எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 20, 2018

கல்யாண மோர் என்றால் என்ன? கேள்வி-பதில்! :)

கண்ணிலே ஒரு கட்டி! ஒரு மாசம் முன்னே சின்னதாய்க் கிளம்பியது. ஒரு சின்னக் கடுகு அளவு இருந்தது மெல்ல மெல்லக் கிளம்பி ஓர் உளுத்தம்பருப்பு அளவு ஆயிடுத்து. பையர் கிளம்பிப் போனதும் போன திங்களன்று கண் மருத்துவரிடம் போயிட்டு வந்தேன். அதைக் கீற வேண்டாம் எனவும், ஒண்ணும் பயமில்லை! என்றும் சொல்லி ஓர் ஆறுதலுக்கு ஓர் ஆயின்ட்மென்ட் கொடுத்தார். தானே விழுந்துடும் என்றார். விழலைனால் கீறி விடறேன் என்று சொன்னார். அது வேறே கவலை! கீறினால் என்னடா செய்வோம்னு!  கண் இமையில் ஒரே அரிப்பு வேறே. கண்ணைக் கசக்கிக் கசக்கிக் கசக்கிக் கசக்கி! போயிட்டு வந்து ஒரு வாரம் வரைக்கும் விழலை! கட்டி மட்டும் பெரிசா ஆயிட்டு இருந்தது. என்னடா, இது மதுரைக்கு வந்த சோதனைனு நேத்திப் பூரா மனசுக் கலக்கம். எங்க ஊர் மாரியம்மனுக்கும், வைத்தீஸ்வரருக்கும் வேண்டிக் கொண்டேன். ஹிஹிஹி, ஹாஹாஹா, நேற்றிரவு தூக்கத்திலே கட்டி விழுந்திருக்கு.  இந்தக் கட்டி தொந்திரவாலும் வெயிலில் அதிகம் கணினி முன் உட்கார முடியாமலும் பதிவு ஒண்ணும் தேத்தலை. என்றாலும் நேத்திக்கு முகநூலில் நண்பர் ஒருத்தரின் பதிவைப்படிச்சப்போ நான் அதுக்குக் கொடுத்த பதில்கள் என்னளவில் சுவாரசியமாக இருந்ததால் அதைப் பகிர்ந்தேன்.

நண்பர் உப்பிலியின் பதிவு!

கல்யாண மோர் என்றால் என்ன ?

குறிப்பாக தஞ்சாவூர் - கும்பகோணம் வாத்திமா கல்யாணங்கள் வெகு நேர்த்தியாக இருக்கும். நான்கு நாள் கல்யாணம். மூன்றாம் நாள் இரவு சம்பந்தி விருந்து. அன்று செம்மங்குடியோ, அரியக்குடியோ கச்சேரி இருக்கும். பக்கவாத்தியக்காரர்களும் பெரிய ஜாம்பவான்களாக இருப்பர். எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு வாசிப்பார்கள். கச்சேரி கேட்பதற்கென்றே கூப்பிட்டவர்கள், கூப்பிடாதவர்கள் என்று பல கிராமங்களில் இருந்தும் மிகப் பெரிய கூட்டம் வரும்.

கச்சேரி முடிந்ததும் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்து விடுவார்கள். 500 பேருக்குச் சமைத்த சமையல் 1000 பேருக்கு எப்படிப் போதும்? சமையல் கலைஞர்களும் ஜாம்பவான்கள். ஒரு காளியாகுடி செட்டோ, அகோரம் செட்டோ ஏற்பாடு செய்திருப்பார்கள். ஆனால் பெண் வீட்டாருக்குக் கவலை. எப்படி இவர்களையெல்லாம் சமாளிக்கப் போகிறோம் என்று? சமையல் கலைஞர் சொல்வார். "கவலையை எங்களிடம் விடும். உக்கிராண உள்ளில் இருக்கும் சாமான்கள் போதும்" என்று.

சரி. ஆனால் மோருக்கு வழி? ஒரு பெரிய அண்டா நிறைய அரிசி களைந்த நீரை (அது மோர் நிறத்தில்தான் இருக்கும்) கொட்டி, அதில் எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து, சிறிதளவு உப்பு சேர்த்து, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து அரைத்து, பெருங்காயம் சேர்த்து, கடுகு தாளித்துப் பரிமாறுவார்கள். எல்லோரும் ருசித்து தொன்னையிலும் வாங்கிக் குடிப்பார்கள். "மோரு பலே ஜோரு" என்று சொல்லி, தாம்பூலம் வாங்கிக் கொண்டு விடை பெறுவார்கள். எப்போதுமே இமிடேஷன் ஒரிஜினலைவிட ஜொலிக்கும்தான். அதற்குக் கல்யாண மோரும் விதிவிலக்கில்லை.


இதற்கு நான் கொடுத்த பதில் இதான்!

நான் கல்யாணம் ஆகிப் போனதும் மாமியார் வீட்டில் இரண்டாம் நாளே இதான் மோர் எனச் சொல்லி விட்டார்கள். ஒரே அதிர்ச்சி! கேள்விப் பட்டதே இல்லை! :) ஆனால் இது தஞ்சை ஜில்லாவில் மட்டுமே இப்படிச் செய்வதாகத் தோன்றுகிறது. மற்ற ஊர்களில் கேள்விப் பட்டதில்லை.

ஆனால் இந்தத் திப்பிச வேலைகள் எல்லாம் தினசரி சமையலில் கொண்டு வருவேன். மோர்க்குழம்பு மிஞ்சிப் போனால் மாலை வெண்டைக்காய் மசாலாவோ, உ.கி. மசாலாவோ செய்து மோர்க்குழம்போடு சேர்த்து தஹி ஆலு, தஹி பிண்டி என நாமகரணம் செய்வேன்.

சாம்பார் மிஞ்சினால் கொ.க.பட்டாணி ஊற வைச்சு அதுக்குள்ள உப்பு மட்டும் போட்டு தக்காளி, வெங்காயம் வதக்கிச் சேர்த்து மிச்ச சாம்பாரையும் சேர்த்துக் கீழே இறக்கும்போது அரை டீஸ்பூன் கரம் மசாலா போட்டால் போதும். நவரத்ன குருமா அல்லது கோலாபுரி தால் எனப் பெயர் வைக்கலாம்.

காலை செய்த கீரை மிஞ்சினால் அரைத் தக்காளி, அரை வெங்காயம் அரைத்துக் கொண்டு பாக்கி அரைத்தக்காளி, வெங்காயத்தை நறுக்கி வதக்கிக் கொண்டு பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து அரைத்த விழுதைப் போட்டுக் கொஞ்சம் போல் உப்பு, சர்க்கரை போட்டுக் கிளறி அரை டீஸ்பூன் மிபொடி அரைடீஸ்பூன் தனியா பொடி, கால் டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்துக் கிளறிக் கீரை மசியலையும் கொட்டிச் சேர்த்துக் கிளறினால் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ். வேணுமானால் ஊற வைத்த பட்டாணியையும் வேக வைத்து இதில் சேர்த்து பாலக் மட்டர் என்னும் பெயரைச் சூட்டலாம். உப்பு மட்டும் கவனமாச் சேர்க்கணும். கீரையில் ஏற்கெனவே உப்புப் போட்டு மசித்திருப்போம். அதே போல் மேலே சொன்ன தால் வகைகளிலோ அல்லது மோர்க்குழம்பு மசாலாவோ செய்யும் போது காய்களுக்கு உள்ள உப்பை மட்டும் முதலிலேயே சேர்த்து விட்டுட்டால் அப்புறமா உப்புப் போட வேண்டாம்.

38 comments:

  1. நீங்கள் மேலே சொன்ன அதே நிலைப்பாடுதான் எனது கண்ணிலும்... இது தேவகோட்டைக்கு வந்த சோதனை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, கட்டி விழுந்துடுச்சு. ஆனால் அரிப்பு இன்னமும் இருக்கு. நாளைக்குள் சரியாயிடும்னு நம்பறேன். பாதிக் கண்ணை மறைச்சுட்டு ஒரே தொந்திரவு! வெயில் காரணமாக இருக்குமோனு நினைக்கிறேன். சின்ன வயசில் அடிக்கடி வரும். இப்போ வந்து பல ஆண்டுகள்! :)

      Delete
    2. எனக்கு கண்ணுக்குள் அரிப்பு இன்னும் விடவில்லை.

      Delete
    3. உங்களுக்காகவும் பிரார்த்திக்கிறேன் கில்லர்ஜி!

      Delete
    4. அரிப்புக்கு அவில் மாத்திரையோ, செட்ரிசின் மாத்திரையோ போடலாம். ஆனால் தூக்கம் வரும்!

      Delete
    5. ஶ்ரீராம், நான் எந்த மாத்திரையும் சாப்பிடறதில்லை. அதோடு பிபி வேறே இருக்கே! மருத்துவரைக் கேட்காமல் இதெல்லாம் எடுத்துக்க மாட்டேன்.

      Delete
  2. கண் பிரச்சனை தீர்ந்தது சந்தோஷம்.

    இனி உங்கள் வீட்டில் சாப்பிட நேர்ந்தால், முந்தைய வேளையின் மெனு என்னவாக இருந்தது என்று அவரிடம் தனியாக்க் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, நெ.த. இதை முன்னே ஒரு திப்பிச சமையல் போட்டப்போ ஶ்ரீராமும் சொன்னார். :))))))

      Delete
    2. ஹா... ஹா.. ஹா... அந்த பயம் எல்லோருக்கும் வருமில்ல....!!

      Delete
    3. வாங்க, வாங்க எல்லோரும் வாங்க! :)))))))

      Delete
  3. கண்கட்டி ஏன் வந்தது? சரியாகி விட்டது சந்தோஷம்.

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், அதிக அலைச்சல், அதிக வெயில், உடல் சூடு இவை காரணம்னு நம்ம வீடுகளிலே சொல்லுவாங்க. எனக்குச் சின்ன வயசிலே கிரிக்கட்டி எனக் கண்ணில் வலியோடு வரும். அப்போல்லாம் சூட்டுக் கட்டி என்றே சொல்லிக் கருகப்பிலைக் கொழுந்தை சந்தனக்கல்லில் சங்கினால் அரைத்துத் தடவுவார்கள். ரொம்பவே பெரிசாப் போய்க் கண்ணே மூடினால் இருக்கவே இருக்கு முனிசிபர் மருத்தவர்! அவர் ஓர் ஊசி போட்டு மருந்து கொடுத்ததும் கட்டி உடையும். ஆனால் அதெல்லாம் ரத்தம் வரும்.இதிலே அதெல்லாம் இல்லை.

      Delete
  4. சரி, மிஞ்சினால் செய்யும் திப்பிச வேலைகளை முதலிலேயே ஒழுங்காய்ச செய்துவிட்டால் ஏன் மிஞ்சப்போகிறது!!!! சாப்பிடுபவர்களை இப்படி ஏமாற்றுவது திப்பிசம் இல்லை, தப்பிசம்!!!!!

    ReplyDelete
    Replies
    1. சில,பல சமயம் எதிர்பாராமல் மிஞ்சும் அல்லவா? அதோடு இருவருக்குனு செய்யும்போது என்னதான் கொஞ்சமாச் செய்தாலும் இரண்டு கரண்டி அளவாவது மிஞ்சத் தான் செய்கிறது. இப்போக் கஞ்சி குடிப்பதால் முதல்நாள் மிகுந்த குழம்பு, அல்லது ரசம் அந்தக் கஞ்சியில் (மோர் விட்ட கஞ்சி) கலந்து கொண்டு சாப்பிட்டு விடுகிறோம். என்ன ஒண்ணுன்னா பழைய குழம்பு சாப்பிடுவதால் குளித்துவிட்டுக் கஞ்சி குடிக்க முடியாது. கஞ்சி குடிச்சு ஒரு மணி நேரம் கழிச்சே குளிக்கும்படி ஆகிறது! அப்படியும் சில நாட்கள் ரொம்பக் கொஞ்சமாக மிஞ்சினால் கொட்டி விடத் தான் செய்கிறேன். வேறே வழி இல்லை. செக்யூரிடிக்குக் கொடுத்தால் அதோடு சாதமும் கொடுக்கணும்,இல்லைனா இட்லி, தோசை, உப்புமா இப்படி ஏதேனும். வேலை செய்யும் (எங்களுக்குச் செய்யறதில்லை. எதிர்வீட்டுக்கு வருவா) பெண்ணுக்குக் கொடுத்தால் கொஞ்சம் கணிசமாக் கொடுக்கணும். அவ்வளவுக்கு இருக்காது/ இரண்டுங்கெட்டான் நிலை! :))))))

      Delete
  5. சாம்பார் மிஞ்சினால் நாங்கள் சின்ன வெங்காயம் நறுக்கிப்போட்டு இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு அல்வா போலக் கிண்டி, இறக்கும்போது இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு இறக்கி, (கார ஹல்வா போல) சாதம் பிசைந்து சாப்பிட்டாலும் சரி, மோர் சாதத்துக்கு தொட்டுக்க கொண்டாலும் சரி, ருசி தூக்கும்! இதற்கு ஏனோ என் மகன் சிறுவயதில் 'சக்தி மசாலாக் குழம்பு' என்று பெயர் வைத்தான். அது நிலைத்து விட்டது. என் அப்பா கூடச் சொல்வார் "வைக்கும்போதே பழங்குழம்பாய் வைத்து விடக் கூடாதா?" ....!!!

    ReplyDelete
    Replies
    1. என் பெரிய நாத்தனார் நீங்க சொன்னாப் போல் செய்துடுவார். அவருக்கு அடுப்படியில் எப்போதும் ஏதேனும் வறுப்பதோ, பொரிப்பதோ, கொதிக்க வைப்பதோ வேலை செய்த வண்ணம் இருக்கணும். :)))) நம்ம ரங்க்ஸுக்குப் பொங்கலன்று செய்யும் எரிச்ச குழம்பே பிடிக்காது. அன்று ஒரு நாள் மட்டும் அரைக்கரண்டி போட்டுப்பார். ஆகவே நான் நிறையவெல்லாம் செய்ய மாட்டேன். மறுநாள் கனுப்பொடி வைச்சதும் தீர்ந்து போயிடும் வண்ணம் வைப்பேன்.

      Delete
  6. திப்பிச வேலைகள் - இது ஒரு சிலருக்கு கைவந்த கலை! :)

    அம்மாவும் இப்படிச் சில சமயம் செய்வதுண்டு.

    ReplyDelete
    Replies
    1. ஆமா, இல்ல! அப்புறமா எப்படி மிஞ்சினதைச் செலவு செய்யறதாம்? :))))) இப்போல்லாம் குளிர்சாதனப் பெட்டியில் வைச்சுச் சாப்பிடுவதை விட அன்று செய்ததை அன்றே புதுப்பித்து மாற்றங்கள் செய்து சாப்பிடுவது நல்லது என்றே நம்புகிறேன். :)))

      Delete
    2. கல்யாண மோரில் உள்ள திப்பிசம் யாருக்கும் கண்ணில் படலையா? :)))))

      Delete
  7. எனக்கும் கண்ணில் கட்டி பிரச்சனை. ஆனா உறுத்தல் இல்ல, ஒரு மாசத்துக்கு பின் இப்பதான் சரியாகிட்டுது

    ReplyDelete
    Replies
    1. வெயில் என்பதை விட வெப்பத்தின் தாக்கம் அதிகம் என்று சொல்லலாம். இந்த அளவுக்குச் சூடு சென்ற வருஷம் இருந்ததானும் தெரியலை. போன வருஷம் மே மாசம் தான் அம்பேரிக்காவில் இருந்து திரும்பினோம். :)

      Delete
  8. திப்பிச வேலைகள் தெரியாத செய்யாத இல்லத்தரசிகளே இருக்கமாட்டார்கள் கல்யாணமோர் எனும் போதுஎனக்கு கல்யாண மாங்காய் நினைவுக்கு வந்தது பெரிய மாங்காயும் அல்லாமல் வடுமாங்காய் சைசை விடப்பெரிதான மாங்காயைப் பொடியாக நறுக்கி மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு தாளித்து மோர் சாதத்துக்கு ஊறுகாய்ப் போல்பாவித்து உண்பதும் உண்டு

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி சார், அது சும்மாப் பொழுது போக்கவும் அம்மாதிரி நறுக்கிச் சாப்பிடுவது உண்டு. சென்னைக்கு முதல் முதல் வந்த அறுபதுகளில் தெருவோரத் தள்ளு வண்டிகளில் மாங்கா பத்தை என்னும் பெயரில் கல்லாமை என நாங்க அழைக்கும் ஒட்டு மாங்காய்களில் இப்படித் துண்டம் போட்டுப் பற்களைப் போல் அருகருகே சீவி உப்பு, காரம் தூவிக் கொடுப்பார்கள். அதை வாங்கித் தின்று விட்டால் ஏதோ சொர்க்கமே போயிட்டு வந்தாற்போல் அப்போதைய சிறுவர், சிறுமியர் பேசிக் கொள்வார்கள். பின்னர் இடம் பெற்றது சுண்டல், மிளகாய் பஜ்ஜி! மிளகாய் பஜ்ஜி நான் கல்யாணம் ஆகி வந்தப்போ ரொம்பப் பிரபலம். அப்போதெல்லாம் கண்ணகி சிலை அருகே மட்டும் கிடைத்துக் கொண்டிருந்தது.

      Delete
  9. ஆஹாஹா. சமையல் ரகசியங்கள் அவுட் ஆகி இன்னும் ஆர்வம் வருகிறதே.
    சிங்கம் இருக்கும் போது ,இது ஒரிஜினலா மேக் அப் போட்டதா என்று நக்கலடிப்பார். சூப்பர் கீதாமா.

    ReplyDelete
    Replies
    1. ஓஹோ... நீங்களும் இதில் கைதேர்ந்தவரா வல்லிம்மா?

      Delete
    2. வாங்க வல்லி, அநேகமாத் திப்பிச வேலைகள் செய்யாத பெண்களே இருக்கமாட்டாங்க! இப்போதெல்லாம் தெரியலை! :)

      Delete
    3. நெ.த. நான் வெளிப்படையாச் சொல்றேன். பலரும் சொல்றதில்லை! அதான் வித்தியாசம். :))))

      Delete
  10. கல்யாண மோர் கேள்வி பட்டது இல்லை.

    கண்கட்டி சிறு வயதில் அடிக்கடி வரும், அதற்கு நாமகட்டி உரைத்து தேய்பார்கள் அம்மா சரியாகி விடும் அப்படியும் சரியாகவில்லை என்றால் டாக்டரிடம் போய் ஆயின்மென்ட் வாங்க்கி தடவினால் சரியாகும்.

    பூரி செய்தால் உருளைகிழங்கு மசாலா மீந்து விட்டால் மாலை பிரட் துண்டில் தடவி மேலே ரஸ்க் தூளை போட்டு ரோஸ்ட் செய்து கொடுப்பேன் குழந்தைகளுக்கு. (சாண்ட்விஜ்)
    எங்கள் வீட்டு உருளை மசாலா வெங்காயம் தக்காளிசேர்த்தும், தக்காளி இல்லாமலும் செய்வேன்.
    மதியம் செய்த உருளை பொடிமாஸ் இருந்தால் அதனுடன் ரஸ்க் தூள் சேர்த்து கட்லெட் செய்வேன்.

    விருந்தினர்களுக்கு பழைய உணவுகள் கிடையாது. எங்களுக்கு மட்டும் தான்.



    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு! விருந்தினருக்குக் கொடுப்பது இல்லை. ஆனால் அவங்களே வீட்டு மனிதர்களாக இருந்தால்? சில, பல சமயம் நான் மும்பை, டெல்லியில் மைத்துனர் வீடுகளில் இம்முறையைப் பரிந்துரைத்திருக்கிறேன். ஆனாலும் அவங்க ஏற்றுக் கொண்டதில்லை. ஆனால் இதெல்லாம் குழந்தைகள் கூட இருந்தவரை தான் செய்திருக்கேன். ஏனெனில் அப்போ தினம் மூன்று வேளை ஃபுல்கா ரொட்டி! இப்போவும் எங்க பையர் வந்தால் ஃபுல்காவும் சப்ஜியும் தான் கேட்பார். :)

      Delete
  11. கமென்டைக் காக்கா கொத்திக் கொண்டு போய் விட்டது. உ.கிக்கு நான் வெங்காயம், தக்காளி ஏதும் சேர்க்காமலேயே வட இந்திய முறையில் சப்ஜி பண்ணுவேன். எப்போவானும் அதுக்குத் தக்காளி ப்யூரிக்குப் பதிலாகத் தக்காளியை மிக்சியில் அடிச்சுச் சாறை வடிகட்டிச் சேர்த்து விடுவேன். உ.கி. பொடிமாஸ் மட்டுமல்ல உ.கி. காரக்கறியையும் மாலை வேளைக்கு போண்டாவாக்கி விடுவேன். அவல் உப்புமா, ரவை, சேமியாக் கிச்சடி ஆகியவையும் கட்லெட்டாக உருமாறும். :) இம்முறை இது போகுதானு பார்க்கணும். காக்கா, ராத்திரி ஆயிடுச்சே ஓடிப் போய்த் தூங்கு! :))))

    ReplyDelete
  12. நான் லாகின் பண்ணி உள்ளே நுழைஞ்சிருக்கிறச்சேயே நீ லாகின் பண்ணலைனு சொல்லிடுத்து! மறுபடி லாகின் பண்ணி உள்ளே வந்திருக்கேன். நல்லவேளையா இம்முறைக் கருத்தை சேமித்துக் கொண்டேன். :)

    ReplyDelete
  13. தஞ்சாவூர்காரியாக இருந்தாலும் கல்யாண மோர் என்பதை முதன் முறையாக கேள்வி படுகிறேன்.

    என் பாட்டி, அம்மா இவர்களெல்லாம் குக் அப் செய்வதில் கெட்டிகாரர்கள். நான் திரிந்து பாலை திரட்டுப் பாலாக்குவது, ஃப்ரிட்ஜில் வைக்க மறந்த சப்பாத்தி மாவு புளித்து விட்டால் அதை ஹல்வாவாக்குவது போன்ற சில்மிஷங்கள் மட்டுமே செய்வேன்.

    ReplyDelete
    Replies
    1. திப்பிசம் பண்ணினதை நீங்கள் சாப்பிடுவீர்களா இல்லை மற்றவர்களுக்குத்தானா? (அது எதிலிருந்து உருமாறியது என்று தெரிந்ததனால்)? இது உங்க இரண்டுபேருக்குமான கேள்வி (பா.வெ, கீசா மேடம்கள்)

      Delete
  14. கண்ணில் கட்டிகள் வருவது பெரும்பாலும் உடல் சூட்டினால்தான் இல்லையா? இப்போது சரியாகிவிட்டது மகிழ்ச்சி

    இருவரின் கருத்தும்

    ReplyDelete
  15. கீதாக்கா இந்த உருமாறும் டிஷஸ் சகஜம். ஆனால் பொதுவாக அதிகம் மீறாது எப்போதாவது எதிர்பாராமல்தான் அப்போது இபப்டியான வேலைகள் நடக்கும். எரிச்சகறி என்று எங்கள் வீட்டில் செய்வதுண்டு…எல்லாம் சேர்த்து நன்றாகச் சுண்ட வத்த வைத்து. அது போல் சாம்பார் மீந்தால் வெங்காயம் எல்லாம் போட்டு சுண்ட வைத்து ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் செய்வதுண்டு……..செம டேஸ்டாய்ருக்கும் அது போல எரிச்ச கறியும்….புதுப்புதுப் பெயர் எல்லாம் கூட வைத்து உருமாற்றம் நடக்கும்…ஹா ஹா ஹா நான் இந்தத் திப்பிச வேலையில் செய்த ஒரு ரெசிப்பி குறித்துப் பதிவும் போட்ட நினைவு….பேர் இப்போது எனக்கே மறந்து விட்டது ஹா ஹா ஹா ஹா ஹா…
    கல்யாண மோர் திப்பிசம் தெரியும் அக்கா….எங்கள் வீட்டிலேயே பிறந்த வீட்டில் சாதம் வடித்த கஞ்சி ப்ளஸ் அரிசி களைந்த நீரும் கலந்து இப்படித் தாளித்துச் செய்வதுண்டு. டேஸ்ட் நன்றாகவே இருக்கும். அது போல சாதம்வ் அடித்த கஞ்சியைக் கொட்டாமல் வைத்திருப்பார்கள். தயிர் எல்லாம் கண்ணில் பட்டதே இல்லை வீட்டில். மோரில் கலந்து தாளித்து….கேரளத்து சம்பாரம் தான் பெரும்பாலும் வீட்டில் மோர் சாதம்….பழைய சாதம் என்றால் அந்த நீரோடு சேர்த்து இதுவும் கலந்து மோர் சாதம்….இப்போது நான் வீட்டிலும் வெயில் என்பதால் இப்படிச் செய்து கரைத்துச் செய்வதுண்டு….(என் பாட்டி வயிர் சரியில்லை என்றால் கரைச்சு வாத்துண்டேன் என்று சொல்வார். அது என்னவென்றால் இப்படித்தான் கொஞ்சமாகச் சாதத்தை நன்றாகப் பிசைந்து இந்த சம்பாரம் கலந்து சாப்பிடுவதைச் சொல்வார்!!)

    கீதா

    ReplyDelete
  16. இப்படி உருமாறுவது எலலம் வீட்டோடுதான்...நெருங்கிய உறவினர் என் கஸின்ஸ் வந்தாலும் நடக்கும் அவர்களும் விரும்புவார்கள்...ஆனால்...விருந்தினர் வரும் போது கிடையாது...

    கீதா

    ReplyDelete
  17. எங்கள் வீட்டில் டிஷஸ் உருமாறுவது எல்லாம் நடக்காது. பழக்கமும் இல்லை. முதலில் மீறாது. மீந்தாலும் அப்படியே அடுத்த வேளைக்குச் சூடாக்கி சாப்பிட்டுவிடுவோம்...

    துளசி

    ReplyDelete
  18. இது காஞ்சி பெரியவா முப்பது,நாற்பது
    ஆண்டுகளுக்கு முன் சொன்ன டிப்ஸ்
    ஓம் நமசிவாய !!!!
    சிவசிவ !!!!!

    ReplyDelete