எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, April 15, 2018

ஏழுமலையானுக்கு கோவிந்தா! கோவிந்தா! பயணம் 3

வரிசையிலே போய்ப் பெருமாளை தூரத்திலே இருந்தே பார்த்துக் கொண்டு போனதில் பெருமாள் என்னமோ இளைச்சு உயரமும் குறைஞ்சு இருப்பதாகத் தோன்றியது. உள்ளே அலங்கார மின் தீபங்கள் ஏதும் இல்லாமல் அந்தக் குத்து விளக்குகளின் சுடர் ஒளியில் மட்டுமே பார்க்கலாம். மிக அற்புதமாக அலங்காரம் பண்ணி இருந்தனர். உள்ளே யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் முன்னெல்லாம் அர்த்த மண்டபத்துக்குள்ளே போய்ப் பார்த்தபோது உள்ளே பட்டாசாரியார்கள் இருப்பார்கள். இன்று யாரும் அப்படி இல்லை. கொஞ்சம் கூட எவ்விதத் தடங்கலோ, மறைப்போ இல்லாமல் பெருமாள் மட்டுமே ஓர் ஓவியம் போலக் காட்சி அளித்தார். பார்த்த பின்னர் அனைவருமே வலப்பக்கமாகச் செல்ல அனுமதித்தார்கள். அதனால் நாம் கட்டாயமாக ஒரு பிரதக்ஷிணமாவது செய்யும்படி ஆகிறது.

பிரதக்ஷிணமாக வந்து தங்க கோபுர தரிசனம் செய்து கொண்டு உண்டியலில் காணிக்கையைச் செலுத்திக் கொண்டு (உண்டியலும் சின்னதாக இருக்கோ?) என்னும் சந்தேகத்தைத் தள்ளிவிட்டுக் கொண்டு வெளியே வந்து லட்டுக்களை நோக்கி நடந்தோம், நடந்தோம், நடந்து கொண்டே இருந்தோம். லட்டுகள் செய்யும் மடப்பள்ளி வாசலுக்கே போய்விட்டோம். அங்கே தான் எதிரே கொடுப்பதாகச் சொன்னார்கள். பைகள் வாங்கிக்கலாம்னா அதுக்குத் தனிக் காசாம். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என மனசுக்குள் சொல்லிவிட்டு நம்ம முன்னேற்பாடு முத்தண்ணாவாக ரங்க்ஸ் கொண்டு வந்திருந்த பைகளில் லட்டுக்களை வாங்கிக் கொண்டு வெளியே செல்ல ஆரம்பித்தோம். ஆங்காங்கே வழி கேட்டுக்கொண்டு (தன்னார்வலர்களும், காவல்துறையும் தெலுங்கு கலந்த தமிழில் சொல்கின்றனர்.) செருப்புக்கள் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றோம். அதான் கொஞ்சம் புரியவில்லை. அப்புறமா ஒரு தன்னார்வலர் தமிழ்க்காரர் வாரம் ஒரு முறை இங்கே சேவை செய்ய வருவாராம். அவர் அழைத்துச் சென்று விட்டார். செருப்புக்களை எடுத்துக் கொண்டு எங்களுக்கு டோக்கன் கொடுத்த இடம் வழியாகவே வெளியே வந்தோம்.

ஒரு டாக்சியில் வியாசராஜமடம் சென்று அங்கே அறையைக் காலி செய்வதாகச் சொல்லிவிட்டு மேலே சென்று சாமான்களைச் சேகரித்துக் கொண்டு மடத்து ஊழியர் ஏற்பாடு செய்து கொடுத்த டாக்சியில் கீழே இறங்க ஆயத்தம் ஆனோம். கீழே இறங்க ஐந்நூறு ரூபாய் கேட்டார். வேகமாகப் போனால் அரை மணிப் பயணம் தான். என்றாலும் மலைப் பாதை என்பதால் ஒத்துக் கொண்டு கீழே இறங்கினோம். நாற்பது நிமிடங்கள் கழித்தே கீழே இறங்கணுமாம். ஆகவே அரை மணியில் (இத்தனைக்கும் மெதுவாகவே வந்தார்) கீழே இறங்கிய ஓட்டுநர் பத்து நிமிஷம் ஓர் மர நிழலில் நிறுத்திவிட்டுப் பின்னர் கீழே இறங்கி நாங்கள் கேட்டபடி பீமவிலாஸ் ஓட்டலில் நிறுத்தினார். அங்கே தான் முதல் நாள் மாலை டிஃபன் சாப்பிட்டோம்.  பூரி,கிழங்கு+தோசை+ காஃபி இரண்டு பேருக்கு 147 ரூபாய் தான் ஜிஎஸ்டி உட்பட ஆகி இருந்தது. பீமவிலாஸ் ஓட்டல் மிகப் பழமையானது. நாங்க சாப்பிட்ட ஓட்டல் அருகேயே அவங்க தங்குமிடமும் அதை ஒட்டியே இருந்ததால் அங்கே அறை கேட்டு வாங்கிக் கொண்டு மேலே லிஃப்டில் சென்று (அப்பாடா) சாமான்களை வைத்துக் கொண்டு சுத்தம் செய்து கொண்டு கீழே சாப்பிட வந்தோம்.

இருவருக்குமே சாப்பாடு சொல்லி இருந்தோம். சாப்பாடும் இருவருக்கும் 147 ரூபாய் தான் ஆனது. நல்ல சாப்பாடு. சுவையாகவும் இருந்தது. நல்லவேளையாகக் காரமும் அதிகம் இல்லை. சாப்பிட்டு மேலே வந்து ஓய்வு எடுத்துக் கொண்டு நாலு மணி, ஐந்து மணி அளவில் கிளம்பி கோவிந்தராஜப் பெருமாள், அலமேலு மங்காபுரம், ஶ்ரீநிவாச மங்காபுரம் ஆகிய கோயில்களுக்குப் போகத் திட்டம். 

47 comments:

  1. சாப்பாட்டின் விலை மிகவும் கம்மியாக இருக்கிறதே... தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, கில்லர்ஜி, இதை சேமிப்பில் போடத் தான் பார்த்தேன். ஆனால் எனக்கே தெரியாமல் வெளியாகி விட்டது. :)))

      உண்மை சாப்பாட்டின் விலை ரொம்பக் கம்மி தான். பில்லை வைத்திருந்தோம் ஸ்கான் செய்து போட. அதற்குப் பின்னர் அடுத்தடுத்து ஊர்கள் சுற்றச் சென்றதிலும் குட்டிக்குஞ்சுலு வந்தப்போவும் எங்கே வைத்தோம் என மறந்தே விட்டது.

      Delete
  2. ஒரு முறை சுவாமி சின்மயாநந்தாவின் சொற்பொழிவு கேட் டேன் ஆர்வமாக ஆண்டவனை தரிசிக்கப் போய் அவனுருவம் தெரிய அருகே வரும்போது கண்களை மூடிக்கொண்டு பிரார்த்தனை செய்வோம் என்றார்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி சார், அதெல்லாம் ரொம்பவே ஆன்மிகம் (பக்தி அல்ல) உள்ளவர்களாக இருக்கும். நான் பக்தியிலேயே இன்னும் கீழேயே இருக்கேன். அந்த நிலைக்கு வர எத்தனை ஜென்மம் ஆகுமோ!

      Delete
    2. ஜிஎம்பி சார்... மூலவரை சேவித்து கண்ணை மூடி நம் மனக்கண்ணில் வருகிறாரா என்பதற்குத்தான் கண் மூடுவோம், ப்ரார்த்திப்போம். இன்னொன்று, சன்னிதியில் அவனைப் பார்க்கும்போது எதுவுமே கேட்கத் தோணாது. இதுவும் அவன் ஏற்பாடாகத்தான் இருக்கணும்.

      Delete
    3. பார்த்துவிட்டு வணங்கி வருதல் இங்கியலும். கண்ணை மூடி வணங்கி நின்றால் கூட்டம் நம்மைத்தள்ளிவிடும். அது போக காவலர்கள் திட்டுவார்கள். இடத்துக்கிடம், காலத்துக்குகாலம், அட்ஜ்ஸ்ட் பண்ண விடுவதுதான் இந்துமதம். உங்களூர் இரங்கநாதனைத் அவரின் திருசிரசிலிலிருந்து திருப்பாதங்கள் வரை அனுபவித்துப் பாடுகிறாரே திருப்பாணாற்றாழ்வார்! அவர் என்ன கண்களை மூடியிருந்தால் அர்ச்சாவதாரத் திருமேனியைப்பற்றி அட்டகாசமான பத்து புகழ்பெற்ற பாசுரங்களை எழுதியிருக்க முடியுமா? திருமங்கையாழ்வார் ஒரு பாசுரத்தில் காணாத கண்கள் கணகளே அல்ல என்று சொல்கிறார்.

      Delete
    4. மற்றொன்று: முந்தைய பதிவில் நேருக்கு நேராக நின்று வணங்க முடியாமல் கூட்டம் தள்ளிவிடுகிறதே என்று எழுதினார். நேருக்கு நேராக வணங்குவது சரியன்று என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஓரத்தில் நின்றுதான் வணங்க வேண்டும். இறைவனுக்கு நேருக்கு நேர் என்ற பேச்சே அபசாரம். எனவேதான், கோயில்களில் ஓரமாக நிறக கம்பிகள் கட்டியிருக்கிறார்கள். எனினும் திருப்பதி சந்நிதானத்தில் நிற்கும் நம் முழு எண்ணமும் பார்ப்பது, வணங்குவது என்று இருக்கும்போது, எப்படி வணங்குவது சரி என்பது நினைவில் தோன்றாது. மேலும், அங்கு ஓரமாக நின்று வணங்கும் படி கூட்டம் விடாது. ஆசாரங்கள் இயன்ற வரைதான் மனிதருக்கு என்பது திருப்பதி சாமிக்குத் தெரியும்.

      Delete
    5. நெ.த. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்று தோன்றும். :) என்னைப் பொறுத்தவரை கண்களை நன்றாகத் திறந்து வைத்துக் கொண்டு முழு உருவத்தையும் உள் மனசில் வாங்கிப்பேன்.

      Delete
    6. //மற்றொன்று: முந்தைய பதிவில் நேருக்கு நேராக நின்று வணங்க முடியாமல் கூட்டம் தள்ளிவிடுகிறதே என்று எழுதினார்.//

      திரு விநாயகம், கூண்டைத் திறக்கும்போது தான் மக்கள் அதுவும் இளையவர்கள் வந்து தள்ளுமுள்ளு செய்தார்கள். மற்றபடி தரிசன வரிசையில் சிறிது கூடத் தள்ளு முள்ளு இல்லை. யாரும் தள்ளிவிடுவதாக நான் எழுதியதாக நினைவிலும் இல்லை. மூன்று வரிசை! அவற்றில் நடு வரிசை எனில் நேரே சென்று பார்க்கலாம் என்றே எழுதி இருக்கேன். பத்து வருடங்களுக்கு முன்னர் சென்றபோது தான் கூட்டம் தள்ளிவிட்டுக் காவலர்களால் இழுத்துவிடப்பட்டுக் கீழே விழுந்தேன். அது அர்த்த மண்டபத்துக்குள்!

      Delete
  3. ஆஹா அருமையான தரிசனமா? அங்க இங்க நடக்கத்தான் கொஞ்சம் சிரம்மாயிருந்திருக்கும். தெரியப்படுத்தியிருந்தால் உதவியாளர்கள் என்ற ஹோதாவில் எங்களுக்கும் தரிசனம் கிட்டியருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. ஹிஹி, நீங்க சொன்ன இதே கருத்தை என் தம்பி மனைவியும் சொன்னாள். முன்னாடியே சொல்லி இருந்தால் உங்களுக்கு உதவியாளர்கள்னு நாங்க ரெண்டு பேரும் வந்திருப்போமே என்றாள். :)))) அங்கே இங்க நடப்பது சிரமமாக இருந்தாலும் வெயில் உறைக்கவில்லை. ஃபெப்ரவரி மாதம் தானே!

      Delete
  4. நல்ல தரிசனம் கிடைத்திருக்கிறது உங்களுக்கு. மகிழ்ச்சி.

    நாங்களும் உங்கள் மூலம் தரிசனம் செய்தோம்.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், நல்ல சிறப்பான தரிசனம்.

      Delete
  5. Very useful information; I'm storing for future use, thanks!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க மிகிமா, இப்போதெல்லாம் உங்களைப் பார்க்கவே முடியறதில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  6. திருமலை அப்பனைத் தரிசிக்க முடிந்தது அருமை. தள்ளு படாமல் வெளியே வந்தது இன்னோரு
    கருணை. எனக்கே உத்சாகமாக இருக்கிறது.
    மீண்டும் தொடர்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, இந்தியா வந்தால் நீங்களும் போய் வரலாம்.

      Delete
  7. முன்னர் பெருமாளைப் பார்த்த இடத்திலிருந்து முன்னாலேயே பார்க்க விடுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.

    கீழே இறங்க எதற்கு காசு? கோவிலைச் சேர்ந்த மினி பஸ்கள் இலவசமாக உண்டில்லையோ?

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், முன்னால் பெருமாளை உள்ளே கர்பகிரஹத்திற்கு அருகே உள்ள அர்த்தமண்டபத்தினுள் சென்று பார்த்து வந்தோம். இப்போ துவாரபாலகர்களைத் தாண்டி உள்ளே போக முடியாது. கோவிலைச் சேர்ந்த மினி பேருந்துகள் மூத்த குடிமக்களை தரிசனம் செய்யச் செல்லும் இடம் அருகே கொண்டு விடுகிறது. மற்றப் பேருந்துகள் ஆங்காங்கே இருக்கலாம். தெரியலை. ஆனால் கீழே போக டிடிடி தேவஸ்தானத்தின் பேருந்தில் காசு கொடுத்துத் தான் போகணும். நாங்க அந்த மத்தியான வெயிலில் டாக்சி பிடித்துப் பேருந்து நிலையம் போய்ப் பேருந்தைப் பிடித்துக் கீழே இறங்கணும் என்பதால் மடத்தின் வாசலிலேயே வாடகைக் கார் பிடித்துக் கீழே இறங்கினோம். மேலே செல்லவும் பயணச் சீட்டு வாங்கணும் (பேருந்தில் போனால்) கீழே இறங்கவும் பயணச் சீட்டு வாங்கணும்.

      Delete
    2. கீசா மேடம். குலசேகரன் படிக்கு முன்னால் ஒரு மண்டபம் இருக்கு. அங்க இருந்துதான் நான் சின்ன வயதில் பல தடவை சேவிச்சிருக்கேன். (குலசேகரன் படியைத் தாண்டினால் பெருமாள்). அந்த மண்டபத்துக்குப் பின்னால் ஒரு மண்டபம் உண்டு. அதுவரைக்கும் சில நாட்களில் தரிசனத்துக்கு விடுவார்கள். அப்படியும் சேவிச்சிருக்கேன். லகு தரிசனம் என்ற பெயரில் துவாரபாலகர்கள் வரை மட்டும் அனுமதிக்கும் சேவை கூட்டம் இருக்கின்ற நாட்களில் செய்தார்கள். பிறகு அதையே பெர்மனென்'டாக ஆக்கிவிட்டார்கள் போலிருக்கு. கடந்த சில வருஷங்களாக துவார பாலகருக்கு முன்பே திருப்பிவிடுகிறார்கள்.

      ஸ்ரீராம் குறிப்பிட்ட இலவச பேருந்துகள் என்னைப் பொறுத்த வரைல அவ்வளவு உதவியாக இல்லை.

      Delete
    3. நெ.த. மேலே ஏறவோ, கீழே இறங்கவோ இலவசப் பேருந்துகள் இருப்பதாக யாரும் சொல்லலை! டிடிடி நிர்வாகம் செய்யும் பேருந்துகளே இருக்கின்றன. இப்போ துவாரபாலகர்கள் வரை தான் செல்ல முடியும். முன்னால் எல்லாம் திருப்புவதில்லை.

      Delete
  8. பெருமாள் படம்தான் போடவில்லை. பீமாவிலாஸ் படமாவது போட்டிருக்கக் கூடாதோ!!!!! ஹிஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், அலைபேசி சுத்தமாக வேலை செய்யாததால் அதை எடுக்கவே இல்லை. அதோடு திருமலையில் அலைபேசியின் பயன்பாட்டைத் தடை செய்திருந்ததால் பையில் போட்டு வைத்து விட்டோம். கீழே இறங்கியே மீண்டும் அலைபேசியை எடுத்தால் அதே நெட்வொர்க் பிரச்னை. சரினு ஹோட்டல் ரூமிலேயே வைச்சுட்டுப் போயிட்டோம்.

      Delete
    2. நிறைய பீம விலாஸ் கடைகள் இப்போ இருக்கு. (ஒரிஜினல் பெரிய கடையைத் தவிர சிறிய சிறிய ஆனால் சுத்தமான அழகான கடைகள்.. ஓரிரண்டு மேசைகள் உண்டு. ஆனால் அதில் வைத்து நின்றுகொண்டுதான் சாப்பிடணும்). எல்லாமே ஓரளவு நன்றாகத்தான் இருக்கு.

      Delete
    3. நின்று கொண்டெல்லாம் சாப்பிடலை. லாட்ஜைச் சேர்ந்த ரெஸ்டாரன்ட். நன்றாக அமர்ந்து சாப்பிடும் வண்ணம் இருந்தது. கீழத் திருப்பதி ரயில் நிலையத்துக்கு எதிரேயே இருக்கு.

      Delete
  9. நல்ல தரிசனம் கிடைத்தது போல இருக்கிறதே!! அருமை...

    கீதா: அக்கா ரொம்பவே ரசித்திருக்கிறீர்கள் ஏழுமலையானை!! அவர் ஏன் ஒல்லியாகப் போறார்?!! சரி அதெல்லாம் இருக்கட்டும் லட்டுவுக்கு முன்னாடி தரிசனம் கிடைத்து வெளியே வரும்போது பிரசாகம் தரும் வழியாகத்தானே வெளியே வரவேண்டும். பிரசாதம் பத்தி சொல்லவே இல்லை?!!!!(ஹிஹிஹிஹி நான் இது போன்ற கோயில் போனால் அங்கு பிரசாதம் உண்டா என்று பார்ப்பது வழக்கம்...அதாவது ஃப்ரீயாகத் தருவார்களே கோயில் மடப்பள்ளி பிரசாதம்....கவுண்டர் ப்ரசாதம்...அது வேறு....திருப்பதி பெருமாள் தாயார் கோயில் பிரசாதம் நம்ம நங்கநல்லூர் ஆஞ்சு பிரசாதம் போல ரொம்ப ஃபேமஸ் ஆச்சே அதான் ...

    நாங்களும் திருப்பதி சென்றால் பீமவிலாஸில்தான் சாப்பிடுவோம். நல்லாருக்கும் விலையும் கம்மி. ஆமாம் ரொம்ப பழைய ஹோட்டல்...தொடர்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி துளசிதரன். எதிர்வீட்டில் திருமலை சென்று 3 நாட்கள் தங்கி தரிசனம் செய்திருக்கின்றனர். முதல்நாள் மலைக்கு நடந்தே சென்று தரிசனம். மறுநாள் மூத்தகுடிமக்கள் தரிசனம். கடைசி நாள் 300 ரூ தரிசனச் சீட்டில் தரிசனம். இப்போச் சென்ற வாரம் தான் போய் வந்தார்கள். அவங்களும் தள்ளுமுள்ளு எல்லாம் இல்லை என்றே சொன்னார்கள். ஆகவே இப்போதைய அரசின் நிர்வாகம் தான் இதற்குக் காரணம் என நம்புகிறேன். முந்தைய சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில் கூட நாங்க இருமுறை போய் இம்மாதிரி சிரமம் இல்லாமல் தரிசனம் செய்தோம்.

      தி.கீதா. பிரசாதம் அந்த நேரம் கொடுக்கலை. பிரகாரத்தின் வழியாகத் தான் வெளியே விடறாங்க. ஆனால் காலை பத்துமணிக்கு அவருக்கு நிவேதன நேரம் இல்லைனு நினைக்கிறேன். ஒரு முறை லட்டு கிடைத்தது. ஒரு முறை சர்க்கரைப் பொங்கல் கிடைத்தது. இம்முறைப் பிரசாதம் கிடைக்கலை. மதிய நேரம் தரிசனம் செய்திருந்தால் ஒருவேளை கிடைத்திருக்கலாம்.

      Delete
    2. பிரசாதம் கோவில் உள் கிடைக்கலையா? அதிசயமா இருக்கே. எப்போதும் எல்லா நாட்களிலும் தொன்னைல பொங்கலோ, ச.பொங்கலோ, தயிர் சாதமோ அல்லது சிறிய லட்டுவோ கொடுப்பார்கள். சமீப காலங்களில் எனக்கு லட்டுதான் கிடைத்தது (சிறிய சைஸ்). ஒண்ணும் கொடுக்கலையா நீங்க போனபோது? ஆச்சர்யம்தான்.

      Delete
    3. ஓஹோ !அப்போ லட்டு கிடைக்கலையா லைட்டை காணோமேன்னு கமெண்ட் போட்டுட்டு பிறகே இதை கவனிச்சேன்

      Delete
    4. //லைட்டை காணோமேன்னு//

      laddoo ladooo its laddu

      Delete
    5. உள்ளே கொடுக்கும் பிரசாதம் குறிப்பிட்ட வேளைகளில் தான் கிடைக்கும் என நினைக்கிறேன். மற்றபடி அன்று யாருக்குமே எனக்குத் தெரிந்து பிரசாதம் கொடுக்கலை. ஏனெனில் யாருமே சாப்பிட்டுக் கொண்டு இருப்பதைப் பார்க்கலை. அப்புறமாப் பெரிய லட்டு தான் கிடைக்கலைனு சொன்னேன். சின்ன லட்டு ஒருத்தருக்கு நான்கு வீதம் எட்டு லட்டுகள் கிடைத்தன. மொத்தம் 140 ரூபாய். ஒரு லட்டு பதினைந்து ரூபாய். ஆனால் தூளாக வருகிறது. :( பெரிய லட்டு மாதிரி கெட்டியாக இல்லை.

      Delete
  10. ஒங்க பின்னாடியே போய் திருப்பதி பெருமாளை சேவிச்சுட்டுவந்ததுபோல இருக்கு !

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏகாந்தன், நல்ல அமைதியான தரிசனம் பல ஆண்டுகளுக்குப் பின்னர்.

      Delete
  11. // பெருமாள் என்னமோ இளைச்சு உயரமும் குறைஞ்சு இருப்பதாகத் தோன்றியது. //

    அம்மா குழந்தையை வெகு நாட்கள் கழித்துப் பார்த்தால் மெலிந்து போய் இருப்பதாய் சொல்வார்கள். அது போல் நீங்களும் சொல்கிறீர்கள்.

    பயணத்தை தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு, உண்மையிலேயே அலங்காரத்தின் காரணமாகவோ என்னமோ சிலாரூபம் ஒல்லியாகவே காட்சி தந்தது. :))))

      Delete
  12. லட்டு படத்தை காணோமே ?
    ரொம்ப வருஷம் முன்னாடி சாப்பிட்டது இப்போ பார்க்கா ஆசை .அதே அளவுதானா ?
    திருமலை என்றால் குளுமை என்று தோழி சொல்வா .அந்த குளுமை பதிவை வாசிக்கும்போது உணர்ந்தேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், லட்டுகள் இருவேறு அளவுகளில் கொடுப்பதை அங்கே இருந்து வந்த பின்னரே அறிந்தோம். தெரிந்தால் பெரிய லட்டுவும் வாங்கி வந்திருக்கலாம்.

      Delete
  13. //வரிசையிலே போய்ப் பெருமாளை தூரத்திலே இருந்தே பார்த்துக் கொண்டு போனதில் பெருமாள் என்னமோ இளைச்சு உயரமும் குறைஞ்சு இருப்பதாகத் தோன்றியது//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கீசாக்காவை அடிக்கடி காணாத கவலையில் இளைச்சிருப்பார்போலும்.

    சாப்பாடு ரொம்ப ரொம்ப மலிவாக இருக்குதே.. அங்கயே ஒரு வீடெடுத்துத் தங்கிடுங்கோ கீசாக்கா:).

    ReplyDelete
    Replies
    1. // கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கீசாக்காவை அடிக்கடி காணாத கவலையில் இளைச்சிருப்பார்போலும்.//

      ஹா.... ஹா.... ஹா.....

      Delete
    2. //கீசாக்காவை அடிக்கடி காணாத கவலையில் இளைச்சிருப்பார்போலும்.// அதிரடி, ஆமா இல்ல! நல்லாவே இளைச்சிருந்தார். :))))

      ஶ்ரீராம், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  14. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

    இத் திரட்டியில் உங்கள் இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவற்றைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், அத் திரட்டி வளர்ச்சியுற உங்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறோம்.

    நன்றி..
    தமிழ்US

    ReplyDelete
    Replies
    1. நன்றி, இணைய முயற்சிக்கிறேன்.

      Delete
  15. தாமதமாக இப்போதுதான் வந்தேன். தொடர்கிறேன்.

    ReplyDelete
  16. நிதானமாக வந்து படியுங்கள் முனைவர் ஐயா!

    ReplyDelete
  17. க்ர்ர்ர்ர்ர்ர் கருத்துச் சொன்னால் காணாமல் போகிறது! ஏகாந்தன் சார், இது அமானுஷ்யம் இல்லையோ! இது வருதானு பார்க்கணும்! :))))

    ReplyDelete
  18. வந்துடுச்சே!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  19. சென்ற ஜூலை மாதத்தில் திருப்பதி சென்றோம். ஏறி, இறங்கி, நீண்ட தூரம் நடக்க வேண்டி இருந்தது. நீங்கள் எழுதியிருப்பதை பார்த்தால், சீனியர் சிட்டிசன் வழியில் சுலபமாக தரிசனம் செய்ய முடியும் போலிருக்கிறதே? எத்தனை வயதிலிருந்து மூத்த குடிமகன்/மகள்?

    ReplyDelete