் செய்துக்கலாமே என அர்ச்சனைச் சீட்டு வாங்கப் போனால் அங்கே இருந்தவர் அப்போது அர்ச்சனைச் சீட்டுக் கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார்.
கோயில் அறங்காவலர், (ஊழியர் சொன்னது முதலாளி) வரவேண்டும் எனவும் அவர் வந்து நித்திய கால பூஜைகள் முடிந்த பின்னரே அர்ச்சனை செய்வார்கள் எனவும் கூறினார். நாங்களும் அதனால் என்ன சீட்டு வாங்கிக் கொண்டு உட்கார்ந்துக்கறோம். காத்திருந்து அர்ச்சனை செய்து கொண்டே போறோம்னு சொன்னோம். அந்த ஊழியருக்கு வந்ததே கோபம்! அதெல்லாம் இப்போச் சீட்டுக் கொடுக்கக் கூடாது! கொடுக்கவும் முடியாது! நீங்க காத்திருந்தால் பின்னாடி வந்து வாங்கிக்குங்க! என்று சொல்லி விட்டார். சரினு வெளிப் பிரகாரத்தில் இருந்த ஒரு மண்டபத்துக்கு எதிரே போய் உட்கார்ந்தோம். பரபரப்பாகச் சிலர் அந்த மண்டபத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். நீர் விட்டுக் கழுவித் துடைத்து அங்கே நடுவாக உள்ள ஓர் இடத்தில் ஓர் ஆசனப் பலகையையும் போட்டார்கள். அந்த மண்டபத்தில் யாரோ சாமியார் படத்தோடு சாமியாரின் பெயரும் இருந்ததால் அவர் தான் வரப் போகிறாரோ என நினைத்தோம்.
ஆனால் அறங்காவலர் வரப் போவதாக அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர் சொன்னார். அதற்குள்ளாக நம்ம முன்னோர்கள் மேற்கூரையிலிருந்து நம் கையிலிருந்த பையையே நோட்டம் விட்டார்கள். அலைபேசியை எடுத்துப் படம் எடுக்கலாம்னு நினைச்ச நான் அந்த யோசனையைக் கை விட்டேன். காமிராவாக இருந்தாலும் போயிட்டுப் போகட்டும்னு விட்டுடலாம். அலைபேசியைத் தூக்கிட்டுப் போயிட்டார்னா என்ன செய்யறது! உள்ளே போட்டுட்டு நாங்களும் உள்ளேயே சென்றோம். உற்சவருக்கு எதிரே இருந்த மண்டபத்தின் படிகளில் அமர்ந்தோம். கண்டிப்பாகப் புகைப்படம் எடுக்கக் கூடாதுனு சொன்னாங்க! புகைப்படம் எடுக்கத் தனியாக அனுமதி கொடுக்கும் சீட்டும் அங்கே கொடுப்பதில்லை. கொஞ்சம் தெரிஞ்சவங்க, வசதியானவங்க என்றால் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க போல! அது என்னமோ அந்தக் கோயிலில் இருந்தவங்க எங்களை அந்நியராகவே பார்த்தார்கள்.
அதுக்குள்ளே அறங்காவலர் வந்துட்டார்னு தெரிஞ்சு போய்ப் பார்த்தால் கோயில் ஊழியர்கள் குடங்களில் தண்ணீர் நிரப்பி எடுத்து வந்து அறங்காவலருக்குக் காலில் தண்ணீரை விட்டுப் பாத பூஜை போல் ஏதோ செய்தார்கள். அவருடன் கூட வந்தவர் தம்பியோ? அவர் ஜாடையிலேயே இருந்தார். அவருக்கும் நடந்தது. பின்னர் எல்லோரும் புடைசூழ அந்த மண்டபத்துக்குள்ளே போய் அந்த ஆசனப் பலகையிலேயே இருவருமாக அமர்ந்து கொண்டார்கள். அவர்களுக்குள்ளாக ஏதோ பேசிக் கொண்டார்கள். இருவருக்குமே கோயிலில் நித்தியகால பூஜைக்கான நேரம் என்பதே நினைவில் இல்லையோனு தோணிச்சு! அதுக்குள்ளே நான் மறுபடி தேவஸ்தான அலுவலகம் போய் அர்ச்சனைச் சீட்டு மறுபடி கேட்க மறுபடி கடுமையான வார்த்தைப் பிரயோகம்! அப்படியும் விடாமல் நான் சீட்டுக் கொடுத்துட்டால் நாங்க ஒரு பக்கமா உட்கார்ந்துக்கறோம். வழிபாடுகள் முடிஞ்சதுமே அர்ச்சனை செய்துக்கறோம்னு சொன்னேன். ஊழியருக்கு வந்ததே கோபம்! கடுமையாகப் பேசினார்! திரும்பிட்டேன். மறுபடி உற்சவருக்கு எதிரே தேவு காத்துட்டு இருந்தோம்.
அரைமணிக்கப்புறமா நாதஸ்வரக் கலைஞர் , தவில் காரருடன் வந்தார். அத்தனை மன வருத்தத்திலும் இந்தக் கோயிலில் பரம்பரை நாதஸ்வரக் கலைஞர் இருக்காரேனு சந்தோஷம் வந்தது. அதுக்குள்ளே அறங்காவலர் மூலவரின் கர்பகிரஹத்துக்கு வந்துட்டார். அங்கே வழிபாடுகள் ஆரம்பித்தன. இங்கே நாதஸ்வரக் கலைஞர் சக்கைப் போடு போட்டார். தீப ஆராதனை சமயம் நானும் போய் நின்ற வண்ணம் தீப ஆராதனையைப் பார்த்துக் கொண்டேன். கோயில் பட்டாசாரியார்கள் ஒவ்வொன்றுக்கும் இடுப்பு வரை வளைந்து வணங்கி அறங்காவலரின் உத்தரவைப் பெற்றுக் கொண்டு செய்ததோடு அல்லாமல் அவருக்கு தீபாராதனையைக் காட்டி அவர் வணங்கும்போதும் கிட்டத்தட்ட வணங்கிய நிலையிலேயே காட்டினார்கள். கர்பகிரஹத்தில் இறைவன் ஒருவனே பெரியவன் என்னும் வேண்டாத நினைப்பு எனக்கு வந்து தொலைத்தது. பொதுவாகக் கோயிலிலேயே மனிதர்களை வணங்கக் கூடாது என்பார்களே என்று நினைத்துக் கொண்டேன்.
கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது தான் எனினும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆன கோயில்களைப் போல் மிகப் பழமையாகக் காணப்பட்டது. முகப்பில் கோபுரம் இல்லை! முன்னால் கிராமமே அதிகம் மனிதர்கள் இல்லாமல் கோயில் மட்டும் தன்னந்தனியாகக் காணப்பட்டது என்று ரங்க்ஸ் சொன்னார். இப்போத் தான் காலி இடங்களே விட்டு வைக்கிறதில்லையே நாம! அந்த வழக்கப்படி இப்போ அங்கே மனித நடமாட்டம் மட்டுமில்லாமல் இலவசக் கழிவறை, குளியலறை (பராமரிப்பு மோசம்) போன்றவைகள் இருந்தது. அங்கே மொட்டை போட்டுக் காது குத்துவது மட்டுமே செய்வார்களாம். திருமணங்கள் நடத்துவதில்லையாம்! நிறையப் பிச்சைக்காரர்கள் வழக்கம் போல்! ஆனாலும் கோயிலில் உள்ளே உள்ளூர் மக்களைத் தவிர வெளியூர் மக்கள் எனில் நாங்கள் இருவர் மட்டும் தான்.
ஒருவேளை அந்த தெய்வத்தை உள்ளூர்க்காரங்கதான் வணங்கணும்னு ஐதீகம் ஏதும் இருக்குமோ...?
ReplyDeleteஹாஹா கில்லர்ஜி, அப்படி எல்லாம் இல்லை. நம்ம ரங்க்ஸ் சின்ன வயசிலேயே அந்தக் கோயில் பெருமாளுக்கு மொட்டை போட்டுக் கொண்டிருக்கிறதாகச் சொன்னார். நாங்களும் இங்கே வந்ததில் இருந்து போக நினைச்சு இப்போத் தான் முடிஞ்சது!
Deleteகலியபெருமாள் கோவில்தானே! கம்பத்திற்கு பூஜை செய்வார்களே அதுதானே?
ReplyDeleteஜெயகொண்டம் அருகில் கலியபெருமாள் கோவில் போய் இருக்கிறோம்.
இவ்வளவு கெடுபிடியா? சினிமாவில் வருவது போல் இருக்கே!
வாங்க கோமதி அரசு! அதே தான்! நீங்க ஒரு வேளை பத்துமணி போலப் போயிருப்பீங்க! :) நாங்க தான் கோயில் திறந்ததுமே உள்ளே நுழைஞ்சுட்டோமே! சினிமாவெல்லாம் ஒண்ணுமே இல்லை! :))))
Deleteபல கோவில்களில் இப்படியான தனிமனித வழிபாடு தான் அதிகம் - இறை வழிபாட்டை விட!
ReplyDeleteஎன்ன சொல்ல. மோசமான அனுபவம் தான் உங்களுக்கு.
வாங்க வெங்கட், இன்னிக்குத் தான் சுண்டெலியைக் கண்டெடுத்தேன்! :)))))
Deleteம்ம்ம்ம்ம் கோயில்களில் அதிலும் முக்கியமாத் திருவாலி, திருநகரி திவ்யதேசக் கோயில்களில் இதைவிட மோசமான அனுபவங்கள்! :))))) விவரித்து எழுதவில்லை! நேரில் பார்ப்பவர்களிடம் சொல்லி இருக்கோம். :))))
/ ஊழியர் சொன்னது முதலாளி) வரவேண்டும் //
ReplyDeleteகடவுள்தானே முதலாளி ??
அர்ச்சனை சீட்டு கடைசியில் கொடுத்தார்களா ? வெளியூரிலிருந்து இறைவனை தரிசிக்க வரவங்களிடம் இப்படியா கடுகடுன்னு முறைப்பாங்க :(
வாங்க ஏஞ்சல், எங்கே உங்க ஆளைக் காணோம்? தலைமறைவா இருக்காங்களோ! இருக்கும் இருக்கும்! :)))))
Deleteஅது போகட்டும்! கடவுள் தான் முதலாளி என எண்ணிக் கொள்வதில்லையே! :)))) அர்ச்சனைச் சீட்டுக் கடைசி வரை கொடுக்கவே இல்லை! :(
படிக்கும்போது வருத்தமே மிஞ்சியது.
ReplyDeleteஅந்த அந்த ஊர் அறங்காவலர்களுக்கு மரியாதை தரவேண்டியதுதான். அவங்கதானே கோவில் ஒழுங்கா நடப்பதற்கு ஆகவேண்டிய காரியத்தைச் செய்பவர்கள்.
ஆனால், பக்தர்களைப் புறக்கணிப்பதும், அளவுக்குமீறி வழிபாடுசெய்வதும் (அவங்களுக்கு), மிகுந்த அதிருப்தியைத்தான் தருது. கொடிமரம் தாண்டினாலே, கீழே விழுந்து கும்பிடக்கூடாது என்பது விதி. கோவிலில் யாரையும் தரையில்விழுந்து வணங்கக்கூடாது (அது யாராக இருந்தாலும்). இறைவன் ஒருவந்தான் அங்கு அரசன். இதெல்லாம் யாருக்குத் தெரிகிறது?.
வாங்க நெ.த. பாதி பதில் சொல்கையிலெயே மின்சாரம் போய் விட்டது! இப்போக் கொஞ்ச நாட்களாக அடிக்கடி மின் வெட்டு வருது! :(
Deleteநாம என்ன வருத்தப்பட்டு என்ன செய்யறது? எல்லாக் கோயில்களிலும் அறங்காவலர்கள்/அறமின்றிச் செய்யும் செயல்களே முக்கியத்துவம் பெறுகிறது! கோயிலில் தனி மனிதரை வணங்கக் கூடாது என்பது நம்போன்றவர்களுக்கு என்றால் இறைப்பணியில் இறைவனை வழிபாடு செய்யும் பணியில் ஈடுபட்டோர் கோயில்களிலே யாரையுமே வணங்கக் கூடாது என்பது முக்கியமான ஒன்று. இறைவனைத் தவிர மற்றவர்களை அவர்கள் எவ்வளவு பெரியவராக இருந்தாலும் வணங்கக் கூடாது என்பார்கள்! ஆனால் இங்கே! :(
கீசா மேடம்... எனக்குத் தெரிந்ததை clarify செய்துகொள்வதற்காக கேட்கிறேன். பரமாச்சார்யார் (உதாரணத்துக்கு), காஞ்சி காமாட்சியம்மன் ஆலயத்தில் இருக்கும்போதும், அங்கு அவரை விழுந்து வணங்கக்கூடாது என்றுதான் நினைக்கிறேன். சரியா?
Deleteசரிதான். இறைவனுக்கே கொடி மரத்தின் எதிரில்தான் வணங்க வேண்டும்.
Deleteநெ.த. சரிதான்! எந்தக் கோயிலாக இருந்தாலும் விழுந்து வணங்க முடியாது. அவங்களே தடுப்பாங்க. உதாரணத்துக்கு இரு வருடங்கள் முன்னர் சிதம்பரம் சென்ற போது அங்குள்ள பாண்டிய நாயகர் கோயிலுக்கு (சுப்ரமணியர் சந்நிதி, சிவகாமசுந்தரி கோயிலுக்கு முன்னால் வரும்) திருப்பணி வேலைகளை மேற்பார்வையிட ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் வந்திருந்தார். நாங்கள் அங்கேயே தான் இருந்தோம். ஆனாலும் விழுந்து வணங்கக் கூடாது என்று சொன்னார்கள்.
Delete@வாசுதேவன் திருமூர்த்தி, நன்றி தம்பி.
Deleteதுயரமான அனுபவத்தைப் படிக்க முடிந்தது
ReplyDeleteநன்றி காசிராஜலிங்கம்.
Deleteகோயிலில் என்றில்லை எங்குமே இறைவனின் முன் எல்லோரும் சமம் தானே! பெரியவர் சின்னவர் என்பதெல்லாம் நாம் தானே உருவாக்கிக் கொள்கிறோம். மரியாதை என்பது வேறு...குழைந்து கும்பிடு போடுவது என்பது வேறு இல்லையா? அது கோயிலின் வெளியே ஆனாலும் சரி....மனிதர்கள் எல்லோருக்கும் தலைவன் அந்த இறைவன் ஒருவன் தானே!!! கோயில்களில் இப்படி நடப்பது எல்லாம் வேதனை தரும் விஷயங்கள்.
ReplyDeleteகீதா: கீதாக்கா தமிழ்நாட்டில் அறங்காவலர்கள் அறம் காப்பவர்களாக இருக்காங்களா என்ன? இங்கு நீங்க சொல்லியிருக்கறதும் சரி....அப்புறம் கோயிலில் எல்லாம் எழுதிப் போட்டிருப்பாங்களே இன்னார் இவ்வளவு கொடுத்தார்கள் என்று அதிகத் தொகையிலிருந்து ஓரளவு சிறு தொகை வரை.....அதுவும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அப்படிக் கொடுப்பது கணக்கில் வர வேண்டும் என்பதை ஒத்துக் கொள்கிறேன்.....வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூடத் தெரியக் கூடாது என்பார் காஞ்சி மகாபெரியவர் (பரமாச்சாரியார்)...... பெருமாளுக்கு நாமம் சாற்றியவர் இன்னார் என்று எழுதிப் போடுவது....(பெருமாளுக்குப் போடுறேன் என்று மக்களுக்குப் போடாமல் இருந்தால் சரி ஹா ஹா ஹா) இதெல்லாம் என்னவோ எனக்குத் தற்பெருமை போலப்படும்....அது போலத்தான் இந்தமாதிரி மரியாதை என்று கூழைக் கும்பிடு போடுவது....
அது போல முதலாளி என்று சொன்னது....அப்புறம் சீட்டு தராமல் ம்ம்ம்ம் என்னவோ போங்கக்கா..
வாங்க துளசி! ஆனால் கேரளா, கர்நாடகாக் கோயில்களில் எல்லாம் இப்படி இல்லைனே நினைக்கிறேன். திருவனந்தபுரம் சென்றிருக்கையில் ஏழரைக்குள்ளாக தரிசனம் முடித்து வெளியே வரணும் என்றார்கள். நாங்க சிறப்பு தரிசனம் உண்டானு கேட்டதுக்கு எல்லோருக்குமே சிறப்பு தரிசனம் தான். நீங்க சுத்திக் கொண்டு கிழக்கு வாசல் வழியா வரவேண்டாம். இப்படியேப் பக்கவாட்டு வழியாக மேலே ஏறிடுங்கனு சொல்லிக் கோயில் ஊழியர்கள் எங்களை அனுப்பி வைத்தார்கள்! இதுவே தமிழ்நாடெனில்! :(
Deleteகீதா!எந்த அறங்காவலரும் எந்த அறத்தையும் காப்பது இல்லை. ஒரு ட்யூப் லைட் போட்டால் கூடப் பெயரைப் பொரித்துக் கொள்வார்கள் தமிழர்கள்! :( கடைசி வரை அர்ச்சனைச் சீட்டே கொடுக்கலை! :(
இதையெல்லாம் காணும்போது ஏந்தான் கோவிலுக்குப்போக வேண்டும் என்று தோன்றுகிறது
ReplyDelete