எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, March 16, 2018

தொடரும் மின்வெட்டு! :(

கடந்த ஒரு வாரமா மத்தியான நேரங்களில் கடுமையான மின்வெட்டு! :( தொடர்ந்து இருந்து வருகிறதால் மத்தியானம் கிடைக்கும் நேரத்தில் எதுவுமே செய்ய முடியாமல் பயனற்றுப் போகிறது. அப்போத் தான் புதுசாப் பதிவு எழுதிச் சேமிக்கவோ, ஷெட்யூல் பண்ணவோ முடியும்! பதிவுகளுக்கு வரும் கருத்துக்களுக்கு எதிர்வினை ஆற்ற முடியும். மற்றப் பதிவுகளுக்கோ முகநூலுக்கோ போய் மேய்ந்துவிட்டு வர முடியும்! காலை நேரம் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் அடிச்சுப் பிடிச்சுண்டு ஶ்ரீராமின் எ.பி.க்குப் போகவும் திரும்பி வரவும் சரியாப் போயிடும். இன்னிக்கு மத்தியானம் மின்வெட்டு உண்டா இல்லையா என்பது இப்போ வரைக்கும் சஸ்பென்ஸ்! ஒரு மணிக்கு மேல் தான் தெரியும்! எல்லா இடங்களிலும் இருக்கிறதாத் தெரியலை. இங்கே மட்டும் தான் இருக்குனு நினைக்கிறேன். ஏனெனில் யாருமே சொல்லலையே! அதே போல் மத்தியானம் இரண்டில் இருந்து மூன்றுக்குள் தினம் ஒரு அரைமணியாவது மழை! காய்ந்த வற்றல், வடாம்களை நனைத்து விட்டுத் துணிகளை ஈரமாக்கிட்டுப் போகிறது! வர வர வானமும் அடம் பிடிக்கும் குழந்தையாக ஆகிட்டு வருது!


என்னிக்காவது தான் இந்த மாதிரி ஒன்பது மணிக்கு உட்கார நேரம் அமையும். பல பதிவுகள் பாதியிலேயே ட்ராஃப்ட் மோடில் கிடக்கின்றன. ஆன்மிகப் பயணம் பக்கத்தில் எழுதி ஒரு மாசம் ஆச்சு. சாப்பிடலாம் வாங்க பதிவில் கீரையைப் பாதி நறுக்கி வைச்சுட்டு வந்தது. நெ.த. வந்து பார்த்து என்னனு கேட்கிறதுக்குள்ளே அங்கே மறுபடி ஆரம்பிக்கணும். இப்போ அவரோட ஹஸ்பன்ட் வந்திருக்கிறதாலே நம்ம பதிவிலே அவரால் கவனம் செலுத்த முடியாது என்பது ஓர் ஆறுதல். அடுத்த ஆறுதல் அடுத்த மாசம் அவர் ஊருக்குக் கிளம்பும் ஏற்பாடுகளில் மூழ்கி இருப்பார்! ஆகவே அதிகம் கவனிக்க மாட்டார்! அப்பாடா! அதுக்குள்ளே ஏதேனும் எழுதித் தேத்திடலாம். :)

சமீபத்து உ.பி., பிஹார் இடைத்தேர்தல்களில் பிஜேபி கட்சி தோத்துடுச்சாம். நம்ம ஆங்கில, தமிழ் ஊடகங்களுக்கு சந்தோஷம் தாங்கலை. காங்கிரஸோ, கம்யூனிஸ்டோ வர முடியலைங்கறதும், காங்கிரஸுக்கு டெபாசிட் கூடக் கிடைக்கலைங்கறதும் அந்த அந்தக் கட்சிக்காரங்களுக்குத் தான் மறந்துடுச்சுன்னா நம்ம மீடியாக்காரங்களும் மறந்துட்டாங்க! சமீபத்திய ஆர்.கே.புரம் (தமிழ்நாடு) இடைத்தேர்தலில் தோற்ற ஒரு கட்சி பிஜேபிக்கு அவமானகரமான தோல்வி எனக் குதித்துக் கொண்டிருந்தது. சிப்புச் சிப்பா வந்தது! இதிலே என்ன அவமானம் வருது? இதுவே பிஜேபி ஜெயிச்சிருந்தா ( ஓட்டுக்கள் குறைந்த அளவு வித்தியாசம் தான்) கொஞ்சம் கூட யோசிக்காமல் ஈவிஎம் என்று சொல்லும் இதே ஊடகங்களும், கட்சிகளும் இப்போ பிஜேபி மேல் மக்களுக்குக் கோபம் என்று சொல்கிறதே! அப்போ தோற்ற மற்றக் கட்சிகள் மேலும் மக்களுக்குக் கோபம் தானே!   இந்த ஆட்சியில் கெடுபிடிகள் நிறைய என்பதால் அரசுத் துறைகள் சார்ந்த ஊழியர்களே இந்த அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவதில்லை என்பது தெரிந்த விஷயம் தானே!  ஆகவே மக்களுக்குக் கோபம்னு புதுசா ஒண்ணும் இல்லை! என்ன நான் சொல்றது?

யாருங்க அங்கே, வர வர இந்த வலைப்பக்கம் அரசியல் சார்ந்தே இருக்குனு சொல்லிட்டு இருக்கிறது? அடுத்து ஒரு மொக்கை போட்டுடுவோம்! செரியா?

42 comments:

 1. நல்லாத்தான் பிஜேபியைப்பற்றி எழுதிக்கிட்டு வந்தீங்க கடைசியில் பல்டி அடிக்கிறீங்களே....
  சரி மொக்கையாவது வரட்டும் அதையாவது நொறுக்குவோம்.

  ReplyDelete
  Replies
  1. கில்லர்ஜி, மத்திய அரசின் சில குறிப்பிட்ட துறை ஊழியர்கள்/அதிகாரிகள் இந்த அரசின் போக்குப் பிடிக்காமல் உள்ளடி அரசியல் செய்து வருவதாக ஏற்கெனவே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றனவே. வேலை செய்யவில்லை எனில் முதலில் விடுமுறையில் போகச் சொல்லிட்டுப் பின்னர் அதிரடியாக வேலையிலிருந்து நீக்கம் என்றெல்லாம் செய்கிறார்கள் அல்லவா? அது பழம் தின்று கொட்டையும் போட்டு அதுவும் முளைத்து விட்டபின்னர் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்குக் கஷ்டமாக இருப்பதாகச் சொல்கின்றனர். பல்டி எல்லாம் அடிக்கலை! உள்ளதை உள்ளபடி சொல்கிறேன். அரசு ஊழியர்களுக்குக் கடுமையான சட்டதிட்டங்கள். நேரப்படி வரணும், நேரப்படி போகணும். அவசியம் இல்லாமல் விடுமுறை எடுக்கக் கூடாது. எடுக்க முடியாது. அலுவல் நேரங்களில் கட்டாயமாய் வேலை செய்தாகணும்! இதான் பலரையும் படுத்துதுனு சொல்றாங்க தில்லி வாழ் உறவினர்கள்/நண்பர்கள். :)))))

   Delete
  2. தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில் அரசு வேலைகள் நடக்க அதிகாரமாகவே லஞ்சம் கேட்கின்றனர்.

   கொடுக்க முடியாது என்று சொல்லலாம் ஆனால் நமக்கு வேலை நடக்காதே...

   Delete
  3. கில்லர்ஜி, தமிழ்நாடு எப்போவுமே தனி நாடாச்சே! :) தனித்துவம் வாய்ந்த மக்கள்! :)

   Delete
  4. கில்லர்ஜி இது காலம் காலமா தநா வுல நடக்குதே...தென்னக மாநிலங்களிலேயே அதிகமா ஊழல் தநா தான்னுதான் பேரு...கொடுக்கலைனா வேலை நடக்காது உண்மை....மனது வேதனைப்படும் கில்லர்ஜி அப்படிக் கொடுத்து நம் வேலை நடக்க. மௌத் ட்டியர் ஆகப் பேசுவோம்....ஹேன்ட்ஸ் பெயின் எடுக்க எய்துவோம்...ஆனா ப்ராக்டிக்கலா கொடுக்காம ஒன்னும் நடக்காது..

   அதிசயம்....எங்க ஏரியா பிஎஸ் என் எல் கணேசன்!!! ரிப்பேர் பார்ப்பவர்....ஒரு பைசா வாங்க மாட்டார்...சிரித்த முகத்துடன்...இதுவரை அவர் எரிந்து விழுந்து பார்த்ததில்லை...கடுகடுத்துப் பார்த்ததில்லை....அசிங்கமாகப் பேசிப் பார்த்ததில்லை...இன்று வீட்டில் வயர் மாற்றி அதுவும் மொட்டை மாடி ஏறி மாற்றணும்...மாற்றிக் கொடுத்தார். ஒரு பைசா வாங்கவில்லை...நான் இதுவரை பார்த்த இது போன்ற ஊழியர்களில்...இவர் தான் இப்படி....

   கீதா

   Delete
 2. என்ன செய்றது.. நடைமுறைக்கேடு என்பது அரசு அலுவலர்களிடையே புரையோடி விட்டது..

  அப்புறம் -

  >>> ஆகவே மக்களுக்குக் கோபம்னு புதுசா ஒண்ணும் இல்லை!..<<<

  ஆகையால், இதை நெனைச்சுக்கிட்டு நடையக் கட்டவேண்டியது தான்!...

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை சார், சில விஷயங்களை விபரமாக எழுதினால் அதிர்ச்சியாக ஆகிவிடும்! என்ன செய்யறது? அரசு யந்திரம்னு சொல்லுவாங்க! உண்மையிலேயே இயந்திரமாக இயங்கிக் கொண்டிருந்த அரசை இப்போக் கவனிக்க ஆரம்பிக்கவும் யாருக்கும் அது சரியாக இல்லை! :(

   Delete
 3. மின்வெட்டு என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ... ஒருவேளை மாமா "என்ன எப்போ பார்த்தாலும் கம்பியூட்டர்ல உட்கார்ந்துகொண்டு..." என்று எரிச்சலில் மெயின் ஆஃப் பண்ணிடறாரோ...!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், //மின்வெட்டு என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ...// க்ர்ர்ர்ர்ர்ர்ர், அநியாயமா இல்லையோ! தினம் தினம் மத்தியானங்களில் ஜெனரேட்டர் போடறாங்களே! அதோடு அவருக்கு ஒரு மணியிலிருந்து மூணு மணி வரை தூக்க நேரம். நான் என்ன செய்யறேன்னு எல்லாம் கவனிக்க மாட்டார். நான் தான் பொழுது போகாமல் குடைவேன்! :)

   Delete
 4. உங்கள் ஏரியாவில் பகலில் அதிக கன மின் சாதனங்கள் இருந்தால் தாங்க முடியாமல் உட்கார்ந்திருக்கலாம். ஊழியர்களைக் குறை சொல்ல முடியாது. அப்படிச் செய்யவும் முடியாது. பராமரிப்புப் பணிகள் அவர்கள் மாதம் ஒருமுறை செய்ய வேண்டும். கடைசியாக எப்போது செய்தார்கள் என்று தெரியுமா?

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம், பராமரிப்புக்காக மாதம் முதல் வாரம் கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரம் மின்வெட்டு இருக்கும். அநேகமா நாள் முழுவதும்! அது தனி! இது தனிஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

   Delete
 5. அரைமணியாவது மழையா? ஊஹூம்... இங்கே வெய்ய்ய்ய்ய்யில்! இரவு இடியுடன் மழை பெய்யக் கூடுமாம்.... பார்ப்போம்!

  ReplyDelete
  Replies
  1. இப்போக் கூட மழை வருமானு பயமுறுத்திட்டு இருக்கு! நல்லவேளையா மணத்தக்காளியைக் காய வைச்சுட்டேன். எடுத்து வைக்கணும். முன்னெல்லாம் மே மாதம் நான் வடாம்போட்டால் கூட மழை வந்துடும்! :)

   Delete
  2. ஸ்ரீராம் நெசமாவா சொல்லறீங்க?!!! ரமணன் சொன்னாரா? சொல்லிட்டாரா? அதான் மாலையில் மேகம் கூடி கொஞ்சம் ஜில்லுனு காத்து அடிச்சுத்து இப்ப கலைஞ்சு க்ளியர் ஸ்கை போலக் காட்டுது..!! ஹா ஹா ஹா...

   கீதா

   Delete
 6. அரசியல் எனக்கு ஆகாதுங்க....! ​

  :)))

  ReplyDelete
  Replies
  1. நம்பிட்டோமுல்ல! :)

   Delete
 7. வத்தல் வடாம் தயாரிப்பு உங்களுக்கா அல்லது உங்கள் பையருக்கா?

  நீங்க நிறைய தளத்துல கனமான விஷயங்களை எழுதறீங்க. மின்வெட்டு சதி இருந்தா நீங்க என்ன செய்வீங்க? ஆனாலும் உணவே மருந்து ஆடிக்கொருதரம் அமாவாசைக்கொருதரம்னு எழுதறீங்க.

  பிரச்சனை எனும்போது அரசு ஊழியர்களைக் கைகாட்டக் கூடாது இல்லையா? மத்தியதர வர்கம் சந்தோஷப்படும்படியா இந்த அரசு பாஜக என்ன செஞ்சிருக்கு? நம்மகிட்ட கெடுபிடியா எரிவாயு, பெட்ரோல் என்று இருக்கும் அரசு, பணக்கார்ர்களிடம் பல்லிளித்து மக்கள் பணத்தை அள்ளிவிடுகிறதே?

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெ.த. எங்க பொண்ணாவது கொஞ்சம் வடாம் சாப்பிடுவா. மாட்டுப் பொண்ணு வத்தல் பொரிச்சுத் தொட்டுப்பா. பையர்! ஹூம்! அவர் அதெல்லாம் சாப்பிட மாட்டார். ரொட்டி, சப்ஜி மட்டும் தான்! எப்போவானும் அதிசயமா சாம்பார் சாதம், தயிர் சாதம் ருசி பார்ப்பார். ரசம்னால் குடிச்சுப்பார்! அவர் முழுக்க முழுக்க வட இந்தியர்! :( மாட்டுப் பொண்ணுக்குத் தான் கஷ்டம். அவளுக்கு சாதம், சாம்பார், வத்தல் குழம்பு, புளிக்காய்ச்சல்னா ரொமப் பிடிக்கும். சமைச்சு அவ மட்டும் தான் சாப்பிடணும்!

   Delete
 8. வத்தல் வடாம் தயாரிப்பு உங்களுக்கா அல்லது உங்கள் பையருக்கா?

  நீங்க நிறைய தளத்துல கனமான விஷயங்களை எழுதறீங்க. மின்வெட்டு சதி இருந்தா நீங்க என்ன செய்வீங்க? ஆனாலும் உணவே மருந்து ஆடிக்கொருதரம் அமாவாசைக்கொருதரம்னு எழுதறீங்க.

  பிரச்சனை எனும்போது அரசு ஊழியர்களைக் கைகாட்டக் கூடாது இல்லையா? மத்தியதர வர்கம் சந்தோஷப்படும்படியா இந்த அரசு பாஜக என்ன செஞ்சிருக்கு? நம்மகிட்ட கெடுபிடியா எரிவாயு, பெட்ரோல் என்று இருக்கும் அரசு, பணக்கார்ர்களிடம் பல்லிளித்து மக்கள் பணத்தை அள்ளிவிடுகிறதே?

  ReplyDelete
  Replies
  1. கனமான விஷயங்களா? நீங்க வேறே! அவ்வளவு கனமெல்லாம் தூக்க முடியாதுங்க! அப்புறம் நம்ம கிட்டே கெடுபிடியா எரிவாயு, பெட்ரோல்னு அரசு இருக்கா? அப்படியா? பணக்காரர்களிடம் பல்லிளித்துப் பணத்தை அள்ளி விடுகிறதா? இதுக்கு பதில் சொல்லணும்னா ஒரு நாலு பதிவாவது போடணும்! பிஎன்பி ஊழலில் நிரவ் மோடிக்குப் பணத்தைக் கொடுத்தது யார்னு ரகுராம் ராஜன் சொன்னதைப் படிச்சீங்களா?

   Delete
 9. ///இப்போ அவரோட ஹஸ்பன்ட் வந்திருக்கிறதாலே நம்ம பதிவிலே அவரால் கவனம் செலுத்த முடியாது என்பது ஓர் ஆறுதல். அடுத்த ஆறுதல் அடுத்த மாசம் அவர் ஊருக்குக் கிளம்பும் ஏற்பாடுகளில் மூழ்கி இருப்பார்! ஆகவே அதிகம் கவனிக்க மாட்டார்//

  ஆவ்வ்வ்வ் அப்பூடியோ சங்கதி?:) அதனாலதான் ஆள் பிஸியாக இருக்கிறார்:)..

  ReplyDelete
  Replies
  1. அதிரடி, ஆமாம், நெ.த. சொல்லலையா? ரொம்பவே பிசி! :) என்றாலும் வந்து கவனித்து சாப்பிடலாம் வாங்க வில் அதிகம் எழுதலைனு சொல்லிட்டுப் போயிருக்கார்! :)

   Delete
  2. ஓஒ உங்கட சமையல் தளம் இன்னும் என் லிஸ்ட்டில் சேர்க்கவில்லை அதனால கண்ணில் தெரிவதே இல்லை.. சேர்த்திடோணும்.

   Delete
  3. வாங்க, வாங்க, வந்து சாப்பிட்டுப் பாருங்க! ஹிஹிஹி, கீரை வடை ரெசிபியும் ஒரு இடத்தில் போட்டு வைச்சிருக்கேன். அதைக் கண்டு பிடிங்க பார்க்கலாம்! :))))

   Delete
 10. கீசாக்கா ரைம் டேபிளை மாத்துங்கோ.. கரண்டு கட்டாகும் நேரம் சமையலில் இறங்குங்கோ.. அதுவரை புளொக்கில் கலக்குங்கோ:)) அதை விட்டுப் போட்டு எதுக்கு மூக்கு ஜிந்திங்?:))..

  டெய்லி வடகம் செய்வீங்களோ?.. சமரில் செய்து வைத்தால் போதுமே.. என்னிடம் இப்பவும் வேப்பம் பூ வடகம் இருக்குது.. மணத்தக்காழி வத்தல் இருக்குது... சுண்டங்காய் வத்தலும் இருக்குதே.. அத்தனையும் ஊரிலிருந்து வந்தவை.

  ReplyDelete
  Replies
  1. என்னாது? ரைம்ஸ் சொல்லணுமா? சேச்சே! எனக்கும் டங்கு ஸ்லிப் ஆகுதோ? ரைம் டேபிளை (ரைம் ரேபிள்னு வரவேண்டாமோ) மாத்தணுமா? மின்வெட்டு மத்தியானம் ஒரு மணிக்கு! அது வரைக்கும் சமைக்காமல் இருக்கச் சொல்றீங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! பசிக்காது? நான் பத்தரைக்கெல்லாம் சமைக்க ஆரம்பிச்சுப் பதினோரு மணி அல்லது பதினொன்றரைக்குள் முடிச்சுடுவேன். பனிரண்டு, பனிரண்டரைக்குச் சாப்பிடுவோம்! ஒரு மணிக்குச் சமைக்க ஆரம்பிச்சா அந்த சமையலை ஜேம்ஸில் தான் போய்க் கொட்டணும். சே! காவிரியில் தான் கொட்டணும்!:)

   Delete
  2. டெய்லி யார் வத்தல், வடகம் செய்யறாங்க! ஏற்கெனவே செய்ததைத் தான் காய வைக்க முடியாமல் புலம்பிங்! எல்லா வற்றலும் தீர்ந்து போச்சு. சுண்டை வத்தல் போட்டுக் காய வைச்சுட்டேன். கருவடாம் போட்டுக் காய வைச்சுட்டேன். இந்த மணத்தக்காளி தான்! காய வைச்ச நாளில் இருந்து மழை! :) ஒரு வழியா இன்னிக்கோட காய்ஞ்சது! :)

   Delete
 11. ///சமீபத்து உ.பி., பிஹார் இடைத்தேர்தல்களில் பிஜேபி கட்சி தோத்துடுச்சாம்.///

  கர்ர்ர்ர்ர்ர்ர்:)) கரண்ட் இல்லாத ரணகளத்திலயும் ஒரு கிழுகிழுப்புத்தேவைப்படுதோ?:))..

  சரி சரி இந்தாங்கோ கீசாக்கா அழகான ஃபான் ஃபுறம் ஜப்பான்:).. விசிக்கிக்கொண்டிருங்கோ பின்பு வாறேன்:)..

  http://www.nekomichi.net/cat-japanese-fan/index_files/imageDrop_227670.jpg

  ReplyDelete
  Replies
  1. எனக்கு இந்த விசிறி வேண்டாம். இன்வெர்டர் உள்ள ஏ.சி. போட்டுக் கொடுத்திடுங்க போதும்! :))) இந்த விசிறியால் வீசிக் கொண்டால் கை வலிக்காதோ!

   Delete
 12. என்னென்ன வடாம்ஸ் போட்டீங்க ? ரெசிப்பீஸ் வருமா ??
  எனக்கு அந்த ஸ்டார் வத்தல் பீட்ரூட் கேரட்டலாம் போட்டது வேணும் ..
  அதுக்கு முன்னாடி எங்களுக்கு வெயில் வரணும்னு நானும் வேண்டிக்கறேன் மூணு வருஷம் முன்னாடி ஜவ்வரிசி ,அரிசி வடாம் போட்டது போன வருஷமும் வெயில் ஏமாத்திடுச்சி .
  ஆரோரூட் மாவில் ஏதாச்சும் செய்யலாமா ? நான் ஒரு பாக்கெட் மாவு வாங்கி வச்சிருக்கேன்
  எப்படி என்ன செய்றதுன்னு தெரிலா

  மின்வெட்டு நம்ம ஊரில் கஷ்டம்தான் ..எல்லாம் மின் சாதனங்கள் ஆனதால் .அதும் இப்போ வெயில் காலம் வேறே .

  அடுத்த மொக்கைக்கு வெயிட்டிங் :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சல், இம்முறை வடாம் எல்லாம் எதுவும் போடலை! வெறும் வற்றல் வகைகள் மட்டுமே! சுண்டைக்காய், மணத்தக்காளி வற்றல் இவை இரண்டு மட்டும். கொஞ்சம் போல் குழம்புக் கருவடாம் போட்டேன். மற்றபடி வடாம் செய்முறைகள் எழுதலாம். படங்கள் போட முடியாதே! பரவாயில்லையா?

   Delete

  2. அடுத்த மொக்கைக்கு வெயிட்டிங் :)// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அநியாயமா இல்லையோ? :))))

   Delete
 13. அங்கேயும் வந்துட்டதா கரண்ட் கட். வேர்க்காமல் இருக்கோ கீதா.
  நெ.த மாதிரி யார் கிடைப்பா. அருமையான ரசிகர்.
  அதே போல கீதா ரங்கனும்.

  பாலக் பார்க்கப் போறேன்.

  ReplyDelete
  Replies
  1. நீங்க வேறே வல்லி! எனக்கு இமயமலையில் கூட வேர்க்கும் உடல்! ஹிஹிஹி! நேத்திக்கு ராத்திரி கூட ஒரு மணி நேரத்துக்கும் மேல் மின்வெட்டு! :(

   Delete
 14. ஆ! கீதாக்கா உங்களுக்குக் கரன்ட் கட் எனக்கு நெட் கட்டுனு இத்தனை நாள்...ஹப்பா இபப்த்தான் சரியாச்சு...வந்தாச்சு..

  அங்கு மழை என்பது ஆமாம் அறிகிறேன்...ஹும் இங்கு வெயில் வேர்வை....ஹையோ!! ஆனா மேகம் மட்டும் கூடுது...

  வத்தல் வடாம் இன்னும்நான் தொடங்கலை...தொடங்கணும்னு சொல்லிச் சொல்லித் தொடங்கலை....வருடா வருடம் போட்டுவிடுவதுண்டு...இம்முறை நார்த்தங்காய் மட்டும் உறவினர் வீட்டில் நிறைய காய்த்தது என்று கொடுக்க மாமியாருக்கும் எங்களுக்குமாய் போட்டு வைச்சேன்...மகன் இங்கு இல்லை என்பதால் ஊறுகாய் போடலை...கரிவடாம்/குழம்பு வடாம் சொல்லிட்டிருக்கேன்...என்னவோ போடலை எலலம் ஸ்டாக் தீர்ந்தாச்சு...

  கீதா


  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா, வற்றல் வடாம் போட்டு வைச்சாலும் பெண்ணோ, பையரோ எடுத்துப் போவதில்லை. ஆகையால் தான் போடவில்லை. நாரத்தங்காய் நானும் போட்டு வைச்சிருக்கேன். அது இல்லாமல் முடியாதே! :)

   Delete
 15. எங்களுக்கு மின்வெட்டு இன்னும் ஆரம்பிக்கலை..முன்பு போல்..உண்டானும் தெரியலை...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆங்காங்கே சில இடங்களில் மின்வெட்டு எனக் கேள்விப் பட்டேன். உங்க ஏரியாவிலே எப்படியோ? மின்வெட்டு இல்லாமல் இருக்கப் பிரார்த்திக்கிறேன்.

   Delete
 16. என்னுடைய சமீபத்திய ஸ்ரீரங்க விஜயத்தின் பொழுது 12, 13,14 மார்ச் தேதிகளில் எங்கள் சகோதரர் வீடு இருக்கும் மேலூர் ரோடில் எந்த பவர் கட்டும் இல்லையே. நீங்கள் பி.ஜே.பிக்கு கோடி பிடிப்பது பிடிக்காத எதிர் கட்சியினர்தான் உங்கள் வற்றல் வடம் ப்ராஜக்ட்டை கெடுக்க வேண்டும் என்பதற்காக மின் தடை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இங்கே வந்து மூணு நாள் தங்கிட்டுச் சொல்லவே இல்லை! :( எங்களுக்கு நேத்திக்குக் கூட ராத்திரி எட்டரை மணிக்குப் போன மின்சாரம் அப்புறமாப் பத்து மணிக்குத் தான் வந்தது. அநேகமா தினம் இருக்கு!

   Delete
  2. //நீங்கள் பி.ஜே.பிக்கு கோடி பிடிப்பது பிடிக்காத எதிர் கட்சியினர்தான் உங்கள் வற்றல் வடம் ப்ராஜக்ட்டை கெடுக்க வேண்டும் என்பதற்காக மின் தடை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.// நீங்க வேறே! துணிக்கொடியைத் தான் தினம் தினம் ஏற்றி இறக்கறேன். பிஜேபிக்கு எங்கே கொடி பிடிக்க முடியும்?

   ஆனால் எதிர்க்கட்சியினர் சதி என்பது சரியா இருக்குமோ? :)))))))

   Delete
 17. இங்க ஒண்ணும் பவர்கட் இல்லையே மாமி!! மழை பத்து நிமிடம்.

  ReplyDelete