எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, January 31, 2020

வண்ண விளக்கு அலங்காரங்கள்!

ஐஸ்லாந்தில் இருந்து வெளியே வந்ததும் கொஞ்ச நேரம் வெளியே உட்கார்ந்து உடல் சீதோஷ்ணத்தைச் சமன் படுத்திக் கொண்டோம். கழிப்பறையைப் பயன்படுத்திய பின்னர் குழந்தைக்கும் ஆடைகளை மாற்றிக் கொண்டார்கள். பின்னர் பையர் அனைவருக்கும் காஃபி வாங்கி வந்தார். அதைக் குடித்துக் கொஞ்சம் தெம்பு வந்த பின்னர் விளக்கு அலங்காரங்களைப் பார்க்கக் கிளம்பினோம். சுமார் இரண்டரை மைல் நீளம் என்று பையர் சொல்லி இருந்தார். ஆனால் அதை விடக் கூடவே இருந்திருக்குமோனு நினைத்தோம். கிறிஸ்துமஸுக்கு முன்னிருந்து ஆரம்பித்துப் புது வருடம் வரை விளக்கு அலங்காரங்கள் கண்களையும், கருத்தையும் கவர்கின்றன. அநேகமாக நாங்க இருக்கும் பையர் வீட்டுப் பகுதியில் தீபாவளிக்கு ஆரம்பிக்கும் விளக்கு அலங்காரங்கள் ஆங்கிலப் புது வருடம் வரை தொடர்கிறது. பலரும் அவரவர் வீடுகளிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கின்றனர்.

பலர் வீடுகளிலும் மாட்டுத் தொழுவம் போல் அமைத்து குழந்தை ஏசு பிறப்பைப் பொம்மைகளால் அமைக்கின்றனர். எல்லார் வீட்டு வாசலிலும் நக்ஷத்திரங்கள் தொங்கும். இதை இந்தியாவிலும் பார்க்கலாம். ஆஙாங்கே பெரிய பெரிய வணிக வளாகங்களில் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நபர் சான்டா க்ளாஸ் வேடம் போட்டுக் கொண்டு அமர்ந்திருப்பார். குழந்தைகள் அவருடன் படம் பிடித்துக்கொள்வார்கள். பல சமயங்களில் பெரியவர்களும் தங்கள் குடும்பத்தோடு படம் எடுத்துக் கொள்வார்கள். கிறிஸ்துமஸ் சம்பந்தப்பட்ட திரைப்படமும் காட்டுவார்கள். அப்படி ஒரு 3D படம் இங்கேயும் காட்டினார்கள். வட துருவத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பற்றிய படம் அது. குட்டிக் குஞ்சுலுவுக்குக் கண்ணாடியைப் போட்டு விட்டால் முதலில் சந்தோஷமாகப் பார்த்தது. பின்னர் அதில் பெரிய பெரிய உயிர் வாழ் ஜந்துக்கள் வரவும் அதுக்குப் பிடிக்கலை. கண்ணாடியைக் கழட்டி விட்டது. அங்கிருந்து தான் நேரே விளக்கு அலங்காரங்கள் பார்க்கப் போகணும்.

குழந்தைக்காக ஸ்ட்ரோலர் எடுத்து வந்திருந்ததால் அதில் குழந்தையை உட்கார வைத்துத் தள்ளிக்கொண்டு சென்றார்கள். ஆனால் குஞ்சுலு கடுமையாகத் தன் ஆக்ஷேபங்களைத் தெரிவித்தது. தானும் நடந்தோ அல்லது ஓடியோ தான் வருவேன் எனப் பிடிவாதம். சரினு கொஞ்ச தூரம் நடக்க விட்டார்கள். நாங்கள் கொஞ்சம் மெதுவாகவே சென்றோம்.  இரண்டு பக்கங்களிலும் வண்ண விளக்கு அலங்காரங்கள். இது "பே" எனப்படும் விரிகுடாப் பகுதி என்பதால் Back waters  கொஞ்சம் இருக்கும். மணல் பகுதியும் இருக்கும். எல்லா இடங்களிலும் விளக்கு அலங்காரங்கள்.


ஐஸ்லாந்தில் இருந்து வெளியே வரும் இடத்தில் இருந்த விடுதி! இங்கே சாக்லேட் பானம் மட்டும் சூடாகக் கிடைக்கும்.


விளக்கு அலங்காரங்களைப் பார்க்கச் செல்லும் வழி


நுழையும் இடம்










போகும் வழியில் இம்மாதிரிச் சின்னச் சின்னக் கூண்டுகளில் உடலுக்குச் சூடு செய்து கொள்ளும் வசதி!


ஆர்க்டிக் ஸ்லைட் என்னும் வட துருவக் குளிர்ப் பிரதேசத்தின் மாதிரி. இதைப் பார்க்கக் கீழே காணும் ரயிலில் செல்ல வேண்டும் அல்லது நடந்து போகணும். ரயிலில் செல்ல வசதிக்குறைவு. உட்கார இயலாது. அதைப் பார்க்கப் போனால் விளக்கு அலங்காரங்களைப் பார்க்க நேரம் எடுக்கும் என்பதால் வெளியே இருந்தே பார்த்துவிட்டு மேலும் விளக்குகளைப் பார்க்கச் சென்றோம்.











விளக்கு அலங்காரங்களை நானே கொஞ்ச தூரம் தான் எடுத்தேன். அதிலும் தேர்ந்தெடுத்த படங்களையே போடுவேன். இன்னும் ஓரிரு நாட்கள் வரலாம்.

22 comments:

  1. ரசனையாக இருந்தது சொல்லிய விடயங்கள். படங்கள் நன்று.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  2. ரசனையான இடம். தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முனைவர் ஐயா!

      Delete
  3. // தானும் நடந்தோ அல்லது ஓடியோ தான் வருவேன் எனப் பிடிவாதம். சரினு கொஞ்ச தூரம் நடக்க விட்டார்கள். நாங்கள் கொஞ்சம் மெதுவாகவே சென்றோம்.//

    நம்மால் தூக்க முடியும் என்ற காலத்தில் குழந்தைகள் நடக்கிறேன் என்பார்கள்., நம்மால் தூக்கி கொண்டு நடக்க முடியாது எனும் போது தூக்கச் சொல்லி அழுவார்கள்.

    பேத்தியின் தளர் நடையுடன் வெகு தூரம் நடந்து பாட்டிக்கும் தளர் நடை வந்து இருக்கும்.


    ReplyDelete
    Replies
    1. வெகு தூரமெல்லாம் நடக்க முடியலை கோமதி! நாக்குத் தள்ள ஆரம்பித்து விட்டது! பையருக்கும், மருமகளுக்குமே முடியலை! குழந்தையும் சிறிது தூரம் தான் நடந்தாள்.

      Delete
  4. மிக அழகு கீதா மா.
    இத்தனை தூரம் நடந்தீர்களா.
    இவர்களின் உற்சாகம் தொற்றிக் கொள்ளக் கூடியது.
    சந்தோஷமாக இருக்க நன்று கற்றவர்கள்.
    அதுவும் சிகாகோ போன்ற இடங்களில்
    பலவேறு மதத்தினர்கள் பல்வேறு காரணங்களுக்காக
    விளக்குகளை வரிசையாகத் தொங்க விடுவதும்,வடிவங்கள் மாற்றிக் கான்பிப்பதும் அருமை. கடுமையான குளிர் காலத்துக்கு இவை எல்லாம்
    மிகத் தேவை.
    நன்றி மா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, முழு தூரமும் நடந்து கடக்க முடியலை. பாதி வழியில் பாட்டரி காரில் ஏறி விட்டோம். முதலில் தெரியாமல் போனது. தெரிந்திருந்தால் எல்லோருமே ஏறி இருக்கலாம். அதிலும் எங்க இரண்டு பேருக்கு மட்டுமே இடம் இருந்தது. பையரும், மருமகளும், குழந்தையுடன் கூடவே வந்தார்கள். குழந்தை அதில் உட்கார மாட்டேன் எனச் சொல்லி விட்டாள்.

      Delete
  5. வணக்கம் சகோதரி

    படங்கள் அருமை. குட்டி குஞ்சுலுவும் சினிமா படம் பார்த்ததா? நமக்கே கண்ணாடி போட்டு 3D படங்கள் பார்க்கும் போது ஒருமாதிரி இருக்கும். தங்கள் பேத்திக்கு இருக்காதா? சின்னக் குழந்தைதானே...! தொடர்ந்தாற் போல கண்ணாடி போட்டுக்கொள்ள பிடிக்காது இல்லையா? அதுதான் படம் பாதியிலேயே போரடித்து கண்ணாடியை கழற்றி விட்டது. நல்லதுதான்..!

    வண்ண வண்ண விளக்கு அலங்கார படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது.புகை வண்டி மாதிரி அலங்காரப் படுதியிருந்த விளக்குகள் நன்றாக உள்ளது. நடந்து சென்று பார்க்கும் பாதையும் அழகாக உள்ளது. உங்கள் தயவால் நாங்களும் கண்கவர் அலங்கார விளக்குகளை கண்டு ரசித்தோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, 3D, 4D படங்கள் இங்கே வந்து நிறையப் பார்த்தாச்சு. அதனால் எங்களுக்குப் பழக்கமாகி விட்டது. குழந்தை முதல் முறையாகப் பார்ப்பதால் அவளுக்கு அத்தனை பிடிக்கவில்லை. கடல் அடியிலெல்லாம் காட்டும்போது மீன்கள், திமிங்கிலங்கள் வருவதைப் பார்த்தால் கொஞ்சம் பயப்பட்டாள்.

      Delete
  6. இரண்டு கி மீ தூரம் நடக்க முடிகிறதே நீங்கள் கொடுத்து வைத்தவர்

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, கண்ணு படப் போகுதையா! அவ்வளவு தூரமும் எங்களால் நடக்க முடியலை.

      Delete
  7. படங்கள் நல்லாருக்கு.

    இந்தமாதிரி நிகழ்வுகளும் நடக்கிறது என அறிந்துகொண்டேன்.

    ஒரு செல்ஃபி போட்டிருக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லைத் தமிழர், உங்களோட கருத்து மாதிரித் தெரியலை. இப்போல்லாம் விமரிசிக்க வேண்டாம்னு இருக்கீங்க போல! செல்ஃபி எல்லாம் நான் இன்று வரை எடுத்துக் கொண்டதே இல்லை.அந்தப் பழக்கமே வேண்டாம்னு வைச்சிருக்கேன். பிடிக்கவும் இல்லை.

      Delete
  8. கு கு ஸ்ட்ரோலரில் அமரமாட்டேன்,  நடந்து வருவேன் என்று சொன்னது சிறப்பு ப்ளஸ் சிரிப்பு.  

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், விளக்கு அலங்காரங்களைப் பார்த்ததும் அதுக்குக் கிட்டே ஓடி ஓடிப் போய்ப் பார்க்க ஆசை. ஆனால் கொஞ்ச தூரத்தில் ஷூ தடுக்கிக் கீழே விழுந்து விட்டது. அதுக்கப்புறமா இறக்கி விடலை.

      Delete
  9. அந்தக் குளிரிலும், சிரமத்திலும்  கடமை தவறாது படங்கள் எடுத்திருப்பதற்குப் பாராட்டுகள்!

    :))

    ReplyDelete
    Replies
    1. நன்னி, நன்னி, நன்னி ஹை!

      Delete
  10. விவரங்களும் படங்களும் சிறப்பு.

    தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete