எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, March 13, 2018

அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள்!

அடுத்தடுத்து இள வயதினர் மரணம். மனதைக் கலங்க அடிக்கிறது. முதலில் இங்கே திருச்சியில் ஓர் கர்ப்பிணி இளம்பெண் மரணம். அடுத்துச் சென்னையில் மீனாக்ஷி கல்லூரி மாணவி கழுத்தை அறுத்துக் கொலை செய்யப் பட்டிருக்கிறாள். கணவன் தான் காரணம் என்கின்றனர். இன்னொரு பக்கம் அந்த இளைஞன் கணவனே இல்லை. பலவந்தமாகத் தாலி கட்டினான் என்கின்றனர். எது எப்படியோ ஓர் உயிர் போய் விட்டது.யார் காரணமாக இருந்தாலும் இம்மாதிரி இள வயது மரணங்களை ஏற்க முடியவில்லை. 

இதெல்லாம் விபத்து, கொலை என்று சொன்னாலும் இப்போது தேனி மாவட்டத்தில் குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத் தீயில் மாட்டிக் கொண்டவர்கள் பற்றியும் வித விதமாகச் செய்திகள் வருகின்றன. இதிலே ஒரு பக்கம் மாட்டிக் கொண்டவர்களை மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தக்க ஏற்பாடுகள் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகள்! இன்னொரு பக்கம் மலை ஏற்றம் செய்தவர்கள் அனுமதி இல்லாமல் சென்றார்கள் என்ற செய்தி! இன்னும் சிலர் அனுமதியுடன் தான் சென்றதாகவும் அங்கீகரிக்கப்பட்ட மலை ஏற்றக் குழுவினருடனேயே சென்றதாகவும் சொல்கின்றனர்.

இதற்கு நடுவே நம்ம தமிழ் சானல்கள் மீண்டு வந்தவர்களிடம் கேட்கும் கேள்விகள்! "இன்னும் சிறிது நேரம் முன்னால் வந்தால் உங்க நண்பரை/ சிநேகிதியைக் காப்பாற்றி இருக்கலாம் என நினைக்கிறீர்களா?" என்று கேட்கின்றன.  இவங்க மலை ஏறச் சென்றதே அந்த மாவட்டப் பொறுப்பாளர்களையும் வனச் சரக அலுவலர்களையும் தவிர யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எல்லோரும் என்ன தினசரியிலே விளம்பரங்கள் கொடுத்துவிட்டுச் சென்றார்களா என்ன? இத்தனைக்கும் அனுபவம் வாய்ந்த காட்டுவாசிகள் "காட்டுத் தீ" குறித்து எச்சரிக்கை செய்ததாகவும் சொல்கின்றனர். எல்லாவற்றையும் மீறிப் போனார்களா, தெரியாமல் போனார்களா என்பதெல்லாம் இப்போது தேவை இல்லை. ஆனால் மாட்டிக் கொண்டவர்கள் தகவல் தெரிவித்தாலும் அது சமவெளியில் இருப்பவர்களுக்கு வந்து சேர வேண்டாமா?

சில இடங்களில் தான் சில அலைபேசிகள் வேலை செய்யும். இத்தகைய அத்துவானக் காட்டில் தகவல், தொடர்புக்கு வசதி இருக்கிறதா என்பது கூடத் தெரியாமல் போய் மாட்டிக் கொண்டவர்களை உடனே மத்திய, மாநில அரசுகள் காப்பாற்ற முயற்சி எடுக்கவில்லை என்பது என்ன நியாயம்னு புரியலை! மலையோ செங்குத்தான மலை! என்னதான் ஹெலிகாப்டர் என்றாலும் மலையின் செங்குத்தான சிகரம் ஒன்றில் லேசாக இடித்தாலே போதும்! அங்கே விமானத்தை இறக்கவும் முடியாது!  இத்தனை கெடுபிடிகளிலும் நம் வீரர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அவர்களால் முடிந்தவரை காப்பாற்றி இருக்கின்றனர். அதைப் பாராட்ட வேண்டுமே அன்றிக் குற்றம் குறை சொல்வது சரி இல்லை.

ஊடகங்களுக்குத் தேவையான செய்தி, மத்திய அரசு தமிழர்களைக் காப்பாற்றுவதில் தாமதம் காட்டியது என்று சொல்வதே! ஆனால் காட்டுத் தீயின் புகை மட்டத்தில் மேலே ஹெலிகாப்டர்களில் இருப்பவர்களால் கீழே மலையில் மாட்டிக் கொண்டு தவிப்பவர்களைக் கண்டறிவது கடினம். அடர்ந்த காட்டில் செல்ஃபோன் டவர் கிடைக்கவும் வாய்ப்பில்லை. ஆகவே இருந்த வசதிகளை வைத்து நம் ராணுவ வீரர்கள் செங்குத்தான மலைச்சரிவுகளுக்கு இடையில் ஹெலிகாப்டருக்கும் சேதம் வராமல், மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். ஹெலிகாப்டர்களைச் செலுத்திய விமானிகளுக்கும், மீட்புப் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கும் நம் நன்றியை உரித்தாக்குவோம். 

34 comments:

 1. நாம் குறை சொல்வதில் குறியாய் இருக்கும் பொழுது நன்றி சொல்வது மறைந்து விடுகிறதே...

  அவரவர் நிலைப்பாட்டிலிருந்து உணர்ந்து பார்க்கவேண்டும்.
  இராணுவவீரர்களும் நம்மைப் போன்ற மனிதர்களே... இதை நம்மில் பலர் மறந்து விடுகின்றனர்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி! தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். நீங்க சொல்வது சரியே! ராணுவ வீரர்களும்மனிதர்கள் தான்!

   Delete
 2. அதிர்ச்சியைத் தருகின்ற நிகழ்வுகள். ஒவ்வொன்றும் ஒரு படிப்பினையைத் தருகிறது.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி ஐயா! தாமதத்துக்கு மன்னிக்கவும்.

   Delete
 3. ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு கதையைச் சொல்கிறது. அனுபவத்தைத் தருகிறது.

  குரங்கணி டிரெக்கிங்குக்கு வீட்டில் சொல்லாமலேயே சென்றுள்ளனர் சிலர். எல்லாவற்றிர்க்கும் அரசாங்கத்தையே எதிர்பார்க்கின்றனர், தாங்கள் தவறு செய்தபோதிலும். ம்.ம். உங்கள் 'உலக்கை நாயகன்', தமிழக அரசு விரைந்து செயல்புரிந்தது என்று சொல்லியிருக்கிறார்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா இதுக்கெல்லாம் காரணம் அந்த அணியின் தலைப்புத்தேன்:).. “குரங்கணி”:)..

   Delete
  2. நெ.த. "உலக்கை" சொன்னதெல்லாம் தெரியலை! யாரும் பகிரலை! என்றாலும் தேனி மாவட்ட ஆட்சியரும் அவரின் ஊழியர்களும் விரைந்து செயல்பட்டதாகவே சொல்கின்றனர். ஆர் எஸ் எஸ் குழுவினரும் மலை ஜாதி மக்களும் இணைந்து காயம் பட்டவர்களைக் கீழே கொண்டு வந்திருக்கின்றனர். இதைக் கேரளத் தொலைக்காட்சி சானல்களில் மட்டும் காட்டினார்கள். தமிழகத் தொலைக்காட்சிகளில் மத்திய, மாநில அரசைக் குற்றம் சொல்லும் போக்கே! :(

   Delete
  3. //ஹா ஹா ஹா இதுக்கெல்லாம் காரணம் அந்த அணியின் தலைப்புத்தேன்:).. “குரங்கணி”:).// அதிரடி, மலையோட பெயர் குரங்கணி! :))))))

   Delete
 4. நமது தமிழ் மீடியாவை தொடர்ந்து படித்தால், டிவி சேனல் செய்திகளைக் கேட்டுவந்தால் அவர்கள் யார் யாரிடம், எந்தெந்த இயக்கத்திடம் விலைபோயிருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். அவர்களது ரிப்போர்ட்டிங் லட்சணம் இப்படித்தான் இருக்கும். பெண்களுக்கெதிரான குற்றங்கள் ஏகத்துக்கும் உயர்ந்துவருகின்றன. மீடியாக்களுக்கோ ஒரே ஆனந்தம். அவர்களது டிஆர்பி எகிறுகிறதே , யார் இருந்தாலென்ன, செத்தாலென்ன? நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டே அடுத்த அதிர்ச்சிச் செய்திநோக்கிப் பாயவேண்டியதுதான்.
  எதிர்க்கட்சிகளுக்கு யார் எதனால் செத்தாலும் மத்திய அரசை ஒரு வாங்குவாங்கிவிட வேண்டியதுதான். பல்லைக்காட்டவும், கைதட்டவும் சராசரித் தமிழன் தயார்!

  சிலசமயங்களில், எல்லா அயோக்கியர்களும், பைத்தியக்காரர்களும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்களோ எனத் தோன்றுகிறது!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏகாந்தன், நீங்க சொல்வது சரியே! அதிலும் சிலர் ஹெலிகாப்டர்கள் அனுப்பியதே சரியில்லை என்றும் சொல்கின்றனர். சர்ஜிகல் ஸ்ட்ரைக்கிற்கு அனுப்பிய ஹெலிகாப்டர்களை முதலில் அனுப்பி அவற்றைக் கொண்டு உளவு பார்த்துப் பின்னர் எங்கே இருக்காங்கனு தெரிஞ்சதும் மீட்பு ஹெலிகாப்டர்களை அனுப்பி இருக்கணும். அப்போ மட்டும் நேரம் ஆகி விடாதா? நேரடியாக மீட்பு ஹெலிகாப்டர்களை அனுப்பிட்டு நிர்மலா சீதாராமன் உத்தரவு வரலைனு காத்திருந்ததாச் சொல்லிட்டு இருக்காங்க. நிர்மலா சீதாராமன் மோதியின் உத்தரவுக்குக் காத்திருந்தாராம். ராணுவத்தின் அந்தப் பகுதித் தலைமை அதிகாரி இவங்க உத்தரவுக்குக் காத்திருந்ததால் மீட்புப் படை போகக் காலம் தாமதம் ஆனதாம். அதனால் தான் இறப்பு விகிதம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்! :(

   Delete
 5. வருத்தம் தரும் நிகழ்வுகளே.... இதில் திருச்சி பெண் கர்ப்பிணி இல்லை என்று போஸ்ட்மார்ட்டத்தில் சொல்வதாக ட்வீட்கள்... அந்தப் பெண்ணின் இறப்பு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியதே!
  திருச்சி அண்ணா சிலையில் பீக் அவரில் ட்ராஃபிக் ஜாமாயிருக்கும். சில வருடங்களுக்கு முன் நானும் என் கணவரும் பைக்கில் அலுவலகத்துகு செல்வோம். ஒரு குறிப்பிட்ட ட்ராஃபிக் போலீஸ், நகர்ந்து கொண்டிருக்கும் பைக்கை பிடித்து இழுத்து நிறுத்துவார்; ஒரு தடவை நிலைதடுமாறி கீழே விழத் தெரிந்ததும் நடந்திருக்கிறது. அதிலிருந்து அவரைப் பார்த்தது ரோடின் அடுத்த ஓரத்திற்கு வண்டி போய் விடும்! :-))
  டிவி சானல்களுக்கு அடுத்த சானல் தராத செய்திகளை முந்தித் தர வேண்டிய கட்டாயத்தில் மனித நேயத்தை மறந்தே போகிறார்கள் :(

  ReplyDelete
  Replies
  1. அட!மிகிமா, நீண்ட நாட்கள் கழிச்சு வந்ததுக்கு நன்றி. திருச்சி பெண் பற்றிய செய்தி நான் கேள்விப் படலை! என்றாலும் இறந்திருக்க வேண்டாம். தொலைக்காட்சியின் செய்தி சானல்கள் பார்க்காமல் தவிர்ப்பதே நன்று.

   Delete
 6. இரண்டு வருடங்களாகவே தமிழகத்திற்கு நேரம் சரியில்லை! இப்போது சட்டம் ஒழுங்கும் சரியில்லை! வேதனையான விஷயம்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சுரேஷ், மீண்டும் வலை உலகா? நல்வரவு! கருத்திற்கு நன்றி.

   Delete
 7. நானும் அறிஞ்சேன் இச்செய்திகளை.. என்னத்தைச் சொல்வது.

  ///கணவன் தான் காரணம் என்கின்றனர்///
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஏன் கணவன் கொன்றால் ஒகேயாமா?.. என்ன பேசுகிறார்கள் இவர்கள்... இதனால்தான் பெண்களும் ஓவர் றியக்‌ஷன் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள்போலும்... இப்படி பெண்களும் சரிக்குச் சரி செய்ய வெளிக்கிட்டால் நாடு என்னத்துக்க்காகும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அதிரடி, அந்த இளைஞன் கணவனா இல்லையா என்பதே சந்தேகம்! என்னமோ போங்க! பெண்கள் வெளியில் தலைகாட்டவே முடியாமல் போகும் நிலை வருமோனு சந்தேகமா இருக்கு! :(

   Delete
 8. ///எல்லாவற்றையும் மீறிப் போனார்களா, தெரியாமல் போனார்களா என்பதெல்லாம் இப்போது தேவை இல்லை. ///

  இந்த விசயத்தில் குற்றம் சொல்வது ஈசி.. ஆனா தெரிந்துகொண்டு ஆரும் குழ்ந்தைகளை எல்லாம் கூட்டிப் போயிருக்க மாட்டினம்.... இது விதி என்றே சொல்லோணும்.. சிலசமயம் நாம் எவ்வளாவு தான் ஜாக்கிரதையாக இருந்தாலும் ஏமாற்றப் பட்டுவிடுவோமெல்லோ.. அது போலத்தான்... மனதில் போட்டு அதிகம் அலட்டிக்கொள்ளாமல் விதியில் பாரத்தைப் போட்டு விட்டால் நம் இதயம் ஆவது சேஃப் ஆக இருக்கும்:)..

  ReplyDelete
  Replies
  1. நல்லவேளை அதிரடி, குழந்தைகள் இருந்ததாகத் தெரியலை! ஆனால் எல்லோருமே இள வயதினர். இறந்தவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். :( அதிலிருந்து மீண்டு வர வேண்டும்.

   Delete
  2. இல்ல கீசாக்கா.. ஒரு தாய் தன் இரு மகள்களுடன் போயிருக்கிறா.. ஸ்கூல் லீவாமே அதனால பிள்ளைகளையும் அழைச்சுப் போயிருக்கிறா 9,10 வயசு இருக்கும்போல இருக்கு படத்தில் பார்க்க.

   தந்தை லண்டனிலாம். ஆனா கடவுள் புண்ணியத்தில் குழந்தைகள் சிறுகாயமாம்.. தாய் கொஞ்சம் காயமாம் .. தப்பி விட்டார்களாம்.

   Delete
  3. அதிரடி, அட, அதிரா எம்பிபிஎஸ், எம்.ஆர்.சி. கன்சல்டன்ட், (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) இந்தச் செய்தி எனக்குப் புதுசு! :)

   Delete
 9. சில அதிகாரிகள், மீட்பு குழுவினர்களும், மலைவாசிகளும்தான் இதில் பாராட்டப்படவேண்டியவங்க. அரசியல்வாதிகள் ஒரு துரும்புகூட கிள்ளி போடலை

  ReplyDelete
  Replies
  1. அரசியல்வாதிகளால் எதுவும் செய்ய முடியாது! செய்யவும் தெரியாதே! காப்பாற்றப் பாடுபட்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.

   Delete
 10. ஒரு பிரபல தொலைக்காட்சியில் நேர்காணல் செய்பவரைப் பற்றி சமீபத்தில் ஒரு செய்தி வந்தது. அதில் அவர் வள்ளல் தெரிந்தது. தினசரி தமிழ் செய்தித் சேனல்களில் (ஆங்கிலச் சேனல்கள் பார்த்துப் போட்டுக்கொண்ட சூடு) விவாத மேடை என்கிற பெயரில் நடக்கும் கூத்துகளை பார்த்து உணர்ச்சி வசப்படுவோர் அதிகம். அவர்கள் காசுக்குக் கூவுகிறார்கள். நியாயங்கள் பேசுபவர்கள் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், எந்தத் தொலைக்காட்சி, யாரு அவர்? நான் இந்த விவாத மேடைகளைப் பார்ப்பதே இல்லை. நான் இருக்கும்போது ரங்க்ஸ் வைச்சால் கூட மாத்தச் சொல்லிடுவேன்.

   Delete
 11. சிந்திக்கவைக்கும் சிறப்புப் பதிவு

  ReplyDelete
  Replies
  1. நன்றி காசிராஜலிங்கம்!

   Delete
 12. நாம செய்ற எதுவும் அடுத்தவங்களைப் பாதிக்காம இருக்கோணும்...

  அது ரொம்பப் பேருக்குத் தெரிவதே இல்லை...

  பொழுதுக்கும் இந்த ஊடகங்களால் நமது வீட்டுக்குள் அவலமான ஓலங்கள்...

  நிம்மதியாக நேரத்தைக் கழிக்க விடமாட்டேன் என்கிறார்கள்...

  ரொம்ப வருடங்களுக்கு முன்னால் - மனிதன் காட்டுமிராண்டியாக இருந்தபோது -
  சதக்.. சதக்.. என்று குத்தினான்.. - என்ற செய்தியை கறுப்பு வெள்ளைப் படத்துடன் பார்க்கும் போதே அடிவயிறு கலங்கும்...

  இப்போது நாகரிகம் மேம்பட்டுவிட்டதால் -
  நட்சத்திர விலாஸ் ஆசிரமங்களுக்குள் நடக்கும் கேளிக்கைகள்
  சாலையில் கல்லூரி வாசலில் நடக்கும் அடிதடி ரத்தக் களறிகள்
  துக்கம் நிகழ்ந்த வீடுகளின் அழுகை ஓலங்கள் -

  இதையெல்லாம் ஓயாமல் ஒளிபரப்பி நம்மை - நம் மனநிலையைக் கெடுக்கின்றார்கள்..

  ஒளிவழி ஊடகங்களின் இணைப்புக் கம்பிகளைப் பிடுங்கி எறியும் நாளே பொன்னாள்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை சார், முன்னெல்லாம் வீட்டில் அவலமான சொற்களைப் பேசக் கூடாது என்பார்கள். வீட்டின் நான்கு மூலைகளையும் திக் தேவதைகள் காவல் காப்பதாகவும், அவங்க எப்போவும் "ததாஸ்து" என்றே சொல்லுவதாகவும் சொல்வார்கள். ததாஸ்து என்றால் அப்படியே ஆகட்டும் என்று பொருள். ஆகவே நாம் பேசும் சொற்கள் தீயனவாக இல்லாமல் நன்மையைத் தருவனவாக இருக்கணும்னு சொல்வாங்க! இல்லைனா தேவதைகள் தீயனவற்றைப் பேசுகையில் ததாஸ்து சொல்லிட்டால் குடும்பத்துக்கு ஆகாது என்பார்கள்! இப்போ எங்கே போய்ச் சொல்றது. விளக்கு வைச்சதுமே அழுகை, ஒப்பாரி, சாபம்!

   Delete
 13. ஒரு வாரமா செய்திகளை பார்த்தும் பாராமல் ஓடிடறேன் அத்தனை வேதனையான சம்பவங்கள் :(
  ஆனால் ஒரு புள்ளியை வைத்து இந்த ஊடகங்கள் போடும் கோலங்கள் ..எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் இப்படியும் நடக்குமா :(என வேதனைப்படுத்துகிறது .எல்லாம் அனுமானங்கள் அங்கே இருந்தவங்களுக்கே உண்மை தெரியும் .இப்போ பேசி பயனில்லை ஆளாளுக்கு கற்பனை குதிரையை நாற்திசையிலும் தட்டிவிடுகிறார்கள் என்ன சொல்ல :(
  தக்க நேரத்தில் உடனடியா விரைந்து செய்யப்பட்ட இராணுவ வீரர்களுக்கும் அந்த காட்டின் பழங்குடியினருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சல், அங்கே இருந்தவங்களையும் இந்த ஊடகக்காரங்க தங்கள் பேச்சினால் அரசுக்கு எதிராகப் பேசும்படி செய்கின்றனர். அதான்! :( ஒரு பேரிடர் காலத்தில் எப்படிச் செயல்படணும் என்பதே தெரியாமல் இருக்கிறோம்.

   Delete
 14. எல்லாமே மனதிற்கு வேதனை அளித்த சம்பவங்கள்.
  சமீப காலமாக காதல் தோல்வி என்றால் சம்பந்தப்பட்ட பெண்ணை கொலை செய்வது என்னும் செயல் அதிகரித்து வருவதற்கு என்ன காரணம்? கல்லூரியில் நுழையும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் காதல் என்பதைப் பற்றியும், இனக் கவர்ச்சி பற்றியும் கவுன்சிலிங்கிற்கு கல்லூரிகள் ஏற்பாடு செய்தல் நன்றாக இருக்குமோ?

  ReplyDelete
  Replies
  1. // சமீப காலமாக காதல் தோல்வி என்றால் சம்பந்தப்பட்ட பெண்ணை கொலை செய்வது என்னும் செயல் அதிகரித்து வருவதற்கு என்ன காரணம்? கல்லூரியில் நுழையும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் காதல் என்பதைப் பற்றியும், இனக் கவர்ச்சி பற்றியும் கவுன்சிலிங்கிற்கு கல்லூரிகள் ஏற்பாடு செய்தல் நன்றாக இருக்குமோ?//

   பானு அக்கா... கர்நாடகாவில் மாஜி எம் பி மற்றும் ஐ பி எஸ் அதிகாரி பேசியிருப்பதை பாருங்கள்...

   http://www.dinamalar.com/news_detail.asp?id=1980109

   Delete
  2. வாங்க பானுமதி, கவுன்சலிங் மட்டும் கொடுத்தால் போதாது. முக்கியமாத் திரைப்படங்களில் ஏழைக் கதாநாயகன் பணக்கார மெத்தப்படித்த பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலிக்கும் காட்சிகளை மாற்ற வேண்டும். :(

   Delete
  3. ஶ்ரீராம், அவர் காங்கிரஸ்காரர் ஆச்சே, என்ன வேணா சொல்லலாம். யாரும் ஆட்சேபிக்க மாட்டாரக்ள். :))))

   Delete