இதைப் போன மாசமே ஶ்ரீராமுக்கு அனுப்பி இருக்கணும். அவரும் மார்ச் மாதம் வெளியிடுவதாய்ச் சொன்னார். ஆனால் அடுத்தடுத்து ஏதேதோ பிரச்னைகள்! கவலைகள்! இதை மறந்தே விட்டேன். ஶ்ரீராமும் அப்பாடா!னு நிம்மதிப் பெருமூச்சு விட்டது இங்கே வந்து கேட்டது. பின்னே? வரிசையில் இருக்கிறதையே போட முடியலையாம்! இதிலே நான் வேறே அனுப்பினால் ஶ்ரீராமுக்கு என்ன பண்ணறதுனு கவலையா இருக்காதா?
கீழே செய்முறைகள் கொடுத்திருக்கேன். யாரும் உதவிக்கு இல்லை. தி/கீதா எப்படியோ எல்லோரையும் செய்யச் சொல்லி வேலை வாங்கிடறாங்க. நமக்கு வேலை வாங்கற சமத்து எல்லாம் இல்லை. ஆகவே நானே செய்தது தான் எல்லாமும்!
அடைக்குத் தேவையான சாமான்கள்: பச்சரிசி அரைக்கிண்ணம், புழுங்கலரிசி ஒன்றரைக்கிண்ணம். பலரும் பச்சரிசியிலேயே அடை செய்யறாங்க. ஆனால் நான் புழுங்கலரிசி சேர்ப்பேன். ஏகாதசின்னா அன்னிக்குப் பச்சரிசி அடை!
துவரம்பருப்பு ஒரு கிண்ணம், கடலைப்பருப்பு அரைக்கிண்ணம், உளுத்தம்பருப்பு ஒரு கரண்டி, கறுப்பு உளுந்து இருந்தால் தோலோடு போடவும்.
மி.வத்தல் நான்கு, பச்சை மிளகாய் இரண்டு, உப்பு, பெருங்காயம்
புழுங்கலரிசி ஒன்றரைக்கிண்ணம்+பச்சரிசி அரைக்கிண்ணம் களைந்து ஊற வைச்சாச்சு!
துவரம்பருப்பு ஒரு கிண்ணம் (துவரம்பருப்பு கூடப் போட்டால் அடை மொறுமொறுப்பாக வரும்) கடலைப்பருப்பு அரைக்கிண்ணம்+உளுத்தம்பருப்பு ஒரு கரண்டி. கறுப்பு உளுத்தம்பருப்பு தோல் நீக்காதது எனில் ருசி அதிகம்.
மிக்சி ஜாரில் பச்சை மிளகாய் இரண்டும் நான்கு சிவப்பு மிளகாய் வற்றலும் உப்பு, பெருங்காயம் சேர்த்து முதலில் ஒரு ஓட்டு ஓட்டிக்கணும். பின்னர் அரிசியைப் போட்டு அரைக்கணும். ஜலம் அதிகம் விடக் கூடாது. நிதானமாக ஜலம் விட்டால் போதும்.
புழுங்கலரிசி+பச்சரிசிக் கலவை அரைத்த பின்னர்
அதில் பருப்புச் சேர்த்தாச்சு. பருப்புச் சேர்த்து அரைத்த கலவை கீழே!
கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்திருக்கேன்.
இளங்கொட்டை கிடைக்காததால் பச்சைப் பறங்கிக்காய் வாங்கினோம்.
பொடிப்பொடியாக நறுக்கி மாவில் சேர்க்கணும்.
தோசைக்கல்லில் வேகும் அடை!
திருப்பிப் போட்டு வேகும் அடை! சூடான பறங்கிக்கொட்டை அடை தயார். சாப்பிடலாம் வாங்க!
எப்படிச் சொல்லணும்? கிர்ர்ர்ர்ர்ர்ர்..... பதிவு அனுப்புங்கன்னு கேட்டுகிட்டு இருக்கேன்.. நிம்மதி பெருமூச்சு விடறேனாம்..... கிர்ர்ர்ர்ர்.....
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், அடைனு தெரிஞ்சதும் முதல் வருகை! ஹிஹிஹி!
Deleteபச்சரிசியும், பு. அரிசியும் சமமாக இருக்க வேண்டாமோ!
ReplyDeleteவேண்டாம் ஶ்ரீராம், வெறும் புழுங்கலரிசி மட்டுமே கூடப் போதும். ஆனால் அரைப் புழுக்கலாக இருந்தால் நல்லா இருக்கும். இங்கே அரைப்புழுக்கல் கிடைப்பதில்லை என்பதால் பச்சரிசி கொஞ்சம்!
Deleteஅடை பார்க்க ஆவலாய் இருக்கிறது. நல்ல பதமாக வந்திருக்கிறது. பரங்கி வெந்து விடுமா, கொஞ்சம் அரை வேக்காட்டில் வாயில் கிடைக்குமா?
ReplyDeleteநன்றாய் வேகும். அரை வேக்காட்டிலும் வாயில் கிடைக்கும். நன்றாகவே இருக்கும். நாங்க வாழைப்பூ, முருங்கைக்கீரை, மற்றக்கீரை வகைகள், முட்டைக்கோஸ், வெங்காயம் போன்றவற்றில் கூட அடை செய்வோம். வெந்தயக் கீரையில் செய்தால் ரொம்பவே வாசனையாக நன்றாக இருக்கும்.
Deleteஅடை ரொம்ப நல்லா இருக்கு. நான் பெருங்காயம், சிவப்பு மிளகாயை அரிசியோடு ஊறவைப்பேன்.கருவேப்பிலையை பருப்புகளோடு. பெருங்காயத்தை நேரடியாமிக்சில அரைச்சா சைடுல ஒட்டிக்கும்.
ReplyDeleteபடத்தோடு திங்கக்கிழமைக்குப் போட்டியா நல்லா களை கட்டுது.
வாங்க நெ.த. பெருங்காயம் இங்கே இளகிய பதத்திலேயே கிடைப்பதால் ஒண்ணும் பிரச்னை இல்லை. ரசித்தமைக்கு நன்றி.
Deleteபாட்டுக்கு பாட்டு போட்டி போல் திங்க ற் கிழமை போட்டி சூப்பர்.
ReplyDeleteஅடை செய்முறை படங்களுடன் நன்றாக இருக்கிறது.
வாங்க கோமதி அரசு. ரசித்ததுக்கு நன்றி.
Deleteஅட அடை அசத்தலாக இருக்கே...
ReplyDeleteகில்லர்ஜி, சாப்பிடவும் அசத்தல் தான்!
Delete>>> யாரும் உதவிக்கு இல்லை... ( கூப்பிட்டிருந்தா ஓடி வந்துருப்பேன்!..)
ReplyDeleteதி/கீதா எப்படியோ எல்லோரையும் செய்யச் சொல்லி வேலை வாங்கிடறாங்க...
நமக்கு வேலை வாங்கற சமத்து எல்லாம் இல்லை... ( பூனைக்குட்டி வெளியே வந்துடுத்துங்கோ!..)
ஆகவே நானே செய்தது தான் எல்லாமும்!..<<<
இப்படியாக - மண்டபத்தில் யாரும் சொல்லித் தராமல் செய்தது!...
>>> சூடான பறங்கிக்கொட்டை அடை தயார். சாப்பிடலாம் வாங்க!.. <<<
ஆகா.. இதோ வந்துட்டேன்!...
ஆஹா! மண்டபமே இல்லையே! அப்புறமா யாரு சொல்லித் தருவாங்களாம்? :)
Deleteவாங்க, வாங்க அடை சாப்பிடுங்க!
தங்களது பயணமெல்லாம் இனிதே நிகழ்ந்திருக்கும்...
ReplyDeleteவேணும் சுபம்...
ம்ம்ம்ம் 19 ஆம் தேதியன்று தான் அஹமதாபாத் பயணம்!
Deleteதி/கீதா எப்படியோ எல்லோரையும் செய்யச் சொல்லி வேலை வாங்கிடறாங்க. நமக்கு வேலை வாங்கற சமத்து எல்லாம் இல்லை. ஆகவே நானே செய்தது தான் எல்லாமும்! //
ReplyDeleteஹா ஹா ஹா ஹா ஹா ஹா...சிரிச்சுட்டேன்....உங்க க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....அக்கா அது எபி கிச்சன்றதுனால எல்லா வாலுங்களையுமே சமாளிக்கணுமே!! எல்லாம் ஒரே லூட்டி தெரியுமோ?!!! அதுக்காக....வீட்டுல மீ தேன்...ஆல் வேலை......ஹிஹிஹிஹி....
கீதா
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எபி கிச்சன்னாக் கூட எனக்குச் சமாளிக்கவோ வாலுங்களை மேய்க்கவோ சமத்துப் போதாது தான்! :)
Deleteஅக்கா அடுத்த வாட்டி சொல்லுங்க நான் வந்துடுவேன் உங்க உதவிக்கு...!!!
ReplyDeleteகீதா
வாங்க தி.கீதா, சொல்றேன், சொல்றேன்.
Deleteமீ டூ.....புழுங்கரிசி....அண்ட் கருப்பு உளுந்துதான் தோலோடு....நான் து ப கொஞ்சம் கூடுதலாகப் பொடுவேன் மொறு மொறுப்பிற்கு...
ReplyDeleteநான் துருவிப் போட்டுருவேன் அக்கா கொட்டையை...இல்லை காயை..இப்படி வெள்ளைப் பூஷணியிலும் செய்யலாம் ஆனால் அடை அரைக்கும் போது தண்ணீர் குறைவா சேர்க்கனும்...பூஷணி தண்ணீர் விட்டுக் கொள்ளுமில்லைஅய அதனால..
பச்சரிசி சேர்க்கறதில்லை...உங்கள் அளவும் குறித்துக் கொண்டாச்சு...சூப்பர் ரெசிப்பி செய்முறை...படம் எல்லாம்!!!
கீதா
வாங்க கீதா, பச்சரிசி நானும் சேர்க்காமல் தான் பண்ணிட்டு இருந்தேன். அரைப்பதும் கையாலேயே அரைப்பேன். இப்போல்லாம் பச்சரிசி கொஞ்சம் போல் சேர்க்கிறேன். பூஷணிக்காயில் (வெள்ளைப் பூஷணி) செய்வதில்லை. துருவியும் போடுவதில்லை. நறுக்கியே சேர்ப்பேன். கொஞ்சம் பொடியாக நறுக்கிடுவேன்.
Deleteநான் பண்ணுவதுண்டு. இளசாக காய் இல்லாவிட்டால் பறங்கிக்காயைத் துருவிச் சேர்த்து விடுவேன். நல்ல குறிப்பு. அன்புடன்
ReplyDeleteவாங்க காமாட்சி அம்மா, நீண்ட நாட்கள் கழித்து என்னோட வலைப்பதிவுக்கு வருகை தந்து கருத்துச் சொன்னதுக்கு நன்றி. உடல் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். முடிஞ்சப்போ வாங்க!
Deleteபரங்கிக்கொட்டை அடை கேள்விப்பட்டதில்லை! படங்களில் பார்க்கும் போதே நாவில் நீர் ஊறுகிறது! அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteபறங்கிப் பிஞ்சிலே தான் நல்லா இருக்கும் சுரேஷ். சென்னை சுற்று வட்டாரங்களில் மஞ்சள்பறங்கிப் பழம் தான் கிடைக்கிறது. அதில் அவ்வளவு நல்லா இருக்காது.
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சுற்றுலாப் போவதாயின் பேசாமல் போயிட்டு வரோணும்:) .. வீட்டில் இருக்கும்போதே கொமெண்ட்ஸ்க்குப் பதில் போட நேரம் கிடைக்காது கீசாக்காவுக்கு:).. இதில பயணம் வெளிக்கிட்டுப்போட்டு போஸ்ட் வேறு கர்ர்ர்ர்:))
ReplyDeleteஅடை நல்லாத்தான் இருக்கு.. ஆனா இப்படித்தானே நெல்லைத்தமிழனும் போட்டார் அடை ரெசிப்பி எங்கள்புளொக்கில்.
வீண் வம்பை விலைக்கு வாங்கறீங்களே அதிரா? இப்போ கீசா மேடம் பொய்ங்கி வருவாங்க.
Deleteஅதிரடி, இது சுற்றுலாவெல்லாம் இல்லை. கமென்ட்ஸுக்கு பதில் போடறதுக்கு மத்தியானம் நேரம் ஒதுக்குவேன். அது இப்போல்லாம் மின்வெட்டினால் தாமதம் ஆகிறது. மற்றப்படி பொய்ங்கவெல்லாம் இல்லையாக்கும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெ.த. போட்டது வெறும் அடையா இருக்கும். இது பறங்கிக்காயைச் சேர்த்துச் செய்தது. :)
Deleteநெ.த. இந்த வம்பு தானே வேணாங்கறது! :)
Deleteஆஹா !!! நல்லா இருக்கே ..துருவி சேர்த்தாலும் நல்லா வருமாக்கா ?
ReplyDeleteஇங்கே பரங்கிக்காய் பெரிய்ய சைசில் பங்களாதேஷ் கடைக்காரர் விற்பார் வாங்கிட்டு வரணும்
எனக்கு பூசணிக்கும் பரங்கிக்கும் ரொம்ப நாள் வித்யாசம் தெரியாதது :) கலர் பாத்துதான் வாங்கணும் .
ஏஞ்சலின்.... எனக்கு ஒரு காலத்தில் மெலனுக்கும் வெள்ளைப் பூசணிக்கும் வித்தியாசம் தெரியாமலிருந்தது. பூசணிக்கும் பறங்கிக்கும் வித்தியாசம் எப்படித் தெரியாமல் போகும்?
Deleteகர்ர்ர் :) நெல்லைத்தமிழன் ..அது பெயர் குழப்பம் .. சீனி சர்க்கரை வெல்லம் ,சேம்பு சேனை சேப்பம் வரமிளகாய் மோர்மிளகாய் வற்றல்மிளகாய் இதெல்லாம் அப்பப்போ குழப்பிடும் முந்தி . மினுக்குவத்தல் மிதுக்கு வற்றல் சுக்கங்காய் வற்றல் எல்லாம் ஒண்ணுதான் ஆனா பேரு இப்படி வேற இருந்தா அப்பாவிங்களுக்கு என்ன போன்ற படு அப்பாவிங்களுக்கு எவ்ளோ கஷ்டம் .
Deleteநூல்கோலையும் முள்ளங்கியையும் ஒருத்தர் பேர் மாற்றம் பண்ணி வச்சதெல்லாம் விட்டுட்டீங்க கர்ர்ர்ர்ர்
ஏஞ்சலின், துருவியும் சேர்க்கலாம். ஆனால் நீங்க சொல்லும் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பறங்கிப் பழத்தில் நல்லா இருக்காது. பச்சையா இருக்கணும். அல்லது சின்னக் கொட்டையாக இருக்கணும்.
Delete//நூல்கோலையும் முள்ளங்கியையும் ஒருத்தர் பேர் மாற்றம் பண்ணி வச்சதெல்லாம் விட்டுட்டீங்க கர்ர்ர்ர்ர்// அதானே! ஜிங் சக்க, ஜிங் சக்க, ஜிங் சக்க!
Delete/தி/கீதா எப்படியோ எல்லோரையும் செய்யச் சொல்லி வேலை வாங்கிடறாங்க. நமக்கு வேலை வாங்கற சமத்து எல்லாம் இல்லை. //
ReplyDeleteநோ worries :) இருங்க நான் சொல்லித்தரேன் :)
நீங்க கிச்சனில் இருந்து "ஏஞ்சல் அந்த கருவேப்பிலையை தோட்டத்தில் இருந்து பறிச்சிட்டு வாங்கன்னு என்கிட்டே சொல்லுங்க .நாநான்போய் செடிக்கு வலிக்காம இலைகொண்டுவருவேன்
அப்புறம் அதிரடி அதிரா ""போய் அந்த கல்லுரலில் ஒவ்வொரு ஊற வச்ச பருப்பையும் அரைச்சிட்டு வாங்கனு சொல்லணும்// கிரைண்டர்லாம் மிக்சிலாம் வேணாம் அதிராக்கு :)
அப்புறம் அதிரா கிட்ட விறகு அடுப்பை மூட்டி வெண்கலக்கல்லில் அடை வார்க்க சொல்லுங்க :) அவங்க அடை சுடும்போது நீங்க வெளில வந்துடனும் ..அடுப்பு சூடு உங்களுக்கு ஆகாது :)
அதிரா சுட்டதும் நாமெல்லாம் உக்கார்ந்து சாப்பிடலாம் :)
ஹிஹிஹிஹி, ஏஞ்சல், நல்ல யோசனையா இருக்கே! தோணவே இல்லை பாருங்க, மீ த அப்பாவி நம்பர் ஒன்!
Delete..கிரைண்டர்லாம் மிக்சிலாம் வேணாம் அதிராக்கு :)// ஆஹா, கல்லுரல் எல்லாம் வைச்சிருக்கேனே இன்னமும்! அதிரா அரைச்சுக் கொடுத்து விறகு அடுப்பிலே இரும்பு அடைக்கல்லில் (வெண்கலத்தில் கல் கிடையாது, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) வார்க்கச் சொல்லிடுவோம். நான் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா அப்படி வந்து ஒரு மேற்பார்வை பார்க்கிறேன். சுட்டு முடிச்சதும் எல்லாம் சாப்பிட வர மாட்டேன். எனக்கு சூடா வேணுமாக்கும். சுடச் சுட அதிரடி வார்த்துப் போடப் போடப் போடப் போட சாப்பிட்டுட்டே இருப்பேன். :) அட, நம்ம ரங்க்ஸுக்கும் சேர்த்துத் தான். :)
ஸ்ஸ்ஸ்ஸ் :) அது அது :) நானா சூட்டின பேர் வெண் + கலம் அதாவது வெள்ளை நிற கலம்
Deleteரத்னா ஸ்டோர்ஸில் தோசைக்கல்லு பார்க்கும்போது வெள்ளை கலரில் இருந்துச்சா அது கருப்புக்கல்லை விட ஹெவி அதான் நானே பேர் வச்சிக்கிட்டேன் வெண்கலம்னு ..
வெண்கலம்னா bronz னு ஹிஹி இப்போதான் நினைவே வருது
நீங்கள் பறங்கிக்கொட்டை அடை என்றதும் நான் பரங்கி விதை சேர்த்த அடை என்று நினைத்தேன். பச்சை பரங்கிக்காயை பறங்கிக்கொட்டை என்று சொல்கிறீர்கள் என்று புரிய கொஞ்சம் மரமண்டை தான். நாங்கள் இங்கே திருவனந்தபுரத்தில் சக்கைக்குறு (பலாக்கொட்டை) அடை செய்வோம். கொஞ்சம் அரிசியைக் குறைத்து ஊறவைத்த பலாக்கொட்டை தோல் நீக்கி அறிந்து சேர்த்து அரைத்து மாவில் கொஞ்சம் பெருங்காயம் ஜீரகம் சேர்த்து மெல்லிய தோசையாக முறுகலாக வார்த்து எடுத்தால் நன்றாக இருக்கும். தொட்டு கொள்ள வெல்லம் துருவி வைத்துக் கொள்ளலாம். அல்லது அவியல் செய்யலாம். இங்கே வடை பருப்பு என்றாகி பெயரில் கடலைப்பருப்பு போன்று ஒரு பருப்பு விலை குறைவாக கிடைக்கும். அது அங்கே பட்டாணிப்பருப்பு என்று சொல்வார்கள் என்று நினைக்கிறன். அந்த பருப்பு அடைக்கு நன்றாக இருக்கும்.
ReplyDelete