எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, March 06, 2018

ஏமாந்த சோணகிரி! :(

நேத்திக்கு சங்கடஹர சதுர்த்தி என்பதால் நம்ம நண்பருக்குக் கொழுக்கட்டை நிவேதனம் செய்துட்டு இருந்தேன். நம்ம ரங்க்ஸ் வெளியே சென்றிருந்தார். அப்போது முதல்லே இன்டர்நெட்டுக்குப் பணம் கட்டிய ரசீதை எடுத்துக் கொண்டு அந்தக் கம்பெனி ஊழியர் கொடுத்துவிட்டுச் சென்றார். பின்னர் எங்க குடியிருப்பு வளாகப் பாதுகாப்புக் காவலர் வந்து விட்டுப் போனார். இரண்டு பேருமே கதவுக்கு வெளியேயே நின்று கொண்டு கொடுத்தார்கள். பின்னர் வந்தது துணிகளை இஸ்திரி போட எடுக்க வரும் பெண்மணி. ஐந்தாண்டுகளாகப் பழக்கம் தான்!

ஆனால் அந்தப் பெண்மணி வந்துட்டுப் போனப்புறமா யாரும் வரலை. வீட்டினுள்ளே சோஃபாவில் வைச்சிருந்த செல்ஃபோன் காணாமல் போய்விட்டது. ரொம்ப நேரமா வாட்சப் ஒண்ணுமே வரலையேனு ஒரு பதினொன்றரை மணி போல ஃபோனைத் தேடியதில் கிடைக்கலை. ரங்க்ஸிடம் சொன்னால் அப்போப் பார்த்து ப்ளம்பர்&எலக்ட்ரீஷியன் வந்திருந்ததால் அதிலே பிசி! அவர் எடுத்துப் போகலைனும் சொல்லிட்டார். எல்லா இடங்களிலும் தேடிட்டு ரங்க்ஸ் வந்ததும் அவர் செல்ஃபோனில் இருந்து என்னோட ஃபோனின் எண்ணைப் போட்டுப் பார்த்தால் ஸ்விட்ச் ஆஃப்! என்ன செய்யறதுனு புரியாமக் குழப்பம்!

கீழே துணிகளை இஸ்திரி போடும் இடமெல்லாம் சென்று ஒருவேளை துணிகளுடன் வந்துவிட்டதோ எனத் தேடியாச்சு. அந்தப் பெண்மணியையும் கேட்டாச்சு! பின்னர் நண்பர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில் கூகிளில் டெலிபோனின் எண்ணைக் கொடுத்தும் எங்கே இருக்குனு தேடியாச்சு. அதற்கென உள்ள தனி நம்பருக்குத் தொலைபேசிச் சொல்லியாச்சு. முறையே பிஎஸ் என் எல், சாம்சங் போன்றோருக்கும் தகவல் சொல்லிட்டோம். பிஎஸ் என் எல்லில் அதே நம்பரைத் தருவதாகவும் உடனே வந்து வாங்கிச் செல்லும்படியும் சொன்னாங்க. அதோடு இன்னொரு நண்பர் போலீஸிலும் சொல்லச் சொல்லவே உடனடியாக இருவிண்ணப்பங்கள் எழுதிக் கொண்டு போனார்.

பிஎஸ் என் எல்லிடம் வேலை முடித்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் போனால் காலையிலிருந்து நடந்தது, அப்போ எதிர்வீட்டில் யார் இருந்தாங்க, சிசிடிவி காமிராவில் பதிவாகி இருப்பதுனு எல்லாமும் கேட்கிறாங்க. சிசிடிவி காமிரா கீழ்த் தளத்துக்கு மட்டும் தான். மேலும் ஃபோன் இருந்த இடம், அங்கிருந்து வெளியார் எடுத்துச் செல்ல முடியுமா? எவ்வளவு தூரம் என்றெல்லாம் கேட்டார்கள். நான் எவ்வளவு நேரம் உள்ளே இருந்தேன் என்பதை எல்லாமும் கேட்டிருக்கின்றனர்! என்னத்தைச் சொல்ல! போலீஸில் புகாரே கொடுக்க வேண்டாம்னு வந்துட்டார்.

ஒரு நல்ல விஷயம் என்னன்னா என்னோட செல்ஃபோன் கடவுச் சொல் போட்டால் தான் திறக்கும். ஆகவே அவங்களால் திறக்க முடியாது. மேலும் நாங்கள் மொபைல் வழியாக எவ்விதப் பணப் பரிவர்த்தனையும் செய்வதில்லை. சொல்லப் போனால் நான் யூ ட்யூப் பார்ப்பதோ அல்லது வீடியோக்கள் தரவிறக்கிப் பார்ப்பதோ, தொலைக்காட்சித் தொடர்கள், சினிமா போன்றவை பார்ப்பதோ இல்லை. விளையாட்டுக்களும் பார்ப்பது இல்லை. வாட்சப்பில் குடும்ப உறவினர்கள் உள்ள குழுக்கள், பெண், பையர், மற்றும் நண்பர்கள் இருப்பதால் வாட்சப் செய்திகள் 200,300க்கு மேல் வந்து கொண்டிருக்கும். அவற்றை அவ்வப்போது படித்துப் பார்த்து உரியனவற்றுக்கு பதில் சொல்லி உடனடியாக நீக்கிவிடுவேன். வேறே எதுவும் மொபைல் வழி பார்ப்பதில்லை. என்னோட ப்ளாகுக்கெல்லாமோ அல்லது மற்றவர்கள் பதிவுகளுக்கோ மொபைல் வழி போனதில்லை. அதெல்லாம் தெரியவும் தெரியாது.  (D)  டாட்டா கார்ட்  வைச்சுக்கலை. இணைய இணைப்பு வீட்டில் உள்ள வை ஃபை மூலமே!  ஆகவே ஃபோனை எடுத்தவங்க அதை விற்றுத் தான் ஆகவேண்டும். வேறே வழியே இல்லை.

என்ன ஒரு வருத்தம்னா குடும்பத்து உறுப்பினர்கள் படங்கள், முக்கியமாக எங்கள் பேத்தியின் அவ்வப்போதைய முன்னேற்றங்களைக் காட்டும் படங்கள், (நேத்திக்குக் கூட 4,5 வந்தது) அது பற்றிய வீடியோக்கள் இருந்தன.  அதான் நினைக்க நினைக்க வருத்தமாக இருக்கு. குழந்தை பிறந்ததில் இருந்து ஒன்றரை வருடமாக எடுத்த படங்கள்! :(  ஏதோ ஓர் ஆபத்தைத் தவிர்க்கவே பிள்ளையார் செல்ஃபோனைக் காணாமல் போக வைச்சுட்டாரோனு நினைக்கிறேன். என்னவோ! எடுத்தவங்க நல்லா இருக்கட்டும்! அவ்வளவு தான்! 

38 comments:

  1. கீதாம்மா நான் தொலஞ்சு போன என் செல்பேசியை ஒரு வருடம் கழிச்சி மீட்டேன், கிடைக்கும் பொறுமையா இருப்போம்

    ReplyDelete
    Replies
    1. பார்க்கலாம் செல்வமுரளி! கிடைச்சால் சரி!

      Delete
  2. >>> என்னவோ! எடுத்தவங்க நல்லா இருக்கட்டும்! அவ்வளவு தான்!.. <<<

    அந்த வகையில் மனதை தேற்றிக் கொள்ள வேண்டியது தான்..

    இருந்தாலும் பேத்தியின் படங்கள் இருந்தன என்பதால் மனம் வேதனைப்படும்...
    பேத்தியின் படங்களை அனுப்பிய செல்லிலிருந்து மீண்டும் பெறலாமே!...

    2005 ல் எனது நோக்கியா 6100 காணாமல் போனது..
    அதன்பின் மற்றொரு நோக்கியா கேமரா போனும் களவாடப்பட்டது..

    போலீசுக்குப் போனால் இன்னும் தொந்தரவு என்று போகவில்லை..
    அந்த சமயத்தில் போன் இருக்கும் இடம் அறிவதெல்லாம் தெரிந்திருக்கவில்லை..

    அவையெல்லாம் இன்னும் மனதிலிருந்து அகலவும் இல்லை...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை ஐயா! படங்கள் கிடைச்சுடும். பையர் மீண்டும் அனுப்புவதாய்ச் சொல்லி இருக்கார்! என்றாலும் மனம் இன்னமும் ஆறவில்லை!

      Delete
  3. //குழந்தை பிறந்ததில் இருந்து ஒன்றரை வருடமாக எடுத்த படங்கள்! :( ஏதோ ஓர் ஆபத்தைத் தவிர்க்கவே பிள்ளையார் செல்ஃபோனைக் காணாமல் போக வைச்சுட்டாரோனு நினைக்கிறேன். என்னவோ! எடுத்தவங்க நல்லா இருக்கட்டும்! அவ்வளவு தான்!//

    எனக்கும் திருகடையூர் ஒரு திருமணத்திற்கு போய் இருக்கும் போது போன் காணாமல் போய் விட்டது.
    கிடைக்கவே இல்லை, எடுத்தவர்கள் உடனே ஸ்விட்ச் ஆஃப்! செய்து விடுகிறார்கள்.

    பேத்தியின் படங்களை திரும்ப அனுப்ப சொல்லி பாருங்கள் ஆறுதலாக இருக்கும்.
    பிள்ளையார் கிடைக்க வைத்தால் மகிழ்ச்சிதான்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கோமதி அரசு, கிடைச்சால் நல்லது! :( ஹூம்! படங்களைத் திரும்ப அனுப்புவாங்க!

      Delete
  4. //
    ஒரு நல்ல விஷயம் என்னன்னா என்னோட செல்ஃபோன் கடவுச் சொல் போட்டால் தான் திறக்கும். ​//​
    கடவுச்சொல் இல்லாமல் உங்களுடைய செல்போனை உபயோகிக்க முடியும். அது செல்போன் ரிப்பேர் காரருக்குத் தெரியும். மீண்டும் உபயோகிக்கும் போது பழைய data கிடைக்காது.அது அடுத்தவனுக்கு அது தேவை இல்லை.

    IME நம்பர் மூலம் எந்த ஏரியாவில் ​செல்போன் ​உள்ளது என்று கண்டுபிடிக்கலாம்.

    வாட்சப் போட்டோக்களை புதிய போனில் பழைய எண்ணில் தரவிறக்கம் செய்ய முடியும். வாட்ஸப்பில் நிறைய வைரஸ் புகுந்து விட்டது. அதனால் இனி கூகிள் hangout உபயோகித்து பாருங்கள். video talk உண்டு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜேகே அண்ணா, நான் சொல்ல வந்தது உடனடியாகத் திறந்து பார்க்க முடியாது என்பதே! சிம் கார்டைப் பிடுங்கிப் போட்டுட்டாங்க என்றே அனைவரும் சொன்னார்கள். ஆகவே பழைய data கிடைக்காமல் போயிடுமே! மற்றபடி செல்ஃபோன் மெகானிக்கால் எப்படிப்பட்ட கடவுச்சொல்லையும் உடைக்க முடியும் என்பதைத் தான் எல்லா நெடுந்தொடர்களிலும் விலாவாரியாகக் காட்டிட்டு இருக்காங்களே!

      Delete
    2. இப்போக் கூட முயன்று பார்த்துட்டேன். cannot reach device என்றே வருது! அன்ட்ராய்ட்.காம் மூலம்மறுபடி முயன்றேன்.

      Delete
    3. "Quora" Forum ல் சில உபாயங்கள் சொல்லப்பட்டுள்ளது. படித்துப்பாருங்கள் - பாபு

      Delete
  5. எனக்கென்னவோ செல்போன் வெளியில் எங்கும் போக வழியில்லை என்றே தோன்றுகிறது. வீட்டுக்குள்ளேயே எங்கோ இருக்கிறது. கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வீட்டில் எங்கும் இல்லை. அவர் எடுத்தால் கூட என்னிடம் சொல்லிட்டுத் தான் இடத்தை மாற்றி வைப்பார்.

      Delete
  6. பொதுவா ஒரு பொருள் தொலையும்போது, அந்த கணம் மட்டும் நம் நினைவுக்கு சரியாக வராது. உங்களுக்கு என்றிருந்தால் அது உங்களை வந்து சேரும். சில சமயம் சம்பந்தமே இல்லாத இடத்தில் வைத்திருப்போம். கிடைத்தால், 'மறதி மன்னி' என்று ஒரு தலைப்பில் இடுகை வெளியிட்டுடுங்க.

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் மறக்கலை. நினைவா வாட்சப் செய்தி பார்த்துட்டு ஃபோனைக் கீழே வைத்தேன். வைக்கையில் சார்ஜ் இருக்கானும் பார்த்தேன். 75% வீதத்துக்கு மேல் இருந்தது. அப்புறமாச் சில நொடிகள் சமையலறைக்குச் சென்றேன். பின்னர் அழைப்பு மணி அடிச்சதும் இஸ்திரி போடும் பெண்மணி வந்தாள். அவள் கூடத்தில் நின்றிருக்க நான் உள்ளே அடுத்த அறையில் துணிகளை எடுக்க ஒரு செகன்ட் போனேன். திரும்பிட்டேன். அப்புறமா யாரும் வரலை! ரங்க்ஸ் தான் எலக்ட்ரீஷியனோடு வந்தார்!

      Delete
    2. எடுத்த எடுப்பிலேயே ஆரையும் சந்தேகப் பட்டிடவும் கூடாது. சில நேரம் நம் மனம் 100 வீதம் தெளிவா.. ஞாபக சக்தியா இருப்பதுபோலவே இருக்கும்.. ஆனா இடையில் ஏதும் செய்திருப்போம்.

      Delete
    3. Well Said Athira! we always think that we are perfect but we are not. Look at that Geetha sambasivam , she is mentioning the Ironing lady is " aval, ival". We say Irinkaaramma, pookaramaa !

      Delete
    4. அதிரா, சுமார் 3 வருடங்களாக செல்ஃபோனை சோஃபாவிலேயே தான் வைத்து இருந்திருக்கிறேன். மாற்றியதில்லை! :) அதோடு அழைப்பு வந்தால் கூட என் கணவர் எடுத்து வந்து என்னிடம் கொடுத்துடுவார். என்னைத் தவிர வேறு யாரும் அதைப் பயன்படுத்தியது இல்லை. யாரைச் சந்தேகப்படுவது? ஒண்ணும் புரியலை! இடையில் என்ன செய்தேன் எனில் கொழுக்கட்டையை வேக வைக்க வேண்டி சமையலறைக்குப் போனேன். மற்ற நேரமெல்லாம் கூடத்திலேயே இருந்திருக்கேன். அங்கே தான் சோஃபா! ஆகவே எனக்குத் தெரியாமல் செல்ஃபோன் இடம் மாற வாய்ப்பே இல்லை!

      Delete
    5. திரு ஜான்கென்னடி, நான் எப்போதுமே சரியாக இருக்கிறேன் என எங்கேயும் எப்போதும் எதுக்கும் சொன்னதில்லை என்பது இந்தப் பதிவின் மூலம் தெரிந்திருக்கும். இஸ்திரி போடும் பெண் என் மகளை விட வயதில் சிறியவள்! அதோடு இல்லாமல் அதிரா கூட இலங்கைத் தமிழ்ப் பேச்சு வழக்கில் பலமுறை "அவோ" என்னும் வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கார். இது பேச்சு வழக்கும் கூட என்பதால் இதில் கூடக் குற்றம் கண்டுபிடிக்கும் உங்கள் திறமைக்குத் தலை வணங்குகிறேன்.

      Delete
  7. சங்கட சதுர்த்தியில் சங்கடப் பட வைத்து விட்டாரே உங்கட நண்பர்:)..

    எனக்கும் ஃபோன் எங்கோ சார்ஜ் முடிஞ்சுபொய் சோபாவின் கீழே, கட்டிலின் கீழே எங்காவது இருக்கும் எனத்தான் மனம் சொல்லுது. அபடி ஆரும் எடுத்திருக்க வாய்ப்பில்லை உங்கள் எழுத்துக்களை வச்சுப் பார்க்க.

    நீங்கதான் நினைக்கிறீங்க சோபாவில் விட்டேன் என.. வேறு எங்காவது கிச்சினில் அப்படி ஏதும் வச்சிருப்பீங்க.

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, என் நண்பர் என்னை வேறு ஏதோ பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றி இருக்கார் என்றே நினைக்கிறேன். சோஃபான்னால் 50,000 போட்டு வாங்கிய பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் சோஃபா எல்லாம் இல்லை. மூங்கில் சோஃபா தான். சுலபமாக நகர்த்திட்டுத் தினம் பெருக்கித் துடைக்க வசதியாக அதைப் போட்டிருக்கோம். அதுக்குள்ளே போக வாய்ப்பே இல்லை. சமைக்கும்போது படம் எடுக்கணும்னாத் தான் அதை சமையலறைக்குக் கொண்டு போவேன். இல்லைனா சமையலறைக்கு செல்ஃபோன் வராது. அங்கே ஏதும் மறைவான இடங்களும் கிடையாது! பார்த்தால் புரியும்! :)

      Delete
  8. ஒரு தடவை என் ஹஸ் இன் போனைக் காணவில்லை.. வெளியே போய் வந்தவர் ஜக்கெட் பொக்கட்டில்தான் எப்பவும் ஃபோன் வைப்பார்.. ஜக்கெட்டை கழ்ட்டி ஹங் பண்ணும்போது பார்த்தால் ஃபோன் இல்லை. அப்போ வெளியே தானே விழுந்து விட்டது... என ஃபோன் பண்ணினாலும் எந்தப் பதிலும் இல்லை.. சவுண்ட் ஓஃப்:)..

    அப்போ துலைந்துவிட்டது என உறுதி செய்து பொலிஸ் இல் போய் சொல்லிப்போட்டு, நெட்வேர்க் ஆட்களுக்கும் சொல்லி.. லைன் எல்லாம் கான்சல் பண்ணியாச்சு.....

    அடுத்த நாள் ஜக்கெட்டில் ஏதோ தட்டுப்படுதே என பார்த்தால், ஜக்கெட் பொக்கட்டில் ஏதோ ஒரு சின்ன இடைவெளி.. அதனால் எப்படி உள்ளே போனதோ தெரியாது.. ஜக்கெட் கீழ்ப்பகுதியில் போய் ஒளிச்சிருக்கு.

    இங்கு விண்டர் ஜக்கெட்ஸ் எப்பவும் மொத்தமாகவும்.. டபிள் லைன்[லைனிங்]குடனும் இருக்கும் .

    பின்பு ஃபோனை யூஸ் பண்ண முடியவில்லை, அது ஏதோ கொம்பிளீட்டா டிஸ்கனெக்ட் பண்ணி உள்ளுக்குள் உடைத்ததுபோல செய்து விட்டார்களோ என்னமோ.. பின்பு புயுப்போன் தான் வாங்க வேண்டியதாப்போச்ச்ச்ச்:))

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, ஆமாம், அது என்னோட ஹான்ட் பாகில் போட்டுட்டுப் பலமுறை இந்தப்பக்கமா அந்தப்பக்கமா என ஒத்தையா இரட்டையா விளையாடி இருக்கேன். என்றாலும் கைப்பையின் எடையின் மூலம் செல்ஃபோன் உள்ளே இருக்குனு தெரியும்! :)

      Delete
  9. ஒரு வேளை கொழுக்கட்டை தின்று விட்டு உங்கள் நண்பர் உங்களை அலைக்கழிக்கிறாரோ என்னவோ

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி சார், என்னவோ!

      Delete
  10. மொபைல் கிடைக்கும்க்கா. வருந்தாதீங்க. இப்பலாம் பாஸ்வார்ட் உடைக்கும் ஆப்கள் வந்துடுச்சு

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜி, முதல்வருகைக்கும் ஆறுதலான வார்த்தைகளுக்கும் நன்றி.

      Delete
  11. ஒரு பொருள் தொலைந்தால் மிகவும் வருத்தம்தான். சாம்சங் போன் என்றால் மொபைல் டிராக்கர் வசதி இருக்கும் என்று நினைக்கிறேன். யாரவது புது சிம் போட்டால், நீங்கள் பதிவு செய்து வைத்துள்ள ஒரு மொபைல் நம்பருக்கு அந்த புது சிம்மின் நம்பர் எஸ்எ.ம்.எஸ் மூலம் வரும். அதன் மூலம் உங்கள் மொபைல்-ஐ மீட்கலாம்.

    நீங்கள் அவ்வாறு பதிவு செய்து வைத்து இருக்கிறீர்களா என்று நினைவுபடுத்தி பார்க்கவும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க க.வெ.மஹேஷ்! எந்த எண் என்று புரியலை! இருந்தாலும் பலரிடமும் சொல்லி வைச்சிருக்கோம். பார்க்கலாம்!

      Delete
    2. //எந்த எண் என்று புரியலை!//

      இந்த வலை தளத்தை (http://www.samsung.com/in/apps/mobile/findmymobile/) பார்க்கவும். ஒருவேளை உங்களுக்கு உதவிகரமாக இருக்கலாம்.

      என் வலை தளம்: http://onlinethinnai.blogspot.com

      Delete
  12. போன் போனது பிரச்சனை இல்லை ஆனால் அதில் நமது குடும்பத்தினர் புகைப்படங்கள் மாட்டிக் கொள்வதுதான் வேதனை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, நல்லவேளையா மொபைல் மூலம் பணப்பரிவர்த்தனை எல்லாம் வைச்சுக்கலை!

      Delete
  13. அடடா....

    இப்போதெல்லாம் இப்படி ஃபோன் திருட்டுப் போவது அதிகம் தான். தில்லி மெட்ரோவில் ஒவ்வொரு நாளும் பலரிடம் ஃபோன் திருடிவிடுகிறார்கள் - குறிப்பாக பெண் பயணிகளிடம் - அதற்கென்றே ஒரு பெரிய Gang இருக்கிறது - Gang-ல் இருப்பவர்கள் அனைவருமே பெண்கள்! :(

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் வாங்க வெங்கட், பலரும் சொல்வதைக் கேட்டிருக்கேன்! நமக்கே நடக்கும்போது கஷ்டம் அதிகமாத் தெரியுது! :)

      Delete
  14. அக்கா நிச்சயம் எந்த விதத்திலாவது காணாம போன போன் உங்களுக்கு கிடைக்கும் கைக்கு வந்து சேரும் ..தவறி யாரும் எடுத்திருந்தாலும் மனசு கேக்காம அதே இடத்தில வைக்கலாம் .ரிலாக்ஸ்டாக இருங்க .

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், மொபைல் இல்லாமல் மூன்று நாட்கள் ஓடி விட்டது! வானம் இடிந்தெல்லாம் விழலை! :))))) ஆகவே கொஞ்சம் கொஞ்சமாக மறக்க முயல்கிறேன்.

      Delete
  15. செல்போன் இழப்பால் மிக முக்கியமான பதிவுகளை நாம் இழக்க நேரிடுகிறது.

    ReplyDelete
  16. உங்கள் வருத்தம் புரிகிறது. எப்படித்தான் தொலைந்ததோ.
    புதிய ஃபோனைப் பத்ரமாகப் பார்த்துக் கொள்ளவும்.
    பழைய ஃபோனே கிடைத்தாலும் கிடைக்கலாம். பிள்ளையார் கொண்டு வந்து போட்டு விடுவார்.

    ReplyDelete